Elegant Rose - Diagonal Resize 2 2011 ~ TAMIL ISLAM

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!

தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!


எழுதியவர்:- மௌலானா மௌலவி அஷ்ஷெய்குல் காமில் அல்ஹாஜ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள்.
முன்னுரை:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபடட்ட கொள்கைகளையுடையவர்களை மக்கள் மத்தியில் இனம் காட்டி அதைவிட்டு விலகி இருக்கச் செய்து  மக்கள் நேரான பாதையில் சென்று சொர்க்கத்தை அடையும் செய்யும் பணியை இறைநேசர்களும், ஷெய்குமார்களும், சாலிஹீன்களும் தொடர்ந்து அக்காலம் தொட்டே செய்து வருகின்றனர். அதில் தமிழகத்தில் புதிதாக காலூன்றிய தப்லீக் ஜமாஅத் என்ற இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்கள், அவர்களின் வஹ்ஹாபியக் கொள்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் தனி ஒரு நபராக நின்று  அவர்களின் முகத்திரையைக் கிழித்து மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியவர்கள் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். இதற்காக பல்வேறு நூல்களும், பிரசுரங்களும், விவாதங்களும், மார்க்க உரைகளும் நிகழ்த்தியுள்ளார்கள்.
தப்லீகு ஜமாஅத் பற்றிய நமது சுன்னத் ஜமாஅத்தினர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விதமாக பதில் கூறுவதாக கூறிக் கொண்டு தப்லீகு இயக்கத்தைச் சார்ந்த மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி என்பவர் தமிழில் வெளியிட்டார். அதில் அவர் பதில் கூறுவதாக கூறிக் கொண்டு, மீண்டும் குப்ர் என்னும் சேற்றிலே வீழ்ந்து குப்ரிலே மடிவதைப் பார்த்து அவர்களின் மடத்தனமான பதில்களுக்கு ஷெய்குநாயகம் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் எழுதிய பதில் கட்டுரை அந்நளை 'ஹுஜ்ஜத்' மாத இதழில் 1980 ம் ஆண்டு வெளிவந்தது. அதில் வெளிவந்த கட்டுரையை இதில் பிரசுhரித்துள்ளோம். 'ஹுஜ்ஜத்' பத்திரிகை வெளிவருவது நின்று போனதால் அதில் வந்த இந்த பதில் கட்டுரை முழுமை பெறாமல் நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் எமக்கு  ஷெய்குனா அவர்கள் எழுதிய இக் கட்டுரையின் மீதிப் பகுதி கிடைக்கவில்லை. கிடைத்ததும் மீதிப் பகுதிகள் வெளியிடப்படும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!
அன்பர்களே!
இல்யாஸ் தப்லீகின் தலைவர்கள் ஷரீஅத் கொள்கைகளுக்கு புறம்பான அநேக புரளிகளை தங்கள் கிரந்தங்களில் வரைந்து வைத்துள்ளனர்.
இவைகளை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அத்தவறுகளை கண்டித்தும் அவைகளுக்கு தக்க பதில்களையும், ஸுன்னத் வல் ஜமாஅத் மாமேதைகள் எழுதி கோடிட்டு காட்டியுள்ளனர்.
எனினும் தவறுதல்களுக்கு வழிபோய் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்கி மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி என்பார் 'தகாத குற்றச் சாட்டும் தக்கபதிலும்' என்ற பெயரால் மக்களை ஏமாற்றும் வண்ணம் ஒரு நூலை தானே புரிய முடியாத வகையில் பதில் என்ற பெயரால் ஏதேதோ எழுதி வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த ரசமான ஆராய்ச்சிக் கட்டுரை 2-வது குறு;றச்சாட்டின் அவரது தன்னறிவிலா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டாகும். விருப்பு-வெறுப்பு அன்றி உணர்ந்து ஆராய்வோருக்கு இது ஒரு நல்ல விருந்து.
(ஆசிரியர்)
குற்றச்சாட்டு 2:
மௌலானா இஸ்மாயில் ஷஹீது அவர்கள் மீது 'தொழுகையில் ஷெய்கு அவர் போன்ற பெரியார்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களானாலும் சரிதான். இவர்களுடைய ஞாபகம் வருவதானது ஜினா செய்கிற நினைப்பும் ஏன் தனது ஆடு, மாடு, கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டதாகும்.
(ஸிராதே முஸ்தகீம்)
பதில் 2:
நூலுக்கு நூல் வேறுபாடு
மேற்கண்ட வாக்கியம் ஹஜ்ரத் இஸ்மாயில் அவர்கள் எழுதியதாம். தப்லீக்கையும் அதன் தலைவர்களையும் தாக்கி எழுதப்பட்ட நூலொன்றிலிருந்து இவ்வாக்கியம் அப்படியே எடுத்தெழுதப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நமது மறுப்பாளர்கள் எழுதிய நூற்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் இவ்வாக்கியம் வௌ;வேறு மாதிரி எழுதப்பட்டுள்ளது. ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம். ஒன்றில் குறைவு. ஒரே நூலிலிருந்து எடுத்தெழுதப்படுவதில் வேறுபாடு ஏன் வருகிறது?
ஸிராதே முஸ்தகீம் யார் எழுதியது?
இஸ்மாயில் ஷஹீது எழுதிய ஸிராதே முஸ்தகீம் என்று கூறுகிறார்கள். ஷஹீது அவர்கள் இப்படி ஒரு நூல் எழுதவேயில்லை. ஆம். ஆச்சரியப்பட வேண்டாம்.உண்மை அதுதான். மறுப்பு எழுதப் புறப்படுவோர் அட்டைகளை மட்டும் பார்த்து ஏமாந்து விட்டால் எப்படி? சற்று ஆராய்ந்தும் பார்க்க வேண்டாமா? உண்மையில் இந்த நூல் இஸ்மாயில் ஷஹீது அவர்களது ஷெய்குனா ஹஜ்ரத் ஸெய்யித் அஹ்மது ஷஹீது அவர்களது பேச்சுத் தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் நான்கு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதலாவதும் மூன்றாவதும் ஷஹீது அவர்கள் தொகுத்ததுதான். ஆனால் குற்றச்சாட்டு வாக்கியம் இவ்விரண்டு பகுதியில் உள்ளதல்ல. இரண்டாம் பகுதியிலே உள்ளதாகும். இது ஸெய்யித் அஹ்மது ஷஹீது அவர்களது முரீதுகளில் ஒருவரான மௌலானா அப்துல்ஹை ஸாஹிபு (ஷாஹ் அப்துல் அஸிஸ் தெஹ்லவியின் மருமகனார்) அவர்களால் தொகுக்கப்பட்டதாகும். ஆக குற்றச்சாட்டுப் பகுதி இஸ்மாயில் ஷஹீது எழுதியதுமல்ல. தொகுத்ததுமல்ல.
இல்லாததை எழுதுவது ஏனோ?
மறுப்பாளர்களது எந்த நூலிலும், ஸிராதே முஸ்தகீமில் உள்ள உண்மையான வாக்கியம் காணப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியத்தில் 'ஜினா செய்கிற நினைப்பும்'  என்பது வாக்கியத்தின் இடையிலில்லாத ஒன்று. இங்கு குறிப்பிடப்பட்ட வாக்கியத்தில் அஸல் நூலில் இப்படி ஒன்று இல்லவே இல்லை. இருக்கிறது என்றதால் அது இதற்கு மேலுள்ள வாக்கிய முடிவில் இருக்கிறது. இந்த வாக்கியத்தின் இடையில் அல்ல. வேண்டுமானால் தேவ்ந்து ராஷஷிது கம்பெனரியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகிமில் 97 வது பக்கத்தில் இரண்டாவது வரியைப் பாருங்கள். அஸல் நூல் பார்ஸி மொழியில் உள்ளது. அதை உர்துவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகளைச் செய்து பரேலியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து இவர்களும் கூறிவிட்டார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ஆக உண்மையில் குற்றம் சாட்டப்படும் வாக்கியம் நூலில் இந்த விதமாக இல்லை. அப்படி யாரும் காட்ட முடியாது.
அவருடைய இந்த கட்டுரயின் சாராம்சம்:
1. ஸிரதே முஸ்தகீம் இஸ்மாயில் சாஹிபு கோர்வை செய்த நூலல்ல. அது ஸெய்யித் அஹ்மத் அவர்களின் வாசகத் தொகுப்புதான். அதை தொகுத்தவர்தான் இஸ்மாயில் ஷஹீது.
2. குற்றச்சாட்டு வாசகம் தொழுகையில் செய்கு, அவர் போன்ற பெரியர்கள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களானாலும் சரிதான். இவர்களுடைய ஞாபகம் வருவதானது, ஜினா செய்கிற நினைப்பும் ஏன் தனது ஆடு, மாடு, கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டதாகும். இது மறுப்பாளர் ஒருவரின் நூலொன்றிலிருந்து அப்படியே எடுத்தெழுதப்பட்டுள்ளது.
3. மறுப்பாளர்கள் எழுதிய நூற்கள் ஒவ்வொன்றிலும் வௌ;வேறு விதமாக, ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம் ஒன்றில் குறைவு.
(வேறே இன்ன நூலில் இன்ன விதம் எழுதப்பட்டுள்ளது என்று காட்டப்படவில்லை)
4. குற்றச்சாட்டு வார்த்தை ஸெய்யிது அஹ்மத் ஸாஹிபுடைய வார்த்தை. அதை தொகுத்தவர் மெலான அப்துல் ஹை அவர்கள்தான். ஆகையினால் குற்றச்சாட்டு வார்த்தை இஸ்மாயில் ஸாஹிபு எழுதியதுமல்ல. அவர்கள் தொகுத்ததுமல்ல. (குற்றச்சாட்டு வார்த்தை 'ஜினா செய்கிற நினைப்பு…. என்பது மட்டும்தான் என்றும் அதை சொன்னது செய்யிது அஹ்மது அவர்கள்தான்.  அதைத் தொகுத்தது மௌலானா அப்துல் ஹை அவர்கள்தான். ஆகையால் அதற்கு பொறுப்பாளி இஸ்மாயில் ஸாஹிபு இல்லை. என்றும் கருதுகிறார் போல்)
5. (குற்றச்சாட்டு வாக்கியமான) ஜினா செய்கிற நினைப்பு…. என்பது வாசகத்தின் இடையில் இல்லை. அது வாசகத்தின் மேலாலுள்ள வாக்கியத்தின் முடிவில் இருக்கிறது. வேண்டுமானால் ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட 'ஸிராதே முஸ்தகீமை' பாருங்கள். குற்றச்சாட்டு வாசகமான 'ஜினா செய்கிற நினைப்பும்…' என்பது வாசகத்தின் நடுவில் இல்லாத்ததனால் அது குற்றச்சாட்டு வாசகமாக ஆகாதென்றும் ஆகையினால் செய்யித் அஹ்மது, மௌலானா அப்துல் ஹை இவர்கள் இருவருங்கூட அதற்கு பொறுப்பாளிகள் அல்ல என்றும் நினைக்கிறார் போலும்.
அஸல் நூல் பார்ஸி பாiஷயிலுள்ளதை பரேலியர்கள் உர்துவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்து குற்றம் சாட்டுகுpறார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பார்த்துவிட்டு இவர்களும் கூறிவிட்டார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
(ராஷிது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீம் என்ற நூலை கண்திறந்து பார்த்தூனா இப்படி எழுதுகிறார். இல்லை தூக்க மயக்கத்தில் தேவ்பந்தே சொல்வதைக் கேட்டுதான் சொல்கிறார்கள். த.ப. ஆசிரியர் அவர்களே! கண் விழித்து பாருங்கள். அந்த ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமையே வாங்கி வைத்திருக்கிறோம்)
வாசகர்களே!
எதார்த்தத்தில் குற்றச்சாட்டு வாசகம் எதுதான் என்று நன்றாக விளங்கிக் கொள்வதற்காக, இவர்கள் எதை குற்றச்சாட்டு வாசகமென்று விளங்கிக் கொள்கிறார்களோ, அந்த வாசகத்திற்கு கொஞ்சம் மேலாலிருந்தே அதற்கு கீழாலும் கொஞ்சம் வாசகம் வரையிலும் சேர்ந்தாற்போல் ராஷpது கம்பெனியால் அச்சிடப்பட்ட உர்து ஸிராத்தெ முஸ்தகீமிலிருந்து உருது வாசகத்தை தமிழில் எழுதி ஒன்றும் அந்த உரு வாசகத்ததுக்கு தமிழில் மொழிபெயர்த்து ஒன்றும், இத்துடன் வைத்திருக்கிறோம். மேலும் அவற்றில் குற்றச்சாட்டு வாசகமொன்று சொல்லப்படட்ட வாசகத்திற்கு (2) என்றும் அதற்கு மேலாலுள்ள வாசகத்திற்கு (1) என்றும் அதற்கு கீழாலுள்ள வாசகத்திற்கு (3) என்றும் இலக்கமிடப்பட்டிருக்கிறது.
ராஷிது கம்பெனியின் உர்து ஸிராத்தே முஸ்தகீமின் 97-ம் பக்கத்திலுள்ள உர்து வாசகத்தை தமிழில் எழுதப்பட்டது.
1. பமுக்தளாயே – ளுலமாதுன்பஃழுஹா பௌக-பஃளின்-ஜினாகே-வஸ்வஸே ஸே-அப்னீ-பிபீகீ-முஜாமஅத்-கா-கியால்-பெஹ்தர்-ஹே-
2. அவுர்-ஷெய்கு-யா-உஸீ-ஜெய்ஸே-அவுர்-புஸ்ருகோன்-கீ-தரப்-காஹ் ஜனாப்-ரிஸாலத்-மஆப். ஹீ-ஹோன்-அப்னீ-ஹிம்மத்-கூ-லகா தேனா-அப்னே-பைள்-அவுர்-கத்தே-கீ-ஸூரத்-மே முஸ்தஃறிக் ஹோனே-ஸே-ஃபுறாஹே-கி-யௌன்னே- nஷய்க்-கா-கியால் தோ- தஃழீம்-அவர்-புஜ்ரு-கீ-கே-ஸாத். இன்ஸான்கே-தில்-மே-சமட்ஜாதா-ஹே-அவர்பைள்-அவர்-கத்தே-கூ-ந-தோ-இஸ்கதாட. சஷ;பீதகீ-ஹோ-தீ-ஹே-அவ்ர்-ந-தஃழீம்-பல்கே-ஹகீர்' அவுர் தலீல்-கோதா-ஹே. அவுர்-ஙைர்-கீ-ஏ-தஃழீம். அவுர்-புஜ்ருகீ-ஜோ-நமாஜ்-மே-மழ்ஹூல்-ஹோ-ஓ-ஷpர்க்-கீ-தரப்-கீஞ்சுகர்-லேஜாதீ-ஹே.
3. குறிப்பு: ஹாஸில்-கலாம்-இஸ்ஜகா-வஸ்வ ஸோன் கே-தபாவுத்-கா-பயான்-கர்னா-மக்ஸூத்ஹே-
குறிப்பு:- முஜ்தபாயீ அச்சகத்தின் பார்ஸி ஸிராதே முஸ்தகீமில் இப்படி இருக்கிறது.
ப-சற்தீன்-மர்தபா-பத்தர்.
கியாலே-ஆண்.
ராஷிது கம்பெனியின் உருது ஸிராதே முஸ்தகீமின் தமிழாக்கம்.
1. 'இருள்கள், அதில் சிலது சிலதுகு;கு மேலே உள்ளது என்பதற்கொப்ப ஜினா செய்கிற ஊசாட்டத்தை இலேசான நினைப்பை விட தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பு நல்லது. இன்னும்,
2. ஷெய்கு அல்லது அவர் போன்ற வேறு பெரியார்கள், ஜனாப் றஸூலுல்லாஹ் அவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பக்கம் தனது ஹிம்மத்தை – கவனத்தை திருப்புவதானது தனது மாடு கழுதையின் ஸூரத்தில் மூழ்கினவனாக ஆவதை விடவும் கெட்டதாகும். ஏனென்றால் nஷய்குடைய கவனமாகிறது மரியாதை – பெருந்தன்மையோடு மனிதனுடைய கல்பில் பற்றிக் கொள்ளும். மாடு, கழுதைக்கோ இம்மாதிரியான பற்றுதலும், மரியாதையும் உண்டாகாது. எனினும் குறைவானதாக தழுமையானதாகவே வரும். தொழுகையில் மற்றவர்களை இப்படி மரியதையாக உயர்வாக கவனிப்பதும் நினைப்பதுமானது ஷpர்க் அளவில் இழுத்துக் கொண்டு போய்விடும்.
3. முடிவான பேச்சாகிறது இந்த இடத்தில் வஸ்வஸாவின் – ஊசாட்டங்களின் ஏற்ற தாழ்வுகளைப் பற்றி விபரிப்பதாகும்.
குறிப்பு: முஜ்தபாயீ அச்சகத்தின் பார்ஸீ ஸிராதே முஸ்தகீமில் இப்படி இருக்கிறது.
எத்தனையோ தரத்தில் கெட்டதாகும்.
அவர்களுடைய கியால் – கவனமாகிறது.
த.ப. ஆசிரியர் அவர்களே!
தேவ்பந்த் ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமைத்தான் வாங்கி வைத்திருக்கிறோம். அதைப் பார்த்தோம். அந்த நூலின் முன்னால் முகப்பில் 'இது அஸ்மாயில் ஷஹீது அவர்களால் பார்ஸி பாiஷயில் கோர்வை செய்யப்பட்ட நூலுக்கு முஹம்மது அத்ஹர் உதுமானியின் முயற்சியால் உர்துவில் மொழி பெயர்க்கப்பட்ட ஸிராதெ முஸ்தகீம். தேவ்பந் ராஷpது கம்பெனி அஷ;ரபிய்யா குதுப்கானாவில் வெளியிடப்பட்டது' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் நீங்கள் 'அதை உர்துவில் மொழிபெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்து பரேலியர்கள்….. வேண்டியுள்ளது' என்று எழுதியது சுத்தப் பொய்யாகும். பரேலியர்கள் பேரில் படுதூறு சொல்வதாகும். இன்னும் மறுப்பாளர்கள் பேரில் கெட்ட எண்ணம் வைப்பதாகும்.
ஸிராதே முஸ்தகீம் என்ற நூல் இஸ்மாயீல் அவர்களின் nஷய்கு செய்யித் அஹ்மத் அவர்களின் பேச்சுத் தொகுப்பென எழுதியதும் சுத்தப் பொய்யாகும். இது செய்யிது அஹ்மது சாஹிபை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இஸ்மாயில் ஸாஹிபு எழுதியதேதான். இந்த நூலிலேயே இஸ்மாயில் சாஹிபு எழுதி இருப்பதைப் பாருங்கள்.
ராஷpது கம்பெனியின் உருது சிராதே முஸ்தகீம் 3-ம் பக்கத்திலிருந்து 4-ம்; பக்கம் ஆரம்பம் வரை தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது இப்படி:
இஸ்மாயில் சொல்கிறார், 'இந்த நூலை எழுதிக் கொண்டிருக்கிற போது ஹளரத் செய்யித் அஹ்மது சாகிபுடன் ஒன்றாகவே இருக்கிறவர்களிலொருவரான மௌலானா அப்துல் ஹை அவர்களால் எழுதப்பட்ட சில தாள்கள் கிடைத்தது. அதில் மௌலானா அவர்கள் செய்யிது சாஹிபுடைய வாயிலிருந்து கேட்டு எழுதிய உபதேசமான சில கட்டுரைகளுமிருந்தது. அதை பெரும் பாக்கியமாகக் கருதி அப்படியே இந்த நூலின் இரண்டாவது மூன்றாவது பாடங்களில் சேர்த்து விட்டேன்.
இந்த நூலைக் கோர்வை செய்த முறையானது இந்த நூலின் அனேக கட்டுரைகளை ஜனாப் செய்யிது சாஹிபு அவர்கள் சொன்ன வாசகங்களை அப்படியே மொழி பெயர்த்து இருப்பதைப் போன்று இந்த நூலின் சகல கட்டுரைகளையுமே இதே விதமாகவே செய்ய வேண்டி இருந்தது.
ஆனால் அந்தப் பெரியார் அவர்களோ படைகோலத்தின் ஆரம்பத்திலேயே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பூரண ஒப்பாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் படைகோல (புத்தியாகிய) பலகையானது பழக்க வழக்கமான கல்வியறிவுகளை விட்டும் இன்னும் எழுதப் பேச புத்திவான்களுடைய ஒழுங்கு முறைகளையும் விட்டும் பூஜ்யமாக காலியாக இருந்தது.
இதனாலேயே கேட்கிறவர்களுக்கு விளக்கி வைக்க எளிதாக இரு:ப்பதற்காக சில இடங்களில் கொஞ்சம் (வாசகத்தை) முன் பின்னாகவும் சில இடங்களில் கொஞ்சம் பீடிகைகளையும், உவமானங்களையும் சேர்க்கவும் இன்னும் முன்னோர்களின் பரிபாiஷகளோடு சேர்த்தக் காட்ட வேண்டியதும் அவசியமாகிவிட்டது. மேலும் இந்த நூலை எழுதிய பின் அதில் ஒவ்வொரு பகுதியையும் பீர்சாஹிபவர்களிடம் படித்துக் காட்டினேன்'.
சோதரீர்! இஸ்மாயீல் சாஹிபுடைய இந்த வாசகத்தை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நூல் செய்யிது சாகிபுடைய வாசகத் தொகுப்பாக இருந்தால் அவருடைய வாசகத்தை அப்படியேயல்லவா எழுதியிருக்க வேண்டும்? மொழி பெயர்த்து எழுதினால் அது அவர்களுடைய வாசகமாக ஆகுமா?
செய்யிது சாகிபுக்குத்தான் பழக்க வழக்கமான கல்வியறிவுமில்லை. புத்திமான்களுடைய ஒழுக்க முறைப்படி எழுதப் பேசவுங் கூட தெரியாதே!   இஸ்மாயில் சாகிபுதான் செய்யிது சாகிபை ஒரு பொம்;மையாக வைத்துக்கொண்டு அவர்கள் மதியில்லாமல், முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் அரை குறையான உருதுவில் பேசியதை பார்சி பாiஷயில் மொழி பெயர்த்து சில இடங்களில் வாசகத்தை முன் பின்னாக்கியும், சில இடங்களில் கூட்டியும், குறைத்தும், பீடிகைகள், உவமானங்களை சோத்தும் எழுதி இருக்கிறார்.
மேலும் பீர் சாகிபுடைய அரைகுறையான வார்த்தைகளுக்கு மௌலானா அப்துல் ஹை அவர்கள் மொழி பெயர்த்து வைத்திருந்ததையும் நன்றாகப் பார்த்து அதை அந்த நூலின் இரண்டாவது மூன்றாவது பாடங்களில் சேர்த்துமிருக்கிறார்.
மேலும் அந்த நூலைக் கோர்வை செய்து முடித்த பின் அதன் ஒவ்வொரு பாகத்தையும் பீர்ஜீ அவர்களிடம் சந்தோஷமாக வாசித்துக் காட்டியிருக்கிறார். எனவே ஸிராதே முஸ்தகீம் எனும் நூல் பூராவையும் நன்றாக யோசித்துப் பார்த்து எழுதியவர் இஸ்மாயில் சாஹிபேதான். அதிலுள்ள வாசகங்கள் அத்தனைக்கும் பொறுப்பாளி அவரேதான்! இதனாலேயே மவ்லவி ரஷPது அஹ்மது கொங்கோஹி அவர்களிடத்தில் ஸிராதே முஸ்தகீம், தக்வியத்துல் ஈமான் என்னும் நூற்கள் யாரால் கோர்வை செய்யப்பட்டது? என்று கேட்கப்பட்டபோது 'ஸிராதே முஸ்தகீம், தக்வியத்துல் ஈமான் இவ்விரண்டு நூற்களும் மவ்லவி இஸ்மாயீல் அவர்களால் கோர்வை செய்யப்பட்டது என்று பதில் சொன்னதாக அவரது 'பதாவா ரஷPதிய்யா' பக்கம் 237-ல் எழுதப்பட்டுள்ளது. இந்த ராஷpது கம்பெனியால் அச்சிடப்பட்ட ஸிராத்தே முஸ்தகீம் நூலின் முகப்பிலும் இஸ்மாயீல் ஷPதுவால் பார்ஸியில் கேர்வை செய்யப்பட்ட ஸிராதே முஸ்தகீம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.
த.ப. ஆசிரியர் அவர்களே! ஸிராதே முஸ்தகீம் செய்யிது அஹ்மது சாஹிபுடைய வாசகத் தொகுப்பாகும் என்றும் இஸ்மாயீல் சாகிபு அப்படி ஒரு நூல் கோர்வை செய்யவே இல்லை என்றும் நீங்கள் சொல்வது சுத்தமான பொய்யாகும்.
சோதரீர்! நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா? மவுலவி இஸ்மாயில் ஸாஹிபு இவ்விடத்தில் ஊசாட்டங்களின் வகைகளையும், அதன் தரங்களையும் பற்றித் தான் விபரிக்கிறார். அவருடைய வாசகத்திலிருந்து உவமையில் ஒரு வஸ்வஸாகிறது ஜினா செய்கிற வஸ்வஸாகும். இன்னுமொரு வஸ்வஸாகிறது தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பாகும். இவை இரண்டிற்குமிடையில் வித்தியாசமாகிறது தொழுகையில் தனது மனைவியைi ஜிமாஉ செய்கிற நினைப்பு நல்லதாகும் என்றும், இதேபோல் ஒரு வஸ்வஸாகிறது தனது nஷய்கு அல்லது அவர் போன்ற பெரியார் ரஸூலுல்லாஹ்வானாலும் சரி, அவர்கள் பக்கம் தனது கவனத்தை திருப்புவதாகும்.
இன்னுமொரு வஸ்வஸாகிறது தனது மாடு கழுதையுடைய கவனத்தில் மூழ்குவதாகும். இவை இரண்டிற்குமிடையில் வித்தியாசமாகிறது nஷய்கு மற்ற பெரியார் அல்லது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பக்கம் கவனத்தை திருப்புவதானது தனது மாடு, கழுதையுடைய கவனத்தில் மூழ்குவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகும் என்றும் மேலும் தொழுகையில் தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பு கெட்டதுதான் (இருள்தான்) ஆனாலும் (வேசையை ஜினா n சய்கிற நினைப்பை விடவும் அது நல்லதாகும். வேசையை ஜினா செய்கிற நினைப்பு அதைவிட கெட்டதாகும். பெரும் இருளாகும்.இன்னும் அதைவிடவும் கெட்டதாகிறது அதிக இருளாகிறது தனது மாடு கழுதையுடைய ஞாபகம் வருவதாகும். (இவையெல்லாவற்றை விடவும், இன்னும் தனது மாடு, கழுதையுடைய ஞாபகத்தில் மூழ்குவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகிறது எத்தனையோ தரத்தில் கூடின இருளாகிறது nஷய்கு அவர் போன்ற பெரியார் அல்லது றஸூலுல்லாஹ் இவர்களின் பக்கம் தனது கவனத்தை திருப்புவதாகும்; என்றும் நன்றாக விளக்கமாகிறதல்லவா? அஸ்தஃபிருல்லாஹ். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
த.ப. ஆசிரியர் அவர்களே!
கண்ணைத் திறந்து பாருங்கள். ஈமானை சாட்சியாக வைத்து பாருங்கள். எப்படி வாய் கொள்ளாதபடி ஏசுகிறார், திட்டுகிறார். இஸ்லாத்துக்கு பரம விரோதியாகிய காபிரீன்களும் கூட  இப்படி ஏசுவார்களா?
த.பி. ஆசிரியர் அவர்களே!
இவர் சொல்வதைப் போல் இவரைப் பற்றியோ, அல்லது தேவுபந்தியாத் தலைவர்களைப் பற்றியோ உதாரணமாக இஸ்மாயிலை நினைப்பது அல்லது கொங்கோஹி, அம்பேட்டி, தானவீ, நானுத்தவீ இவர்களின் ஞாபகம் வருவதானது ஜினா செய்கிற நினைப்பைக் காணவும் மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பைக் காணவும் இன்னும் மாடு கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதைக் காணவும், எத்தனையோ மடங்கு கெட்டது என்று யாராவது சொன்னால் உங்கள் மனம் வருத்தப்படாதிருக்குமா? வருத்தப்படாதென்றிருந்தால் நீங்களே இப்படி எழுதிஜ அச்சுப்போட்டு பிரசாரம் செய்யுங்கள். இல்லை ஒரு:போதும் அப்படி செய்ய மாட்டீர்கள். யாரும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். முடிந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பீர்கள். தண்டனை கொடுப்பீர்கள்.
அருமை நாயகத்தை இப்படி ஏசுவது அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள் மனம் வருத்தப்படாதா? முஃமீன்களுக்கு அவர்களின் உயிரை விடவும் மேலான கண்மணி, கல்புக் கனியான அருமை நாயகத்தைப் பற்றி இப்படி தரங்கெட்ட வார்த்தையைச் சொன்னால் அவர்களின் மனம் வேதனைப் படாதா? கண்டிப்பாக நாயகம் அவர்கட்கு விளங்கும். அவர்கள் வருத்தப்படுவார்கள். முஃமின்களும் வருத்தப்படுவார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கட்கும் முஃமின்களுக்கும் வருத்தத்தை கொடுத்தவர்களுக்கு அல்லாஹ்வின் கடுமையான தண்டனை கிடைக்கும்.
இஸ்மாயில் அவர்கள் உவமாங் காட்டி எழுதிய அத்தனை வார்த்தைகளுமே ஏச்சுத்தான். அதனால்தான் மறுப்பாளர்களில் சிலர் 'தொழுகையில் றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வருவது தனது மாடு கழுதையில் உருவத்தின் ஞாபகத்தில் மூழ்குவதைக் காண கெட்டது' என்று எழுதியிருக்கிறார் என்றும், வேறு சிலர் இன்னுமொரு வார்த்தையையும் சேர்த்து, 'தொழுகையில் றஸூலுல்லாஹ் உடைய ஞாபகம் வருவது ஜினா செய்கிற நினைப்பைக் காணவும் தனது மாடு கழுதையின் உருவத்தின் ஞாபகத்தில் மூழ்குவதைக் காணவும் கெட்டது' என்று எழுதுகிறார் என்றும் எழுதியிருக்கக் கூடும். எழுதிப்பார்த்து த.ப. ஆசிரியர் அவர்கள் 'நமது மறுப்பாளர்கள் எழுதிய நூற்களில் ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம். ஒன்றில் குறைவு' என்று ஆச்சரியப்படுவதும் இன்னும் 'ஜினா செய்கிற நினைப்பு' ஒன்றுதான் குற்றச்சாட்டுக்கான வார்த்தை என்று வைத்துக் கொண்டு 'அது வாசகத்தின் இடையில் இல்லாத ஒன்று இருக்கிறது என்றால் அது அதற்கு மேலுள்ள வாக்கிய முடிவில் இருக்கிறது; என்று தடுமாறிக் கொண்டிருப்பது மதியீனமாகும்.
மேலும் தொழுகையில் றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வருவது அந்த ஞாபகம் இந்த ஞாபகம் எல்லாம் வருவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகவும் ஆகக் கடூரமான இருளானதாக ஆவதற்குக் காரணம் ரஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வரும்போது அவர்களைப் பற்றிய மரியாதையோடு வரும். அது ஷிர்க்களவில் இழுத்துவிட்டு விடும் என்றும் சொல்கிறார். றஸூலுல்லாஹ் அவர்கள் பேரில் தனக்குள்ள எப்படித் துணிச்சலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
றஸூலுல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களுக்கு மரியதை செய்வதும் முஃமின்கள் பேரில் கடமையல்லவா? அது ஈமானில்லையா, அவர்களை கண்ணியக் குறைவாக நினைப்பதும் இலேசாகக் காணுவதும் குப்றல்லவா? தொழுகையிலும் அவர்களை மரியாதையாக நினைக்க வேண்டுமென்று தானே அத்தஹிய்யாத்தில் அவர்களை முன்னோக்கி எதிர் நோக்கி அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டுமென்று அல்லாஹுத்தஆலா கடமையாக்கியிருக்கிறான். nஅதாழுகையில் அத்தஹிய்யாத்தில் அருமை நாயகத்தின் பேரில் ஸலாம் சொல்லும்போது அவர்களை ஞாபகப்படுத்த வேண்டுமென்பதைப் பற்றி எங்கள் மதிப்புக்குரிய மேதைகள் எப்படி எழுதியிருக்கிறார்கள். ஆஹா! அவர்களின் திருக்கரங்களை முத்தமி;டவல்லவா வேண்டும்.!
மாமேதை இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் இஹ்யா உலூமுத்தீன் முதலாம் பாகம் 107- ம் பக்கத்தில் எழுதுகிறார்கள், ' உன் கல்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் சங்கையான உருவத்தையும் ஆஜர்படுத்திக்கொள். ஞாபகப்படுத்திக் கொள். அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வறஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு (மறைவான சங்கதிகளை அறியும்படியான) நபியே! உங்கள் பேரில் அல்லாஹ்வின் கருணையும் பரக்கத்தும் உண்டாவதாக என்று சொல். மேலும் நீ சொல்லும் இ(ந்த ஸலாமானது)து அவர்களுக்கு எட்டும் – சேரும் என்றும் அவர்கள் இதைவிடவும் பூரணமானதை (ஸலாமைக்) கொண்டு  உனக்குப் பதில் சொல்வார்கள் என்றும் உன்மனம் மிக்க உறுதியோடு இருக்கட்டும்.'
மாமேதை ஷhஹ் அப்துல் ஹக் முஹத்திது தெஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிஷ;காத்தின் விரிவுரையான தங்களின் 'அஷpஃஅதுல்லம்ஆத்' எனும் நூலினை முதலாம் பாகம் 312 ம் பக்கத்தில் தஷஹ்ஹுது –அத்தஹிய்யாத்துடைய பாடத்தில் எழுதுகிறார்கள், 'மிஃறாஜில் அல்லாஹுதஆலா நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் பேரில் அவர்களை நோக்கி எதிர்முகமாக அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு – நபியே! உங்கள் பேரில் ஸலாமுண்டாவதாக!'  என்று சொன்ன வார்த்தையை அப்படியே எதிர் நோக்கியே சொல்ல வேண்டும் என்று  நாயகம் மக்களுக்குப் படித்துக் கொடுத்தது தனது மக்கள் அந்த (மிஃராஜுடைய) சம்பவங்களை நினைப்பதற்காகவேயாகும்!
மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமினானவர்களுக்கும் ஆபிதீன்களுக்கும் எப்போதும் எல்லா நிலைமைகளிலும் எல்லா நேரங்களிலும் அவர்களுடைய கண் முன்னால் காட்சியளித்துக் கொண்டும், கண் குளிர்ச்சியாகவுமிருக்கிறார்கள். குறிப்பாக இபாதத்தின் நிலைமைகளிலும், அதன் கடைசி நேரத்திலும் அவர்களின் காட்சி தோற்றமும், வெளிப்பாடும் மிக்க அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும்.
ஆரிபீன்களில் ஒருவர் சொல்கிறார்கள் 'இப்படி எதிர் நோக்கிச் சொல்லச் சொன்னதாகிறது ஹகீகத்துல் முஹம்மதிய்யா நாயகத்தின் அந்தரங்கம், சகல சிருஷ;டிகளின் அணுக்களிலும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவியிருக்கிறது. எனவே தொழுகிறவர்களுடைய தாத்துக்களிலும் – அந்தரங்கங்களிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மவுஜுதாகவும், ஹாளிராகவும் – பிரசன்னமாகவும் இருக்கிறார்கள். ஆகையினால் தொழுகிறவர் அல்லாஹுத்தஆலா அளவில் முடுகுதலின் ஒளிகளைக் கொண்டும் பிரகாசம் பூண்டு பாக்கியம் பெறுவதற்காக இந்த கருத்தை – அதாவது நாயகம் அவர்கள் அவனின் தாத்தில் ஹாழிராக இருப்பதை அவசியம் காண வேண்டும். இந்த காட்சியை விட்டும் மறந்துவிடக் கூடாது.
சோதரீர்! இங்கு எத்தனை விஷயங்களை சொல்லிக் காட்டுகிறார்கள். பாருங்கள்!
1. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமினானவர்களுக்கும் ஆபிதீன்களுக்கும் எப்பொழுதும் அவர்களுடைய எல்லா நிலைமைகளிலும் எல்லா நேரங்களிலும் அவர்கள் கண்முன்னால் இருந்து அவர்களுக்கு கண்குளிர்ச்சியாக இருக்கிறார்கள்.
2. இபாதத்துடைய நிலைமையில் நாயகத்தின் தோற்றம் அதிகமாக இருக்கிறது. அதாவது அந்த நேரத்தில் இபாதத்து செய்கிறவனின் பக்கம் அவர்களின் கவனம் அதிகமாக இருக்கிறது.
3. நாயகம் அவர்கள் சகல சிருஷ;டிகளின் அணுவிலும் ஊடுருவி இருக்கிறார்கள். தொழுகிறவர்கள் எல்லாவர்களுடைய தாத்திலும் மவுஜூதாகவும் ஹாழிராகவும் இருக்கிறார்கள்.
4. அப்படி நாயகம் ஹாழிராக இருப்பதை தொழுகிறவன் காட்சி காண வேண்டும்.
5. அந்த காட்சியை விட்டும் மறந்து விடக்கூடாது.
6. அப்படி நாயகம் அவர்கள் ஹாழிராக இருப்பதை காட்சியாகத் தொழுகிறவன் அல்லாஹுத்தஆலாவின் சமூகத்தளவில் முடுகுதலின் ஒளிகளைக் கொண்டும் அல்லாஹ்வின் மஃரிபாவின் இரகசியங்களைக் கொண்டும் தொழுகிறவன் பிரகாசம் பூண்டு பாக்கியம் பெறுவான்.
அப்துல் வஹ்ஹாபுஷ; ஷஃரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மீஸானுஷ; ஷஃறானீயின் முதலாம் பாகம் 132-135 ம் பக்கத்தில் சொல்கிறார்கள். காழீ இயாழ் அவர்கள் தங்களின் கிதாபுஷ; ஷpபா எனும் நூலில் 'இமாம் ஷhபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொழுகையில் ரஸூலுல்லாஹ் பேரில் ஸலவாத்து சொல்வதை கடமை என்று சொல்லி (மற்ற இமாம்களை விட்டும்) தனித்து விட்;டார்கள்.' என்று சொன்னதானது அவர்கள் ஷhபிஈ இமாம் அவர்களுடைய மகாமைப் பற்றி குறைத்து சொன்னதல்ல. நிச்சயமாக அ(ப்படிச் சொன்னதாகிற)து (ஷhபிஈ இமாம்) அவர்கள் மகாமில் சம்பூர்ணமாக இருக்கிறார்கள் என்பதளவிலும் இன்னும் ஹக்கைக் காட்சி காணுவதுடன் கல்கையும் காட்சி காண அவர்கள் சக்தி பெறுவார்கள். ஹக்கைக் காட்சி காணுவது கல்கை காட்சி காணுவதை விட்டும் இன்னும் அதற்கு மாற்றமும் (அதாவது கல்கைக் காணுவது ஹக்கைக் காட்சி காணுவதை விட்டும்) அவர்களைப் பராக்காக்காது. அதனால் மக்கள் பேரில் (அவர்களும் இந்த உயர் பதவியை அடையட்டும் என்று) நல்லெண்ணம் வைத்து அ(ப்படி சலவாத்து சொல்வ)தை கடமையாக்கி அவர்களை ஏவினார்கள் என்பதளவிலும்,
இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இமாம் மாலிகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  மக்கள் பேரில் அவர்கள் அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்திருக்கும்போது அவர்கள் ஹக்கையும் காட்சி காணுவதற்கில்லாமல் தங்களில் அழிவு நிலை ஏற்படவும் கூடும். அப்போது அவர்களை ஹக்கல்லாதவர்களையும் காட்சி காணவேண்டுமென்று கட்டாயப் படுத்துவது அவர்களைச் சிரமத்திலாக்குவதாகும் என்று நினைத்து மக்களைப் பேணி அதை (ஸலவாத்து சொல்வதை) அவர்கள் பேரில் கடமையாக்கவில்லை என்பதளவிலும் சயிக்கினையாகும்.
எனவே காழி இயாழ் அவர்கள், 'ஷத்தஷ;ஷhதஈ – ஷhபிஈ இமாம் அவர்கள் தனித்து விட்டார்கள்' என்று சொன்னதைக் கொண்டு அவசர புத்தியில்படுவது போல், அவர்கள் ஷhபிஈ இமாம் அவர்களுடைய சொல்லை பலக்குறைவாக்கினதல்ல. அவர்களுடைய கருத்தாகிறது மற்ற இமாம்களைப் போல் சிறியோர்களுடைய நிலையைப் பேணுவதை விட்டும் தனித்து றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஹக்கின் அவசியத்தை நிலை நிறுத்தி பெரியோர்களுடைய நிலையைப் பேணினார்கள் என்பதுவேயாகும்.
மேலும் ஷஃறானி இமாம் அவர்கள் அதே நூல் அதே பக்கத்தில் சொல்கிறார்கள்,' நான் என்னுடைய நாயகம் அலியுல் கவ்வாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'ஷhரிஉ (மார்க்கத்தை உண்டாக்கிய அல்லாஹுத்தஆலா அல்லது மார்க்கத்தை கொண்டு வந்த றஸூலுல்லாஹ்) அவர்கள், தொழுகிறவர்களை அத்தஹிய்யாத்தில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் ஒதும்படி ஏவினதெல்லாம், சிறப்பும் வலுப்பமுள்ள அல்லாஹ்வின் சமூகத்தில் ஹாழிராக இருக்கிற அவர்களின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மறந்து இருப்பவர்களுக்கு ஞாபகமூட்டவேயாகும்.
ஏனென்றால் நாயகம் அவர்கள் எப்பொழுதும் அல்லாஹுத்தஆலாவின் சமூகத்தை விட்டும் பிரிய மாட்டார்கள். ஆகையினால் இவர்கள் அவர்களை நேர்முகமாகக் கண்டு சலாம் சொல்லி அழைப்பார்கள். 'ஆண்டவனே உனது ஜோதியைக் காட்சி காண எங்களுக்கு முன்னால் உனது ஹபீபு அருமை நாயகம் அவர்களின் ஒளி எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தொழுகையில் அவ்வொளிப் பிரகாசம் மிக்க அதிகமாகவேதானிருக்கிறது. ஆனாலும் எங்கள் அகக் கண்களில் ஒளியில்லையே! நாயனே! உனது ஹபீபு அவர்களின் பொருட்டினால் எங்கள் அகக் கண்களை ஒளிபெறச் செய்வாயாக!
'ஆண்டவனே! எங்கள் இமாம் அவர்கள் எங்கள் பேரில் நல்லெண்ணம் வைத்தது போல் எங்களுக்கு ஒருமையின் காட்சியோடு பன்மையின் காட்சியையும் – உனது ஜோதியைக் காட்சி காண்பதோடு உனது ஹபீபு அவர்களையும் காட்சி காண நல்லருள் புரிவாயாக!
'தப்லீக் ஜமாஅத்தின் மீது தவறான குற்றச்சாட்டுகளும், தக்க பதில்களும்' என்று கூறி உண்மையை மறைத்து விடப் பார்க்கின்றார் அதன் ஆசிரியர், இதுவரை நாம் கொடுத்து வந்த விளக்கத்திலிருந்து அவரது பொய் கூற்றுகள் தெளிவாகின்றன.
தக்க பதில் நூலில் 134-ம் பக்கம் முதல் 138 வரை உண்மைகளை மறைத்திட அவர் என்ன பாடுபடுகின்றார் பாருங்கள்:-
'இந்த குற்றச்சாட்டை நாம் ஏற்றுக கொண்டாலும் இது உருப்படியான ஒரு குற்றச்சாட்டல்ல என்பது கீழ்கண்டதைப் படித்தபின் தெளிவாக விளங்கும்.
'ஸிராதே முஸ்தகீமில்' குற்றச்சாட்டுள்ள இந்த வாக்கியத்தில் 'ஸர்பே ஹிம்மத்' என்ற பார்ஸி வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நமது மறுப்பாளர்கள் 'ஞாபகம் வருவது' என்று அர்த்தம் எழுதியுள்ளதை மேலே காணுங்கள். அந்த வார்த்தையின் அஸல் கருத்துக்கும் இவர்கள் கூறும் கருத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
'ஸர்பே ஹிம்மத் என்றால் என்ன அர்த்தம்? 'ஸர்ப்' என்றால் உபயோகித்தல், செலவிடுதல் என்று அர்த்தம்.
'ஹிம்மத்' என்பது nஷய்குகள், ஸூபிகள் ஆகியோரிடம் உபயோகிக்கப்படும் ஒரு வார்த்தை. இந்த அடிப்படையிலே இந்த வார்த்தை, 'ஸிறாத்தே முஸ்தகீமில்' உபயோகிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை இப்போது கவனிப்போம். ஸுலூக்கின் பிரபலமான நூலான 'அல் கவ்லுல் ஜமீலில்' எழுதப்படுகிறது:
'ஹிம்மத்' என்றால் ஆசையோடும், தேட்டத்தோடும் நினைவு முழுவதையும் செலுத்தி மன ஓர்மை ஏற்படுத்தி தனது முழுக்கவனமும் வேறு எதன்பாலும் செல்லாமல் இந்த ஒரு பொருளின்பாலே வைத்திருப்பது. கடின தாகம் கொண்டவன் தனது கவனம் முழுவதையும் நீரின்பால் செலுத்துவதைப் போல்.
nஷய்குகள் கூறும் ஞானவழிப் பயிற்சியில் ஒன்று இது. அதாவது ஒருவன் தனது nஷய்கு அல்லது யாராவது ஒரு பெரியார் அல்லது நேரடியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதற்குரிய முறை அல்கவ்லுல் ஜமீலில் எழுதப்படுகிறது: கண்கணை மூடிக்கொண்டோ அல்லது (முடிந்தால்) திறந்து கொண்டோ மற்றவற்றின் மீதுள்ள அன்பனைத்தையும் நீக்கி விட்டு தனது அன்பு முழுவதையும் தான் யார்பால் கவனம் செலுத்துகிறாரோ அவர்பாலே செலுத்தி அன்னாரிடமிருந்து பெருகி வரும் 'பைஜ்' எனப்படும் ஆன்மீக வளர்ச்சிப் போதனையை எதிர்பார்த்து இருக்க வேண்டும். 'பைஜ்' வந்தால் அதை மன ஓர்மையுடன் தன்னுள் ஏற்றுக் கொண்டு பிறகு அது தன்னை விட்டு நீங்கிப் போகாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
'ஸர்ப் ஹிம்மத்' என்ற இரண்டு வார்த்தைகளின் அருத்தத்தையும் இப்போது இணைத்துப் பாருங்கள். இந்த அர்த்தத்திலேயே 'ஸிராதே முஸ்தகீமில்' இந்த வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைக்குப் பெரியார்கள் 'ஷ{ஃலே பர்ஜக்' என்றும் 'ஷ{ஃலே ராபிதா' என்றும் கூறுவர்.
திரை கிழிகிறது

மறுப்பாளர்கள் எழுதியுள்ள அருத்தமான 'ஞாபகம் வருவது' என்பதற்கும் 'ஸர்பே ஹிம்மத்' என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? என்பதை சற்று கவனியுங்கள். வெறும் ஞாபகம் வருவது ரஸூலுல்லாஹ்வைப் பற்றி நினைப்பது என்பதைப் பற்றியா 'ஸிராதே முஸ்தகீமில்' எழுதப்பெற்றிருக்கிறது? ஸிம்துஸ் ஸிப்யான் மட்டும் ஓதிய பையன் கூட கூறுவானே. தொழுகையில் அத்தஹிய்யாத்தை ஓதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே நினைக்கப்படுகிறது என்பதை கொஞ்சம் அறபி தெரிந்தவர்களும் சொல்லுவார்களே. குர்ஆனில் நாயகத்தை நோக்கி கூறப்பட்ட ஆயத்துகளை ஓதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய எண்ணம் ஓதுபவருக்கு கட்டாயம் வரவே செய்யும் என்பதை இதைக் கூடாத ஒன்று என்று எந்த மடையனும் கூற முடியாதே! ஸிராதே முஸ்தகீமில் இப்படிக் கூறப்பட்டிருக்க முடியுமா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு இந்த தமிழிலேயே ஸிராதே முஸ்தகீமின் அஸல் பார்ஸி வாசகத்தை எடுத்துக் காட்டி வாசகர்களுக்கு  மூலச் சுவையுடன் விளக்க முடியவில்லையே என வருந்துகிறோம்.
ஸிராதே முஸ்தகீமில் எழுதப்பட்டுள்ளது என்ன? ஸிராதே முஸ்தகீம் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள உண்மையான கருத்தைக் காணுங்கள்.
'தனது nஷய்கு அல்லது யாராவது ஒரு பெரியார் நாயகமேயானாலும் அவர்களின்பால் ஸர்பெ ஹிம்மத் செய்வது (அதாவது எல்லாவற்றையும் விட்டும் தனது கவனத்தை திருப்பி இந்தப் பெரியார்களின்பால் முழுக்க முழுக்க செலுத்துவது) மாடு, கழுதையைப் பற்றிய எண்ணத்தில் மூழ்குவதை விடக் கெட்டதாகும். ஏனெனில் பொரியார்களின்பால் அன்னேரத்தில் ஸர்மே ஹிம்மத் செய்யும்போது அது அவர்களைப் பற்றிய கண்ணியம் பெருமையும்கொண்ட எண்ணத்தோடு உள்ளத்தின் அடித்தளத்திலே இடம் பிடிக்கும் (அதாவது இப் பெரியார்களுடன் அன்பு கண்ணியத்தோடுள்ள தொடர்பு இருக்கும் காரணத்தால் அப்போது மனம் அதிலே பூரண அழிவு நிலை அடைந்து அதிலேயே இன்பங்காண முற்படும். அப்போது ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும். இது தொழுகையின் உயிர் நாடிக்கே மாற்றமானதென்பதும் இபாதத்தின் நோக்கத்திற்கு முரணானதென்பதும் யாவரும் அறிந்ததே.
மற்ற உலகப் பொருட்களின் எண்ணம் வருமானால் உள்ளத்துக்கு அப்பொருட்களுடன் மேற்சொன்ன அளவு தொடர்பு ஏற்படவும் முடியாது. அவற்றைப் பற்றிய பெருமையும் கண்ணியமும் இறைவனை மறக்கச் செய்து அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளவும் முடியாது. அந்த தரம் குறைந்த பொருட்கள் உள்ளத்தில் வரும்போதே அந்தத் தரக் குறைவோடுதான் வரும் போகும் அல்லது அதன் தரக் குறைவின் காரணத்தால் மனிதன் தானே அவற்றை விட்டும் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள முற்படுவான்.
ஆண்டவனல்லாத ஒரு பொருளை தொழுகையில் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நினைத்து அந்த நினைப்பில் மூழ்கி விடுவதென்பது சில சந்தர்ப்பங்களில் ஷிர்க்குவரை கொண்டு சேர்த்து விடும்.
இதுவே ஸிராதே முஸ்தகீமில் எழுதப்பட்டுள்ள அஸல் விஷயம். ஞாபகம் வருவது என்பதைப் பற்றி இங்கு அறவே பேசப்படவில்லை. இங்கு முற்றிலும் 'ஷ{ஃலே பர்ஜக்' என்பதைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டுவோரது குற்றச்சாட்டுகு;கு எதிர் மாறானன அருத்தத்தைக் கொடுக்கிறது என்றும் கூறலாம்.
இதே ஸிராதே முஸ்தகீமில் இதுவும் எழுதப்பட்டுள்ளது. 'ஸர்பே ஹிம்மத்'தின் நேரமின்றி பெரியோர்களின் நினைவு ஏற்பட்டு அதிலிருந்து அவர்கள் பைஜ் நிலைக்குமானால் அதை தூய எண்ணமுடைய அடியார்களுக்கு ஆண்டவன் அளிக்கும் மாபெரும் நன்கொடை என்று கருத வேண்டும் என்று'
ஞாபகம் வருவதே கூடாது என்பது நூலாசிரியருடைய கொள்கையாக இருந்தால் மேற் கண்ட வாசகத்தை அவர்கள் எழுதியிருக்க முடியுமா?
இவற்றையெல்லாம் பார்க்காது கண்ணை முழுக்க மூடிக் கொண்டு குற்றஞ்சாட்டுவது ஸிராதே முஸ்தகீமை (நேர்வழியை) விட்டும் அகன்றதென்று எப்படி கருதாமலிருக்க முடியும்?
மறுப்பாளர்களது எழுத்தை உண்மை என நம்பி வந்தவர்கள் இதனைக் கண்டு உண்மை எது?  என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம். அல்லாஹ் எல்லோருக்கும் ஸிராதே முஸ்தகீம் கிடைக்க அருள் புரிவானா. ஆமீன். (தக்க பதில்: 134 – 137)
அவருடைய இந்தக் கட்டுரையின் சாராம்சம்:
1. இங்கு நினைப்பது, ஞாபகம் வருவதைப் பற்றி பேசவில்லை. ஸர்ப் ஹிம்மத் தைப் பற்றித்தான் பேசப்படுகிறது.
2. ஸர்ப் ஹிம்மத் என்பது 'பார்ஸி பதம்'. 'ஸர்ப்' என்றால் உபயோகித்தல், செலவிடல், 'ஹிம்மத்' என்றால் ஆசையோடும் தேட்டத்தோடும் தனது நினைவு முழுவதையும் செலுத்தி மன ஓர்மை ஏற்படுத்தி தனது முழுக் கவனமும் வேறு எதன்பாலும் செல்லாமல் இந்த ஒரே பொருளின் பேரிலேயே வைத்திருப்பது. இது ஞான வழிப் பயிற்சியில் ஒன்று என்று அல்கவ்லுல் ஜமீலில் சொல்கிறார்கள்.
3. இப்படிச் செய்தால் ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும். இது தொழுகையின் உயிர் நாடிக்கே மாற்றமானது.
தேவுபந்தியாக்கள் இங்கு இரண்டு விதமான குபாடங்கள் செய்கிறார்கள். ஒன்று நூலாசிரியரின் கருத்து, நோக்கம் பூராவையும் புரட்டுகிறார்கள். இரண்டு 'ஷுஃலெ பர்ஜகு' என்பதற்கு தப்பான அர்த்தம் காட்டி மக்களுக்கு ஸூபியாக்கள் பேரில் வெறுப்பை உண்டாக்குகிறார்கள்.
வாசகர்களே! நன்றாக கவனித்துப் பாருங்கள். ஸர்பு ஹிம்மத்' என்பது பார்ஸி பதம் அல்ல. அது 'ஸர்பு, ஹிம்மத்' என்று இரண்டு பதங்கள். இரண்டுமே அரபி பதங்கள்தான். 'ஸர்பு' என்றால் பேதகப்படுத்துதல், திருப்புதல், செலவு செய்தல், உபயோகித்தல் என்பதாகும். 'லுகது கிஷ;வர்' என்ற அகராதி நூலில் 'ஹிம்மத்து' என்பது அறபி பதம். அதற்கு பொருள் பிக்ரு. இராதத்து, கஸ்து, மஜாஸன' படாகஸ்து, தில்கா இராதா புலன்தீ. பொருள்: சிந்தனை, நாட்டம், தேட்டம். பரிபாiஷயில் பெரும் நாட்டம், மனதின் உயர்ந்த தேட்டம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. nஷய்குனா ஷhஹ் வலியுல்லாஹ் அவர்களின் 'அல் கல்லுல் ஜமீல் என்ற ஞானவழி நடை நூலில் ஸூபிய்யாக்களின் பரிபாiஷயில் 'அல்ஹிம்மது-இபாரதுன், அன் இஜ்திமா இல் காதிரி-வத அக்குதில் மழீமத்தி-பி- ஸூரத்தித்தமன்னீ. வத்தலபி-பி-ஹைது லா-யஹ்துரு-பில் கல்பி-காதிறுன், ஸிவா-ஹாதல் முராதி- பொருள்: நாடப்பட்ட பொருளில்லாத நாட்டம் மனதில் ஊசாடாமல் நாடப்பட்ட பொருளிலேயே நாட்டம் ஒன்று சேர்வதும், நினைப்புக் கெட்டியாவதுமாகும்' என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆகவே 'ஹிம்மத்' என்பதற்கு அகராதியில் நாட்டம் என்றும் ஸூபிய்யாக்களின் பரிபாiஷயில் 'பூரண நாட்டம்' என்றும் பொருளாகும்.
ஸிராதே முஸ்தகீமின் ஆசிரியர் 'ஹிம்மத்' திற்கு ஸூபிய்யாக்களின் பரிபாiஷயான பூரண நாட்டத்தைப் பற்றி பேசவில்லை. அகராதிப் பொருளான வெறும் நாட்டத்தைப் பற்றித்தான் பேசி வருகிறார். ஏன்? அவர் முதலாவதாக 'வஸ்லாஸின் ஊசாட்டத்தின் தரங்களைப் பற்றி பேசுகிறது' என்றுதான் பாடமும் போட்டிருக்கிறார்.
ராஷpத் கம்பெனி ஸிராதே முஸ்தகீமில் 95-ம் பக்கம் 5 ம் வரியில் 'தூஸரி – ஹிதாயத் – இபாதத்மே கிலல் – அந்தாஸ் – ஸீஸோன் -கே தப்ஸீலி – திக்று'. பொருள்: இரண்டாவது ஹிதாயத்து இபாதத்தில்- கியலை குழப்பத்தையுண்டாக்கும்படியான வஸ்துக்களைப் பற்றி விபரமாக கூறுவதாகும்.'
மேலும் அந்த நூல் 97-ம் பக்கத்தில் குற்றச்சாட்டு வாசகத்தின் இறுதியில் ஹாஸில் – கலாம் – இஸ் -ஜகர –வஸ்வ ஸோன் – கேதபாவுத் – கா- பயான் – கர்ணா- மக்ஸூத் ஹே'. பொருள்: முடிவான பேச்சாகிறது இந்தவிடத்தில் வஸ்வஸாவின் ஊசாட்டங்களின் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி விபரிப்பதாகும்' என்றும் எழுதியிருக்கிறார்.
மேலும் அதே நூல் 97-ம் பக்கத்தில் குற்றச்சாட்டு வாசகத்தில் 'கியாலே- ஆண்'- 'அவர்களுடைய கியால்' என்ற வார்த்தையில் கியால்-கவனம் என்றேதான் சொல்லியிருக்கிறார். ஆகையினால் இங்கு ஹிம்மத்துக்கு பரிபாiஷ அர்த்தமான பூரண கவனத்தைப் பற்றி பேசப்படவில்லை எனினும் அகராதி அர்த்தமான வெறும் கியாலை கவனத்தைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று மிகத் தெளிவாக தெரியவருகிறது.
தேவுபந்தியாக்கள் நூலாசிரியரின் கருத்தையும் நோக்கத்தையுமே முற்றாக மாற்றப் பார்க்கிறார்கள். நூலாசிரியர் இஸ்மாயீல் ஸாஹிபு ஹயாத்தாக இருந்தாதல் அவருங்கூட இவர்களின் குபாடச் செயல்களை நிச்சயமாகக் கண்டிக்கவே செய்வார்.
வாசகர்களே!
த.பா.வின் 'தனது nஷய்கு….ஷpர்கு வரை சேர்த்து விடும்' என்ற வாசகத்தையும் அதன் கீழ் கோடுபோட்டிருப்பதையும் நன்றாக கவனித்துப் பாருங்கள். இன்னும் 'அல்கவ்லுல் ஜமீலில்' 'ஹிம்மத்'திற்கு பொருள் அறபியில் எழுதப்பட்ட அறபி வார்த்தையை தமிழில் எழுதியிருக்கிறதையும் அதற்கு தமிழில் பொருள் எழுதியிருப்பதையும் பாருங்கள்.
தக்க பதிலும் கவ்லுல் ஜமீலில் எழுதப்பட்ட பொருள் என்று 'ஹிம்மத்'துக்கு பொருள் எழுதியிருப்பதையும் பாருங்கள். தேவுபந்தியாக்கள் சொல்வதைப் போல் 'ஸிராதே முஸ்தகீமில் 'ஷ{ஃலே பர்ஜகை' அதாவது ஸூபிய்யாக்களின் பரிபாiஷயான பூரண நாட்டத்தைப் பற்றியேதான் கூறப்பட்டுள்ளது என்றிருந்தால் மேலே காட்டப்பட்ட த.ப.வின் 'தனது …' என்ற வாசகத்திற்குப் பொருள் அந்த வாசகத்தின் கீழே கோடிடப்பட்ட வாசகத்தை மட்டுமேதான் எழுதியிருக்க வேண்டும். அப்படியல்லாமல் பிராகட், குறிப்புகளெல்லாம் விரிவாக எழுதி 'ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும' என்று எழுதியதானது 'ஷ{ஃலே பர்ஜகி;னால் அல்லாஹ்வை மறக்க வேண்டிய நிலைதான் உண்டாகும் என்று மக்கள் தவறாக விளங்கிக் கொள்ளவும், அவர்களுக்கு ஸூபிய்யாக்கள் பேரில் வெறுப்பையுண்டாக்கவும் செய்த குபாடமேயாகும்.
ஸூபிய்யாக்கள் றஸூலுடைய ஸூரத்தை, nஷய்குடைய ஸூரத்தை 'அல்லாஹ்' என்ற பதத்தின் ஸூரத்தை அல்லது வேறே ஏதோ ஒருவித ஸூரத்துப் பண்ணி அந்த ஸூரத்தை அல்லாஹ்வின் மள்ஹராக- அல்லாஹ்வின் காட்சி வெளியாகும்தானமாக வைத்து முழுக் கவனத்தையும் அதிலே செலுத்தி தியானிப்பார்கள். இப்படி வைக்கிற ஸூரத்திற்கு மள்ஹர் -வெளியாகும் தலம் – பர்ஸக்- மத்தித் தடுப்பு றாபிதா – இணைப்பு என்னும் இப்படி தியானிப்பதற்கு ஷ{ஃலே பர்ஜக் – ஷ{ஃலே ராபிதா' என்றும் சொல்வார்கள்.
அந்த ஸூரத்தின் வழியாக ஹக்குத்தஆலாவின் காட்சியையும், அருளையும் வழி பார்ப்பதனால் அதற்கு முராகபா – வழி பார்;ப்பது  என்றும் சொல்வார்கள். இப்படிச் செய்கிறது இஹ்ஸானாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு வழிபட்டு நடப்பதாகும். இஹ்ஸானாகிறது நீ அல்லாஹ்வைக் கண்டது போல் வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனால், அவன் உன்னைக் கண்டு கொண்டிருக்கிறான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அதாவது அகக் கண்ணால் முஷாஹதாச் செய்து – கண்டு வணங்குவதாகும். இது அகக் கண்ணால் காண்பதாக இருப்பதனால் வெளிக்கண்ணால் கண்டதைப் போல் என்று சொன்னார்கள். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் கண்டு; கொண்டிருக்கிறான் என்பது முறாகபாவாக இருக்கும். அவன் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று முறாகபா – முழுக் கவனத்தையும் ஒன்று சேர்த்து காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் முஷhஹதா – காட்சி கிடைக்கும். இதற்காகத்தான் ஸூபியாக்கள் 'ஷுஃலே பர்ஜக்' செய்கிறார்கள்.
செய்குனா முஜத்திது அல்பதானி ஷெய்கு அஹ்மது ஸிர்ஹிந்தி அவர்கள் தங்களின் மக்தூபாத்து முதலாம் பாகத்தில் சொல்கிறார்கள்: 'பஸ்-தர்-இப்திதா-வ-தர். தவஸ்ஸுத்-மத்லூப்-றா-பே ஆயீன்ஸே-பீர்-றதுலான்-தீத். பொருள்: ஸுலூக்கின் ஆரம்பமான, இன்னும் நடு மத்திபமான மன்ஸிலில் ஷெய்கை கண்ணாடியாக ஆக்கிக் கொள்ளாமல், மத்லூப் தேட்டம் அதாவது ஹக்குத்தஆலாவின் பேரழகு காட்சியாகாது'. ஆகையினால் ஷெய்கை ஸரத்து பண்ணுவதும், றஸூலுல்லாஹ்வை ஸூரத்து பண்ணுவதும் அல்லாஹ்வின் ஜமாலை – பேரழகை காட்சி காண வழியும் கண்ணாடியுமாகும் என்று தெரிய வருகிறது. இதற்காகத்தான் றஸூலுல்லாஹ்வையும் nஷய்கையும் ஸூரத்துப் பண்ணப்படுகிறது. இப்படி ஸூரத்துப் பண்ணும்போது எப்படி அல்லாஹ்வை மறந்த நிலை வரும்?
தேவுபந்தியாக்கள் ஸூபிய்யாக்கள் பேரில் அவதூறு சொல்கிறார்கள். அவர்கள் பேரில் மக்களுக்கு வெறுப்புணர்வையுண்டாக்கப் பார்க்கிறார்கள். தேவுபந்தியாக்களுக்கு தஸவ்வுபுடைய வாடையுங் கூட விளங்காது. றஸூலுல்லாஹ்வின் பேரில் அதாவத்து- பகைமை எனும் நஜீஸிலேயே அல்லும் பகலும் புரண்டு கிடக்கும் வஹ்ஹாபிகளாலும். தேவுபந்தியாக்களாலும் தஸவ்வுபின்-ஸூபிஸத்தின் நறுமணத்தை எங்ஙனம் நுகர முடியும்?
த.ப. ஆசிரியர் அவர்களே!
'ஸிராதே முஸ்தகிமில்' ஸர்பே ஹிம்மத்தின் நேரமின்றி….. கருத வேண்டும்; என்று தேவுபந்திகள் பல தில்லுமுல்லுகள் செய்து இட்டுகட்டி எழுதியதை நீங்களும் அப்படியே எழுதிக்  கொண்டு 'இவற்றை எல்லாம் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு…. முடியும்' என்று மறுப்பாளர்களைப் பார்த்தா கேட்கிறீர்கள்? ஸர்ப் ஹிம்மத்துக்குப் பொருள் ஜன் ஜானி கிதாபு ஓதுகின்ற பையனுக்கும் தெரியும். மவுலவி பாஜில்களாகிய உங்களுக்கு 'ஸர்பு ஹிம்மத்' என்பது அறபி பதம் என்பதுவும் கூட விளங்கவில்லை.
முஹம்மது அத்ஹர் உதுமானியின் முயற்சியால் உருதுவில் மொழிபெயர்த்து ராசிது கம்பெனியால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமை மூல நூல் பார்ஸியில் உள்ளது. அதை பரேலியர்கள் உருதுவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்திருக்கிறார்கள்' என்று நீங்கள் எழுதியிருப்பதனால் ராஷpது கம்பெனி ஸிராதே முஸ்தகீம் உங்கள் கைவசம் இருந்தாலும் கூட உங்களுக்கு உருது எழுத்துங் கூட விளங்காது. ஆகையினால் உருது தெரிந்தவர்களிடம் ராஷpது கம்பெனி உருது ஸிராதே முஸ்தகீமின் 96ம் பக்கம் 8வது வரி கடைசியிலிருந்து 13வது வரி ஆரம்பம் வரையிலும் வாசித்துப் பொருள் சொல்லும்படி கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு 'ஸிராதே முஸ்தகீம்' நேரான வழி தெரியும்.
நூலாசிரியர் அதில் சொல்கிறார்:-
'ஆன்மாக்களும் மலக்குகளும் தொழுகையில் வெளியாகித் தோன்றுவது கெட்டதென்று நினைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அவைகளை நாடுவதும் தனது ஹிம்மத்தை – கவனத்தை அவை பக்கம் திருப்புவதும் கலப்பறுதலுள்ள ஜனங்களுடைய கலப்பறுதலுக்கு மாற்றமானதாகும். ஆனால், (நாட்டமின்றி) தன்னாலேயே ஆன்மாக்களும், மலக்குகளும் வெளியாவதானது கலப்பறுதலுள்ளவர்களுக்கு அருளப்படுகிற பெருமைக்குரிய நற் பேற்றிலுள்ளதாகும்.
(தொடரும்…..) 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!"

திப்யானுல் ஹக் பாகம்-

திப்யானுல் ஹக் பாகம்-2-Tibyanul Haque-2

திப்யானுல் ஹக் பாகம்-2

தொகுத்தவர்கள்:
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
இன்னல்லாஹ வமலாயிகத்தஹு யுஸல்லூன அலன்னபிய்யி யா அய்யுஹல்லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வ ஸல்லிமூ தஸ்லீமா.
நிச்சயமாக அல்லாஹு(தஆலாவு)ம், அவனது மலக்கு(அமரர்)களும் இந்த நபியின் மீது சலவாத்து சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! நீங்களும் அவர்கள் மீது சலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்.
 
                                                                                                             -அல்-குர்ஆன் 33-56.
 
என் மீது ஒரு தடைவ சலவாத்து சொன்னால் அவன் மீது அல்லாஹ் பத்து தடைவ சலவாத்து சொல்வான். பத்து தவறுகளை அவனை விட்டும் இறக்குவான்(மன்னிப்பான்) பத்து படித்தரங்களை உயர்த்துவான்.
                                                                                           மிஷ்காத் ஹதீது எண்: 922.
சலவாத்து சொல்வதற்கு அல்லாஹுதஆலாவோ, நபிகள் நாயகமோ எதையும் மட்டுப்படுத்தவில்லை. விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவு சொல்லலாம். மாஷிஃத – நீ விரும்பிய அளவு அதிகப்படுத்தி சலவாத்து சொல் என்று ஏவியும் இருக்கிறார்கள்.
அல்லாஹுதஆலாவும் மலக்குகளும், மனிதர்களும் ஒன்றுபோல் செய்யும் அமல் இந்த சலவாத்து மட்டும்தான். இதை அங்கே ஓதக்கூடாது, இங்கே ஓதக்கூடாது என்று என்னமோ ஹராமான பெரிய பாவத்தைப் போன்று வரிந்து கட்டிக் கொண்டு தடுப்பது, நிறுத்துவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பொறாமை கொள்வதுதான். அல்லாஹு தஆலா அதைவிட்டும் நம்மைக் காப்பாற்றுவானாக!
நல்ல காரியங்களுக்கு முன்னும் பின்னும் துஆவானாலும் கூட சலவாத்து ஓதுவதினால் அவைகள் அல்லாஹுத்தஆலா இடத்தில் அங்கீகாரம் பெறுகிறது.
நிச்சயமாக துஆ வானத்திற்கும், பூமிக்குமிடையில் நிறுத்தப்பட்டுள்ளது. உனது நபியின் மீது சலவாத்து சொல்லும் வரை அதில் நின்றும் எதுவும் உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.
                                                                                ஹதீது: திர்மிதி, மிஷ்காத் 938.
பாங்கு, இகாமத்திற்கு முன், பின் சலவாத்து ஓதுவது
'ஷரஹுல் வஸீத்தில் இமாம் நவவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்ன பிரகாரம் இகாமத்திற்கு முன் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும். இதையே ஷெய்குனா இப்னு ஸியாத் அவர்கள் ஊண்டுதல் பிடித்துள்ளார்கள். பாங்கிற்கு முன் எதையும் நான் கண்டதில்லை என்று சொன்னார்கள். இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி அவர்கள் பாங்கிற்கும், இகாமத்திற்கும் முன்னால் நிச்சயம் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.'
                              பத்ஹுல் முயீன், பஸ்லுன் பில்அதானி வல்இகாமதி.
அல்லாமா இப்னு ஹஜர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:-
'பாங்கிற்கு முன் சலவாத்து சொல்வதும், பின்னால் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வது சம்பந்தமாக நான் எதையும் கண்டதில்லை. நம் இமாம்களின் பேச்சுகளிலும் இதை எடுத்துக் கூறியதாகவும் நான் கண்டதில்லை(மேலே) குறிப்பிட்ட இடத்தில் இவ்விரண்டும் சுன்னத்தில்லை. அந்த குறிப்பிட்ட இடத்தில் சுன்னத் என்று நிர்ணயம் கொண்டு சொன்னால் விலக்கப்படுவான். ஆதாரமில்லாமல் மார்க்க(சட்டட)மாக்குதலாகும். ஆதாரமில்லாமல் மார்க்க(சட்ட)மாக்கினால் தண்டிக்கப்படுவான், தடுக்கப்படுவான்.'                               –பதாவா குப்றா.
ஒரு இமாம் சுன்னத் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதுவே செயல்படுத்துவதற்கு போதுமாகும். இதையே அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர்களான நாதாக்கள் முற்காலத்திலிருந்தே பாங்கிற்கு முன்னும் சலவாத்தை ஓதி வந்துள்ளார்கள்.
இமாம் இப்னு ஹஜர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்:- நான் கண்டதில்லை, சுன்னத் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை, ஆதாரமில்லாமல் ஒரு காரியத்தை (மார்க்க(சட்ட) மாக சுன்னத் என்று நிர்ணயம் செய்து கொண்டு செயல்படுத்தக் கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதாரம் இல்லாமல் பர்ளு, சுன்னத், ஹராம், மக்ரூஹ்  என்று சொல்வது கூடாது என்பதும், ஆகும் என்பதற்கு ஆதாரம் தேவை இல்லை  என்பதும், பொதுவான சட்டம். பாங்கிற்கு முன் சலவாத்து 'ஆகும்' என்று நிர்ணயம் கொண்டு சொல்வதை தடுக்கவில்லை இது அவர்களது வாசகத்தின் தெளிவு.
சுன்னத் என்று சொல்லும் இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு என்ன அந்த பொதுச் சட்டம் தெரியாமாலா ஆதாரம் இல்லாமலா, முட்டாள்தனமாகவா சுன்னத் என்று சொல்லியிருக்கிறார்கள்? அல்லாஹுதஆலா அப்படிப்பட்ட எண்ணத்தை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக! அவர்களது பதவி, அந்தஸ்தை உயர்த்துவானாக! ஆமீன்.
எவ்வளவு சலவாத்தை எவ்விடத்திலும் அதிகப்படுத்தினாலும் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சலவாத்தை சுருக்குவதின் விளைவு
அண்ணல் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது திருநாமத்தை எடுதப்படும்போது 'ஸல்' என்றும், 'ஸல்அம்' என்றும், 'ஸல்லம்' என்றும், 'ஸாது' என்றும், 'அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கு 'அம்' என்றும் சுருக்கி எழுதுகிறார்கள்.
இவ்வழக்கம் நானூறு ஆண்டுகளாக பாமர மக்களிடையேயும், பெரும் உலமாக்களான மேதைகளிடமும் எப்படியோ ஊடுருவி விட்டது.
கொஞ் அளவு பேனா மை, அல்லது ஒரு அங்குல காகிதம் அல்லது சில வினாடிப் பொழுதை மிச்சப்படுத்துவதற்காக எவ்வளவோ அபரீதமான பாக்கியத்தை விட்டு விடுகின்றனர்.
முதன்முதலில் இப்படி ஸலவாத்தை சுருக்கி எழுதியவரின் கை துண்டிக்கப்பட்டதாக இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
-மன்கதப அலைஹிஸ்ஸலாம்-பில்ஹம்ஸதி-வல்மீமி-யக்புறு லிஅன்னஹு-தக்பீபுன்-வதக்பீபுல் அன்பியாயி குப்றுன்- அலைஹிஸ்ஸலாம் என்பதை ஹம்ஸு கொண்டும், மீம் கொண்டும் ('அம்' என்று) எவன் எழுதுவானோ அவன் காபிராகுவான். ஏனென்றால், இது இலேசாக மதிப்பதாகும். நபிமார்களை இலேசாக மதிப்பது குப்றாகும்' என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரஹிமஹுல்லாஹு அவர்கள் துர்ருல் முக்தாரின் ஹாஷியாவில், பதாவா தாதர்கானியாவில் இருந்து நகல் படுத்துகிறார்கள்.
வேணுமென்று இலேசாக மதிப்பானாகில், அல்லது ஏளனமாக நினைப்பானாகில் அவன் காபிராகிவிடுவான் என்பதில் ஐயமில்லை(மஆதல்லாஹ்)
சோம்பேறித்தனமாக பொடுபோக்காக, அறியாத்தனமாக செய்வார்களாயின் அவர்கள் காபிராகமாட்டார்கள். என்றாலும் பாக்கியமற்ற நஸீபு கெட்ட வேலை இது என்றால் மிகையாகாது.
'அல்லாஹ்' என்ற திருநாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'தஆலா' என்றோ அல்லது  தகத்தஸ' என்றோ அல்லது 'அஸ்ஸவஜல்ல'என்றோ அல்லது இது போன்றவற்றை எழுதி கண்ணியப்படுத்த வேண்டும். இதை போன்றே அவனது தூதர் நாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று எழுத வேண்டும். இது ஸலப் – முன்னோர்கள் வழக்கம் போல் கலப்-பின்னோர்கள் வழக்கம். 'ஸல்அம்' என்று சுருக்கக் சுடாது. இது பாக்கியமற்றவர்களின் வழக்கம்.
முஜ்தஹிதுகளான இமாம்களுக்கு ரலியல்லாஹு அன்ஹு என்றும் மற்றவர்களுக்கு ரஹிமஹுல்லாஹ்  என்றும் எழுத வேண்டும்.
                                                                              பதாவா ஹதீதிய்யா பக்கம் 230.
ஹதீதை எழுதக் கூடியவர் அல்லாஹுதஆலாவின் பெயரை எழுதினால் 'அஸ்ஸவஜல்ல' என்றோ, அல்லது 'தஆலா' என்றோ அல்லது சுபுஹானஹு வதஆலா' என்றோ அல்லது 'தபாரகவ தஆலா' என்றோ, அல்லது 'ஜல்லதிக்ருஹு' என்றோ அல்லது 'தபாரக இஸ்முஹு' என்றோ அல்லது 'ஜல்லத் அழ்மத்துஹு' என்றோ அல்லது இது போன்றவைகளை (இணைத்து) எழுத வேண்டும்.
இதை போன்றே நபி நாயகத்தின் பெயரை எழுதும் போது 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று முழுமையாக எழுத வேண்டும். இவை இரண்டின் பக்கம் சமிக்கையாகவோ ஒன்றை சுருக்கியோ எழுதக் கூடாது.
இதைப் போன்றே சஹாபியின் பெயரிலும் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றும், சஹாபியின் மகனாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹுமா' என்றும், சிறந்தவர்கள், உலமாக்களாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றோ அல்லது 'ரஹிமஹுல்லாஹ்' என்றோ எழுத வேண்டும்(சொல்ல வேண்டும்)
                                                                               ஷரஹு முஸ்லிம் பக்கம் 73.
ஆகவே ஸஹாபா பெருமக்கள் இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள், இமாம்கள் திருப்பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்'றும், அது போன்றே 'குத்திஸஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதற்கு 'ரஹ்' என்றும், எழுதப்படுவது பரக்கத்தற்ற துர்பாக்கியத்தனமாகும்.
இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதை எடுத்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
                                                          (ஆதாரம்: பதாவா ஆப்பிரிக்கா பக்கம் 45)
எனவே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முழுமையாக எடுதுவது, பிரசுரிப்பது மூலமாக வாசகர்களின் நாவுகளில் 'ஸலவாத்' மணத்தை கமழச் செய்வோம். அதற்குரிய நற்கூலியையும் பெற்றிடுவோம்.
'அலைஹிஸ்ஸலாம' என்று யாருக்கு சொல்லக் கூடாது?

நபிமார்கள் திருப்பெயர்களை சொல்லும்போது மட்டும் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்ல வேண்டும். இது அவர்களுக்கென்று சொந்தமாக்கப்பட்டது. அவர்கள் அல்லாதவர்களின் பெயர்களுக்குப் பின்னால் 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்லக் கூடாது.
'ரலியல்லாஹு அன்ஹு' என்று அல்லது 'ரஹிமஹுல்லாஹு' அல்லது ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்றுதான் சொல்ல வேண்டும். 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்வது வழிகெட்ட ராபிழ்கள், ஷpயாக்கள், சிலஇமாம்களுக்கு உண்டாக்கிய வழக்கமாகும். அதை பின்பற்றி நாம் சொல்லக் கூடாது.
'முஹக்கிகீன்களான வல்லுனர்கள் சென்றதும், இமாம் மாலிக், இமாம் சுப்யான் ரஹிமஹுல்லாஹ் ஆகியோர்கள் சார்ந்ததும், இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களால் அறிவிக்கப்பட்டதும், புகஹாக்கள்-மார்க்க அறிஞர்கள், முதகல்லிமீன்கள்-கொள்கை நிர்ணய வல்லுனர்கள் தேர்ந்தெடுத்ததுவானதும்:-
நபிமார்கள் அல்லாதவர்கள் பெயர் சொல்லும் போது சலவாத்து சலாம் சொல்லக் கூடாது. இது நபிமார்களுக்கு அவர்களை கண்ணியப்படுத்துவற்காக சொந்தமாக்கப்பட்டது. அல்லாஹுதஆலாவின் பெயர் சொல்லும் போது 'தஆலா' என்பது போன்று, தூய்மை மேன்மை படுத்துவது அவனுக்கு சொந்தமாக்கப்பட்டது போன்று இது நபிமார்களுக்கு சொந்தமானது. இதில் எவரும் கூட்டாவதில்லை. இதுபோன்று நபிநாயகம்  மற்ற நபிமார்களுக்கு சொந்தமானதுதான் சலவாத்தும் சலாமும், இதிலும் மற்றவர்களை கூட்டாக்கக் கூடாது.
'ஸல்லு அலைஹி……(நபிநாயகம்) அவர்கள் மீது சலவாத்து சலாம் சொல்லுங்கள்' (35-56)  என்று அல்லாஹ் சொல்வது போலும்;, அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு குப்ரான்-பிழை பொறுத்தல், ரிழா-(இறையருள்) பொருத்தம் போன்றவற்றைச் சொல்லுவது போலும், 'யகூலூன ரப்பனக்பிர்…' அவர் (முஃமின்)கள் சொல்வார்கள் இறiவா! எங்களுக்கும் எங்களைக் கொண்டு முந்தி சென்றவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் பிழை பொறுப்பாயாக! (10:59). 'வல்ல தீனத்தப ஊஹும்….. நன்மையைக் கொண்டு பின் தொடர்ந்தவர்களுக்கு ரலியல்லாஹு அன்ஹும் – அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! (9:100) என்று குர்ஆன் ஷரீபில் வந்திருப்பது போலும் சொல்ல வேண்டும். இமாம் அபூ இம்ரான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருப்பது போன்று இது (அலைஹிஸ்ஸலாம் என்று நபிமார்கள் அல்லாதவர்களுக்கு சொல்'லும் வழக்கம்) முற்காலத்தில் அறியப்பட்டதில்லை. ராபிழ்கள், ஷியாக்கள் (நபி வழித்தோன்றல்களான) சில இமாம்களுக்கு சொல்வதை புதிதாக உண்டாக்கியிருக்கிறார்கள். சுலவாத்தையும் அவர்களுக்கு கூட்டாக்கி, நபி நாயகத்தையும் அவர்களுக்கு சமமாக்கி இருக்கிறார்கள்.
பித்அத்காரர்களைக் கொண்டு ஒப்பாக நடப்பது விலக்கப்பட்டதாகும். அவர்கள் எதை தங்களுக்கு (அடையாளமாக) அவசியமாக கொள்கிறார்களோ அதற்கு மாற்றமாக நடப்பது நமது கடமையாகும்.
நபி நாயகத்தின் ஆல்கள் – கிளைஞர்கள், மனைவிமார்களுக்கு சலவாத்து சொல்வது நாயகத்தின் பெயரை தொடர்ந்து சொல்வதாகும். தனியாக குறிப்பிட்டுச் சொல்வதில்லை.
                                                        ஆதாரம்: கிதாபுஷ் ஷிபா பாகம்2, பக்கம் 83.
இதைபோன்றே நபிமார்களை தொடர்ந்து அவர்களது சங்கைமிகு மனைவிமார்களுக்கும் அலைஹி மஸ்ஸலாம் என்றும், இதை போன்றே மலக்குகளுக்கும் அலா நபிய்யினா வஅலைஹிஸ்ஸலாம் என்றும் சொல்லலாம். ஆகவே அலி அலைஹிஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம், ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வது ராபிழ்கள், ஷியாக்களின் வழக்கம். இவ்வழக்கம் நம்மிடையில் எப்படியோ ஊடுருவி விட்டது. இதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும்.
ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வது பெரும்பாலான இமாம்களின் சொல்படி அவர்கள் ஹயாத்துன்னபி என்பதினால் ஆகுமாகும்.
கேள்வி:- லுக்மான், மர்யம் இவர்களுக்கு நபிமார்கள் போன்று சலவாத்து சொல்வதா? அல்லது சஹாபாக்கள், அவ்லியாக்களைப் போன்று ரலியல்லாஹு அன்ஹு-அன்ஹா என்று சொல்வதா? அல்லது அலைஹி-அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வதா?
பதில்:- பெரும்பாலான உலமாக்கள் இவர்கள் இருவரும் நபிமார்கள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். (நபிமார்கள் போன்று தனியாக சலவாத்தும், அலைஹிஸ்ஸலாம்-அலைஹஸ்ஸலாம் என்று  சொல்லக் கூடாது, சலவாத்து சொல்வதாக இருந்தால்) நபிமார்களை சேர்த்து இவர்களுக்கும் லுக்மான்-ஸல்லல்லாஹு அலல் அன்பியா-வ-அலைஹிஸ்ஸலாம் என்று அல்லது மர்யம்- ஸல்லல்லாஹு அலல் அன்பியா-வ-அலைஹஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும். தனியாக சொல்லக் கூடாது. உறுதியான சொல் லுக்மான் ரலியல்லாஹு அன்ஹு, மர்யம் ரலியல்லாஹு அன்ஹா என்று சொல்வதுதான்.
                                                                ஆதாரம்: அத்காறுன்னவலி பக்கம் 109.
கற்றமல்லாஹு- வஜ்ஹஹு என்று சொல்வது பற்றி:
சங்கைக்குரிய அமீருல் முஃமினீன் இமாம் அலி இப்னு அபூதாலிப் அவர்களுக்கு மட்டும் 'கற்றமல்லாஹு வஜ்ஹஹு' என்று சொல்வதின் தத்துவம், இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'பதாவா ஹதீதி'ல் சொல்லியிருப்பதன் சுருக்கம்:
இமாம் அலி நாயகம் கற்றமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் சிறு பிராயத்திலும் கூட சிலைகளுக்கு அறவே சுஜூது- தலைவணக்கம் செய்ததில்லை. ஆகவே அவர்களது திருமுகத்தை கண்ணியப்படுத்தி அழைக்க (துஆ செய்ய) வேண்டியது பொருத்தமாகிவிட்டது.
எதார்த்தத்தில் அவர்களது திருமுகத்தை கண்ணியமாக்குதல் என்றும், அல்லது முகத்தை சொல்லி திருமேனி பூராவையும் சமிக்ஞையாக்கி அல்லாஹுதஆலா அல்லாத சிலைகளுக்கு தலை வணங்குவதை விட்டும் அவர்களது திருமேனியை பாதுகாத்தான், கண்ணியப்படுத்தினான் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதன் அடிப்படையில் செய்யிதுனா அமீருல் முஃமினீன் இமாம் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கும் கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்வதும் பொருத்தமாகும். ஏனெனில் அவர்களும் அறவே சிலை வணக்கம் செய்ததில்லை. என்றாலும் அலி நாயகத்திற்கு மட்டும் சொல்லும் வழக்கம் அதிகமாகி விட்டது. ஏனெனில் அவர்கள் எந்தவொரு சிலைக்கும் சுஜூது செய்யவில்லை என்பது ஏகோபித்த முடிவு. அவர்கள் சிறுவராக இருக்கும் போதே இஸ்லாம் ஆகிவிட்டார்கள்.
அப்படியானால் சிறுவயதிலே இஸ்லாம் ஆன இப்னு அப்பாஸ், இப்னு உமர், இப்னு ஜுபைர் போன்றவர்களுக்கம் கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்லாமல் மற்றவர்களுக்கு சொல்வது போன்று ரலியல்லாஹு அன்ஹு என்றுதான் சொல்லப்படுகிறார்களே என்று கேட்டால்,
பதில்: ஷிர்க் – இணை வைத்தல் ஒழிந்து ஒடிந்தப் பின் வழிக்கேடு, குழப்பம் என்ற நெருப்பு அணைந்து விட்டபின் இவர்கள் பிறந்தார்கள். அவர்களோ ஷிர்க், வழிக்கேடு, குழப்பம் கொடிகட்டிப் பறந்த காலம். பெற்றோர்கள், உற்றார்கள் வற்புறுத்திய நிலையிலும், நோவினை செய்துவந்த நிலையிலும் கூட பொறுமையாக இருந்து சிலை வணக்'கம் செய்யாதிருப்பது மிக மிக பெரிய காரியம். அதனால்தான் அபூபக்கர் சித்தீக், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களுக்கு கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்லி மற்ற சஹாபாக்களை விட்டும் அலாதியாக பிரித்து காட்டுவது மிக பொருத்தமாகும்'.
                                                              ஆதாரம்:- பதாவா ஹதீதிய்யா பக்கம் 57.
'ரலியல்லாஹு அன்ஹு' என்று சொல்வது சஹாபாக்களுக்கு மட்டும் சொந்தம், மற்றவர்களுக்கு 'ரஹிமஹுல்லாஹ் என்றுதான்'; சொல்ல வேண்டும் என்று சில உலமாக்கள் சொல்வது (இதையே தேவுபந்த் வஹ்ஹாபிகள் சொல்வது) உதாவக்கரை, பெரும்பாலான உலமாக்கள் சொல்வது போன்று மற்றவர்களுக்கும் ரலியல்லாஹு அன்ஹு என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.
                                                         ஆதாரம்: அத்காருன்னவலி பக்கம் 109.
பெரும்விரலை முத்தி கண்ணில் வைப்பது
'அஷ்ஹது-அன்ன-முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று பாங்கில் கேட்டதும் இரு பெரும் விரல்களை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும். இம்மை, மறுமை பயன்களை அளிக்க வல்லததாகும்.
'முதல் அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கேட்கும்போது 'ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூலல்லாஹ்' என்றும், இரண்டாவது 'அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கேட்கும்போது, 'குற்றத்து ஐனிபிக யாரஸூலல்லாஹ்' – உங்களைக் கொண்டே என் கண் குளிர்ச்சி என்று சொல்லி இருப் பெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். பின் 'அல்லாஹும்ம-மத்தியினி-பிஸ்ஸம்யி-வல் பஸரி -  கேள்வி, பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக! என்று சொல்வான். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அ(ப்படி செய்த)வனை சுவர்க்கத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.
ஆதாரம்:- துர்ருல் முக்தார், கன்ஜுல் இபாத், பதாவா ஸூபிய்யா, கஹ்ஸதானி, பஹ்ருற்றாயிக், ஷரஹு விகாயா.
பாங்கில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் கேட்கும்போது இருபெரும் விரலை முத்துவதும், இரு கண்களில் வைப்பதும் ஆகுமாகும். நமது nஷய்குமார்கள் முஸ்தஹப்பு என்று தெளிவாக கூறியுள்ளார்கள்.
                         பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கி
'முஅத்தின் -பாங்கு சொல்பவர்' அஷ;ஹது அன்னமுஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வதை கேட்கும்போது மர்ஹபன் – பிஹபீபி-வ-குற்றத்துஐனி – சோபனம். எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி – முஹம்மதிப்னி அப்தில்லாஹ் – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  என்று சொல்லி இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பானாகில் குருடாக மாட்டான், கண் வலி எக்காலமும் வராது.'
                                                                              இஆனா பாகம் 1, பக்கம் 243.
இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான். ஒருக்காலமும் கண்வலி வராது.
               ஆதாரம்: இமாம் மாலிக் மத்ஹப் கிதாப் கிபாயத்துத் தாலிப்.
சஹீஹு அல்லாத ஹதீதுகளைக் கொண்டு செயல்படுத்துவது பற்றி
எந்த ஒரு நல்ல காரியத்தை நாம் சொன்னாலும் சஹீஹான ஹதீது இருக்கிறதா? என்ற நவீனமான யூகம் இக்காலத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது.
முற்காலத்தில்  எந்த விஷயத்தை எந்த ஒரு இமாம் சொன்னாலும் அதை அப்படியே செய்வார்கள், செயல்படுத்துவார்கள். இது இமாம்களை ஆதாரம் எதுவும் டோமல் தக்லீது –பின் தொடருவதின் அடிப்படையாகும். (தக்லீது -இமாம்களை பின்தொடருதல் என்ற தலைப்பில் தனியான ஒரு நூல் எழுதி வெளியாக்கி இருக்கிறேன். அதை வேண்டுமானால் பாருங்கள்.)
ஆதாரங்களைத் தேடுவது நமக்கு கடமையில்லை. சங்கைமிகு இமாம்களுக்கு கடமை, சஹீஹானதா? பலஹீனமானதா? என்று ஆய்வு செய்வது அவர்களது பொறுப்பு, என்றாலும் ஆயத்துகள், ஹதீதுகளை ஆங்காங்கு மேற்கோள் காட்டுவது நம் மன நிம்மதிக்கு தான்.
சஹீஹு அல்லாத ஹதீதுகளைக் கொண்டு செயல்படுத்துவது பற்றி சங்கைக்குரிய இமாம்கள் சொல்வதை பாரீர்!
'ஆசை ஊட்டுவதற்கு, அச்சமூட்டுவதற்கு, சிறப்பியல்புகளை காட்டுவதற்கு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் அல்லாமல் ழயீபான-பலஹீனமான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்யலாம். அமல் செய்வது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும்'
                                                                                 அதகாறுன்னவலி பக்கம் 7.
'அமல்களின் சிறப்புகளில் ழயீபான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது ஆகுமாகும்.'
                                               ரத்துல் முஹ்தார் முதல் பாகம், பாபுல் அதான்.
'அமல்களின் சிறப்புகளில் ழயீபான ஹதீதுகள் முர்ஸல்-தொடர்பில்லாத, முஃழல், முன்கதிவு-தொடர் அறுந்துவிட்ட ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது ஆகும் என்பது ஏகோபித்த, ஒற்றுமையான முடிவாகும்.
ஆதாரம்:- இமாம் இப்னு ஹஜர் அவர்களின் பதாவா ஹதீதிய்யா பக்கம் 132.
'மாற ஆஹுல் – முஃமினூன ஹஸன்-பஹுவ-இன்தல்லாஹி ஹஸனுன்….. முஃமின்கள் எதை நன்மையானதாக கருதுகின்றார்களோ, அது அல்லாஹ் தஆலா இடமும் நன்மையாகும்' என்ற ஹதீதும் இதற்கு துணையாக இருக்கிறது.

பித்அத்தும் அதன் வகைகளும்
'பித்அத்' என்பது அகராதி பாiஷயில் புதிதாக ஓர் காரியத்தை உண்டாக்குவது. இஸ்லாமிய பரிபாiஷயில், நபிகள் நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்' அவர்களது ஜீவிய காலத்தில் வெளிப்படையாக இல்லாதவற்றை உண்டாக்குவது.
'மன்அஹ்தத –பீஅம்ரினா-ஹாதா-மாலைஸ-மின்ஹு-பஹுவ-ரத்துன் – நமது இந்த (மார்க்க) காரியத்தில் இல்லாத புதிதான ஒன்றை உண்டாக்கினால் அது மறுக்கப்பட்டதாகும்.'
                                                                                                   மிஷ்காத் பக்கம் 27.
இந்த ஹதீதின் கருத்தை அல்லாமா முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதன் விரிவுரையில் கூறுகிறார்கள்:-
'குர்ஆன், ஹதீதுகளில் வெளிப்படையாக, அல்லது மறைமுகமாக மொழியப்படாத அல்லது கிரகித்து எடுக்கப்படாத ஒரு புதிய அபிப்பிராய விஷயத்தை இஸ்லாத்தில் உண்டாக்குவானாகில் அது மறுக்கப்பட்டதாகும் என்பதுதான்.
                                                             மிர்காத்து ஷரஹு மிஷ்காத் பக்கம் 27.
மார்க்கத்திற்கு மாறுபடாது துணையானவைகள் அல்லது அதற்கு விதர்ப்பமில்லாதவைகள், விரும்பத்தகாதானவைகளை உண்டாக்குவது சில சமயம் அவசியமாகும், சுன்னத்தாகவும், ஆகுமானதாகவும் ஆகும். எனவே எந்த ஒரு நல்ல பித்அத்தை உண்டாக்கக் கூடாது என்பது ஹதீதின் கருத்தல்ல.
'மன்ஸன்ன-பில் இஸ்லாமி-சுன்னத்தன்-ஹஸனத்தன்-பலஹு அஜ்ருஹா….' ஒருவன் இஸ்லாத்தில் அழகிய சுன்னத்தை (வழிமுறையை) உண்டாக்குவானால் அவனுக்கு அதற்கான (நற்) கூலியும், இன்னும் அதன்படி அவனுக்குப் பின்னால் அமல் செய்தவனின் (நற்) கூலியும் எவ்வித குறைவின்றி இவனுக்கும் கிடைக்கும். இன்னும் ஒருவன் இஸ்லாத்தில் கெட்ட சுன்னத்தை (வழி முறையை) உண்டாக்கினால் அவனுக்கு அதற்கான பாவமும், அதன்படி அவனுக்குப் பின்னால் அமல் செய்தவனின் பாவமும் எவ்வித எவ்வித குறைவின்றி இவனுக்கும் கிடைக்கும்.'
                                                                                              மிஷ்காத் பக்கம் 33.
'தீமையான காரியத்தை பித்அத்தாக (புதிதாக) உண்டாக்கினால் அவனுக்கு அதன் பாவமும், அவனை பின்பற்றியவர்களின் பாவமும் கிடைக்கும். நன்மையான காரியத்தை பித்அத்தாக (புதிதாக) உண்டாக்கினால் அவனுக்கு அதன் நன்மையும், கியாமத் நாள்வரை அதன்படி அமல்செய்கிறவர்களின் நன்மையும் கிடைக்கும் என்பது இஸ்லாத்தின் முக்கியமான சட்டமாகும் என்று உலமாக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
                                                                    துர்ருல் முக்தார்- பாபுல் பழாயில்.
ஆகவே நல்ல பித்அத்தை உண்டாக்குவது நன்மையை பயக்கும். கெட்ட பித்அத்தை உ;ணடாக்குவது திண்மையை பயக்கும் என்பது தெளிவாகி விட்டதினால் ஹதீது ஷரீபில் வந்துள்ள 'குல்லு-பித்அத்தின்-ழலாலத்துன் -எல்லா பித்அத்தும் வழிகேடு என்பதற்கு குல்லு பித்அத்தின் (செய்யி அத்தின்) தின்மையான பித்அத் அனைத்தும் வழி கேடு என்று பொருள் கொள்வது அவசியமாகும். இதை இதற்கு பின்வரும் பித்அத்தின் வகைகள் உறுதிப்படுத்ததுகின்றது.
பித்அத்தின் வகைகள்
பித்அத் ஐந்து வகைப்படும்.
1.    வாஜிபதுன் – கட்டாயமான கடமை (உதாரணம்) குர்ஆன் ஷரீப், (ஹதீது ஷரீப்) மற்றுமுள்ள மார்க்க சம்பந்தமான நூற்களை செம்மைபடுத்தி வெளியிடுவது.
2.    முஹற்றமதுன் – ஹறாமாக்கப்பட்டது. (உதாரணம்) ஜபரிய்யா, (கதரிய்யா, வஹ்ஹாபிய்யா) போன்ற கெட்ட கொள்கைகள் (செயல்பாடுகள்)
3.    மன்தூபத்துன் – சுன்னத்தானவைகள் (உதாரணம்) தவசாலைகள், மத்ரஸாக்கள் – பாடசாலைகள் போன்றவற்றை உண்டாக்குவதும் முற்காலத்தில் இல்லாத நன்மையான காரியங்களை உண்டாக்குவதுமாகும். தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதுமாகும்.
4.    மக்ரூஹத்துன் – வெறுக்கப்பட்டவைகள்; (உதாரணம்) பள்ளிவாசல்களை பெருமைக்காக (தேவையில்லாது) அழகுப்படுத்துவது.
5.    முபாஹத்துன் – ஆகுமாக்கப்பட்டவைகள். (உதாரணம்) சுப்ஹு, அஸர் தொழுகைக்குப் பின் முஸாபஹா செய்வதும், உணவிலும் குடிப்பிலும் இன்பகரமானவற்றை விஸ்தீரணப்படுத்துவதுமாகும்.
                                        ஆதாரம்: மிஷ்காத் ஷரஹு மிர்காத் பக்கம் 27.
                      இஆனா ஷரஹு பத்ஹுல் முயீன் பாகம் 1, பக்கம் 271.
'குர்ஆனுக்கோ அல்லது சுன்னத்திற்கோ அல்லது இஜ்மாவு(ஏகோபித்த முடிவு)க்கோ அல்லது அதர் – நல்வழிமுறைக்கோ மாற்றாக புதிதாக உண்டாக்கப்பட்டால் அது வழிகேடான பித்அத்தாகும். இவைகளில் எதற்கும் மாற்றமில்லாமல் நல்லதாக உண்டாக்கப்பட்டால் அது புகழப்பட்ட பித்அத்தாகும் என்று இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
                       இஆனா ஷரஹு பத்ஹுல் முயீன் பாகம் 1, பக்கம் 271.
ஆகவே சத்திய விளக்கத்தை சத்தியமாக விளங்கி அதன்படி அமல் செய்வதற்கும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதை விட்டும் விலகிக் கொள்வதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா தவ்பீக் -நல்லருள் புரிவானாக! ஆமீன்.

(நிறைவடைந்தது.)
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "திப்யானுல் ஹக் பாகம்-"

சனி, 10 செப்டம்பர், 2011


Wahhabi Creation-வஹ்ஹாபியத் தோற்றம் பாகம் 1. Part-II

 
இதனிடையே லண்டனிலிருந்து வந்திருந்த கடிதம் என்னை உடனடியாக கர்பலா மற்றும் நஜபை நோக்கிச் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தது. அவ்விரு நகரமும் ஷியாக்களுக்கு கிப்லாவைப் போன்று ஆத்மீகத்தின் மர்கஸாவும் திகழ்ந்து கொண்டிருந்தன. இவ்விரு நகரங்களைக் குறித்த சுருக்கமான வரலாறு இதுதான்.
 
நஜப்: இங்குதான் ஹஜ்ரத் அலீயின் அடக்கஸ்தலம் இருக்கின்றது. இந்த எல்லையிலிருந்து தான் நகரமே துவங்குகிறது. ஹஜ்ரத் அலீயின் ஷஹாதத்தின் போது ஆட்சியின் தலைமை பீடமாக இருந்த கூபாவிலிருந்து நஜப் ஐந்து கிலோமீட்டர் தூரமாகம். நடந்து சென்றால் ஒரு மணிநேரமாகும்.
அலீயவர்கள் ஷஹீதாக்கப்பட்டபோது அவர்களின் உடலை அவர்களது மைந்தர் ஹுஸைன் யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து நஜபில்தான் நள்ளிரவில் அடக்கம் செய்தனர்.ஷியாக்களின் உலமாக்கள் இந்த கப்ரை பெரிதும் மதிக்கின்றனர். உஸ்மானியப் பேரரசின் கலீபாவும் பல்வேறு காரணங்களுக்காக இக்கப்ருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தார்.
 
ஈரான் நாட்டு அரசரும் ஷியா மத்ஹபைப் பின்பற்றுபவராக இருந்ததால் நஜபிலிருந்த ஷியா உலமாக்கள் உஸ்மானிய கலீபாக்களுக்கு பெரியதும் கண்ணியமளித்து வந்ததன் மூலம் ஈரானுக்கும் துருக்கிக்குமிடையே சண்டைச் சச்சரவு ஏதுமின்றி சுமுகமான உறவிருந்தது.
 
நஜபைச் சுற்றிலும் இருந்த மக்கள் ஷpயா பிரிவைச் சார்ந்தர்களாயிருந்தனர். அவர்களிடம் படைப்பிரிவுகளோ அதற்குரிய பயிற்சி முறைகளோ எதுவுமில்லை. இம்மக்கள் தங்களின் குலத்தார்களது வாழ்க்கை முறைகளை மேற்கொண்டிருந்தனர். இதனாலேயே உஸ்மானிய ஆட்சியாளர்கள் உலமாக்களின் கருத்துக்கு மாறுபட்டு அவர்களை அவமதிக்கும் வகையில் நடக்கும் போது அம்மக்களனைவதும் உஸ்மானிய அரசுக்கெதிராக திரண்டு விடுவர். பின்னும் துருக்கிய ஆட்சி இதைப் புரிந்து கொண்டு மக்களின் விரோதத்தையும் தேடிக் கொள்ள விரும்பாமல் செயல்பட்டு வந்தது.
ஷியாக்களால் மிகவம் மதிக்கப்படும் மற்றோர் இடம் கர்பலா. இந்த நகரமும் இமாம் ஹூஸைனின் ஷஹாதத்திற்குப் பின் நாளுக்குநாள் விரிவடைந்து விட்டிருந்தது. இந்நகரம் கூபாவிலிருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாள்தோறும் இங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து இமாம் ஹூஸைனை ஜியாரத்துச் செய்கின்றனர். தஜ்லாவும் புராத்தும் ஈராக்கின் மாபெரும்  நதிகளாகும். இவ்விரு நதிகளைச் சுற்றியுள்ள தோட்டங்களும், வயல்களும் அந்நதிகளால் செழித்து விளங்கின.
 
நான் லண்டனுக்குத் திரும்பிச் சென்று வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும்போது ஈராக்கை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தஜ்லாவும் புராத் நதியும் சங்கமிக்கும் இடத்தை கைப்பற்ற வேண்டும். அங்கே குழப்பம் ஏற்படும்போது அந்நதிகளின் பாதையை மாற்றி விட்டால் அவர்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு வழிக்கு வந்து விடுவார்கள என்றும் சொல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.
 
நான் ஒரு வியாபாரியின் வேஷத்தில் நஜப் வந்து சேர்ந்தேன். அங்குள்ள ஷியா உலமாக்களின் மஜ்லிசுகளிலும் வாதப் பிரதிவாதக் கூட்டங்களிலும் சென்று அமரத் துவங்கினேன். வருத்தமான விஷயம் என்னவெனில், அவர்களிடம் கால மாற்றங்களைக் குறித்த சிந்தனை இல்லை. உலகில் நிகழ்ந்து கொண்டுள்ள மாற்றங்களுக்குத்  தக்கவாறு மக்களை வழிநடத்தும் யோசனையுமில்லை.
நஜபுடைய உலமாக்கள் உஸ்மானிய அரசை மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களாயிருந்தனர். அவர்கள் சுன்னீ கொள்கையுடையோராக இருந்தனர் என்பதற்காக அல்ல. மாறாக அவர்கள் அநியாயக்காரர்களாயிருந்தனர். மக்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டவர்களாக இல்லை. இந்நிலையில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களிடம் எந்த வசதியுமிருக்கவில்லை.
அவர்கள் தங்களின் முழு நேரத்தையும் மார்க்கக் கல்வியிலேயே செலவிட்டுக் கொண்டிருந்தனர். இனி மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த பாதிரிகளைப் போன்று புதிய கல்வியின் மீதுஅவர்கள் கவனம் செலுத்தாதிருந்தனர். சிலவற்றை அவர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் தெரியாதவர்களைப் போன்றே காட்சியளித்தனர்.
 
அவர்களுக்கு உலக அரசியல் நிலைகள் பற்றி எதுவுமே தெரியாதிருந்தது. பின்னும் அதைப்பற்றி யோசிப்பது கூட தேவையற்ற ஒன்றென அவர்கள் கருதிக் கொண்டிருந்தனர். இவர்கள் எத்தனை மௌட்டீகவாதிகள்? உலகம் இன்று விழித்துக் கொண்டது. ஆனால் இவர்கள் இன்னும் தங்களின் அப்பழைய சித்தாந்தங்களை விட்டு விழித்தெழ தயாராயில்லை. ஏதேனும் ஒருபெரும் அழிவுதான் அவர்களை தட்டியெழுப்ப முடியும். நான் அங்குள்ள சலி உலமாக்களிடம் உஸ்மானிய அரசுக்கெதிரான பேச்சைத் துவக்கினால் அவர்கள் அதைப் பற்றி எதுவுமே கூறாமல் மௌனம் சாதித்தனர். அவர்களுக்கு இவ்விஷயங்களில் விருப்பமில்லாதிருந்தது. சிலர் என்னை கேலி செய்தனர். இன்னும் சிலர் உன்னை உலகைக் குழப்ப வந்தவன் என்றும் கூறினர்.
 
நான் அங்குள்ள ஒரு ஆலிமிடம் எவ்வாறு நபிகளாhட அநியாயக்காரர்கனை எதிர்த்து போர் புரிந்தார்களோ, அதுபோன்று இன்றுள்ள அநியாயத்தையும் அராஜகத்தையும் எதிர்த்து யுத்தம் செய்து உலக அரங்கில் இஸ்லாத்தை நிலை நிறுத்தும் எண்ணம் உங்களுக்கு இல்லையா என்று கேட்டபோது……
அதற்கவர் அல்லாஹ் நபிகளாரை அப்பணிக்காக என்'றே தேர்ந்தெடுத்திருந்தான் என்று கூற, மீண்டும் நான், நீங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் என்று குர்ஆன் கூறுவதால் அநியாயக்காரர்களுக்கு எதிராக நீங்கள் ஏன் வாளை எடுக்கக் கூடாது? என்று திருப்பிக் கேட்கவும், நீ ஒரு வியாபாரி. இதைப் பற்றி பேசுவதற்கு ஒரு தனிக் கல்வி வேண்டும். எனவே அதற்கு நீர் தகுதியானவரல்ல என்று கூறி என்வாயை அடைத்து விட்டார்.
 
கர்பலாவில் இரு பெரிய பிரபலமான கப்ருகள். சிற்சில் மாற்றங்களோடு ஹஜ்ரத் அலியின் கப்ரைப் போன்றே கட்டப்பட்டிருந்தது. ஒன்று இமாம் ஹுஸைனுடைய கப்ரும்  மற்றொன்று ஹஜ்ரத் அப்பாஸுடைய கப்ருமாகும். இங்குள்ள மக்கள் தினந்தோறும் ஜியாரத்துச் செய்கின்றனர். இந்நகரங்களின் வெறிச்சோடிப் போய்விட்ட தோற்றங்கள் எமது லட்சியத்தை எய்துவதற்கு உரிய சாதனங்களாக காட்சியளித்தன.
 
அங்குள்ள மக்களை காணும்போது உஸ்மானிய அரசு அம்மக்களின் மீது எப்படிப்பட்ட அடக்குமுறைகளையெல்லாம் கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. போதாக்குறைக்கு அந்நாட்டு மக்களும் அறிவற்றவர்களாயும், பேராசைப் பிடித்தவர்களாகவும் மன்ம் போனபோக்கில் செயல்படுபவர்களாகவுமிருந்தனர்.
ஷியாக்கள் அரசின் அடக்குமுறைகளையும், அராஜகத்தையும் சகித்துக் கொள்ள பழகி விட்டிருந்தனர். அஹ்லெ சுன்னத்தைச் சேர்ந்தவர்களின் நிலையும் இப்படித்தானிருந்தது. அவர்கள் உஸ்மானிய அரசை  வெறுத்த போதிலும் தாங்கள் உலகிலேயே சிறப்புக்குரிய அரபிகள் என்னும் ரத்தம் அவர்களின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் நபிகளாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அரசுத்துறைகளில் உஸ்மானிய அரசின் கவர்னரை விட தாங்களே உரிமையுடையவர்கள்  என எண்ணிக் கொண்டிருந்தனர்.
 
எல்லா ஊர்களுமே வெறிச்சோடிப் போயிருந்தன. அசுத்தமும் சுகாதரமின்மையும் அம்மக்களின் தலைவிதியாகவே மாறிப் போயிருந்தது. பாதைகளை கொள்ளயர்கள் ஆக்கிரமித்து கொண்டு வழி பார்த்திருந்து அரசின் பாதுகாப்பின்றி வரும் கூட்டங்களை கொள்ளையடித்தனர். மற்றோர் பக்கம் கோத்திரங்களை காரணமாகக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிக் கொன்று வந்தனர். சண்டை சச்சரவில்லாத நாட்களே இல்லையென்னும் அளவிற்கு தினம் தினம் யாராவது ஒருவர் மரணத்தின் கோரப்பிடிக்'கு இரையாகிக் கொண்டிருந்தார்.
 
அறிவீனமும் கல்விக் குறைவும் ஈராக்கை விழுங்கிக் கொண்டிருந்தது. இவையனைத்தும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சார்ந்த பாதிரிகளின் தொலை தூரக் கனவை பிரதிபலித்து கொண்டிருந்தன. குறிப்பாக நஜப் மற்றும் கர்பலாவைச் சார்ந்த உலமாக்களும் அவர்களிடம் கல்வி கற்று வந்த மாணவர்களும் கூட அறிவீனர்களாயிருந்தனர்.
 
தேசத்தின் போக்குவரத்து இயக்கங்கள் முழுவதும் ஸ்தம்பித்துப் போயிருந்தன. நோய்களும், வறுமையும், அறிவீனமும், துர்நடத்தையும் மக்களை வளைத்துக் கொண்டிருந்தது. நாட்டின் ஐக்கியம் சிதறிப்போய் அரசுக்கும் மக்களுக்குமிடையே ஒரு ஆழமாக இடைவெளி ஏற்பட்டு ஒருவர் மற்றவரை தமது விரோதியாகக் கருதி கொண்டிருந்தனர். உலமாக்கள் இறைவனது மார்க்கக் கல்வியி;ல் மூழ்கிப்போய் உலக வாழ்வையே மறந்து விட்டிருந்தனர்.
 
சுருங்கக் கூறின், நான் கர்பலாவிலும் நஜபிலும் நான்கு மாதம் இ.ருந்தேன். நஜபில் இருந்தபோது ஒரு கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக உடல்நிலை தேறியபின் பக்தாதுக்கு திரும்பினேன். அங்கே வந்ததும் கர்பலா, நஜப், ஹல்லா மற்றும் பக்தாதில் நான் கண்டவையனைத்தையும் தொகுத்து கிட்டதட்ட நூறு பக்கங்களுக்கு ஒரு ரிப்போர்ட்டை தயார் செய்து லண்டனிலுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பக்தாதிலிருந்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தூதரிடம் கொடுத்துவிட்டு நான் லண்டனுக்கு திரும்பிச் செல்வதற்குரிய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
பஸராவை விட்டு கர்பலா மற்றும் நஜபுக்கு வந்து சேர்ந்த சில மாதங்களுக்குப்பின் எனக்கு முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் பற்றிய ஞாபகம் வந்தது. நான் அவரைக்குறித்து மிகவும் கவலை பட்டேன். நான் அவருக்காக மிகவும் கஷ;டப்பட்டிருந்தேன். இருப்பினும் அவர் மீது எனக்கு நம்பிக்கையில்லை. காரணம் அவர் ஒரு நிலையில் நிற்காதவர். அன்றி கடுங்கோபியுங் கூட. பேசிக் கொண்டிருக்கும்போதே இருந்திருந்தாற்போல் கோபத்தில் தன்னையே இழந்து விடுவார். இதனால் எங்கே என் முயற்சி முழுவதும் அவர் விஷயத்தில் விழலுக்கிரைகத்த நீராகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன்.
 
நான் பஸராவை விட்டுப் புறப்பட்ட அன்று அவர் துருக்கிக்குச் செல்ல தயாராகி புறப்பட்டுக் கொண்டிருந்தார். அங்கு சென்று அங்குள்ள மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை தெரிந்து கொள்ள விரும்பினார். நான் அவரை மிகவும் சிரமப்பட்டு சாமார்த்தியமாக துருக்கி செல்ல வேண்டாமென்று கூறினேன். இன்னும் அவரிடம், நீர் அங்கு போய் எதையாவது ஒன்றைப் பேசி அங்குள்ளவர்கள் உம்மை முல்ஹித், ஜிந்தீகு என்று கூறி வெட்டிப்போட்டு விடுவார்கள் என்றும் கூறினேன்.
 
ஆனால் நான் பயந்ததற்குரிய காரணம், அவர் அங்கே சென்று அங்குள்ள அஹ்லெ சுன்னத்துடைய உலமாக்களை தொடர்பு கொண்டு விட்டால் அவத்கள் தமது அசைக்கவியலாத ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவரை தமது பாதைக்கு மாற்றிவிட்டால் அதன்பின் எனது இத்தனை கால முயற்சியும் அதோ கதிதான்.
 
முடிவில் அப்துல் வஹ்ஹாப் பஸராவை விட்டுப் போக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி நான் அவரை ஈரானுக்கு போய் அங்குள்ள ஷிராஜ், இஸ்பஹான் போன்ற நகரங்களை சுற்றிப்பாருங்களென்று கூறினேன். அங்கு சென்று அவர்களின் கொள்கையை அப்துல் வஹ்ஹாப் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன்.
விடைபெறும்போது அவரிடம் நான், தகிய்யாவை (மறைத்துக்கொள்ளல்) பற்றி உமது கருத்தென்ன? எனக் கேட்க,….
 
அதற்கவர், சரிதான். ஏனெனில் ஒரு நபித்தோழர் அம்மார் என்பவர் முஷ்ரிகீன்களின் மீதிருந்த அச்சத்தினால் தம்மையும் அவர்களிடம் முஷ்ரிக்கென்றே வெளிப்படுத்தி வந்துள்ளார். அன்றி நபிகளாரும் அம்மாரின் இந்நடவடிக்கை பற்றி சைக்கினையும் செய்துள்ளனர் என கூறினார்.
இதுகேட்ட நான், நல்லலது. உம்மீதும் இது வாஜிபாகும். நீர் ஈரானுக்குச் சென்று உம்மை ஒரு ஷியாவைப் போல் காட்டிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரச்சனையிலிருந்து நீர் தப்பிக்க முடியும். அங்குள்ள உலமாக்களின் தொடர்பும் கிடைக்கும். அத்துடன் ஈரானியரின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் போன்றவற்றையும் நீர் தெரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் பின்னால் உமது லட்சியத்தை நீர் அடைய உறுதுணையாக அமையும் எனக் கூறினேன்.
 
அதன்பின் அவரிடம் ஜகாத்துடைய தொகை எனக் கூறி ஒரு தொகையை தந்தேன். போகும்போது வழியில் குதிரையொன்றும் வாங்கி அவருக்குக் கொடுத்தேன். அவருக்கு அது அவசியமாயிருந்தது. அதன்பின் அவரைவிட்டு நான் பிரிந்து விட்டேன். இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அத்துடன் நாங்களிருவரும் பஸராவை விட்டுக் கிளம்பும்போது நம் இருவரில் யார் முதலில் திரும்பி வந்தாலும் பஸராவுக்கு வந்து சேர வேண்டும். அது இயலாவிடில் தம்மைப் பற்றி துருக்கியின் அப்துர்ரஜாவுக்கு எழுதி அனுப்ப வேண்டும்என்றும் பேசிக் கொண்டோம். இருப்பினும் இதுவரை அப்துல் வஹ்ஹாபைப் பற்றி எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.
 
ஆறு
 
சில நாட்களின் காத்திருத்தலுக்குப் பின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து பக்தாதுக்கு செய்தி வந்து சேர்ந்தது. அதில் எனது ஆட்சியாளர் என்னை திருப்பி அழைத்திருந்தனர். நான் லண்டன் வந்து சேர்ந்தபின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலரும், மற்ற உயர் அதிகாரிகளும் இணைந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அக்கூட்டத்தில் நான் சேகரித்த எனது செய்தி முழுவதையும் சமர்ப்பித்தேன். அத்துடன் தஜ்லா, புராத் என்னும் இரு நதிகளைப் பற்றியும் எடுத்துக் கூறினேன்.
ஈராக்கை குறித்து நான் சமர்ப்பித்த எனது செய்திகள் அங்கிருந்த அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு முன்னரும் ஈராக்கைக் குறித்து பல செய்திகளை நான் முன்பே அனுப்பியிருந்தேன். இன்னோர் பக்கம் ஸபிய்யாவும் ஒரு செய்தியை அனுப்பியிருந்தாள். அதுவும் என் செய்தியை ஆமோதிக்கும் வகையில் அமைந்திருந்தது.
 
அதன்றி அமைச்சகம் எனக்குத்  தெரியாமலேயே என்னை கண்காணிக்க சிலரை எனக்குப் பின்னால் அனுப்பி வைத்திருந்த செய்தி பின்னர் எனக்குத்  தெரியவந்தது. அவர்களும் என்னைப் பாராட்டியிருந்தனர். இம்முறை எல்லாமே எனக்குச் சாதகமாகவே அமைந்திருந்தன.
இதனால் செயலரும், அமைச்சரிடம் என்னை சந்திக்க நேரம் கேட்டு அவர் தந்தபின் அமைச்சரைக் காண்பதற்காக சென்றேன். என்னைக் கண்டதும் அமைச்சர் மிகவும் குதூகலத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் நான் அவரது மனதில் எனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தேன் என்பதைக் காட்டிற்று.
அமைச்சர் குறிப்பாக நான் அப்துல் வஹ்ஹாபை எந்தக் குறிக்கோளுக்காக மாற்றினேனோ அதை பெரிதும் பாராட்டினார். அவர் பேச்சுக்கிடையே என்னிடம், முஹம்மத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மிக்பபெரிய துருப்புச் சீட்டு எனக் கூறியவர், மிகக் கடுமையாக என்னிடம், நான் முஹம்மதை அதி முக்கியமான காரியத்திற்கு பயன் படுத்த வேண்டும். வருங்காலத்தில் அதனை செய்ய வேண்டுமென்றும் கூறனார்.
 
பின்னும் நான் அப்துல் வஹ்ஹாபை விட்டுப் பிரிந்து வந்தபின் அவரின் நிலைமை என்னவாயிற்றோ என்பதைக் குறித்து கவலையடைந்துள்ளது அமைச்சருக்குத் தெரியவரவே, அவர் என்னை நோக்கி மிகுந்த வாஞ்கையோடு கவலை கொள்ளத் தேவையில்லை ஹம்ஃப்ரே! நீ அவருக்கு கற்றுத் தந்தவையனைத்தும் இன்னம் அவருக்கு நினைவுள்ளது. நமது ஆட்கள் இஸ்பஹானில் அவருடன் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து வந்த செய்தி அப்துல் வஹ்ஹாப் இதுவரை தனது பழைய நிலையில்தான் இருக்கிறார் எனக் கூறுகிறதென்றும் கூறினார். மேற்கொண்டு அமைச்சரிடம் கேட்க எனக்கு அச்சமாயிருந்ததால் விட்டுவிட்டேன்.
 
அதன்பின் ஒருமுறை நான் அப்துல் வஹாபை சந்தித்தபோது, அவர் என்னிடம், இஸபஹானில் அப்துல் கரீம் என்ற ஒருவரை சந்தித்தேன். அவர் தன்னை ஒரு எழுத்தாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மிகவம் சாமர்த்தியமாக அப்துல் வஹாபை சன்னஞ் சன்னமாக நெருங்கி முடிவில் அப்துல் வஹாபை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தார்.

அப்துல் கரீமுடன் இருக்கும்போதே சில மாதங்களுக்குப் பின் இஸபஹானுக்கு வந்து சேர்ந்த ஸபிய்யாவும் அப்துல் வஹாபை வளைக்க, இம்முறை ஸபிய்யா அப்துல் வஹாபை இருமாதங்களுக்கு முத்ஆ முறையில் (தவணை) சேர்த்துக் கொண்டாள். ஷிராஜுக்குச்  சென்றபோது அவள் அவர்களோடு இல்லை. ஷிராஜில் அப்துல் கரீம் அப்துல் வஹாபுக்காக ஸபிய்யாவை விட அழகான ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார். அவள் ஷிராஜை சேர்ந்த ஒரு யூதப்  பெண். அவள் பெயர் ஆசியா. அப்துல் கரீம் இஸ்பஹானிலுள்ள கிறித்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் ஆசியாவைப் போன்றே ஈரானில் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மிகப் பெரிய உளவாளி.

சுருங்கச் சொன்னால், அப்துல் கரீம், ஸபிய்யா மற்றும் ஆசியா ஆகிய மூவரும் இணைந்து தமது இரவு பகலின் இடைவிடாத முயற்சியால் அப்துல் வஹாபை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் லட்சியத்தை செயல்படுத்துவதற்கு தோதாக மாற்றினர்.
 
அடுத்து வரும் காலங்களில் செயல்படுத்தப்போகும் திட்டங்களுக்கு அப்துல் வஹ்ஹாபை இசைய வைத்தனர். இங்கே நான் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். அது அமைச்சரை நான் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது என்னுடன் செயலரைத் தவிர அமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் அங்கிருந்தனர். இதற்குமுன் நான் அவர்களைப் பார்த்ததேயில்லை.
கூட்ட முடிவில் அமைச்சர் என்னை நோக்கி, இப்போது நீ வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த பாராட்டுக்குரிய முக்கியமானவர்களில் ஒருவன் எனக் கூறிவிட்டு, நான் செயலரிடம் சொல்லி விட்டேன். அவர் நமது ஆட்சியின் வேறு சில மறைவான திட்டங்களையும் உனக்கு தெரிவிப்பார். அவை இன்னும் திறம்பட நீ உழைப்பதற்கு உதவும் எனக் கூறினார்.
 
அமைச்சருடன் ஏற்பட்ட சந்திப்பின் மகிழ்ச்சியில் எனக்கு பத்து நாட்களுக்கு வழிடுமுறை கிடைத்தத. அவை எனது மனைவியையும் ஒரு வயதேயான என் குழந்தையையும் பாக்கின்ற வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்தது. பத்து நாட்களின் விடுமுறைக்குப் பின் அடுத்து நான் செய்யப்போகும் வேலைகளின் விபரங்களை கேட்டுத் தெரிந்த கொள்வதற்காக அமைச்சகத்திற்கு சென்றேன். செயலர் என்னை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
 
அப்போது செயலர் என்னிடம், வளர்ந்து வரும் நாடுகளின் கமிஷனின் விரும்பத்திற்கொப்ப அதன் அமைச்சர் உன்னிடம் ஒரு ரகசியங்களைக் கூற வேண்டுமென எனக்கு அனுமதியளித்துள்ளார். அவை உனக்கு தொடர்ந்து ஆற்றப்போகும் பணிக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கம். இன்னம் உனக்கு தெரிவிக்கப் போகும் அந்த ரகசியம் நமத அமைச்சகத்திலுள்ள ஒரு சிலரைத் தவிர வேறுயாருக்கும் தெரியாது. இதைச் சொல்லியவர் என் கரத்தைப் பற்றி அமைச்சக் கட்டிடத்திலுள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்.
 
அந்த அறையில் வட்டமான ஒரு மேஜை. அதைச் சுற்றி சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டு நான் 'வீல்' என்று அலற நினைத்து அச்சப்பத்ம் தொண்டையிலேயே அமிழ்ந்து போனது. நான் கண்டது இதுதான்.
 
அப்படியே அச்சு வார்த்தார்போல் உஸ்மானியப் பேரரவுடைய கலீபாவின் உருவமுள்ள ஒருவர். துருக்கி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
 
இஸ்தான்புல்லைச் சார்ந்த ஷைகுல் இஸ்லாமின் ஒட்டிய உருவமைப்புக் கொண்ட ஒருவர்.
 
ஈரானிய சக்கரவர்த்தியின் தோற்றத்தைக் கொண்ட உருவம்.
 
ஈரானிய தர்பாரிலுள்ள ஷpயா ஆலிமின் முழுத் தோற்றமுள்ள ஒருவர்.
 
நஜபிலுள்ள ஷியாக்களின் தலைவரது உவமைகளைக் கடந்த உருவமுள்ள ஒருவர்.
 
கீழே காணப்படும் மூவரும் பார்ஸி மற்றும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த ஐவருக்கும் அருகில் ஒரு பிரைவேட் செயலர் நின்று கொண்டு அவர்கள் பேசுவதை குறிப்பெடுத்து மொழியாக்கம் செய்து கொண்டிருந்தார்.
 
இந்த பிரைவேட் செக்ரட்டரிகள் ஐந்துபேரும் உண்மையான அரசர்களிடம் வெகுநாட்கள் பழகியவர்களைப் போலிருந்தது அவர்கள் நடந்த கொண்ட விதம். மேற்கண்ட ஐவரும் உண்மையான சர்க்கரவர்த்திகள் மற்றும் உலமாக்களின் குண நலன்கள், பழக்கவழக்கங்களைக் கொண்டு மிகக் கவனமாக போலிகளாக அவர்கள் உருவாக்கப்பட்டிருந்தனர்.
 
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் முன்னால் வந்துஈ இந்த ஐவருக்கும் நாம் இஸ்த்தான்புல், தெஹ்ரான் மற்றும் நஜப் பற்றிய விபரங்களையும் விளக்கிக் கூறியிருக்கிறோம். இப்போது அவர்கள் அசல் சர்க்கரவர்த்திகளைப் போலவே பதிலளிக்கத் தயாராக உள்ளனர். ஹம்ஃப்ரே நீ விருப்பப்பட்டால்  அவர்களை பரீட்சித்து பார்த்துக் கொள்ளலாமென்று கூற, நான் அவர்களில் ஒருவரை நோக்கி,….
 
கிப்லா! வகஃபா! அவர்களே நீஞ்கள் உங்களை பின்பற்றும் ஷpயாக்களிடம் சுன்னத் வல் ஜமாஅத்தினர்க்கும் உஸ்மானியப் பேரரசுக்கெதிராகவும் போர் தொடுக்க வேண்டுமென்று கட்டளையிடுவீர்களா?
 
அதற்கந்த போலி ஷியாத் தலைவர், சிறிது நேரம் யோசித்து விட்டு பின்னர், நான் பொதுவான போருக்கு அனுமதி வழங்க மாட்டேன். ஏனெனில் அவர்கள் சுன்னீ முஸ்லிம்கள். இன்னும் திருக்குர்ஆன் முஸ்லிம்கள் ஒருவர் மற்றவருக்கு சகோதரர் எனக் கூறுவதால், உஸ்மானிய அரசு அராஜகத்தையும், அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விடாதவரை நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்னும் வரம்பிற்கு உட்பட்டே நான் போருக்கு அனுமதி அளிப்பேன். காரணம் அராஜகத்தை அராஜகம் கொண்டுதான் முறிக்க வேண்டும் என்று கூறினார்.
 
ஹம்ஃப்ரே: யூதர்களும், கிறித்துவர்களும் நஜீஸ்கள் எனக் கூறப்படுவது பற்றி தங்களின் கருத்தென்ன? அவர்கள் உண்மையாகவே நஜீஸ்கள்தானா?
 
போலி தலைவர்: ஆம். அவ்விரு பிரிவினர்களும் நஜீஸ்களே. முஸ்லிம்கள் அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
ஹம்ஃப்ரே: அதன் காரணமென்ன?
 
போலி தலைவர்: இது உண்மையில் நடுநிலைக்குரிய பிரச்சனை ஏனெனில் அவர்கள் நம்மை காபிரெனக் கூறுவதோடு நமது நபியையும் பொய்ப்பிக்கின்றனர்.
 
ஹம்ஃப்ரே: இறைத்தூதர் தூய்மையைப் பற்றி மிகவும் வற்புறுத்த தூய்மை ஈமானின் அடையாளம் எனக் கூறிய பின்னரும் ஹஜ்ரத் அலீயின் தர்காவிலும், கடைவீதிகளிலும் இத்தனை சுகாதரமின்னை ஏன் காணப்படுகிறது?
 
போலி தலைவர்: கண்டிப்பாக இஸ்லாம் தூய்மையை ஈமானுக்குரிய ஆதாரமென்றுதான் கூறுகிறது. என்ன செய்வது? உஸ்மானியப் பேரரசின் கவனமின்மையும், தண்ணீர் பற்றாக்குறையும் தான் இதற்கு காரணமாகும்.
 
மனதிற்கு நிம்மதியளிக்கும் விஷயம் யாதெனில் அப்போலி தலைவரின் உடனுக்குடன் தரப்பட்ட பதில் முழுவதுமே அசல் தலைவரின் பதிலுக்கு ஒத்திருந்ததுதான். ஆனார் உஸ்மானியப் பேரரசின் கவனமின்மை என்னும் வார்த்தை அந்த அசல் தலைவரால் சொல்லப்படாத ஒன்று. போலித் தலைவர் தனது தரப்பில் சேர்த்துக் சொன்ன வார்த்தையாகும்.
 
இன்னும் அப்போலித் தலைவரின் பதிலைக் கேட்டு நான் திகைப்பில் மூழ்கியிருந்தேன். காரணம் அசல் தலைவரைப்  போலவே எல்லா கேள்விகளுக்கும் பார்ஸி மொழியிலேயே பதிலளித்தது தான். பின்பு செயலர் மீண்டும் என்னை நோக்கி, மற்ற நால்வரிடமும் கேள்வி கேட்பதாயின் கேட்கலாம். அவர்கள் அசல்களைப் போலவே உனக்கு பிதளிப்பர் எனக் கூறவும், நான் இஸ்த்தான்புல்லை சேர்ந்த ஷைகுல் இஸ்லாம் அஹ்மத் ஆபந்தீயின் பேச்சுக்கள், பழக்க வழக்கங்கள் முழுவதும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனவே அஹம்மத  ஆபந்தியைப் போலவே உள்ள போலியிடம் சில கேள்விகள் கேட்கிறேன் எனக் கூறி கேட்கத் துவங்கினேன்.
 
ஹம்ஃப்ரே:ஆபந்தி சாஹிப்! என்ன? உஸ்மானிய கலீபாவுக்கு வழிப்படுவது வாஜிபா?
 
போலி ஆபந்தி: ஆம். என் மகனே! அவருக்கு வழிப்படுவது அல்லாஹ் மற்றும் அவனது ரஸூலுக்கு வழிப்படுவதைப் போன்றாகும்.
 
ஹம்ஃப்ரே: எந்த ஆதாரத்தின் அடிப்படையில்?
 
போலி ஆபந்தீ: அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் இன்னும் உங்களில் ஏவுகின்றவர்களுக்கும் வழிப்படுங்கள் எனத் திருக்குர்ஆன் கூறுவதை நீ கேட்டதில்லையா?
 
ஹம்ஃப்ரே:அவ்வாறாயின் கலீபா என்பவர் 'உலில் அம்ர்' எனில், இறைவன் நம்மீது யஜீதுக்கும் வழிப்படவேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறான். ஏனெனில் அவன் அப்போது கலீபாவாக இருந்தான். அந்நேரம் அவன் மதீனாவின் கவர்னருக்கு இமாம் ஹுஸைனை கொன்று விடுமாறு கட்டளையுமிட்டான். இந்நிலையில் வலீதுக்கு எப்படி வழிப்பட வேண்டுமென கட்டளையிடுவான்? அன்றி வலீது குடிகாரனுமல்லவா இருந்தான்?
 
போலி ஆபந்தீ: மகனே! யஜீத் அல்லாஹ்வின் தரப்பில் முஃமின்களுக்கு அமீராக இருந்தார். ஆனால் இமாம் ஹுஸைன்  வெட்டப்பட்ட விஷயத்தில் அவரிடம் தவறு நேர்ந்து விட்டது. அதற்காக அவர் பின்னர் தௌபாவும் செய்தார். மதீனாவில் ஏற்பட்ட கலவரம் அங்கிருந்த மக்களின் தலைமைத்தனத்திற்குரிய போட்டியின் விளைவால் நிகழ்ந்த ஒன்றும், யஜீதுக்கு வழிப்படாததுமே காரணமாகும். அதில் யஜீதின் மீது எந்தக் குற்றமுமில்லை. ஆனால் வலீத் அவன் குடிகாரன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மதுவில் தண்ணீரை கலந்து அதன் போதையை முறித்த பின்னரே அவன் குடித்து வந்தான். இது இஸ்லாமிய மார்க்கத்தில் ஆகுமான ஒன்றாகும்.
 
நான் முன்னரே இஸ்தான்புல்லில் மதுவைப் பற்றி அசல் nஷய்குல் இஸ்லாம் ஆபந்தியிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தேன். அப்போது அவர்  சொன்ன பதிலுக்கும் இந்தப் போலி சொன்ன பதிலுக்குமி;யில் சில சிறிய மாற்றமே தெரிந்தது. நான் அஸலில் இருந்து ஒரு நகல் மனிதரை வடிவமைத்ததை சிலாகித்தவனாக செயலரைப் பார்த்து, சரி. இதைக் கொண்டு என்ன பிரயோஜனம்? என்று கேட்டேன்.
 
அதற்கந்த செயலர், நாங்கள் முதலில் அரசர்கள் மற்றும் சுன்னீ, ஷpயா உலமாக்களின் சிந்தனை இன்னும் அவர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிறோம். அதன்பின் அவர்களைப் போன்ற போலிகளை உருவாக்குகின்றோம். பிறகு ஒவ்வொரு தேசத்திக் மார்க்கம் மற்றும்அரசின் நிலைகளுக்குள் அங்குள்ளோர் நமக்கெதிராக செயல்படத் துவங்கும்போது அவர்களது முயற்சியை நாம் நிர்மூலப்படுத்த எல்லா வழியிலும் நமது சக்தியை பயன்படுத்தி இப்போலிகளை அங்கே கொண்டுபோய் சேர்க்கிறோம்.
அன்றி நமது உண்மையான விரோதி எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காக நமது முழு சக்தியை எல்லா பகுதிகளிலும் பரப்புகிறோம். இவ்வாறு அங்கே நுழைக்கப்படும் நமது போலிகள் ஆங்காங்கே நமக்கு உதவியாக, அரணாக செயல்படுவதுடன், இஸ்லாமிய சட்டங்களிலும் அதன் செயல்பாடுகளிலும் அங்குள்ளோரிடையே சந்தேகத்தையும், குழப்பத்தையம் ஏற்படுத்தி அவர்களின் கொள்கையை தள்ளப்பட்ட ஒன்றெனும் நிலையை உருவாக்குகின்றோம்.
 
இன்னும் முஸ்லிம்களிலேயே கருத்து வேற்றுமை, பிரிவினை, குழப்பம் மற்றும் மஸ்லிம்களது கொள்கையை ஆட்டங்காணச் செய்வதற்காக இத்தகைய நடவடிக்கைகள் இறுதியாக பலன் கொடுக்கும் நிலைகளெனக் கருதுகிறோம். அதன்பின்செயலர் என்னிடம் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட நூல் ஒன்றை படித்துப் பார்க்க வேண்டுமெனக் கூறித் தந்தார்.
 
அந்நூலில் அசல் மற்றும் போலி மனிதர்களது நடவடிக்கை, பேச்சு, அலவர்ளது உருவங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை, அவர்களை எதிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் அவர்களின் எண்ணிக்கை போன்றவை குறிக்கப்பட்டிருந்தன. அந்நூலிலிருந்து நான் உலக முஸ்லிமகளின் படைபலம், பொருளாதாரம், கல்வி மற்றும் மார்க்கச் சட்டங்கள் போற்றவற்றிலிருந்து பிரிட்டானிய அரசின் எதிர் நடவடிக்கைகளுக்குரிய திட்டங்களனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியதிருந்ததால் அந்நூலை வீட்டிற்கு கொண்டு போனேன். அதை கிட்டதட்ட மூன்றுவாரம் துவக்கத்திலிருந்து கடைசிவரை மிகக் கவனமாக வாசித்தேன். பின்பு குறிப்பிட்ட நாளன்று அந்நூலை கொண்டுபோய் வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் திருப்பிக் கொடுத்தேன். நூல் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. அதில் படித்தவர்கள், அரசியல்வாதிகள், இஸ்லாமிய மக்களின் மார்க்க கொள்கைகள் போன்றவை மிக அற்புதமாக அலசப்பட்டு அவற்றின் முடிவும் வழிபரிக்கப்படடி;ருந்தது. படித்தவர் பிரமித்துப் போய் விடுவார். எழுபது சதவீதம் எதார்த்ததை வளைத்துக் கொண்டிருந்தது. அந்நூலில் முப்பது சதவீதம் மட்டுமே சிறிது வேறுபாடு காணப்பட்டது. நூலை வாசித்து முடித்தபின் எனக்குள் ஏற்பட்ட நம்பிக்கை நிச்சயம் எனது ஆட்கியாளர்கள் தமது குறிக்கோளை எய்தி விடுவார்கள் என்பதே. நூலில் விபரிக்கபட்டுள்ளதை பார்க்கும்போது முஸ்லிம்களின் ஆட்சி ஒரு நூறு ஆண்டைக் கூட தாண்டாது. அதற்குள் அவர்களின் ஆட்சி அஸ்தமித்து விடும் என்றே தெரிந்தது.
 
நான் செயலரை சந்தித்த பின்னரே, வளர்ந்து வரும் புதிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் அவை தங்களின் ஆட்சிக்கு கீழிருந்தாலம் சரி. இல்லாவிட்டாலம் சரி. இதுபோன்ற போலிகளை உருவாக்கி அவர்களின் மூலம் எல்லா தேசங்களையும் தங்களது அதிகார வரம்பின் கட்டுப்பாட்டிற்குள் இறுக்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
 
செயலர் தனது பேச்சினூடே என்னிடம், இ.துதான் அந்த முதல் ரகசியம். அமைச்சரின் அனுமதியின் பேரில் உன்னிடம் சொன்னேன். இரண்டாவதாக இன்னொரு ரகசியமும் இருக்கிறது. அது நீ வாசித்த நூலின் இரண்டாம் பாகத்தில் உள்ளது. ஒரு மாதத்திற்குப்பின் அதை உனக்கு காட்டுவோமென்று கூறினார்.
 
நான் இரண்டாவது நூலை வாங்கி வந்து படிக்கத் துவங்'கினேன். இது முதல் நூலை முழுமையாக்கும் வகையில் அமைந்திருந்தது. இதில் இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய பல புதிய செய்திகளையும், வாழ்வியல் நிலைகளில் ஷpயா, சுன்னீ போன்ற பிரிவாரிடையே நிலவி வந்த கருத்து வேற்றுமையுடைய அகீதாக்கள், சிந்தனைகள், சட்டங்கள்(இவைகள் தான் அவர்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தன.) மற்றும் முஸ்லிம்களின் சோம்பேறித்தனம், கவனமின்மை போன்றவற்றை குறித்து அலசப்பட்டிருந்தது.
 
இன்னும் அந்நூலில் முஸ்லிம்களை பலவீனப்படுத்துவதற்கும், அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தை முறியடிப்பதற்கும், உரிய திட்டங்களும் தரப்பட்டிருந்தன. இதில் முஸ்லிம்களிடையே வேர்விட்டிருந்த அவர்களின் பலவீனங்கள் இதுதான்.
 
ஷியா, சுன்னீகளுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்.
 
ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்குமிடையே நிலவி வந்த கருத்து மோதல்கள்.
 
ஆ) ஈரானிய, உஸ்மானிய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்டிருந்த மோதல்கள்.
 
இ) கோத்திரத்தார் மத்தியில் வேர்விட்டிருந்த கருத்து வேற்றுமைகள்.
 
ஈ) உலமாக்களுக்கும், ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்குமிடையே நிலவி வந்த தப்பான எண்ணங்கள்.
கிட்டதட்ட எல்லா முஸ்லிம் நாடுகளிலும் நிலவிய அறிவின்மை, மௌட்டீகங்கள் போன்றவை.
பிடிவாதம், விரோத மனப்பான்மை, அன்றாட வாழ்வைப் பற்றிய அறிவின்மை, உழைப்பின் குறைவு.
வாழ்வின் இலட்சியம் குறித்த கவலையின்மை, பொறுப்பற்றத்தனம் கவனத்தின் எதிர்பார்ப்பில் எல்லை மீறிய வணக்கம். இவை இவ்வுலகின் சுபிட்சத்திற்குரிய வாழ்க்கையின் பாதைகளை மூடிக் கொண்டிருந்தன.
 
கர்வம், அரசர்களின் எல்லை மீறிய அடக்குமுறை, அராஜகம், அமைதியும், நிம்மதியும் பறிபோய்விட்ட நிலை. நகரங்களின் மத்தியிலும், தெரு ஓரங்களிலும், பாதைகளிலும் அமைதியற்ற ஓர் இறுக்கமான நிலை. சரியான மருத்துவ வசதியின்மையாலும், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளாலும் ஒவ்வோர் ஆண்டும் காலரா போன்ற நோய்களாக வளர்ச்சி பெற்ற பகுதிகளில் பலர் துர்மரணமடைதல்.
நகரங்கள் வெறிச்சோடிப் போயிருத்தல், வயல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை, வயல்களும் விவசாய நிலங்களும் தேவைக்குக் குறைவாக இருத்தல்.
 
அரசு அலுவலகங்களில் தவறானவர்களை அமர்த்துதல், சட்டங்களின் கட்டுப்பாட்டில் போதிய கவனமின்மை, குர்ஆனையும் ஷரீஅத்துடைய சட்டங்களையும் மதித்தாலும் அவற்றை செயல்படுத்துவதில் அக்கறையின்மை.
 
பிற்பட்ட மக்களுக்கு மத்தியில் நியாயமற்ற நீதிமுறை, எல்லாப் பகுதிகளிலும் பொதுவாக வறுமை, நோய் போன்றவற்றின் ஆக்கிரமிப்பு.
 
முறையாக பயிற்சி பெறாத படைகள், ஆயுதங்கள் மற்றும் எதிரிகளை முறியடிக்கத் தேவையான சாதனங்களின் பற்றாக்குறை, இன்னும் இருக்கின்ற படைகளுக்கு போதிய போர் பயிற்சி இல்லாமை.
 
பெண்களை கேவலப்படுத்துதல், அவர்களின் உரிமைகளைத் தர மறுத்தல்.
 
நகரங்கள், கிராமங்கள் போன்ற பகுதிகளில் சுகாதரமின்மை, எங்கு பார்த்தாலும் சவுக்குகள் சுண்டப்படும் சப்தம், தெருவோரங்கள், நகர்ப்பாதைகள் இன்னம் கடைவீதிகளில் கால வரையறையற்ற வியாபாரக் கூட்டங்களின் ஆக்ரமிப்பு போன்றவையாகும்.
 
முஸ்லிம்களின் பலவீனங்களை வரிசைப்படுத்திக் காட்டிய நூல் இப்போது உண்மையையும், அடையாளம் காட்டியது. அதாவது இஸ்லாமிய ஷரீஅத்துடைய சட்டங்கள்  முஸ்லிம்களது இத்தகைய வாழ்க்கை முறைகளை ஒரு சிறிதும் மாற்றவில்லை. எனினும் இங்கு ஒன்றை அவசியம் சொல்ல வேண்டும். அது முஸ்லிம்களது இஸ்லாமிய உயிரோட்டமுள்ள வாழ்க்கையை அவர்களுக்கு தெரியாமலாக்க வேண்டும் என்பதே. இன்னும் அவர்களை ஹகீகிய்யான அசல் மார்க்கத்தின் பக்கம்  செல்ல விடாமலும் தடுக்க வேண்டும் என்பதே.
 
அதன்பின் அந்த நூல் இஸ்லாமிய ஏவல், கட்டளைகளைப் பற்றிய ஒரு அட்டவணையையும் வரிசைப்படுத்தியிருந்தது. அவை தீனுல் இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது. அவை இதுதான்,….
 
ஏகத்துவ நம்பிக்கை. சகோதரத்துவம் பற்றிய கட்டளை. இன்னும் பிரிந்து விடாதிருத்தல்.
 
கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் குறித்த கட்டளை.
 
பல தேசங்களை சுற்றிப் பார்த்து படிப்பினை பெறுதல் பற்றிய கட்டளை.
 
வாழ்வை வளமாக்கிக் கொள்வது பற்றிய கட்டளை.
 
வாழ்வியல் நடைமுறையில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்: வழுவுதல் பற்றிய கட்டளை.
 
அரசர்களுக்கு கட்:டுப்பட்டு வாழ்க்கை நடத்துதல் பற்றிய கட்டளை.
 
நபிமார்களின் ஹதீஸ்களது அடிப்படையில் சுகாதாரம் மற்றும் மருத்துவம் பற்றிய கட்டளை.
 
கல்விகள் நான்கு வகை
 
அ) மார்க்கச் சட்டம் பற்றிய கல்வி, மார்க்கத்தை பாதுகாப்பதற்காக.
 
ஆ) மருத்துவம் பற்றிய கல்வி. தேக தேக ஆரோக்கிய பாதுகாப்பிற்காக.
 
இ) வானசாஸ்திரம் பற்றிய கல்வி. காலத்தை அறிந்து கொள்வதற்காக.
 
முன்னேறுவதற்குரிய கட்டளை.
 
தமது காரியங்களை முறைப்படுத்தி அமைத்துக் கொளவது பற்றிய கட்டளை.
 
அன்றாட ஜீவனத்தில் தன்னிறைவு பெறுதல் பற்றிய கட்டளை.
 
புதிய புதிய நவீன ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் கொண்டு படைகளை ஒழுங்குப்படுத்திக் கொள்வது பற்றிய கட்டளை.
 
பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல். அவர்களை மரியாதையுடன் நடத்துதல் பற்றிய கட்டளை.
 
தூய்மை மற்றும் சுத்தமாக இருத்தல் பற்றிய கட்டளை.
 
இவைகளை விபரித்தபின் நூல் தனது அடுத்த அத்தியாயத்தில் இஸ்லாமியர்களின் சக்தி மற்றும் பலத்தையும் இன்னும் முஸ்லிம்களது சிறப்பு நிலைகளைக் குறித்து விபரிக்கின்றது. இனி அவற்றை அழிப்பதன் மூலம் சின்னாபினப்படுத்துவதற்குரிய முழுமையான வழிமுறைகளையும், அவர்களுக்கெதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விபரிக்கின்றது. இன்னும்  இஸ்லாமிய சமூக மக்கள் முன்னேறி தன்னிறைவு பெறுவதற்குரிய பாதைகள் இதுதான்.
 
நிறம், பாரம்பரியம், மொழி, பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக மக்களிடையே காழ்ப்புணர்வு அறவே இருக்கக் கூடாது.
 
வட்டி, விலைவாசி ஏற்றம், துர் நடத்தை , வெட்கமின்மை மற்றும் பன்றி இறைச்சியை உண்ணுதல் போன்றவற்றைக் குறித்த தடை.
 
ஈமான் மற்றும் அகீதாவின் அடிப்படையில் மார்க்க அறிஞர்களான உலமாக்களிடம் கொண்டுள்ள நெருக்கம். மற்றும் அளவுகடந்த நேசம்.
 
 தற்போதுள்ள கலீபாக்களின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள கண்ணியம், நம்பிக்கை, இன்னும் இந்த நம்பிக்கை அவர்களை நபிகளாரின் பிரதிநிதிகளாவும் மற்றும் நபிகளாரின் கட்டளையை பிரதிபலிப்பவராகவும் நம்புதல். இ.ந்த அடிப்படையில் கலீபாக்களின் கட்டளையை ஏற்று வழி படுதல் அல்லலாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைக்கு வழிப்பட்டதாக நம்பி செயல்படுதல்.
 
காபிர்களுக்கெதிராக ஜிஹாத் பற்றிய அவசியம்.
 
முஸ்லிமல்லாதோரை அசுத்தமானவர்களென்று நம்புதல் ஷpயாக்களின் நம்பிக்கை.
 
எல்லா மார்க்கம் மற்றும் மதங்களை விட இஸ்லாம் மட்டுமே சிறந்ததென்னும் நமப்பிக்கை.
 
இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் யூத, கிறித்துவர்களின் வணக்கஸ்தலங்களை நிர்மாணித்தல் பற்றிய ஷpயாக்களின் தடை.
 
அரபுப் பகுதிகளிலிருந்து எல்லா யூத, கிறித்துவர்களையும் வெளியேற்ற வேண்டுமென்பதில் பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தொற்றுமை.
மிகுந்த விருப்பத்துடன் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற பர்ளான கடமைகளை இடைவிடாது நிறைவேற்றுதல்.
 
ஐந்தில் ஒரு பாகத்தை கொடுப்பது பற்றிய ஷியாக்களின் அகீதா. இன்னும் உலமாக்களின் மூலம் அத்தொகையை உரிமையுடையோருக்கு பிரித்துக் கொடுத்தல்.
 
ஈமான் மற்றும் கலப்பற்ற எண்ணத்தோடு இஸ்லாமியக் கொள்கையின் மீது கொள்ளப்பட்டுள்ள திப்தி நிலை.
 
வீட்டிலுள்ள பெரியோர்களின் கட்டளைக்கு வழிப்பட்டு நடக்கும் அடிப்படையுடன் குழந்தைகள் வாலிபர்கள் போன்றோருக்கு ரிவாயத்துடைய செய்திகளைக் கூறி பழக்கப்படுத்தி வருதல். இன்னும் பிள்ளைகளை பெற்றோருடன் இணக்கமாக நடக்க வேண்டியதன் அவசியம் குறித்த உபதேசங்கள்.
 
பெண்களுக்கு பர்தாவின் அவசியம் குறித்த கட்டளை. அவை ஷரீஅத்துக்கு மாற்றமான பழக்க வழக்கங்களிலிருந்தும் துர் நடத்தையிலிருந்தும் பெண்களை தடுக்கின்றன.
 
கூட்டுத் தொழுகையின் மீPதுள்ள விருப்பம். இன்னும் உல்லோரும் ஒரு நாளில் பல முறை மஸ்ஜிதில் ஒருங்கிணையும் முறை.
 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர்களான அஹ்லெ பைத்துகள், உலமாக்கள் மற்றும் சாலிஹீன்களான நல்லோர்களின் ஜியாரத்திற்குரிய ஸ்தலங்களை கண்ணியப்படுத்துதல். இன்னும் அந்த ஸ்தலங்களை ஒன்று சேருவதற்கும், சந்திப்பதற்குமுரிய மஸ்ஜிதாக அமைத்துக் கொள்ளுதல்.
 
ஸதாத்துகளான நபிகளாரின் வம்சத்தினரை கண்ணியப்படுத்துதல். இன்னும் நபிகளாரைப் பற்றி அவர்கள் இன்றும் உயிருடனுள்ளனர் என்றும், ஸலவாத்திற்கும், ஸலாமிற்கும் உரியவர்கள் என்றும் நம்புதல்.
 
ஷpயாக்களால் நடத்தப்படும் கூட்டங்கள். குறிப்பாக முஹர்ரம், ஸபர் போன்ற மாதங்களில் ஒருங்கிணையும் கூட்டம். அதில் உலமாக்களின் சொற்பொழிவுகள். அவைந pச்சயம் முஸ்லிம்களின் ஈமானை புத்துயிர் பெறச் செய்து விடுகின்றன. இன்னும் அவர்களை நன்னடத்தை கொண்டவர்களாவும் செயல்படத் தூண்டிவிடுகின்றன.
 
இஸ்லாமிய அடிப்படைக் கட்டளைகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் பற்றிய கடமை.
 
திருமணம், அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஒன்றுக்கு மேற்பட்டோரை திருமணம் செய்தல் விருப்பத்திற்குரிய செயலாக்கப்படுதல்.
 
காபிர்களை நல்வழிப்படுத்துதலில் தீவிரத்தை கையாளுதல். அதில் எந்தக் காபிரையாவது ஒருவர் முஸ்லிமாக்கிவிட்டால் அது அவருக்கு உலகின் அனைத்து செல்வங்களை விட உன்னதமான ஒன்று என்பதாக நம்புதல்.
 
நற்செயல் புரிவதற்குரிய முக்கியத்துவம், எவரேனும் ஒரு நல்லதைப் பின்பற்றினால் அவருக்கு ஒரு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று அதனை அவர் செயல்படுத்தியதற்கும் மற்றொன்று அதனை செயல்படுத்தத் தூண்டியதற்கும் கிடைக்கின்றன.
குர்ஆன், ஹதீஸின் மீது அளவற்ற மதிப்பு. இன்னும் மறுமையின் நன்மைக்காக அவற்றை பின்பற்றி அமல் செய்வது தன்மீது மிகமிகக் கடுமையான அவசியம் என நம்புதல்.
 
இஸ்லாமிய மார்க்கத்தின் பலம், சக்தியை விபரித்த அந்நூல் அடுத்த அத்தியாயத்தில் மிக அழுத்தமாக நிலை பெற்றிருந்த அத்தூண்களை பலவீனப்படுத்துவதற்குரிய செயல்முறைத் திட்டங்களை மிகுந்த ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியிருந்தது. அதன்பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய திட்டங்களைக் குறித்த தலைப்புகள் இட்டு வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை கொண்டு இஸ்லாமயி உலகை பலவீனப்படுத்த முடியும்.
 
சந்தேகத்தையும், தவறான எண்ணங்களையும் மையப்படுத்தி ஷpயா மற்றும் சுன்னீ முஸ்லிம்களுக்கு இடையே மார்க்கத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும். இன்னும் இரு பிரிவினருக்குமிடையே ஒருவர் மற்றவரை தாக்கியும்? இழிவுபடுத்தியும் எழுத வேண்டும். இக்கபட நாடகம் மற்றும் பிரி பிரிவினையை உருவாக்க ஏற்படும் மிகப்பெரும் செலவைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது.
 
முஸலிம்களை கல்வியற்றவர்களாகவும், மடமைவாதிகளாகவும் ஆக்க வேண்டும். எந்த கல்வி ஸ்தாபனங்களையும் வளர விடக்கூடாது. எழுத்துக்கள், நூல்கள்  வெளியிடுவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அவசியம் நேர்ந்தால் பாமர மக்களின் நூல் நிலையங்களை தீ வைத்து கொளுத்தி விட வேண்டும். பிள்ளைக் மத்ரஸாவிற்கு செல்வதை தடுப்பதற்காக உலமாக்கள் மீதும் மத்ரஸாக்களின் மீதும் இல்லாத பொல்லாத அபவாதங்களைச் சுமத்த வேண்டும்.
 
சோம்பேறித்தனத்தை வளர்த்து வாழ்வின் மீதுள்ள பிடிப்பை அகற்றுவதற்காக வேணடி மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்க்கையில் கிடைக்கவிருக்கும் சுகத்தையம், கவனத்தைப் பற்றியும் எந்த அளவுக்கு தூண்டவேண்டுமெனில், அவை உருவம் பெற்று அவர்களின் மண்டையிலும், இதயத்திலும் நிலை பெற்று விட வேண்டும். இன்னம் அவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமது பிழைப்பை விட்டுவிட்டு மலக்குல் மௌத்தை எதிர்பார்த்து அமர்ந்திருக்க வேண்டும்.
எல்லா பக்கமும் தர்வேஷ்களின் கான்காக்களையும் இன்னும் இப்ப டிப்பட்ட நூல்களையும், சஞ்சிகைகளையும் அச்சிட்டு வெளிக்கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அவர்களை நடைமுறை வாழ்க்கையை விட்டும் அகற்றி உலகை வெறுத்து தனிமையைத் தேடிச் செல்ல வைக்க வேண்டும். எவ்வாறெனில் இமாம் கஜ்ஜாலியின் இஹ்யாவுல் உலூம், மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரீப், இன்னும் முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹிமஹுல்லாஹ் போன்றோரின் நூல்களாகும்.
 
அராஜகம் புரியும் அரசனையும், தன்னிச்சை போக்குடைய ஆட்சியாளர்களையும் ஆதாரப்படுத்தும் வகையில் விதவிதமான ஹதீஸகளை வெளியிட வேண்டும். உதாரணமாக, அரசன் பூமியில் அல்லாஹ்வின் நிழலாக இருக்கிறான் போன்றவைகள், அல்லது ஹஜ்ரத் அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ, பனீ உமைய்யா இன்னும் பனீ அப்பாஸியாக்கள் போன்றோர் பகிரங்கமாக வாட்களின் பலத்தில்தான் ஆட்சிக் கட்டில் ஏறினர் என்றம், இன்னும் ஆயுதபலத்தின் ஆட்சியை ஒரு வேடிக்கை பொருளாக்கி வெளிக்காட்ட வேண்டும். அதன் ஒரு பக்கத்தின் பிடியை உமர் பிடித்துக் கொண்டிருந்தாரென்னும் ஆதாரப்படுத்த வேண்டும். எவ்வாறெனில், ஹஜ்ரத் அலீயின் ஆதரவாளர்கள் குறிப்பாக அவர்களின் துணைவி ஹஜ்ரத் பாத்திமா வீட்டை எரித்தது போன்றவைகளாகும். 
 
அடுத்து இவைகளையும் ஆதாரப்படுத்த வேண்டும்.
 
ஹஜ்ரத் உமர் அவர்களின் கிலாபத் வெளிப்படையாகவே ஹஜ்ரத் அபூபக்கரின் உபதேசத்தின் மீதிருந்தது எனவும் அந்தரங்கத்தில் எதிரிகளை பயமுறுத்த அமைக்கப்பட்டதென்றும், ஹஜ்ரத் அலீயின் விரோத அடிப்படையில் ஹஜ்ரத் உஸ்மானின் ஏற்பாட்டில் ஒரு டிராமாவை (நாடகம்) ஆலோசனை என்னும் பெயரில் அரங்கேற்றப்பட்டது. முடிவில் விரோதிகளின் கூச்சலில் மூன்றாவது கலீபாவைக் கொன்று ஹஜ்ரத் அலீயின் கிலாபத் அமைக்கப்பட்டதென்றும், பித்தலாட்டம், மோசடித்தனம் மற்றும் வாட்களைக் கொண்டு தான் முஆவியா ஆட்சியைக் கைப்பற்றினாரென்றும் இன்னும் அந்நிலையில் அவரது குடும்பத்தினரே அவரை ஆமோதித்தனரென்றும், அபூ முஸ்லிமின் தலைமையில் வெறித்தனமான ஆயுதமேந்திய ஒரு கூட்டம் வாளின் பலத்தால் பனீ அப்பாஸியாக்களின் ஆட்சியை அமைத்ததென்றும், ஹஜ்ரத் அபூபக்கரிலிருந்து உஸ்மானிய்யாக்களின் இன்றைய ஆட்சியாளர்கள் வரை எல்லா கலீபாக்களுமே ஒரு கடிவாளப்பிடிக்குள் தான் இருந்தனர். அதாவது டிக்டேட்டர்களாக இருந்தனர் என்றும், இஸ்லாமிய ஆட்சி எப்போதுமே பிரதிபதிப்பாளர்களின் ஆட்சியாகத்தான் இருந்து வந்துள்ளது என்றும், பாதைகளில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும். கெட்டவர்களின் உதவியோடு நகரங்கள், கிராமங்கள் தோறும் குழப்பங்களையும் சச்சரவுகளையும் ஏற்படுத்த வேண்டும். இன்னும் குண்டர்களுக்கும், குழப்பக்காரர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஆயுதங்களை தந்து அவர்களை தூண்டி விட வேண்டும்.
 
பாதுகாப்பான சுகாதார வாழ்வை சீரமைக்கும் முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டும்.இன்னும் ஜப்ர், கத்ர் (மதி, விதி) இயற்கை போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதை இப்படிச்' சொல்ல வேண்டும். அனைத்தும் அல்லாஹ்வின் தரப்பைச் சேர்ந்ததென்றும், நோயும் கூட அல்லாஹ்வின் மார்க்கமேயென்றும், இதை ருஜு படுத்துவதற்காக, அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும் தாகத்தின்போது தண்ணீர் தருகிறான். அவனே அழிக்கிறான். அவனே ஜீவிக்'கவும் வைக்கிறான் என்னும் திருக்குர்ஆனின் ஆயத்துக்களை ஓதிக்காட்டி சுகம் அல்லாஹ்வின் கையிலுள்ளது. மரணமும் ஜீவியமும் அவனது அதிகாரத்திலும் ஆற்றலிலும் அமைந்துள்ளது. நோயிலிருந்து சுகமும் இன்னும் மரத்திலிருந்து விடுதலையும் அவனது நாட்டமின்றி, ஏற்பாடு இன்றி ஒருக்காலும் நடைபெற முடியாது. இன்னும் நிகழவிருக்கும் இவையனைத்துமே அவனுடைய விதிவசத்தில் அமைந்துள்ளதென்றும் சொல்ல வேண்டும்.
 
இஸ்லாமிய நாடுகளை வறுமையிலும், ஏழ்மையிலும் வைத்திருக்க வேண்டும். அதில் எத்தகைய மாற்றமும் வித்தியாசமும் ஏற்படாது. பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது அதை மாற்றுவதற்குரிய முயற்சி மேற்கொள்ளப் பட்டால் அதை நாம் முறியடிக்க வேண்டும்.
 
குழப்பங்களையும், சச்சரவுகளையும், கொந்தளிப்பையும் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இன்னம் இஸ்லாத்தில் வணக்கமென்றும், பயபக்தியென்றும் கூறப்பட்டிருப்பதை விட்டும் ஜனங்களை பாராமுகப்படுத்த வேண்டும்.இன்னும் அவர்களை உலகியல் மற்றும் அவை சம்பந்தமான நிலைகளுக்கும் அவர்களுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். நபிகள் நாதரோ அல்லது அவர்களின் குடும்பத்தினர்களோ எ;போதுமே அவற்றை தெரிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை. இன்னும் அரசியல் மற்றும் நீதித்துறைகளில் எவரும் பங்கேற்றதில்லை என்றும் சொல்ல வேண்டும்.
 
மேற்கண்ட திட்டத்தை கவனத்துடன் கையாளுவதைக் கொண்டு அமைதியின்மையும், மோசமான நிலைகளும், வறுமையும் கவனமின்மையும் பெருகத்துவங்கும் ஆனால் அத்துடன் பிற்படுத்துகின்ற நிலையை அதிகமாக்கிட உழவர்களின் வயல்களையும், நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். வர்த்தகக் கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும். சரக்குக் கப்பல்களையும் தொழிற் கூடளங்களையும் பெருமளவில் தீக்கிரையாக்க வேண்டும். நதிகளின் வரப்புக்களை உடைத்து ஊர்களை நாசமாக்க வேண்டும். குடிக்கும் தண்ணீரில் விஷத்தைக் கலக்க வேண்டும். இவ்வாறு மக்களிடையே பிற்போக்கான ஒரு நிலையையும், வறுமையையும் ஏழ்மையையும் ஏற்படுத்த வேண்டும்.
 
இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பழக்கவழக்கங்களை மாற்றி அவர்களிடையே குடிப்பழக்கத்தையும், சூதாட்டத்தையும் இன்னும் இதுபோன்ற துர்குணங்களையும் உருவாக்க வேண்டும். அரசின் கஜானாவை காலியாக்கிஅ வை முழுவதையும் சுருட்டுவதற்குரிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்படுவதற்கும். தன்னிறைவுக்கும் எதுவுமே இருக்கக் கூடாது.
 
ஆண்கள் பெண்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள்  எனும் திருமறை வசனம் அல்லது பெண்கள் தீமையின் பிறப்பிடம் எனும் ஹதீஸின் வாக்கியங்களை காரணமாக்கி பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனரென்றும்., கொடுமைப்படுத்தப்படுகிறனரென்றும், அடிமையைப் போல் நடத்தப்படுகிறனர் என்றும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
 
முஸ்லிம்கள் வசிக்கும் நகரங்கள், கிராமங்கள், ஊர்கள் போன்றவற்றின் அசுத்தத்திற்கும்ஈ, சுகாதாமின்மைக்கும் உரிய பெரும் காரணம்அங்கே தண்ணீர் பற்றாக்குறையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இதில் நாம் அனைத்து வழிகளிலும் பல்வேறு  முறைகளைக் கையாளுவதன் மூலம் சுகாதாரமான பகுதிகளிலும் தண்ணீரின் போக்குவரத்தை குறைக்க வேண்டும். இதன் மூலம் அப்பகுதிகள் இன்னுமதிகமாக அசுத்தத்தையும், சுகாதாமின்மையை நோக்கியும் தள்ளப்பட்டு விடும்.
 
நூலில் மற்றுமோர் அத்தியாயத்தில் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டையும், அவர்களின் ஒருங்கிணைந்த பலத்தையும் முறியடிப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உரிய சில திட்டங்கள் விபரிக்கப்பட்டிருந்தன. அதனையும் நாம் ஒதுக்கி விட முடியாது. அவை இதுதான்,………..
 
சமுதாயம், பாரம்பரியம், வம்சம் போன்றவற்றுக்கிடையே காழ்ப்புணர்வையும், பகைமையையும் உருவாக்க வேண்டும். இன்னும் ஜனங்'களை முந்தைய சமுதாய மக்களின் சரித்திரங்கள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றின் ப்ககம் அவ்களை அவசியம் திருப்ப வேண்டும். இதன் மூலம் இஸ்லாத்திற்கு முந்தைய முன்னோர்களின் பக்கம் அவர்கள் தமது கவனத்தை திருப்பி விடுவர். இன்னும் அவர்களை மதிக்கவும் தலைப்பட்டு விடுவர்.
 
உதாரணமாக, மிஸ்ரில் பிர்டஅவ்னின் பூத உடல் அழியாதிருத்தல் , ஈரானின் நெருப்பு வணக்கம், பைனுன் நஹ்ரைனில் பாபுல்களின் சிலை வணக்கம் போன்றவையாகும். இந்நூலின் ஒரு பக்கத்தில் ஒரு  பெரும் வரைபடமும் வரையப்பட்டிருந்தது. அதில் அந்த மர்கஜ்களின் அடையாளமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவை அடுத்து வரவிருக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய முன் சென்றோரின் எழுத்துக்களைக் கொண்டிருந்தன.
 
மதுப்பழக்கம், சூதாட்டம், துர் நடத்தை, காம இச்சைகளை தூண்டுதல், இதில் எந்த வாய்ப்பையும் நழுவ விட்டுவிடக் கூடாது. இன்னும் மது சூதாட்டம், காம இச்சை மற்றும் பன்றி இறைச்சியை எத்தனை இயலுமோ அத்துனை தூரம் அவர்களை ஏற்கச் செய்ய வேண்டும்.இஸ்லாமிய நாடுகளில் இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஏஜண்:டுகளான கையாட்களுக்கு பணம், காசு வெகுமதி  போன்ற எதைக் கொடுத்தாவது இத்தகைய நிலையினை உருவாக்க வேண்டும். பின்னும் இதை செய்வோருக்கு எவ்வித இடையூறும் ஆபத்தும் நேராது பாதுகாப்பு தந்திட வேண்டும். இன்னும் முஸ்லிம்களை இஸ்லாமியச் சட்டம் மற்றும் ஏவல் விலக்கல் போன்றவற்றை விட்டும் வெளியேற ஆசையூட்ட வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய ஷரீஅத்தை விட்டும் கவனத்தை திருப்புவதன் மூலமும், ஆட்சியாளர்களிடையே ஒழுங்கற்ற முறைiயை ஏற்படுத்துவதன் மூலமும் இச்சமூகம் திசைக்கொன்றாக சிதறிப் போகும்.
 
உதாரணமாக, குர்ஆனில் வட்டியைப் பற்றி மிகக் கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இதை பெரும் பாவமென்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த வகையிலும் ஹராமாக்கப்பட்ட அந்த வட்டியை முஸ்லிம்களிடையே பரவலாக்க முயற்சிக்க வேண்டும். இன்னும் தீய வழியில் பொருளீட்டும் நிலையினை அவர்கள் மீது முழுமையாக்க வேண்டும். இதற்காக வட்டி ஹராமென்று கூறப்பட்டுள்ள ஆயத்துக்களுக்கு தவறான விளக்கம் தரவேண்டும்.
 
இன்னும் இதில் ஒரு அடிப்படையான விஷயத்தை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது குர்ஆனுடைய ஒரு கட்டளை மீறப்படும்போது எல்லாவகையான கட்டளையையும் மீறிச் செயல்படலாம் என்னும் துணிவு பிறந்து விடுகிறது. முஸ்லிம்களிடம் இதை இப்படிக் கூற வேண்டும். அதாவது குர்ஆனில் விலக்கப்பட்டுள்ள வட்டி என்பது ஒரு குறிப்பிட்ட வட்டியை மட்டும்தான். (வட்டிக்கு வட்டி வாங்குதல்) மற்றபடி சாதாரணமாக வழங்கப்படும் வட்டியை வாங்குவதில் தவறேதுமில்லை. இதில் குர்ஆன் கூறுகிறது தமது செல்வத்தை பன்மடங்காகப் பெருக்குவதற்காக வட்டி வாங்காதீர்கள் அன்றி சாதாரணமான நிலையில் வட்டி வாங்குதல் ஹராமல்ல என்று சொல்ல வேண்டும்.
 
3,4. மார்க்க அறிஞர்களான உலமாக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு, கண்ணியம், பிணைப்பு போன்றவற்றை சிதைப்பது மிக முக்கியமான கடமையாகும். இதனை வெள்ளையரது ஆட்சியின் கீழ் பணிபுரியும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். இதனை செயல்டுத்த ஒரு விஷயங்கள் கண்டிப்பாக வேண்டும்.
 
ஒன்று: உலமாக்கள் மீதும், மக்களின் மீது அக்கறை வைத்திருப்போர் மீதும் அபாண்டமாக பழி சுமத்துதல்.
 
இரண்டு: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் சிலரை உலமாக்களைப் போன்று வேணடம் தரிக்கச் செய்து அவர்களை அல் அஜ்ஹர் யுனிவர்சிட்டி, நஜஃப், கர்பலா, இஸ்தான்புல்லிலுள்ள மார்க்கக் கல்வி நிலையங்களில் கொண்டுபோய் அமர்;த்த வேண்டும்.
 
உலமாக்களிடம் மக்களுக்குள் தொடர்பை துண்டிப்பதற்குரிய மற்றுமோர் பாதையானது, குழந்தைகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள திட்டங்களுக்கொப்ப கல்வியளித்தல். இதனை செயல்டுத்த நம்மிடம் சம்பளம் பெறுகின்ற ஆசிரியர்கள் தேவை. அவர்கள் நமது புதிய கல்வியை அவர்களுக்கு போதிப்பதன் மூலம் இளைஞர்களை உலமாக்களை விட்டும், உஸ்மானிய கலீபாக்களை விட்டும் துண்டித்து விடலாம். இன்னும் அவர்கள் எப்படியெல்லாம் சமூக மக்களை தமது விருப்பத்திற்கு இசைவாகத் திருப்பி விட்டனரென்றும், அவர்களிடம் எந்தக் கோணத்திலும் இஸ்லாமிய அடையாளம் கூட தென்படவில்லை என்றும் போதிக்க வேண்டும்.
 
5.ஜிஹாத் கடமை என்னும் நம்பிக்கையை சிதை;தெறிய வேண்டும். பின்னும் ஜிஹாத் என்பது இஸ்லாமிய தலைவருக்கு மட்டுமே உரிய ஒன்றென்று உறுதிபடுத்த வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் எதிரிகளை முறியடிக்க கடமைபட்டவர்கள்.. ஆனால் இன்று அதற்குக் கூட அவசியமில்லை என்று சொல்ல வேண்டும்.
 
6. காபிர்கள் தூய்மையற்றவர்கள், அசூசையானவர்கள் என்பதாக குறிப்பாக ஷpயாக்களின் இந்த நம்பிக்கையை அவர்களின் நினைவை விட்டே அகற்ற வேண்டும். இதற்காக குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்ட வேண்டும்.
 
உதாரணமாக, இவ்வசனத்தில் வேதம் கொடுக்கப்பட்டோர் எந்த உணவை உண்ணுகிறார்களோ அவை உங்களுக்கும் ஹலாலாகும். இவ்வாறே நீங்கள் உண்ணும் உணவு அவர்களுக்கும் ஹலாலாகும். இன்னும் பரிசுத்தமான மு.ஃமினான பெண்கள் மற்றும் பரிசுத்தமான அஹ்லெ கிதாபைச் சார்ந்த யூத, கிறித்துவப் பெண்கள் உங்களுக்கு ஹலாலாகும். என்ன? ரஸூல் ஸல்'லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஸபிய்யா, மாரியா போன்ற யூத கிறித்:துவ பெண்களை மணமுடிக்கவில்லையா? இன்னம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியர்கள் அசூசை கொண்டவர்களா இருந்தனர் என்று சொல்லலாமா? நவூது பில்லாஹ். என்றும் தூண்டிவிட வேண்டும்.
 
7.இன்னும் மார்க்கம் என்பதற்குரிய கருத்து இறுதித் தூதரி;டம் இஸ்லாம் மட்டுமே என்பதல்ல. மாறாக குர்ஆனில் உறுதி செய்யப்பட்டிருப்பதைப் போன்று தீனில் அஹ்லெ கிதாபுக(யூத, கிறித்துவர்க)ளும் இணைந்துள்ளனர். இன்னும் எல்லா மார்க்கவாதிகளுக்கும் முஸ்லிம் என்றே சொல்லப்படும். குர்ஆனில் யூசுப் அலைஹிஸ்ஸலாம் இவ்வுலகத்திலிருந்து முஸ்லிமாகச் செல்ல வேண்டுமென்று இறைவனிடம் துஆ செய்கின்றனர். ஹஜ்ரத் இப்றாகிம், இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இதுதான் விருப்பமாயிருந்தது. அதாவது, இறiவா! எங்களிருவரையும் முஸ்லிம்களின் கூட்டத்தில் இணைப்பாயாக! இன்னும் எங்களின் வம்சத்தை முஸ்லிம்களது கூட்டத்திலாக்குவாயாக! ஹஜ்ரத் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தமது பிள்ளைகளிடம் கூறுகின்றனர் நீங்கள் முஸ்லிமாக அன்றி மரணிக்க வேண்டாம் என்று. இவ்வாறு இஸ்லாமியர்களிடம் சொல்லி அவர்களைப் புரிய வைக்க வேண்டும்.
 
8.அடுத்து மிகவும் முக்கியமான பிரச்சனை சர்ச்சுகள்,கோவில்களை நிர்ணயிப்பதற்குரிய காரணங்களை கொண்டதாகும். குர்ஆன், ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய சரித்திரங்களின் சம்பவங்களை ஆதாரப்படுத்தி ஜனங்களுக்கு இவற்றை விளக்க வேண்டும். அதாவது, அஹ்லெ கிதாபு(யூது, கிறித்துவர்)களின் வணக்கஸ்தலங்கள் மிகுந்த மரியாதைக்குரியவையாகும். குர்ஆன் கூறுகிறது ஒருவேளை இறைவன் தடை செய்யவில்லையாயின் ஜனங்கள் கிறித்துவர்களின் சர்ச்சுகளையும், யூதர்களின் கோயில்களையும், தீ வணங்கிகளின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்து நாசம் செய்திருப்பர். இவ்வசனத்தின் மூலம் வெளிப்படும் உண்மை யாதெனில், இஸ்லாத்தில் வணக்கஸ்தலங்கள் மதிப்பிற்குரியவை. அவைகளுக்கு எக்காரணம் கொண்டும் நஷ்டம் விளைவிக்க கூடாதென்று சொல்ல வேண்டும்.
 
9.யுதர்களின் மார்க்கத்தை  வெறுக்கும் வகையில் யூதர்களை பற்றி சில ஹதீஸ்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களால் அறிவிக்கப்படுகிறது. உதாரணமாக, யூதர்களை அரபு மண்ணிலிருந்து வெளியேற்றுங்கள்  என்றும், அரபகத்தில் ஒரு மார்க்கம் இருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. நாம் எவ்வகையிலும் இந்த ஹதீஸ்களை தடைசெய்ய (மறுக்க) வேண்டும். இன்னும் இதனை இப்படிச் சொல்ல வேண்டும். அதாவது இந்த ஹதீஸ்கள் உண்மையானது எனில், நபிகளார் யூதப்பெண்களை மணமுடித்திருக்கவே மாட்டார்களென்று சொல்ல வேண்டும்.
 
10.முஸ்லிம்களை அவர்களின் வணக்க வழிபாடுகளிலிருந்து அவசியம் திசை திருப்ப வேண்டும். இன்னம் அவை கட்டாயக்கடமை என்னும் அவர்களின் நம்பிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அவர்களிடம் இறைவன் அடியார்களின் வணக்கத்தை விட்டு தேவையற்றவன் என்று கூற வேண்டும். அடுத்து ஹஜ்ஜை ஒரு அர்த்தமற்ற வணக்கம் என்று கூறி முஸ்லிம்கள் மக்காவுக்குச் செல்வதை கடுமையாகத் தடை செய்ய வேண்டும். இவ்வாறே மஜ்லிஸ்கள் மற்றும் அனைத்து கூட்டங்கள் மீதும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். இக்கூட்டங்கள் நமக்கு ஆப்பத்தை ஏற்படுத்துபவைகள். ஆகையால் அவைகளை மிகக் கடுமையாக தடை செய்ய வேண்டியது அவசியம். மஸ்ஜிதுகள், மார்க்க முன்னோடிகளின் கப்ருகள், இமாம்களின் உறைவிடங்கள், மற்றும் கல்விக் கூடங்களை நிர்மாணித்தல் போன்றவற்றின் மீதும் தடைகளைக் கொண்டு வர வேண்டும்.
 
11.ஐந்தில் ஒரு பாகம் தருதல், யுத்தப் பொருட்களை பங்கீடு செய்தல் போன்றவைகளும் இஸ்லாம் பலம் பெற ஒரு காரணமாகம். ஐந்திலொரு பாகத்தை தருவதும், பெறுவதும், வர்த்தகம் மற்றும் வாணிபத்தின் லாபத்தில் உள்ளதல்ல. முஸ்லிம்களிடம் இதைக் குறித்து அவசியம் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதாவது, இவ்வாறு பங்கீடு செய்தல் நபிகளார் மற்றும் இமாம்களின் காலத்தில்தான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுள்ள உலமாக்களுக்கு மக்களிடமிருந்து இதைப் பெறுவதற்கு எவ்வித அதிகாரமுமில்லை. மாறாக இப்பணத்தைக் கொண்டு அவர்கள் தமது வசதிகளைத்தான் பெருக்கிக் கொள்கின்றனர். இன்னும் தமக்காக ஆடு, மாடுகளையும், குதிரைகளையும், தோட்டங்களையும், வீடுகளையும் தான் வாங்குகின்றனர். ஆதலால் ஷரீஅத்துச் சட்டப்படி ஐந்திலொரு பங்கு பணத்தை இவர்கள் பெறுவது இவர்களுக்கு ஜாயிஸில்லை என்றும் எச்சரிக்க வேண்டும்.
 
12.மக்களை பிரிப்பதற்கு இதை அவர்களிடம் அவசியம் சொல்ல வேண்டும். இஸ்லாம் குழப்பங்களையும், சச்சரவுகளையும், பிரிவினைகளையும, கருத்து வேறுபாடுகளையும் கொண்டுள்ள ஒரு மார்க்கமாகும். இன்னும் இதனை ஆதாரப்படுத்த இஸ்லாமிய நாடுகளிடையே நிகழ்ந்து வரும் குழப்பங்களை எடுத்துக் காட்ட வேண்டும்.
 
தாங்கள் ஒவ்வெரு இல்லங்களுக்குள்ளும் நுழைந்து தந்தை மகன் உறவை எந்த அளவுக்குச் சிதைக்க வேண்டுமனில், பெரியவர்களின் உபதேசம் ஒன்றுக்கும் உதவாது போய்விட வேண்டும். இன்னும் மக்கள் தண்டல்காரனைப்  போன்று எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிட வேண்டும். இந்நிலையில் இளைஞர்களை நாம் அவர்களின் மார்க்க நம்பிக்கையி(அகீதாவி)ல் இருந்து நழுவச் செய்து அவர்களை உலமாக்களை விட்டும் ஓரங்கட்ட வேண்டும்.
 
பெண்களை பர்தாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நாம் மிகவும் தந்திரமான முறைகளைக் கையாள வேண்டும். இதனால் முஸ்லிம் பொண்கள் பர்தாவை தாங்களே முன்வந்து விட்டுவிடத் தயாராக வேண்டும். இதைப் பற்றி நாம் சரித்திர ஆதாரங்களை முன்வைத்து நிரூபிக்க வேண்டும். அதாவது பர்தா வழக்கமென்பது பனீ அப்பாஸியாக்களின் காலத்திலிருந்து தோன்றிய ஒன்றே அன்றி இது நிச்சயம் இஸ்லாமிய சுன்னத்திற்குரிய நடைமுறை அல்ல என்றும், ஜனங்கள் நபிகளாரின் துணைவியாரை பர்தா இன்றி பார்த்துள்ளனர். இஸ்லாமியத் தலைவர்களான பெண்கள் தமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஆண்களுடன் கூடிக் கலந்தே இருந்துள்ளனரென்றும் கூறி நமது முயற்சியில் ஓரளவுக்கு நாம் வெற்றி கண்டபின் நம்மவர்கள் இளைஞர்களை ஷரீஅத்திற்கு மாற்றமான உறவு முறைகள் பக்கம் தூண்டி விட வேண்டும். இவ்வாறே இத்தீமைகளை இஸ்லாமிய சமூக மக்களிடையே பரவலாக்கி விட வேண்டும். இதில் அவசியம் முஸ்லிமல்லாத பெண்கள் முழுக்க முழுக்க பர்தா இன்றி தம்மை முஸ்லிம்களது சமூகத்தாரிடையே வெளிப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் பெண்களும் அந்தப் பெண்களை பார்த்து பின்பற்ற வேண்டும்.
கூட்டுத் தொழுகையை விட்டும் ஜனங்களை தடுப்பதற்காக வேண்டி நாம் அவசியம் இமாம்களின் மீது அபவாதம் சுமத்த வேண்டும். இன்னும் அவர்களின் தவறான நடவடிக்கைகளை மக்கள் முன் ஆதாரப்படுத்திக் காட்ட வேண்டும். இதனால் ஜனங்கள் அவர்களை விட்டும் பிரிந்து அவர்களுடன் தமக்குள்ள தொடர்பையும் துண்டித்துக் கொள்வார்கள்.
 
நமக்கு மிகப்பெரும் கஷ;டமான காரியம் நல்லோர்களின் கப்ருகளை முஸ்லிம்கள் சென்று ஜியாரத்துச் செய்வதாகும். இதற்காக நாம் பல்வேறு ஆதாரங்களைக் காட்டி முஸ்லிம்களிடம் கப்ருகளுக்கு முன்னுரிமை தருவதும், அங்கே செல்வதும் பித்அத்தும் ஷரீமத்திற்கு மாற்றமான ஒன்றெனவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இறந்தோரை வணங்குவதும் மற்றும் இதுபோன்ற காரியங்களும் வழக்கத்தில் இல்லாதிருந்ததென்றும் கூறி சிறிது சிறிதாக அக்கப்ருகளனைத்தையும்  தகர்த்தெறிந்து அவர்களை ஜியாரத்துச் செய்வதை விட்டும் தடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் மகி நீண்ட திட்டம் யாதெனில்,…….
 
கப்ருகளில் அடக்கப்படுள்ளோரைப் பற்றி சந்தேகங்களை நம் உருவாக்க வேண்டும். அதாவது, இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதுன் நபவிய்யில் நல்லடக்கம் செய்யப்படவில்லை. மாறாக தங்களின் தாயாரின் கப்ரில் உறஙகிக் கொண்டிருக்கின்றனர் என்றும், இவ்வாறெ அனைத்து நல்லோர்களைக் குறித்தும் சொல்ல வேண்டும். அதாவது எந்த இடத்தில் அவர்கள் அடக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறதோ அவர்கள் அங்கே இல்லையென்று சொல்ல வேண்டும்.
 
இதில் ஹஜ்ரத் அபூபக்கர், உமர் ரலியல்லாஹு அன்ஹுமா போன்றோர் ஜன்னத்துல் பகீயில் அடங்கப்பட்டுள்ளனர் என்றும், ஹஜ்ரத் உஸ்மானின் (ரலியல்லாஹு அன்ஹு) கப்ரு எங்கே உள்ளது என்றே தெரியவில்லை என்றும், ஹஜ்ரத் அலீயின் (ரலியல்லாஹு அன்ஹு) கப்ரு பஸராவில் இருக்கிறதென்றும்,, இதில் நஜபில் உள்ள ஹஜ்ரத் அலீயின் கப்ரென்று கூறப்படுவதில் உண்மையில் முகையறா பின் ஷ{ஃபா தான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தழல மஸ்ஜிதே ஹன்னானாவில் அடக்கப்பட்டுள்ளதென்றும் அவர்களின் புனித உடல் அடக்கப்பட்டதற்குரிய ஆதாரம் எதுவும் இல்லையென்றுமத், இடமாம் மூஸல் காழிம், இமாம் தகீயுடைய கப்ருகளில் இரு அப்பாஸியாக்களின் கலீபாக்களே அடங்கப்பட்டுள்ளனர் என்றும், ஸாமிராவில் இமாம் நகீ, மற்றும் இமாம்  ஹஸன் அஸ்ஹரிக்குப் பதிலாக இரு அப்பாஸியக் கலீபாக்கள்தான் அடங்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூற வேண்டு;ம்.
 
அடுத்து நாம் ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தானை தரைமட்டமாக்கிட முயற்சிக்க வேண்டும். இன்னும் அனைத்து இஸ்லாமிய காடுகளிலுமுள்ள ஜியாரத்திற்குரிய ஸ்தலங்களையும் தகர்த்தெறிந்து விட வேண்டும்.
 
நபிகள் நாதரின் குடும்பத்தினர்கள் மீது ஷpயாக்கள் கொண்டுள்ள நேசத்தையும், கண்ணியத்தையும் தீர்த்துக் கட்டுவதற்காக பொய்யாக உருவாக்ககப்பட்ட ஸாதாத்துக்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அதற்காக கூலி வாங்கக் கூடிய சிலர் நமக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கறுப்பு மற்றும பச்சை தலைப்பாகை கட்டியவர்களாக வெளிவருவார்கள். தம்மை ரஸூலுடைய வம்சத்தினர் என்று ஜனங்களிடையே கூறுவார்கள். இதன்மூலம் மக்கள் உண்மையான ஸாதாத்துக்களை விட்டும் பிரிந்து நபிகளாரின் குடும்பத்தை சந்தேகிக்கத் துவங்கி விடுவார்கள். இன்னொன்றையுத் நாம் செய்ய வேண்டும். அது, உண்மையான ஸாதாத்துக்கள், உலமாக்கள் போன்றோரின் தலைப்பாகையை நாம் உறிந்து விட வேண்டும். இதன்மூலம் நபிகளாரிடமுள்ள தொடர்பு முற்றிலும் அகற்றப்பட்டு ஜனங்கள் உலமாக்கள் மீது கொண்டுள்ள கண்ணியத்தை விட்டுவிட வேண்டும்.
 
இமாம் ஹுஸைனின் பெயரால் நடத்தப்படும் கூட்டங்களை நாம் நிர்மூலப்படுத்த வேண்டும். இதனை முஸ்லிம்களை தீய வழியிலிருந்தும், மௌட்டீகத்திலிருந்தும் மடமைத்தனத்திலிருந்தும் காப்பாற்றுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று கூற வேண்டும். இம்முயற்சிகளனைத்திற்கும் நாம் செயல் வடிவம் கொடுத்து ஜனங்களை இமாம் ஹுஸைனின் இரங்கல் கூட்டத்தில் கலக்காமல் தடுக்க வேண்டும்.இவ்வாறே அக்கூட்டங்களை மண்மூடச் செய்ய வேண்டும். இதற்காக இமாம்களின் உறைவிடங்களை கட்டுவதிலும், உலமாக்கள், பேச்சாளர்கள் போன்றோரை நியமனம் செய்வதிலும் உள்ள சட்டங்களையும் கடுமையாக்க வேண்டும்.
 
தன்னிச்சையான போக்கையும், எடுத்ததெற்கெல்லாம் குற்றம் கண்டு குறைகூறும் மனோ நிலையையும் முஸ்லிம்களது சிந்தனையில் ஏற்ற வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தன்னிச்சையாக சிந்திகக்த்' துவங்கி, தனக்கு தோன்றியவாறு நடக்கத் துவங்கி விடுவர். நன்மையை ஏவி தீமையை தடுத்தல் கடமையில்லையென்றும், இதன் மூலம் ஷரீஅத்ததுடைய சட்டங்கள் சுருங்கிப் போய் காலப்போக்கில் மறைந்தே போய்விடும். இனி நன்மையை ஏவி தீமையை தடுத்தல் கடமைதானென்று சொன்னால், அவை அரசர்களுக்குரிய ஒன்றேயன்றி பாமரர்களுக்குரியதல்ல என்றும் சொல்ல வேண்டும்.
 
மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆண்களுக்கு ஒரு திருமணத்திற்கு மேல் அனுமதி வழங்க கூடாது. புதுப்புது சட்டங்களை ஏற்படுத்தி திருமணச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும். உதாரணமாக, அரபை சேர்ந்த ஆண் ஈரானை சேர்ந்த பெண்ணையும், ஈரானை சேர்ந்த ஆண் அரபை சேர்ந்த பெண்ணையும் இதுபோன்ற துருக்கியர் ஈரானியரை மணமுடிக்கக் கூடாதென்றும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.
 
உலகளாவிய இஸ்லாமிய போதனா முறையை அழுத்தமான ஆதாரங்களைக் கொண்டு தடை  செய்ய வேண்டும். இதை இப்படிச் சொல்ல வேண்டும். அதாவது, இஸ்லாம் என்பது உண்மையில் மக்களுக்கு நேர்வழி காட்டுவதல்ல. மாறாக இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்திற்கும், கூட்டத்தாருக்கும் மட்டுமே சொந்தமான ஒன்று. இதைப்பற்றி, இந்த மார்க்கம் உங்களுக்கும் உங்களின் கூட்டத்தாருக்கும் நேர்வழி காட்டுவதற்குரியதாகும். என்பதாக குர்ஆன் கூறுகிறதென்று சொல்ல வேண்டும்.
 
மஸ்ஜிதுகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சியளிக்கும் மர்கஜுகள் மற்றும் நல்ல நோக்கத்திற்காக துவக்கப்படும் அமைப்புக்கள் போன்ற இஸ்லாமயி வழிமுறைகளைத் தழுவியுள்ள அனைத்தையும் நிர்மூலப்படுத்த வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவற்றை தடைசெய்ய வேண்டும். இதுபோன்ற அமைப்புக்கள் உலமாக்களின் பொறுப்பில் இல்லாது ஆட்சியாளர்களான அதிகாரிகளின் கரங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறாயின் அவை காலப்போக்கில் மறைந்து காணாமல் போய்விடும்.
தற்போது அஸ்லாமியர்களிடையே உள்ள குர்ஆனை கூட்டியும், இட்டுக்கட்டியும் ஜனங்களுக்கு அதன்மீது சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக காபிர்கள், யூதர்கள், கிறித்துவர்'களைப் பற்றி மறுத்துரைக்கும் வசனங்கள், நன்மையை ஏவி தீமையை தடுத்தல், மற்றும் ஜிஹாத் பற்றிய வசனங்களையும் குர்ஆனிலிருந்தே நீக்கி விட வேண்டும். அந்த குர்ஆனை துருக்கிய பார்ஸி மொழிகளழில் மொழியாக்கம் செய்து வெளிப்படுத்த வேண்டும்.

  அரபு அல்லாத முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தமது பகுதிகளில் குர்ஆன், ஹதீஸ்களையும் தொழுகை போன்றவற்றையும் அரபி மொழியில் நிகழ்த்துவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறே ஹதீஸ்களிலும், ரிவாயத்துகளிலும் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும். இன்னும் குர்ஆனில் நாம் செய்வதைப் போன்று அவற்றிலும் நாம் கூடுதல், குறைவு செய்தும், இட்டுக்கட்'டியும் அர்த்தம் செய்ய வேண்டும்.
 
சுருக்கமாகச் சொன்னால் இந்த இரண்டாவது நூலில் பெரும் பெரும் திட்டங்கள் எனக்கு செய்லபடுத்துவதற்காகக் கிடைத்தன. இந்த நூலின் பெயர் 'இஸ்லாத்தை இம்மண்ணிலிருந்து எவ்வாறு அழிக்க வேண்டும்?' என வைக்கப்பட்டிருந்தது. இன்னும் இந்நூலில் செயல்படுத்துவதற்குரிய மிகமிக அருமையான பல திட்டங்களும் விபரிக்கப்பட்டிருந்தன. அவ்வண்ணமே நானும் எனது சகாக்களும் செயல்பட வேண்டியிருந்தது. இத்திட்டங்களனைத்;தும் என்னை வெகுவாக கவர்ந்தன.
 
நூலை படித்து முடித்த பின் திருப்பிக் கொடுப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நான் சென்றபோது மீண்டடும்  செயலாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம், எதனை நீ செயல்படுத்த வேண்டியுள்ளதோ அதில்  நீ மட்டும் தனியாக இல்லை. மாறாக கிட்டத்தட்;ட உண்மையான, மிகவும் நம்பிக்கைக்குரிய ஐயாயிரம் நபர்கள் இதில் வௌ;வேறு விதமான கூட்டங்களில், வகைவகையான வேடங்களில் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் உனக்கு உதவத் தயாராக உள்ளனர்.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை முழுமையாக செயல்படுத்திட அந்த ஐயாயிரம் நபர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தி ஒரு லட்சம் வரை கொண்டு போக வேண்டுமென்றும் விரும்புகிறது. இனி இக்கும்பல் தனது நோக்கத்தில் முழுமையான வெற்றியை எய்தும்போது நாம் அனைத்து இஸ்லாமிய உலகையும் மிகைத்து விடுவோம். இன்னும் இஸ்லாத்தை முழுமையாக அழித்தொழித்தும் விடுவோம் என்றும் கூறினார்.
 
அதன்பின் செயலர் என்னிடம், நான் உனக்கு ஒரு சந்தோஷமான செய்தியையும் சொல்கிறேன். அது நாம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் நமது லட்சியத்தை எட்டி விடுவோம் என்பதே. ஒருவேளை இன்றுள்ள நமது மக்கள் அந்த பொன்னான நாளை பார்க்கமுடியாமற் போய்விட்டாலும் அடுத்து வரும் நமது சந்ததியினர் நிச்சயம் அந்த நன்னாளைப் பார்ப்பார்கள். இன்னும் ஈரானியரின் இப்பழமொழி எத்தனை ஆழமான கருத்தை உள்ளடக்கி வைத்துள்ளதென்று பார். நேற்று வேறொருவர் விதைத்தார். இன்று நாம் சாப்பிடுகிறோம். இன்று நாம் விதைக்கிறோம். நாளை வேறொருவர் சாப்பிடுவார். என்றைக்கு நமது மேலான பிரிட்டிஷ; (அல்லது கடல்வழி நாடுகள்) சாம்ராஜ்யம் இஸ்லாமிய நாடுகளை வெற்றி கொள்ளுமோ அன்று உலகிலுள்ள கிறித்துவம் பனிரெண்டு நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று விடும்.
 
முஸ்லிம்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் நம்மீது பெரும் பெரும் யுத்தங்களை தொடுத்துள்ளனர். அவைகளில் சிலுவைப் போர்களை உதாரணமாகக் கூறலாம். இப்போர்கள் முழுவதும் முகலாயர்களின் யுத்தங்களைப் போன்று நாடு பிடிக்கும் நோக்கத்தையன்றி வேறு எந்த நோக்கங்களையும்  கொண்டிருக்கவில்லை. இதில் கொலை, கொள்ளை, நாசம், அழிவைத் தவித்த்து வேறு எந்தப் பலனும் கிடைக்க வில்லை.
 
அதேநேரம் இஸ்லாமியர்களுக்கு எதிரான நமது யுத்தம் முகலாயர்களைப் போன்று படைகளை வைத்தோ, அல்லது கொலை, அழிவையோ நோக்கமாகக் கொண்டதல்ல. நமக்கு அதில் அவசரமுமில்லை. நமது பிரிட்டிஷ; சாம்ராஜ்யம் இஸ்லாமிய ஆட்சிகளை வேரறுத்திட முழுமையான நிலைகளைத் தெரிந்த பின்னரே முன்னேறத் துவங்கும். இன்னம் மிகப் பொறுமையாக இருந்தே தனது மகத்;துவமிக்க லட்சியத்தை அடையும். அதன்பின் தனது லட்சியத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும்.
 
அன்றி நாம் அவசியமான சந்தர்ப்பங்களில் படைகளைக் கொண்டும் நமது லட்சியத்தைப் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டோம். அது எத்தகைய சூழ்நிலையில் நடக்குமெனில் எப்போது நாம் இஸ்லாமிய ஆட்சியாளர்களை முழுமையாக மிகைத்து விடுவோமோ, அப்போது சில சக்திகள் நமக்கெதிராகத் திரளும்போது நாமும் நமது படைகளைக் கொண்டு அவர்களை எதிர்கொள்வோம்.
பின்னும் இஸ்தான்புல்லின் ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கைக்கும், புத்திக் கூர்மைக்கம் சொந்தக்காரர்கள். அவர்கள் அத்தனை எளிதில் நம்மை நமது லட்சியத்தில் வெற்றியடைய விட மாட்டாhர்கள். அதற்காக நாம் இப்போதிருந்தே மதவாதிகளின் பிள்ளைகளுக்கு கல்விக் கூடங்களில் எந்தக் கல்வியை நாம் அவர்களுக்காக தயாரித்து வைத்துள்ளோமோ அவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும். அத்துடன் நாம் அப்பகுதிகளில் சில சர்ச்சுகளையும் நிர்மாணிக்க வேண்டும். மது,சூதாட்டம், மங்கையரின் காமத்தை எந்த அளவுக்கும் பரவலாக்க வேண்டுமெனில், இளைஞர்களின் கூட்டம் தமது மார்க்கத்தையும் அதன் வழிமுறைகளையும் மறந்தே போய்விட வேண்டும். நாம் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடையே மோதலுக்குரிய நெருப்பை ஊதிவிட வேண்டும். எங்கு பார்த்தாலும் குழப்பமும், சச்சரவும் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்க வேண்டும்.
 
ஆட்சியிலுள்ள அதிகாரிகளையும், செல்வந்தர்களையும் அழகு வாய்ந்த ஆட்டக்காரிகளின், மேனாமினுக்கிகளின் வலையில் வீழ்த்த வேண்டும். இன்னும் அவர்களின் கூட்டங்களை அந்த அழக மங்கையர்களைக் கொண்டு வசப்படுத்த வேண்டும். இதன்மூலம் சிறிதுசிறிதாக அவர்கள் மார்க்கம் மற்:றும் அரசியலை விட்டே அகன்று விடவேண்டும். இன்னும் இஸ்லாத்தைப் பற்றிய அவர்களது ஈமான்  குன்றிப்போய் விட வேண்டுமi;. இதன்காரணமாக உலமாக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்குமிடையேயுள்ள தொடர்பு முழுவதுமாக அறுந்து போய்விடும். அத்தகைய சூழ்நிலையில் நாம் அவர்கள் மீது போர் தொடுத்து இஸ்லாமிய நாடுகளின் ஆணி வேரையே பிய்த்தெறிந்து விடுவோம் என்று கூறினார்.
 
ஏழு:
 
இறுதியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் அந்த இரண்டாவது ரகசியத்தை மூடிக் கொண்டிருந்த திரையையும் நீக்கினார். அதை எனக்குக் காட்டுவதாக வாக்களித்திருந்தார். நானும் அதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன். இன்னும் அதை எனக்குக் காண்பிப்பதாக பிரிட்டிஷ; சாம்ராஜ்யத்தின் உயர் அதிகாரிகளும் ஆமோதித்திருந்தனர்.
 
ஐம்பது பக்கங்களில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஒப்பந்தம் சம்பந்தமான தஸ்தாவேஜு வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரசியலை விரித்துக் காட்டுவதாயிருந்தது. அதைக் கொண்டு இஸஸலாம் மற்றும் இஸ்லாமிய சமூகத்தை ஒரு நூற்'றாண்டுக்குள்ளேயே மண்ணோடு மண்ணாக்கி விட முடியும். அந்த ஒப்பந்த தஸ்தாவேஜின் அடிப்படையில் சில காலத்திற்குள்ளேயே இஸ்லாம் உலகைவிட்டே விடைபெற்றுக் கொண்டு போய்விடும் அதற்குப்பின் சரித்திர ஏடுகளில் மட்டுமே அதன் பெயர் இருக்கும்.
 
மேலம் இந்த பதினான்கு விஷயங்களை உள்ளடக்கிய அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றில் ஒன்றையும் வெளிப்படுத்தாது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவை முஸ்லிம்களுக்குத் தெரிந்து விட்டால் ஒரு பெரும் பூகம்பத்தையே விளைவித்து விடுவார்கள்.  எனவே நான் அவற்றை சுருக்கமாகக் கூறுகிறேன்.
 
தஜகஸ்த்தான், புகாரா, ஆர்மீனியா, தெற்கு குராஸான், கடலோரப்பகுதிகள் மற்றும் ரஷ;யாவின் வடக்குப் பகுதிகளிலுள்ள முஸ்லிம் நாடுகள் மீது ஆதிக்கம் பெறுவதற்காக ரஷ;யாவுடன் மிக நீண்டகால ஒப்பந்தம்.
 
இஸ்லாமிய நாடுகளை மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் முழுமையாக அழித்திட ஒரு அருமையான திட்டத்துடன் வடிவமைக்கப்பட்ட ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டின் அரசர்களுக்கிடையே செயல்வடிவிலான ஓர் ஒப்பந்தம்.
 
ஈரானிய மற்றும் உஸ்மானிய ஆட்சியாளர்களிடையே பழைய பகைமையைத் தூண்டி விட்டு அவர்களிடையே பரம்பரை மற்றும் கிளையார்களின் பிரிவினையை ஊதிவிட வேண்டும். ஈராக் மற்றும் ஈரானின் ஓரப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கோத்திரச் சண்டையை மூட்டி விட வேண்டும். இஸ்லாத்திற்கு முன்பிருந்த மதங்களைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். அத்துடன் ஈரான், மிஸ்ர், மத்திய தரைக்கடல் பகுதிகளில் கிட்டதட்ட மறைந்து விட்ட, செத்துப் போன மதங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவற்றை பின்பற்றுவோரை இஸ்லாத்திற்கு எதிராக திருப்பி விட வேண்டும்.
 
இஸ்லாமிய நாடுகளின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் சில பகுதிகளை முஸ்லிமல்லாத கூட்டத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். உதாரணமாக மதீனாவை யூதர்களிடமும், இஸ்கந்தரியாவை கிறித்துவர்களிடமும் யஜ்தை பாரசீகர்களிடமும் அம்மாராவை ஸாயிபீன்களிடமும், கிர்மான் ஷாஹ் அல்லாஹ்வை யஜீதிகளிடமும் ஒப்புவிக்க வேண்டும். இதில் கூறப்பட்ட இரு பகுதிகளையும் இந்தியர்களிடம் ஒப்படைப்பது மிகவம் அவசியம்.
 
இதுபோன்றே லெபனானை அங்குள்ள சூழ்ச்சிக்கார தரூஜிகளிடமும், காhழை அலவிகளிடமும், மஸ்கட்டை காரிஜிகளிடமும் ஒப்படைக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர்களுக்கு பொருட்களையும், யுத்தத் தளவாடங்களையும் தந்து அரசியல் ஆய்வாளர்களைக் கொண்டு  அவர்களை பலப்படுத்துவதும் அவசியமாகும். இதன்மூலம் சில காலத்திற்குள்ளேயே இவர்கள் இஸ்லாமியர்களின் கண்களில் உறுத்தத் துவங்கி விடுவார்கள். இன்னும் இஸ்லாமியரின் முகத்தில் கலவரம் தோன்றி முஸ்லிம்களது ஆட்சியின் அழிவுக்கு இதுவே காரணமாகி விடும். பின்னும் இஸ்லாத்தின் முன்னேற்றமும் கலகலத்துப் போய்விடும்.
 
இந்திய தேசத்தைப் போலவே ஈரானிய, உஸ்மானிய ஆட்சியிலும் சின்னச்சின்ன குட்டி அரசுகளை ஏற்படுத்தி பின்னர் உடைத்தெறியுங்கள். அழித்து விடுங்கள் என்னும் விதிமுறைக்கு ஒப்ப அவற்றை அவைகளுக்கு எதிராக திருப்பி விட வேண்டும். இந்நிலையில் அவை ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கெதிராக தன்னை வெளிப்படுத்தத் துவங்கி விடும்.
 
ஒரு தீர்க்கமான யோசனையின் அடிப்படையில் இஸ்லாமிய உலகிலுள்ள ஜனங்களின் சிந்தனையை நாம் திசை திருப்பும் வண்ணம் இட்டுக்கட்டப்பட்ட அகீதாக்களையும், மத்ஹபுகளையும் பிரச்சாரம் செய்ய வேண்டும். உதாரணமாக, அஹ்லெ பைத்துடைய இமாம்களின் மீது  அளவு கடந்த நேசமும், கண்ணியமும் கொண்டுள்ள ஷியாக்களுக்காக ஹுஸைனுல்லாஹ் என்ற மத்ஹபையும், இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை நேகிப்போருக்காக தனி மனித வணனக்கம் எனும் மத்ஹபையும், இமாம் அலி ரிழா மற்றும் இமாம் மஹ்தீ அவர்களுக்காக மிகைப்படுத்திக் கூறும் ஒரு மத்ஹபையும் எட்டு இமாம்களை பின்பற்றும் ஒரு மத்ஹபையும் ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மத்ஹபுக்கும் ஒரு குறிப்பிட்ட இடமும் தரப்பட வேண்டும். ஹுஸைனுல்லாஹ் மத்ஹபுக்கு கர்பலாவும், இமாம் ஜஃபர் ஸாதிக்கை வணங்குவோருக்கு இஸ்பஹானும், இமாம் மஹ்தியை வணங்குவோருக்கு ஸாமிராவம், எட்டு இமாம்களின் மத்ஹபுக்காரர்களுக்கு மஷ்ஹதும் ஒதுக்கப்பட வேண்டும். இப்போலி மத்ஹபுகளின் பிரச்சாரம் மற்றும் சம்பிராதயமனைத்தும் ஷpயாக்களின் மத்ஹபுகளுடன் நின்றுவிடாது சுன்னத் வல் ஜமாஅத்தினதிலுள்ள அனைத்து பிரிவினைவாதிகளிடையேயும் பரப்பப்பட வேண்டும். அதன்பின் அவற்றுக்கிடையே மோதலை ஏற்படுத்தி வெறுப்பை விதைக்க வேண்டும். இதன்மூலம் ஒவ்வொரு பிரிவும் தாங்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம் என்றும், மற்ற பிரிவிலுள்ளோர் காபிர், முர்தத், வெட்டப்பட வேண்டியவர்கள் என்றும் எண்ண வேண்டும்.
 
விபச்சாரம் ஓரினச்சேர்க்கை, மதுவருந்துதல், சூதாட்டம் மிகவும் முக்கியமானவை. அவற்றை இஸ்லாமியர்களிடையே பரவலாக்கிட வேண்டும். இத்தீய பழக்கங்களை முஸ்லிம்களிடையே  பரப்புவதற்காக அப்பகுதியிலுள்ளோரின் உதவியை நாம் பெற வேண்டும். அவர்கள் இஸ்லாத்திற்கு முன்னுள்ள மதங்களை சேர்ந்தவர்களாயிருப்பார்க்ள. இதில் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம் யாதெனில் அவர்கள் கணிசமான அளவில் இப்போது இருக்கின்றனர் என்பதே.
 
அதி முக்கியமான துறைகளில் தீயவர்களையும், அசூசையானவர்களையும் நியமனம் செய்ய வேண்டும். இன்னம் இதில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஆட்சியின் தலைமை பீடத்திலிருப்போர் வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்ததுடன் தொடர்புள்ளவராக இருக்க வேண்டும். அவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்காக வேலை செய்பவராயிருக்க வேண்டும். இன்னும் அவர் நம்மிடமிருந்து செய்தியைப் பெற்று நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலம் நமது லட்சியத்தை மறைமுகமாகவும் அதிகார பலத்தைக் கொண்டும் செயல்படுத்த வேண்டும். கிட்டதட்ட அவர்களுக்குப் பின்னால் முஸ்லிம் அரசர்களது கரங்களும் இருக்கும்.
 
அரபுகளல்லாத முஸ்லிம் நாடுகளில் அராபிய கலாச்சாரம் மற்றும் அரபு மொழி பரப்பப்டுவதை தடை செய்தல். அதற்குப் பதிலாக சமஸ்கிருதம், பார்ஸீ, குர்தீ, புஷ்த், உர்தூ மற்றும் அப்பகுதி மக்களின் மொழிகளை அங்கே பரப்புதல். இதன்மூலம் அப்பகுதி மக்களின் மொழிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அரபி மொழி பேசுவோர் ஒரு சில கோத்திரத்தாரிலேயே முடங்கிவிடுவர். இவ்வாறு அரபியர்களின் குர்ஆன் மற்றும் சுன்னத் போன்றவை மொழியின் தொடர்பின்மையால் துண்டிக்கப்பட்டுப் போய்விடும்.
 
ஆட்சி பீடத்தின் முக்கியக் குறிப்பேடுகளை நிர்வகிக்கம் அமைப்பின் ஆலோசகர்களாக பிரிட்டிஷhரின் உளவாளிகளும், செயலர்களும் நியமனம் பெறுவதை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இஸ்லாமிய நாடுகளின் மந்திரிப் பிரதானிகளும், அதிகாரிகளும் எடுக்கும் முடிவுகளில் நமது நோக்கங்கள்தான் அதிகமாக இணைந்திருக்கும்.
 
இந்த இலட்சியத்தை நாம் அடைந்திட மிக நல்ல வழியானது, முதலில் நாம் நமது சிந்தனையோட்டமுடையவர்களையும், நம்பிக்கைக்குரிய அடிமைகளையும், அடிமைப் பெண்களையும் பயிற்சி கொடுத்து உருவாக்க வேண்டும். பின்னர் அவர்களை அரசர்களிடமும், அரச குமாரர்களிடமும், மந்திரிகளிடமும், தலைவர்களிடமும் மற்றும் முக்கியமான துறைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகளிடமும் விற்பனை செய்து விடுவோம். இந்த அடிமைகள் தமது சாதுர்யத்தாலும், தந்திரோபாயத்தைக் கொண்டும் தமக்கென அங்கே ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டுவிடுவர். அதன்பின் சிறிது சிறிதாக அவர்களுக்கு ஆலோசனை வழங்கம் அந்தஸ்த்'தைப் பெற்று முடிவில் அவர்களை முடக்கிப்போட்டு விடுவர். இதன் மூலம் அந்த ஆடவர்களிடம் நமது உளவாளிகளின் சிந்தனை மட்டுமே பிரபலித்துக் கொண்டிருக்கும்.
 
முஸ்லிம்களிடையேயுள்ள பல துறைகள் அவற்றில் குறிப்பாக டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு கஜானாக்களிலுள்ள அதிகாரிகள் போன்ற தெளிந்த சிந்தனைவாதிகள் மூலம் கிறித்துவ மதப் பிரச்சாரத்தை பரவலாக்குதல். குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள், சர்ச்சுகளுடன் தொடர்புள்ள மருத்துவ மனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் பிரச்சார நூல்கள், பிரசுரங்கள், போன்றவற்றை அச்சிட்டு நடுத்தர மக்களிடையே இலவசமாக வழங்குதல். இஸ்லாமிய சரித்திரங்களுக்கு எதிராக கிறித்துவ சரித்திரங்களை உருவாக்குவதற்குரிய ஏற்பாடுகளை துரிதப்படுத்துதல்.
 
இஸ்லாமிய மக்களின் நடைமுறை மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் பிரிட்டானிய ஆட்சியாளர்களது ஆட்களையும், உளவாளிகளையும் நியமனம் செய்தல். இன்னும் இத்திட்டத்தின் செயலாக்கம் இஸ்லாமிய நாடுகளில் முழுமையாக அமுல்படுத்தப்படும். இதில் நமது கல்வி கலாச்சாரங்களில் தேர்ச்சி பெற்ற அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும்  அதன் கல்வி கலாச்சாரங்களையும் புரிந்து கொண்:டு அவைகளுக்கு எதிரான சரித்திரங்களை உருவாக்க வேண்டும். இன்னும் அவைகளை இஸ்லாமியர்களிடையே பரவலாக்க முயற்சிக்க வேண்டும். அதன்பின் ஆதாரங்களை சேகரித்தும், இஸ்லாமிய நாடுகளிடம் மார்க்க சம்பந்தமான குறிப்'புக்களையும் பெற்று எப்படிப்பட்ட ஒரு சரித்திரத்தை உருவாக்க வேண்டுமெனில், அது இஸ்லாத்தை நலிவுறச் செய்து கிறித்துவத்திற்கு பிரயோஜனம் தக்க ஒன்றாக அமைந்திட வேண்டும்.
 
இஸ்லாமிய இளைஞர்களையும், பெண்களையும் தன்னிச்சையான போக்குடையவர்களாகவும், மார்க்கத்தின் மீது தொய்வு கொண்டவர்களாகவும் மாற்றுதல். இன்னும் அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான உண்மை நிலைகளை விட்டும் திசை திருப்புதல். இதனை மிஷ்னரிகள், கல்வி நிறுவனங்கள், குண ஒழுக்கங்களில் மாறுபட்ட நிலையுடையோர் மற்றும் இஸ்லாத்திற்கெதிரான நூல்கள், சரீர இச்சைகளை தூண்டும் சாதனங்கள், கேளிக்கைகள் போன்றவற்றை உருவாக்கும் துறைகள் மூலமும், இன்னும் தீய நடத்தையுள்ளோரைக் கொண்டும், முஸ்லிம் முஸ்லிமல்லாத இளைஞர்களின் நட்பின் மூலமும் இதனை செயல்படுத்த வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நமது வலையில் விழ வைக்க யூத கிறித்துவர்களின் இளைஞர்களைக் கொண்ட ரகசிய கூட்டமைப்பு ஒன்றையும் பயன்படுத்த வேண்டும்.
 
இஸ்லாத்தை பலவீனப்படுத்தவம், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் இன்னும் அவர்களை வாழ்வின் அடிப்படை தேவைகள் குறித்து  சிந்தித்து அவர்கள் முன்னேறுவதை தடை செய்யவும் இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் குழப்பங்களை உருவாக்குதல், இன்னும் முஸ்லிம்களை மாற்றுமத மக்களுடன் மோத விடுதல். மக்களின் செல்வத்தையும், அரசு கஜானாக்களையும், அவர்களின் தொலை நோக்கு சிந்தனையும் சிதைத்தெறிய வேண்டும். இன்னும் இஸ்லாமியர்களிடையே உள்ள மதப்பற்றையும், வீரத்தையும் சின்னாபின்னப்படுத்தி அவர்களுக்குள் மோதலை உருவாக்க வேண்டும்.
 
இஸ்லாமிய நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார பரிவர்த்தனையை சிதைக்க வேண்டும். அவற்றில் விளைச்சல் மற்றும் அனைத்து வகையான வரவுக்குரிய வழிகளும் அடங்கும். இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஜனங்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும். கடல் பரப்பில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும். இன்னும் மக்களிடையே சோம்பலையும், சுகத்தைத் தேடும் நிலையையும், வாளாவிருப்பதையம் வளர்க்க வேண்டும். மக்கள் பெருக்கத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜனங்களின் ஒழுங்கீனத்தை அதிகப்படுத்த வேண்டும். இன்னும்; பாமர மக்களை பிரிவினைக்கு பழக்கபடுத்த வேண்டியதும் அவசியமாகும்.
 
இங்கே இதையும் விளக்குதல் அவசியம். அதாவது மேற்கண்ட பதினான்கு செயல்முறைத் திட்டங்களும் மிக நீண் விரிவான ஆலோசனைக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டது. இன்னும் இவையன்றி கட்டங்களும், அடையாளங்களும், வரைபடங்களும் அந்நூலில் இருந்தன. நான் அவைகளை இங்கு சைக்கினையாகவே குறிப்பிட்டுள்ளேன்.
 
சுருங்கக் கூறின் வளர்ந்து வரும் நாடுகுளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலர் என்மீது கொண்டிருந்த ஆழமான நட்பின், நம்பிக்கையின் காரணமாகவே எனக்கு அந்த ரகசியமான நூலை படிக்கத் தந்தார். அதற்காக நான் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். இன்னும் ஒரு மாதம் வரை லண்டனில் இருந்தேன். அதன்பின் அமைச்சர் மூலம் நான் ஈராக்குக்கு செல்ல வேண்டுமென பணிக்கப்பட்டேன்.
 
எனது இப்பயணம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஒரு புதிய மார்க்கத்தை வெளிப்படுத்திட அவரை தயார் படுத்துவதற்காகவேயன்றி வேறு எந்த நோக்கமும் இருக்கவில்லை. செயலர் என்னிடம் திரும்பத் திரும், நான் அப்துல் வஹ்ஹாபிடம் மிகுந்த முன்னெச்சரிக்கையோடும், ஜாக்கிரதையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்றும், நமது திட்டங்களை அவரிடம் தெரிவிப்பதில் அளவு கடந்து செயல்படவேண்டாமென்றும் வலியுறுத்திக் கூறினார்.
 
காரணம் ஈராக் மற்றும் ஈரானிலிருந்து வந்துள்ள உளவாளிகளின் அறிக்கைகள் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபை நம்பிக்கைக்குரிய ஒரு நபரென்றும், வளர்ந்து வரும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் திட்டங்களை செயல் வடிவமாக்கிட தகுதியானவரென்றும் நம்பிக்கையூட்டும் வகையில் கூறின.
 
அதன்பின் செயலர் என்னிடம்,……….
 
நீ முஹம்மதிடம் மிகத் தெளிவாகவும், அதே சமயம் இரு அர்த்தத்திலும் பேச வேண்டும். ஏனெனில், நமது ஆட்கள் இஸ்பஹானில், அவரிடம் எல்லாவற்றையும் மிகத் தெளிவாக பேசி முடித்து விட்டனர். அவரும் அவர்களின் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால் ஒரு நிபந்தனையோடு. அது உஸ்மானியப் பேரரசின் அதிகாரிகள், உலமாக்கள், மற்றும் தனது விரோதிகள் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தன்னை பாதுகாக்க  வேண்டுமென்றும், தனக்கு முழு ஆதரவும், பாதுகாப்பும் தரப்படவேண்டுமென்றும் கூறினார். காரணம் அவர் தமது புதிய மத்ஹபை வெளிப்படுத்தியதும் பல முனைகளிலிருந்தும் அவரை தீர்த்துக் கட்டுவதற்குரிய முயற்சியினை மேற்கொள்வார்கள். அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் அவரைக் கொல்ல முனையும் போது,……
 
பிரிட்டிஷ் அரசு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபிற்கு ஆயுத பலத்தை கொண்டு அவரது கரத்தை பலப்படுத்தி பின்னர் அவசியம் ஏற்பட்டால் அவருக்கு உதவுவதாகவும் ஒப்புதல் அளித்திருந்தது. இன்னும் அவரது விருப்பப்படியே அரேபியாவில் நஜ்துக்கு அருகாமையிலுள்ள ஒரு பகுதியை அவரது ஆட்சிக்குரிய பகுதியென பிரகடனப்படுத்தியது.
 
ஆக அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற செய்தியைக் கேட்டு எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நான் செயலரிடம், அடுத்து எனக்குரிய பணியின் பொறுப்பு என்ன? நான் என்ன செய்ய வேண்டும்? அப்துல் வஹ்ஹாபிடம் எந்த மாதிரியான வேலைகளை வாங்க வேண்டும்?, இன்னும் எனது பணியை எந்த இஷ்டத்திலிருந்து நான் துவக்க வேண்டுமென்றும் வினவினேன்.
 
அதற்கு செயலர், வெளியுறவுத்துறை அமைச்சகம் உனது சம்பளத்தை பெரிய மனதோடு அதிகப்படுத்தியுள்ளது. இன்னும் அவர்களின் கனவை திட்டங்கறை நீ ஷைகு அப்துல் வஹ்ஹாபின் மூலம் சிறிது சிறிதாக செயல்படுத்த வேண்டும்.. அவை…..
 
அவரது மதஹபை ஏற்க மறுக்கும் முஸ்லிம்களை காபிர் என்றும், அவர்களின் பொருட்கள், பெண்கள் போன்றவற்றை கைப்பற்றுதல் ஜாயிஸ் என்றும் அறிவிக்க வேண்டும். இவ்விதம் கைது செய்யப்படுவோரை (எதிரிகளை) ஈவிரக்கமற்றவர்களின் சந்தையில் அடிமைகளாகவும், வெள்ளாட்டிகளாகவும் விற்றுவிட வேண்டும்.
 
சிலை வணக்கமென்னும் காரணம் கூறி முடிந்தால் கஃபாவை தகர்த்தெறிய வேண்டும். இவ்வாறே முஸ்லிம்களை பர்ளான ஹஜ்ளை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்காக ஹாஜிகளின் உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கும் அரபுகளிலுள்ள பயங்கரவாத கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.
 
அரபியலுள்ள கோத்திரத்தாரை உஸ்மானிய சட்டங்களை மீறுவோராக மாற்றிட வேண்டும். இதை ஏற்க மறுப்போருக்கு எதிராக யுத்தம் தொடுக்க வேண்டும். ஹிஜாஸுடைய ஷரீப்கள் மீதுள்ள கண்ணியத்தையும், அபிமானத்தையும் உடைத்தெறிய எல்லா வழிகளிலும் அவர்களை நிர்பந்திக்க வேண்டும்.
 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹஜ வஸல்லம் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நல்லோர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்னும் காரணம் கூறியும், இதுபோன்றே ஷிர்க் , சிலை வணக்கம் போன்றவற்றை அழித்தொழிக்கிறோம் என்றும் கூறி மக்கா, மதீனா மற்றுமுள்ள நகரங்களிலுள்ள முஸ்லிம்களது ஜியாரத்திற்குரிய ஸ்தலங்களையும் மற்றும் கப்ருகளையும் முடிந்தவரை தகர்த்தெறிய வேண்டும்.
 
இயன்றவரை இஸ்லாமிய நாடுகளில் சச்சரவுகள், குழப்பங்கள், கூச்சல்கள் மற்றும் அமைதியற்ற சூழலை உருவாக்க வேண்டும்.
 
இத்திட்டங்களை நிறைவேற்றுவதிலுள்ள சிரமங்கள் உங்களை பயமுறுத்துமோ என்று எண்ண வேண்டாம். நம்மீதுள்ள பொறுப்பு நாம் இஸ்லாத்தை வேரறுக்கும் விதைகளை இப்பூமியில் தூவி விட்டோம். இதன் மூலம் நமது வருங்கால சந்ததியினர் அப்பாதையில் முன்'னேறிச் சென்று விரைவில் ஒரு முடிவைக் காண்பார்கள். பிரிட்டிஷ் அரசு தமது இப்பொறுமையான பாதையில் முயற்சியினை மேற்கொண்டுள்ளது. என்ன? முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னந்தனியாக தமது அழிந்து போகும் புரட்சிக்கு வித்திடவில்லையா? முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்பும் நவூதுபில்லாஹ் முஹம்மதைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) போன்று நமது பார்வையில் புரட்சியை நிச்சயம் கொளுந்து விட்டு எரியச் செய்வார் என்பதில் சந்தேகமேயில்லை.
 
இந்த சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களுக்குப் பின் நான் அமைச்சரிடமும் செயலரிடமும் பயணத்திற்கு அனுமதி கேட்டுப் பெற்றேன். அதன்பின் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறி விடைபெற்றுப் புறப்பட்டேன். எனது கப்பல் பஸராவை நோக்கி பயணமாயிற்று. மிகக் கடுமையான சோதனைக்குரிய  பயணத்திற்குப் பின் இரவு நேரம் பஸராவை வந்தடைந்தேன். நேராக அப்துர் ரஜா துருக்கியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அவர்; உறங்கிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அன்றிரவை அங்கே கழித்தேன்.
 
மறுநாள் காலை அப்துர்ரஜா என்னிடம், ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் சில நாட்களுக்குமுன் ஈரானிலிருந்து பஸரா சென்றாரென்றும், தற்போது ஒரு சில நாட்களுக்குமுன் வேறு ஏதோ ஒரு ஊருக்குச்  சென்று விட்டதாகவும், போகும்போது என்னிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கடிதமும் தந்து சென்றதாகவும் கூறி கடிதமொன்றையும் தந்தார். அக்கடிதத்தில் அவர் தனது முகவரியை நஜ்து எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
மறுநாள் நான் தனியாக நஜ்தை நோக்கி புறப்பட்டேன். பெரும் சிரமங்களுக்குப்பின் நஜ்து வந்து சேர்ந்து அவரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவரது முகத்தில் அசதியும், பலவீனமும் தெரிந்தன. நான் அந்நிலையில் அவருடன் பேசுவது உசிதமல்லவென்று எண்ணினேன். ஆனால் அவர் மறுமணம்  செய்துள்ளார் என்பதை விரைவில் தெரிந்து கொண்டேன். இன்னும் உடலுறவில் அளவுக்கதிகமாக ஈடுபட்டு தனது சக்தி முழுவதையும் இழந்து போயிருந்தார். நான் அதைப்பற்றி அவருக்கு உபதேசம் செய்தேன். இன்னும் அவரிடம், நாமிருவரும் இணைந்து நிறைய காரியங்கள் ஆற்ற வேண்டியுள்ளதென்றும் கூறினேன்.
 
அதன்பின் அவரிடம், தற்போதைக்கு எனது பெயர் அப்துல்லாஹ் என்றும்', நான் உமது அடிமையென்றும் என்னை மனிதச் சந்தையிலிருந்து விலைக்கு வாங்கினீரென்றும் ஜனங்களிடம் சொல்ல வேண்டுமென்றும் பேசி முடிவு செய்து கொண்டோம். அவ்வாறே iஷகும் ஜனங்களிடம் என்னை அறிமுகப்படுத்திய போது, தமது அலுவல்களுக்காக நான் பஸராவில் இருந்ததாகவும், இப்போது ஜித்தா வந்திருப்பதாகவும் சொல்லி வைத்தார்.
 
நஜ்துவாசிகள் என்னை ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் அடிமை என எண்ணிக் கொண்டிருந்தனர். இங்கே இன்னொன்றையும் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது iஷகு தனது புதிய மத்ஹபை பிரகடனப்படுத்துவதற்குரிய சாதனங்களை சேகரிக்க கிட்டதட்ட ஒரு வருடங்களாயிற்று. ஹிஜ்ரி 1113 ஆம் ஆண்டின் மத்தியில் முஹம்மத் பின் அப்துல் வஹாப் அரபுப் பிரதேசத்தில் தனது புதிய மத்ஹபை பிரகடனப்படுத்திட முடிவெடுத்து தனது கூட்டத்தாரையும், தனது குடும்பத்தினரையும் ஒன்று கூட்டினார்.
 
அவர்களனைவரும் அவரது எண்ணத்தை தழுவியவர்களாகவும், அவரோடு சேரத்தயாராக இருப்பதாகவும் வாக்களித்தனர். துவக்கத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடமுமம், தனது முரீதுகளிடமும் சில ரகசியமான குறிப்புக்களை கொண்டும், தெளிவான விளக்கமற்ற வார்த்தைகளைக் கொண்டும் சுருக்கமாகப் பிரகடனப்படுத்தினார்.
 
இதற்கு சில நாட்களுக்குப் பின் நஜ்தைச் சேர்ந்த எல்லா கோத்திரத்தாருக்கும் பெருமளவில் புதிய மத்ஹபுக்குரிய அழைப்புக்கள் அனுப்பப்பட்டன. சிறுகச் சிறுக நாங்கள் பண பலத்தைக் கொண்டு அக்கம் பக்கமிருந்த அவரது மத்ஹபை ஆதரிக்கக் கூடய ஒரு பெரும் கூட்டத்தை சேர்த்து விட்டோம். அதன் அவர்களை எதிரிகளுடன் போர் தொடுக்குமாறு உபதேசித்தோம். இங்கு இன்னொன்றையும் கூற வேண்டும். அது அரபு மண்ணில் iஷகின் புதிய மத்ஹபுப் பிரகடனத்தின் செய்தி பரவப் பரவ அவரது எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வந்தது.
விரைவிலேயே தடைகளும், எதிரிகளின் கூட்டமும் எந்த அளவுக்கு அதிகமாயிற்று எனில், ஷைகின் கால்கள் ஆட்டங்காணத் துவங்கிற்று. குறிப்பாக நஜ்தில் அவருக்கெதிராக அபாயகரமான கருத்துக்கள் பரவியிருந்தன. நான் மிகுந்த சாதுர்யத்துடன் அவரை காலூன்றி நிற்கச் சொன்னேன். இன்னும் அவர் தமது லட்சியத்தில் துவளாமலும் பார்த்துக் கொண்டேன்.
 
நான் எப்போதும் அவரிடம், நபித்துவத்தின் துவக்க காலத்தில் அல்லாஹ்வுடைய ரஸூல் ஹஜ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது விரோதிகள் உமது விரோதிகளை வி;ட பன்மடங்கு பலம் வாய்ந்தவர்களாகத்தான் இருந்தனர். இருப்பினும் அவர்களின் அத்தனை கஷ்டங்களையும், துன்பங்களையும் இளகிய மனத்தோடு நபிகளார் சகித்துக் கொண்டனர். அத்துன்பங்களையும், அபவாதங்களையும், ஏச்சுப் பேச்சுக்களையும் சகிப்புத்தன்மையின்றி ஒரு பெரும் வெற்றியை ஈட்டுவதும், உன்னதத்தைப் பெறுவதும் சாத்தியமில்லை. எந்தத்தலைவரும் வழிகாட்டியும் மேற்கண்ட நிலைகளை அனுபவிக்காதவர் என்று சொல்ல முடியாதென்றும் கூறி அவரைத் தேற்றி வந்தேன்.
 
இவ்வாறே நாங்கள் எமது புதிய மத்ஹபின் முயற்சியில் முன்னேறினோம். இதில் அபாயகரமான எதிரிகள் எங்களை எதிர்கொண்ட போது, யுத்தமின்றி நடத்தப்பட்ட போரில் தந்திரத்தை கையாண்டோம். எங்களுக்கு கிடைத்த அத்தகைய போரின் ஒரு வெற்றியானது iஷகுடைய எதிரிகளை பணத்தைக் கொண்டு வீழ்த்தியதே. எங்களால் நியமிக்கப்பட்ட அக்கூலிகள் எதிரிகளின் கூட்டத்தில் ஊடுருவி எங்களுக்காக உளவு பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தகவல் தந்து எங்களை உஷார் படுத்திக் கொண்டுமிருந்தனர். அதன் மூலம் நாங்கள் அவர்களின் சகல சதித் திட்டங்களையும் உடைத்தெறிந்து கொண்டிருந்தோம். உதாரணமாக ஒருமுறை ஷைகின் விரோதிகள கூட்டமொன்று ஷைகைக்கொல்ல திட்டமிட்டுள்ளதென்ற செய்தி கிடைத்தபோது, நான் உடன் முன்னெச்சரிக்கையோடுரகசியமாக அத்திட்டத்தை முறியடித்தேன். அதன்பின்அவர்களை எந்த அளவுக்கு இழிவுபடுத்தினோம் எனில், ஷைகின் கட்டளைக்கொப்ப நடந்தேறியது. அதன்பின் ஜனங்கள் அந்த எதிரிகளை ஆதரிப்பதையே விட்டு விட்டனர்.
 
இறுதியாக ஷைகு முஹம்மத் பின் அப்துல் வஹாப் வளர்ந்து வரும் புதிய நாடுகளி;ன வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த ஆறு திட்டங்களையும் செயல்படுத்த தான் முழு முயற்சியும் மேற்கொள்வதாகக் கூறி எனக்கு நிம்மதியைத் தந்தார். இதில் இரு திட்டங்களைப் பற்றி அவர் பதிலேதும் தரவில்லை. அதில் ஒன்று மக்காவை கைப்பறிய பின் 'கஃபாவை இடித்தல்'. iஷகுடைய கண்ணோட்டத்தில் இது ஒரு அர்த்தமற்ற அபாயகரமான செயலாகப்பட்டது. ஏனெனில், இஸ்லாமியர்கள் அத்தனை எளிதில் அவரது புதிய மத்ஹபை ஏற்கத் தயாராக இல்லாதிருந்ததே. அத்துடன் ஹஜ்ஜை சிலை வணக்கத்திற்கு ஒன்றென அறிவிக்க வேண்டியதிருந்ததும் தான்.
 
இரண்டாவது திட்டத்தை செயல்படுத்துதல் அவரால் இயலாத ஒன்றாகயிருந்தது. அது ஒரு புதிய குர்ஆனை வடிவமைப்பதாகும்'. அன்றி அவர் குர்ஆனுக்கெதிராக வரவும் தயாரில்லை. அத்துடன் அவர் மக்கா மற்றும் இஸ்தான்புல்லைச் சார்ந்த அரசு அதிகாரிகள் விஷயத்தில் மிகவும் பயந்தார்.
 
ஒருவேளை நான் கஃபாவை இடித்து ஒரு புதிய குர்ஆனை வடிவமைத்தேன் எனில், உஸ்மானியப் பேரரசு எனக்கெதிராக பெரும் படையொன்றை அரபகத்திற்கு அனுப்பி வைக்கும். எனவே நாம் அப்பிரச்சனையில் முழுமையாக இறங்க வேண்டாமென்று கூறினார். எனக்கும் அவர் சொல்வது சரியென்றே பட்டது. பின்னும் யோசித்துப் பார்த்தால் அன்றிருந்த அரசியல் மற்றும் மார்க்கத்தின் சூழ்நிலைகள் அத்திட்டத்தை செயல்படுத்த தோதாக இல்லையென்பதும் தெரிந்தது.
 
முஹம்மத் பின்அப்துல் வஹ்ஹாபின் புதிய மத்ஹபுடைய பிரகடனத்திற்குப் பல ஆண்டுகள் கழித்து அந்த ஆறு திட்டங்களும் செயல் வடிவத்தில் வெற்றியடைந்த போது, வெளியுறவுத்துறை அமைச்சகம் இப்போது அரசியல் ரீதியாக அரபு மண்ணில் சில காரியங்களை சாதிக்க வேண்டும் என்றும்  முடிவெடுத்தது.
 
இதற்காக தமது கூலியாட்களில் ஒருவரான முஹம்மத் பின் ஸவூதை (இவர் ஸவூதி வசம்சத்தின் தலைவர், ஹிஜ்ரி 1147 ல் இவர் வஹாபிய மத்ஹபை தழுவினார். இன்னும் பிரிட்டிஷ; அரசின் உதவியைக் கொண்டு நஜ்தின் அதிகாரியானார். ஹிஜ்ரி 1179ல் இறந்துபட்டார்.) முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபுடன் இணைத்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
அத்திட்டத்தை செயல் வடிவமாக்கிட ரகசியமாக ஒரு தூதர் பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்டார். அவர் ஷைகிடம் பிரிட்டானிய அரசின் நோக்கங்களை விளக்கிக் கூறி இரு முஹம்மது(முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபும், முஹம்மது பின் சவூது)ம் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
 
அத்துடன் மார்க்க சம்பந்தமான துறைசகளில் தீர்ப்பளித்தல் போன்றவையனைத்தும் முழுமையாக முஹம்மத் பின் அப்துல் வஹாபுடைய கரத்தில் இருக்குமென்றும், இவ்வாறே அரசியல் மற்றும் ஆட்சிபரிபாலனம் போன்றவை முஹம்மத் பின் ஸவூதுடைய பொறுப்பிலிருக்கும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்லாமிய மக்களின் உயிர் உடமையனைத்திலும் தமது ஆதிக்கத்தை நிலைபடுத்திக்கொள்ள வேண்டுமெனத் திட்டமிட்டது. பின்னும் சரித்திரம் மக்களிடையே ஆட்சி அதிகாரத்தை விட மார்க்கத்தின் அழுத்தமே ஆதிக்கம் கொண்டிருந்தன என்பதை நமக்கு உணர்த்தின.
 
இவ்வண்ணமே மார்க்கத்தையுடையோர் மற்றும் ஆட்சியார்களின் ஒருங்'கிணைந்த செயல்பாட்டின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு பலன் கிடைத்து வந்தது. இன்னும் அடுத்தடுத்து வந்த நாட்களும் பயனள்ளதாகவே முன்னேறிக் கொண்டிருந்தன. அவ்விரு வழிகாட்டிகளும் (முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப், முஹம்மது பின் ஸவூது) நஜ்துக்கு அருகாமையிலிருந்த தர்இய்யா என்னும் ஊரை தங்களின் ஆட்சிக்குரிய பகுதியாக உருவாக்கினர். வெளியுறவுத்துறை அமைச்சகம் மனம் திறந்து அவர்களுக்கு பொருளுதவியும் செய்து வந்தது.
 
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் திட்டப்படி அவர்களின் ஆட்சியை பலப்படுத்துவதற்காக சில அடிமைகளை விலைக்கு வாங்க வேண்டியிருந்தது. அவ்வாறு வாங்கப்பட்ட அடிமைகள் அனைவருமெ வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆட்களாகவே இருந்தனர். அவர்கள் அரபிமொழியில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களாகவும், காடுகள் போன்ற பகுதிகளில் போர் புரிவதில் நன்கு பழக்கமுடையவர்களாகவும் இருந்தனர். இவையனைத்தையம் எமது ஆட்சியாளர்களே ஏற்பாடு செய்து தந்தனர்.
 
பதினோரு நபர்களைக் கொண்ட அக்கூட்டத்தினர்ககு இஸ்லாமிய ஆட்சியின் மார்க்கம் மற்றும் அரசியல் பாதைகளில் நான் திட்டங்களை வகுத்துத் தந்துதேன். அவர்களும் வகுத்ததுத் தரப்பட்ட அப்பாதைகளில் மேலம் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தனர். இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். அது அவர்களிருவருக்கும் இடையே அவ்வப்போது சிற்சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அந்த இடத்திலேயே உடனுக்குடன் தீர்க்கப்பட்டன. இதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட வேண்டிய அவசியமும் நேர்ந்ததில்லை.
 
 நாங்கள் நஜ்துடைய அக்கம் பக்கமிருந்த பெண்களை மணமுடித்துக்கொண்டோம். நாங்கள் இதில் பெருமையாக நினைப்பது, முஸ்லிம் பெண்களிடம் நேசம், கலப்பற்ற நிலை, கணவனுக்காக வாழ்தல் போன்றவற்றை அவர்களிடம் கண்டு உண்மையில் நாங்கள் பிரமித்தே போய் விட்டோம். நாங்கள் அப்புதிய உறவின் மூலம் நஜ்து வாசிகளுடன் இணைப்பை இன்னும் இறுக்கமாக்கிக் கொண்டோம்.
 
இப்போது நாங்கள் அவர்களோடு ஏற்படுத்திக்கொண்ட உறவின் உச்சநிலையில் இருக்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமை பீடம் அரபு தேசம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதன் இலக்கை எய்தி விட்டது. ஒருவேளை விரும்பத்தகாத சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் வெகுவிரைவாக இஸ்லாமிய மண்ணில் தூவப்பட்டுள்ள இந்த விதைகள் வேறுவேறு  மரக்கிளைகளுக்குத் தாவிவிடும். அன்றி எங்களுக்கு அவர்கள் மூலம் நாங்கள் விரும்பிய வெற்றிக்கனியையும் பெற்று விட்டோம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more " "

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates