Elegant Rose - Diagonal Resize 2 TAMIL ISLAM

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் கேள்வி-பதில்கள்

உலகத்தில் குர்ஆனை ஓதுவது நன்மை மிகுந்ததா? ஸலவாத்து ஓதுவது நன்மை மிகுந்ததா?
பதில்: ஒரே எடையுள்ள இரண்டு வஸ்துவைப் பார்த்து எவ்வாறு ஒன்றைவிட ஒன்றைக் கூடுதலாகச் சொல்ல முடியாதோ அதைப் போலத்தான் இதற்கும் ஜவாபாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்: 'நான் உங்கள் மீது முஹப்பத்து வைக்க நாடினால் நீங்கள் குர்ஆனை மிகுதமாய் ஓதுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் மீது முஹப்பத் வைக்க நாடினால் ஸலவாத்தை மிகுதமாக ஓதுங்கள். அல்லாஹ்வைப் புகழ்வது எனக்குப் பிரியம். என்னைப் புகழ்வது அல்லாஹ்வுக்குப் பிரியம்.
கேள்வி: ஈமான் கொண்டுள்ள முஃமின் தனக்கு ஈமானைக் கொடுக்கும்படி துஆ கேட்கலாமா?
பதில்: அவ்வாறு கேட்பது தெரியாத்தனமாகும். ஏனெனில் கர்ப்பம் உண்டாயிருக்கும் பெண் தனக்கு கெர்ப்பத்தை தரவேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பாகும். ஆனால் முடிவுவரை தரிப்படுத்தும்படி கேட்கலாம்.
கேள்வி: அல்லாஹுத்தஆலாவை அவர் என்று பன்மையாக சொல்லலாமா?
பதில்: சொல்லக் கூடாது. ஏனெனில் உலகத்தில் காணப்பட்ட வஸ்த்துக்கள் எல்லாம் பலவித அனாசிர்களால் உண்டாக்கப்பட்டிருப்பது போலில்லாமல் அல்லாஹுத்தஆலா தன்னைக் கொண்டே நிலைபாடான தனியவனாகவிருப்பதால் அவரென்ற பன்மையை உபயோகிக்க வழியில்லை.
கேள்வி: ஈத் என்ற பெருநாள் தொழுகையில் வழக்கத்திற்கு மேல் ஆறு தக்பீர் கூடுதலாகயிருப்பது எதற்காக?
பதில்: ஈத் என்ற வார்த்தைக்கு மீளுவதென்று பொருளாகும். மீளுவதென்பது அஹதியத்தளவில் மீளுவதாகும். இன்சான் அஹதிய்யத் என்ற மர்தபாவில் இருந்து ஆறுவிதமான மகாமத்துக்களை பொதிந்தவனாக வெளியாகி இருப்பதால் இவ்வாறு மகாமத்துக்களையும் பனா செய்து விட்டதற்கு அடையாளமாக அத்தொழுகையில் ஆறு தக்பீர்களை சேர்க்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: அல்லாஹுத்தஆலாவின் அஸ்மாக்களில் கோபாமுடையவனென்ற அஸ்மாவும் ஒன்றாகி இருக்க இன்சானுக்கு அதை ஹராமாக்கியதன் தாத்பரியம் என்ன?
பதில்: அல்லாஹுத்தஆலாவுடைய சிபத்துகளில் மிகுதத்தை இன்சானுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் கோபம் என்ற சிபத்தானது வேறு எவருக்கும் பாத்தியமில்லாமல் ஆண்டவனுக்கு மட்டும் சொந்தமானதாகயிருக்கும். எதுபோலெனில் ஒருவன் ஹயாத்துடனிருந்து தன் பொன்சாதியை தலாக்கு சொல்லாமலிருக்கும் காலமட்டும் அவன் சம்பந்தப்பட்ட போதிலும் அவளில் வேறு எவருக்கும் பாத்தியதையில்லாமல் அவனுக்கு மட்டில் சொந்தமாக்கப்பட்டிருப்பது போலாகும்.
கேள்வி: பாங்கு சொல்பவர்களுக்கு சுவர்க்கம் வாஜிபென்று பிக்ஹு கிதாபுகளில் வந்திருக்கிறதே அவ்வாறாயின் ஒரு மனிதன் பாங்கு மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமானதாகயிருக்க ஏன் தொழுக வேண்டும்.?
பதில்: பாங்கு சொல்பவர்களுக்கு சொர்க்க லோகம் வாஜிபென்று வந்திருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு ஒன்று கூறுகிறேன். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரு கண்களும் விளங்காத ஓர் மனிதரை பாங்கு சொல்வதற்காக நியமித்திருந்தார்கள். அவர்களை நியமித்திருப்பதின் இரகசியத்தை அறிவதற்காக ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓரிரவு தஹஜ்ஜத்தின் வக்தில் பள்ளிவாசலுக்கு சென்று பாங்கு சொல்பவரைக் கண்டவுடன் அவரைக் காணாதவர்கள் போல் இப்'பள்ளிவாசலுக்கு ஒரு கண்களும் குருடாக இருப்பவரைப் பாங்கு சொல்வதற்கு நியமித்திருப்பதால் இதுவரை பஜ்ரின் வக்துக்கு பாங்கு சொல்லாமலிருக்கிறார். சூரியன் வெளியாக வேண்டிய நேரம் சமீபத்து விட்டதே எனக் கூறிக் கொண்டு அன்னவர்களை நெருங்கி பாங்கு சொல்லுங்கள் என்று கூற, அதற்கு அவர்கள் ஏன் தாங்கள் வீணாக கூச்சல் போடுகிறீர்கள்? பாங்கு சொல்வதற்குரிய வக்தை நன்றாக நான் அறிவேனென்று கூறக் கேட்டு அவர்கள்உங்களுக்கு கண் தெரியாமலிருப்பதாலல்லவா நேரம் விளங்கவில்லை எனக் கூறினர்கள். எனக்கு வெளித்தோற்ற கண் விளங்காதிருந்தாலும் அர்ஷில் பாங்கு சொல்லப்படும் சப்தம் எனது கல்புக்கு கேட்டபின் பாங்கு சொல்வதுதான் எனக்கு விளங்கிய நேரமாகும் என்று கூறினார்கள். இத்தன்மையை அடைந்தவர்களுக்குத் தன் சொர்க்கமே தவிர மற்றவர்களுக்கு இல்லை என்பதால் இத்தகுதியை அடைவதற்கு கட்டாயம் தொழுதே ஆக வேண்டும். மேலும் தொழுகையானது அப்தியத்தி;பன் தன்மையை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய ஓர் சாட்சியைப் போல் இருப்பதால் எவன் தொழுகவில்லையோ அவன் செய்கையில் தன்னை ரப்பென்று தாவாச் செய்கிறான் என்றே
கேள்வி: இறந்தவர்களை கபுரில் மலக்குகள் கேள்வி கேட்பது அரபி பாஷையைக் கொண்டு என்பதாகச் சொல்கிறார்களே! அரபி தெரியாதவர்களைக் கேட்டால் அவர்கள் எவ்வாறு பதிலுரைப்பார்கள்?
பதில்: இறந்த பிறகு சேரக்கூடிய இடமானது 'பர்ஜக்' நடு உலகமாக இருப்பதால் அவ்வுலகக் காரியாதிகள் இவ்வுலகுக்கு மாற்றமாக இருக்கிறது. பூத உட லுடன் தோன்றக் கூடியவை சூட்சம உடலுடன் காணப்படும். அவ்விடத்திய விஷயங்களெல்லாம் ரூஹுடன் சம்பந்தமாக இருக்கும். மானிடர்களுக்குரிய ரூஹுகள் அனைத்தும் ஒன்றாக இருப்பதால்; ரூஹின் பாஷையாகிய சுரியானிப் பாஷையிலேயே கேட்கப்படுமாதலால் இதனை விளங்காத ரூஹுகள் ஒன்றுமில்லை. ஆனால் அரபியில் சொல்வதைப் போலில்லாமல் ஒரே வார்த்தையில் சகல கேள்விகளும் பொதிந்ததாக கேட்கப்படும். அதாவது மலக்குகள் 'மராஜ்ஹு' என்று கேட்டவுடன் கேள்விக்கு பதிலுரைக்க தத்துவம் பெற்ற முஃமின் 'மராத் அஜிர்ஹு' என்ற பதிலைச் சொல்லுவான். இயலாதவன் கதி அதோகதியாகிவிடும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் கேள்வி-பதில்கள்"

சனி, 28 ஏப்ரல், 2012

பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’

இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு
பெரும் தலைவர்களான அம்பேத்கரும் பெரியாரும் மத மாற்றம் குறித்து
உரையாடியிருக்கிறார்கள். இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள்
மதத்தில் இருந்த வெளியேறி பௌத்தத்தைத் தழுவவேண்டும் என்றார் அம்பேத்கர்.
ஏன் பௌத்தம் என்பதற்கான காரணங்களை விரிவாகவும் ஆழமாகவும் அம்பேத்கர்
பதிவு செய்திருக்கிறார். மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த
காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கரைப் போல் அவர்
பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைக்கவில்லை. மாறாக, அவரது தேர்வு இஸ்லாமாக
இருந்தது என்று படித்திருக்கிறோம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது.
மதங்களை நிராகரித்து பகுத்தறிவை முன்வைத்த பெரியார், இஸ்லாத்தை ஏன்
தேர்வு செய்யவேண்டும்? இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே கிடையாதா? இஸ்லாத்தை
பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறதா?

இந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்னால், மதம் குறித்த பெரியாரின்
சிந்தனைகளும் செயல்பாடுகளும் எப்படி இருந்தன என்று பார்ப்போம். மதம்
பற்றிய பெரியாரின் பார்வை ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
முதலாவதாக, அவர் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் கடுமையான
விமரிசனத்துக்கு உள்ளாக்கினார். இரண்டாவதாக, புனித நூல்களை ஊடுருவிச்
சென்று உண்மை கண்டறிந்து, தோலுரித்தார். மூன்றாவதாக, மதம் முன்வைக்கும்
உலகப் பார்வையை விமரிசித்தார். மதத்தின் புனிதத்தன்மை பற்றியும், மதச்
சார்பின்மை பற்றியும் கேள்விகள் எழுப்பினார். நான்காவதாக, மத
நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம், கடவுள் நம்பிக்கை உருவான
பின்புலத்தையும் சித்தாந்தத்தையும் விமரிசித்தார். ஐந்தாவதாக,
சடங்குகளையும் விழாக்களையும் சம்பிரதாயங்களையும் சாடினார்.

அம்பேத்கரைப் போலவே பெரியாரும் இந்து மதக் கட்டுமானத்தையும் சாதியப்
படிநிலை அமைப்பையும் நிராகரித்தார். பார்ப்பனீயம் எப்படி அதிகாரத்தைக்
குவித்துக்கொண்டது என்பதையும் எப்படிப் பிற பிரிவினரை ஆதிக்கம் செய்கிறது
என்பதையும் குறித்து அவர் விரிவாக உரையாடினார். இந்து மதம்
வலுக்கட்டாயமாக தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது என்னும் முடிவுக்கு
பெரியார் வந்து சேர்ந்தார்.

ஆனால், இதற்கு தீர்வாக இந்து மதத்துக்கு மாற்றாக இன்னொரு மதத்தை
நிறுவவேண்டிய அவசியத்தை பெரியார் ஏற்கவில்லை. அம்பேத்கர் பௌத்தத்தை
ஏற்றது போல், வேறொரு மதத்தை ஏற்கவோ சிபாரிசு செய்யவோ பெரியார்
துணியவில்லை. ஒரு கடவுளுக்கு மாற்றாக இன்னொரு கடவுள் முன்னிறுத்தப்படுவதை
அவர் பகுத்தறிவு கொள்கை ஏற்கவில்லை. பெரியாரைப் பொருத்தவரை, மத
நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே ஓட்டை படகில்தான் பயணம் செய்கிறார்கள்.
ஒரு மனிதனுக்கு நிச்சயம் மதம் தேவைதானா? மதத்தை மனிதனிடம் இருந்து
பிரித்து எடுத்துவிட்டால் அங்கே ஓர் வெற்றிடம் உருவாகிவிடுமா? அதை எதைக்
கொண்டாவது நிரப்பியாகவேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு பெரியாரின்
பதில்:‘மதம் மனிதனுக்குத் தேவையற்றது!’ இது பெரியாரின் இறுதியும்
உறுதியுமான முடிவு என்று கொள்ளலாம்.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான புதிதில் பெரியார் இஸ்லாத்தின் மீது நாட்டம்
கொண்டிருந்தது உண்மை. செப்டெம்பர் 1929ல், கோயம்புத்தூர்,
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்
கலந்துகொண்டு உரையாற்றியபோது, இஸ்லாத்துக்குச் சாதகமான கருத்துகளை
வெளிப்படுத்தினார். ‘நான் ஒரு முஸ்லிமாக இறக்கவே விரும்புகிறேன்!’ என்று
அவர் பேசியதாகவும் ஒரு குறிப்பு இருக்கிறது.

அக்டோபர் 6, 1929 அன்று 69 ஆதி திராவிடர்கள் முகமதியர்களாக மதம்
மாறினார்கள். இது நடந்த சில தினங்களில், பெரியார் ஈரோட்டில் ஓர் உரை
நிகழ்த்தினார். அக்டோபர் 10 குடி அரசு இதழில் இந்த உரை முழுமையாக
இடம்பெற்றிருந்தது. இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்களுக்குச் சார்பாகவும்
இஸ்லாத்துக்குச் சார்பாகவும் பெரியார் தன் கருத்துகளை இதில்
முன்வைத்தார். நாம் பஞ்சமர்களாகவோ முஸ்லிம்களாகவோ மாறினாலொழிய நமக்கு
நீதியும் மரியாதையும் முன்னேற்றமும் கிடைக்காது என்று பிறிதோரிடத்தில்
பெரியார் பேசியிருக்கிறார். அவர் குறைந்த அளவு விமரிசனம் செய்த மதம்
இஸ்லாம் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

ஆனால், இஸ்லாமிய மதமாற்றத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கவில்லை என்பதையும்
நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதை ஓர் இயக்கமாகவும் போராட்டமாகவும்
பிரசாரமாகவும் அவர் உருமாற்றவில்லை. ஆதி திராவிடர்கள் மதம் மாறவேண்டும்
என்று 1935ல் அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது, பெரியார் அவருக்குத் தன்
ஆதரவை வெளிப்படுத்தினார். ஆனால், அம்பேத்கரைப் போல் மதமாற்றத்தை
முனைப்புடன் ஒருபோதும் அவர் மேற்கொண்டதில்லை.

1929ல் பெரியார் இஸ்லாத்துக்குச் சாதகமாக பேசியதற்கு வேறு வலுவான
காரணங்கள் இருக்கின்றன. அவருடைய உரையிலேயே அதற்கான விடையைத் தேடுவோம்.
‘சகோதரர்களே, 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய
பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு ‘மோட்ச லோகம்’
கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, ‘கடவுளோடு கலந்து விட்டார்கள்’
என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக்கொள்ளுவதும்
இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன்
மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன்
அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை… உலகத்தில்
உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.’

எனில் ஏன் அவர்களுடைய மதமாற்றம் பெரியாரை மகிழ்ச்சியடைய வைத்தது? ‘இந்து
மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும்,
பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு,
பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித் தனமுமான மிருகப் பிராயத்திலிருந்தும்,
அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே
மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் தொடர்கிறார். ‘69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி
ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற
முடியாது. அவர்களும் மற்றவர்களை ‘சாமி, சாமி, புத்தி’ என்று கூப்பிட்டுக்
கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து
கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை.
குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட
வேண்டியதில்லை.’

பெரியார் இந்து மதத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும்
சேர்த்தே விமரிசித்து வந்தார். இருந்தும் இந்து மதத்துக்கு நிகராகப் பிற
மதங்களை அவர் சாடாமல் இருந்ததற்குக் காரணம், வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் அவர் இந்து மதத்தின் தீமைகளை அதிகம் சந்திக்க
நேர்ந்ததுதான். உயர்வு, தாழ்வு பிரிவினைகள் அனைத்து மதங்களிலும் வெவ்வேறு
வடிவங்களில் இயங்கிவந்தாலும், அப்பட்டமான, மிருகத்தனமான தீண்டாமையை அதன்
முழுவடிவில் இந்து மதத்தில் மட்டுமே அவர் கண்டார்.

இந்தக் காரணத்தால் இந்து மதத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவர்
விடுதலையடைந்துவிட்டார் என்றே பெரியார் பொருள் கொண்டார். ‘இவர்கள்
பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும்,
சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு
விடுதலை அடைந்துவிட்டார்கள் என்பது போன்றவற்றை நினைக்கும்போது
மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனென்றால், தீண்டாமை, நெருங்காமை,
பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக
மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால்
உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே
இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.’

பெரியார் தொடர்கிறார். ‘தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற
கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும்
கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும்
என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய
வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும்
என்பது, எனது தாழ்மையானதும், கண்ணிமானதுமான அபிப்பிராயம்.’

மதம் மாறுவதற்கு இந்து மதத்தின் தீண்டாமை ஒரு வலுவான காரணம் என்பதை ஏற்க
முடிகிறது. ஆனால் எதற்காக இஸ்லாம்? கிறிஸ்தவத்துக்கோ பௌத்தத்துக்கோ
சமணத்துக்கோ மாறலாமே? ‘சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை
உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால்,
தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு
செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம்
முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள்
இனிமேலாவது இவ்வளவு தாழ்மையான நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா?
மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய்
நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?’

மிக மிக நேரடியான ஒரு விளக்கம் இது. தீண்டப்படாதவர்கள் அவ்வாறு
நீடித்திருப்பதற்குக் காரணம் அவர்களுடைய பலவீனம். இந்த சுபாவத்தை
மாற்றவேண்டுமானால் போராட்ட குணம் தேவை. பௌத்தமும் சமணமும் கிறிஸ்தவமும்
அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிப்பவை. எனவே, பெரியார் இஸ்லாத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். அப்படியென்றால் பெரியார் இஸ்லாத்தை
முரட்டுத்தனமான மதம் என்று சொல்கிறாரா? இல்லை.‘ஒடுக்க முடியாத,
தாழ்மையும் இழிவையும் ஒப்புக் கொள்ள இஷ்டமில்லாத தைரிய சுபாவம்’
இஸ்லாத்தில் இருக்கிறது என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறார்
பெரியார்.

அந்த வகையில், பெரியார் இஸ்லாமிய மதமாற்றத்தை முன்வைத்தார் என்பதைவிட
தீண்டப்படாதவர்களின் ‘சுபாவ மனமாற்றத்தை’ முன்வைத்தார் என்று சொல்வதே
பொருத்தமாக இருக்கும். அந்த 69 ஆதிதிராவிடர்களும் இந்து மதத்தை விட்டு
வெளியேறினார்கள் என்பது பெரியாரின் முதல் மகிழ்ச்சி. இரண்டாவது
மகிழ்ச்சி, ‘துணிச்சல் சுபாவத்தோடு’ அடையாளப்படுத்தப்படும் இஸ்லாத்தை
அவர்கள் தழுவிக்கொண்டார்கள் என்பது. கட்டுரையின் தொடக்கத்தில்
எழுப்பப்பட்ட கேள்விக்கான விடை இதுவே.

தன் உரையை நிறைவுசெய்யும்போது பெரியார் தன் கருத்தை கூர்மையாகவும்
தெளிவாகவும் முன்வைக்கிறார். ‘அந்த சுபாவம் (தைரியம்) இப்போதுள்ள
தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு வந்து விட்டால் கூடப் போதுமானது
என்றும் மதம் மாற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லலாம். ஆனால், அவர்கள்
இந்துக்களாக இருக்கும் வரை சுலபத்தில் அவர்களுக்கு அந்தச் சுபாவம் வராது
என்பதோடு, மேல் வகுப்புக்காரர்கள் என்பவர்கள் சுலபத்தில் வரவிட
மாட்டார்கள் என்றே சொல்லுவேன்.’

0இந்து மதத்தையும் பார்ப்பனீயத்தையும் கடுமையாக விமரிசனம் செய்த இரு

அம்பேத்கர் : ‘ஆகவே, மதம் மாறுங்கள்!’

0அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை
இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக
இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே
விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர்
தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள்
முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ,
அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள்
அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு
கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை
முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை
உள்வாங்கிக்கொள்வதுதான்.

‘மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது பொழுதுபோக்கிற்கான
செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது
என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி
எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத்
தயார்படுத்திக் கொள்ள வேண்டும்… உங்களில் எத்தனை பேர் இந்து
மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான்,
மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப்
பற்றி புரிந்துகொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம்
குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.’

பம்பாயில் 1936ம் ஆண்டு, மே மாதம் 30,31 இரு தினங்களிலும் நடைபெற்ற
மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை இப்படித்தான் தொடங்குகிறது. இந்த
உரையின் நோக்கம் இரண்டு. முதலாவதாக, தீண்டத்தகாத மக்களிடம் அவர்கள்
நித்தம் நித்தம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான மூலக்காரணத்தை
விளக்குவது. இரண்டாவது, அந்த மூலக்காரணத்தைத் தகர்த்து எறிவதற்கான
வழிமுறையைச் சொல்லித் தருவது.

இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால்,
இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள்
ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும்
பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல்
அப்படியே நீடிக்கின்றன?

‘சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதம் என்றுமே
மாற்றமுடியாத ஒன்றாகும். காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில்
மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து
மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான்
இருக்கமுடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையில்
நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே
இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி
சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.’

ஒரு போராட்டத்தைச் சந்திக்க மூன்று பலம் தேவை. மனித ஆற்றல், நிதிபலம்
மற்றும் அறிவு வலிமை. பம்பாய் மாகாணத்தில் தீண்டத்தகாதவர்கள் மொத்த
மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கே இருந்த நிலையில், அவர்கள் ஓரணியாகத்
திரண்டு, அதாவது மனித ஆற்றலைக் கொண்டு போராட முடியாது. பொருளாதார
ரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் அவர்களால் நிதிபலத்தையும்
திரட்டமுடியாது. நீதிமன்றங்களை அணுகி, வாதாடி நீதி பெறுவதற்கான
வாய்ப்பும் இல்லை. ‘ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள்மீது
இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி
இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையையும் துளியளவும்
எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.’

மூன்றாவது பலத்தையும் அம்பேத்கர் பரிசீலித்தார். ‘அறிவாற்றலைப்
பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின்
இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு,
வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை, அவர்களிடையே கிளர்ந்தெழும்
போர்க்குணத்தை மழுங்கடித்துவிட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு
முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்துவிட்டது. நீங்கள் எல்லாம்
ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.’

மூன்று அத்தியாவசிய பலங்களையும் இழந்துவிட்ட நிலையில்
தீண்டத்தகாதவர்களின் கதி என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்,
அம்பேத்கர் இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். தீண்டத்தகாத
இந்துக்கள்சிறுபான்மையினராகவும் பலமற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது
உண்மை. ஆனால், மகர், மாங் மக்களைப் போலவே முஸ்லிம்களும்தானே
சிறுபான்மையினர்? அவர்கள் ஏன் இந்துக்களால் தாக்கப்படுவதில்லை?‘ஒரு
கிராமத்தில் இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க
எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள்மீது வன்மையான தாக்குதலைத்
தொடுக்கிறதே. ஏன் இந்த நிலை?’

இந்துக்களுக்குத் துணிவில்லை என்றார் அம்பேத்கர். ‘இந்த இரு முஸ்லிம்
குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன், அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
ஏனென்றால், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை
வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க
அணிதிரளுவார்கள் என்று உறுதியாக அவர்கள் நம்புகின்றனர். ஆனால்,
உங்கள்மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர
மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர்.’

இந்த இடத்தில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
மீண்டும் மீண்டும் தலித் மக்கள் சாதி இந்துக்களால் தாக்கப்படுவது ஏன்?
அவர்களைக் காக்க ஏன் யாரும் முன்வரவில்லை? ‘காரணம், தாசில்தாரும்
போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும்
தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்னை என்றால், அவர்கள் தாங்கள்
பணிசெய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக
இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி
இழைக்கிறார்கள். உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர்.’

இதிலிருந்து தப்பவேண்டுமானால், பலமற்றவர்கள் ‘வெளியில் இருந்து பலத்தைப்
பெற்றாகவேண்டும்’ என்கிறார் அம்பேத்கர். ‘வேறு சமூகத்துடன் நீங்கள்
நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளாமல், வேறு மதங்களில் நீங்கள் உங்களை
இணைத்துக்கொள்ளாமல், வெளியிலிருந்து நீங்கள் பலத்தைப் பெறமுடியாது…
உங்களுக்கு வலிமை இல்லாதவரை, நீங்களும் உங்கள் எதிர்காலத் தலைமுறையும்
இதே போன்ற துன்பகரமான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’

அம்பேத்கர் தொடர்கிறார். ‘இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான
மக்கள் அல்ல. இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும்
கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையில் இருந்து
நாம் விடுபடவேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து
மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத்
தகர்த்தெறிய வேண்டும்.’

ஏன் தகர்க்கவேண்டும்? சீர்திருத்த முடியாதா? தீண்டாமையை அகற்றிவிட்டு,
சாதிகளை ஒழித்துவிட்டு, ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்துவிட்டு, இந்து
மதத்திலேயே தொடர்ந்து நீடிக்கமுடியாதா? காந்தி சொன்னது போல் சாதி
இந்துக்களின் மனத்தை மாற்றமுடியாதா? ‘இந்து சமூகத்தைச் சீர்திருத்துவது,
நம்முடைய நோக்கமோ, செயல் திட்டமோ அல்ல. நம்முடைய நோக்கம் சுதந்தரம்
பெறுவது. வேறு எந்த வேலையும் நமக்கில்லை. நாம் மதமாற்றத்தின் மூலம்
சுதந்தரத்தை அடைய முடியும் எனில், இந்து மதத்தைச் சீர்திருத்தும்
பொறுப்பை ஏன் சுமக்கவேண்டும்? நம்முடைய பலத்தையும் உடைமைகளையும் நாம் ஏன்
இதற்காகத் தியாகம் செய்யவேண்டும்?… நம் நோக்கம் தீண்டத்தகாத மக்களுக்கு
சமூக விடுதலையைப் பெற்றுத் தருவதே ஆகும். மதம் மாறாமல் நாம் இந்த
விடுதலையைப் பெறவே முடியாது.’

ஒரு பேச்சுக்கு, இந்து மதத்தில் இருந்துகொண்டே அதனைச் சீர்திருத்துவோம்
என்று வைத்துக்கொண்டாலும், முதலில் சதுர்வர்ணத்தை ஒழித்தாகவேண்டும்.
பிறகு, பார்ப்பன மதம் வேரறுக்கப்படவேண்டும். இதெல்லாம் சாத்தியமா? ‘இல்லை
எனில், இந்து மதத்தில் இருந்து கொண்டு சமத்துவத்தை எதிர்பார்ப்பது
விவேகமாகுமா? இதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள்
வெற்றி பெறுமா?’

எந்த மதத்துக்கு மாறுவது? கிறிஸ்தவமா? இஸ்லாமா? அவற்றில் சாதிகள்
இல்லையா? ஏற்றத்தாழ்வுகள் இல்லையா? ‘இருக்கிறது என்றாலும் அது
இந்துக்களிடையே கடைபிடிக்கப்படுவது போலுள்ளது என்று சொல்வது சிறுபிள்ளைத்
தனமானது… இந்துக்களின் சாதி அமைப்புக்கு மத அங்கீகாரம் உள்ளது. பிற
மதங்களில் இருக்கும் சாதிகளுக்கு அந்த மதங்களின் அங்கீகாரம் கிடையாது.
மதத்தை ஒழிக்காமல் இந்துக்களால் சாதியை ஒழிக்கவே முடியாது. சாதியை ஒழிக்க
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் மதத்தை ஒழிக்க வேண்டிய அவசியம்
இல்லை. இதற்கு மாறாக, சாதிகளை ஒழிக்க இவர்களின் மதங்களே பெரிதும் துணை
நிற்கும்.’

தன் உரையை அம்பேத்கர் இப்படி நிறைவு செய்கிறார். ‘இந்து மதம் என்
மனசாட்சியை ஈர்ப்பதாக இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளிப்பதாக
இல்லை… மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன் என்பதல்ல. மனிதத்
தன்மை கிடைக்க வேண்டும் எனில், மதம் மாறுங்கள். ஒருங்கிணைவதற்கு மதம்
மாறுங்கள். வலிமையாகத் திகழ மதம் மாறுங்கள். சமத்துவத்தை அடைய மதம்
மாறுங்கள். விடுதலைக்காக மதம் மாறுங்கள். வீட்டில் மனமகிழ்வுடன் இருக்க
மதம் மாறுங்கள்… உங்களுக்கு எது நல்லது என்று சொல்வது என் கடமையாகும்.
என் கடமையை நான் செய்யவேண்டும். இப்பொழுது அதை நான் செய்து விட்டேன்.
இனி, முடிவெடுத்து கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு.

                                                அம்பேத்கரா காந்தியா

‘ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஒரு காந்தியும் அம்பேத்கரும்
மேலாதிக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்கள்.’ ராமச்சந்திர குஹாவின் இந்த
வாக்கியம் உண்மையானது. ஆனால், தன் கட்டுரையை  நிறைவு செய்யும்போது அவர்
முற்றிலும் எதிரான திசையில் நகர்ந்து செல்கிறார். அம்பேத்கரும்
காந்தியும் ‘அவர்கள் வாழ்ந்த காலத்தில், அரசியல் ரீதியில்
ஒருவருக்கொருவர் எதிரானவராக இருந்தனர். பல பத்தாண்டுகள் கழிந்த நிலையில்,
இன்று நாம் அவர்கள் பங்களிப்பை ஒன்றை நிறைவு செய்ய இன்னொன்று என்ற
வகையில் அணுகமுடியும்.’ ராமாயணத்துக்கு ஒரு கதாநாயகன் இருந்தால் போதும்.
‘வரலாற்றுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை. தலித் விடுதலையின்
வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. அதில் எழுதப்படாத பாகங்கள் பல உள்ளன. பல
கதாநாயகர்களுக்கு அங்கே இடம் இருக்கிறது.’

அதாவது, தலித் விடுதலை வரலாற்றில் அம்பேத்கருக்கு உரிய இடம் இருப்பது
போல், காந்திக்கும் ஓரிடம் உண்டு என்கிறார் ராமச்சந்திர குஹா. அல்லது
கொடுக்கப்படவேண்டும் என்கிறார். இடம் கொடுப்பதைப் பற்றிப் பின்னர்
யோசிப்போம். அதற்கு முன்னால், காந்தியையும் அம்பேத்கரையும் ஒரு
புள்ளியில் குவிப்பது சாத்தியமா என்பதைப் பார்க்கலாம். ராமச்சந்திர குஹா
மட்டுமல்ல, பல காந்தியவாதிகள் இந்த இணைப்பைப் பற்றிப்
பேசியிருக்கிறார்கள். எதிரெதிரான கருத்துகளும் கொள்கைகளும்
கொண்டிருந்தாலும் அடிப்படையில் இருவரும் ‘தேச நலனுக்காக’ உழைத்தவர்களே
என்றும் ‘தீண்டாமைக்கு’ எதிராகப் போராடியவர்களே என்றும் ‘தலித்
விடுதலைக்காகக்’ கனவு கண்டவர்களே என்றும் நிரூபிக்க இவர்கள் முயன்று
வருகிறார்கள்.

காந்திக்கு நிகரானவராக அம்பேத்கரை நிறுத்துவதில் இவர்களுக்குச்
சிக்கல்கள் எதுவுமில்லை. ஆனால், அம்பேத்கருக்கு நிகராக காந்தியைக் கட்டி
எழுப்புவதில் பல சங்கடங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ‘தலித் விடுதலை
வரலாற்றில் இடம் கொடுப்பது’ சம்பந்தமான விஷயம். தீண்டப்படாதவர்களின்
விடுதலைக்கான அம்பேத்கரின் முனைப்பும் காந்தியின் முனைப்பும் ஒன்றா?
தீண்டப்படாதவர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையும் காந்தியின்
பார்வையும் ஒன்றா? அவர்கள் இந்நிலைக்கு ஆளானதற்கான காரணங்களை
அம்பேத்கரும் காந்தியும் ஒன்றுபோல் புரிந்துகொண்டார்களா? இந்த நிலை
மாறவேண்டும் என்று இருவரும் ஒன்றுபோல் சிந்தித்தார்களா? என்ன மாற்று
என்பது குறித்து இருவரிடையே கருத்து ஒற்றுமை நிலவியதா?

ஆம் என்று திட்டவட்டமாக காந்தியவாதிகளால் சொல்லமுடியாது என்பதால் அவர்கள்
ஒரு மாற்று உபாயத்தைக் கையாள்கின்றனர். காந்தியை அம்பேத்கர் அளவுக்கு
உயர்த்தமுடியாது என்பதால் அம்பேத்கரை காந்தி உயரத்துக்குக்
குறுக்கிவிடுகிறார்கள். அம்பேத்கரின் உயரம் இதுதான் என்று நிர்ணயிப்பது.
பிறகு காந்தியை அருகில் நிற்க வைத்து, பாருங்கள் இருவரும் ஒன்றுதான்
என்று முழங்குவது. முடிந்தால் இன்னும் சில படிகள் முன்னேறி, அம்பேத்கர்
தலித்துகளுக்காக மட்டுமே பாடுபட்டார், ஆனால் காந்தி ஒட்டுமொத்த
இந்தியாவுக்காகவும் உழைத்தார் என்று அறைகூவல் விடுப்பது. அம்பேத்கரை
தலித் குழுவின் தலைவராக மட்டும் குறுக்கிக் காட்டுவது. அதன்மூலம், தலித்
வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களில் காந்தியைப் போட்டு நிரப்புவது.

அம்பேத்கர் ஓரிடத்தில் (The Annihilation of Caste) தனக்கும்
காந்திக்கும் இடையில் உள்ள ஓர் அடிப்படை வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார்.
‘நான் சாதி அமைப்பைத் தகர்த்தெறிய விரும்பினேன். காந்தி அந்த அமைப்பைச்
சீர்திருத்த விரும்பினார்.’ கடவுளின் குழந்தைகளைச்
சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களை ஒதுக்கிவைக்காதீர்கள் என்று சாதி
இந்துக்களிடம் இறைஞ்சுவதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை
காந்தியால். அம்பேத்கர் அவர்களை இந்துக்களின் பிடியில் இருந்தும்
சாதியின் பிடியில் இருந்தும் விடுவிக்கத் துடித்தார். காந்தி தனது
குழந்தைகளைக் கடைசிவரை குழந்தைகளாகவே வைத்துக்கொள்ள விரும்பினார்.
அம்பேத்கர் அவர்களுடைய அறியாமையையும் பிற்போக்குத்தனத்தையும் களைய
விரும்பினார். இறந்த விலங்குககளை உண்ணாதீர்கள், இந்துக்களின் கடவுள்களை
வணங்காதீர்கள், இந்துக்களின் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று
எச்சரித்தார்.

இந்தியர்களை மீட்டெடுக்க ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியாக காந்தி
பிரிட்டிஷிடம் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களின்
பிரதிநிதியான அம்பேத்கர், சாதி இந்துக்களிடம் இருந்து தலித் மக்களை
மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல்
உரிமை வழங்காமல், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், சுயமரியாதை உணர்வைத்
தட்டியெழுப்பாமல் அவர்களை இழிநிலையில் இருந்து மீட்கமுடியாது என்று
அம்பேத்கர் உணர்ந்திருந்தார். தனி வாக்குரிமையும் வகுப்புவாரி
பிரதிநிதித்துவமும் வேண்டும் என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.
அதெல்லாம் தேவையில்லை, கடவுளின் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன்
இணைந்திருக்கட்டும் என்றார் காந்தி. அவர்களைத் தனியே பிரிக்கவேண்டாம்
என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்வது தன்னைக்
காயப்படுத்துகிறது என்றார். தன் உயிரைக் கொடுத்தேனும் அவர்கள்
வெளியேற்றத்தைத் தடுப்பேன் என்றார்.

நான் ஒட்டுமொத்த இந்தியர்களின் விடுதலையை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்
என்றார் காந்தி. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிடியில் இருந்து
தாழ்த்தப்பட்டவர்களை மீட்பதே என் லட்சியம் என்றார் அம்பேத்கர். தீண்டாமை
ஒரு நோய், எப்பாடுபட்டாவது அதை அகற்றவேண்டும் என்றார் காந்தி. இந்த எளிய
ஒப்புதலுக்கே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். அதெப்படி சாதி இந்துக்களை
நீங்கள் குற்றவாளியாக்கலாம் என்று எதிர் கேள்விகள். இந்து மதத்தை
அழிக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது. சாதி ஒழியாதவரை தீண்டாமை ஒழியாது
என்றார் அம்பேத்கர். நீங்கள் நோயைக் குணப்படுத்த விரும்பவில்லை, அதன்
அறிகுறிகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்கிறீர்கள் என்று பதிலளித்தார்
அம்பேத்கர்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றென்றைக்கும் சாதி இந்துக்களின் கருணையை
எதிர்நோக்கியே வாழவேண்டும் என்பது காந்தியின் கோட்பாடு. இந்து மதத்தை
நீங்கள் துறக்கக்கூடாது என்று நெகிழ்ச்சியுடன் காந்தி வேண்டிக்கொண்டபோது
அவருடைய பக்கச் சார்பு பளிச்சிட்டது. அம்பேத்கர் காந்திக்குப்
பொருத்தமாகவே விடையளித்தார். ‘இரண்டாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
துன்புற்றுகிடக்கிறோம். எத்தனையோ மகான்கள் வந்து போயிருக்கிறார்கள்.
ஆனால், இந்து மதத்தின் அடிப்படைகள் மாறவில்லை.’ இந்நிலையில் எந்த
நம்பிக்கையில், யாருக்காக நாங்கள் காத்திருப்பது?

நான்கு வர்ண சாதி அமைப்பை இறுதிவரை காந்தி விட்டுக்கொடுக்கவில்லை.
தீண்டாமை என்பது இந்து மதக் கட்டமைப்போடு இணைந்திருக்கும் சமாசாரமல்ல,
தனியாகத் துருத்திக்கொண்டு நிற்கும் ஓர் அருவருப்பான பாகம் என்று காந்தி
கருதினார். இந்து மதத்தின் ஓரங்கமாக இருந்துகொண்டு, இந்து மதக்
கடவுள்களைத் தொழுதுகொண்டு, இந்து மதக் கோட்பாடுகளைப் புகழ்ந்துகொண்டு
அப்படியே தீண்டாமையையும் அகற்றிவிடலாம் என்று காந்தி நம்பினார். தீண்டாமை
இந்து மதத்தின் பிரிக்கமுடியாத ஓரங்கம் என்பது அம்பேத்கரின் பார்வை.

இந்து மதத்தின் கேடுகளை அம்பேத்கர் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். 1)
அறம் சார்ந்த சுதந்தரத்தை அது (இந்து மதம்) மறுதலிக்கிறது. 2) கீழ்படிதலை
மட்டுமே முன்மொழிகிறது. 3) அதன் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் இல்லை.
4) அதன் கோட்பாடுகள் இறுதியானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை. சுருக்கமாகச்
சொல்லவேண்டுமானால் ‘இந்துக்கள் மதம் என்று சொல்லிக்கொள்வது எண்ணற்ற
கட்டளைகளையும் தடையுத்தரவுகளையும்கொண்ட ஓர் அமைப்பேயாகும்.’ (புத்தரும்
அவர் தம்மமும்.)

காந்திய வழியில் தீண்டாமையை அகற்றமுடியாது என்று தெளிவாகவே
குறிப்பிட்டார் அம்பேத்கர். ‘இந்தியாவில் பல மகாத்மாக்கள்
இருக்கிறார்கள். தீண்டாமையை ஒழிப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி
அவர்களை உள்இழுத்துக்கொள்வதையும் தங்கள் நோக்கமாக அவர்கள்
கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
மகாத்மாக்கள் வந்தார்கள், சென்றார்கள் ஆனால் தீண்டத்தகாதவர்கள்
தீண்டத்தகாதவர்களாகவே நீடிக்கிறார்கள்.’

இந்து மதத்தை ஒரு மதமாக மட்டும் கருதாமல், அதை அனைவருக்கும் பொதுவான ஓர்
அரசியல் கருத்தாக்கமாகவும் உருமாற்ற காந்தி முயன்றார். காந்தியின்
‘ஹிந்து சுவராஜ்’ ராமர் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பியது. நேர்
எதிராக, அம்பேத்கர், ‘சமூக வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை’ ஏற்படுத்தும்
ஜனநாயகத்தைக் கொண்டுவர விரும்பினார்.

அரசியலில் மதத்தையும் மதத்தில் அரசியலையும் இணைத்ததில் காந்திக்கு
நிச்சயம் ஓர் இடம் உண்டு. மதத்தின் அரசியலையும் அரசியலில் உள்ள
மதவாதத்தையும் வெளிப்படுத்தியதில் அம்பேத்கர் முதன்மையானவராகத்
திகழ்கிறார்.

எப்படிப் பார்த்தாலும், எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் அம்பேத்கரும்
காந்தியும் எதிரெதிரான திசையில்தான் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது
புலனாகிறது. இந்நிலையில், எந்த அடிப்படையில் இருவரையும் ஒன்றிணைப்பது?
ஏன் ஒன்றிணைக்கவேண்டும்? அவ்வாறு செய்வதை இந்த இருவரும் ஏற்பார்களா?

காந்தியும் அம்பேத்கரும் அல்ல. காந்தியா அம்பேத்கரா என்பதுதான் கேள்வி.
நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

நந்தன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "பெரியார் : ‘முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!’"

கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்

ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்புக்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.

நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.

இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்.

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.

இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).

இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.

சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.

ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.

இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாகா திரும்பியிருக்கிறது.

இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.

இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்த பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது? டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?

குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?

ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.

உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.

ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.

கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.

தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.

ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.

பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்"

கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்..

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
 கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.
 * குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை...?
 * கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன..?
 * குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி..?
 * குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன..?
 * வரவு, செலவை வரையறுப்பது எப்படி..?
 குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை....?
  1. வருமானம்.
  2. ஒத்துழைப்பு.
  3. மனித நேயம்.
  4. பொழுதுபோக்கு.
  5. ரசனை.
  6. ஆரோக்கியம்.
  7. மனப்பக்குவம்.
  8. சேமிப்பு.
  9. கூட்டு முயற்சி.
  10. குழந்தைகள்.

 கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
  1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
  10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
  11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
  12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
  13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
  14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
  15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
  16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
  17. ஒளிவு, மறைவு கூடாது.
  18. மனைவியை நம்ப வேண்டும்.
  19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
  20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
  21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
  22.  தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
  23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
  24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
  25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
  26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
  27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
  28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
  29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
  30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.
  31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
  32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
  33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
  34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
  36. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
  37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

 மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?
 1. பள்ளி, அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
 3. எப்போதும் சிரித்த முகம்.
 4. நேரம் பாராது உபசரித்தல்.
 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்கூடாது.
 8. அதிகாரம் பண்ணக்கூடாது.
 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
 11. கணவனை சந்தேகப்படக்கூடாது.
 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக்கூடாது.
 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
 14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்து பேசக்கூடாது.
 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.
 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.
 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
 22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேசவேண்டும்.
 25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
 26. குழந்தையை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
 27. சுவையாக சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
 32. உடம்பை சிலிம் ஆக வைத்து கொள்ள வேண்டும்.

 பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி...?

 தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.

  1. சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். 2.படிப்பில், அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
  2. குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டு விடவும் கூடாது.
  3. குழந்தைகளுக்கு அன்புப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப்படுத்தவேண்டும்.
  4. ’நீ ராசா அல்லவா..? ராசாத்தி அல்லவா..?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும்.
  5. “மக்கு,மண்டு,மண்டூகம்” போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
  6. பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

 மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது.....?

 பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக 'டிக்' செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
 3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.
 4. விரும்பியதை பெற இயலாமை.
 5. ஒருவரையொருவர் நம்பாமை.
 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
 9. விருந்தினர் குறைவு.
 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.
 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
 13. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.
 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

 உங்கள் பங்கு என்ன...?

 உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து, இல்லாததை கொண்டு வர வேண்டும்.

 1. அன்பாகப் பேசுவது.
 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
 4. குறை கூறாமல் இருப்பது.
 5.சொன்னதை செய்து கொடுப்பது.
 6. இன்முகத்துடன் இருப்பது.
 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
 8. பிறரை நம்புவது.
 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
 10. பணிவு.
 11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
 12. பிறர் வேலைகளில் உதவுவது.
 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
 15. சுறுசுறுப்பு.
 16. சிறிய விசயங்களைக் கூட பாராட்டுவது.
 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
 18. நகைச்சுவையாக பேசுவது.
 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
 21. நேரம் தவறாமை.
 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
 23. தெளிவாகப் பேசுவது.
 24. நேர்மையாய் இருப்பது.
 25. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பது.

 எதற்கும் யார் பொறுப்பு.....?

 நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு.
 அன்றாடம் அனேகம் பேரை சந்திக்கிறோம். உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா..?
 பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன.
 விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை..?

 நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற, பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்து கொள்ள பத்து கட்டளைகள்.

 பத்து கட்டளைகள்.

 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
 3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
 4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாக செயல்படுங்கள்.
 6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.
 8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
 9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.
 10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

 “வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்”
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.."

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

சகோதர சகோதரிகளே

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது �அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்�. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர். அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு:

�நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்தணும்���என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

�முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது�?�� என நாம் முடிக்கும் முன்பே�
��இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..��சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்..

�சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே� இதில் என்ன பிரச்சினை?�� என்றோம்.
அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.
�அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்� இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி� எங்களுக்கே தெரியாமல்� எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி� இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு� அதிர்ந்துபோய்� எனக்குத் தகவல் சொன்னார். கூடவே �நக்கீரன்ட்ட உதவி கேள்�னும் சொன்னார். அதான் வந்தேன்��என்று நம்மை அதிரவைத்த வர்� அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்� அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை கவனித்தோம்.
கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்� அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு� பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்� அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.

உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்�
நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.
பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ� ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு� ��இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.

முதல் வகை� நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா� யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க� நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், �உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்�னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்��என்றார் விரிவாக.

பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள் குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ��பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான் உலவிக்கிட்டு இருந்தப்ப� �எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல் மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்�னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில் உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்� படத்தைப் பார்த்தே� கிளுகிளு உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த ஐ.எஸ்.ஐ. எண்ணில் தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலே �என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர் சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு� என்றவள்�. தன் உடல் பாகங்களை வர்ணித்து� அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள். இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம் வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ் ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம் புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை ஐ.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க. என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி� பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம் பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ�� என்றார் எரிச்சலாக.

வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ��சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ� அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா� அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்� இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்� அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்� என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது��மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக்கிறோம்�� என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்�. உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம்.
இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ� ��வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா� டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல்.
ஆக,
ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை �செக்� பண்ணணும்.
நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம்� ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,
நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே �டெலிவர்டு� ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.

சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து �லாக்� பண்ணிவிட வேண்டும்.� என்று உஷார்படுத்துகிறார் அவர்.
நன்றி : நக்கீரன்
சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள். இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள். தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ / காதலியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின் விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்"

தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்

தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்
டாக்டர் கா.மு. பாதுசா.

''புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே''
என்று பேதை ஒருவன் சொன்னதாக பாரதி பாடியதை நாம் திரும்பவும் நினைவு கூர வேண்டியுள்ளது. அங்கே அறிவியலும் சமூக அறிவியலும் ஒரு சேர வளர்கின்றன. இங்கே அதற்கான ஆயத்த வேலைகள் இன்னும் ஆரம்பமானதாகத் தெரியவில்லை.

அந்த வகையில் இனம் தொடர்பான ஒரு புது ஆய்வு நெறியை இக்கட்டுரை வழி தொடங்குகிறோம். நாம் சிறுபான்மையினர் என்பதும் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் என்ற அளவில் எவ்வளவு பேர் உள்ளோம் என்பதை தேர்தல் காலங்களில் அறிவது என்பதும் இதுவரையில் உள்ள ந�முறை.

முஸ்லிம் இனம் குறித்த இந்தப் புள்ளி விவரங்களோ தகவல்களோ மட்டும் போதாது. இனம் பற்றிய தகவல்கள் புவியியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். Ethno எனப்படும் இனம் குறித்த ஆய்வையும் Geography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்ந்து Ethnogeography எனப்படும் நிலவியல் பற்றிய இயலையும் ஒன்று சேர்த்து Ehnogeography எனப்படும் சமூகஅறிவியல் துறை வாயிலாகத் தமிழ் முஸ்லிம்களின் Cartographyயைத் தயாரிப்பதே நமது நோக்கம்.

இந்த Cartography யை எப்படித் தயாரிப்பது என்பதைக் காண்போம். கோதுமை, நெல், பருத்தி, கரும்பு போன்ற பயிர்கள் எந்தெந்தப் பகுதியில் அதிகம் விளைகின்றன என்பதைப் புவியியல் வரைப்படத்தில் தெளிவாகக் குறித்துக் காட்டுகிறோம். அதுபோல புவியியலில் பச்சை நிறம் சமவெளியையும், மஞ்சள் நிறம் பீடபுமியையும், வெளிர் அரக்கு மலைகளையும், அடர் அரக்கு உயரமான சிகரங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய குறியீடு எல்லா வகையான ஆய்வுகளுக்கும் உதவுகிறது.

மக்கள் நெருக்கத்தையும் நெருக்கமற்றதையும் குறித்துக் காட்டுகிறோம். இந்த அடிப்படையில் தமிழ் முஸ்லிம்களின் நிலை கொள்ளலை வரைபடத்தில் காட்டுவதே இதன் நோக்கம்.

கீழக்கரை, காயல்பட்டினம், அதிராமப்பட்டினம், நாகூர் போன்ற கடலை ஒட்டிய நகரங்களிலும் தஞ்சை, நெல்லை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் பல இடங்களிலும் தமிழ் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்கின்றனர். சில வட்டங்களில் நூற்றுக்கும் குறைவாக உள்ளனர். குறிப்பிட்ட ஓர் ஆண்டை கால எல்லையாகக் கொண்டு நிலை கொண்டிருத்தலின் மாறுபட்ட அளவுகளைப் பல்வேறு வர்ணங்களின் வாயிலாகக் குறித்துக் காட்டுகிறோம். மக்கள் தொகைக்கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டுக்கொரு முறை தேவைப்படுவது போல, தமிழ் முஸ்லிம்களின் cartography பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தயாரிக்கப்படல் வேண்டும்.

படம் தயாரித்தலோடு நம் பணி நின்று விடுவதில்லை. நெருக்கத்திற்கும் நெருக்கம் குறைவிற்கும் உண்டான காரணங்களைக் கண்டறிய வேண்டும். பத்தாண்டுக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நுணுக்கமாகக் கண்டறிதல் இயலும். நம் கவனத்திற்கு வராமலேயே கணக்கற்ற மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடியும்.

மாதிரிக்கு ஒன்றை எடுத்துக்காட்டலாம். கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பு பரமக்குடியைச் சுற்றிய கிராமப்புறங்களில் வசதியாக வாழ்ந்து வந்த ஆயிரவைசிய செட்டியார்கள் குடிவாரம், இனாம் ஒழிப்பு போன்ற நிலச்சட்டங்கள் காரணமாக விவசாயத்தைத் தொடர்ந்து நடத்திட இயலாது நிலங்களை வந்த விலைக்கே விற்று விட்டுப் பரமக்குடியில் குடியேறித் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். வளர்ச்சியும் வாழ்க்கையும் நன்றாகவே இருந்தன. எனினும் யாருக்காகக் கிராமப்புறத்தைவிட்டு வெளியேற நேர்ந்ததோ அதே மக்கள் இவர்களைத் தொடர்ந்து பரமக்குடியில் குடியேறத் தலைப்பட்டனர். எனவே மீண்டும் நெருக்கடியைச் சந்திக்க விரும்பாத ஆயிரவைசிய மக்கள் மதுரையைத் தேர்ந்தேடுத்து அங்கு வாழ முற்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

அதேவேளை, கீழக்கரை சார்ந்த முஸ்லிம் பெருமக்கள், வணிகத்தின் பொருட்டுச் சென்னை போன்ற இடங்களுக்குச் சென்றாலும் குடும்பங்களைக் கீழக்கரையிலேயே நிலை கொள்ளச் செய்திருப்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

அமெரிக்க வரலாற்றில் Westward Movement எனச் சிறப்பாகச் சொல்லப்பட்ட நிகழ்வு போன்று எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் பல்வேறு காரணிகளால் மக்களின் இடப்பெயர்ச்சி நடைபெறவே செய்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாது இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களையும் உள்ளடக்கியதாக அப்பட்டங்கள் அமையும். இவற்றோடு தமிழ் முஸ்லிம்களில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்ற பிரிவினர் எங்கெங்கே எந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதை வரைபடத்தில் உடன் காண முடியும்.

தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றை அறியும் களனாகத் திகழும் புவியியல் அமிசத்தையும் மக்களின் பொருளாதார நடவடிக்கையையும் அப்படங்களின் வழி அறியலாம். என்னென்ன காரணிகளுக்காகக் குறிப்பிட்ட பகுதிகளை வாழ்வதற்குரிய இடங்களாகத் தெரிவு செய்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

கமுதி, அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், இளையாங்குடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த நம்மக்கள் வியாபார நிமித்தம் இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர். அன்றாடப் போக்கில் இது பெரிதாகத் தெரியாது போகலாம். ஆனால் அரைநூற்றாண்டுக் காலத்திற்குப் பிறகு இந்தக் குடிப்பெயர்ச்சி எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொணர்ந்திருக்கிறது என்பது கண்டு வியப்புற நேரிடும்.

ஆதி மனிதன் நதிக்கரையில் என்ன காரணத்திற்காக வாழ்ந்தானோ அதே காரணங்கள் இன்றும் பொருத்தமுடையதாக இருக்கின்றன. இடப்பெயர்ச்சி அல்லது இயக்கம் காரணமாகப் பல்வேறு துறைகளில் வளத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. இதுவும் ஒருவகையில் பரிணாமத்தோடு தொடர்பு கொண்டதே இடப்பெயர்ச்சியைத் தவிர்த்து இருந்த இடத்திலேயே நிலையாக இருப்போர், முன்னிலும் �ர்கெட்ட நிலையில் முகவரியில்லாது முடங்கிப் போவதையும் காண்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வரைபடங்களின் வாயிலாகப் பரம்பரை சார்ந்த நாட்டார் கலாச்சாரத்தைக் (Folk Culture) கண்டறிய முடியும். இத்தகைய படங்கள் உலகெங்கிலுமுள்ள எல்லா இன மக்களுக்காகவும் வரையப்படுமேயானால் கலாச்சார வளர்ச்சி முறைகளையும் அன்றாட வாழ்க்கையும் வழிமுறைகளையும் தெளிவாக அறிதல் இயலும்.

Institute of Ethnography என்ற அமைப்பு இல்லாத மேலைநாடுகளே இன்று இல்லை. அந்நிறுவனம் வழியாக இனம், இனக்குழு, கிளை, போன்ற விவரங்களைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றனர். நாமோ அந்த விடியலை இன்னும் காணாமலே இருக்கின்றோம். சங்கட மேகங்களைக் கலைத்துக் கொண்டு அந்தச்சுடரொளி கிளர்ந்து எழ வேண்டும்.

இறுதியாக ஒன்று, தேர்வு எழுதும் மாணவன் பென்சிலை எடுத்தமாத்திரத்தில் வினாவில் கேட்கப்பட சில இடங்களைக் குறித்து மதிப்பெண் பெறுவது போன்றதன்று இப்பணி. மொழியியலாளர்கள் தொல்பொருளாளர்கள், மானிடவியலாளர்கள், இன ஆய்வாளர்கள், வரலாற்றாளர்கள், சமய அறிஞர்கள் ஆகிய அனைவரது பணியினையும் ஒரு சேர உள்ளடக்கிய பணி இது. இத்தகைய பணியினை நாமும் தொடர வேண்டும் என்ற நல்விருப்பத்தை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம்"

Cheraman Juma Masjid Museum

read more "Cheraman Juma Masjid Museum"

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்   

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

Inscription in Arabi-Malayalam dates the mosque to 5th year of Hijri
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்."

வெள்ளி, 30 மார்ச், 2012

தாயிப் நகரில் தாஹா நபிகள்

பிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,
கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !
தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !
இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !
படிக்கத் தெரியாத – இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !
கந்தல் அணிந்த – இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !
பாலையில் முளைத்த – இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !
இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !
மண்ணில் – இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !
வல்லூறுகளும் – இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !
உயர்மறை மகுடி – இவர்
ஊதியத்கைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !
தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !
பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் – ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்
அன்று – அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !
தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !
வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் – தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !
உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !
பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !
அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !
தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?
கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?
எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே !
[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "தாயிப் நகரில் தாஹா நபிகள்"

Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates