Elegant Rose - Diagonal Resize 2 Wahabisam Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம்1.Part-I ~ TAMIL ISLAM

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

Wahabisam Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம்1.Part-I

Wahabisam Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம்1.Part-I


பிரிட்டிஷ் உளவாளி ஹம்ஃப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்.
தமிழில்: மௌலானா மௌலவி அல்ஹாபிழ் F.M. இப்றாஹிம் ரப்பானி ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்.

இந்நூல் பற்றி….
விசுவாசிகளே! யூதர்களையும், கிறித்துவர்களையும் உங்களுக்கு உதவியாளர்களாக (காரியகர்த்தாக்களாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்களில் சிலர் சிலருக்கு காரிய கர்த்தர் (உதவியாளர்) களாக இருக்கின்றனர். மேலும் உங்களில் எவர் அவர்களை காரியகர்த்தர் (உதவியாளர்களாக்கிக் கொள்கிறார்களோ, திடனாக அவர்களில் உள்ளவர்களே. நிச்சயமாக அல்லாஹ் அநியாயக் காரர்களான கூட்டத்தினர்க்கு நேர்வழி காட்டமாட்டான்.
                                     அல்-குர்ஆன், சூறா 5, வசனம் 51.
யூத, கிறித்துவர்கள் இஸ்லாமியர்களின் மிகப்பெரும் பழமையான விரோதிகள். இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான அவர்களின் சதித் திட்டங்கள், அணுகுமுறை போன்றவை பல்வேறு காலங்களில், பல நாடுகளில் பலவகை வேடங்களைத் தாங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
இது போன்றே கிறித்துவர்கள் சிலபோது முஸ்லிம்களுக்கெதிராக சிலுவைப் போர்களையும் நடத்தினார்கள். சிலபோது வல்லரசுகள் என்னும் பெயர்தாங்கி ஈரான் துருக்கி போன்ற நாடுகளை சீரழித்தனர்.
இன்னும் புனித இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழித்தொழிப்பதற்காக அவர்கள் முஸ்லிம்களிடையே மார்க்கத்தின் பெயரால் குழப்பங்களை ஏற்படுத்தி பிளவுபடுத்தியும், பிறப்பின் வேற்றுமைகளை பெரிது படுத்திக் காட்டியும், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றின் மூலமும் பிரிவினைகளைத் தூண்டிவிட்டு அவர்களை மிகைத்து அவர்களின் ஆட்சி அதிகாரங்களையும் தட்டிப் பறித்து இஸ்லாமிய இனமக்களை பலவீனப்படுத்தி வந்துள்ளனர்.
அத்துடன் வெள்ளையர்கள் தமது கலாச்சாரம், நாகரீகம், மொழி, விஞ்ஞானம், பண்டமாற்றம், அரசியல் மற்றும் சொசைட்டி என்னும் வேடத்திலும் இஸ்லாத்தை நாசப்படுத்தினர்.
இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் அரபு தேசத்தில் ஹிஜாஸ் பகுதியின் பாதுகாவலர்களாக இருந்து வந்த துருக்கியர்களை அரபியருடன் மோதவிட்டு அவர்களை அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற நிர்ப்பந்தித்தது.  அதன்பின் அப்புனித பூமியில் நஜ்திகளின் ஆட்சியை நிலைபடுத்தி வைத்தது.
இதே பிரிட்டானிய வல்லரசு தான் இஸ்லாமியர்கள் மீது கொண்டிருந்த பகைமையை அடிப்படையாகக் கொண்டு மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேலியர்களை கொண்டு வந்து குடியேற்றியது. இன்னும் வளர்ந்து வரும் சிறிய நாடுகளில் 'காதியானி' எனும் மத்ஹபுக்கு அடிக்கல் அமைத்தது. இவ்வாறே சூடானில் 'மஹ்தீ' என்னும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இன்னும் இதே ஆங்கில வல்லரசு தான் ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவரை தனது ஏஜண்டாக்கி அவருக்கு பெண்ணையும், பொன்னையும் கொட்டிக்' கொடுத்து, அதுமட்டுமா? போர் கருவிகளையும், யுத்த தளவாடங்களையும் தந்து புனித பூமியான ஹிஜாஸில் முஸ்லிம்களை கொன்று குவித்தது. அத்துடன் 'வஹ்ஹாபி' என்னும் ஒரு புதிய மத்ஹபையும் தோற்றுவித்தது.
இந்நூலில் ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் மற்றும் வஹாபியத்தின் ரகசிய ரிப்போர்ட்டை ஒரு ஆங்கிலேய உளவாளியின் வாய்மொழியைக் கொண்டு படியுங்கள். அதாவது பிரிட்டிஷ் உளவாளியான 'மிஸ்டா ஹம்ஃப்ரே' என்பவன் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபை தனது சூழ்ச்சிக்கு பலியாக்கி அவருக்கு காம களியாட்டத்தை ஊட்டி தன் வசப்படுத்தினான். எதுவரை எனில், மதுவிலும், மாதுவிலும் அவரை தன் வயப்படுத்தினான்.
இன்னும் இந்நூலில் பிரிட்டானிய பேரரசு மேற்கொண்ட முஸ்லிம்கள் மற்றும் மனித விரோத நடவடிக்கைப் பற்றியும் ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் பிரிட்டிஷின் கைப்பாவையாக மாறி இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிராக அவர் புரிந்த அராஜகத்தையும் பாருங்கள்.
அடுத்து இந்நூல் ஒரு பிரிட்டிஷ; உளவாளியான மிஸ்டர் ஹம்பஃரே என்பவரின் நினைவில் தேக்கப்பட்ட செய்திகளையும், செயல்பாடுகளையும் இணைத்துக் கொண்டுள்ள ஒரு நூலாகும். இதன் மூலம் வெள்ளையர் அரசு எவ்வளவு கீழ்த்தரமான நடைமுறையை மேற்கொண்டது என்பதும், முஸ்லிம்களிடையே பிரிவினையை தோற்றுவிக்க எப்படிப்பட்ட இழிவான காரியங்களில் ஈடுபட்டு வந்ததென்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஹம்ப்ஃரே அரபி மொழியையும், மார்க்க கல்வியையும் கற்றுத் தேர்ந்து அதன்பின் தனது லட்சியத்தில் முன்னேறினான். இந்நூலை ஜெர்மனியர்கள் இரண்டாம் உலகப் போரின்போது  கைப்பற்றி, ஜெர்மன் பத்திரிகையான 'ஸ்பெய்கல்' எனும் இதழில் கொஞ்சங்கொஞ்சமாக வெளியிட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முகத்திரையை நார் நாறாக கிழித்தெறிந்தனர். அதன்பின் ஒரு லெபனான்வாசி இந்நூலை அரபி மொழியில் மொழியாக்கம் செய்தார். பின்னரி அதுவே பாக்கிஸ்தானில் உர்தூ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்தது.
உர்தூ மொழியிலிருந்த அந்த நூலைத்தான் இப்போது தமிழில் மொழியாக்ககம் செய்து தமிழ் கூறும் இஸ்லாமிய மக்களான உங்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இன்னும் இந்நூல் வஹ்ஹாபியத் தோற்றத்தின் முதல் பாகமாக உங்களின் சிந்தனைக்கு முன் வைத்துள்ளேன். இதன் இரண்டாம் பாகத்தில் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபும் சவூதி மன்னனான முஹம்மது பின் ஸவூதும் அவர்களது சந்ததியினரும்மக்காவின் சரீப்களை மக்காவை விட்டு அடித்து விரட்டி மதீனாவிலிருந்த அப்பாவி முஸ்லிம்களை கொன்று கஃபாவை ரத்த களறியாக்கி, மஸ்ஜிதுகளையும் நபிகளாரின் குடும்பத்தினர் மற்றும் நபித் தோழர்களின் புனிதமிகு கப்ருகளையெல்லாம் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவங்களையும், அதற்குரிய சரித்திரப்பூர்வமான ஆதாரக் குறிப்புகளையும் வெளிப்படுத்துவேன்.
அதன்றி இந்திய நாட்டில் வஹாபியக் கொள்கைகளை தழுவியவர்களைப் பற்றியும், அந்த வஹாபிகளோடு தொடர்பு கொண்டிருந்த இன்றைக்கும் தொடர்பு கொண்டுள்ளவர்களைப் பற்றியும், அவர்களின் தவறான போக்கையும் உங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவேன்.இன்ஷா அல்லாஹ்!
இந்நூலை எனது உயிரினும் மேலான ஷெய்கு நாயகம் கதீபுல் ஹிந்த், ஸையாயே ஏஷியா, தாஜுல் வாயிளீன், சுல்தானுல் ஆரிபீன், ஜப்தத்துல் ஆபிதீன், குத்வத்துஸ் ஸாலிகீன், அல்லாமா அல்ஹரி, முப்தி, முபஸ்ஸிருல் குர்ஆன் சையத் மஜ்ஹர் ரப்பானி மத்தளில்லாஹுல் ஆலியவர்களின் பொற்பாதங்களுக்கு காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்.
இந்நூல் வெளிவர பெரிதும் துணை நின்று பொருளுதவியும் செய்த கண்ணியத்திற்கும். மரியாதைக்குமுரிய பொள்ளாச்சியை சேர்ந்த ஜனாப் எம். கலீலுற் றஹ்மான் சாஹிப் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவிப்பதுடன், இதனை அவர்கள் தமது தந்தை மாஹும் ஜனாப். பி.ஆர். முஹம்மத் யூசுப் சாஹிப் அவர்களின் ஈசால் ஸவாபுக்காக வழங்கியுள்ளதால் இந்நூலை வாசிப்போர் மர்ஹ}மின்  சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினரது வளமான வாழ்வுக்காகவும் நிறைவான ஈமானுக்காகவும் துஆ செய்திட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.
பணிவுடன்,
எப்.எம். இப்றாஹிம் ரப்பானி,
ஆசிரியர், அஹ்லெ சுன்னத் மாத இதழ்.
பிரிட்டிஷ்  உளவாளி ஹம்ஃப்ரேயின் ரகசிய ரிப்போர்ட்.
வெகுகாலமாகவே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகின் பல்வேறு பகுதிகளில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருந்த சிறிய நாடுகள் மீது அதிகமாகக் கவனம் செலுத்தி வந்தது. இன்னும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது ஆட்சியின் எல்லையை எத்துணை  தொலைவு விரிநத்து வைத்திருந்தது என்று சொன்னால், அங்கே சூரியன் கூட மறைவதில்லை.
இருந்தும் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்த புதிதுபுதிதான நாடுகளின் முன்னே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மிகமிகச் சிறிய ஒரு நாடாகவே தோற்றம் கொண்டிருந்தது.
இதில் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறை ஒவ்வொரு நாட்டிலும் வௌ;வேறு வகையான நடைமுறைகளைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. சில நாடுகளின் ஆட்சி வெளித்தோற்றத்தில் அந்நாட்டு மக்களின் கரங்களில் இருப்பதைப்போல் தோன்றினாலும், திரை மறைவில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் பிரிட்டிஷார் வசமே இருந்து வந்தன. அந்நாட்டு மக்கள் தமது சுதந்திரத்தைப் பறிகொடுத்து அங்கிருந்த ஆட்சியாளர்கள் பிரிட்டிஷhரின் கைப்பாவையாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
இப்போது நாம் வளர்ந்து வரும் நாடுகளின் பக்கமாக மீண்டும் நமது பார்வையை திருப்புவதுடன், இரு விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியிருந்தது. அது கட்டாயமும் கூட.
ஒன்று: வளர்ந்து வரும் நாடுகளின் ஆட்சியாளர்களிடையே நாம் ஊடுருவுவதுடன், அவர்களை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குரிய சூழ்நிலைகளை தோற்றுவித்தல்.
இரண்டு: இதுவரை நமது கட்டுப்பாட்டிற்குள் வராத வளர்ந்து வரும் புதிய நாடுகளில் நமது கலாச்சார முறைகளை சன்னஞ் சன்னமாகப் பரப்புவதன் மூலம் அவர்களிடையே நமது ஆட்சியை முறைப்படுத்துவதற்குரிய திட்டங்களை தயாரித்தல்.
பிரிட்டிஷ் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கண்ட இரு திட்டங்களையும் செயல்படுத்திட வளர்ந்து வரும் நாடுகளில் தமது உளவாளிகளை அனுப்புவதன் மூலமே இது சாத்தியப்படுமென எண்ணினார்.
இதில் நான் வளர்ந்து வரும் புதிய நாடுகளின் துறைக்குரிய அமைச்சரவையில் துவக்கத்திலிருந்தே அவர்களின் நம்பிக்கைக்குரியவனாக பணி புரிந்து வந்தேன். குறிப்பாக ஈஸ்ட் இண்டியா கம்பெனியில் நான் புரிந்திட்ட பணிகள் எனது நன்னடத்தை என்னை அந்த அமைச்சகத்தில் உயர்ந்த பொறுப்பிற்கு கொண்டு வந்திருந்தது.
இந்த கம்பெனி வெளித்தோற்றத்தில் தன்னை ஒரு வியாபாரக் கம்பெனியைப் போல் காட்டிக் கொண்டாலும், அந்தரங்கத்தில் இது ஓர் உளவு ஸ்தாபனமாகத்தான் இயங்கி வந்தது. இன்னும் இந்திய நாட்டில் வர்த்தகம் என்னும் பெயரில் இக்கம்பெனி காலடி எடுத்து வைத்ததன் நோக்கம் அந்த மண்ணில் பிரிட்டிஷ் அரசு தன்னை நிலைபடுத்திக் கொள்ளவும், மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பவும் திட்டமிட்டிருந்தது.
அந்நாளில் இந்திய மண்ணில் தனது கால்களைப் பதித்த பிரிட்டிஷ; அரசு இந்திய மக்களோ, அதனைச்' சுற்'றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளோ தமக்கெதிராக கிளர்ச்சி செய்யும் என்ற விஷயத்தில் சிறிதும் பயமற்றிருந்தது. காரணம், அந்நாட்டு மக்களிடையே இருந்து வந்த ஜாதி, மதங்களின் ஏற்றத் தாழ்வுகள் அம்மக்களை பிரிட்டிஷ; அரசுக்கு எதிராக குரல் கொடுக்க அவகாசமளிக்காதிருந்தது.
இதே நிலைதான் சீனா போன்ற நாடுகளிலும் விரவியிருந்தது. அங்கே செத்து விட்டிருந்த புத்த கன்ப்யூஷிஸ் போன்ற மதவாதிகள் மூலமும் பிரிட்டிஷ்  அரசுக்கு எதிரான நிலைகள் உருவாகவில்லை.
காரணம் இந்தியா, சீனா போன்ற நாட்டு மக்களிடையே நிலவிவந்த அடிப்படையான குழப்பங்களால் கருத்து மோதல்களால் அம்மக்கள் தமது சுதந்திரம் பற்றி தங்களின் உரிமைகள் மாற்றானால் பறிக்கப்படுவதைப் பற்றி சிந்திக்கின்ற நிலையில் இல்லாதிருந்தனர். அத்தகைய சிந்தனையோட்டம் கூட அவர்களைப் பொறுத்தவரை தேவையற்ற ஒன்றைப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையை அவர்கள் மத்தியில் நிரந்தரப்படுத்துவதற்குரிய திட்டங்களும், அவர்களில் எவரேனும் அவர்களது சுதந்திரத்தாகம் குறித்த பிரச்சனையை துவக்கினால் அதையும் முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டன.
இவ்வாறு வகுக்கப்படும் அத்திட்டங்கள் குறுகிய கால நிலைகளை கொண்டதாக இராமல் நீ;ண்ட நெடிய காலத்திற்கு, அம்மக்களிடையே பிரிவினை, அறியாமை, நோய்கள், வறுமை போன்றவற்றில் அவர்கள் அமிழ்ந்து கிடப்பதற்குரிய நிலைகளைக் கொண்டதாக வகுக்'கப்பட்டன.
இப்படிப்பட்ட அறியாமைவாதிகளிடையே பரவிவிட்டிருந்த மௌட்டீகத்தில் நீந்திச் சென்று அவர்களை எங்களின் கட்டுப்பாட் டிற்குக் கொண்டு வந்தோம். இதற்காக எங்களுக்கு சொல்லப்பட்ட உபதேசம் நோயாளியை அவரது நிலையிலேயே நிறுத்தி வைத்தல், பொறுமையை கைவிட்டு விடாதிருத்தல். இதனால் அக்கசப்பான மருந்தை (நமது ஆட்சியை) முடிவில் அவர்களாகவே விரும்பத்துவங்கி விடுவர்.
இதுபோன்றே மேற்கண்ட நோயால் பீடிக்கப்பட்டிருந்த உஸ்மானியப் பேரரசைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளில் அவர்களின் கையொப்பங்களை வாங்கி வைத்திருந்தோம்.
இதுகுறித்து வளர்ந்து வரும் புதிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர், இதே நிலை தொடர்ந்தால் ஒரு நூறு வருடத்திற்குள் அவர்களின் ஆட்சி தானாகவே மறைந்து போய்விடும் என்றும் கூறினார். நாங்கள் இவ்வாறே ஈரானிய அதிகாரிகள் பலரிடமும் எங்களுக்குச் சாதகமாக கையொப்பங்களை பெற்று வைத்திருந்தோம். எங்களின் உளவாளிகள் இஸ்லாமிய நாடுகளான உஸ்மானிய மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் எங்களின் திட்டங்களை செயல்படுத்தி வந்தனர்.
இன்னும் அந்த அதிகாரிகளின் மூலம் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தின் பல்வேறு நோக்கங்களைப் பெற்றோம். பின்னும் அரசுத்துறைகளில் நிலை பெற்றிருந்த அமைப்புக்களை இடம்மாற்றி எல்லா துறைகளையும் லஞ்ச லாவண்யத்தின் நிலைக்கண்களாக மாற்றினோம். அரசர்களுக்கு உலக சுகபோகங்களை முன்னுரிமைப்படுத்தி நாட்டு நலனில் அவர்களின் கவனம் திரும்பாதவாறு அச்சுகங்களிலேயே அவர்களை திளைக்க வைத்தோம்.
இதன்மூலம் அந்த வல்லரசுகளின் ஆட்சி ஆதிகாரமனைத்தையும் முன்னைவிட பன்மடங்கு பலவீனப்படுத்தினோம். இத்தனைக்குப் பிறகும் பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்ட சில அடிப்படைக் காரணங்களால் நிம்மதி பெற்றிடவில்லை. ஏனெனில் அக்காரணங்கள் நமது சாம்ராஜ்யத்தை கலகலத்துப் போக செய்யுமளவிற்கு சக்தி வாய்ந்தவையாயிருந்தன. அவையானது….
ஒன்று: முஸ்லிம் மக்கிடம் இஸ்லாமிய மார்க்கத்தின் அசல் உயிரோட்டம் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டிருந்தது. அந்த உயிரோட்டம்தான் அவர்களை மிகப்பெரும் வீரர்களாக நிலைநிறுத்தி வைத்திருந்தது. இரு விஷயத்தை அவசியம் இங்கே நான் குறிப்பிட்N;ட ஆக வேண்டும். அது ஒரு சாதாரண பாமர முஸ்லிம் மார்க்க ரீதியில் எங்களின் பாதிரிக்குச் சமமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவர்கள் எந்த நிலையிலும் எதற்காகவும் தமது மார்க்கத்தின் மீதுள்ள நம்பிக்கையை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. முஸ்லிம்களிலுள்ள ஷியா பிரிவைச் சார்ந்தவர்கள் இவர்களின் தொடர்பு ஈரானுடன் பிண்ணப்பட்டிருந்தது. மார்;க்க கொள்கை மற்றும் ஈமான் பற்றி விஷயத்தில் மிகுந்த ஈடுபாடும், ஆபத்தை விளைவிக்கின்றவர்களாகவும் இருந்தனர்.
இந்'த ஷியாக்கள் கிறித்துவர்களை நஜீஸ்களென்றும், காபிர்களென்றும் நம்புகின்றனர். இது ஆதாரமற்றதும் அடிப்படையற்ற வார்த்தையுமாகும். கிறித்துவர்கள் அஹ்லெ கிதாபுகளென்றும், ஈமானுடையவர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. இவர்களிடையே ஒரு கிறித்துவர் எந்த அளவுக்கு அசூசையானவராக கருதப்படுகிறாரெனில், அந்த கிறித்துவரை தன்னை விட்டு உடனே அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் எனக் கூறுகின்றனர்.
ஒருமுறை நான் ஒரு ஷியாவை சந்தித்த போது அவரிடம், நீங்கள் கிறித்துவர்களை ஏன் ஏளனமாக பார்க்கிறீர்கள்? அவர்களும் இறைவனை, அவனது தூதரை, மறுமையின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களே? எனக் கேட்க, அதற்கந்த முஸ்லிம் சொன்னார்: எங்களின் ரசூல் ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வி, ஞானங்களைத் தன்னகத்தே கொண்ட ரசூலாக இருந்தனர். அவர்கள் காபிர்கள் மீது ஏற்படுத்தும் நிர்ப்பந்தத்தால் வேறு வழியறியாது முடிவில் அவர்கள் இஸ்லாத்தை தாமாகவே முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென எங்களின் நபியவர்கள் விரும்பினர்.
மேலும் அரசியல் அமைப்பில் எப்பொழுதாவது ஒரு தனி மனிதனால், அல்லது ஒரு இயக்கத்தால் நெருக்கடி வரும்போது, அவர்களை தனது பாதையிலிருந்து அகற்றி அவர்கள் மீது பற்பல நிர்பந்தங்களை ஏற்படுத்துவதுண்டு. இறுதியில் அவர்கள் தமது எதிர்ப்பை கைவிட்டு ஆட்சியாளர்கள் முன் தலை குனிந்து தமது தோல்வியை ஒப்புக் கொள்வது போன்றுதான் இதுவும். அன்றி கிறித்துவர்களை நஜீஸ்களென்று சொல்லப்படுவதன் காரணம், அவர்களின் வெளித்தோற்றத்தைக் கொண்டல்ல. மாறாக அவர்களின் அந்தரங்கத்தைக் கவனித்தே சொல்லப்படுகிறது. இது கிறித்துவர்களை மட்டுமல்ல. மார்க்க கொள்கை ரீதியில் ஈரானியர்களையும் இஸ்லாம் நஜீஸ் என்றே எண்ணுகிறது.
நான் திரும்பக் கேட்டேன். அது சரி. கிறித்துவர்கள் இறைவனையும், ரஸூலையும், மறுமை நாளையும் நம்புகிறார்களே!
.அது கேட்ட அவர், எங்களிடம் அவர்கள் காபிர், நஜீஸ் என்பதற்கு இரு ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை நபியாக ஏற்பதில்லை. மாறாக அவர்கள் முஹம்மதை (நவூது பில்லாஹ்) பொய்யரென்று கூறுகின்றனர். இதற்காகத்தான் நாங்கள் அவர்களை அசூசையென்றும், நஜீஸ்களென்றும் கூறுகிறோம். இது அறிவின் அடிப்படையில் அமைந்த வார்த்தையாகும். ஏனெனில், உங்களை வருத்தப்படுத்துவோரை நீங்களும் வருத்தப்படுத்துங்கள் என்பதற்கொப்ப சொல்கிறோம்.
இரண்டு: கிறித்துவர்கள் நபிமார்கள், ரஸூல்மார்கள் மீது பொய்யான விஷயங்களை இட்டுக் கட்டுகின்றனர். இது மிகப்பெரும் குற்றமும், அவர்களின் மகத்துவத்திற்கு மாசு கற்பிப்பதுமாகும். உதாரணமாக, கிறித்துவர்கள் ஈஸா நபி மது அருந்துவராயிருந்தனர் என்று கூறுகின்றனர். இவர்களின் இந்த அபவாதத்தால் இறைவனின் சாபத்திற்கு ஆட்பட்டதோடு, முடிவில் அவர்கள் தூக்கிலும் ஏற்றப்பட்டனர்.
இவ்வார்த்தை எனக்குள் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தவே, நான் கிறித்துவர்கள் ஒரு போதும் இவ்வாறு சொல்வதில்லை என்றதும், அதற்கவர், உனக்குத் தெரியாது. பரிசுத்த நூலில் இது குறித்த அத்தனை விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன என்று கூறினார். அதன்பின் அவர் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்றே நான் நம்பினேன். சில கூட்டத்தினர் தமது நபியின் மீது பொய்களை இட்டுக் கட்டியுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் அவரோடு அதிகமாக வாதிக்க நான் விரும்பவில்லை. காரணம் என்னைப் பற்றிய உண்மைகள் ஜனங்களிடையே எங்கே வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தேன்.
இரண்டு: இஸ்லாமிய மார்க்கம் அதன் சரித்திர தொலை நோக்குப் பார்வையின் அடிப்படையில் அதிகாரத்தை விரும்பும் மார்க்கமாகும். இன்னும் இஸ்லாத்தை உண்மையாக கடைப்பிடிக்கிற ஒருவர் அடிமைத் தனத்தை அங்கீகரிப்பதில்லை. அவர்களின் தோற்றத்தில் கடந்தகால மதிப்பின் பெருமை குடி கொண்டிருந்தது. எதுவரை எனில், தனது இயலாமை மற்றும் நொடித்துப் போன நிலையிலும் கூட தமது மார்க்கத்தை விட்டும் வெளிவர அவர்கள் தயாராயிருப்பதில்லை.
நாம் சரித்திரம் மற்றும் உளறல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தப்ஸீர்களை எடுத்துக்காட்டி உங்களின் கடந்த கால சிறப்புக்களின் வெற்றிகள் உங்களுக்கு இன்னின்ன காரணங்களால் கிடைத்தன. அது அப்போதிருந்த சூழ்நிலையும் கூட. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. பல புதிய நிலைகள் அவற்றை கைப்பற்றிக் கொண்டன. கடந்த காலப் பெருமையும் சிறப்பும் இனிமேல் உங்களைத் தேடி வராது என்று சொல்லக் கூடிய சக்தியற்ற நிலையிலிருந்தோம்.
மூன்று: நாங்கள் ஈரான், மற்றும் உஸ்மானியப் பேரரசின் தொலைநோக்கும், முன்னெச்'சரிக்கையும் அவர்களின் நடவடிக்கைகளையும் கண்டு சதா பயந்து கொண்டிருந்தோம். எங்கே நமது சாம்ராஜ்யத்தின் சதித்திட்டம் வெளிப்பட்டு நமது முயற்சியில் தண்ணீர் தெளித்து விடுவார்களோ என்ற ஓர் பாதுகாப்பற்ற நிலையிலிருந்தோம்.
மேலும் இவ்விரு நாடுகளின் நிலைபற்றி நான் முன்னால் கூறியது போன்று அவ்விரு நாடுகளின் ஆட்சி மிகவும் நலிவடைந்த நிலையிலிருந்தன. இன்னும் அவற்றின் அதிகார வேகம் தனது ஆட்கிச்குட்ப்பட்ட எல்லையோடு சுருங்கிப் போயுமிருந்தது. அவர்கள் தமது எல்லைக்குள் எங்களுக்கெதிராக ஆட்களைத் திரட்டவும், பணம் வசூல் செய்யும் நிலையுமிருந்தால் எங்கள் மீது சந்தேகத்தின் சாய்கை பட்டால் கூட எங்களின் வருங்காலத்திய வெற்றி மண் மூடிப்போய் விடும் என்பதிலும் எங்களுக்குப் பயமிருந்தது.
நான்கு: முஸ்லிம்களிலுள்ள உலமாக்களும் எங்களுக்கு ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தனர். அத்துடன்' ஜாமிஆ அஸ்கர் பல்கலைக் கழகத்தின் முப்திகளும், ஈரான், ஈராக் நாடுகளைச் சார்ந்த ஷpயாப் பிரிவைச் சார்ந்த வெளியுறவு தொடர்பாளர்களும் எமது சாம்ராஜ்ய நோக்கங்கள் நிறைவேறி;ட பெரும் தடைகளாக இருந்தனர். இந்த உலமாக்கள் புதிய கல்வி கொள்கை, நாகரீகங்களைப் பற்றி ஒன்றும்  தெரியாதவர்காயிருந்தனர். அவர்களின் கவனம் முழுவதும் அவர்களது வேதத்தில் வாக்களிக்கப்பட்ட கவனத்தைப் பற்றியதாகவே இருந்தது. அவர்கள் தமது நோக்கத்திலிருந்து இம்மியளவும் நகரத் தயாராக இல்லை. அவர்களும், அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் அவர்கள் முன் மிகச் சிறியவர்களாகவே காட்சியளித்தனர். சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மக்கள் ஷியாக்களைப் போல் தங்களின் உலமாக்களுக்கு பயந்தவர்களாக இருக்கவில்லை.
மேலும் நான் பார்த்தவரை உஸ்மானியப் பேரரசில் அரசர்களும், மார்க்க அறிஞர்களும் இணக்கமான நிலை கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். உலமாக்களும்  அரசு அதிகாரிகளும் அரசியலமைப்பில் சம அந்தஸ்துடையவர்களாகவும் காட்சி அளித்தனர்.
ஆனால் ஷியாக்களின் ஆட்சி நடைபெற்ற நாடுகளில் மக்கள் அரசர்களைவிட உலமாக்களுக்கே மிகுந்த கண்ணியம் அளித்து வந்தனர். மார்க்க அடிப்படையிலான உலமாக்களுக்கும் மக்களுக்களுக்குமிடையே ஒரு நெருக்கமான பந்தத்துவம் விரவியிருந்தது.
பின்னும் உலமாக்களுக்கும், அவரசர்  பெருமக்களுக்கும் மக்களால் கொடுக்கப்பட்டு வந்த கண்ணியத்தில் ஷியாக்களும், சுன்னிகளுக்குமிடையே இருந்து வந்த இந்த வேறுபபாடு ஆங்கிலேய அரசுக்கெதிரான நிலையினை உருவாக்கவில்லை.
நான் பலமுறை இஸ்லாமிய நாடுகளுக்கிடையே இருந்துவந்த மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகளை களைவதற்குரிய பேச்சை அம்மக்களிடையே பேசத் துவங்கிய போதெல்லாம் அவர்கள் என்னை சந்தேகக் கண் கொண்டே பார்த்தனர். அத்துடன் எனது பேச்சும் துண்டிக்கப்பட்டு போயிற்று.
மேலும் எங்களில் உள்ள உளவாளிகளும், அரசு நிலை பற்றிய விசாரணைகளில் முன்னைப் போலவே எவ்வித முன்னேற்றமும் காண முடியாமல் நின்ற இடத்திலேயே இருந்தனர். எனினும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. காரணம் நாங்கள் ஒரு உறுதியான நிலைக்கு பயிற்றுவிக்கப்பட்ட இதயமுடையவர்களாக இருந்ததே.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை வளர்ந்த வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் லண்டனில் ஒருமுறை புகழ்பெற்ற ஒரு பாதிரியின் தலைமையில் 25 மதத் தலைவர்களைக் கொண்ட கூட்டமொன்றை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடத்தினார். அதுபோது அக்கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் கலைந்த போது, அந்தப் பாதிரி அங்கிருந்தோரை நோக்கி,
நீங்கள் அதைரியமடையாதீர்கள். பொறுமையாக அதே நேரம் நம்பிக்கையோடு செயலாற்றுங்கள். கிறித்துவர்களின் முன்னூறு வருடகால முயற்சிக்குப்பின் ஏசுநாதரை பின்பற்றுவோர்களது உயிரை பலி கொடுத்த பின்னரே நமக்கு ஆட்சிக் கட்டில் கிடைத்தது. இனியாவது நமக்கு ஏசுநாதரின் அருள்பார்வை கிடைக்கும்.  நாம் முன்னூறு வருடங்களுக்குப் பிறகே காபிர்(முஸ்லிம்)களை வெளியேற்றுவதில் வெற்றி பெற்றோம். ஆதலால் நம்பிக்கையை தளரவிடாது பொறுமையுடன் முஸ்லிம்களுக்கெதிராக அவர்களை வெற்றி கொள்ளும் விதத்தில் செயலாற்ற வேண்டும். இதை நாம் சாதிக்க எத்தை நூறு வருடங்கள் ஆனாலும் சரி. முன்னோர்கள் தமது வருங்கால சந்ததிகளுக்கு உழைத்துச்  சேகரிப்பதில்லையா? அதுபோல்தான் இதுவும் என்று கூறினார்.
மற்றோர் முறை வளர்ந்து வரும் நாடுகளின் அமைச்சகம் ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷின் முக்கிய தலைவர்களைக் கொண்ட ரகசிய ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்திய போது, எனது நன்னடத்தையால் அமைச்சரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த நானும் அதில் பங்கேற்றேன். அக் கூட்டத்தில் அரசியல் முக்கியஸ்தர்களும், மதத் தலைவர்களும், நாட்டின் பிரபலமான பெரிய மனிதர்களும் இடம் பெற்றிருந்தனர்.
வருகை தந்தவர்களின் சிந்தனையெல்லாம் முஸ்லிம்களின் சக்தியை எவ்வாறு முறிக்கலாம்? அவர்களுக்கிடையே கருத்து மோதல்களையும், குழப்பங்களையும் எவ்வாறு ஏற்படுத்தலாம்? அவர்களின் ஈமானை எவ்வாறு நாசப்படுத்தலாம்? என்பது பற்றியே இருந்தது.
அப்போதுதான் நாம் அவர்களை மிகைக்க முடியும். ஸ்பெயின் நாடு. அதை நீக்ரோ போன்ற கறுப்பு முஸ்லிமகள் வெற்றிக் கொண்ட போது காலங்காலமாக கிறித்துவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த அந்நாட்டை எத்தனை எளிதாக வென்றார்கள் இந்த இஸ்லாமியர்கள்? இவ்வாறு நடைபெற்ற அக்கூட்டமும் முடிவில் எந்த இறுதி முடிவும் காணாமலேயே முடிந்து போனது.
உண்மையில் கிழக்கிலிருந்து மேற்கின் கடைசி எல்லை வரை தமது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தை வேரோடு வெட்டிச் சாய்த்'தல் என்பது அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் எவ்வகையிலும் நாங்கள் அதை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்தோம். காரணம் உலகம் முழுவதும் நமது கைப்பிடிக்குள் வரும்போதுதான் கிறித்துவம் வெற்றி கொள்வது என்பது சாத்தியமாகும். இயேசுவும் தனது உண்மையான சீடர்களுக்கு உலக ஆட்சி பற்றி சுபச் செய்தியும் தந்திருக்கிறார்.
இனி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உலக வெற்றி அவருடன் இணைந்திருந்த ஒரு பெரும் திரண்ட கூட்டம் மற்றும் சரித்திரச் சூழ்நிலைகளால் கிடைத்த வெற்றியாகும். அப்போது ஈரானுக்கும், ரோமுக்கும் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவெளி, கிழக்கு மேற்கத்திய நாடுகளுக்கிடையே நிலவி வந்த புகைச்சல் போன்றவைகளே அவரது வெற்றிக்கு காரணங்களாயிருந்தன. இப்போது நிலை முற்றிலும் மாறியுள்ளது. முஸ்லிம்களின் ஆட்சியும் இப்போது மிக வேகமாக உலகினின்றும் மறைந்து கொண்டே வருகிறது.
அதே நேரம் கிறித்துவம் இன்று உலகில் வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்களைப் பழிதீர்ப்பதற்குரிய சரியான தருணம் இதுதான். இன்னும் தனது இழந்துபோன மதிப்பையும் திரும்பப் பெறுவதற்குரிய நேரமும் வந்துவிட்டது.
இப்போது உலகிலேயே தனது கிளைகளை நானா பக்கமும் விரித்துக் கொண்டுள்ள ஆட்சி பிரிட்டிஷாரின் கையிலுள்ளது. இஸ்லாமிய ஆட்சியை இப்பூமியிலிருந்து வேரோடு கிள்ளியெறியும் மிகப் பெரும் சாதனை என்பது தானாதிக்கம் கொண்ட பிரிட்டிஷாரால் மட்டுமே முடியும்.
இரண்டு:
கி.பி. 1710 ல் ஆங்கிலேய வளர்ந்து வரும் புதிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் மிஸ்ரு, ஈராக், ஈரான் மற்றும் ஹிஜாஸ் எல்லைப் பிரதேசத்தின் ஆட்சியில் அரசோச்சிக் கொண்டிருந்த உஸ்மானியப் பேரரசின் தலைநகர் இஸ்தான்புல் பகுதிகளுக்கு உளவாளியாக என்னை நியமித்தார். நான் முஸ்லிம் நாடுகளில் அவர்களின் ஆட்சியை மண்மூடச் செய்வதற்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான விஷயங்களை தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
என்னோடு வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட கைதேர்ந்த அனுபவமிக்க ஒன்பது உளவாளிகள் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியை செயலிழக்கச் செய்யம் காரியத்தில் மிகத் தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்கள் அந்நாட்டு பெரிய மனிதர்கள் மற்றும் அங்கிருந்த புதிய சூழ்நிலைகள் பற்றி எதுவும் தெரியாதவர்களாயிருந்தனர்.
அதனால் அவர்களுக்கு பெரிய மனிதர்கள், மந்திரிப் பிரதானிகள், ஆட்சியில் மிகவுயர்ந்த பதவிpயில் இருப்பவர்கள் உலமாக்கள் மற்றும் வழி நடத்துவோர்களைப் பற்றிய முழுமையான விபரங்களடங்கிய பட்டியல் தரப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களை வழியனுப்'பியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் எனது நினைவுத் திரையில் ஆழமாகப் பதிந்துள்ளது. அது….
நீங்கள் மேற்கொள்ளப் போகும் முயற்சியில் பெற்றிடும் வெற்றி நமது தேசத்திற்கு வருங்காலத்தில் பெற்றுத் தருகின்ற வெற்றியாகும். ஆதலால் உங்களின் சக்தி முழுவதையும் திரட்டிப் பாடுபடுங்கள். வெற்றி உங்களின் பாதங்களை வெகுவிரைவில் முத்தமிடட்டும்.
 நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கப்பல் ஏறி இஸ்த்தான்புல் நோக்கி பயணமானேன். இப்போது என்முன் இருபெரும் பொறுப்புக்கள் கேள்விக்குறியாய் எழுந்து நின்றன. முதலில் துருக்கி மொழியை நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் இம்மொழிதான் அங்குள்ள மக்களால் பேசப்பட்டு வந்தது. நான் லண்டனில் இருக்கும்போதே துருக்கி மொழியின் சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தேன்.
இதன்பின் அரபிமொழி, குர்ஆன், அதற்குரிய தப்ஸீர் மற்றும் பார்ஸி மொழிகளையும் கற்க வேண்டியிருந்தது. இங்கே எனக்கு தரப்பட்டிருந்த பொறுப்பில் மேற்கொண்ட மொழிகளை மட்டும் கற்றுக் கொள்வதுடன் நில்லாது அம்மொழிகளில் நான் எந்த அளவு பாண்டித்தியம் பெற வேண்டியிருந்ததெனில் நான் என்னை துக்கியை சேர்ந்தவனென்றோ, அல்லது அரபு நாட்டைச் சார்ந்தவனனெ;றோ அல்லது ஈரானைச் சார்ந்தவனனென்றோ சொல்வதை அந்நாட்டு மக்கள் முழுமையாக நம்ப வேண்டும். யாருக்கும் என்மீது ஒரு சிறு சந்தேகம் கூட வரக்கூடாது.
இத்தனை சிரமங்களை நான் எதிர்நோக்கியுள்ள நிலையிலும் எடுத்த காரியத்தில வெற்றி பெறுதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறத் துவங்கினேன். அத்துடன் நான் முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை ஏற்கனவே ஓரளவுக்குத்  தெரிந்து ம் வைத்திருந்தேன். அவர்களின் பரந்த மன்பான்மை, நல்'லொழுக்கம், விருந்தோம்பல் போன்றவை  அவர்களுக்கு 'சுன்னத்'தைக் கொண்டு வாய்த்திருந்தது. கிறித்துவர்களைப் போல் சந்தேகப் புத்தியும், நம்பிக்கையின்மையும் அவர்களிடம் இல்லை.
அன்றி உஸ்மானியப் பேரரசும் தற்போது மிகவம் பலவீனமடைந்து போயிருந்தது. இந்நிலையில் அவர்களிடம் ஆங்கிலேய மற்றும் அந்நிய நாடுகளின் உளவாளிகள் தங்களின் தேசத்திற்குள் ஊடுருவியிருப்பதை இனங்காண்பதற்குரிய சாதனங்களும் இல்லை. உளவாளிகளை கண்டறியும் எந்த அமைப்பும், இலாகாவும் கூட அவர்களிடம் இல்லாதிருந்தது.
பல மாதங்களாக தொடர்ந்து பிரயானம் செய்த களைப்போடு இறுதியில் உஸ்மானியப் பேரரசின் தலைநகருக்கு வந்து சேர்ந்தேன். கப்பலை விட்டு இறங்குமுன் எனது பெயரை நான் முஹம்மத் என்று மாற்றிக் கொண்டேன். நகரின் பிரதானமான ஜாமிஆ மஸ்ஜிதுக்'குள் நான் வந்து சேர்ந்த போது, அங்கிருந்த முஸ்லிம்களின் ஒற்றுமை, முகமலர்;ச்சி, தூய்மை போன்றவற்றைக் கண்டு எனன்குள்ளேயே,….
இந்த நல்லவர்களுக்குப் பின்னால் நான் அவர்களின் ஒற்றுமையை சிதைக்கின்ற காரியத்தில் ஏன் இறங்க வேண்டும்? இவர்களின் உரிமையை சீர்குலைப்பதில் நான் எதை சாதித்து விடப் போகிறேன்? நமது ஈஸா நமக்கு இப்படிப்பட்ட ஒரு முறையையா கற்றுத் தந்தனர்? என்றெல்லாம் யோசித்தவன் மறுவினாடியே அந்த ஷைத்தானியத்தான எண்ணங்களை என் சிந்தனையிலிருந்து உதறினேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.
நானோ பிரிட்டானியப் பேரரசின் வளர்ந்து வரும் நா:டுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு வேலைக்காரன். எனக்கு இடப்பட்ட உத்திரவை எத்தகைய ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு விடாது நிறைவேற்ற வேண்டியவன். என் மனதின் எண்ணங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவது என் நாட்டுக்கு, என் நாட்டு மக்களுக்கு, என்னை நம்பி அனுப்பி வைத்த அரசுக்கு நான் செய்கின்ற துரோகமாகும் என்று சமாதானம் கூறி ஒருவாறு என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
நகருக்குள் நுழைந்ததுமே எனது முதல் சந்திப்பு அஹ்லெ சுன்னத்தை சேர்ந்த ஒரு முதியவருடன் ஏற்பட்டது. அவர் பெயர் 'அஹ்மத் ஆபந்தீ'. அவர் மிகவம் நல்லவராகவும் பெரும் ஆலிமாகவுமிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரை நான் எங்களின் கிறித்துவப் பாதிரிமார்களில் கண்டதேயில்லை. அவர் இரவு பகல் எந்நேரமும் வணங்குகின்றவராகவும் குணாதிசியத்தில் அவர் முஹம்மத் ஸல்லல்'லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்றே தோன்றினார். அவர் நபிகளாரை மனிதத்துவத்தின் முழுமையான வெளிப்பாடு எனடறு நம்புவராயிருந்தார். நபிகளாரின் சுன்னத்துக்களை அதிகமாக பேணுகின்றவராகயிருந்தார். அண்ணலாரின் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.
iஷகை நான் சந்தித்ததில் எனக்குக் கிடைத்த மாபெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஒரு தடவைக் கூட என்னைப் பற்றியோ அல்லது எனது பாரம்பரியம், குடும்பநிலை பற்றியோ என்னிடம் அவர் கேட்டதேயில்லை. மாறாக அவர் எப்போதும் என்னை முஹம்மத் ஆபந்தீ என்றே அழைத்து வந்தார். நான் எதைக்குறித்து கேள்வி கேட்டாலும் கொஞ்சங்கூட முகம் சுளிக்காது கண்ணியமான முறையில் பதில் சொன்னார். அத்துடன் என்னை அவர் மிகவும் விரும்பினார்.
குறிப்பாக நான் ஒரு ஏழையென்றும், அண்ணல நபி பிரதிநிதித்துவத்தைக் கொண்ட உஸ்மானியப் பேரரசின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுகிறேன் என்பதை கேள்விப்பட்டதும் என்மீது அவருக்கு இன்னும் பிரியம் அதிகமாகிவிட்டது. இது நான் இஸ்தான்புல்லில் தங்குவதற்காக iஷகிடம் சொன்ன பொய்களில் ஒன்று. இதன்றி iஷகிடம் நான் ஒரு அனாதையென்றும், எனக்கு சகோதர, சகோதரிகளென்று யாருமில்லையென்றும், நானொரு தனி மரமென்றும்  இருப்பினும் என் பெற்றோர் எனக்காக நிறைய விட்டுச் சென்றுள்ளனரென்றும்,….
நான் குர்ஆன், துருக்கி மற்றும் அரபி மொழியைக் கற்பதற்காகவே இஸ்லாமியத் தலைநகரான இஸ்தான்புல்லைத் தேர்ந்தெடுத்தேன் என்றும், கல்வி கற்று முடிந்த பின் என் பெற்றோர் விட்டுச் சென்றுள்ள பணத்தைக் கொண்டு எனது குலத் தொழிலில் ஈடுபடுவேன் என்றும் கூறியதைக் கேட்டு சந்தோஷமுற்ற ஷைகு அஹ்மத் என்னிடம் சொன்ன சில வார்த்தைகள் இதுதான்.
வாலிபனே! சில காரணங்களால் உனக்கு கண்ணியமளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். ஒன்று நீ ஒரு முஸ்லிம். இதில் ஒரு முஸ்லிம் மற்றோர் முஸ்லிமுக்கு சகோதரன். இரண்டு நீ எமது நாட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். நபிகளார் விருந்தினரை உபசரிக்க வேண்டுமெனப் பகர்கின்றனர். மூன்று: நீ மார்க்க கல்வியை தேடுபவன். மார்க்க கல்வியைத் தேடுவோருக்கு கண்ணியமளிக்க வேண்டுமென மார்க்கம் கட்டளையிடுகிறது. அத்துடன் நீ ஹலாலான முறையில் உணவைத் தேட நினைக்கிறாய். ஹலாலான முறையில் தொழில் செய்பவர் அல்லாஹ்வின் நேசனாகும். எனவேதான் உனக்கு நான் கண்ணியமளிக்கிறேன் என்று கூறினார்.
ஷைகவர்களே! தாங்கள் அனுமதியளித்தால் நான் தங்களிடம் அரபி மற்றம் குர்ஆன் கற்றக விரும்புகிறேனென்று சொல்ல, அதை ஆமோதித்த ஷைகு அஹ்மத் எனக்கு முதன்முதல் அல்ஹம்து சூராவிலிருந்து பாடத்தை துவக்கினார். ஷைகவர்கள் பாடத்தை துவக்குமுன் தானம் ஒளு செய்து என்னையும் ஒளு செய்யச் சொன்வார். கிப்லாவை முன்னோக்கி அமர்ந்து பாடம் நடத்துவார். குர்ஆனின் தஜ்வீத், தப்ஸீர் போன்றவற்றை கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் அவரிடம் கற்றேன்.
நான் இஸ்தான்புல்லில் தங்கியிருந்தவரை இரவில் அங்குள்ள ஒரு மஸ்ஜிதில் சென்று உறங்குவது வழக்கம். அப்போது அம்மஸ்ஜிதில் இருந்த பணியாளர்களில் ஒருவராக மர்வான் ஆபந்தீ என்பவர் இருந்தார். அங்கே நான் படுப்பதற்காக அவருக்கு கொஞ்சம் பணத்தையும் கொடுத்து வந்தேன். அவர் மகா கெட்டவராயும், கோபக்காரராகவும் இருந்தார். தன்னை நபிகளாரின் தோழர் பெருமக்களில் ஒருவரைப் போல் நினைத்துக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் என்னிடம்,…….
ஒருவேளை இறைவன் உனக்கு ஒரு குழந்தையைத் தந்தால் நீ அக்குழந்தைக்கு மர்வான் என்று பெயர் வை. ஏனெனில் மர்வான் இஸ்லாமிய வீரர் பெருமக்களில் மிகவும் அந்தஸ்திற்குரியவர் என்று கூறினார். இரவு நேர உணவை நான் அவருடன் சேர்ந்துதான் அருந்துவது வழக்கம். அத்துடன் ஜும்ஆ நாளன்று விடுமுறை தினமானதால் அன்றைய தினத்தை அவருடன்தான் கழித்து வந்தோன். மீதி ஆறு நாட்களும் ஒரு தச்சனின் கடையில் வேலை செய்து வந்தேன். அதன்மூலம் ஒரு சிறு தொகை எனக்கு கிடைத்து வந்தது. அதிலும் பாதி நான் மட்டுமே வேலை செய்வேன். காரணம் மாலையானதும் iஷகு அஹ்மதிடம் சென்று கல்வி கற்க வேண்டியிருந்தது. இதனால் அந்த தச்சனிடமிருந்து பாதி சம்பளம் மட்'டுமே கிடைத்து வந்தது.
அத்தச்சனின் பெயர் காலித். தினந்தோறும் மதிய உணவு நேரத்தில் இஸ்லாமிய வெற்றிவீரத் காலித் இப்னு வலீதின் சிறப்பையும் வீரப் பிரதாபங்களைப் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பான். இருப்பினும் அவன் நல்ல குணமுடையவன் அல்ல. அவனிடம் வேலை செய்து வந்தவர்களில் எல்லோரையும் விட என்னிடம் அதிகமாக பரிவு காட்டினான்.
ஒருவேளை நான் அவன் சொன்ன வேலையை மறுப்பேதும் சொல்லாமல் செய்ததும், மார்க்க விஷயத்தில் எந்தவித தர்க்கமும், குதர்;க்கமும் பேசாதிருந்ததும்தான் காரணமென்று நினைக்கிறேன். பலமுறை கடை காலியானபோது அவன் என்னை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். ஷைகு அஹ்மத் என்னிடம், இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண் புணர்ச்சியை மிக வன்மையாக தடை செய்யப்பட்டடுள்ளதென்று கூறியிருந்தார். ஆனால் காலித் அருவருப்பான அச் செயலை என்னிடம் தொடர்ந்து நடத்தி வந்தான்.
அவன் மார்க்கப் பற்றுள்ளவனோ, பேணுதல் உள்ளவனோ அல்ல. அவன் நல்ல ஈமானும், கொள்கையுடையவனல்ல. அவன் ஜும்ஆவுக்கு மட்டும் மஸ்ஜிதிற்குச் சென்று தொழுது வந்தான். மற்ற நேரங்களில் அவன் தொழுது நான் பார்த்ததில்லை. இருப்பினுகம் அவன் என்னுடன் கொண்டிருந்த அவ்வுறவை நான் அடியோடு வெறுத்தேன். சில நாட்களுக்குப் பின் புதிதாக மார்க்கத்தை தழுவிய ஒரு யூத முஸ்லிமிடம் தொடர்பு கொண்;ட பின்னரே அவன் என்னை அதிலிருந்து விடுவித்தான்.
நான் தினந்தோறும் அவன் கடையில் மதிய உணவருந்திவிட்டு ளுஹருடைய தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் சென்று விடுவேன். அங்கேயே அஸர் வரை இருந்துவிட்டு அஸர் தொழுகையை முடித்துக் கொண்டு ஷைகு அஹ்மதின் வீட்டுக்குச் சென்று அரபி மற்றும் குர்ஆனை சுமார் இரண்டு மணி நேரம் வரை ஓதுவேன். அதற்குப் பிரதியாக நான் வேலை செய்து வந்தவனிடமிருந்து பெறும் சம்பளம் ஒரு வாரத்திற்குரியது முழுவதையும் iஷகுக்கு ஜகாத்  எனக் கூறி தந்து வந்தேன்.
இனி ஷைகு அஹ்மதுக்கு நான் மணமாகாதவன் என்னும் விபரம் தெரிந்தபோது அவர் என்னை மணம் செய்து கொள்ளுமாறு சொன்னதுடன் தன் மகளையே கொடுக்கத் தயாராக இருகப்பதாகவும் கூறினார். நான் அவரது யோசனையை செயலாற்ற முடியாத நிலையிலிருப்பதாகக் கூறி அதற்காக மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் திரும்பத் திரும்ப வற்புறுத்தவே வேறு வழியின்றி நான் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதற்குரிய தகுதியற்றவன் என்று மிகப்பெரும் பொய்யொன்றை சொன்னதைக் கேட்டு அவர் மௌனமாகிவிட்டார்.
இரு ஆண்டுகள் இஸ்தான்புல்லில் கடந்துவிட்டன. இவ்விரு ஆண்டுகளில் நான் ஷைகிடம் குர்ஆன், அரபி, துருக்கி, தப்ஸீர் போன்றவற்றை கற்றுத் தேர்ந்த பின் ஒரு நாள் ஷைகிடம் நான் என் சொந்த ஊருக்குப் போக விரும்புகிறேன் என்று சொல்லவே, அதற்கவர் இத்தனை சீக்கிரம் அங்கு போய் என்ன செய்யப் போகிறாய்? உனக்கு இங்கே என்ன குறை? இந்த நகரில் உனக்குத் தேவையான எல்லாம் கிடைக்கின்றது. அத்துடன் இம்மை, மறுமை ஆகியவற்றிற்குரிய சாதனங்கள் அனைத்தும் இங்கே இருக்கின்றது. உனக்கென்று யாருமேயில்லை. இந்நிலையில் இங்கிருந்து போக வேண்டுமென்று ஏன் நினைக்கிறாய்? என்று கூறி அங்கேயே இருந்து விடுமாறு என்னை மிகவும் வற்புறுத்தினார்.
நானும் அங்கேயே இருந்துவிட விரும்பினாலும் என் நாட்டுக்காக நான் ஏற்றிருந்த பொறுப்பும் கடமையுணர்வும் என்னை லண்டன் செல்லத் தூண்டிற்று. நான் திரும்பிப்போய் லண்டனிலுள்ள வளர்ந்து வரும் புதிய நாடுகுளின் வெளியுறவுத்துறை அமைச்சரைப் பார்த்து எனது இரு வருடத்திய ரிப்போர்ட் முழுவதையும்  சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இஸ்த்தான்புல்லில் நான் இருந்த இரு வருடங்களில் ஒவ்வொரு மாதமும் உஸ்மானிய ஆட்சியின் நிலைகள் குறித்த ரிப்போர்ட்ழட தொடர்ந்து அனுப்பி வந்தேன். இவ்வாறு நான் அனுப்பி வந்த ஒரு ரிப்போர்ட்டில் தச்சன் காலித் என்னிடம் கொண்டிருந்த அத்தகாத உறவை பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எனக்கு எழுதிய பதில் நிரூபணத்தில், இச்செயல் நாம் நமது இலக்கை எட்டுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சியில் ஒரு மைல்கல். இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று அறிவுறுத்தியிருந்தார். இதைப் படித்த எனக்கு தலையே சுற்றியது. நமது தேசத் தலைவர்கள் தமது நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராகயிருப்பதை எண்ணி வேதனைப் பட்டேன். கசப்பாயிருந்தாலும் வருங்காலத்தில் எனது தேசத்துக்கும், மார்க்கத்திற்கும் கிடைக்கப்போகும் வெற்றிக்காக கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டேன்.
இறுதியில் ஷைகு அஹ்மத் என்னை வழியனுப்பி வைத்த போது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தன. கடைசியாக அவர் என்னை நோக்கி மகனே! நீ திரும்பி இங்கே வரும்போது என்னை சந்திக்க மாட்டாய். என்னை மறந்து விடாதே! இன்ஷாஅல்லாஹ்! மறுமை நாளன்று நபிகளார் முன் நாம் மீண்டும் சந்திப்போம். போய்வா என்று கூறினார்.
உண்மையில் ஷைகு  அஹ்மதின் பிரிவு என்னை வெகுநாள் வரை வேதனைப் படுத்திற்று. அவரது பிரிவால் என் கண்கள் கண்ணீரை சொரிந்ததென்னவோ உண்மை. என்ன செய்வது? நான் என் கடமையை நிறைவேற்றிடும் கட்டாயத்திலல்லவா சிக்கிக் கொண்டிருந்தேன்!
மூன்று:
என்னோடு வந்த ஒன்பது உளவாளிகளும் திரும்ப லண்டனுக்கு அழைக்கப்பட்டனர். கொடுமை என்னவெனில், அவர்களில் ஐந்துபேர் மட்டுமே திரும்பி வந்திருந்தனர். மீதி நால்வரில் ஒருவர் முஸ்லிமாகி மிஸ்ரிலேயே தங்கி விட்டார். இதை எனக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சொன்னார். எனினும் ஒரு விஷயத்தில் அமைச்சர் சந்தோஷப்பட்டுக் கொண்டார். அது மிஸ்ரில் தங்கிவிட்ட அந்த உளவாளி முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக பிரிட்டிஷ் மேற்கொண்டுள்ள ரகசிய நடவடிக்கை பற்றி எதுவும் வெளியிடாதிருந்ததே.
இரண்டாவது உளவாளி ரோம் நகரைச் சேர்ந்தவர். அவர் ரோமுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். வெளியுறவுத்துறை செயலர் ரோமுக்குச் சென்று விட்ட அந்த உளவாளியும் தங்களின் ரகசியத்தை அம்பலப்படுத்தி விடக்கூடாதேயென்று பயந்து போயிருந்தார்.
மூன்றாமவர் பக்தாதுக்கருகே அம்மாரா என்னுமிடத்தில் வாந்தி பேதியால் இறந்து போய் விட்டார். நான்காவது நபரைப் பற்றிய எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. அவர் எமனில் இருந்தவரை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு ஒரு ஆண்டுவரை தமது செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார். அதன்பின் அவர் என்னவானார் என்று அமைச்சகத்திற்குத் தெரியாமலேயே போய் விட்டது. அவரைப் பற்றிய விஷயம் எதுவும் தெரியாமல் போனது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்.
அமைச்சகத்தின் செயலர் எனது கடைசி ரிப்போர்ட்டின் முக்கியமான விஷயங்களைப் படித்தபின் லண்டனில் ககூட்டப்பட்ட ஒரு முக்கியமான கூட்டத்திள்கு வந்து கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். அந்த கூட்டத்தில் ஐந்து உளவாளிகளும் சேகரிக்கப்பட்ட ரிப்போர்ட்களை வாசித்துக் காட்டவிருந்தனர். வெளியுறவுத்துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் அமைச்சரவையைச் சேர்ந்த பல முக்கியமான பிரமுகர்களனைவரும் கலந்து கொண்டனர்.
மற்ற உளவாளிகள் அனைவரும் தங்களின் ரிப்போர்ட்டில் இருந்து முக்கியமானவற்றை மட்டும் படித்துக் காட்டினார். நானும் படித்துக் காட்டினேன். வளர்ந்து வரும் நாடுகளின் அமைச்சகத்தின் செயலரும் மற்றவர்களும் என் ரிப்போர்ட்டை மிகவும் பாராட்டினர். இருந்தும் அந்த வரிசையில் நான் மூன்றாவது நிலையில் இருந்தேன். என்னைவிட உளவுச் சேகரிப்பின் முதல் நிலையில் ஜி.பில்கோட் என்பவரும் இரண்டாவது நிலையில் ஹென்றி பான்ஸ் என்பவரும் இருந்தனர்.
கூட்டம் முடிவுற்ற பின் செயலர் என்னிடம் உஸ்மானியப் பேரரசை வீழ்த்தும் எந்தக் காரியத்தையம் நீ செய்யவில்லை என்று சொன்னபோது…….
நான் இரு வருடங்களில் இரு பாiஷகளை கற்பதிலும், குர்ஆனுடைய தப்ஸீர், இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டங்களை கற்பதிலேயே முயற்சி செய்து கொண்டிருந்ததால் தாங்கள் குறிப்பிடும் காரியங்களின் பக்கம் எனது கவனத்தை திருப்ப முடியாது போய்விட்டது. எனினும் எனது அடுத்த பயணத்தில் இக்குறைகளை நான் சரிசெய்து விடுவேன் என்று கூறவும்…..
அதற்கு செயலர், அதிலென்ன சந்தேகம்! நீ என் முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெறுவாய் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீ நமது சாம்ராஜ்யம் தமது நோக்கங்களை எய்துவதற்கு மற்ற உளவாளிகளுடன் போட்டி போட வேண்டும்.
அத்துடன் நீ இரு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.அது மிக மிக முக்கியம்.
நீ  முஸ்லிம்களிடையே உள்ள அவர்களின் பலவீனம் எது என்பதை கண்டறிய வேண்டும். அதைக் கொண்டுதான் நாம் அவர்களை நெருங்கவும், அவர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களின் ஒற்றுமையை சிதைக்கவம் முடியும். ஏனெனில் நமது எதிரிகளை நாம் வீழ்த்த வேண்டுமாயின் நமது வெற்றியின் ரகசியம் அதைத் தெரிந்து கொள்வதில்தான் உள்ளது.
அவர்களின் பலவீனத்தை நீ தெரிந்து கொண்டபின் உனது அடுத்த வேலை அவர்கள்pடையே பிரிவினைரயை ஏற்படுத்துவதுதான். அதில்  உனது சக்தி முழுவதையும் நீ பயன்படுத்திய பின் ஆங்கிலேய உளவாளிகளின் பட்டியலில் முதல்  இடத்தைப் பெறுவாய் என்று கூறினார்.
லண்டனில் நான் ஆறுமாதம் தங்கியிருந்தபோது எனது சிறிய தந்தையின் மகள் மேரி ஷவியை திருமணம்செய்து கொண்டேன். நான் வாழ்வின் இனிமையான நாட்களை அவளுடன் கழித்தேன். எனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் வருகையை எண்ணி காத்திருந்தேன்.
இதற்கிடையே திடீரென்று வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து காலங்கடத்தாது நான் ஈராக்குக்குச் செல்ல வேண்டுமென்று ஆணை வந்தது. என் மனைவியின் அன்பான உபசரிப்பு ஒரு பக்கம் . பிறக்கப் போகும் என் குழந்தையின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம். இத்தனைக்கும் மத்தியில் என் நாட்டின் மீது நான் கொண்டுள்ள உலகம் முழுவதும் தனது கிளையை விரிக்கப்போகும் வேகத்தைக் காணும் ஆவல் மறுபக்கம். இறுதியில் என் தேசப்பற்று என்னை வென்றது.
ஆறுமாதகால கடல்வழிப் பயணத்திற்குப் பின் பஸரா வந்து சேர்ந்தேன். அந்நகரில் வசித்தவர்களில் மிகுதமானோர் பஸராவைச் சுற்றியுள்ள கூட்டத்தினராக இருந்தனர். அவர்களில் ஈரான் மற்றும் அரபைச் சேர்ந்த ஷpயாக்களும், சுன்னிகளும் இணைந்து ஒருங்கிணைந்த ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். பஸராவில் கிறித்துவர்கள் மிகமிக் குறைவாகவே வாழ்ந்து வந்தனர். என் வாழ்வில் ஷியாக்களை பார்க்கும் சந்தர்ப்பம் முதன்முதலாக இப்போதுதான் எனக்குக் கிட்டிற்று.
இதில் ஷியாக்கள் நபிகளாருக்குப் பின் ஹஜ்ரத் அலீயும், அவர்களின் பிள்ளைகளான பனிரெண்டு இமாம்களும் தான் கிலாபத்திற்குரியவர்களெனக் கூறுகின்றனர். ஆனால், அஹ்லெ சுன்னத்தைச் சேர்ந்தவர்கள் ஹஜ்ரத் அலீயை விட அபூபக்கர், உமர், உஸ்மான் போன்றோர்தான் கிலாபத்திற்கு உரிமையுடையவர்கள் எனக் கூறுகின்றனர். இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் கிறிஸ்தவத்திலும் இருக்கின்றன.
ஆனால் அலீயும், உமரும் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகும் கூட ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையே இப்பிரச்சனை இன்றும் எரிந்து கொண்டிருக்கின்றது. ஒருவேளை முஸ்லிமகள் கடந்த காலத்தை விட்டு நிகழ்காலத்தைக் குறித்து தமது அறிவைக் கொண்டு யோசித்திருப்பார்களேயாயின் அவர்களுக்குள் பிரிவினை பேதமே வந்திருக்காது.
ஒரு தடவை நான் இந்த ஷியா, சுன்னிகளுக்கிடையேயுள்ள கருத்து வேற்றுமை பற்றி வளர்ந்து வரும் புதிய நாடுகளின் அமைச்சரிடம் ஒரு வேளை இஸ்லாமியர்கள் வாழ்வின் அசல் நிலையைப் புரிந்து கொண்டிருப்பார்களேயாயின் அவர்கள் தமக்கிடையே உள்ள கருத்து மோதல்களை  விட்டு ஒற்றுமையாகி இருப்பார்கள் என்று சொல்லவும்…..
எனது பேச்சை இடைமறித்து, உனது வேலை முஸ்லிம்களுக்குள் அவர்களின் ஒற்றுமையை சிதைத்து அவர்களிடையே மோதலின் நெருப்பை வளர்ப்பதுதான். அதைவிட்டு அவர்களின் ஒற்றுமை குறித்து நீ யோசனை கூட செய்யக்கூடாது என்றார். நான் ஈராக்குக்கு புறப்படுமுன் அமைச்சகத்தின் செயலர் என்னை நோக்கி…..
ஹம்ஃப்ரே! சண்டையம், சச்சரவம் மனிதனின் இயற்கைக் குணங்களாகும் என்பது உனக்குத் தெரியும். இறைவன் ஆதமைப் படைத்து அவரது விந்திலிருந்து ஹாபீலும், காபீலும் பிறந்தபோதே அவ்விருவருக்குள்ளும் கருத்து மோதல் தோன்றிவிட்டது. அன்று துவங்கிய இப்பிரச்சனை ஹஜ்ரத் ஈஸா வரை தொடர்ந்து நடந்து கொண்டுதானிருந்தது. இனியும் நடக்கும். நாம் மனிதர்களின் பிரிவினையை ஐந்து வகையாகப் பிரிக்கிறோம்.
பிறப்பில் வேறுபாடு.
கிளையில் வேறுபாடு.
மண்ணில் வேறுபாடு
கூட்டத்தில் வேறுபாடு
சமயத்தில் வேறுபாடு.
இப்பயணத்தில் உன்மீதுள்ள முதல்கடமை இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் கருத்து மோதல்களுக்குரிய காரணங்களை தெரிந்து அதை அவர்களிடையே கொளுந்து விட்டெரியச் செய்வதற்குரிய வழி வகைகளைச் கற்றுக் கொள்வதாகும்.
இது சம்பந்தமான தேடலில் நீ எத்தனை விஷயங்களைத் தெரிந்து கொள்கிறாயோ அவையனைத்தையும் லண்டனிலுள்ள அமைச்சகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் நீ இஸ்லாமிய ஆட்சியின் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஷpயா சுன்னிகளுக்கிடையே குழப்பத்தை தோற்றுவித்து விட்டால் அதுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு நீ செய்யும் மாபெரும் உதவியாகும்.
எதுவரை நாம் வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் இஸ்லாமிகயர்களிடையே உறவாடிக் கெடுத்தல், பிரிவினை, கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தவில்லையோ அதுவரை நாம் நிம்மதி பெற முடியாது. இன்னும் உஸ்மானியப் பேரரசை அதன் ஆட்சிக்குட்பட்ட எல்லையிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும், வீதிகளிலும் குழப்பங்களை உருவாக்கதவரை நாம் அப்பேரரசை வீழ்த்த முடியாது. அத்தனை பெரிய பரந்து விரிந்த தேசத்தில் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட வெள்ளையர்கள் இத்தகைய தந்திரமான வழியின் மூலம்தான் அவர்களை மிகைக்க முடியும்.
ஆதலால் ஹம்ஃப்ரே! நீ உன் பலம் முழுவதையும் பிரயோகப்படுத்தி எப்படியாவது அவர்களுக்கிடையே குழப்பத்தையும், பிரிவினையையும் கருத்து மோதலையும் ஏற்படுத்துவற்குரிய பாதையைக் கண்டுபிடி. அதன் பின் அங்கிருந்து உனது பணியைத் துவக்கு. இன்னொன்றையும் நீ தெரிந்து கொள். இப்போது ஈரானிய மற்றும் உஸ்மானிய அரசுகள் மிகவம் பலவீனமடைந்து போயுள்ளன. இதை கவனத்தில் கொண்டு அங்குள்ள மக்களை அந்த அரசுக்கெதிராகத் தூண்டிவிடு. சரித்திரங்களின் பார்வையில் எப்போதுமே அரசியல் மாற்றம்  என்பது மக்களின் போராட்டங்களைக் கொண்டுதான் நடைபெற்று வந்துள்ளது. எனவே எங்கே மக்களிடையே குழப்பமும் பிரிவினையும் தோன்றுமோ அங்கே நமது வேலை மிக எளிதாகக் கைகூடி விடும்.
நான்கு:
நான் பஸரா வந்து சேர்ந்து அங்குள்ள ஒரு மஸ்ஜிதிற்குச் சென்றேன். அம்மஸ்ஜிதின் பேஷ்இமாம் அஹ்லெ சுன்னத்தைச் சார்ந்த பிரபலமான ஷைகு உமர்தாயீ என்பவர். நான் அவரைக் கண்டு மிகுந்த மரியாதையோடு சலாம் சொன்னேன். ஆனால் அவர் துவக்கத்திலேயே என்னை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கி எனது குலம், கோத்திரம், கடந்தகால வாழ்க்கை போன்றவற்றையெல்லாம் துருவத் துவங்கினார். ஒரு வேளை என் முகத் தோற்றம் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் நான் மிகத்தந்திரமாக அவரது கிடுக்கிப் பிடியிலிருந்து நழுவிக் கொண்டு அவரை நோக்கி,….
நான் துருக்கியில் ஆக்தீர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அத்துடன் இஸ்த்தன்புல்லில் ஷைகு அஹ்மதின் மாணவர்களில் ஒருவன். அங்கே காலித் என்பவரின் தச்சுக் கூடத்திலும் வேலை செய்திருக்கிறேன் என்று சொன்னேன்.
அப்போது அந்த ஷைகு அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் கண்ணால் ஜாடைகாட்டி எனக்கு துருக்கி  மொழி தெரியுமா எனக் கேட்கச் சொன்னார். அதை கவனித்தவிட்ட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லாமே ஒரு நொடிக்குள் நொறுங்கி போய்விட்டது. காரணம் பஸராவின் கவர்னராக உஸ்மானிய பேரரசால் நியமிக்கப்பட்டிருந்தவர் iஷகால் வெறுக்கப்படுகிறவர். அதனால் என்னை நான் உஸ்மானியாக்களின் உளவாளியோ என்று சந்தேகிகக்கத் துவங்கி விட்டார்.
எனக்கு இதைத் தவிர வேறு வழியுமில்லை. எனவே மஸ்ஜிதுள்ள பகுதியிலிருந்த ஒரு முஸாபிர்கானாவுக்குச் சென்று ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டேன். அந்த முஸாபிர்கானாவுக்குச் சொந்தக்காரன் ஒரு மடையன். ஒவ்வொரு நாளும் ஸுப்ஹுடைய பாங்கு சப்தம் கேட்டவுடன் அந்த விடியற்காலை நேரத்தில் பிரயாணிகள் தங்கியிருந்த அறைக் கதவுகளை ஓங்கி ஓங்கி அடிப்பான். என்னை தொழுகைக்கு எழுப்பி விட்டு விடுவான். சூரியன் உதிக்கும் வரை குர்ஆன் ஓதுமாறு என்னை நிர்ப்பந்திப்பான். நான் அவனிடம், குர்ஆன் ஒதுவது வாஜிபல்லவே! பிறகு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் என்று கேட்டால் அதற்கவன், சூரியன் உதிக்கும் வரை தூங்குவது தரித்திரத்தையும், மூடத்தனத்தையும் ஏற்படுத்திவிடும். இதை அப்படியே விட்டுவிட்டால் இங்குள்ள முஸாபிர்கானாக்கள் முழுவதும் அழிந்து போய்விடும் என்று கூறுவான்.
இதை நான் ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியிருந்தது. ஏனெனில் தினமும் சுப்ஹுக்கு எழுந்து தொழ வேண்டும். அதன்பின் ஒரு மணி நேரம் வரை குர்ஆன் ஓத வேண்டும். இல்லையென்றால் அறையைக் காலி செய்து விடு என்று அவன் என்னை மிரட்டியதே.
என் கஷ்டம் இத்துடன் என்னை விட்டுப் போகவில்லை. ஒருநாள் முஸாபிர் கானாவின் சொந்தக்காரன் முர்ஷித் ஆபந்தீ இருந்திருந்தாற்போல் என்னிடம் வந்து, நீ இந்த முஸாபிர்கானாவுக்கு வந்த நாள் முதல் கஷ்டம் என் வீட்டை வந்து சூழ்ந்து கொண்டது. காரணம் நீ இதுவரை மணம் செய்து கொள்ளாததுதான். ஒன்று நீ மணம் முடிக்க வேண்டும் அல்லது அறையை காலி செய்து விட்டுப் போய்விட வேண்டுமெனக் கூறினான்.
அதற்கு நான் ஆபந்தி நான் மணம்' செய்து கொள்வதாயின் பணத்திற்கு எங்கே போவேன். என்னிடம் அதற்குரிய வசதியில்லை என்று சொல்லவும், ஏ! நம்பிக்கையற்ற முஸ்லிமே! நீ குர்ஆனைப் பார்க்கவில்லையா? அவர்கள் வறுமையிலிருக்கும்போது அல்லாஹ் அவர்களை தனது கண்ணியத்தைக் கொண்டு செல்வந்தனாக்குகிறான் எனக் கூறவில்லையா என்று கேட்டான்.
நான் மலைத்துப் போய் விட்டேன். அவன் என்னை விடமாட்டான் போல் தெரிந்தது. இறுதியில் நான் அவனிடம், நீ சொல்வது உண்மைதான். ஒப்புக்கொள்கிறேன். எனினும் நான் காசில்லாமல் எவ்வாறு மணமுடிக்க முடியும்? எனது திருமணத்தின் அவசியத் தேவைக்காக கொஞ்சம் பணம் உன்னால் கடனாகக் கொடுக்க முடியுமா? இஸ்லாத்தில் மஹர் கொடுக்காமல் எந்தப் பொண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாளே! என்று திருப்பிச் சொல்லவே, அதைக் கேட்டு சிறிது நேரம் யோசனை செய்த ஆபந்தீ கடனைப் பற்றி பேசுவதற்குப் பதில் சட்டென்று உரத்தக் குரலில், எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று நீ மணமுடிக்க வேண்டும். இல்லையேல் ரஜப் முதல் பிறைக்குள் இங்கிருந்து வெளியேறி விட வேண்டுமென்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.
சுருங்கக் கூறின் முஸாபிர்கானாவின் சொந்தக்காரனது நிர்ப்பந்தத்தால் வேறு வழியின்றி அந்த இடத்தை காலி செய்து விட்டு அங்கிருந்த துருக்கியர் ஒருவரின் கடையில் சென்று வேலைக்குச் சேர்ந்தேன். தங்குவதற்கும் உணவுக்கும் அவரே ஏற்பாடு செய்துவிட்டு அதற்குரிய தொகையை எனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று பேசிக்கொண்டேன். அக்கடைக்காரர் அப்துர் ரஜா மிகவும் நல்லவர். என்னை தனது மகனைப் போல கவனித்துக் கொண்டார்.
அப்துர்ரஜா அசலில் ஈரானின் குராஸான் பகுதியைச் சேர்ந்த ஷpயாப் பிரிவுக்காரர். நான் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடம் பார்ஸி மொழியைக் கற்றேன். மதிய வேளையில் பஸராவில் அக்கம் பக்கமிருந்த ஷpயாக்கள் எல்லோரும் அங்கே ஒன்று கூடி கதையளப்பது வழக்கம். அவ்வப்போது அரசியல் நிலவரம் குறித்தும் வியாபார சம்பந்தமாகவம் பேச்சுகள் நடப்பதுண்டு. அந்த நேரத்தில் உஸ்மானிய ஆட்சியின் நிலை குறித்தும் இஸ்தான்புல்லின் கலீபாவைப் பற்றியும் குறை பேசுவார்கள். அப்போது முகந்தெரியாத யாராவது வந்துவிட்டால் பேச்சின் போக்கு சட்டென்று திசைமாறி விடும்.
என்னவோ தெரியவில்லை. அவர்கள் என்னை வைத்துக் கொண்டு எல்லாவற்றையுமே பேசினார்கள். நான் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பிறகுதான் அவர்கள் என்னை ஆஜர்பைஜானைச் சேர்ந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியவந்தது. நான் அவர்களிடம் துருக்கி மொழியில் பேசினேன். என் முகத்தோற்றம் சிவப்பும், வெளுப்பும் கலந்ததாயிருந்ததால் நான் ஆஜர்பைஜானைச் சேர்ந்தவனென்று நம்பிவிட்டனர்.
நான் அங்கே வேலை செய்த கொண்டிருந்தபோது அக்கடைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் துருக்கி, அரபி மற்றும் பார்ஸி மொழிகளில் பேசினார். அவர் மார்க்கக் கல்லி பயிலும் மாணவர் உடையை உடுத்தியிருந்தார். அவர் பெயர் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்'. அவர் நீண்ட நெடிய உருவத் தோற்றமும், ரோஷக்காரராகவும், முன் கோபியாகவும் இருந்தார். 
அவருக்கு உஸ்மானிய ஆட்சியாளரை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எப்போதும் அவர்களை தாக்கிப் பேசிக்கொண்டிருப்பார். ஆனால் ஈரானிய ஆட்சியைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அப்துர் ரஜாவிற்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த பழக்கத்திற்குக் காரணம் இருவருமே உஸ்மானிய ஆட்சியை தங்களின் விரோதியாகக் கருதிக் கொண்டிருந்ததே.
ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் புரியவே இல்லை. அப்துர் ரஜா ஷியா. இவர் சுன்னீ. இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதுதான். இதுபோலவே அப்துல் வஹ்ஹாப் பார்ஸி மொழியை எங்கே கற்றுக் கொண்டார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அதேநேரம் பஸராவில் இருந்த மக்கள் பார்ஸி மற்றும் அரபி மொழியையும் பேசுவோராக இருந்தனர்.
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஓர் தந்திரமான எண்ணமுடைய மனிதராகயிருந்தார். அவரது சிந்தனை ஷியா, சுன்னீ என்னும் கருத்து வேறுபாட்டை விட்டும் முழுக்க முழுக்க நீங்கியிருந்தது. எனினும் அங்கிருந்த சுன்னிகள் ஷpயாக்களுக்கு எதிராக இருந்தனர். இதில் சில சுன்னி முப்திகள் ஷpயாக்களை காபிர்களென்றும் கூறிக் கொண்டிருந்தனர். முஹம்மது பின்அப்துல் வஹ்ஹாபிடம் ஹனபி, ஷhபி, ஹன்பலி, மாலிகி போன்ற மத்ஹபுகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லையென்பதையும் கண்டேன். அவர் இறைவன் குர்ஆனில் எதைக் கூறியுள்ளானோ அதுநமக்குப் போதுமென்று கூறினார்.
இன்னும் அவர் குர்ஆன், ஹதீஸைப் பற்றி நன்கு அறிந்தவராயிருந்தார். தமது சிந்தனைக்கு ஆதாரமாக இஸ்லாமிய முன்னோடிகளின் வார்த்தைகளைக் கொண்டு பேசினார்.எனினும் அவரது வார்த்தைகள் அவ்வப்போது பிரபலமான உலமாக்களின் சொல்லுக்கு மாற்றமாகவே வெளிப்பட்டது. அவர் அடிக்கடி நபிகளார் குர்ஆனையும், சுன்னத்தையம் மட்டுமே நமக்கு மாற்றப்பட முடியாத அடிப்படையாக்கித் தந்துள்ளனர். மாறாக நபித்தோழர்கள் மற்றும் இமாம்களின் சொல்லை, வாழ்வை நமக்கு ஆதாரமென்று நபிகளார் கூறவில்லை. ஆதலால் குர்ஆன், சுன்னத்தைப் பின்பற்றுதல் மட்டும்தான் நம்மீது வாஜிபாகும். உலமாக்கள், நான்கு இமாம்கள் மற்றும் நபித்தோழர்களின் கருத்து எதுவாக இருந்தால் நமக்கென்ன? அவர்களின் ஒட்டுமொத்தமான நிலைக்கோ, அல்லத அவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கோ நாம் கட்டுப்பட வேண்டுமென்ற அவசியமில்லையென்றும் கூறுவார்.
ஒருநாள் ஈரானிலிருந்து வந்த ஆலிம் ஒருவருடன் உணவருந்தும்போது அவருக்கும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபிற்குபிடையே வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டத. அந்த ஆலிமின் பெயர் iஷகு ஜவ்வாது கும்மீ. அவரை அப்துர் ரஜா தனது விருந்தினராக அழைத்து வந்திருந்தார். ஜவ்வாது கும்மீக்கும், முஹம்மதுக்குமிடையே அடிப்படையிலேயே கருத்து வேறுபாடிருந்தது. அவ்விருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் துவக்கத்திலேயே சூடு பிடித்துக்கொண்டது. அவர்களிடையே நடைபெற்ற பேச்சு முழுவது மே எனக்கு நினைவில்லை. இருப்பினும் நினைவிலுள்ள சில விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
எடுத்த எடுப்பிலேயே ஷைகு ஜவ்வாது கும்மி முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபை நோக்கி நீர் ஒரு சுதந்திரமான, எவரது சொல்லுக்கும் கட்டுப்படாத எண்ணமுடையவர். இன்னும் நீர் சொல்வது போல இஸ்லாத்தைப் பற்றி அளவுக்கதிகமாகவே நீர் தெரிந்து வைத்திருப்பது உண்மையானால் ஹஜ்ரத் அலீ அவர்களுக்கு ஷியாக்கள் தரும் கண்ணியத்தைப் போன்று நீர் ஏன் கொடுக்கவில்லை.?
முஹம்மத்: ஏனெனில் ஹஜ்ரத் உமர் மற்றும் நபித் தோழர்களுக்கு கண்ணியமளிக்க வேண்டுமென்பது என் மீது கட்டாயமான ஒன்றல்ல. நான் குர்ஆனையும், சுன்னத்தையும் மட்டுமே நம்புகிறேன்.
கும்மீ: சரி. நீர் சுன்னத்தை நம்புவதாயின் நபிகளார் நான் அறிவின் பட்டணம். அலீ அதன் தலைவாயில் என்கூறி அலிக்கும் மற்ற நபித் தோழர்களுக்குமிடையே வித்தியாசம் காட்;ட வில்லையா என்ன?
முஹம்மத்: அவ்வாறாயின் நபிகளார் நான் உங்களிடை'யே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று குர்ஆனும் மற்றொன்று அலீ இப்னு அபீதாலிபும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
கும்மீ;: நிச்சயமாக. அப்படியும் நபிகளார் கூறியுள்ளனர். நான் உங்களிடையே குர்ஆனையும் அஹ்லெ பைத்துகளையும் விட்டுச் செல்கிறேன் எனக் கூறியுள்ளனர். இதில் அஹ்லெ பைத்துகளில் அலீயவர்கள் தலையானவர்களாக இருக்கின்றனர்.
உடனே முஹம்மத் இந்த ஹதீஸை மறுத்தார். எனினும் கும்மீ ஹதீஸ்களின் அறிவிப்பாளரது வரிசைப் பட்டியலின் ஆதாரங்களைக் கொண்டு அந்த ஹதீஸ் சரியானதே என்பதை ஆதாரப்படுத்தவும வேறு வழியின்றி வாய் மூட வந்தது. இருப்பினும் இருந்திருந்தாற்போல் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் கும்மீயை நோக்கி, நபிகளார் நம்மிடையே குர்ஆனையும், தனது அஹ்லெ பைத்தினரை மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர் எனில், சுன்னத் எங்கே போயிற்று?
கும்மீ முஹம்மதைப் பார்த்து, சுன்னத் என்பது குர்ஆனுக்குரிய தப்ஸீரும் விளக்கமுமாகும். அதைத் தவிர வேறில்லை. நபிகளார் கூறினர், இறைவனது வேதமும் எனது குடும்பத்தினரும் அதாவது குர்ஆன் மற்றும் அதன் தப்ஸீரைத்தான் சுன்னத் என்று கூறப்படுகின்றது. அதன்பின் சுன்னத்தென்று தனியாக எங்கே இருக்கின்றது.?
முஹம்மத்: சரி. நீர் கூறுவதுபோல் அஹ்லெ பைத்துகள் தான் குர்ஆனுக்குரிய விளக்கமாக இருக்கின்றனரெனில், எதற்காக ஹதீஸென்ற ஒன்றை தனியாகப் பிரித்து அதன் மூலத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.?
கும்மீ: நபிகளாரின் மறைவுக்குப் பின் அவர்களின் உம்மத்தினர்க்கு குர்ஆனை கற்றுக் கொடுக்க வேண்டியவர்களின் அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் சமூக மக்கள் தம்மை இறைவனது கட்டளைக்கு வழிப்படுத்திக் கொள்ள விரும்பினர். அதனால் நபிகளார் தங்களின் மறைவான ஞானத்தின் அடிப்படையில் குர்ஆனுக்கு விளக்கம்hக தப்ஸீராக ஹதீஸை முன்னிலைப்படுத்தி ஏற்படுத்தித் தந்தனர்.
திகைப்புடன் அவ்விருவரது வாதத்தையும் நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். முஹம்மத் ஷைகு ஜவ்வாத் கும்மிக்கு முன் அறுபட்ட ஒரு பறவையைப் போல துடித்துக் கொண்டிருந்தார். கூண்டில் அடைப்பட்ட கிளியைப் போல் படபடத்துக் கொண்டிருந்தார்.
அதன்பின் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தில் சில நாட்களுக்குப் பின் இவர் ஒருவர் மட்டும்தான் நமது பிரிட்டானிய ஆட்சியாளர்களின் எண்ணத்தை செயல்படுத்தத் தகுதியானவர் என்று முடிவுக்கு வந்தேன். அவரது உயாந்து பறக்க வேண்டுமென்ற ஆசை தன்னை மட்டும் பெரிதாக எண்ணுகின்ற குணம், மமதை, உலமாக்கள் ஷைகுமார்களிடம் அவருக்கிருந்த விரோத மனப்பான்மை, எதுவரை எனில் நாற்பெரும் கலீபாக்கள் கூட அவரது விமர்சனத்திற்குத் தப்பவில்லை. இன்னும் எதார்த்தத்திற்கு மாறாக குர்ஆன் ஹதீஸைவிட்டு விலகி ஓடுகின்ற அவரது பலவீனம் எனக்கு சாதகமாக அவரில் அமைந்திருந்தன.
ஆன எனக்கு முஹம்மதுடன் ஒரு ஆழமான நெருக்கம் ஏற்பட்டு விட்டது. எங்களின் சிநேகிதம் பிரிக்க முடியா வண்ணம் இறுக்கமாயிற்று. நான் அவ்வப்போது அவரிடம் இறைவன் உம்மை ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீயை விட பன்மடங்கு தகுதி வாய்ந்தவராக படைத்திருக்கிறான். அன்றி நீர் நபிகளாரின் காலத்தில் இருந்திருந்தால் நபிகளார் உமக்குத்தான் தமது கிலாபத்தின் முழு உரிமையையும் தந்திருப்பார்களென்று அவருக்குள் சன்னஞ்சன்னமாக அதேநேரம் அவர் நம்பும் விதமாக அவர் மீது மிகுந்த அக்கறையுள்ளவனைப் போல் பேசி வந்தேன்.
அடுத்து ஒருமுறை அவரிடம், இஸ்லாம் மீண்டும் தனது பழைய பொலிவைப் பெற்றிட வேண்டுமாயின் அதை உமது முபாரக்கான கரத்தைக் கொண்டு மட்டுமே செய்ய முடியுமென்று நான் நினைக்கிறேன். அன்றி நீர் ஒருவர் மட்டுமே அஸ்தமனத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ள இஸ்லாத்தை உதயஸ்தானத்திற்கு மீண்டும் கொண்டுவர முடியும். இப்பிரச்சனையில் எல்லோருமே உம்மை மட்டும்தான் நம்பியுள்ளனர் என்றும் கூறி வைத்தேன்.
நான் முஹம்மதுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தேன். அது நாம் இருவரும் சேர்ந்து உலமாக்கள், மார்க்கத்தின் முன்னோர்கள், நபித்தோழர்கள் போன்றோரின் நிலைகளை விட்டு முற்றிலும் கடந்த ஒரு புதிய கோணத்தின் பார்வையில் குர்ஆனைப் பற்றி பேசுவோமென்று முடிவெடுத்தோம். நாங்கள் இருவரும் குர்ஆனைப் பற்றி ஓதி அதிலுள்ள வசனங்களை எங்களின் அறிவின் பார்வைக் கொண்டு யோசித்தோம். இதில் எனது எண்ணம் முழுவதும் ஆங்கிலேய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் லட்சியத்தை செயல்படுத்தும் திட்டத்தில் அவரை சிக்க வைக்கும் முயற்சியில் இருந்தது.
நான் மெல்ல மெல்ல அந்த உயர்ந்த பறக்கத்துடிக்கும், தன்னை மிகப் பெரியவனாக நினைத்துக் கொண்டிருக்கம் அந்த மனிதரை எனது வார்த்தை ஜாலங்களால் வளைக்கத் துவங்கினேன். நான் எண்ணியதை வி;ட மிக மிக அதிகமாகதுவே தனது மனோ விகாரங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதைக் கண்டேன்.
ஒரு நாள் அவரிடம், ஜிகாத் வாஜிபா என்ன? என்று கேட்க, அதற்கவர், ஏன் இல்லை? இறைவன் காபிர்களோடு ஜிஹாத் செய்யுங்களென்று கூறுகின்றானே? என்று கூற, அதற்கு நான், இறைவன் காபிர்கள் மற்றும் முனாபிக்கீன்களுடனும் ஜிஹாத் செய்யுங்களென்றல்லவா கூறுகின்றான்! இதன் மூலம் காபிர் முனாபிக் ஆகிய இரு சாராரோடும் ஜிஹாத் வாஜிப் எனில், நபிகளார் முனாபிக்குகளுடன் ஏன் ஜிஹாத் செய்ய வில்லை? என்று திருப்பிக் கேட்கவே,….
அதற்கு முஹம்மத், வெறும் களத்தில் மட்டுமே நடைபெறும் யுத்தத்திற்கு ஜிஹாத் என்று சொல்லப்படுவதில்லை. நபிகளார் தங்களின் நல்லொழுக்கத்தைக் கொண்டும், நற்பண்புகள் மூலமும் முனாபிக்கீன்களோடு ஜிஹாத் செய்தனர் எனக் கூறவும், நான், அவ்வாறாயின் காபிர்களுடனும் அத்தகைய ஜிஹாத்தை நபிகளார் ஏன் நடத்தவில்லை? எனத் திருப்பிக் கேட்கவே, அதற்கவர், இல்லை. நபிகளார் அவர்களுடன் போர்களத்தில் ஜிஹாத் செய்துள்ளனர் என்று கூறினார்.
உடனே நான் காபிர்களோடு நபிகளார் நடத்திய போர் அவர்களை அழித்தொழிப்பதற்காக நடத்தப்பட்டதாகும். ஏனெனில் அவர்கள் நபிகளாரின் உயிருக்கு உலை வைக்கின்ற விரோதிகளாயிருந்ததே என்று கூறவும், முஹம்மத் ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தனது தலையை ஆட்டினார். இப்போது நான் எனது முயற்சியில் வெற்றி பெறத் துவங்கி விட்டேன் என்பது எனக்குப் புலனாகத் துவங்கிற்று.
இதேபோன்று இன்னொருநாள் நான் அவரிடம், பெண்களோடு 'முத்ஆ' (தவணை முறை திருமணம்) ஜாயிஸா எனக் கேட்க, அதற்கவர், கண்டிப்பாகக் கூடாதென்று சொல்ல, அவ்வாறாயின் பின்பு ஏன் குர்ஆன் அவர்களின் நின்றும் நீங்கள் இன்பம் நுகர்ந்தால் அவர்களுடைய கூலிகளை கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறது? ஏன்று நான் திருப்பிக் கேட்கவும்,……
அதற்வர் ஆயத்தில் சொல்லப்பட்டிருப்பது சரிதான். ஆனால் ஹஜ்ரத் உமர் அதை ஹராமாக்கி விட்டனர். முத்ஆ நபிகளார் காலத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்தது. நான் அதை ஹராமாக்குகிறேன். இப்போது எவரேனும் இவ்வாறு நடந்தால் அவர்களுக்கு நான் தண்டனை விதிப்பேன் என்பதாகக் கூறுகின்றனர், என்றார்.
அதற்கு நான், ஆச்சரியமாயிருக்கிறது. நீ ஹஜ்ரத் உமரையல்லவா இவ்விஷயத்தில் பின்பற்றுகிறாய்? அதே நேரம் உன்னை உமரை விட அறிவுள்ளவனென்றும்  சொல்லிக் கொள்கிறாய். ஹஜ்ரத் உமருக்கு என்ன அதிகாரமிருக்கிறது? அவர் நபிகளார் ஹலாலாக்கியதை ஹராமாக்குவதற்கு? நீ குர்ஆனை விட்டுவிட்டு ஹஜ்ரத் உமரின் விருப்பத்தைப் பின்பற்றுகிறாய் என்றேன்.
நான் கூறியதைக் கேட்டு முஹம்மத் ஒன்றும் பேசாது மௌனமாயிருந்தது அவர் அக்கருத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்கு ஆதாரமாயிருந்தது. இப்பிரச்சனையில் அவரது எண்ணத்தை என் இசைவுக்குத் தகுந்தவாறு திருப்பி அவரது சரீர இச்சையை தூண்டிவிடத் துவங்கினேன். அதற்குத் தோதாக அவரும் ஒரு கட்டுப்பாடற்றவராக இருந்ததால், மெல்ல அவரிடம் என்ன?நீ முத்ஆ மூலம் உன் வாழ்க்கையை இனிமையாக்கிக்க கொள்ள விரும்புகிறாயா? என்றேன். அதனை ஆமோதிப்பதைப் போல்  அவர் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார்.
நான் இப்போது எனது குறிக்கோளில் பாதி எல்லைக்கு வந்திருந்தேன். நான் அவரிடம் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என வாக்களித்தேன். அதே நேரம் பஸராவிலிருந்த சுன்னிகள் முத்ஆவுக்கு எதிராக இருந்ததால் எங்கே முஹம்மத் அவர்களுக்குப் பயந்து எனது இத்திட்டத்திலிருந்து நழுவி விடுவாரோ என்று பயந்ததால், அவரிடம் நான், இது நம்மிருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமலேயே இருக்கும். அத்துடன் முத்ஆவின் மூலம் உன்னுடன் இணையப் போகும் பெண்ணுக்கு உனது பெயரைக் கூட சொல்ல மாட்டேன் என்று தைரியமூட்டிவிட்டு, ஆங்கிலேய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் உளவறிய அனுப்பப்பட்டிருந்த அந்த கிறித்துவப் பெண்ணை தேடிச் சென்றேன். அவள் பஸராவிலிருந்த வாலிபர்களை தன் வலையில் சிக்க வைத்து வழிகெடுத்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் விபரம் முழுவதையும் சொல்லவே அவள் சம்மதித்தாள். தற்போதைக்கு அவளது பெயரை 'ஸபிய்யா' என்று வைத்தேன். அதன்பின் iஷகை அழைத்துக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு வந்தேன்.
குறிப்பிட்ட அன்று முஹம்மதை அழைத்துக் கொண்டு ஸபிய்யாவின் வீட்டுக்கு வந்தபோது, அங்கே எங்கள் இருவரைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் ஒரு அஷ்ரபி மஹ்ரைக் கொண்டு ஒரு வாரத்திற்கு ஸபிய்யாவுடன் ஒப்பந்தம் செய்து  கொண்டார். சுருங்கக் கூறின் நான் வெளியேயும், ஸபிய்யா உள்ளேயும் இருந்து முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எங்களின் வருங்காலத்திற்குரிய திட்ட நடவடிக்கைகளுக்காக தயார் செய்து கொண்டிருந்தோம். ஸபிய்யா முஹம்மதை மார்க்கச் சட்டங்களை மாற்றியமைக்கவும், தன்னிச்சையான விருப்பத்திற்குத் தகுந்தவாறு அவரை மாற்றிடவும் அவரது மூளைக்கு உரமேற்றினாள்.
நான் மூன்று நாட்களுக்குப் பின் முஹம்மதை மீண்டும் சந்'தித்தபோது திரும்பவும் ஒருமுறை மார்க்க சம்பந்தமாக பேசத் துவங்கினோம். இம்முறை பேச்சு மதுவைப் பற்றியதாயிருந்தது. அவர் குர்ஆன் மதுவை தடை செய்கின்ற வசனத்தை எனக்குக் கூறினார். நான் அவரிடம்,….
முஆவியா, யஜீத், பனீ உமைய்யா, பனீ அப்பாஸ் போன்ற கலீபாக்களெல்லாம் மது அருந்தவில்லையா? அவர்கள் நம்மை விட குர்ஆனையும், சுன்னத்தையும் அதிகமாகத் தெரிந்தல்லவா வைத்திருந்தனர். பின்னும் அவர்கள் குர்ஆனைக் கொண்டும் நபிவழியைக் கொண்டும் ஆய்வு  செய்ததது மது  ஹராமானது என்பதை அல்ல. மாறாக வெறுக்கத்தக்க ஒன்றென்றுதான் முடிவு செய்தி'ருந்தனர்.
அதன்றி யூத கிறித்துவர்களின் வேதங்களில் கூட மது அருந்தலாமென்று பகிரங்கமாக கூறப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியம்? இறைவனது ஒரு மார்க்கத்தில் ஹலாலாக்கப்பட்ட மது இன்னொரு மார்க்கத்தில் ஹராமாகும்?  எல்லா வேதங்களுமே இறைவனால் இறககியருளப்பட்து தானே. அது மட்டுமல்ல. ஹஜ்ரத் உமர் என்ன? நீங்கள் மதுவை விட்டும் சூதாட்டத்தை விட்டும் விலக மாட்டீர்களா? என்றும் ஆயத் இறக்கப்படும் வரை மது அருந்தியுள்ளார்களே!
இன்னும் மது ஹராமாக இருந்திருந்தால் நபிகளார் உமர் மீது தண்டணையை விதியாக்கி இருப்பார்களல்லவா?  எனவே நபிகளார் உமருக்குத் தண்டனை விதிக்காதிருந்ததே மது ஹராம் அல்ல என்பதற்குரிய ஆதாரமாகும் என்றேன்.
நான் கூறியதனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவராக ஒரு அறிவிப்பில் ஹஜ்ரத் உமர் மதுவில் தண்ணீரைக் கலந்து அதன் போதைத் தன்மையை முறித்து அருந்தியுள்ளனர். இன்னும் அவர்கள் மதுவில் ஏற்படும் போதைதான் ஹராமேயன்றி மது ஹராமல்ல. எந்த மதுவில் போதை இல்லையோ அது ஹராம் அல்ல என்றும் கூறியுள்ளனர் எனக் கூறினார்.
என் முயற்சி அனைத்தும் எனக்கு முன்னாலேயே தண்ணீர் ஊற்றி அணைக்கப்படுவதைக் கண்ட நான் உடனே அப்பேச்சை நிறுத்திக் கொண்டேன். அதன்பின் அதைப்பற்றி நான் அவரிடம் பேசவில்லை.
அச்சம்பவத்திற்குப் பின் எனது குறிக்கோள் முழுவதும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்பை வழிநடத்திச் செல்வதும் அவரை என் வழிக்குத் தோதாகத் திருப்புவதிலுமே இருந்தது. நான் அவரது மனதை ஊடுறுவி அவரது எண்ணத்தில் ஷியா, சுன்னீ போன்ற பிரிவுகளற்ற மூன்றாவது ஒரு புதிய பிரிவை உண்டாக்குவதற்கு அவரை தயார் படுத்த வேண்டியிருந்தது. இக்குறிக்கோளை நான் அடைவதற்காக அவரது எண்ணத்தில் ஆட்கொண்டிருந்த அர்த்தமற்ற நேசத்தையும், குருட்டுத்தனமான காழ்ப்புணர்வையும் நீக்கி அவரை தன்னிச்சையான போக்குடைய தன் விருப்பத்திற்கு இசைவான நடைமுறையின் பக்கம் இட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அம்முயற்சியில் ஸபிய்யாவும் எனக்கு உறுதுணையாக விளங்கினாள். ஏனெனில் முஹம்மத் அவளை ஒரு பைத்தியக்காரனைப் போல நேசித்தார். ஒவ்வொரு வாரமும் முத்ஆவின் தவணையை அவர் நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். காரணம் ஸபிய்யா முஹம்மதை அந்த அளவுக்கு தன் வலையில் சிக்க வைத்திருந்தாள்.
ஒரு நாள் நான்  அவரை சந்தித்தபோது என்ன? நபிகளாருக்கு எல்லா தோழர்களுடனும் நட்பிருந்ததா? எனக்  கேட்க, ஆம் என்றார். மறுபடியும் நான் இஸ்லாமியச் சட்டங்கள் நிரந்தரமானதா? தற்காலிகமானதா? எனக் கேட்க, கண்டிப்பாக நிரந்தரமானதாகும். இது பற்றி நபிகளார் முஹம்மத் நபியால் ஹலாலாக்கப்பட்டவையனைத்தும் மறுமை நாள் வரை ஹலாலாகும். இவ்வாறே முஹம்மத் நபியால் ஹராமாக்கப்பட்டவையனைத்தும் மறுமை நாள் வரை ஹராமாகும். எனக் கூறுகின்றனர் என்று சொல்லவும்,…
நான் சற்றும் தாமதிக்காது நாம் இருவரும் அந்த சுன்னத்தைக் கடைபிடித்தவர்களாக சகோதரர்களாக ஆகி விடுவோம் என்றேன். அதை அவர் அங்கீகரித்தார். அதன்பின் நாங்களிருவரும் ஒன்றாகவே இருந்தோம். எல்லா ஊர்களுக்கும் பயணம் செய்தோம். நான் எனது முயற்சியில் எனது இளமை முழுவதையும் செலவு செய்திருந்தேன். இப்போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் ஊன்ற வைத்த மரத்தின் பழத்தையம் பறித்துத் திண்ண விரும்பினேன்.
வழக்கம்போல ஒவ்வொரு மாதமும் என்செய்திகளை ஆங்கிலேய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து அனுப்பி வந்தேன். அங்கிருந்து எனக்கு வந்த பதில்களனைத்தும் எனக்கு ஊக்கமளிப்பதாகவும், எனது முயற்சியின் வெற்றிக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் தைரியமளிப்பதாகவும் இருந்தன.  இன்னும் முஹம்மதுடன் நான் எ னது லட்சியத்தில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தேன். எங்காவது தங்கினாலும், பிரயாணம் செய்தாலும் அவரைத் தனியாக விட்டுவிடாமல் அவருடனேயே ஒட்டிக் கொண்டிருந்தேன். எனது முயற்சி முழுவதும் அவரை சுதந்திரமான போக்குடையவராக மாற்றி மார்க்க கொள்கையில் புதிய ஓர் பிரிவை தோற்றுவிக்க வைத்திட முயன்று வந்தேன். இதற்காக அவரிடம் உன்னைத் தலைவனாக ஏற்று உனக்கு வழிப்பட்டடு நடக்கம் மக்கள் சமுதாயத்தைக் கொண்ட மிகப்பெரிய எதிர்காலம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறதென்று அவ்வப்போது அவருக்குள் ஆசைத் தீயையும் மூட்டி வந்தேன்.
ஒருநாள் நான் அவரிடம், நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அக்கனவில் இறுதி நபியைக் கண்டேன். நபிகளார் உபன்னியாசம் செய்யும் உலமாக்களைப் போல் நாற்காலி ஒன்றில் அமர்ந்துள்ளனர். நான் இரு வரை கண்டிராத உலமாக்களும் மார்க்கப் பெரியோர்களும் நபிகளாரைச் சூழ்ந்து நாற்புறமும் அமர்ந்துள்ளனர். இதற்கிடையே நீ திடீரென அச்சபைக்குள் வந்து பிரவேசிக்கிறாய். உனது முகத்திலிருந்து ஒளிக்கதிர்கள் வீசிக் கொண்டிருக்கின்றன. நபிகளாரை நீ நெருங்கவும், அவர்கள் எழுந்து நின்று உனக்கு மரியாதை செய்தவர்களாக உனது நெற்றியை முத்தமிட்டு விட்டு, உன்னை நோக்கி,….
ஓ! என' பெயரைக் கொண்டிருப்பவரே! நீர் எனது கல்வியின் வாரிசும், முஸ்லிம்களின் தீன் துன்யாவை சிறப்பாக்கி வைக்கும் எனது பிரதிநிதியாகவும் இருக்கிறீர் எனக் கூற, அதைக் கேட்டு நீ, யாரஸூலல்லாஹ்! என் கல்வியறிவை ஜனங்களிடையே வெளிப்படுத்த அஞ்சுகிறேன் என்று கூறுகிறீர். அது கேட்ட நபிகளார் அச்சத்திற்கு உன்' உள்ளத்தில் இடம் கொடாதீர். ஏனெனில் நீர் உம்மைப் பற்றி என்ன நினைத்:துக் கொண்டிருக்கிறீரோ அதைவிடப் பன்மடங்கு நீர் உயர்ந்த அந்தஸ்துடையவராக இருக்கிறீர் என்று கூறுகின்றனர் என்பதாக பொய்யான கனவொன்றைக் கூறினேன்.
இதைக்கேட்டு விட்டு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் மகிழ்ச்சியின் விளிம்பிற்கே சென்று விட்டார். அவர் திரும்பத்  திரும்ப என்னிடம் உன் கனவு உண்மையாகுமா? என்று கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவரைத்  தொடர்ந்து தேற்றிக் கொண்டிருந்தேன். இக்கனவைக் கேட்டவுடன் அவர் தன் உள்ளத்தில் ஒரு புதிய மத்ஹபைப் பற்றிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்து விட்டார் என்பதையும் நான் உணர்ந்த கொண்டேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates