Elegant Rose - Diagonal Resize 2 TAMIL ISLAM

செவ்வாய், 10 மே, 2011

நாயகத்தின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? கட்டுரைக்கு பதில்!


நாயகத்தின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? கட்டுரைக்கு பதில்!
அகிலம் வாழ் மக்களின் இறைநம்பிக்கை உறுதியுடன் திகழ்ந்து உண்மையாளர்களாய் வாழ வேண்டும். உலக முழுதுமே ஏகத்துவப் பெருஞ்சுடர் ஏற்றி வைக்கப்பட வேண்டும் என வாழ் நாளெல்லாம் போராடிய பெருமானாரின் 'இறை நம்பிக்கையே ஆட்டம் கண்டு விடலாமல்லவா?' என எழுதிய பின்னர்,
'குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை.'
'இபுனு சாலிஹ்'




















அகிலத்தின் அருட்கொடையாய் அவனியில் தோன்றிய அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றைய அனைத்து தூதுவர்களை விடவும் இறைவனிடத்தில் மிகப்பெரும் அந்தஸ்த்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வுடன் எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தார்கள் என்பதற்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஒன்று மட்டுமே ஆதாரமாகப் போதும்.
அப்படி சிறப்பிற்குரிய நிகழ்ச்சியான மிஃராஜ் ஏன் ஏற்பட்டது? என்ற காரணத்தை விளக்குமுகத்தான் அருள்மறையான திருக்குர்ஆன் கூறுகிறது:-
'(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை சிறப்புற்ற கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் சென்றான். அதன் சூழவுள்ள பூமிகளை நாம் ஆசீர்வதித்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் செவியுறுவோனும் உற்று நோக்குபவனுமாக இருக்கிறான்' (17:1)
இவ்வாறு அண்ணலாருக்கு மிஃராஜ் நிகழ்ச்சி ஏற்பட்டதற்கான காரணத்தை மிகத் தெளிவாக குர்ஆன் எடுத்துரைக்கிறது. தனது அற்புதப் படைப்புகளை, அந்தரங்கங்களை தனது அன்பிற்குகந்த நேசருக்கு எடுத்துக் காட்ட வேண்டும். தனது வல்லமையை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற ஆவலில் அவர்களை அழைத்துச் சென்றதாக எக்காலமும் மாறாத குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறிக் கொண்டிருக்கிறான்.
ஆனால்……
1972-ம் ஆண்டு அக்டோபர் மாத 'ஜமாஅத்துல் உலமா' இதழில்'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற தலைப்பில் மௌலவி யூசுப் அன்சாரி எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியான,
'அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அபூதாலிப் இருவரும் நுபுவ்வத்து பதினோராவது ஆண்டு முடிவில் அவ்விருவரும் மறைந்தனர். அவர்களின் மரணம் நபி அவர்களுக்கு நீங்காத்துயரை நல்கியது. இரு கரங்களை இழந்தவராய், இரு இறக்கைகளை பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர். எதிரிகளின் எதிர்ப்புகள் கொழுந்து விட்டு விண்ணாளவ எரிந்தது. அத்தீச்சுவாலைகள் அவர்களின் பொன்மேனியைக் கரிக்கத் தொடங்கியது. இப்படி துன்பங்கள் தொடர்ந்து அவர்களைத் தாக்கும்போது அவர்களது உள்ளத்து வலிவும் இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்'
என்று அகிலத்தின் அனைத்து மாந்தர்கள் தம் ஈமானை வலுப்படுத்தி-சீராக்க வந்த பேரிறை தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஈமானே ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என தன்னிலை தவறி ஏதோ மயக்கத்தில் இருந்து கொண்டு வரைந்திருந்த கட்டுரைக்கு தமது மறுப்பையும், விளக்கத்தையும் 1976 ஜூலை ஜமாஅத்துல் உலமா இதழில் வெளியிட்டிருக்கிறார்.!
சுமார் மூன்றே முக்கால் ஆண்டுகாலமாக, தான் எழுதிய தவறை எந்த வகையில் பூசி மெழுகலாம் என்று நீண்ட பெரும் ஆராய்ச்சி நடத்தி கடைசியாக விளக்கம் தரப்போய் சறுகி விழுந்திருக்கிறார். குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என வீராப்பு பேசுகிறார்.
இருகரங்களை இழந்தவராய் -இரு இறக்கைகளைப் பறிகொடுத்த பறவையாய் மனமுடைந்தனர் என எழுதி தனது அழுக்கு நிறைந்த உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார். உறுதியற்ற உள்ளம் படைத்தவர்கள் அவர்கள் ஈமானே ஆட்டம் காணுமளவுக்குகோழை என்ற பெருமைக்குரிய நாயகத்தைச் சிறுமைத்தனமாக வர்ணிக்கிறார் வலுவற்ற உள்ளம் கொண்ட சாதாரண மனிதனுக்கு அவர்களை ஒப்பிடுகிறார். என்ன பேத்தல் இது!
பெருமானாரின் பொன்னார் காலணியை ஏன் ஒரு உரோமத்தைக் கூட இது என்ன சாதாரண காலணிதானே! முடிதானே! என்று கேவலமாக-சாதாரணமாக எண்ணியவன் காபிர் என நமது மார்க்கத் தீர்ப்புகள் கூறிக்கொண்டிருக்க சிறகொடிந்த பறவையாய் மனமுடைந்தனர் என்று எவ்வளவு துணிச்சலோடு எழுதுகிறார்?
அவரைக் கூறிக் கூட குற்றமில்லை. அவர் சார்ந்திருக்கும் கொள்கையின் தலைவரான இஸ்மாயீல் திஹ்லவீ 'நாயகம் அவர்களுக்கு பெரிய சகோதரரின் மரியாதை கொடுங்கள்' (தக்வியத்துல் ஈமான்) என எழுதியிருக்கிறார். குருவைப்போன்றுதானே சிஷ்யரும் இருப்பார். சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும். அதிலும் இக்காலத்திலுள்ள சீடர்களை; கூற வேண்டியதில்லை. குரு 8 அடி பாய்ந்தால் சீடர் 16 அடி பாய்கிறார். குரு ஹராம் என்பார், சீடர் ஹராம் என்ன ஷிர்க்கேதான் என்று வாய் கூசாது தன் மேதாவித்தனத்தை காட்டும் கோஷ்டிதானே!
இப்படி தான்தோன்றித்தனமாக எழுதிவிட்டு அதற்கொரு மறுப்புரை, விளக்கவுரை. போகட்டும் எழுதுகிற விளக்கவுரையையாவது விவஸ்தையோடு எழுதக் கூடாதா?
இறை நம்பிக்கையும் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று எழுதியதில் 'இறை நம்பிக்கை என்பதற்கு 'ஈமான்' என்று அர்த்தம் கொடுப்பது தவறு என்றும், 'நம்பிக்கை' என்ற சொல்லுக்கு எண்ணம் அது விளைகின்ற மனம் என்றே நான் பொருள் கொண்டிருக்கிறேன். இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கி நிற்கிறது' என்றும் தமது அதிபுத்திசாலித்தனத்தை விளம்பரப்படுத்துகிறார். அப்படியாயின், 'ஈமான்' என்பதற்கு தமிழில் என்ன பொருள்? ஆண்டு பலவாக அரபிக்கல்லூரி பலவற்றில் ஓதிக்கொடுத்திருக்கிறீர்களே அப்பொழுது ஈமானுக்கு என்ன பொருளை மாணவர்களுக்குச் சொல்லிக் கெ(h)டுத்தீர்கள்?
தமிழாய்வாளர்களே! புது அகராதி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை என்றால் எண்ணம், மனம் என்று பொருள். இறையென்றால் இறை உதவி. அன்ஸரி சாகிப் எந்த அகராதியிலிருந்து இப் பொருள்களை கண்டெடுத்தாரோ யாம் அறியோம்.!
இத்தோடு விடவில்லை அவர் தம் விளக்கத்தை! மீண்டும் தொடர்கிறார்:-
'இறை என்ற சொல்லை உதவி என்ற சொல் தொக்கியிருக்கிறது. இப்படி தொக்கியிருப்பதற்கு அரபி மொழியில் தக்தீர் என்று சொல்கிறோம். இப்படி தக்தீர் இடுவது அரபு மொழியின் மரபுதான்.'
என்று இறையென்பதற்கு இறை உதவி என தான் கூறும் விளக்கம் சரிதான் என வாதாடுகிறார். அன்ஸாரி தமிழ் மொழியில் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டு விடலாமல்லவா? என எழுதிவிட்டு, அரபி மொழியில், 'தொக்கி நிற்பது மரபுதான்' என்று கூறினால் எப்படி பொருந்தும்? தமிழுக்கு தமிழின் இலக்கண மரபையல்லவா கூற வேண்டும்?
எந்த மொழியில் நாம் கட்டுரை எழுதினோம் என்றே தெரியாமல் ஆலிம் ஒருவர் தடுமாறி அதற்கு விளக்கம் என்ற வகையில் ஏதோ எழுதி வைக்க, அதை வேறொரு ஆலிம் தனது பத்திரிகையில் முன்யோசனையின்றி வெளியிடுவதா? இவர்கள்தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை சீர்திருத்தும் செம்மல்கள். தீனை உயிர்ப்பிக்கும் உலமாப் பெருந்தகைகள் (?) பிறர்கள் அல்லாஹ்வைத் தொழவில்லையே என்று ஏங்கி 'தொழுவோம் வாருங்கள்!' என்று அழைக்கும் முத்தகீன்கள். அய்யோ சமுதாயமே! இதுதான் உன் தலைவிதியா?
முடிவாக, தான் முன்னர் எழுதிய இறை நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்பதற்கு….
'இறை – இறை உதவி
நம்பிக்கை – எண்ணம், மனம்
ஆட்டம் – கலங்குவது
இவற்றை முறைப்படுத்திப் பார்க்கும்போது, நபியவர்கள் இறை உதவி குறித்து மனம் கலங்கிடலாமல்லவா? என்றாகும்' என்று கூறி, நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். அப்பாடா ஒருவகையாக விளக்கம் எழுதி முடித்துவிட்டோம் என்று.
தமிழ் மொழி வல்லுனர்களாலும், நுண்மாண் நுழைபுலமுடைய ஆன்றவிந்தடங்கும் சான்றோர்களாலும், தொகுக்கப்பட்ட நிகண்டுகளையும் அகராதிகளையும் நான் ஆராய்ந்தேன்! அதில் எங்குமே மேற்சொன்ன அர்த்தத்தைக் காண முடியவில்லை. இறை என்ற சொல்லுக்கு வினைச் சொல் என்ற அடிப்படையில் (நீர்) இறைத்தல் என்றும், பெயர்ச்சொல் அடிப்படையில் தலைவன், அரசன், இறைவன் என்றும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்ஸாரி சாகியு எந்தப் பல்கலைக்கழக அகராதியைப் புரட்டினார்? அல்லதுஎந்த நிகண்டைப் பார்வையிட்டார்? என்று தெரிவித்து விளக்கினால் அவருக்கு நிச்சயமாக,
'தமிழ்வேள்' பட்டம் கொடுக்க நாம் சிபாரிசு செய்யலாம்! அப்படியில்லையாயின் அவர் தமது அறிவீனத்தை ஒத்துக் கொண்டு, மன்னிப்புக் கேட்பதே முறையாகும்!
நம்பிக்கை என்பது காரியம்!மனம் என்பது காரணம்!
இந்த இரண்டையும் ஒன்றாக்கி தனது வாதத்திற்கு விளக்கெண்ணெய் போடுகிறார் அன்ஸாரி சாயிபு! இதற்கு ஒத்து ஊதுகிறார் ஷாதலி சாயிபு!
மனம் என்னும் மேடையில் உதயமானதுதான் நம்பிக்கை நட்சத்திரம். இப்படியிருக்கும்போது மனமும் நம்பிக்கையும் ஒன்றாகுமா?
வானம் வேறு! நிலவு வேறு! நிலவும் வானமும் ஒன்றேயென்று ஒருவன் சொன்னால் அவனை நாம் சந்தேகத்தோடு பார்ப்போம். சூரியன் வேறு! ஆகாயம் வேறு!
சூரியனும் ஆகாயமும் ஒன்றே என்று ஒருவன் சொன்னால் நாம் அப்படிக் கூறுபவனைப் பார்த்து அனுதாப்படுகிறோம்.
ஆனால்,
அன்ஸாரி சாயிபு,
குற்றாலத்தில் நீரருவி கொட்டு முன்பே, நான் அங்கு போகத் தயார்! என்ற பாவனையில் உளற ஆரம்பித்துவிட்டார்!
மேலும் தமது 72-ம் ஆண்டு கட்டுரையில் 'இது நபிமார்களுக்கு ஏற்பட்ட இயல்புதான்' என்றும் எழுதி உள்ளார். அதற்கு ஏன் விளக்கம் கொடுக்கவில்லை? என்ன வடிகட்டின பேத்தல் இது? முந்தைய நபிமார்களுக்கும் ஏற்பட்ட இயல்புதானாம். எந்த நபியின் இறை நம்பிக்கை ஆட்டம் கண்டது? எதற்காக ஆட்டம் கண்டது?
அந்தந்த காலங்களில் வாழ்ந்த நெறிகெட்ட மக்களை நேர்வழிப்படுத்தி, ஏகத்துவப் பெருஞ்சுடதை ஏற்றி வைக்கவென இறைவனால் இவ்வகிலத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கே இறை நம்பிக்கை ஆட்டம் காணுமென்றால், சாதாரண உம்மத்துகளின் நிலை என்னவாகும்? கட்டுரை எழுதியவர் , பிரசுரித்தவர்கள் நிலைகள் எல்லாம் என்னவாகும்?
எழுதுகோலையும், காகிதத்தையும் எடுத்து மனம் போனபடி எழுதிவிட்டால் போதாது. எழுதுகிற விவரங்களை அதுவும் நபிமார்கள் – ஷரீஅத் குறித்து எழுதும்போது உன்னிக் கவனித்தல் அவசியம். இது பட்டங்கள் பலபெற்ற – எழுத்தாளரான கட்டுரையாசிரியருக்குத் தெரியாததல்லவே!
இப்படி வெளிக்கு நல்லவர்கள் போல் வேஷமிட்டு கொண்டு உள்ளத்தில் தீய்ந்த கொள்கைகளைக் கொண்டலைபவர்களைப் பற்றி அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
'அல்ஸின துஹும் அஹ்லா மினஸ் ஸுக்ர் வகுலூபுஹும் குலூபுத் தி ஆப்'
'அவர்களின் நாவுகள் சர்க்கரையை விட அதிக இனிப்புடையது. ஆனால் அவர்களின் இதயங்கள் ஓநாய்களின் இதயங்களாயுள்ளன' எனக் கூறுகிறார்கள்.
அடுத்து 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது' என்பதற்கான காரணத்தைத் தமது விளக்கவுரையில் அன்ஸாரி சாகிப் கூறுகின்றார்.
'பெருகிவரும் துன்பங்கள் கடல் அலைகள் போல் அடுக்கடுக்காய் ஓயாது, ஒழியாது அண்ணலவர்களைத் தாக்கும்போது நபியவர்களின் உள்ளத்து வலிவும், இறையுதவி இப்போது வருமோ, கொஞ்சம் தாமதித்து வருமோ என்பது குறித்து அவர்கள் உள்ளம் கலங்கிவிடலாமல்லவா? அப்படி அவர்களுடைய மனம் கலங்கிவிடாமல் காப்பது அல்லாஹ்வின் பொறுப்பு. இப்பொறுப்பை இறைவன் மிஃராஜ் என்ற உருவில் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வைத்தான்.
மிஃராஜின் காரணத்தை இவர் இப்படிக் கூறுகிறார்.
ஆனால்….
அல்லாஹ் தனது திருமறையில், தனது அத்தாட்சிகளை அவர்களுக்கு காட்டும் பொருட்டு அழைத்துச் சென்றதாக – மிஃராஜ் ஏற்பட்டதாகக் கூறுகிறான்.
அன்ஸாரி சாகிபின் தடுமாற்றம் – முரணாணன போக்கு இப்போது மிகத் தெளிவாகி விட்டதல்லவா?
1972-அக்டோபரில் 'மிஃராஜ் ஏன் ஏற்பட்டது?' என்ற கட்டுரையை எழுதியபோது அது குறித்த ஆட்சேபணை கிளப்பப்பட்டது. அதற்கு வெகுவிரைவில் விளக்கவுரை வர இருக்கிறது என்று 1974 செப்டம்பர் ஜமாஅத்துல் உலமாவில் விளம்பரம் வந்தது. இப்பொழுது 1976 ஜூலை விளக்கவுரை என்று குழப்பவுரை வெளிவந்துள்ளது. ஆக விளக்கவுரைகளும், விளம்பர உரைகளும் வருவதற்கே ஆண்டுகள் சில தேவைப்படுகிறது!
இப்படியெல்லாம் ஏன் அண்ணல் பெருமானாரைப் பற்றி தரக் குறைவாக விமர்சிக்க வேண்டும்? ஆதவனைக் கண்டு நாய்கள் குரைப்பதால் அப்பகலவனுக்கு எனன பங்கம் வந்துவிடப் போகிறது? பெருமானாரை தரங்குறைத்து மதிப்பிடுபவன் தன் அந்தஸ்த்து பறிபோய் தரம் தாழ்வர்! இது அன்று முதல், இன்றுவரை நாம் கண்டு வருபவைகளாகும்.
'அல்லாஹ்வின் ரசூலை வருத்தப்படுத்துபவர்களுக்குக் கொடிய வேதனை உண்டு' என குர்ஆன் கூறுகிறதே!
அவரவர்கள் எந்தெந்தக் கொள்கைகளை சார்ந்திருக்கிறார்களோ யார்யாரை குருவாக ஏற்றுக் கொண்டாடுகிறார்களோ அவர்களது கொள்கைகள்தானே பக்தாசிகாமணிகளுக்கும் இருக்கும். உள்ளத்தில் நிறைந்திருக்கும் தவறான கொள்கைகள் தாம் எழுத்து வடிவத்திலும், பேச்சு உருவிலும் வெளிவரும்.
'ஜமாஅத்துல் உலமா' என்று பத்திரிகைக்க பெயர் வைத்திருப்பதைக் கண்டு உலமாக்கள் சபையினரால் – அவர்களது எல்லோரது ஏகோபித்த ஒப்புதலையும் பெற்று நடைபெறுவதாக யாரும் எண்ண வேண்டாம். இல்லையில்லை உலமாக்களின் அங்கீகாரத்தோடுதான் உலமாக்கள் சபையின் ஒப்புதலோடுதான் உலமாக்கள் சபையின் பெயரை இப்பத்திரிகைக்கு சூட்டியிருக்கிறேன். ஜமாஅத்துல் உலமா என்று நாமம் இட்டிருக்கிறேன் என்று அதன் ஆசிரியர் கூற முன்வருவாரா?
எனவே ஆலிம்களின்ஒப்புதலோடுதான் இப்பத்திரிகை நடக்கிறது என்று யாராவது நம்பியிருந்தால் அவ்வெண்ணத்தை தூர விலக்கி வைத்து விடுங்கள்! ஆகவே ஆசிரியரே! ஜமாஅத்துல் உலமாவின் பெயரை வைத்துக் கொண்டு ஷரீஅத்திற்கு மாறுபட்ட கருத்துக்களை எழுதாதீர்கள். அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
நன்றி: ஹுஜ்ஜத் மாத இதழ் ஆகஸ்ட் 1976.
முற்றும்.
நடந்த சம்பவம்:- நாயகத்தை குறைவுபடுத்தியவர் அடைந்த கதி:
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? என்று தரக்குறைவாக எழுதிய ஏ.ரு.யு.யூசுப் அன்ஸாரி என்பவர் இறந்தவுடன் சென்னையில் அவர் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றியும் கடும் துர்வாடை வீசிக் கொண்டிருந்தது. அங்கு வருபவர்களெல்லாம் உடனே இதை எடுத்துவிடுங்கள் என்று முகம் சுளித்து , மூக்கு பொத்திக் கொண்டு சென்றனர். மேலும் அந்த இறந்த உடலிலிருந்து இரத்தம் வந்து கொண்டேயிருந்தது. இதைப் பார்த்தவர்கள் அவரின் பரிதாப நிலையை எண்ணி வருந்தினர்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "நாயகத்தின் ஈமான் ஆட்டம் கண்டுவிடலாமல்லவா? கட்டுரைக்கு பதில்!"

‘குத்பியத்’ கூடும்-பத்வா

‘குத்பியத்’ கூடும்-பத்வாசுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் 'குத்பியத்' கூடும் ஈசால் தவாபு ஆகும்.

பத்வா

வெளியீடு:

மஹ்லறத்துல் காதிரிய்யா சபை
மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக் கல்லூரி
காயல்பட்டணம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.

பேரன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

உண்மை முஃமின்களாகவும், முத்தகீன்களாகவும், இறைநேசச் செல்வர்களாகவும் இறையருள் ஞானமேதைகளாகவும் விளங்கி நமது முன்னோர்களால் செயல்படுத்தப்பட்டு வந்ததும் நமது சுன்னத் வல் ஜமாஅத் இமாம்களாலும் உலமாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட 'வசீலாவின்' பாற்பட்டதுமான 'குத்பிய்யா குறித்து சமீபகாலமாக வஹ்ஹாபிகளும், மௌதூதிகளும் தீவிர எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் 'இருட்டு திக்ரு' என்று ஏளனம் செய்து வருவதையும் ஷிர்க்க என்றும் கூட கூறி வருவதையும் நாம் அறிவோம்.

வஹ்ஹாபிய்யத்தினுடையவும் அதன் சார்பு இயக்கமான மௌதூதிய்யத்தினுடையவும் அடிப்படைக் கோட்பாடுகளை தெரிந்து கொள்ளாத சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாக்களில் தெளிவு இல்லாத பொது மக்களில் சிலர் இவ்வஹ்ஹாபிய-மௌதூதிய்யப் பிரச்சாரங்களினால் 'மயக்கம்' கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் குத்பிய்யத்தைப் பற்றி தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியாத் சாலிஹாத் அரபிக்கல்லூரியிலிருந்தும் கேரளத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மிகப் பெரிய மத்ரஸாவான பைஜாபாத் (பட்டிக்காடு) ஜாமியா நூரிய்யா அரபிக்கல்லூரியிலிருந்தும் பத்வாக்களைப் பெற்று, அத்துடன் கோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக்கல்லூரியினுடையவும் எங்கள் மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியினுடையவும் பத்வாக்களையும் இணைத்து இதில் வெளியிட்டுள்ளோம்.

பொதுமக்கள் உண்மை நிலையைத் தெரிந்து, காமிலான முஃமின்களான நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய 'குத்பிய்யத்' ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் உடன்பாடானதும் அங்கீகரிக்கப்பட்டதுமாகும் என்பதைத் தெளிந்து செயல்பட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்,

தலைவர், செயலர், மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்.
மஹ்லறா,
காயல்பட்டணம்.
24-04-1406 (1-8-1986)

தமிழகத்தின் தாய் மத்ரஸாவான வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் மார்க்கத் தீர்ப்பு.

பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தின் சங்கைக்குரிய முப்தி மற்றும் கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். கீழ்காணும் கேள்விக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டுகிறோம்.

கேள்வி: யாஷைகு முஹ்யித்தீன் என ஆயிரம் தடைவ அழைக்கும் (குத்பிய்யத்) கூடுமா? கூடாதா?

இப்படிக்கு,

மௌலவி சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி

மௌலவி கலந்தர் மஸ்தான் ரஹ்மானி
காயல்பட்டணம்.

விடை: வினா உண்மையெனில் யாஷைகு அப்துல் காதிர் ஜீலானி ஷைஅன்லில்லாஹ் என்று சொல்பவர் ஒன்று அவர்களை நேரடியாகப் பார்க்கக் கூடியவராக இருக்கலாம் அல்லது அவர்களை நேரடியாகப் பார்க்காதவராகவும் இருக்கலாம். கௌதுல் அஃலம் அவர்களை நேரடியாகப் பார்த்து கேட்டால் அது கூடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்களை நேரடியாகப் பார்க்காமல் கேட்டால் அது வீணானதாகும். அவ்வாறே அந்த விர்தும் வீணானதாகும் என்றாலும் துஆ என்கிற அடிப்படையில் மேற்கூறிய வாசகத்தின் கருத்து 'யா இலாஹி அஃதினீ ஷைஅன்பிவஸீலத்திஷ் ஷைகு அப்துல் காதிரில் ஜீலானி' (இறைவனே! ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பொருட்டால் எனது வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக!) இவ்வாறு என்று மனதில் நம்பிக்கை கொண்டு ஆயிரம் தடவை சொன்னாலும் சந்தேகமில்லாமல் கூடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அப்துல் வஹ்ஹாப்
அபல்லாஹு அன்ஹு

முப்தி மத்ரஸா பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்,

வேலூர் 29-1-86.

கேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா (பட்டிக்காடு) பைஜாபாத் ஜாமிய்யா நூரிய்யா அரபிக் கல்லூரி உலமாக்களின் மார்க்கத் தீர்ப்பு

குத்பிய்யத் என்பது முதலில் ஹாஜத் நபில் தொழுது ஹலரத் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கோர்வை செய்த கஸிதாவை ஓதி, ஹலரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருநாமத்தைச் சொல்லி 1000 தடவை அழைத்து உதவி கோருதல் ஆகிய அம்சங்களைக் கொண்டதாகும்.

இதில் குத்பு என்று மிகப் பிரபலமான மிகப்பெரும் வலியுல்லாஹ் என்று தெளிவான பல கராமத்துக்களை நிகழ்த்தியவர்கள் என நிரூபணமான ஹலரத் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு வசீலா தேடுவதும் அவர்களைப் புகழும் அம்சங்களும் அடங்கி உள்ளன.

இந்த குத்பிய்யத் ஜாயிஸ் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. குறை மதியாளர்கள்தான் இதை ஷிர்க் என்பர். அறிவாளர்கள் அவ்வாறு எண்ணமாட்டார்கள். இந்தக் குத்பிய்யத்தைச் செயல்படுத்துபவர் இஸ்லாமிய புனித ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவரைப் பின்பற்றித் தொழுவதும் ஆகுமானதாகும். அவரைப் பின்பற்றித் தொழுவதன் மூலம் ஜமாஅத்துடைய தவாபும் கிடைக்கும்.

இதில் குறிக்கப்படும் 'கல்வத்' என்பது மற்றவர்களைவ மட்டும் தனித்திருப்பது என்பதாகும்.

நபிமார்களைக் கொண்டும் வலிமார்களைக் கொண்டும் ஸாலிஹீனு;களைக் கெணர்டும், அவர்களின் ஹயாத்திலும் வபாத்திற்குப் பின்னரும் வசீலா தேடுவதும் ஆகும் எனடபதை மறுப்பவர் 'பித்அத்' காரராவார். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விட்டும் அப்பாற்பட்டவரும் ஆவார். இத்தகைய பித்அதகாரர்களை பின் தொடர்வது மக்ரூஹ் என்பதுடன் அவ்வாறு தொழுதால் அவர்களுக்கு ஜமாஅத்தின் தவாபும் கிடைக்காது. அவர்களை நியமிப்பதும் கூடாது. அல்லாஹ் மிக அறிந்தவன்!

T. அபூபக்கர் முஸலியார்,

முதல்வர், ஜாமியா நூரிய்யா அரபிக் கல்லூரி,
பைஜாபாத், பட்டிக்காடு, கேரளா.

பத்வாவை சரிகண்டு ஒப்பமிட்டவர்கள்:

அல்ஹாஜ் மௌலானா மௌலவி K.K. அபூபக்கர் முஸலியார் (பாஜில் பாகவி பாஜில் தேவ்பந்த்)
மௌலானா மௌலவி M.T. அப்துல்லாஹ் முஸலியார்
மௌலானா மௌலவி M.K. முஹ்யித்தீன் குட்டி முஸலியார்
மௌலானா மௌலவி K. அலிகுட்டி முஸலியார்
மௌலானா மௌலானா P.K. குஞ்சு முஸ்லியார்.

காயல்பட்டணம் மஹ்லறதுல் காதிரிய்யா அரபிக்கல்லூரியின் பத்வா

நடைமுறையில் 'குத்பிய்யத்' என்று சொல்வது எதார்த்தத்தில் 'இஸ்திகாதா' என்று கூறப்படும் வசீலாவின் வகைகளில் ஒன்றாகும். நபிமார்கள், வலிமார்கள் ஆகியோரைக் கொண்டு அவர்கள் உலகத்தில் வாழும் காலத்திலும், அவர்களின் வபாத்திற்குப் பின்னரும் 'வசீலா' என்னும் உதவி தேடுதல் நமது மார்'க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும்.

இதில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு அல்லது பிற நபிமார்கள், வலிமார்களைக் கொண்டு வசீலா தேடுதல் (தவஸ்ஸுல்) அபயதம் தேடுதல் (இஸ்திகாதா) மன்றாட்டம் தேடுதல் (தஷப்புஃ) அவர்களை முன்னிட்டு கோரிக்கை செய்தல்(தவஜ்ஜுஹ்) போன்ற இவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இதில் எல்லாமே கூடும்.

சிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் 'யா நபி' அல்லது 'யா வலி' எனக்கு உதவுங்கள் என விளித்து வேண்டுவதும் வசீலாவின் பாற்பட்டதே! இது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்வதுதான் குறிப்பிட்ட அவர்களை அழைத்து வேண்டுதல் செய்தது 'ஹகீகத்' என்னும் யதார்த்தத்தின் நேர் எதிரிடையான 'மஜாஸ்' என்னும் உருவகமாகும். 'இன்ன நபியை அல்லது வலியை வசீலாவாக வைத்து என் கஷ்டங்களை நீக்க வேண்டுமென்று என் இறைவனே உன்னை வேண்டுகிறேன் என்பதுதான் யதார்த்தத்தில் அவர் கூறிய வாசகத்தின் கருத்தாகும். நபியையோ அல்லது வலியையோ அவர் குறிப்பிட்டது மஜாஸின் பாற்பட்டதாகும். நமது ஷெய்குமார்களிடம் இருந்து நாம் கற்றதும் அவர்கள் தங்களின் மகான்களான ஆசான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரைபரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும் தெளிவும் மகிக பெரியோர் வாயிலாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளதுமான இந்த வசீலா என்னும் நடைமுறை ஆகுமானது என்பது பல்வேறு நாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பெருமக்கள் நான் இந்த புனிதமான ஷரீஅத்தை பாதுகாத்து நமக்குத் தந்தவர்கள். அவர்களின் போதனையின் வாயிலாக இந்த ஷரீஅத்தை நாம் புரிந்து கொண்டோம். இந்நிலையில் வசீலா இஸ்திகாதா போன்றவை கூடாது ஷிர்;க் என்றெல்லாம் கூறும் குறைமதியாளர்கள் கருத்துப்படி அந்த வசீலா ஆகுமானது என்னும் அறிவித்:துச் சென்ற இந்த மகான்கள் எல்லாம் காபிர்கள் என்றால் இந்த 'ஷரீஅத்' எப்போதோ இல்லாமலாகியிருக்குமே! மேலும்,

குத்பிய்யத்தில் குறிக்கப்படும் கல்வத் என்பதற்கு மற்ற ஜனங்களைவ pட்டும் ஒதுங்கித் தனித்திருத்தல் என்ற பொருளும் உண்டு. ஏனெனில் இந்தத் தனிமை இக்லாஸுக்கு மிக நெருக்கமானதாக முகஸ்துதியை விட்டும் மிகத் தூரமானதாகவும் இருக்கிறது.

ஒரு கூட்டத்தில் இருந்தாலும் பிறரின் பக்கம் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் 'கல்வத்' என்று சொல்வதுண்டு. இது இரு கண்களை மூடுவதன் மூலமோ இருட்டில் இருப்பதன் மூலமாகவும் கூட அமையலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

இப்படிக்கு,

அல்ஹாஜ் S.N. சாகிப் தம்பி ஆலிம் மஹ்லரி,

முதல்வர்,

பத்வாவை கரி கண்டு ஒப்பமிட்டவர்கள்

S.S.K. மஸ்தான் ரஹ்மானி

மௌலானா மௌலவி
S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி

மௌலானா மௌலவி M.M. செய்யது முகம்மது பாகவி

மௌலானா மௌலவி ஹாபிஸ்
V.A. மீரான் முஹியித்தீன் பாஜில் பாகவி

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா
M. ரபீக் அகமது உலவிய்யு பாஜில் பாகவி

மௌலானா மௌலவி
S.M. முகம்மது பாரூக் பாசி

மௌலானா மௌலவி SM.B. செய்யிது ஹாமித் சிராஜி.

கோயமுத்தூர் இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரியின் பத்வா

ஆரம்பத்தில் தனது நாட்டம் நிறைவேற்றுவதற்காக 12 ரக்அத்துகள் ஹாஜத்து நபில் தொழுது யாகௌது யாமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று அழைக்கும் 'குத்பிய்யா' என்னும் இந்த முறை அல்லாஹ்வின் நேயர்களான நல்லடியார்களைக் கொண்டு அபயம் தேடும் 'இஸ்திகாதா' என்பதின் பாற்பட்டதாகும். வழிகேடர்களான புதிய கோட்பாட்டுக்காரர்கள் தான் இதை ஆகாது என்று மறுப்பார்கள். இம்மாதிரி அபயம் தேடி அழைப்பது ஆகும் என்பது குர்ஆன், ஹதீது ஆகியவற்றின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் நம்முடைய மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும், திறனும் மிக்க உண்மை முஃமின்களான-முத்தகீன்களான நம்முடைய ஷெய்குமார்களிடமிருந்து நாம் கற்றதும், அவர்கள் தங்களின் ஆசான்களான மகான்களிடமிருந்து கற்றதும் இவ்வாறே பரம்பரை பரம்பரையாக சன்மார்க்கத்தில் தேர்ச்சியும், தெளிவும் மிக்க பெரியோர்கள் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுள்ளதுமான இந்த இஸ்திகாதா ஆகுமானது என்ற விஷயம் உலகெங்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெரும்மக்களை பின்பற்றுவதே நமக்குப் போதுமானதாகும்.

குத்பிய்யத்தின் ஓர் அங்கமாக முதலில் நிறைவேற்றப்படும் 12 ரக்அத் ஹாஜத்து நபில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போது இமாம் கஸ்ஸாலி அவர்கள் 'யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டு மார்க்க சம்பந்தமான மற்றும் உலக சம்பந்தமான தேவை ஏற்பட்டால்ள இதே 12 ரக்அத் நபில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும் என்று தனது 'இஹ்யா உலூமுத்தீனில் குறிப்பிட்டுள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 206)

இந்த 12 ரக்அத் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 'நிஹாயா' என்னும் நூலில் (பாகம் 1 பக்கம் 501) ல் குறிக்கப்பட்டுள்ளது. நிஹாயாவின் விளக்க நூலான ஹாசியா 'ஷப்ராமல்சி' (பாகம் 1 பக்கம் 501)ல் அந்த தேவையை கேட்கத் துவங்கும் போது இந்த 12 ரக்அத்துகளை தொழுவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.

அல்லாமா அஷ்ஷெய்கு யூசுபுன் நபஹானி அவர்கள் இமாம் ஸுபுகீ அவர்கள் கூறுவதாக தனது 'ஷவாஹிதுல் ஹக்' எனும் நூல் பக்கம் 20ல் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு 'தவஸ்ஸுல், தஷப்புஃ, இஸ்திகாதா' எனும் இரட்சிப்புத் தேடுதல் ஆகுமான நல்ல அமலாகும். இது ஆகும் என்பது நபிமார், ரஸூல்மார்கள்செயல்முறைகளிலிருந்தும் ஸாலிஹீன்கள் உலமாக்கள் ஆகயிவர்களின் வரலாற்றில் இருந்தும் அறியப்பட்ட தெரிந்த விசயம்தான்.

இமாம் ரமலி அவர்களிடத்தில் சிரமமான சந்தர்ப்பங்களில் யாரேனும் நபியையோ அல்லது வலியையோ அழைத்து அபயம் தேடுவம் முஸ்லிம் பொதுமக்களின் நடைமுறைகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, நபிமார்கள், ரசூல்மார்கள், ஒலிமார்கள், உலமாக்கள், ஸாலிஹீன்கள் ஆகியோரைக் கொண்டு 'இஸ்திகாதா' என்னும் அபயம் தேடுதல் ஜாயிஸாகும். ரசூல்மார்களுக்கும், நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அபயம் அளிக்கக் கூடிய ஆற்றல் இறைவன் அருளால் உண்டு.

ஏனெனில் நபிமார்களின் முஃஜிஸாவும் வலிமார்களின் கராமத்தும் அவர்களுடைய வபாத்திற்குப் பின்னரும் நின்று விடாது தொடரும். ஏனென்றால் நபிமார்கள் தங்களுடைய கப்றுகளிலே ஜீவனுடன் இருக்கிறார்கள். தொழுகிறார்கள். ஹஜ்ஜும் செய்கிறார்கள் என்று ஹதீதுகள் வந்துள்ளன. எனவே நபிமார்களின் மூலம் ஏற்படும் இந்த இரட்சிப்பு அவர்களைப் பொறுத்தவரை 'முஃஜிஸா' என்று ஆகும். அவ்லியாக்களுக்கு இது 'கராமத்' என்று ஆகும் என்று இமாம் ரமலி அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே வினாவில் குறிக்கப்பட்டுள்ள 'குத்பிய்யத்' ஆகுமானதாகும்.

இப்படிக்கு

மௌலவி அமானுல்லாஹ் நூரி

பத்வாவை சரிகண்டு ஒப்பமிட்டவர்கள்:

மௌலவி முஹம்மது அலி இம்தாதி
மௌலவி காஜா முஹ்யித்தீன் இம்தாதி
மௌலவி முஹம்மது இல்யாஸ்
மௌலவி முஹம்மது அலி
மௌலவி முஹம்மது லியாகத் அலி
மௌலவி முஹம்மது மன்ஸுர் சிராஜி
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "‘குத்பியத்’ கூடும்-பத்வா"
நான்
பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு
காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !
என்னை
தடவிக்கொடுக்கின்ற எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன்
விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம்
பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !

உன் பிறப்பு

உன் தாய்க்குத்

தாய்மையையும்,

எனக்கு

வாழ்வையும்

தந்ததுபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more " "

திங்கள், 9 மே, 2011

பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?

பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?
கேள்வி: பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா? ஆதாரம் தேவை

பதில்:சிறப்புடையோர்களையும் பெரியவர்களையும் கண்ணியப்படுத்தும் பொருட்டு எழுந்து நிற்கலாம். இது பற்றி ஸஹீஹான நபிமொழிகள் உள்ளன. (ஆதாரம்: பதாவா நவவி பக்கம் 48,49)

ஞானம் உள்ளோர், நற்குணமுடையோர், நீதமாக நடக்கும் அதிகாரி, பெற்றோர் ஆகியோருக்கு மரியாதைக்காக எழுந்து நிற்பது சுன்னத் (ஆதாரம் பத்ஹுல் முயீனு; பாகம் 4, பக்கம் 192)

சிறப்புடையோரை கண்ணியப்படுத்தும் நோக்குடன் எழுந்து நிற்பது சுன்னத்.
பத்ஹுல் பாரி பாகம் 13 பக்கம் 288,293 தன்வீருல் குலூப் பக்கம் 200.

மரியாதைக்காக எழுந்து நிற்பது கூடாது என்று எந்தவொரு ஹதீதும் வரவில்லை.

நன்றி: வஸீலா 1-7-87
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "பெரியோர்களுக்கு மரியாதை செய்வதற்காக எழுந்து நிற்கலாமா?"

sunnat

read more "sunnat"

sunnat

read more "sunnat"

sunnat

read more "sunnat"

திருநபியின் திருதரிசனம் பெற ஷாஹ்வலி சொன்ன அறிவுரை!

திருநபியின் திருதரிசனம் பெற ஷாஹ்வலி சொன்ன அறிவுரை!
ஷெய்குனா ஷாஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறுதி உபதேசம்.
சகோதரனே! உமக்கு நான் வஸிய்யத் செய்கிறேன். தினமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக் கோலத்தை மனக் கண்ணில் உருவகப்படுத்திக்கொண்டே இரு.
இவ்வாறு உருவகப்படுத்துவதால் சில சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தாலும் சரி உமது ஆன்மா றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் மிக விரைவில் உமது றூஹுடன் இணைந்து விடும். பின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் றூஹ் உன்முன்னால் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் பார்ப்பீர்கள். அவர்களுடன் உரையாடவும் செய்வீர்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் உமக்கு விடை கொடுப்பார்கள்.
ஆதாரம்: அல்மதாரிஜுந்நுபுவ்வத் பாகம் 2 பக்ம் 789.
நன்றி: வஸீலா 15-11-87 - 1-12-87
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "திருநபியின் திருதரிசனம் பெற ஷாஹ்வலி சொன்ன அறிவுரை!"

sunnat

read more "sunnat"

ஞாயிறு, 8 மே, 2011

Kerala Jamieat Ulama Fatwa Against Tableegh

தப்லீக் ஜமாஅத் பற்றி சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் தீர்ப்பு.
'தப்லீக் ஜமாஅத்' என்றும் புது இயக்கத்தைப் பற்றி பலர்களிடமிருந்து கேள்விகள் வந்தபடியால் அதைப் பற்றி தீர்மானம் எடுப்பதற்காக அவர்களுடைய நூல்களும் மற்றும் சரியாக யோசனை செய்து ஓர் ரிப்போர்ட் தயார் செய்வதற்காக ஒரு சப் கமிட்டி நியமனம் செய்திருந்தது.
அந்த சப் கமிட்டி, 1)பதாவா ரஷீதிய்யா 2)அல் முஹன்னது அலல் முபன்னது 3)மல்பூளாத் 4) பளாயிலுத் தப்லீக் 5) மக்தூபாத் 6) பஹஸ் கிஸைபர் 7) தீனி தஃவது பறாஹீனே காத்திஆ 9) ஈளஹின் அதில்ல 10) சபீலுற் றஸாது என்ற அவர்களுடைய நூல்கள் சரியாக பரிசோதனை செய்ததில் சுன்னத் ஜமாஅத்தின் அடிப்படைக்குத் தகாது பல விஷயங்களும் உள்ளதாக ரிப்போர்ட் சமர்ப்பித்தார்கள்.
அந்த ரிப்பேர்ட்டின் அடிப்படையில் சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமாவின் முஷாவிறா பரீசிலனை செய்ததில் தப்லீக் ஜமாஅத்து சுன்னத்து ஜமாஅத்துக்கு எதிரான கொள்கைகள் கொண்டது என்று முடிவு- பத்வா செய்து இருக்கிறார்கள். விளக்கமாக விபரம் பிற்பாடு வெளியிடுகிறதை எதிர்பாருங்கள்.
இப்படிக்கு,
செயலாளர் ஈ.கெ. அபுபக்கற் முஸலியார்,7-11-1965 சமஸ்த கேரள ஜம் இய்யத்துல் உலமா,ஸமஸ்த காரியாலயம், கள்ளிக் கோட்டை.

குறிப்பு: இந்த விபரம் 10-11-65 சந்திரிகா பேப்பரில் வெளியிடப்பட்டது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "Kerala Jamieat Ulama Fatwa Against Tableegh"

இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?

இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?
கேள்வி: குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ இறைத்தூதரின் முடி போன்றவற்றை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கம் தருக.
பதில்:நபிமார்களின் பொருட்கள், ஞாபகச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுவது குர்ஆன், ஹதீஸ்களின் சரியான அறிவு இல்லாததே காரணம். முந்தைய நபிமார்கள் உபயோகித்து வந்த பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. அவற்றின் பொருட்டைக் கொண்டு உதவி தேடப்பட்டும் வந்தது என்பதற்கு அல்குர்ஆனில் தெளிவான ஆதாரம் உண்டு.
'……………உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்தவண்ணமாக ஒரு பேழை உண்மையாகவே உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதும் மூஸா ஹாரூன் உடைய சந்ததிகள் விட்டுச் சென்றதில் மீதமுள்ளதும் இருக்கும்.ள மெய்யாகவே நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு'
(அல்-குர்ஆன் 2:248)
இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகின்ற நபி மூஸா நபி ஹாரூன் அலைஹிமிஸ்ஸலாம் ஆகியோரது ஞாபகச் சின்னங்கள் என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் அனைவரும் ஒத்தக் கருத்தையே கொண்டுள்ளனர்.'மூஸா நபியவர்களுடைய கம்பு, கட்டளைகள் எழுதப்பட்ட பலகைத் துண்டுகள், ஹாரூன் நபி அவர்களுடைய மேலங்கி' (தப்ஸீர் இப்னு அப்பாஸ்)
'பலகைத்துண்டுகள், மூஸா நபியின் கம்பு, ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி, மூஸா நபியின் செருப்புகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை'(தப்ஸீர் மதாரி;குத் தன்ஸீல்)
'மூஸா நபியின் கம்பு, செருப்புகள், ஹாரூன் நபியின் கம்பு, தலைப்பாகை, மன்னுஸ்ஸல்லாவின் ஒரு பகுதி' (தப்ஸீர் லுபாபுத் தஃவீல்)
பலகைத் துண்டு, மூஸா நபியின் கம்பு, ஆடைகள், ஹாரூன் நபியின் தலைப்பாகை' (தப்ஸீர் பைளாவி)
தப்ஸீருல் கபீர், தப்ஸீர் ரூஹுல் மஆனி, தப்ஸீர் ஜலாலைன் என்று அனைத்து தப்சீர்களிலும் பனூ இஸ்ரவேலர்களிடம் இருந்த அந்தப் பெட்டியினுள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் விட்டுச் சென்ற பொருட்களே இருந்தன என்றும், போர்காலங ;களில் இந்தப்பெட்டியினை முன்னால் வைத்து உதவி தேடுவர் வெற்றியும் பெறுவர் என்று காணக் கிடக்கிறது.
நபிமார்களின் புனிதப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்கு குர்ஆன் கூறும் அத்தாட்சி இது.
அடுத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி பாதுகாக்கப்பட்டு வந்ததா? சஹாபாக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தனரா? என்பது குறித்து ஹதீஸ்களின் வெளிச்சத்தில் ஆராய்வோம்.
'நான் உம்மு ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடிகளில் மருதானி தோய்த்த திருமுடியை எடுத்துக் காட்டினார்கள்.'
அறிவிப்பவர்: உதுமான் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி பாகம் 2 பக்கம் 875.
இந்த ஹதீஸிலிருந்து உம்மு ஸல்மாவிடம் அண்ணலாரின் பல முடிகள் இருந்தன என்பது புரிகிறது என புகாரி விரிவுரையாளர் கஸ்தலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
உம்முஸல்மா அவர்களிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடியொன்று இருந்தது. மக்கள் அதன் மூலம் நோயிலிருந்து சுகம் பெறுகின்றனர். சில நேரங்களில் தண்ணீர் பாத்திரத்தில் அத்திருமுடியை முக்கி எடுத்து அந்நீரைப் பருகுவர்.' (புகாரி ஓரக் குறிப்பு பக்கம் 875)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இத்திருமுடி, அன்னாரது மறைவுக்குப் பின்னரே அதிகமாக நரைத்திருக்கிறது. ஏனெனில் அன்னை உம்மு ஸல்மா ரலயில்லாஹு அன்ஹா அவர்கள் அத்திருமுடியை அளவுகடந்து கண்ணியப்படுத்தும் பொருட்டு அம்முடிக்கு அத்தர் பூசுபவர்களாக இருந்ததாக அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்புச் செய்வதை புகாரியின் ஓரக்குறிப்பிலும் (பக்கம் 875) இமாம் நவவி அவர்கள் முஸ்லிமுக்கு எழுதிய விரிவுரை (பாகம் 2 பக்கம் 254) யிலும் காணலாம்.
'நான் அபீதாவிடம் சொன்னேன், எங்களிடம் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாகவோ, அவர்களது குடும்பத்தினர் மூலமாகவோ பெற்ற அண்ணலாரின் திருமுடி ஒன்று உள்ளது. உலகில் உள்ள அனைத்துப் பொருளையும் விட இத்திருமுடி என்னிடம் இருப்பது மேலானது' என்று இப்னு ஸிரீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். –நூல்: புகாரி.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜின் போது) மினாவில் கல்லெறிந்து விட்டு தம் இருப்பிடம் வந்து ஒட்டகை அறுத்த பின்னர், நாவிதரை அழைத்து தமது சிரசின் வலப்பக்கத்து முடியினை சிரைத்தெடுக்கச் கூறினார்கள். அபூதல்ஹா அன்சாரி என்ற தோழரை அழைத்து சிரைத்த அம்முடியைக் கொடுத்தனர். பின் இடது பக்கத்தையும் மழித்து அந்த முடியையும் அபூதல்ஹா அவர்களிடம் கொடுத்து மக்களுக்கு அவற்றைப் பங்கிட்டுக் கொடுக்குமாறு சொன்னார்கள்.'
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி, முஸ்லிம்.
இதன் மூலமாக அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தம் திருமுடிகளை பங்கிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தியதை அறிந்து கொள்ளலாம். அண்ணலாரின் முடிகள் பாதுகாக்கத் தகுந்ததல்ல என்றிருக்குமானால் நாயகமே தோழரை அழைத்து அதனைக் கொடுப்பார்களா?
உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலாரின் இரு காலுறைகள், ஒரு கம்பு, ஒரு வாளுறை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும் போது 'யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தப் பொருட்கள் இவை'என்று கூறுவார்கள் என றூஹுல் ஈமான் (பக்கம் 2) எனும் நூல் கூறுகிறது.
முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் லுங்கி, சட்டை, மேலாடை, சில திருமுடிகள், நகங்கள் இருந்தன. முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உயிர் பிரியும் நேரத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி-ன் சட்டையால் என்னை கபனிடுங்கள், மேலாடையால் என்னை சுற்றி லுங்கியை எனக்கு உடுத்துங்கள். எனது கண்ணிலும், கன்னத்திலும், நெற்றியிலும் அண்ணலாரின் திருமுடியையும் நகங்களையும் வையுங்கள். எனக்கும் அர்ஹமுர்ராஹிமீனுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினர்.
நூல்: இக்மால் பக்கம் 617
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமுடி கீழே விழாதவாறு தாங்கி பிடித்து பரக்கத்திற்காக பாதுகாத்து வைக்கும் வழக்கம் சஹாபாக்களிடம் இருந்தது'.
ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 256.
அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள்,' அண்ணலாரின் ஜிப்பா ஒன்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்தது. ஆயிஷாவின் வபாத்துக்குப் பின்னர் அதனை நான் பெற்றேன். தற்போது அந்த ஜுப்பாவைக் கழுகி நோயுற்றவர்களுக்குக் குடிக்க கொடுக்கிறோம். அவர்கள் அதன் மூலம் சுகமும் பெறுகின்றனர்.'
முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 374, கிதாபுஷ்ஷிh பாகம் 2 பக்கம் 27.
இந்த ஹதீஸின் மூலம் ஸாலிஹீன்களின் உடைகளைக் கொண்டும், ஞாபகச் சின்னங்களைக் கொண்டும் பரகத் பெற ஆதாரமிருக்கிறது. -ஷரஹ் முஸ்லிம் பாகம் 2 பக்கம் 191
அண்ணலாரின் அன்பு மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து, 'நீங்கள் மூன்று தடைவ அல்லது ஐந்து தடைவ அல்லது அதை விட அதிகமாக குளிப்பாட்டுங்கள். நீரையும், சீயக்காயையும் போட்டு நீர் ஊற்றி விட்டு இறுதியில் கற்பூரத்தை வையுங்கள். எல்லாம் முடிந்து விட்டால் எனக்குத் தகவல் கொடுங்கள் என்று கூறினர். அனைத்தும் முடிந்தபோது அண்ணலாரை அழைத்தோம். அண்ணலார் தமது வேட்டியைத் தந்து அதை அன்னாருக்கு ஞாபகச் சின்னமாக அணிவித்து விடுங்கள் என்று சொன்னார்கள்.-அறிவிப்பாளர்: உம்மு அதிய்யா. நூல்: முஸ்லிம் பாகம் 1 பக்கம் 304.இந்த ஹதீஸில் ஸாலிஹீன்களின் உடைகள், ஞாபகச் சின்னங்களைக் கொண்டு பரக்கத் பெறுவது ஆகும் எனப்தற்கு ஆதாரமிருக்கிறது. -ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 305.
நன்றி: வஸீலா 15-2-1987
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?"

Paradise Paranets-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே

Paradise Paranets-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே!.
தொகுப்பு: குளம் ஜமால் முஹம்மது.
1.
ஃபத்ரத் காலம்
2. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்களின் காலம்
3.ஆட்சேபணைகளும், தெளிவான பதில்களும்
4. முடிவுரை
முன்னுரை
எங்கும் நிறைந்திலங்கும் வல்லவனாம் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாகவும், பரிசுத்தத்திலும் பரிசுத்தமான வமிசாவழியில் உயர் குலத்தில் தோன்றிய உத்தமராம் ஹபீப் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்கள், உற்ற தோழர்கள், அவர்களை அணுகளவும் பிசகாமல் நடந்த இறைநேசச் செல்வர்கள், மஷhயிகுமார்கள் மற்றும் ஸாலிஹீன்கள் ரலியல்லாஹு அன்ஹும் அனைவர்கள் மீதும் என்றென்றும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக! ஆமீன்.
அன்புள்ள முஃமின்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாத்தை மக்களுக்குப் போதித்து மக்களை நேர்வழிபடுத்திட வல்ல அல்லாஹ் ரஸூல்மார்களையும், நபிமார்களையும் இவ்வுலகிற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தான். அவ்வாறு அவன் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் வமிசங்கள்,குலங்களை சுத்தமானதாகவும், உயர்வானதாகவும் அமைத்து அதிலிருந்தே அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள், ரஸூல்மார்கள் தங்கள் தூதுத்துவத்தை தங்கள் சமூகத்தாரிடம் எடுத்துரைத்த போது, அந்த சமூகத்தாரில் அந்த கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஈமான் கொண்டவர்களும், அதை மறுத்து காபிராகிப் போனவர்களும் என்று இரு கூட்டத்தினர் இருந்தனர். நபிமார்களின் கொள்கையை மறுத்தவர்கள் அந்தக் கொள்கையை மறுத்து நடந்தார்களே தவிர, அந்த நபிமார்களை மிக மோசமாக இழிவுபடுத்தியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை.
ஆனால் நமது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தில்; முனாபிக்குகள் எனும் நயவஞ்சகர் தோன்றி தங்களது நபியைப் பற்றி தரக்குறைவாகவும், அவர்கள் வமிசத்தையும், அவர்கள் தாய்,தந்தையரைப் பற்றியும் மிகவும் தரக்குறைவாக பேசியும், எழுதியும் வருகின்றனர்.
இந்த முனாபிக்குகளின் வழிவந்த வழிகேடர்களான இப்னு தைமிய்யா போன்றோரும் அவரைப் பின்பற்றி நடப்பவர்களும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தாய், தந்தையர் 'முஃமினானவர்கள் அல்ல'-'காபிர்கள்'' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆனால்,இவ்வுலகில் தோன்றிய ரஸூல்மார்கள் மற்றும் நபிமார்கள் அனைவர்களும் பரிசுத்தமானவர்களே! முஃமினான தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே! இதுதான் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களின் உறுதியான கொள்கையாகும்.
இதற்கு ஆதாரமாக நமது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள் பெருமானார் அவர்களின் பெற்றோர்கள் முஃமினானவர்கள்தான் என்று குர்ஆன், ஹதீதுகளிலிருந்து ஆதாரங்களோடு நூல்களாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து மக்கள் தெளிவாக விளங்கும் வண்ணம் இதை தொகுத்து எழுதியுள்ளேன்.
இச் சிறுநூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தாய், தந்தையர் முஃமின்கள் என்பதற்கு ஆதாரங்களும், இரண்டாம் பகுதியில் வழிகேடர்களான முனாபிக்குகள் தொடுக்கும் ஆட்சேபணைகளுக்கு தெளிவான பதில்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
அல்லாஹ் இந்நூலை படிப்பது கொண்டு நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது கொண்டுள்ள நேசம் மேன்மேலும் சிறந்தோங்க துணைபுரிவானாக! ஆமின்.
01-01-2010 இவண்,
ஷெய்குமார்களின் ஊழியன்,
குளம் ஜமால் முஹம்மது.


பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அல்லாஹு ஸுப்ஹானஹு அத்தஆலா மக்களை நல்வழிபடுத்துவதற்காக ரஸூல்மார்களையும், நபிமார்களையும் இவ்வுலகிற்கு அனுப்பி வந்துள்ளான். நபிமார்கள் அனுப்பப்படாத சமூகமே இவ்வுலகில் இல்லை என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான். ஆனால், நபிமார்களின் வருகைகளுக்கு மத்தியில் கால வேறுபாடுகள் அதிகரிக்கும் போது அந்தந்த சமூகத்தார்கள் சத்திய மார்க்கத்தைப் பற்றி அறியாத அளவிற்கு சென்று விடுகின்றனர். இந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள்- சத்திய மார்க்கம் இதுவென்று அறியப்படாத காலகட்டத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்று விரிவாக அலசிப் பார்த்தால் உண்மைகள் விளங்கத் தொடங்கும்.
ஃபத்ரத் காலம் என்றால் என்ன?

சத்திய சன்மார்க்கம் எதுவென்று அறியப்படாத காலத்தையே இது குறிக்கும். இதில் வாழ்ந்தவர்களை நமது மார்க்க அறிஞர்கள் மூன்று வகையினராக பிரிக்கிறார்கள்.
1. இறைவனுக்கு இணை வைக்காமல் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்:-
அ) இவர்களில் சிலர் முன்பிருந்த மார்க்கத்தில் தங்களை இணைத்திருக்கமாட்டார்கள். உதாரணமாக குஸ் இப்னு சாயிதா, ஜைத் இப்னு அம்ர் இப்னு நுஃபல்.
மார்க்கத் தீர்ப்பு:- இவர்கள் மறுமையில் தனி சமூகமாக எழுப்பப்படுவார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள், 'நிச்சயமாக ஜைத் இப்னு அம்ர் என்பவர் மறுமை நாளில் தனி சமூகமாக எழுப்பப்படுவார்' என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்:- ஹஜ்ரத் சயீத் இப்னு ஜைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்:- அஹ்மது, ஹாகிம், தப்ரானி(கபீர்)
மேலும் பைஹகீ(தலாயில் நுபுவ்வா) எனும் கிரந்தத்தில் குஸ் இப்னு சாயிதாவை சிறந்தவர் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறிய ஹதீதுகள் இதற்கு சான்றாக உள்ளது.
ஆ) முன்பிருந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். உதாரணமாக: நஜ்ரான் வாசிகள், வரகத் இப்னு நௌபல், உத்மான் இப்னு ஹுவய்ரிஃத் போன்றோர்.
ஸெய்யிதத்தினா கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வரகத் இப்னு நௌபல் அவர்களின் மறுமை நிலை பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, 'வெண்ணிற ஆடை அணிந்தவராக கனவில் அவரை நான் கண்டேன். அவர் நரகவாசியாக இருந்திருந்தால் வெண்மை ஆடை அவரிடம் காணப்பட்டிருக்காது' என்றார்கள்.
அறிவிப்பாளர்: ஹஜ்ரத் ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.நூல்: ஹாகிம்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்கு வஹீ வந்தபோது ஏற்பட்ட நிலையைப் பற்றி அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்கள் உறவினரான வரகத் இப்னு நௌபல் அவர்களிடம் கேட்டபோது, முந்தைய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் நபி இவர்கள் என்று கூறி அவர்களுக்கு முன்னறிவிப்பு செய்தவர் ஆவார்கள்.
மார்க்கத் தீர்ப்பு:- இந்த கூட்டத்தினர் மறுமையில் முன்பிருந்த மார்க்கத்தை சார்தோராக கருதப்பட்டு அம்மார்க்கத்திற்குரிய சட்டதிட்டங்கள்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
2. ஏகத்துவத்தைப் புறக்கணித்து இணைவைப்பில் ஈடுபட்டவர்கள்:
தங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து இணை-வைப்பில் ஈடுபட்டு அல்லாஹ்விற்கு மாறு செய்தவர்கள்.
மார்க்கத் தீர்ப்பு:- இவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்குரித்தானவர்கள்.
3. ஏகத்துவக் கொள்கையிலும், இணை வைப்பிலும் ஈடுபடாதவர்கள்:-
இவர்கள் இணைவைப்பிலும், அநியாயம், அழிச்சாட்டியங்களிலும் ஈடுபடாதவர்கள். மற்றும் எந்த ஒரு நபியைப் பற்றியும் அறியாதவர்கள். அவ்வாறு அறிந்திருந்தாலும் அதை மறுக்காதவர்கள்.
மார்க்கத் தீர்ப்பு:- இக் கூட்டத்தினர்களில் ஒருவர் மரணித்துவிட்டால் இவர்களுக்கு மறுமைநாளில் தண்டனை கிடையாது.இவர்கள் ஜெயம் பெற்றவர்கள் என்று மார்க்க சட்ட நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
ஃபத்ரத் காலம் பற்றி அல்-குர்ஆன்:-
وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولاً
1.'நாம் அவர்களுக்கு மத்தியில் தூதரை அனுப்பாதவரை அச் சமூகத்தாரை (நாம்) தண்டிப்போராயில்லை.'-அல்-குர்ஆன் 17:15
وَمَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرَى حَتَّى يَبْعَثَ فِي أُمِّهَا رَسُولًا يَتْلُو عَلَيْهِمْ آيَاتِنَا
2. 'உம்முடைய இறைவன் எந்த ஊர்களையும் அவற்றின் தலைநகருக்கு ஒரு தூதரை அனுப்பி, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்கும் வரை – அழிப்பவனாக இல்லை.'-அல்-குர்ஆன் 28:59
وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ .ذِكْرَى وَمَا كُنَّا ظَالِمِينَ
3. எந்த ஊ(ரா)ரையும்- அதற்கு அச்சமூட்டி எச்சரிக்கிறவர்கள் இல்லாமல்- நாம் அழித்ததில்லை. மேலும் நாம் அநியாயம் செய்பவராகவுமில்லை. -அல்-குர்ஆன் 26:208,209.
وَلَوْ أَنَّا أَهْلَكْنَاهُم بِعَذَابٍ مِّن قَبْلِهِ لَقَالُوا رَبَّنَا لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ آيَاتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَى
4. (நம் தூதராகிய) அவருக்க முன்பே நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு அழித்திருந்தால், 'எங்களுடைய இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறிருந்தால், நாங்கள் தாழ்மையடைவதற்கும், இழிவடைவதற்கும் முன்னரே உன்னுடைய வசனங்களைப் பின்பற்றியிருப்போமே' என்று உறுதியாக அவர்கள் கூறியிருப்பார்கள்.-அல்-குர்ஆன் 20:134
மேற்கூறிய திருவசனங்கள் நபிமார்கள் அனுப்பப்படாத கால நிலையில் வாழ்ந்தவர்களைப் பற்றியும், அவர்களுக்கு நியாயத் தீர்ப்பின்போது அல்லாஹ் அளிக்கக் கூடிய தீர்ப்பைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
இமாமுனா ஷhபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மத்ஹபின் மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாவது: 'ஒருவன் நபித்துவத்திற்கு முன்போ(அதாவது இஸ்லாம் வெளியாகும் முன்போ) அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படியான (தஃவா) அழைப்பு அவனை அடையும் முன்போ அவன் மரணித்துவிட்டால் அவனை ஈடேற்றம் பெற்றவனாகவே கணிக்கப் பெறும். இதே நிலையைத்தான் மற்ற இமாhம்களும் கூறுகின்றனர். இது ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்த மூன்றாவது பிரிவினரைப் பற்றிக் குறிப்பிடுவதாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்களின் காலம்:

பெருமானாரின் பெற்றோரின் வரலாறும், அவர்களின் நிலையும் மிகத் தெளிவானதாகும். இவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் இவர்களுக்கு முந்தைய நபியான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திற்கும் சுமார் 570 வருடங்களுக்கும் மேல் உள்ளது. இது நீண்ட இடைவெளியாகும்.
அரேபியர்களினிடத்தில் அனுப்பப்பட்ட நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் இடையே சுமார் 3000 வருடங்கள் இடைவெளி இருந்தது. இது மிகமிக நீண்ட இடைவெளியாகும்.
இக்காலகட்டத்தில் சத்திய சன்மார்க்க சட்டதிட்டங்களை அறிந்தவர்கள், அதை முறையாக பின்பற்றுபவர்கள் இலைமறை காயாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் தவிர யாரும் இருக்கவில்லை. இத்தகையவர்களைத் தெரிந்தவர்கள் மிகவும் சொற்பமானவர்களே!
இன்னும்,இக்கால மக்காவாசிகள் முந்தைய நபிமார்கள் பற்றிய எந்த செய்தியையும் அறிந்திருக்கவில்லை. முஷ்ரிக்குகளுக்கும் இதுபற்றிய அறிவு இல்லை என்பது, 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை எடுத்துரைத்து தன்னை நபியாக ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் சொன்னபோது, அம்மக்கள் எங்கள் மூதாதையர் சொல்லாத ஒன்றையல்லவா இவர் சொல்கிறார் என்று ஏற்க மறுத்துவிட்டதாக அல்குர்ஆனும், ஹதீதுகளும் சான்று பகர்கின்றன. இக்காலத்தில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் எவ்வித அட்டூழியங்களோ, அழிச்சாட்டியங்களோ செய்ததாகவும், இணை வைப்பில் ஈடுபட்டதாகவும் எவ்வித வரலாறும், ஹதீதுகளும் கூறவில்லை. மறுப்பாளர்கள் இதற்குரிய ஆதாரங்களை இன்றுவரை கொண்டுவரவில்லை. இனி கொண்டும் வரமுடியாது. ஆதாரம் இருந்தால்தானே கொண்டு வருவதற்கு? அவர்கள் கூறும் வெற்றுக் கூற்றுகளுக்கு உரிய பதிலை ஆதாரத்துடன் அடுத்த பாகத்தில் இன்ஷாஅல்லாஹ் விளக்குவோம்.
ஆக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்த மூன்றாவது கூட்டத்தினர்களான ஜெயம் பெற்ற கூட்டத்தினர்களைச் சார்ந்தவர்கள் என்பது புலனாகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
உயர்ந்த குலத்தில், பரிசுத்த வமிசத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்:
நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் மிக உயர்ந்த குலத்தில், பரிசுத்தமான வமிசத்தில் தேர்ந்தெடுத்து அனுப்பினான். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறும்போது,
الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ .
'நீங்கள் நிற்கும்போது உங்களையும் (இறைவனை) வணங்குவோர்களிடையே நீங்கள் புரண்டு வந்ததையும் அ(வ்விறை)வன் பார்க்கிறான்.
-அல்-குர்ஆன்: 26:218,219.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறும்போது:
1. நான் நபியாக அனுப்பப்படும் வரை ஆதமுடைய மக்களில் மிகச் சிறந்தோர் மத்தியிலே நான் காலங்காலமாக அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: புகாரி.
2.நான் சிறந்தோர் வழியாகவே வந்துள்ளேன்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூற்கள்: தப்ரானீ(கபீர்), ஹாகிம், பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
3. மக்கள் இருபிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் என்னை இறைவன் அமைத்தான்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
4.அல்லாஹ் படைப்பினங்களை சிருஷ;டித்தபோது அதில் என்னையே சிறந்த சிருஷ;டியாகவும்(அந்த படைப்பில்) வமிசாவழியினரை அமைக்கையில் என்னையே சிறந்தவராகவும், அந்த வமிசாவழியில் ஆத்மாக்களை உருவாக்கையில் என்னையே சிறந்த ஆத்மாவாகவும், அந்த ஆத்மாக்களில் குடும்பத்தினரை ஏற்படுத்தும்போது அதில் என்னையே சிறந்த குடும்பமாகவும் ஆக்கினான்.அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்பாஸ் இப்னு அப்துல்முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: திர்மிதீ, பைஹகீ.
5. அறியாமை காலத்து திருமண வழிமுறையில் நான் பிறக்கவில்லை. இஸ்லாமிய திருமணத்தைப்போல் அமைந்த திருமணத்தின் வாயிலாகவே நான் பிறந்தேன்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூற்கள்: பைஹகீ, தப்ரானீ(கபீர்), இப்னு அஸாகிர்.
6. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள், சூரியன் உதிக்குமிடத்திலிருந்து சூரியன் மறையும் இடம்வரை மண்ணுலகம் முழுவதையும் புரட்டிப் பார்த்தேன். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைவிட சிறந்த மனிதரை நான் பெற்றுக் கொள்ளவில்லை. பனூ ஹாஷpம் குடும்பத்தைவிட வேறு சிறந்த குடும்பத்தினரை நான் பார்க்கவில்லை.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.நூற்கள்: தப்ரானீ(அவ்சத்), பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
7. உங்களில் நான் சிறந்தவன். உங்கள் தந்தைமார்களில் எனது தந்தை சிறந்தவர்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
8. நான் உயர்ந்த கூட்டத்திலிருந்தே ஆதமுடைய மக்களில் புரட்டிக் கொண்டு வரப்பட்டேன்.
நூல்: மிஷ்காத் ஷரீஃப்.
9. ஆதமுடைய பிள்ளைகளில் தலைமுறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: புகாரி.
மேற்காணும் ஹதீதுகள் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப சிறப்பையும், அவர்களின் தலைமுறை சிறப்பையும் தெளிவாக விளக்குவதிலிருந்து அவர்களின் பெற்றோர்கள் மிகச் சிறந்த வர்கள் என்றும், முஃமின்கள் என்றும் சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகிறது. இவ்வளவு தெளிவான ஆதாரங்கள், சான்றுகளை எடுத்துக் கூறியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் சிலர் அவர்களின் பெற்றோர்களை முஃமின்கள் என்று சொல்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கின்றனர். அதற்கு அவர்கள் தரும் ஆதாரங்களையும் அதற்குரிய தெளிவான பதில்களையும் இனி பார்ப்போம்.
பகுதி 2
ஆட்சேபணைகளும், தெளிவான பதில்களும்.

ஆட்சேபணை-1
நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் நாளில் (மறுமையில்) ஃபத்ரத்தில் மரணித்தவன், பைத்தியம் பிடித்ததில் மரணித்தவன், பிறந்தவுடன் மரணித்த குழந்தைகள், வயது முதிர்ந்து மரணிக்கும் தருவாயில் இஸ்லாம் பற்றி தெரிந்தவன் ஆகியோர் இறை சமூகம் கொண்டு வரப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள். அப்பரிசோதனையில் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களே ஜெயம் பெறுவார்கள் என்றும், ஏனையோர் தண்டனைக்குள்ளாக்கப்பட்டு நரகம் செல்வர் என்றும் ஹதீதுகள் தெளிவானதாக இருக்க, ஃபத்ரத்தில் மரணித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் எங்ஙனம் சுவர்க்கம் செல்வார்கள்? மேலும் அவர்கள் அந்த பரிசோதனையில் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா?
தெளிவான பதில்:
இவ்வுலகை உய்விக்க வந்த உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நல்லெண்ணம் வைப்பதோடு மட்டுமில்லாமல், அவர்களைக் கண்ணியப்படுத்தவும் வேண்டும். சிறிதளவேனும் கண்ணியக் குறைவாக நடந்தால் அவனது ஈமான் பறிபோய் விடும் என்று அல்லாஹ்வின் திருமறையிலும், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதுகளிலும் காணக் கிடைக்கிறது.
இந்நிலையில், சிறந்த வமிசத்திலும், ஸுஜூது செய்பவர்களின் வழியாகவும் (பிறந்த) வந்துதித்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் முஃமின்கள் இல்லை என்று சொல்வது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகுமா? இழிவுபடுத்துவது ஆகுமா?
பெருமானர் அவர்களின் பெற்றோர்கள் ஃபத்ரத் காலத்தில் வாழ்ந்தவர்கள்தான். அந்த காலத்தில் வாழ்ந்த எவ்வித அநியாயம், அழிச்சாட்டியங்கள் செய்யாத மற்றும் இணைவைப்பில் ஈடுபடாத ஜெயம் பெற்ற மூன்றாம் பிரிவினர்களைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவர்க்கம் செல்வார்கள் என்று நமது முன்னோர்களான இமாம்கள், நாதாக்கள் சொல்லியுள்ளார்கள்.
ஸெய்யிதினா அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்:
ஸுஜூது செய்பவர்களிலிருந்து புரண்டுவந்த இவர்கள், சிறந்த வமிசத்தில் வந்தவர்கள் என்று ஹதீது, ஆயத்துக்கள் மூலம் விளங்குகிறது. உங்கள் தந்தைமார்களைவிட எனது தந்தை மிகவும் சிறந்தவர் என்ற நபிமொழி அவர்களின் அந்தஸ்தை தெளிவாக விளக்குகிறது. இவ்வாறிருக்க ஈடேற்றம் பெற்ற இவர்கள் எவ்வித கேள்வியும் இன்றி சொர்க்கமே செல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஸெய்யிதத்தினா ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்:
உத்தம திருநபியை தமது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த அன்னையான இவர்கள் கூறுகிறார்கள்: 'நான் கர்ப்பிணியாக இருந்தபோது என்னிடம் கூறப்பட்டது, நிச்சயமாக நீங்கள் இந்த சமூகத்தின் தலைவரை சுமந்துள்ளீர்கள். அவர் இம்மண்ணுலகில் பிறந்தவுடன் பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்து ஏக இறைவனிடம் இக் குழந்தைக்குப் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுங்கள்.அவர் பிறக்கும்போது ஒரு பேரொளி வெளிப்படும். அப்பேரொளியின் பிரகாசம் சிரியா நாட்டின் புஸ்ரா கோட்டையை நிரப்பிவிடும். இதுவே, அவர் இந்த சமுதாயத்தின் தலைவர் என்பதற்குரிய அத்தாட்சியாகும்'என்று.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு இஸ்ஹாக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ' திண்ணமாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் களிமண்ணில் பிணைந்திருந்தபோதே நான் இறையடியாராகவும், இறைத்தூதராகவும் இருந்தேன். அதைப்பற்றிய செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்:
1) எனது பாட்டனார் இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனை.2) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னைப் பற்றி வழங்கிய நற்செய்தி.3) எனது தாயார் கண்ட கனவு ஆகியவற்றின் வெளிப்பாடாக நானுள்ளேன்.
இறைத்தூதர் அவர்களை ஈன்றெடுத்த சமயம் அவர்களின் தாயார் ஒரு பேரொளியைப் பார்த்தார்கள். அதன் மூலம் சிரியா நாட்டு கோட்டைகளெல்லாம் பிரகாசித்தன.
மற்ற நபிமார்களை ஈன்றெடுக்கும் போது அவர்களின் தாய்மார்களும் இவ்வாறே பார்த்தார்கள்.அறிவிப்பாளர்: ஹழ்ரத் இர்பாழ் இப்னு சாரியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூற்கள்: அஹ்மத், ஹாகிம், தப்ரானி(கபீர்), பைஹகீ(தலாயில் நுபுவ்வா)
இவ்வாறே அனைத்து நபிமார்களின் தாயாருக்கும் அற்புதங்கள் நிகழ்ந்தன. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது. ஸூரா மாயிதா வசனம் 75 நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும் , ஸூரா ஹூது வசனம் 73 நபி இ;ஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பற்றியும், ஸூரா அல் கஸஸ் வசனம் 7 மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும், ஸூரா இப்றாஹிம் வசனம் 41 நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் பற்றியும், ஸூரா நூஹ் வசனம் 28 நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் பற்றியும் அவர்கள் நல்லடியார்கள் என்று மிகத் தெளிவாக விளக்குகிறது.
இவ்வாறு இறைவனின் நல்லடியாராகவும், இறைநேசச் செல்வியாகவும் வாழ்ந்த உத்தமியான அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் எவ்வாறு நரகவாதியாக ஆக முடியும்? அவர்கள் எவ்வித கேள்வியுமின்றி சுவர்க்கவாசியாக சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்.
இதைப் பற்றி இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் குறிப்பிடுகையில், 'மறுமைநாளில் மகாமே மஹ்மூத் எனும் புகழுக்குரிய இடத்தில் நானிருக்கும்போது என் தாய்தந்தைக்காக என்னிறைவனிடம் நான் கேட்பேன். (நான் கேட்டதை) அவன் எனக்கு வழங்குவான்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூல்: ஹழ்ரத் ஹாகிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முஸ்தரக் என்ற கிரந்தம்.
இதற்கு நமது பெரியோர்கள், தன் தாய்,தந்தைக்காக கேட்பேன் என்று நபிகளார் கூறியது, அவர்களை சுவர்க்கத்தில் தம்முடன் உயர்ந்த சுவர்க்கத்தில் இருக்கச் செய்யவே அன்றி வேறில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்கள்.
மேலும் எனது ரப்பிடம் என் குடும்பத்தில் எவரையும் நரகில் நுழைப்பிக்கக் கூடாது என்று கேட்டேன். அதனை அவன் ஏற்றுக் கொண்டான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது இமாம் இப்னு ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தப்ஸீரில் காணக் கிடைக்கிறது.
இதே ஹதீதை ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, அல்லாமா அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் ஷரஹுன் நுபுவ்வா எனும் நூலிலும் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் புகாரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புகாரி எனும் கிரந்தத்தில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பிறந்த செய்தியைக் கேள்விபட்ட சந்தோஷத்தில் அவர்களது பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் தன் சுட்டுவிரலைக் காட்டி ஒரு அடிமையை விடுதலை செய்ததால் அவன் நரகில் கடும் வேதனை படும்போது கூட, திங்கட்கிழமை தோறும் அபூலஹபிற்கு அவன் சுட்டிக்காட்டிய விரலிலிருந்து அமுதமான பால் சுரந்து அதன் மூலம் அவன் தாகம் தீர்த்துக் கொள்கிறான் என்ற செய்தியை நபிகளார் சொல்லி இருக்கிறார்கள்.
ஆகவே,ஒரு காபிருக்கு நபிகளாரின் மீலாதை கொண்டாடியதற்காக நரகில் வேதனை குறைக்கப்படுகிறது என்றால், உத்தம திருநபியை பெற்றெடுத்த பெற்றோர்களை எங்ஙனம் நரகம் தீண்டும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
ஆக, இந்த அறிவுக் குருடர்கள் தெரிவித்த முதல் ஆட்சேபணை எவ்வித முகாந்திரமும், ஆதாரமும் அற்றது என்று இதன் மூலம் தௌ;ளத் தெளிவாக விளங்க வருகிறது.
ஆட்சேபணை 2:
ஸுஜூது செய்பவர்களிலிருந்து புரட்டிக் கொண்டு வரப்பட்டதாக சொல்கிற நீங்கள், நபிகளாரின் வமிசாவழியின் முன்னோரான நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை 'ஆஸர்' ஒரு சிலை வணக்கம் செய்பவராகவே இருந்தார் என்று குர்ஆன், ஹதீதுகள் மற்றும் வரலாறுகள் தெளிவாகக் கூறியிருக்கிறதே! இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தெளிவான பதில்:
முதலில் 'ஆஸர்' என்பவர் யார்? என்று தெளிவாக விளங்க வேண்டும். ஆஸர் என்பவர் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை அல்ல. அவர்களின் பெரிய தந்தையே! இதுபற்றி குர்ஆனில் வந்துள்ள ஆயத்தில்,
وَاِذۡ قَالَ اِبۡرٰهِيۡمُ لِاَبِيۡهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِهَةً ‌ ۚ اِنِّىۡۤ اَرٰٮكَ وَقَوۡمَكَ فِىۡ ضَلٰلٍ مُّبِيۡنٍ‏
இப்றாஹிம் தம் தந்தை ஆஸரிடம் சிலைகளை தெய்வமாக நீர் ஆக்கிக் கொண்டீரா? உம்மையும், உம்முடைய சமூகத்தினரையும் பகிரங்கமான பழிகேட்டில் இருப்பதை நிச்சயமாக நான் காண்கிறேன்'என்று கூறிய நேரத்தை(நினைவு கூறுவீராக!) -அல்-குர்ஆன் 6:74
இவ்வசனத்தில் தந்தை என்று கூறப்பட்டிருக்கும் சொல்லான 'அபி' என்ற அரபி சொல்லிற்கு தந்தை என்ற அர்த்தம் இருப்பது போல் சிறிய தந்தை, பெரிய தந்தை, பாட்டனார் என்ற அர்த்தங்களும் அரபியில் உண்டு. எனவே இதில் கூறப்பட்டிருக்கும் ஆஸர் இப்றாஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெரிய தந்தையையே குறிக்கும்.
அதேபோல் குர்ஆனில், இதே வார்த்தைக்கு தந்தை என்ற பொருளில்லாமல் மற்ற பொருளோடு வரும் ஆயத்துக்களும் உண்டு. உதாரணமாக,
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, தன் பிள்ளைகளிடம் எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்டபோது, நீங்கள் சாட்சியாளர்களாக இருந்தீர்களா? (அப்பிள்ளைகள்) கூறினார்கள்: உங்கள் இறைவனும் உங்கள் தந்தையரான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரேயொரு இறைவனையே வணங்குவோம். மேலம் நாங்கள் அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்' எனக் கூறினர்.
-அல்-குர்ஆன் 2:133
இதில் 'அபி' என்ற சொல் தந்தை மற்றும் மேற்கூறப்பட்ட அனைத்து பொருள்களிலும் பொருந்துவதாக வந்துள்ளது. இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை 'தாரஃக்' என்பவர்கள் ஆவார்கள். இவர்கள் தங்கள் 75-ம் வயதில் இப்றாஹிம் நபி அவர்களை ஈன்றெடுத்தனர். இவர்களின் மறைவிற்குப்பின் ஆஸரினால் வளர்க்கப்பட்டார்கள். எனவே ஆஸரையே தந்தை என்று அழைத்து வந்தார்கள். இதையே இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.
நூல்: அல் பித்யா வன் நகாயா. வால்யூம் 1, பக்கம் 139.
ஆசிரியர்: இமாம் இப்னு கதீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஆகவே இப்றாஹிம் நபி அவர்களின் தந்தை தாரஃக் என்பவர்களே என்பது,
الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ .
இறைவனை வணங்குவோர்களிடையே நீங்கள் புரட்டிக் கொண்டு வரப்பட்டீர்கள்' -
-அல்-குர்ஆன் 26:218,219.
என்ற திருவசனத்திற்கும்,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ
'உறுதியாக இணை-வைப்போரெல்லாம் அசுத்தமானவர்களே'-அல்-குர்ஆன் 9:28
என்ற ஆயத்திற்கும் மாற்றமில்லாமல் அமைந்து விடுகிறது. இதுவே உறுதியான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும்.
இப்றாஹிம் நபி அவர்கள் தம் தந்தைக்காக பாவமன்னிப்பு தேடுதல்:
وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلاَّ عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِلّهِ تَبَرَّأَ مِنْهُ
இப்றாஹிம் நபி அவர்கள் தம் தந்தைக்காக பிழை பொறுக்கத் தேடியது ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை, அதனை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார். நிச்சயமாக அவர் அல்லாஹ்விற்கு விரோதி என்று தெளிவான போது, அதை விட்டும் அவர் ஒதுங்கி கொண்டார்.-அல்-குர்ஆன் 9:114
ஆஸர் ஷிர்க்கில் மரணித்தார் என்று தெரிந்ததும் அவருக்காக பாவமன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டார்கள் இப்றாஹிம் நபி அவர்கள்.
பின்னர், இறைக் கட்டளை பிறகாரம் ஷாமிற்கு பயணமானார்கள். அதன்பின் மிஸ்ரு சென்று விட்டு மக்கா திரும்பினார்கள். அங்கு இறையில்லமான கஃபாவை எழுப்பியபின் செய்த பிரார்த்தனையில் தம் தாய்,தந்தைக்காக பாவமன்னிப்பு தேடியதும் ஒன்றாகும்.
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய்,தந்தைக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பு வழங்குவாயாக! -அல்-குர்ஆன் 14:41
இறைவனிடம் நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்பதை விட்டுவிட்டார்கள் என்று கூறிய அல்லாஹ்(அல்குர்ஆன் 9:114), தம் பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடினார்கள் (அல்-குர்ஆன் 14:41) என்று கூறும்போது, அவ்விருவரும் வேறானவர்கள் என்று அறிய முடிகிறது.
மேலும், பாவமன்னிப்பு கேட்பதை நிறுத்திவிட்டார்கள் என்ற வசனம் இப்றாஹிம் நபி அவர்களின் ஆரம்ப கட்டத்திலும், பாவமன்னிப்பு கேட்டதற்கான இறைவசனம் திரு கஃபாவை கட்டியெழுப்பியபின் அவர்களது இறுதி காலத்தில் நடைபெற்றதுமாகும். ஆகவே உறுதியாக நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை ஆஸர் இல்லை என்பது உறுதியாகிறது.
இவ்வாறிருக்க இவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்றால், குர்ஆனையும், ஹதீதையும் சரிவர விளங்காததுதான் காரணம். ஆக இந்த அறைகுறை மதியாளர்களின் ஆட்சேபணை செயலிழந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஆட்சேபணை 3
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் தாய், தந்தையரை கப்ரிலிருந்து எழுப்பி கலிமா சொல்லிக் கொடுத்து இஸ்லாமாக்கினார்கள் என்ற கூற்று, அவர்களிருவரும் காபிர்கள் என்பதால்தான் அவ்வாறு செய்தார்கள் என்று தெரிகிறல்லவா?
தெளிவான பதில்:
திண்ணமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் பெற்றோரை உயிர்த்தெழ வைக்குமாறு இறைவனிடம் கெட்டார்கள். அவ்விருவருக்கும் இறைவன் உயிர் கொடுத்தான். நபிகளார் அவர்களை அவ்விருவரும் ஈமான் கொண்டார்கள். பிறகு இறைவன் அவ்விருவரையும் மரணிக்கச் செய்துவிட்டான்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷh ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.
நூற்கள்: லஆலீ மஸ்னூஆ, கஸ்புல் கஃபா.
இதுபற்றி ஹதீதுகள் ஹழ்ரத் இப்னு ஷhஹின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'அந்நாஸிக் வல் மன்ஸூக்' என்ற நூலுpலும், ஹழ்ரத் கதீப் பகுதாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 'அஸ்ஸாபிக் வல்லாஹிக்' என்ற நூலிலும், இமாம் தாரகுத்னீ, ஹழ்ரத் இப்னு அஸாகிர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரும் 'கராயிப் மாலிக்' என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீதுகள் பற்றி தெளிவுபடுத்த இமாம் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனி நூலையே கோர்வை செய்துள்ளார்கள். ஹதீதுக்கலை ஆய்வாளர்கள் இந்த ஹதீதுகள் மௌழூஃ(பொய்யாக இட்டுக் கட்டப்பட்டது) அல்ல என்கிறார்கள்.
நபிகளார் தங்கள் பெற்றோர்களுக்கு கலிமா சொல்லி கொடுத்தார்கள் என்பது, அவர்கள் காபிராக மரணித்தார்கள் அதனால் அவர்களை இஸ்லாமாக்க கலிமா சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக அல்ல. மாறாக, அல்லாஹ்வினால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி,
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
'நீங்கள் மிகச் சிறந்த சமுதாயமாக உள்ளீர்கள்'
- அல்குர்ஆன் 3:110
மிகச் சிறந்த உம்மத்தான உம்மத்தே முஹம்மதிய்யாவில் அவர்களை இணைத்துக் கொள்ளவே கலிமா சொல்லி கொடுத்து தங்களை ஈமான் கொள்ளச் செய்தார்கள். ஆகவே பெருமானாரின் பெற்றோர்கள் நபிகளாரை ரஸூலாக ஏற்றுக் கொண்ட ஸஹாபிகள் ஆவார்கள்.
மரணித்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்கப்பட்டால், பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு கொலைகாரன் யாரென்று அறிவித்த செய்தி (அல்-குர்ஆன்-2:73)யும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்தார்கள் (அல்-குர்ஆன்-3:49) என்ற செய்தியையும் மறுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!
தப்ஸீர் ரூஹுல் பயானில், யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார் இறைவனின் வேதனையைக் கண்டு ஈமான் கொண்டபோது, அவர்களது ஈமான் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டதை திருமறையும் எடுத்தியம்புகிறது. மற்ற நபிமார்களுக்கெல்லாம் இந்த தனித்தன்மைகள் கொடுக்கப்பட்டிருக்கும்போது, அனைத்து நபிமார்களிலும் சிறந்தவர்களான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த தனிச் சிறப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கிழக்கேயிருந்து மேற்கு திசையை நோக்கி அஸ்தமித்த சூரியனை திரும்பவும் உதிக்கச் செய்து 'களா'வாகிய(நேரம் தவறிய) தொழுகையை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுத்தது (ஆதாரம்: தப்ரானீ(கபீர்), இப்னு அஸாகிர், ஷவ்கானீ(ஃபவாயித் மஜ்மூஆ) சாத்தியமெனில், தமது அருமைப் பெற்றோர்களை உயிர்ப்பித்து தங்கள் உம்மத்தில் சேர்த்துக் கொண்டதும் சாத்தியமாகும்.
ஆக, இந்த ஆட்சேபணையும் வீணானது என்பது தெளிவாகிறது.
ஆட்சேபணை 4
தம் தாயாருக்காக பாவமன்னிப்பு கேட்க இறைவனிடம் பெருமானார் அனுமதி கேட்டபோது அல்லாஹ் மறுத்துவிட்டான். அவர்கள் காபிர்களாக இருந்ததால்தானே அல்லாஹ் மறுத்தான்.
தெளிவான பதில்:
1) என் தாயாருக்கு பாவமன்னிப்பு தேடுவதற்காக எனதிறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரவில்லை. எனது தாயாரின் கப்ரை தரிசிக்க அனுமதி வேண்டினேன். இறைவன் எனக்கு அனுமதி தந்தான்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்: முஸ்லிம்
நபியே! உமது தாயார் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேட வேண்டாம். அதற்கு அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் ஜெயம் பெற்ற சுவர்க்கவாசிகள் என்பதால் அவன் அனுமதி கொடுக்கவில்லை.
ஆதாரம்: தப்ஸீர் மித்ரக், தப்ஸீர் ஜமல்.
ஆனால் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய அனுமதியளித்திருக்கிறான் எனும்போது அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பது தெளிவாக விளங்கும். ஏனெனில்,
وَلاَ تَقُمْ عَلَىَ قَبْرِهِ إِنَّهُمْ كَفَرُواْ بِاللّهِ وَرَسُولِهِ
(நபியே அவர்களில்) யாருடைய கப்ருக்கு அருகிலும் நிற்காதீர்கள்! நிச்சயமாக அவர்கள் இறைவனையும், அவன் திருத்தூதரையும் மறுத்துவிட்டார்கள்.
-அல்-குர்ஆன் 9:84
என்ற ஆயத்து இறைமறுப்பாளர்களின் கப்ருக்கருகில் கூட நிற்க அனுமதிக்கவில்லை. ஆனால் ஆமினா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முஃமினாக இருந்ததால்தான் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
2) ஒரு கிராமவாசி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடம் வந்து 'யாரஸூலல்லாஹ்! எனது தந்தை எங்கே? எனக் கேட்க, அவர்கள் 'அவர் நரகத்திலுள்ளார்' என்றதும், 'உங்கள் தந்தை எங்கே? என்று அந்த கிராமவாசி கேட்டதும், 'எனது தந்தையும், உமது தந்தையும் நரகில் உள்ளனர்' என்று நபிகளார் கூறினார்கள். இதை ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அபூதாவூது கிரந்தங்களில் காணக்கிடக்கிறதே! என்று கேட்கப்பட்டால்,
இந்த அறிவிப்பில் வரும் அறிவிப்பாளர்கள் ஒன்றுபடவில்லை. இதனை அறிவிப்பு செய்பவரான ஹம்மாது பின் ஸலமா அவர்கள் ஹழ்ரத் தாபித், ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறுகின்றனர்.
இவரை(ஹம்மாதை)ப் பற்றியும், அவர் அறிவிப்புகள் பற்றியும் பலவிதமான கருத்துக்களை காண முடிகிறது. இமாம் புகாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இவர் மனன சக்தி அற்றவராக இருந்ததின் காரணமாக இவரின் அறிவிப்புகளுக்கு தமது நூலில் இடமளிக்கவில்லை.
நூல்: தஹ்ஃதீபுத் தஹ்ஃதீப்.
ஆனால் இதே ஹதீதை முஃமர் அவர்கள் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கிடைத்ததாகக் கூறுகின்றார். இந்த ஹதீதில் எனதும், உனதும் தகப்பன் நரகிலே எனக் கூறியதாக குறிப்பிடவேயில்லை. மாறாக, பொதுவாக காபிர்களின் கபுறருகில் செல்வீர்களாயின் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யுங்கள் எனக் கூறியதாகவே குறிப்பிடுகிறார்.
ஹழ்ரத் முஃமர் அவர்களை ஏற்றுக் கொண்டதாலேயே இமாம் புகாரி அவர்களும், இமாம் முஸ்லிம் போன்றோரும் தமது கிரந்தங்களில் இவ்வதீதுகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த முஃமர் அவர்களின் கூற்றுக்கு ஒத்ததாக கிடைத்த மற்றொரு ஹதீது, ஒரு கிராமவாசி நபிகளார் அவர்களின் திருச்சபைக்கு ஆஜராகி என் தந்தை எங்கே? எனக் கேட்டார். பெருமானார் அவர்கள் 'நரகில்' என்றார்கள். மீண்டும் அவ்வரபி உங்கள் தகப்பன் எங்கே? எனக் கேட்க, நீ காபிர்களின் கப்ரருகில் சென்றால் நரகிற்கு சொந்தமானவர்கள் எனக் கூறும்படியாக சொன்னார்கள்.அறிவிப்பாளர்: ஹழ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.நூற்கள்: தப்ரானீ, பைஹகீ.
அக் கிராமவாசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகவும் இமாம் பைஹகீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு வாதத்திற்காக நபிமொழியில் கூறப்பட்டுள்ள 'இன்ன அபீ' என் தந்தையும் என்று கூறியதாக இருந்தாலும்;, அது அபூலஹப்- பெருமானாரின் பெரிய தந்தை தானே தவிர அப்துல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அல்ல. ஏனெனில் பெருமானார் அவர்கள் அபூலஹபையும் 'அபீ' என்றே அழைத்து வந்துள்ளனர்.
நூல்: நஜாது ஆபாயின்னபிய்யில் அத்ஹார் பக்கம் 136.
எவ்வாறு நோக்கினும் இவர்களின் ஆட்சேபணைகள் வீணானதாகியே விடுகிறது.
ஆட்சேபணை 5
மத்ஹபுக்குரிய இமாமான இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஃபிக்ஹுல் அக்பர் எனும் நூலில் பெருமானாரின் பெற்றோர்கள் குப்ரில் மரணமடைந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்களே! என்றால்,
தெளிவான பதில்:
ஃபிக்ஹுல் அக்பர் எனும் நூலில் வழிகேடர்கள் இடைச் சொருகல்கள் நிறைய செய்திருக்கிறார்கள். அதில் பெருமானாரின் பெற்றோர்கள் குப்ரில் மரணித்தார்கள் என்ற வார்த்தையும் ஒன்று. அசலான பிக்ஹுல் அக்பர் நூலில் இவ்வார்த்தைகள் இடம் பெறவில்லை. ஒரு தெளிவான சான்றில்லாமல் குப்ரின் மீது பத்வா கொடுக்க முடியாது.
ஒரு வாதத்திற்காக, அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் இருப்பதாக ஒப்புக் கொண்டாலும், அந்நூலில் 'மாதா அலல் – குஃப்ரி' என்றுதான் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பொருள் குஃப்ருடைய காலகட்டத்தில் மரணமடைந்தார்கள்-அதாவது காலத்தைக் குறிக்கும் சொல்லாகத்தான் இச் சொல் அமைந்துள்ளது.
ஆளைக் குறிக்கும் சொல்லாக இருப்பின் 'மாதா காஃபிரய்னி' என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறில்லை எனும்போது இவர்களின் ஆட்சேபணை அர்த்தமற்றதாகிவிடுகிறது.
முடிவுரை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறுவதைப் பாருங்கள்: 'எனது ரப்பிடம் என் குடும்பத்தில் எவரையும் நரகில் நுழைப்பிக்கக் கூடாது என்று கேட்டேன்.அவன் அதை ஒப்புக் கொண்டான்.
மேலும் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்த ஹதீது, 'நபிகளாரின் திருப் பொருத்தங்களில் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் நரகில் நுழையக் கூடாது என்பதும் ஒன்றாகும்'
-இமாம் இப்னு ஜரீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தப்ஸீர்.
அனைத்து நபிமார்களுடைய பெற்றோர்களும் முஃமினானவர்களாகவே இருந்துள்ளனர் என nஷய்கு அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆக, உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் குர்ஆன,; ஹதீது ஆதாரங்களாலும், வழிகேடர்கள் செய்துவரும் ஆட்சேபணைகளுக்கும் தெளிவான பதில்களாலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் காபிரல்ல, அவர்கள் உண்மையான தூய முஃமின்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்தபின் தங்கள் பெற்றோர்களை உயிர்த்தெழச் செய்து கலிமா சொல்லிக் கொடுத்து உம்மத்தே முஹம்மதிய்யாவில் இணைத்திருப்பதால் அவர்கள் இருவரும் ஸஹாபிகள் எனும் அந்தஸ்தையும் பெறுகிறார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
சாதாரணமாக ஒருவனைப் பார்த்து உனது பெற்றோர் அநியாயக்காரர்கள் என்று சொல்லுவோமானால், அவனுக்கு மன வேதனை உண்டாகி, மிகக் கோபம் ஏற்பட்டு அவ்வாறு சொன்னவனை உண்டுஇல்லை என்று பண்ணிவிடுவான் என்பது உலகியல் நடைமுறை.
உலகை உய்விக்க வந்த உத்தமரான பெருமானார் அவர்களின் பெற்றோர்களைப் பார்த்து ஒருவன், இல்லாத ஒன்றை சொல்வானானால்-அதாவது அவர்கள் காபிர்கள்-நரகவாதிகள் என்று சொல்வானானால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மனது எவ்வாறு வேதனைப்படும்?
அன்னவர்களை வேதனைப் படுத்துபவர்களைப் பற்றி வல்ல இறைவன் தனது திருமறையில்,
وَالَّذِينَ يُؤْذُونَ رَسُولَ اللّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ
'அல்லாஹ்வின் தூதர் அவர்களை எவர்கள் துன்புறுத்துகிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.'
-அல்-குர்ஆன் 9:61
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا
'அல்லாஹ்iவும் அவனது தூதரையும் நிச்சயமாக நோவினை செய்பவர்கள்- அவர்களை உலகத்திலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையை தயார் செய்து வைத்துள்ளான்'
-அல்-குர்ஆன் 33:57
என்று தெளிவாகக் கூறுகிறான்.
இறவனின் திருப் பொருத்தத்தை பெறவேண்டுமாயின் நபிகளாரின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொள்வது அவசியம். அன்னாரின் பெற்றோர்களை தரக்குறைவாக, கண்ணியக் குறைவாக பேசுவது அன்னவர்களை நோவினை செய்வதாகும். அவர்களை நோவினை செய்தால் அத்திருப் பொருத்தம் நமக்கு கிடைக்குமா?.
அல்லாஹ் நம்மனைவர்களையும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்துவது கொண்டு நமக்கு அன்னாரின் திருப் பொருத்தத்தையும், அதைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.
முற்றும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "Paradise Paranets-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் தூய முஃமீன்களே"
Web Link [URL] Further Detailswww.sunnah.orgAhle Sunnah walJamaath websitewith fiqh questionsand answerswww.hizmetbooks.orgHizmet books fromTurkeywww.neelwafurat.comIslamic bookspublisherwww.umcc.ais.orgMany philosophicalbookswww.mediaislam.comIslamic audio andimageswww.reciter.org HolyQuran Reciterhttp://www.livingislam.org/About Tasawwufhttp://www.grandzawiyah.comAppreciation aboutShaikh and Burdah[text in Arabic]http://www.ishaatdurud.com/Durud Shareefhttp://www.islam.co.za/abdalqadirjilani/ Ghousal Azam webpagehttp://www.raza.co.za/Many Ahle Sunnahbooks, Durud Shareefhttp://www.grandzawiyah.com/Zawiyah of TidjaniyahTharikahhttp://www.sunnipath.com/Fiqh in Hanafi andShaffii Madhabhttp://www.ummah.net/Al_adaab/index.htmlAbout Imaam al-madhabshttp://bewley.virtualave.net/riyad.htmlRiyad as-saliheen byImam Al-Nawawihttp://myy.helia.fi/~a0100773/Dalil/dalail_al_khayrat.htmDalail al-khayrathttp://umcc.ais.org/~maftab/ip/pdf/Many Philosophybookshttp://www.ahle-sunnat.org.uk/Ahle sunnah waljamaath website toexplain aboutdeviatorshttp://www.muslimphilosophy.com/Muslim Philosophyonlinehttp://www.dawateislami.netAhle sunnahInformationwww.alahazrat.netAla Hazratwww.ala-hazrat.orgAla Hazratwww.nooremadinah.netNoor e madinahwebsitewww.islamicacademy.orgGood website withDurood, Dua,Important Dates, etc.www.algillani.orgSeyyidina Thahiralaudin kadiriRadiyallahu Anhuwww.islam786.orgMuhaddith Al A'zam AlHindwww.Ashikerasul.net.tc

www.sunnimuslimsfiji.com
www.sunnidawateislami.net
www.hazrat.org
www.ala-hazrat.org
www.alahazrat.net
www.markazeahlesunnat.com
www.sunnirazvi.org
www.dawateislami.net
www.islamicacademy.org
www.raza.co.za
www.barkati.net
www.ahlesunnat.net
www.nooremadinah.net
www.zikar.net
www.taajushshariah.com
www.fikreraza.net
www.yanabi.com
www.razaacademy.com
www.sunnah.org
www.hakikatkitabevi.com
www.noorulislambolton.com
www.ishaateahlesunnat.net
www.saifulislam.20.m.com
www.sunnah.org
www.naatsharif.com
www.iqra.net
www.faizaneislam.org
www.sunnimuslim.net
www.faizanemadina.com
www.markazonline.com
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more " "

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்!

நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்!
தமிழகத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன் மெய்ஞ்ஞான வழி, தரீகத், சுன்னத் வல் ஜமாஅத், ஷெய்குமார்கள் என்ற போர்வையில் நுழைந்த இயக்கம்தான் நூரி ஷாஹ் தரீகா ஆகும். ஆரம்பத்தில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சார்ந்த நூரி ஷாஹ் என்பவர் தன்னை காதிரிய்யா, ஜிஷ்திய்யா தரீகாக்களின் ஷெய்கு என்று பிரபலபடுத்திக் கொண்டுதான் நுழைந்தார். பின் மக்களிடையே தான் ஸில்ஸிலாயே நூரிய்யா என்ற தரீகத்தின் ஸ்தாபகர் என்று கூறிக் கொண்டார். நன்கு நாவன்மையுடைய அவருடைய பேச்சில் மதிமயங்கி கேரளா, தமிழ்நாடு முஸ்லிம்களில் ஆலிம்களும் அவரிடம் பைஅத் வாங்கினார்கள்.
இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இவரது ஷெய்கான கௌஸ் அலி ஷாஹ் என்பவர் தமது தரீகாவை நிறுவி அங்கும் முரீதுகள் கொடுத்து வந்தார். இந்நிலையில்தான் நூரி ஷாஹ் தமிழகத்தில் நுழைந்தார். இவ்விருவர்களுக்கிடையே பிரச்சனைகள் தோன்றி இருவரும் சொற்போரில் ஈடுபட்டனர். அவன் என் முரீது இல்லை மரீதாகி விட்டான் என்று ஷெய்கு கூறும் அளவிற்கும், ஷெய்கின் முரீதுகள் நூரி ஷாஹ்வா? நாரி ஷாஹ்வா?, என்று வால்போஸ்டர் ஒட்டி பிரபலப்படுத்தியிருக்கும் அளவிற்கு பகைமைகளை வளர்த்துக் கொண்டனர்.
கேரளா சென்று அங்கும் தன் தரீகாவை பரப்பிய நூரிஷாஹ் பட்டிக்காடு என்னும் ஊரில் ஜாமிஆ அரபிய்யா நூரிய்யா என்ற அரபு கல்லூரி (மத்ரஸா) யை தோற்றுவித்தார்.
மக்கள் இவர் சேவையாற்றுகிறார் என்று எண்ணி இவர் தரீகாவில் சேரவாரம்பித்தனர். இவரின் தரீகாவில் மக்கள் கூட்டம் அதிகமாகவே தன் கொள்கைகளை பகிரங்கமாக பேசவாரம்பித்தார். இவரின் இந்தப் போக்கை கண்ட கேரளாவின் சமஸ்த கேரளா ஜம்இய்யத்து உலமா சபையினர் மௌலவி கே.கே. அபூபக்கர் முஸ்லியார் தலைமையில் ஒன்று கூடி இவரின் கொள்கை மற்றும் தரீகத்தை ஆய்வு செய்து கடந்த 16-12-1974 அன்று, 'நூரிஷாஹ் தரீகா இஸ்லாம் மார்க்கத்தின் ஷரீஅத்திற்கு மாற்றமானது என்றும், ஆகவே பொதுமக்கள் இத்தரீகாவில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்குமாறு மக்களை வேண்டி' தீர்மானம் நிறைவேற்றி பகிரங்கப்படுத்தினாhர்கள்.
அதன்பின் கேரளா பட்டிக்காடு நூரிய்யா மத்ரஸாவை விட்டும் நூரிஷாஹ் தரீகாவினர் வெளியேற்றப்பட்டு சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் அந்த நிர்வாகத்தை எடுத்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
15-5-77 அன்று ஹாஜி எம். அப்துல் ஹகீம் சாகிப் (ஆயங்குடி) அவர்களால் வெளியிடப்பட்ட பிரசுரத்தில், நாகப்பட்டினம் நஸீஹத்துல் இஸ்லாமிய அங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு கேரளா ஜன்னத்துல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் இ.கே. ஹஸன் முஸலியார்(பாகவி) அளித்த விளக்கவுரையின் இறுதியில் 'இத்தரீகாவானது மார்க்கத்திற்குப் புறம்பானதும், அதனுடைய அந்தரங்கம் குஃப்ரின்பால் சேர்ந்ததுமாகும்' என்றும்,
எவர் தன்னை ஷைகு என்று தாவா செய்து கொண்டு மேற்கூறிய செயல்களை செய்கின்றாரோ அவர் முழுப் பொய்யராவார். குழப்பத்திற்கும் மனோ இச்சைக்கும் அவர் ஷைகாவார். அவரை விட்டு நீங்கவதும், முஸ்லிம்களை விட்டு அவர்களை விரட்டுவதும் வாஜிப் எனும் கடமையாகும் என்றும் கூறியுள்ளார்கள்.ஏன் இந்த பத்வா? அதில் கொடுக்கப்பட்டிருந்த காரணங்கள்:
1. 'முஹம்மத்', அஹ்மத்' என்பவற்றை திக்ரு செய்வது மார்க்கத்திற்கு முரண்பட்டது. பழிப்பிற்குரிய தீமையாகும். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரியாதையைக் கிழிப்பதாகும்.2. பெண்களுடன் அவரும் அவருடைய கலீபாக்களும் நேரடியாகச் பேசுவதும், பெண்கள் ஷைகுடைய கால், கைகளை பிடித்து விடுவதும் ஹராமானதாகும் என்பவை முக்கியமானவை.
இவ்வாறு ஆலிம்களாலும், உலமா சபையினராலும் விரட்டப்பட்ட ஷைத்தானியத்தான தரீகாவின் அடிமூடு (மூல பிதாக்கள்) எத்தகையவர்கள், ஞானவழித் தொடர் எத்தகையது? அவர்கள் ஞானம் பற்றிய கருத்த என்ன? தற்போதுள்ள கலீபாக்களின் நிலை என்ன? அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு ஒப்பானதா? முரண்பட்டதா? என்று சற்று ஆராய்வோம்:
நூரிஷாஹ்வின் ஞானவழித் தொடர்:
தரீகா என்றால் மெய்ஞ்ஞான நாதாக்களின் வழித் தொடர் (ஸில்ஸிலா) அவசியம். அத் தொடர் கண்ணியமிக்கவர்களாகவும், சுன்னத் வல் ஜமாஅத்தினர்களைச் சார்ந்தவர்களாகவும் உள்ளவர்களைக் கொண்டதாக இருப்பது அவசியத்திலும் அவசியம்.கனவில் பெற்றதாக இருக்கக் கூடாது. வழித் தொடர் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு தம் ஷெய்கிலிருந்து முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்று அல்லாஹ்வை அடைய முடியும்.
நூரிஷாஹ்வின் தொடரை பார்ப்போமானால், அவர் 8 தரீகாவிற்கு கிலாபத் பெற்றவராகவும், தன்னை ஷெய்கு என்றும் கூறி நூல் வெளியிட்டுள்ளார். இவரின் சுஹரவர்திய்யா, நக்ஷபந்தியா தரீகாக்களின் தொடர்களில் ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து அவர்களின் மகனார் ஸெய்யிதினா இமாம் ஹஸன் அடுத்து (அவர்களின் மகனார்) ஸெய்யிதினா இமாம் ஹுஸைன் அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
உலகிலுள்ள எந்த ஸில்ஸிலாவிலும் இந்த வழிமுறை இல்லை. மற்றும் வரலாற்றுக் குறிப்புகளோ, ஆதாரங்களோ காணக்கிடைக்கவில்லை.
'தபகாத்திய்யா'சில்சிலாவில் 7, 8வது தொடருக்குப் பின் நீண்டதொரு ஷெய்குமார்கள் இடைவெளி உள்ளது.
அடுத்து, ஸில்ஸிலாயே அக்பரிய்யா உவைஸிய்யாவில் நூரிஷாஹ் 5வது ஷெய்காக வருகிறார். சுமார் 1430 வருடங்களுக்கு இந்த தரீகாவில் 5 ஷெய்குமார்கள்தானா?
ஆக தங்களுக்கு தகுந்தவாறு ஸில்ஸிலா தொடர்களைத் தயாரித்துள்ளார் என்பதும், இந்த ஸில்ஸிலாக்கள் போலியானவை என்பதும் தெரியவருகிறது. அப்படியிருக்க, இந்த தொடரில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிஸ்பத் எவ்வாறு கிடைக்கும்.?
இதில் மிக முக்கியமான விஷயம் யாதெனில், நக்ஷபந்தியா தொடரில் 39 வதாகவும், நக்ஷபந்தியா உவைஸிய்யா, அக்பரிய்யா தரீகாக்களில் 31 வதாகவும் வரும் ஷைய்கு ஸையித் அஹ்மத் பரேலவீ என்பவர். இவரின் அடக்கஸ்தலம் பாலாகோட் (பஞ்சாப்)டில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.யார் இந்த ஸெய்யித் அஹ்மத் பரேலவீ?
இந்த ஸெயித் அஹ்மத் பரேலவீ என்பவர் யார்? இவரின் கொள்கை என்ன? இவரின் மரணம் எப்படி சம்பவித்தது? இவருக்கு அடக்கஸ்தலம் இருப்பது என்று சொல்லப்பட்டது உண்மையா? என்று பார்க்கும்போது,
இவர் ஒரு பக்கா வஹ்ஹாபி ஆவார். தப்லீக் ஜமாஅத்தின் மூல குருவான மௌலவி இஸ்மாயில் திஹ்லவி என்பவர் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' என்னும் வஹ்ஹாபிய சித்தாந்த நூலை 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து இந்தியாவில் வெளியிட்டவர். இதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான கொள்கைகளை எழுதியுள்ளார்.
இவரைப் (திஹ்லவியைப்) பற்றிக் கூட நூரி ஷாஹ் 'இஸ்மாயீல் திஹ்லவி, ரஷீத் அஹ்மது கங்கோஹி போன்றோர் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கைகளை பரப்ப தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் இவர்களால் முஸ்லிம்களின் ஏகத்துவக் கோட்டை கலகலத்துவிட்டது' என்றும் பேசியதை ஷைகுனா செய்யது நூரிஷாஹ், ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (தொகுப்பு: கனி சிஷ்தி ) பக்கம் 60, 61ல் கூறப்பட்டுள்ளது.
இவரின் ஞான குருதான் மௌலவி ஸையித் அஹ்மது பரேலவீ என்பவர். இவருடன் இவரது சிஷ்யர் இஸ்மாயில் திஹ்லவியும் சேர்ந்து தங்களது வஹ்ஹாபியக் கொள்கைகளை முஸ்லிம்களிடையே பரப்பவும், ஆங்கிலேய அரசிற்கு கூலியாக செயல்பட்டனர். இவர்களின் கொள்கைகள் மிக மோசமானதாக இருந்ததால் பட்டாண் முஸ்லிம்களால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டு தூர வீசப்பட்டனர்.
ஆனால் இவர்களை இந்த தரீகாவினரும், தப்லீக் இயக்கத்தினர்களும் 'தியாகி' என்கின்றனர். இவர்கள் தியாகியாக ஆவதற்கு முஸ்லிம்களின் எதிரிகளோடு ஜிஹாத் செய்தார்களா? என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. மேலும் அப்போது சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்தியர்களுக்கு எதிராகவும், ஆங்கில அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர் என்பதை இவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து எடுத்துக் காட்டி 'பாஸ்பான்' எனும் பத்திரிகை ஆசிரியர் மௌலானா முஸ்தாக் அஹ்மத் சாஹிப் நிஜாமி(இலாஹாபாத்) அவர்கள் எழுதிய நூலான 'கூன்கே ஆன்ஸு'(இரத்தக் கண்ணீர்) எனும் நூலிலிருந்து பார்த்தால் உண்மை புரியும். அதன் ஆதாரங்களை இங்கே தருகிறேன்.
1. 'ஸையத் சாஹிப்(பரேலவி)யுடன் முஜாஹிதீன்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். உடன் மௌலானா இஸ்மாயீல்(திஹ்லவி) உடைய ஆலோசனையின் பேரில் இலாஹாபாத்தைச் சார்ந்த செல்வந்தர் ஷைகு குலாம் அலியவர்கள் மூலம் தொடர்பு கொண்டு வடமேற்கு மாகாண லெப்டினட் கவர்னருடைய சமூகத்திற்கு 'நாங்கள் சீக்கியர்களுடன் ஜிஹாத் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஆங்கிலேய அரசுக்கு ஆட்சேபணை ஏதமில்லையே!' என்று கேட்டோம். அதற்கவர்கள் …….. எங்களின் செயல்திட்டம் மற்றும் அமைதிக்கு எவ்வித பங்கமும் ஏற்படாதிருக்குமேயானால் நமக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று லெப்டினட் கவர்னர் சாஹிப் தெளிவாக எழுதி விட்டார்'.
நூல்:-ஹயாத்துத் தையிபா பக்கம் 302 தொகுப்பு: மீர்ஜா ஹைரத் தெஹ்லவி.
இந்திய நாட்டை அப்போது ஆக்கிரமித்து அட்டூழியங்களும், கொடுமைகளும் செய்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசை எதிர்த்த மார்க்கப்போர் புரிய இந்திய உலமாக்கள் பத்வா வெளியிட்டு களத்திலும் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்(அதற்காக மௌலானா பஜ்லுல் ஹக் ஹைதராபாதி ரஹிமஹுல்லாஹ் போன்றோர் தம் இன்னுயிரை நீ;த்தனர்) ஆங்கியேல அரசின் கைக்கூலிகளாக செயல்பட்டு வந்தஇந்த சையத் அஹ்மது பரேலவி, இஸ்மாயில் திஹ்லவி போன்றோர் அவர்களின் அணுசரணை, தயவிற்காக கடிதம் எழுதுகின்றனர் பாருங்கள். இந்த உதவியுடன் செய்யும் சண்டைகளை 'ஜிஹாத்' என்று சொல்லி ஜிஹாத்திற்கு புதுவிளக்கம் அளிக்கின்றார்கள் இவர்கள்.
2. 'கல்கத்தாவில் மௌலவி இஸ்மாயில் (திஹ்லவி) ஜிஹாதைப் பற்றி பயான் செய்து கொண்டிருக்கும்போது, ஒருவர் எழுந்து நின்று, 'நீங்கள் ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய பத்வா கொடுப்பதில்லை என்று கேட்டார். அதற்க மௌலவி இஸ்மாயில்…… 'ஆங்கிலேயர்களுடன் ஜிஹாத் செய்வதென்பது எவ்வகையிலும் வாஜிபில்லை…….அவர்கள் மீது எவரேனும் தாக்குதல் நடத்தினால் அப்படித் தாக்குவொரை எதிர்த்துப் போரிட வேண்டியது முஸ்லிம்களது கடமையாகும்….' நூல்: ஹயாத்துத் தையிபா பக்கம் 296
இவர்களின் இந்த ஆங்கிலேய பாசம்தான் இவர்களை இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக செயல்படத் தூண்டிற்று. அதனாலேயேதான் இஸ்மாயில் திஹ்லவி ஹஜ் சென்றிருந்த சமயம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் 'கிதாபுத் தவ்ஹீது' எனம் நூலை எடுத்து வந்து 'தக்வியத்துல் ஈமான்' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதில் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைள் கூறப்பட்டிருந்தன.
இந்தக் கொள்கைகளை இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்பி ஒன்றுபட்டு போராடும் முஸ்லிம்களை சிதறடிக்கச் செய்து பலவீனப்படுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஜிஹாத் பத்வாவை பலமிலக்கச் செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தது.
இதற்காக இவர்கள் ஊர்ஊராக சென்றனர். அதற்கு ஆங்கிலேய அரசம் உதவிக்கரம் பலவகையிலும் செய்து கொண்டே வந்தது.
சையத் அஹ்மத் பரேலவிக்கு ஆங்கிலேயர் செய்த உதவி பற்றி அபுல்ஹஸன் அலி நத்வியால் எழுதப்பட்ட 'ஸீரத்தே ஸையத் அஹ்மத்' எனும் நூலின் முதல் பாகம் பக்கம் 190 ல் கூறப்பட்டுள்ளது:
'இதற்குள் குதிரை மீது சவாரியாகி ஒரு ஆங்கிலேயன் சில பல்லக்குளில் உணவுப் பொருட்களைச் சுமந்து கொண்டு (எங்கள்) படகுக்கருகில் வருவதைப் பார்த்தோம். அருகில் வந்த ஆங்கிலேயன்,…….பாதிரிசாஹிப் எங்கேயிருக்கிறார்? என்று வினவினான். உடனே ஹஜ்ரத் அவர்கள் படகிலிருந்து 'நான் இங்கே இருக்கிறேன்' என பதில் தந்தனர்.
'…….தங்களுக்காக சூரியன் மறையும் வரை உணவு தயாரிப்பதில் மும்முரமாயிருந்தேன். இது கேட்டஸையத் சாஹிப் (பரேலவி) அவர்கள், கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை தமது பாத்திரங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட, உணவு பெற்றுக் கொள்ளப்பட்டு கூட்டத்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது…..'அடுத்து, சையத் சாஹிப்(பரேலவீ) ஜிஹாதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்த நேரம் அப்போது டில்லியைச் சார்ந்த தனவந்தர்கள் மூலமாக முஹம்மது இஸ்ஹாக் என்பவரிடமிருந்து சையத் சாஹிபுடைய பெயருக்கு ஏழாயிரம் ரூபாய்க்கான ஒரு உண்டி(ஒரு வகை செக் போன்றது) அனுப்பப்பட்டது….'
நூல்: தாரீகே அஜீபஹ் பக்கம் 89
இவ்வாறு பல்வேறு வழிகளில் பணமும், உணவும் இஸ்லாத்தைக் கூறுபோடும் பணியை செய்வதற்காக செய்யித் அஹ்மத் பரேலவிக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. மேலம் ஆங்கிலேய அரசின் ஆதரவும் இருந்தது. இந்த தைரியத்தில்தான் செய்யத் சாஹிப் சில காரியங்களைச் செய்தார். அவர் செய்த இஸ்லாத்திற்கு மாற்றமான காரியங்களை பார்ப்போம்.
'நாங்கள் சையத் சாஹிப் அவர்களைத் தேடித் தேடி அலைந்து கொண்டே ஒரு நாள் ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ளோரிடம் விசாரித்தபோது, புதிதாக கட்டப்பட்டிருந்த கப்ரு அப்போதுதான் இடித்துத் தள்ளப்பட்டிருந்ததென்பதை அறிந்தோம். உயரமாக கப்ரு இருந்த காரணத்தினால் சையத் சாஹிப் அவர்கள்தான் அதை இடிக்கச் செய்தார்கள் என்பதை தெரியவந்தபோது……'
நூல்: அர்வாஹே ஸலாஸஹ் பக்கம் 140
இவ்வாறு மகான்களின் கப்ருகளை இடித்து தரைமட்;;டமாக்கியவர் ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? அந்த தரீகாதான் எப்படி இருக்கும்?
தற்போது பார்த்தால் இந்த தரீகாவின் ஷெய்குமார்களுக்கு உயரமான கப்ருகள்? கந்தூரிகள்? அதை கொண்டாடுவதற்குள் பிரச்சனைகள், கோர்ட் வரை செல்கின்றனர். என்னே இவர்களின் கேடுகெட் கொள்கை! இதுதான் நூரிஷாஹ் தரீகாவின் இலட்சணம்.
ஜிஹாத் செய்யப்போகிறேன் என்று மார்தட்டி சென்ற இந்த செய்யித் சாஹிப் ஜிஹாதை உண்மையில் செய்தாரா?
தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் இல்யாஸ் மௌலவியின் குரு ரஷீத் அஹ்மது கங்கோஹி தமது 'தத்கிரத்துர் ரஷீது' பாகம் 2 பக்கம் 270ல், 'அம்பேட்டவி நகரில் வசிக்கும் ஹாபிஸ் ஜானி என்பவர் தம்மிடம் கூறியதாக, '……ஹஜ்ரத்மார்களும் செய்யித் சாஹிபுடன் சேர்ந்து ஜிஹாதுக்காக சென்று கொண்டிருந்தனர். யாகிஸ்தானுடைய அதிகாரி 'யார் முஹம்மது கான்' என்பவருடன் சையத் சாஹிப் அவர்கள் முதன்முதலாக ஜிஹாத் செய்தனர்' என்று கூறுகிறார்.
இதே வாசகங்கள் ஸீரத்தே ஸையத் அஹ்மத் (ஆசிரியர்: அபுல்ஹஸன் நத்வி) பாகம் 1, பக்கம் 190ல் காணக் கிடக்கிறது.
இஸ்லாமியர்களுடன் அதுவும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுடனும், தங்களது கொள்கையை ஏற்காதவர்களுடனும் சண்டை செய்வதை இவர்கள் ஜிஹாத் என்கின்றனர். இதுதான் வஹ்ஹாபிகளின் தலைவன் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கொள்கை. இதற்காகத்தான் இவர்கள் பாடுபட்டார்கள். இதைத்ததான்,
'ஸையத் அஹ்மத் மற்றம் மௌலவீ இஸ்மாயீல் திஹ்லவியும் 'பீச்தார்' எனும் இடத்திற்கு போய் சேர்ந்தபோது, அங்குள்ள தனவந்தர் 'பதஹ்கான்' என்பவர் துவக்கத்தில் இவர்களுக்கு மிகவும் மரியாதை பணிவிடை செய்து வந்தார். இவர்களும் சிறிது நாட்கள் வரை அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் நாளடைவில் இவர்களிருவரும் அங்குள்ளோரிடம் அநியாயமும், அக்கிரமும் செய்ய ஆரம்பித்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தீய நெறி கொண்டோரென்றும், தீய மார்க்கமுடையோரென்றும் கூறத் துவங்கினர். நிலைiமை மிகவும் மோசமாகவே இவர்களிருவரையும் அதே ஸ்தலத்'தில் பட்டாண்கள் தீர்த்து விட்டனர். தமது அக்கிரம அழிச்சாட்டியத்தால் அவ்விருவரும் பட்டாண்களால் கொல்லப்பட்டனர்.'
(நூல்: கூன்கே ஆன்ஸு முதல்பாகம் பக்கம் 36)
கேடுகெட்ட கொள்கைக்காக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்தியதற்காக கொல்லப்பட்ட இந்த கேடுகெட்ட ஸைய்யித் அஹ்மத் பரேலவீ ஒரு தரீகாவின் ஷெய்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இவ்வாறு இருக்கும் தரீகாதான் சுன்னத் வல் ஜமாஅத் தரீகாதானா? சிந்தித்துப் பாருங்கள்.
ஆக நூரிஷாஹ்வின் தரீகா போலியானது என்பதும், மக்களை ஏமாற்ற தயாரிக்கப்பட்ட ஸில்ஸிலாவைக் கொண்டது என்பதும் வழிகெட்ட தலைவர்களை குருமார்களாக கொண்டது என்பதும் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் புலனாகிறது. ஆக இத் தரீகாவில் பொதுமக்கள் சேருவது கூடாது என்று மேற்கூறிய பத்வாக்கள் சொன்னது உண்மை என்றாகிறது.
நூரிஷாஹ் தரீகாவின் ஷெய்குமார்களின் நிலைகள்:
1. நூரிஷாஹ் தரீகாவின் செய்குவான கௌஸலி ஷாஹ் என்பவர் எழுதியதாக கூறப்படும் 'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 9 ல், 'தப்லீக் ஜமாஅத்தின் மூலக் குருமார்களில் ஒருவரான, மக்கா, மதினா உலமாக்களால் 'காபிர்' என்று முத்திரை பத்வா கொடுக்கப்பட்ட, மீரட் மௌலானா அப்துல் ஹலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் (அல் இம்தாது எனும் பத்திரிகையில் தன்னை ரஸூல் என்று தாவா செய்த அவரின் தீயக் கொள்கை பற்றி விசாரிக்கப்பட்டு அதற்கு அவர் பதில் தராமல் தான் கொண்ட கொள்கையிலேயே உறுதியாக இருந்ததால்) காபிர் என்று பத்வா கொடுக்கப்பட்டவரும், பற்றி ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவை பேயன், பைத்தியக்காரன், மதளைக் குழந்தைகளின் அறிவோடு ஒப்பிட்டுப் பேசியவரும் இன்னும் அவர் எழுதிய பல்வேறு நூல்களில் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தவருமான மௌலானா அஷ்ரப் அலி தானவி என்பவரைப் பற்றி மகிவும் போற்றிப் புகழ்ந்து எழுதியது மட்டுமில்லாமல், அவருக்கு ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று துஆவும் கேட்டுள்ளார்.
2. தன்னுடைய குருவின் வழியைப் பின்பற்றிதான் சிஷ்யரான நூரிஷாஹ்வும் 'இறைவனுடைய காதலை விட மஜ்னூன் காதல் பெரிதா? என்ற தலைப்பின் கட்டுரையில் அஷ்ரப் தானவிக்கு கொடுக்கப்பட்ட காபிர் பத்வா போலி என்றும், ஷம்சு தப்ரேஜ், ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி போன்றோர்களுக்கு கொடுக்கப்பட்டதைப் போல் இவருக்கும் பத்வா கொடுக்கப்பட்டது' என்று ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் பக்கம் 42 ல் எழுதியுள்ளார்.
ஷம்சுத் தப்ரேஜ், ஜுனைதுல் பக்தாதி நாயகங்கள் ரலியல்லாஹு அன்ஹுமா போன்றோருக்கு எப்போது பத்வா கொடுக்கப்பட்டது? நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்கள் தரக்குறைவாக விமர்சித்தார்களா? தங்களை ரஸூல் என்று வாதித்தார்களா? (நவூதுபில்லாஹி மின்ஹா) எதை எதோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் பாருங்கள் இந்த மார்க்கம் தெரியாதவர்.
இதுபற்றி கேட்டால் அஷ்ரப் அலி தானவி திருந்திவிட்டார் என்றார்கள். அதற்கு ஆதாரம் தாருங்கள் என்று அஹ்லெ சுன்னத் மாத இதழ் மூலம் கேட்டு சுமார் 15 வருடங்கள் ஆகிவிட்டது. இன்றுவரை அவர்களால் தரமுடியவில்லை. இருந்தால்தானே தருவதற்கு. இன்றுவரை அஷ்ரப் அலி தானவி எழுதிய அந்த கேடுகெட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் அவருடைய சில்சிலா கலீபாக்களால்.இவ்வாறிருக்க இந்த அஷ்ரப் அலி தானவியை ஏற்ற இந்த தரீகாவை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
3. தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது பழமொழி. குருவின் கலீபாவான லால்பேட்டை பஷீர் மௌலானா ஷெய்கு பைஜி ஷாஹ்வின் நிலையை பார்க்கப்போனால், ஷைகுனா செய்யிது நூரி ஷாஹ் ஷைகுனா ஜுஹூ ஷாஹ் நினைவு மலர் எனும் நூலில் அவரது வாழ்க்கை சரிதத்தை கூறும்போது பக்கம் 123 ல்,'கோட்டைக்குப்பம், நெல்லிக்குப்பம், பாண்டிச்சேரி, கடலூர், திண்டுக்கல் போன்ற தப்லீக் இஜ்திமாக்களில் பிரதான பேச்சாளராக இடம் பிடித்தனர்'
'நூருன்னூர்' எனும் நூலின் பக்கம் 11ல் '(பைஜி ஷாஹ்) தப்லீக் இயக்கத்தில் சேர்ந்து 19 வருடங்கள் சேவை செய்தார்கள்' என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத் ஒரு வழி கெட்ட இயக்கம் அதில் சேரக்கூடாது என்று சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் பத்வா வெளியிட்டிருக்க இவர் அதில் சேர்ந்து 19 வருடங்கள் பணியாற்றினார் என்று சொல்லப்படுவது இவரின் கொள்கை எத்தகையது என்பது விளங்குகிறது.அதே நூல் பக்கம் 11ல் 'ஆரம்பத்தில் சென்னையில் வாழ்ந்த ஷைகுநாயகம் பின்னர் லால்பேட்டைக்கு ஹிஜ்ரத் செய்தனர்' என்றும் கூறியதன் தாத்பரியம் என்ன? ஹிஜ்ரத் என்றால் என்ன? என்று கூட விளங்காமல் உளறி கொட்டியிருக்கின்றனர்.
மேலும் தாய்,தந்தை சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வசியம் செய்து வைத்ததையும், பலருக்கு கட்டப் பஞ்சாயத்து செய்து வந்ததையும் ஷெய்குனா செய்யிது நூரிஷாஹ் ஷெய்குனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் பக்கம் 123, 127ல் கூறியிருப்பது இவரின் கீழ்த் தரத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.
3.கடையநல்லூரைச் சார்ந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி என்ற ஐனி ஷாஹ் என்பவர் 'திருக்கலிமாவின் பொக்கிஷம்(பைஜானே ஷைகீ) எனும் நூலில் 'அணிந்துரை' எனும் பகுதியில் கம்பம் அம்பா நாயகம் அவர்கள் இந்த நூலை மதித்து அணிந்துரை வழங்கியிருப்பதாகவம் அவர்கள் எழுதிய சில வாசகங்களை சொல்லி எழுதியிருப்பதாகவும் சில பொய்களை எழுதி புத்தகத்தை அம்பா நாயகம் அவர்கள் மறைந்த பிறகு வெளியிட்டுள்ளார்.
ஆனால் உண்மை என்னவென்றால், இந்த அணிந்துரையை அம்பா நாயகம் அவர்கள் எழுதவோ சொல்லவோ இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக, இந்நூலைக் கண்ணுற்ற அம்பாநாயகம் அவர்களின் மகனார் மௌலவி அப்துல் கபூர் ஸயீதி அவர்களும், அம்பா நாயகத்தின் முரீது கிருஷ்ணாபட்டணம் மௌலவி ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பஈ அவர்களும் நேரடியாக அப்போது பொரவாச்சேரி மத்ரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த எம்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்களிடம் சென்று, 'நீங்கள் இந்த புத்தகத்தில் அம்பாநாயகம் அவர்கள் அணிந்துரை எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அதை நாங்கள் பார்க்க இயலுமா?' என்று கேட்ட போது, அவர் மழுப்பலாக, 'அவர்கள் சொல்ல நான் எழுதியதில் அவர்கள் கையொப்பமிட்டார்கள'; என்று சொன்னார். அவர்களிருவரும் 'சரி அந்த கையெழுத்தையாவது காட்டுங்கள் நாங்கள் பார்த்துவிட்டுச் செல்கிறோம்' என்றதற்கு, 'iகெயழுத்திற்குப் பதிலாக சிறு கோடு மட்டும் போட்டார்கள்' என்றிருக்கிறார். அவர்களும் விடவில்லை. 'அந்த கோடையாவது காட்டுங்கள்' என்று கூற, அவர் சும்மா தேடுவது மாதிரி நடித்துவிட்டு 'தற்போது இல்லை' என்று சொல்லவும், 'நீங்கள் இதற்கு மறுப்பு வெளியிட வேண்டும'; என்று அவர்களிருவரும் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். அம்பா நாயகத்தின் மகனார் அவர்களும், அவர்களுடன் சென்ற மௌலவி அவர்களும் இன்றும் இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை நேரில் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி தம்மை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் இவர்கள் மார்க்கத்தையும், இஸ்லாமிய ஞானத்தையும் எங்ஙனம் வளர்ப்பார்கள்?
கம்பம் அம்பா நாயகம் அவர்களிடம் பைஜி ஷாஹ் எப்படிப் பட்டவர்? அவரின் ஞானம் எப்படி? அஷ்ரப் அலி தானவியை ஒப்புக் கொள்கிறார்களே! என்று கேட்ட கேள்விக்கு, பைஜி ஷாஹ் வின் ஞானம் சரியில்லை. நமது ஷெய்குமார்கள் சொன்ன ஞானமாக இல்லை. அஷ்ரப் அலி தானவியை ஏற்றுக் கொண்ட யாரும் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியாது என்று பதிலளித்தார்கள். இந்தப் பேச்சின் ஒலிப்பதிவு நாடா பலரிடமும் இருக்கிறது.
இதே ஐனிஷாஹ் என்பவர்தான், 'தப்லீக்கும் அதன் தலைவர்களும்' என்ற புத்தகத்தை எழுதி அதில் அஷ்ரப் அலி தானவியின் கேடுகெட்ட கொள்கைகளை விமர்சித்து, அவரின் மேல் விடப்பட்ட குப்ரு பத்வாவையும் எடுத்துக் காட்டியவர். பின்னர் என்ன நடந்ததோ? தெரியவில்லை.
4. பொரவாச்சேரியில் பணியாற்றிய அப்துஸ்ஸலாம் மௌலவி என்ற ஜமாலிஷாஹ் என்பவர் தப்லீகின் தலைவர்களுள் ஒருவரான மௌலானா ஜகரிய்யா சாஹிபை போற்றிப் புகழ்ந்தும், அவர் மத்ரஸாவில் தான் ஓதியது பெரும் பாக்கியம் என்றும், அஷ்ரப் அலி தானவியை ஒரு மகான் என்றும் போற்றி புகழ்ந்தும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அஹ்லெ சுன்னத் மாத இதழ் ஜனவரி 1996 வெளிச்சம் போட்டுக் காட்டி ஜமாலி ஷாஹ்வின் முகத்திரையை கிழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
5. இதே மாதிரிதான் அஷ்ரப் அலி தானவி வழிகெட்ட தப்லீக் ஜமாஅத்தின் மூல குருமார்களுள் ஒருவர் என்று நூரிஷாஹ்வின் பிரதம சீடர் முஸ்லிம் குரல் ஆசிரியர் கனி சிஷ்தி கூறியிருப்பதையும் அஹ்லெசுன்னத் பத்திரிகை வெளியில் கொண்டுவந்தது குறிப்பிபடத்தக்கது.
குருமார்களும், சிஷ்யர்களும் இவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்டு பைத்தியக்காரத்தனமாக உளறிக் கொட்டுவதற்கு என்ன காரணம்? என்று பார்க்கப்போனால், அவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவேண்டுமானால், 'ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்' என்ற நூலில் உள்ள ஒரு சம்பவம் உங்களுக்கு அதை தெரியப்படுத்தும். அது இதுதான்:
'சர்காரின் (நூரிஷாஹ்) முரீதான ரெயலி; டிரைவர் ரெயலி; ஓட்டும்போது தண்டவாளத்தில் பெரிய மிருகம் இருப்பதை பார்த்ததாகவும், அதன்மீது மோதினால் பெரிய விபத்து நடந்திருக்கும் என்று எண்ணியதாகவும் ஒன்றுமே புரியாத நேரத்தில் சர்க்காரே வந்து எதிரில் தோன்றினார்கள். அப்படியே வண்டி நின்று விட்டது.
அப்போதுதான் எனக்கு மனதில் ஒரு ஊசல், கடந்த மாதம் நான் ஷெய்குனாவுக்கு சேர்க்க வேண்டியதை சேர்க்கத் தவறி விட்டேன் என்றும் அதை ஷைகுனாவிடம் அந்த முரீது சொன்னார். அதற்கு சர்க்கார் கிப்லா சொன்னார்கள் 'புரிந்து கொண்டால் சரி'.
நூல்: ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர், பக்கம் 43.
உங்களுக்க இதன் அர்த்தம், தாத்பரியம் இந்த சம்பவத்தின் மூலம் தெரிந்திருக்கும். முரீதுகள் ஷெய்குமார்களுக்கு மாதமாதம் கப்பம் செலுத்துவதும் இதற்காகத்தான் இவர்கள் ஸில்ஸிலா தயாரித்து, தரீகா என்ற பெயரில் ஒன்றை நடத்துகிறார்கள் என்றும் தெரியவந்திருக்கும்.
6. நூரிஷாஹ்விடம் அதிக நெருக்கமாக இருந்தவரும், பிலாலி ஷாஹ் என்பவருடைய ஷெய்கா இருப்பவருமான ஜுஹூரி ஷாஹ் என்பவரின் வாழ்க்கையை, ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர் (இந்த மலரை தொகுத்தவர் நூரிஷாஹ்வின் பிரதம சீடர் கனி சிஷ்தி என்பவர்) என்ற நூல் பக்கம் 100 ல் வர்ணிக்கிறது,:'காயலான் சடை வைத்து அதன்மூலம் கள்ள சரக்குகளை வாங்கி வந்ததன் காரணமாக பலமுறை பல்வேறு சங்கடங்களில் சிக்கிய சம்பவங்கள் நமது யூசுப் ஹழரத் எனும் ஜுஹூரி ஷாஹ் கிப்லா அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.'
ஆக முரீதுகள் முதல் ஷெய்குமார்கள் வரை அனைவர்களின் வாழ்க்கையையும், கொள்கைகளையும் உங்கள் கண்முன் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதுதான் இந்த தரீகாவின் நிலை.
சிலர் சொல்கிறார்கள், இந்த தரீகாவிலுள்ள இந்த ஷாஹ் தப்லீகை எதிர்க்கிறார். ரஸூலின் முஹப்பத்தைப் பற்றி அழகாக பேசுகிறார். எனவே அவரை மட்டும் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று. இந்தக் கூற்று மிகவும் மோசமான கூற்றாகும். ஏனெனில் இவர்களின் தலைவர்கள், ஷெய்குமார்கள் அனைவர்களும் நமது உயிரினும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மோசமாக பேசியும், எழுதியும் வந்தவர்களை ஆதரித்து பேசுவது மட்டுமில்லாமல் அவர்களை மகான்கள் என்றும் கூறுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் தொடர்பு கொண்ட தரீகாவில் இருக்கும் வரை யாரையும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
மேலும் பாருங்கள்! வஹ்ஹாபிகள் தங்களது தீவிரவாதப் போக்கை உலகிற்கு காட்டியது தற்போது பத்திரிகைகளில் வெளிவந்து அவர்களின் உண்மை முகம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் இந்த வஹ்ஹாபி தரீகாவான நூரிஷாஹ் தரீகாவைச் சார்ந்த மௌலவி அப்துல் நாஸர் மதானி என்பவரின் தீவிரவாதப் போக்கு தற்போது பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதனைப் பார்வையிட:http://timesofindia.indiatimes.com/city/bangalore/Madani-reveals-he-was-member-of-Hyderabad-terror-outfit/articleshow/6435291.cms
நூரிஷாஹ் தரீகாவின் மெய்(அஞ்)ஞானமும், ஸூபிகளின் மெய்ஞ்ஞானமும்:
தங்களின் முரீதுகளால் ஷம்சுல் ஆரிபீன் என்று புகழப்படும் நூரிஷாஹ், 'காதிரிய்யா, சிஷ்திய்யா தரீகாவிற்கு ஒரு ஷைக என்பதாகக் கூறிக் கொண்டு கேரளாவில் நுழைந்தார். பொதுமக்களும் சில உலமாக்களும் அவரை அங்கீகரித்தனர். மக்களின் மனதில் நல்ல மதிப்பை பெற்ற பின்னர், 'தரீகத்தே நூரிஷாஹ்' என்ற ஒரு தரீகாவிற்கு தான் தனியொரு ஷைகு என்பதாக தாவா செய்தார். தம்மை பின்பற்றிய பிரத்தியேகச் சீடர்களுக்குப் பற்பல தவறான கருத்துக்களை போதித்தார். அவை அல்லாஹ்வுடைய வாக்கு என்றும், தான் அல்லாஹ்வின் தானமென்றும் அல்லாஹ்வுடைய காலம் என்றும, அவனுடைய தூதரின் நிழல் என்றும் வாதித்தார்.'
(ஆதாரம்: ஆயங்குடி பிரசுரம் 15-5-1977)
என்று அறிமுகம் கொடுக்கப்பட்ட நூரிஷாஹ்வின் ஞானம், மஃரிபா சரியானதுதானா? நமது மகான்கள் சொன்னதுதானா? என்று பார்க்கும்போது, கம்பம் அம்பா நாயகம் அவர்கள் சொன்ன சொல் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அது, அவர்களின் ஞானமே சரியில்லை' என்பதுதான்.
மெய்ஞ்ஞனாத்தைப் பற்றி தெரிந்த மற்ற ஷெய்குமார்கள் சொல்கிறார்கள், 'மெய்ஞ்ஞானத்தைப் பற்றி சரியாக தெரியாமல் உளறும் வார்த்தையாகத்தான்; இருக்கிறது. இது ஞானமே இல்லை' என்று.
ஆனால் இவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் சொல்லும் ஞானமே சரியானது. மற்றவைகள் தவறானது மட்டுமில்லாமல் மற்ற வஹ்தத்துல் வுஜூது கொள்கையைப் போதிக்கும் மற்ற ஷெய்குமார்கள் தவறிழைத்துவிட்டார்கள். காயல்பட்டணம் தைக்கா சாகிபு வலியுல்லாஹ் சறுகிவிட்டார்கள்.ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் ஙைரியத்து, ஐனியத்து தெரியாமல் இருக்கிறார்கள்.. ஷிர்க் செய்து விட்டார்கள்.(நவூதுபில்லாஹி மின்ஹா) என்பது போன்ற தவறான செய்திகளை உளறிக் கொட்டுகிறார்கள். தாங்கள் போதிக்கும் தவறான ஞானத்தை 'வஹ்தத்துல் வுஜூது' என்றும் சொல்கிறார்கள்.
இவர்கள் போதிக்கும் ஞானம் வஹ்தத்துல் வுஜூது என்றால், வஹ்தத்துல் வுஜூதைப் போதித்த கௌதுல் அஃலம், அப்துல் கரீம் ஜீலி, முஹ்யித்தீன் இப்னு அரபி, அப்துல் வஹ்ஹாப் ஷஹ்ரானி, ஷாஹ் வலியுல்லாஹ், ஆலா ஹஜ்ரத் பரேலவி ரலியல்லாஹு அன்ஹும் போன்ற எண்ணற்ற மகான்கள் இவர்கள் சொல்லியபடி எங்காவது, எந்த கிதாபிலாவது போதித்திருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்று இவர்களால் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? அவர்கள் சொன்ன சொல்லிற்கு இவர்கள்தான் தான்தோன்றித்தனமாக வலிந்துரைகள் செய்திருக்கிறார்கள். இந்த வலிந்துரைகள் மகான்களின் கூற்றுகளுக்கு மாற்றமானவைகளாகும். இவர்களின் ஞானத்தின் சூனியத்தைப் பாருங்கள்:
கௌஸி ஷாஹ் சிஷ்தி காதிரி எழுதியதாக 'நூருன்னூர்' என்ற நூலில் இவர்கள் வெளியிட்ட புதிய ஞானம் பற்றிய வரிகள்:
'வுஜூது ஒன்றாகவும், தாத்து இரண்டாகவும் இருக்கிறது. ஒன்று மவ்ஜூதே ஹகீகிய்யான ஜாத். இன்னொன்று மவ்ஜூதே இளாபிய்யான ஜாத். (பக்கம் 76)
'அவனோ அவைகள் ஜாத்திலே வேறானவை. உஜூதிலே ஒன்றானவை என்று அறிகிறான்' (பக்கம் 69)
'உஜூதே முத்லக்தான் ரப்புடைய ஜாத்து. அத தானல்லாத இன்னொரு ஜாத்தான அப்துடைய ஜாத்தை தன்னிலே காட்டுகிறது என்று கூறினால் அது சரிதான்.' (பக் 102)
ஹக்குக்கும் ஹல்குக்கும் உதாரணம் கூறும்போது கடலும் அலையும் போல என்றும், தண்ணீரும் பனிக்கட்டியும் போல என்றும்…..சில விஷயங்களை விளக்குவதற்காகக் கூறியுள்ளார்கள்………அவர்களின் உதாரணங்களை அப்படி அப்படியே நம்பிக் கொண்டு வழி தவறி விடுகிறார்கள்.' (பக் 117)
இவர்கள் கூறுவதிலிருந்து வுஜூது ஒன்று, தாத்து இரண்டு என்றும் ஹக்கிற்கும், கல்கிற்கும் கொடுக்கப்படும் உதாரணங்கள் கடலும் அலையும், தண்ணீரும் பனிக்கட்டியும் என்பது தவறானவை என்றும் வாதிக்கிறார்கள்.
நமது ஷெய்குமார்கள், மகான்கள் சொல்லும் ஞானத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகவும், வழிதவற செய்யக்கூடியதாகவும் இருக்கும் இவர்களின் கூற்றை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஏற்படும் தவறுகள் மற்றும் அபாயங்கள் பற்றி இங்கே ஹைதராபாத் ஸூபி மகான் குத்புஜ் ஜமான் மௌலவி முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அல்ஹகீகா' ( தமிழில்: மௌலவி அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு)என்ற நூலில் விளக்கம் தந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறேன்:
தாத், உஜூது என்ற இரு பெயர்கள் ஒரே அர்த்தத்தை கொடுக்கக் கூடியன. எதன்பேரில் சிபாத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பதை ஸூபியாக்கள் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்தாகும். ஹகீகிய்யான தாத்தாகிறது உஜூதாகும். சில அனுபவ அறிவில்லாதவர்கள் ஊகித்ததைப் போல ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்திற்கு மேலதிகமானதாக இல்லை.
உஜூதாகிறது அவர்களின் யூகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தானது தன்னுடைய தாத்தின் மர்தபாவில் அது தனித்த இல்லாததாகவும், உஜூதின் பக்கம் தேவைப்பட்டதாகவும் ஆக வேண்டி வரும். ஆகவே தேவைப்பட்ட பொருள் இலாஹாக இருப்பதற்கு தகுதியற்றதாகும்.
'தாத்து உஜூதைத் தேடுது' என்ற கூற்று அர்த்தமற்றதாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயமாகிறது எவ்வாறு அதமிய்யான விஷயத்திலிருந்து உருவாகும்? அதமிய்யான விஷயமாகிறது அதனடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும்.
அவர்கள் தாத்தை திஹ்னிய்யான (கற்பனையான) விசயம் என்று சொல்வார்களேயானால், அந்த தாத்தாகிறது இரண்டாவதான மஃகூலான வஸ்துக்களாக வேண்டிவரும். அப்படியானால் அதற்கு வெளியில் உஜூது இல்லை. அப்பொழுது இலாஹ் என்பது வெளியில் உண்டாகாத மஃகூலான(விளங்கப்பட்ட) விசயமாகி விடும்.
இவர்கள் இரண்டு தாத்தை தரிபடுத்துவது ஏனெனில், அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பது இயலாது என்ற காரணத்திற்காக. மேலம் தாத்தும், உஜூதும் ஒன்று என்று சொல்கிறவர்களை காபிராக ஆக்குகிறார்கள்.
தாத்துல் மும்கினை – தீமை விளையுமிடமாகவும்,தாத்துல் வாஜிபை – நன்மை விளையும் இடமாகவும் ஆக்கினார்கள்.
இது கலப்பற்ற ஷிர்க் என்பதை அவர்கள் அறியவுமில்லை. குர்ஆனின் நஸ்ஸான ஆயத்துகளுக்கு மாறுபடுகிறார்கள். இதிலிருந்து பல்வேறு ஆட்சேபணைகள் கிளம்புகின்றன.
1. தாத்துல் மும்கின் என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும்,தன் தாத்தைக் கொண்டு தானே நிற்கிறதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவன் பேரில் தேவையில்லாதிருக்குமானால் மும்கினுடைய தாத்துகள் பூர்வீகமானதாகி விடும். பூர்வீகமானது எண்ணிக்கையாவது இங்கு ஏற்படுவதால் இது தௌஹீதுக்கு மாற்றமாகும்.2. தாத்துல் மும்கின் அவர்களிடத்தில் ஆக்கப்பட்டதாக இருப்பின், உண்டாக்குகிறவனுடைய உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விஷயத்திலா? அல்லது மஃதூமான விஷயத்திலா? அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதிய்யான விஷயத்தில் நிகழுமானால் இங்கேயும் பூர்வீகம் எண்ணிக்கையாவது நிர்ப்பந்தமாகும். இனி அந்த உண்டாக்குதல் எனும் குணம் இல்லாத விஷயத்தில் நிகழுமானால், இல்லாத விஷயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது.3. மும்கினுடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் தரிபட்டது என்று சொன்னால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய இல்மானது மற்ற கமாலிய்யத்தான சிபத்துக்களைப் போல தாத்தின் ஐனாகும். இல்மிய்யான கோலங்கள் என்பது அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஆகும்.
இல்மிய்யான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் என்று சொன்னால், அப்போது தாத்துல் வாஜிபு புதிதுகளுக்கு இடமளிப்பதாகிவிடும்.
மும்கினாத்துகளுடைய தாத்துக்கள் இல்முடைய மர்தபாவை விட்டும் வெளியேறுவது அல்லாஹ்வுடைய இல்மில் குறைவும், இல்முடைய மர்தபாவில் அறியாமையும் ஏற்படும். ஆனால் மும்கினாத்துகளின் தாத்துக்கள் அல்லாஹ்வின் இல்மில் தரிபட்ட கோலங்களாகும். ஆகவே அந்த கோலங்களாகிறது ஆதியிலிருந்து அந்தம் வரை இல்முடைய மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. அப்போது வெளியில் ஒரு தாத்தைத் தவிர அல்லது ஒரு உஜூதைத் தவிர எட்டிக் கொள்ளப்படவில்லை.
செயல்களாகிறது நல்லதோ கெட்டதோ அது உஜூதிய்யான விஷயமாகும். உஜூதிய்யான விஷயம் அதமிய்யான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதிய்யான விஷயத்தை அதமிய்யான விஷயத்'தில் சேர்ப்பது இரண்டு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது, சத்து சொல்வது போல். அதாவது:
ஒரு இலாஹ் நன்மையைப் படைக்கிறான். ஒரு இலாஹ் தீமையைப் படைக்கிறான் என்று. ஆனால், நன்மையையும், தீமையையும் அல்லாஹ் தன்பக்கம் சேர்த்துக் கொண்டான். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை ஈமானின் ஷர்த்தாக (அதாவது நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று ஈமான் கொள்வது) ஆக்கினார்கள்.
இந்த இரு தாத்தை தரிபடுத்துபவர்கள் நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினுடைய தாத்தின் பக்கமும் சேர்ப்பதினால், அல்லாஹ் ரஸூலுக்கு மாறு செய்து விட்டார்கள். மேலும் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வின் புறத்திலுள்ளது என்று சொன்னவர்களை காபிர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். (நவூதுபில்லாஹி மின்ஹா)
இத்துடன் அவர்களுடைய கொள்கையின் பேரில் வேறு ஆட்சேபணைகளும் உண்டு. அவை:
1. வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விஷயங்கள் ஒன்று சேர்கிறது.
1. தாத்துல் மும்கின் 2. தாத்துல் வாஜிபு 3. உஜூது.
அவர்களிடத்தில் உஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விஷயமாகும். தாத்திய்யான விஷயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற்கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்பந்தமாகும்.
2. நிச்சயமாக உஜூது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகவும், வாஜிபுடைய தாத்து அந்த உஜூதுக்கு ஆதாரமாகவும் உள்ளது.ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள் இன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையானது ஆதேயப் பொருளின் நிலையாகும். மும்கினுடைய (வெளியில் உண்டான) தாத்து அசம்பாவிதம் என்பதாக இதிலிருந்து தெரிகிறது. காரணம் இரு ஆதாரப் பொருள்களுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் என்பதற்காகவும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் என்பதற்காகவும் ஆகும்.
3. சந்தேகமில்லாமல் மும்கினுடைய தாத்து இல்லாமலானதாகும். வெளியில் உண்டான தாத்துல் மும்கின்:உஜூது வந்து சேர்ந்ததன் பின் உண்டானால், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதமாகும்.
அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்தது என்றால், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும்.
மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின்பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானால், வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் விளங்கும்.
4. ஒரு இல்லாத வஸ்து அதனைப்போன்று இல்லாத வஸ்துவை உண்டாக்குவதின்பேரில் சக்தி பெறுவது நிர்பந்தமாகும். வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுமானால் சுயமே இல்லாத ஒன்றிலிருந்து உள்ள விஷயம் உண்டாவது அசம்பாவிதமாகும்.
மும்கினுடைய தாத்திலிருந்தும், வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உருவானால் உஜூதானது தீமைகளை உருவாக்குவதில் கூட்டாகி விட்டது. இது தாத்து இரண்டு என்று சொல்பவர்களின் நம்பிக்கைக்கு பிழையாகும்.
வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால், அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாகிவிடும். இது நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்தில் உங்களை இட்டுச் செல்லும். ஆகவே இரு தாத்தை தரிபடுத்துவது சரியில்லை. தரிபடுத்துவது ஷிர்க்காகும்.
5. ஒரு உதாரணம்: வெளியில் உண்டான ஜெய்து என்பவன் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்று ஈமான் கொண்டுள்ளீர்கள். அப்போது வெளியில் உண்டான ஜெய்துவிடமிருந்து உண்டாகும் தீமைகள் அனைத்தும் அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறது. ஜெய்துடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே ஜெய்து என்பவனிலிருந்து உண்டாகக் கூடிய தீமைகளை ஜெய்தின் பக்கம் சேர்ப்பதானது உங்களுடைய நம்பிக்கையின்(ஜைது என்பவன் அல்லாஹ்வாகும்) படி அறவே இல்லாத ஜெய்தின் பக்கம் சேர்ப்பது மடமையிலும் மடமையாகும். நீங்கள் எதிலிருந்து விரண்டு ஓடினீர்களோ அதன்பேரில் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள்.உண்மை ஸூபியாக்களின் நிலை:
தாத் என்பது உஜூதின் ஐனாகும். உஜூது என்பது தாத்தின் ஐனாகும். ஆலமானது அதன் எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதுடைய ஷுஊனாத்துகளும் சுற்றுகளும் ஆகும்.
வெளியில் மவ்ஜூதான பொருள்கள் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறானவை இல்லை. அல்லது தாத்தின் ஷுஊனாத்துகளுக்கு வேறானவை இல்லை. ஷுஊனாத்துக்கள் மட்டிலடங்காதது ஆகும். அதனுடைய சுற்றுகளும் எண்ணிக்கையற்றதாகும். கௌனுகளுடைய எல்லா அணுக்களும் ஆதியிலிருந்து அந்தம் வரை ஷுஊனாத் என்னும் உடையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அவன் ஒரு ஷஃன்(காரியத்தின்) உடைய உடையில் இரண்டு தடவை வெளியாவதில்லை. ஒவ்வொரு அணுவின் பேரிலும் சொந்தமான ஒரு கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். அந்த சொந்தமான கோலத்தைக் கொண்டு வேறு எந்த அணுவிலும் ஒரு காலமும் வெளியாக மாட்டான்.
வெளிப்பாட்டில் இந்த அதிகத்துடனேயே அதிகமாகவில்லை, எண்ணிக்கையாகவில்லை, பேதகமாகவில்லை. அவன் எப்பொழுதும் முன்னுள்ள மாதிரியே இருக்கிறான். அவன் பன்மையுடன் ஒருவனாகவும், ஒருமையுடன் பன்மையானவனாகவும் தாத்தில் அல்லது உஜூதில் ஒருவனானவனும் ஆவான். சுற்றுகளிலும் ஷுஊனாத்துகளிலும் பலதானவனும் ஆவான்.
இத்துடனே ஒருமை பன்மையினதும் பன்மை ஒருமையினதும் ஐனாகும். அவனின் நிலைகளாகிறது அவனின் தாத்தின் ஐனாகும். அவனின் தாத்தாகிறது அவனது நிலைகளின் ஐனாகும். மட்டிலடங்கா ஷுஊனாத்துக்களுடைய அவன் அவனுடைய ஷுஊனாத்துக்களுடைய ஐனாகவும், சுற்றுகளின் ஐனாகவும் (தனி நிலையிலும் கூட்டான நிலையிலும்) ஆகிறான்.
இதுபோல்தான் அவனது ஷுஊனாத்துக்களை(காரியங்களை)க் கொண்டு மொத்தமாக ஐனாகிறான்(தானாகிறான்). தனித்த நிலையிலும் சேர்ந்த நிலையிலும் அவன் எல்லாவற்றினதும் ஐனாகும். எல்லாம் அவனது ஐனுமாகும்.
ஆகவே தாத்தாகிறது ஒரு தாத்தாகும். ஷுஊனாத்துகள் பலதாகும். கடலின் தாத்து ஒன்றானதாகவும், அதன் அலைகள் என்னும் சுற்றுகள் பலதானதும் போல, கடலின் தாத்தாகிறது தனித்தனி எல்லா அலைகளினதும் ஐனாகும். இதுபோலவே மொத்தமாக எல்லா அலைகளினதும் ஐனுமாகும்.
ஐனு ஒன்றானதாகவும், சுற்றுகள் அநேகமானதாகவும் இருக்கும். 'லா மவ்ஜூத .இல்லல்லாஹ்'. இதுதான் ஹகீகிய்யான தௌஹீதுத் தாத்தியாகும்.
ஆக நூரி ஷாஹ் தரீகா என்பது நமது சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மகான்களின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பது உங்கள் முன் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது. தெளிவு பெறுங்கள்!!!
ஆதார நூல்கள்:
1. திருக்கலிமாவின் பொக்கிஷம்.2. நூருன்னூர்3. 15-5-1977 ஆயங்குடி பிரசுரம்4. அல் ஹகீகா5. தப்லீக் ஜமாஅத் என்றால் என்ன?6. ஷைகுனா செய்யிது நூரிஷாஹ் ஷைகுனா ஜுஹூரி ஷாஹ் நினைவு மலர்.7. மெய்ஞ்ஞான வழித் தொடர் ஷஜ்ரா8. அஹ்லெ சுன்னத் மாத இதழ்கள்.9. தப்லீக்கும் அதன் தலைவர்களும்.10. சமஸ்த கேரள ஜம்இய்யத்து உலமா சபை தீர்மானம்.
முற்றும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "நூரி ஷாஹ் தரீகா பற்றிய உண்மைகள்!"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates