Elegant Rose - Diagonal Resize 2 மே 2011 ~ TAMIL ISLAM

வியாழன், 19 மே, 2011

நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்


Tableeg Jamath in the Light of Hadeed-நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்
மூலம்: அல்லாமா அஷ்ஷெய்கு அர்ஷத்துல் காதிரி ரலியல்லாஹு அன்ஹு
தமிழில்: மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஸெய்யிது வஜீஹுன்னகீ சகாப் லதீபி ஷத்தாரி அவர்கள்.
1.இதுவரை வந்த நபிமொழியின் ஒளியில்
2. நபிமொழி ஒளியில் சில அடையாளங்கள்
3. உங்கள் சிந்தனைக்கு ஒரு சில கேள்விகள்
4. அறிவுணர்த்தும் அருள் மருந்து
5. மனசாட்சியின் இறுதித் தீர்ப்பு
6.இறுதியாக ஒரு வார்த்தை

இப்பூ மண்டலத்தில் மறைந்துள்ள ஞானங்களின் கருவூலப் பொக்கிஷம் அண்ணல் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்வில் தமக்குப் பின் மார்க்கத்தின் பெயரால் உதயமாகப்போகும் குழப்பங்கள் அனைத்தையம் ஒவ்வொன்றாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது தோழர் பெருமக்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் விழிப்புணர்ச்சி பெறும்பொருட்டு எடுத்தியம்பிச் சென்றுள்ளனர். அவற்றில், 'நஜ்த்' என்னும் பிரதேசப் பகுதியிலிருந்து உதயமான 'வஹ்ஹாபியக் குழப்பம்' பற்றிய ஹதீஸிலிருந்து துவங்கி வரிசை கிரமமப்படி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஹதீஸ் நிர் ஒன்று:
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,
ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.
(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)
மேற்கண்ட ஹதீஸில் வரும் வாக்கியமான 'கர்னுஷ் ஷைத்தான்' என்பதற்கு பழக்கத்தில் 'ஷைத்தானின் கொம்பு' என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரால் எழுதப்பட்டுள்ள 'மிஸ்பாஹுல் லுஹாத்' என்னம் அரபி மொழி அகராதி பற்றிய நூலில், 'கர்னுஷ; ஷைத்தான்' என்பதற்கு 'ஷைத்தானின் அபிப்பிராயத்திற்கு கட்டுப்பட்டவன்' என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் இதன்மூலம் நாம் விளங்கிக்கொள்வது யாதெனில், 'நஜ்து தேசம்' குழப்பங்களின் உதயஸ்தானம் என்பதாம். காரணம், நபிகளாரின் நல்லாசியாகிய 'துஆ' அத்தேசத்திற்குக் கிடைக்காததே. அதுவே அதற்குரிய சான்றாகும். அங்கு தீய செயல்களும், துன்பங்களும்தான் தலை தூக்கும். அங்கிருந்து ஓர் நல்ல செய்தியை எதிர்பார்ப்பதானது இறைக்கட்டளையாகிய விதியுடன் மோதுவதற்கு ஒப்பான ஒன்றாகும்.
அப்பிரதேசத்திலிருந்து ஷைத்தானின் அபிப்பிராயத்திற்குக் கட்டுப்பட்ட எவனாவது ஒருவன் நிச்சயம் வெளிப்பட்டே தீருவான் என்பதோடன்றி, எவ்வாறு அதிகாலையில் உதயமாகம் சூரியனின் முதல் கதிரை 'கர்னுஷ; ஷம்ஸு' என்று அரபியில் சொல்லப்படுகிறதோ, அவ்வாறே 'கர்னுஷ் ஷைத்தான்' என்பதற்கு பிதனாவாகிய குழப்பம் நஜ்து தேசத்திலிருந்து உதயமாகி உலக முழுவதையும் பரவிப்போய் விடும் என்பதேயாகும்.
புரிய வேண்டிய பொருள்:
பூகோள அமைப்பில் பூமியின் வரைபடத்தை உங்கள் முன்னால் வைத்து பார்ப்பீர்களேயானால் மதீனா மாநகருக்கு நேர் கிழக்கே நஜ்து பிரதேசம் உள்ளதைக் காணலாம். இதில் அண்ணல் நபி எந்த அரபிச் சொல்லைக் (கர்ன்) கொண்டு நஜ்து தேசத்தை சுட்டிக் காட்டினார்களோ, அந்த (கர்ன், உதயம்) வார்த்தையே ஒரு உண்மை விசுவாசியான முஃமின் விழித்தெழப் போதுமான ஒன்றாகும். இந்த 'கர்ன்' என்ற வார்த்தையின் மூலமாக நபிகளாhட, நஜ்து தேசத்திலிருந்து உதயமாகும் 'குழப்பம்' மக்களை சின்னாபின்னமாகச் சிதறடித்துவிடும் என்று அறிவுறுத்துகின்றனர். இனி அதுபற்றிய ஹதீஸ்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள்.
ஹதீஸ் நிர் இரண்டு:
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபிகளார் அன்னை ஹப்ஸா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லக் கதவருகே நின்று கொண்டு அங்கிருந்தவாறே தமது புனிதமிகு கரத்தை 'கிழக்குத் திசை பக்கம்' சுட்டிக்காட்டி பித்னா(குழப்பங்க)ளின் இடம் இதுதான். இங்கிருந்துதான் iஷத்தானின் கொம்பு வெளியாகும் என்று கூறினர்.
(அறிவிப்பாளர் கூறுகிறார், நபிகளார் இவ்வார்த்தையை இரு முறையோ அல்லது மும்முறையோ கூறினர் என்று அறிவிக்கிறார்)
(ஆதாரம்: முஸ்லிம், பாகம் 2, பக்கம் 394)
ஹதீஸ் நிர் மூன்று:
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபிகளார் கிழக்குத் திசை நோக்கி திரும்பி நின்று கொண்டு, குழப்பம் இங்கிருந்து உண்டாகும்…. குழப்பம் இங்கிருந்து உண்டாகும்… குழப்பம் இங்கிருந்து உண்டாகும். இங்கிருந்துதான் iஷத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினர்.
(ஆதாரம்: முஸ்லிம், பாகம் 2 பக்கம் 393)
ஹதீஸ் நிர் நான்கு:
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபிகளார் ஒருமுறை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இல்லத்தை விட்டும் வெளியே வந்து கிழக்குத் திசைநோக்கி தமது கரத்தை சுட்டிக்காட்டி, குப்ரின் மையம் இதுதான். இங்கிருந்துதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று கூறினர்.
(ஆதாரம்: முஸ்லிம் பாகம் 2, பக்கம் 94)
கொஞ்சம் சிந்தியுங்கள்! மேற்கண்ட மூன்று ஹதீஸ்களும் கிழக்குத் திசை பற்றியே சுட்டிக் காட்டுகின்றன. அந்த கிழக்குத் திசை என்னும் வார்த்தையானது நஜ்து தேசத்தைத் தான் குறிப்புக் காட்டுகின்றது என்பதை முதல் ஹதீஸில் நஜ்து வாசி நபிகளாரிடம் தமது நாட்டுக்கு அபிவிருத்தி வேண்டி கேட்ட வாக்கியம் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். ஆகையால் நபிகளார் குறிப்பிட்ட குழப்பமும், iஷத்தானின் கொம்பு உதயமாதலம் நஜ்து தேசத்திலிருந்துதான் என்பதை மிகத் தெளிவாக நன்கு தெரிந்து கொள்ளலாம்.
ஹதீஸ் நிர் ஐந்து:
அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….
சிலர் கிழக்குத் திசையிலிருந்து உதயமாவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழியை விட்டும் கீழே இறங்காது. எவ்வாறு அம்பானது வில்லை விட்டும் வெளியேறி விடுமே, அவ்வாறு அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியேறிவிடுவார்கள். இன்னும் வில்லை விட்டுப் புறப்பட்ட அம்பு எவ்வாறு திரும்ப வில்லுக்கு வந்து சேராதோ, அவ்வாறு இவர்கள் தீனின் (மார்க்கத்தின்) பக்கம் திரும்ப மாட்டார்கள். அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டையடிப்பதாகும்.
(ஆதாரம்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 49, மிஸ்ர் பிரிண்ட்)
ஹதீஸ் நிர் ஆறு:
அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….
சிலபேர் கிழக்குத் திசையிலிருந்து வெளிவருவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் குர்ஆன் அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. அவர்களின் ஒரு ஜமாஅத் (கூட்டம்) முடிந்து விட்டால் பின்னர் அங்கிருந்து உடனே மறு ஜமாஅத் (கூட்டம்) உதயமாகும். இவர்களின் கடைசிக் கூட்டம் தஜ்ஜாலுடன் சேர்ந்து கொள்ளும்.
(ஆதாரம்: அத்துரருஸ் ஸனிய்யா, பக்கம் 50, மிஸ்ர் பிரிண்ட்)
ஒரு புதிர்!
அண்ணல் நபிகளார் அறிவித்த குழப்பமும், ஷைத்தானின் அபிப்பிராயத்திற்கு கட்டுப்படும் நிலை வாய்ந்த அக்கூட்டம் நஜ்து தேசத்தின் நாதியற்றுப்போன பனு ஹனீபாவின் கோத்திரத்திலிருந்துதான் (வம்சம்) உதயமாயிற்று. அந்தப் பூமியில்தான் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளும், குழப்பங்களும் உருவெடுத்தன. இதைப் பற்றி மௌலவி மஸ்வூத் ஆலிம் நத்வி என்பவர் தமது 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்' என்னும் நூலின் ஓரக்குறிப்பில் கூறுகிறார்,
நஜ்து தேசத்தின் புகழ் வாய்ந்த ஒரு ஸ்தலம் 'அல்ஹாரிஸ்' என்னும் இடமாகும். அதன் தலைநகரம் 'ரியாத்' ஆகும். இன்று ரியாத் தான் சவூதி அரேபியாவின் தலைநகராக இருக்கிறது. அல் ஹாரிஸ் என்னும் அவ்விடத்தை 'யமாமா மலை' என்றும் அழைக்கின்றனர். உண்மையில் இது ஒரு மலையடிவாரத்தின் பெயராகும். இதன் சுற்றுப்புற நலத்தை ஹனீபா யமாமா என்றழைக்கின்றனர். iஷகுல் இஸ்லாம்(முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப்) இங்கு வைத்து 'உயைனா' என்னும்மிடத்தில்தான் பிறந்தார். 'தர்அய்னா' என்னும் இடத்தில்தான் தமது வஹ்ஹாபிய இயக்கத்தை துவங்'கினார். இவ்விரு இடங்களும் இங்குள்ள மலையடிவாரத்தில்தான் உள்ளன.
(ஆதாரம்: ஹாஷியா இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்து, பக்கம் 16)
மனதை ரணமாக்கி விட்ட வரலாற்றுச் சோகக்கரைபடிந்திட்ட ஏடாக துவக்கத்திலிருந்தே பனூ ஹனீபாவின் வம்சம் தூக்கி எறியப்பட்டதாவும், நபிகளாரின் நல்லாசியாகிய துஆவுக்கு அருகதையற்றதாகவும் இருந்து வந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த வம்சத்தை பற்றி ஹதீஸில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹதீஸ் நிர் ஏழு:
அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது 'அத்துரருஸ்ஸனிய்யா' என்னும் நூலில் நபி மொழி ஒன்றைக் குறிக்கின்றனர். அதாவது….
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் நபித்துவம் அறிவிக்கப்பட்ட துவக்க காலத்தில் ஹஜ்ஜுடைய காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் சென்று புனித இஸ்லாத்தின் மேன்மை பற்றி எடுத்துக் கூறி அழைத்து வந்தேன். அப்போதெல்லாம் 'பனூ ஹனீபாவின் வம்சத்தாரிடமிருந்து வந்த விதண்டாவாதங்களையும், வெறுப்பு சொற்களையும் போன்று வேறு யாருமே என்னிடம் வாதம் செய்ததில்லை என கூறுகின்றனர்.
(ஆதாரம்: அர்துர்ரருஸ் னிய்யா பக்கம் 52)
குறிப்பு: மௌலானா மஸ்வூத் ஆலிம் அவர்களின் நஜ்து தேசம் பற்றிய விளக்கவுரையில் ஹனீபாவின் மறுபெயர் 'யமாமா' என்பதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.
ஹதீஸ் நிர் எட்டு:
ஹஜ்ரத் இம்ரான் இப்னு ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றர்,
மூன்று வம்சத்தவர் எனது அழைப்பை இறைவனின் அழைப்பு வரும்வரை விரும்பவில்லை. அவர்கள் 'சகீப்' கோத்திரத்தார், 'பனூ ஹனீபா' கோத்திரத்தார், 'பனூ உமையா கோத்திரத்தார்' என்று அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றனர்.
(ஆதாரம்: திர்மிதீ)
துவக்கத்திலிருந்து எட்டாவது வரை உள்ள ஹதீஸ்களில் நஜ்துப் பிரதேசத்திலிருந்து உதயமாகவிருக்கும் குழப்பங்களைப் பற்றி தெளிவுபடுத்திக் காட்ட பல கோணங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள ஆணித்தரமான ஹதீஸ்களது அறிவிப்புகள் நபிகள் பிரான் 'பனூ ஹனீபா' என்னும் கோத்திரத்தாரை விரும்பவில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்களாய் அமைந்திருப்பதுடன், அவர்களின் நடைமுறைப் பற்றியும் அவர்களது தலைவர்கள் பற்றியும் இனி அடுத்தடுத்து வரும் ஹதீஸ்கள் வாயிலாகப் படித்துப் பாருங்கள்.
ஹதீஸ் நிர் ஒன்பது:
ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்றது, 'ஒரு முறை நாங்கள் நபிகளாரைச் சூழ அமர்ந்திருந்துதோம். நாயகமவர்கள் கனீமத் (போரில் கிட்டிய) பொருட்களை பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 'பனூ தமீம்' உடைய கோத்திரத்தைச் சேர்ந்த 'துல் குவைஸரா' என்பவன் 'முஹம்மதே! நீதத்துடன் பங்கீடு செய்யுங்கள்' என்று கூற, இது கேட்ட நபிகளார்,……நீ செல்லும் அழிவுப் பாதை குறித்து நான் வருத்தப்படுகிறேன். நானே நீதியாக நடந்து கொள்ளாவிடில் நீதத்தை வேறு யார்தான் கடைபிடிப்பர்? நான் நீதமுள்ளோனாக நடந்திருக்காவிடில் நீ இந்நேரம் இக்கட்டில் சிக்கி கஷ்டத்திலிருப்பாய். இதைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெகுண்டெழுந்து, …… இறைவனின் திருத்தூதரே, அனுமதி தாருங்கள்! நான் அவனது தலையை சீவிக் கொன்று விடுகிறேன் என்று கேட்க, அதற்கு நபிகளார், …….உமரே அவனை விட்டுவிடுங்கள். இவனைப் போன்று நோக்கங்கொண்ட இன்னும் பவர் இவனிடையே உள்ளனர். அவர்களது தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கண்டு நீங்கள் உஙகளது தொழுகை, நோன்பையெல்லாம் மிகமிக அற்பமாக எண்ணுவீர்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழியை விட்டும் கீழே இறங்காது. அநேக வகைப்பட்ட நல்ல அமல்கள் அவர்களிடையே காணப்படும். ஆனால் அவர்கள் வில்லிலிருந்து வெளியேறிச் செல்லும் அம்பைப் போன்று மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்று கூறினர்.
(ஆதாரம்: புகாரி, பாகம் 2, பக்கம் 1024)
ஹதீஸ் நிர் பத்து:
மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்படும் சம்பவத்தை மற்றோர் ஹதீஸில் இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது. அதாவது,……
ஒருவன் அண்ணல் நபிகளாரின் முன் வந்தான். அவனது கண்கள் குழி விழுந்திருந்தன. அகலமான நெற்றியும், தாடி நீண்டு அடர்த்தியாகவும் இருந்தது. கன்னங்கள் உறுதியாயிருந்தன. தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. அவன் நபிகளாரை நோக்கி ஓ முஹம்மதே! இறைவனது வாக்குக்கு அஞ்சிக் கொள்ளும் என்றான். இது கேட்ட நபிகளர், நானே இறைவனது வாக்குக்கு அஞ்சாவிடில் வேறு யார்தான் அவன் வாக்கை நிறைவேற்றுவார். இறைவனே என்னை இப்புவியிலுள்ள அனைவரையும் விட அபிமானியாக்கியுள்ளான். நீ என்னை அபிமானியென நினைக்க வில்லையா? இதனிடையே நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து நபிகளாரிடம் அவனை வெட்டிவிட அனுமதி கேட்க, அவன் அங்கிருந்து சென்று விட்டான். பின்னர் நபிகளார் தம் தோழர்களை நோக்கி,…. இவன் சந்ததியில் ஒரு கூட்டம் தோன்றும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களி; தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது. இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லும் அம்பைப்போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விடடும் வெளியாகி விடுவார்கள். அவர்கள் முஸ்லிம்களை வெட்டுவார்கள். விக்கிரக தொழும்பர்களை விட்டுவிடுவார்கள் என்று கூறினர்.
ஹதீஸ் நிர் பதினொன்று:
மேற்கண்ட ஹதீஸில் உள்ள அதே சம்பவத்தை ஷரீக் இப்னு வஹ்ஹாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது நபிகளார் தம் தோழர்களை நோக்கி,….
இறுதி காலத்தில் ஒரு கூட்டம் வெளிப்படும். இவனும் அக்கூட்டத்தைச் சார்ந்தவனே. அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது. இலக்கை நோக்கிச் செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியாகி விடுவார்கள். அவர்களின் முக்கியமான அடையாளம் மொட்டையடிப்பதாகும். அவர்கள்; தொடர் கூட்டமாக கிளம்புவார்கள். அப்படியே அவர்களின் கடைசிக் கூட்டம் தஜ்ஜாலுடன் சென்று இணையும். நீங்கள் அவர்களை சந்தித்தால் உங்களை விட கீழ்த்தரமான நடத்தையுள்ளோராக அவர்கள் இருப்பார்கள் என்று கூறினர்.
(ஆதாரம்: மிஷ்காத் பக்கம் 309)
ஹதீஸ் நிர் பன்னிரெண்டு:
ஹஜ்ரத் அபூ ஸயீதுனில் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எனது உம்மத்தில் பிரிவினையும், வேற்றுமையும் எழுதப்பட்ட ஒன்றாகும். அதன்படி ஒரு கூட்டம் வெளியாகும். அவர்களின் வெளித்தோற்றம் மற்றவர்களை கவரும். ஆற்றல் நிறைந்த அவர்களது பேச்சுக்கள் கேட்போருக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால் அவர்களின் நடத்தை கெட்டவைகளாகயிருக்கும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களது தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. வில்லை விட்டுப் பாய்ந்து செல்லும் அம்பைப் போல் அவர்கள் தீனை(மார்க்கத்தை) விட்டு வெளியேறிவிடுவார்கள். எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு வில்லுக்குத் திரும்பாதோ, அவ்வாறே தீனின் பால் திரும்புவது அவர்களுக்கு சாத்தியமாகாது. குணத்திலும், செய்கையிலும் மிக மோசமானவர்களாயிருப்பார்கள்.அவர்கள் ஜனங்களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் தீனுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. யார் அவர்களுடன் போர் புரிவார்களோ, அவர்கள் இறைவனுடன் மிக நெருங்கியவர்களாகயிருப்பார்கள் என்று நபிகளார் சொல்ல அதற்கு தோழர்கள்,….. நாயகமே! அவர்களின் முக்கிய அடையாளமென்ன? என்று வினவிட,…. அதற்கு நபிகளார் அவர்களின் அடையாளம் மொட்டையடிப்பதாகும் என்று நவின்றனர்.
(ஆதாரம்: மிஷ்காத், பக்கம் 308)
ஹதீஸ் நிர் பதிமூன்று:
இந்த ஹதீஸை ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர், இந்த ஹதீஸிலுள்ள ஓர் விசேசம் யாதெனில், இதனை அறிவிக்கும் ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! சொல்கிறேன். வானத்திலிருந்து பூமியைநோக்கி குதிப்பது எனக்கு சுலபமான ஒன்று. ஆனால் அண்ணல் நபியவர்கள் சொன்னதாக ஏதாவதொன்றை அவர்கள்பால் இட்டுக்கட்டுதல் அதைவிட எனக்குக் கடினமான ஒன்றாகும் எனக்கூறி முடித்தபின் கீழ்வரும் ஹதீஸை அறிவிக்கின்றனர்.
நபிகளார் நவின்றதை நான் செவியேற்றுள்ளேன், இறுதிகாலத்தில் சிறுவர்களும், அறிவற்றவர்களும் இணைந்த கூட்டமொன்று வெளியாகும். வெளித்தோற்றத்தில் நல்லதையே கூறுவார்கள். ஆனால் ஈமான் அவர்களின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. இலக்கை நோக்கிப் பாயும் அம்பைப் போல் அவர்கள் தீனை (மார்க்கத்தை) விட்டும் வெளியேறிவிடுவார்கள்.
(ஆதாரம்: புகாரி பாகம் 2, பக்கம் 1024)
ஹதீஸ் நிர் பதினான்கு:
ஹஜ்ரத் அபூநயீம் அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஹுல்யா என்னும் நூலில் இமாம் பாஹில் ரஹிமஹீல்லாஹ்வைக் கொண்டு கீழ்வரும் ஹதீஸை அறிவிக்கின்றனர்,
உன் உம்மத்தில் இறுதிகாலத்தில் புழுப் பூச்சிகளைப் போல் பிரிவுகள் உண்டாகும். உங்களில் எவர் அக்காலத்தை அடைவீரோ, அவர்கள் அவர்களை விட்டுத் தூர விலகியிருக்க துஆ கேட்டு இறைஞ்சுங்கள் என நபிகளார் நவின்றனர்.
(ஆதாரம்: ஹுல்யா)
மேற்கண்ட ஹதீஸுடன் கீழ்காணும் இந்த ஹதீஸையும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரஹிமஹீல்லாஹ் அவர்கள் அறிவிக்கின்றனர்,
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களை நோக்கி, ஓ! ஜனங்களே! இப்படியும் ஒரு காலம் வரும். மக்கள் பள்ளிவாசல்களில் உலகப் பேச்சுக்களை பேசுவார்கள். அத்தகைய ஓர் காலம் வரும்போது அவர்கள் மத்தியிலே நீங்கள் அமராதீர்கள். அல்லாஹ் அவர்களை விரும்ப மாட்டான் என்று கூறினர்.
ஹதீஸ் நிர் பதினைந்து:
முஹத்திஸுல் கபீர் இமாம் அபூலைலா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொண்டு தமது இப்ரீஸ் என்னும் நூலில் அறிவிக்கின்றனர்,
மதீனாவில் அதிகமான இறையச்சமும், மார்க்கத்தின் பால் மிகத் தீவிரமான பேணுதலும் கொண்ட இளைஞன் ஒருவன் இருந்து வந்தான். ஒரு நாள் அவனைப் பற்றி நபிகளாரிடம் கூறினோம். அவன் யார் என்பது நபிகளாருக்குத் தெளிவாகவில்லை. பின்னர் அவனைப் பற்றிய அடையாளங்களும், தன்மைகளும் கூறப்பட்டும் நபிகளார் யூகிக்கவில்லை. பிரிதொரு நாள் எதிரில் அவன் வந்தபோது, எந்த நிமிஷம் நாங்கள் அவனைக் கண்டோமோ, உடனே நபிகளாரிடம், யாரஸூலல்லாஹ்! இவனைப் பற்றித்தான் அன்றொரு நாள் நாங்கள் சிலாகித்துச் சொன்னோம் என்று கூற…… அவனைப் பார்த்த நபிகளார்,…….iஷத்தானின் Nசுஷ;டைகளை அவன் முகத்தில் நான் பார்க்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அருகில் வந்த அவன் நபிகளாரை நோக்கி ஸலாம் சொல்லிட, அதற்கு நபிகளார் அவனைப் பார்த்து,…. தற்போது இங்கு என்னை விடச் சிறந்தவர் யாருமில்லையென உன் மனதில் நீ நினைக்கின்றாய் அல்லவா? என்று வினவ, அதற்கவன் ஆம், என்று பதிலளித்து விட்டு பள்ளிக்குள் சென்று விட்டான்.
அதன்பின் நபிகளார் தம் தோழர்களை நோக்கி, உங்களில் அவனை வெட்டுபவர் யார்? என்று கேட்க,…. ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்' எழுந்து, நான் வெட்டுகிறேன் என்று கூறிவிட்டு, அவனை கொன்றுவிடும் நோக்கத்துடன் பள்ளிக்குள் சென்றபோது, அவன் தொழுது கொண்டிருப்பதைக் கண்டு வெட்டக் கூடாதென நபிகளார் நமக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்களே, என்றெண்ணியவர்களாக அவர்கள் திரும்பி வந்து விட்டனர். பின்னர் மீண்டும் நபிகளார் தம் தோழர்களை நோக்கி, உங்களை அவனை வெட்டுபவர் யார்? என்று கேட்க, ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து நாயகமே! நான் அவனை வெட்டுகிறேன் என்று கூறிவிட்டு, அவனை கொல்லும் நோக்கத்துடன் பள்ளிக்குள் சென்றபோது,… அவன் ஸஜ்தாவில் இருப்பதைக் கண்டு அவர்களும் திரும்பி வந்து விட, ….இறுதியாக ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனை நான் வெட்டுகிறேன் என்று கிளம்பியபோது,….. நபிகளார், அலியைப் பார்த்து, ….. அலியே! நீர் அவனை நிச்சயம் வெட்டிவிடுவீர். அவன் உமக்கு கிடைத்துவிட்டால்,…. என்று கூறினர். அலீயவர்கள் பள்ளிக்குள் சென்று பார்த்தபோது, அவன் அங்கிருந்து போய் விட்டிருந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பி வந்த அலீயவர்களைப் பார்த்து,….அலியே! நீர் அவனை கொன்'றிருந்தால் என் உம்மத்தில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை கொன்றொழிக்கப்பட்டிருக்கும். எனது உம்மத்தில் தோன்றவிருக்கும் குழப்பங்களின் துவக்கமும், இறுதியும் அவன்தான் என்று கூறினர்.
(ஆதாரம்: இப்ரீஸ், பக்கம் 277)
இதுவரை வந்த நபிமொழியின் ஒளியில்,…
இதுவரை உங்கள் முன் நான் உலகக் குழப்பங்களின் வித்தை உடைத்துத் தோலுரித்துக் காட்டும்படியான நபிகள் நாதரின் வாய்மொழியான பதினைந்து ஹதீஸ்களை எடுத்து வைத்திருக்கிறேன். அருள் கூர்ந்து அவற்றைத் திரும்ப ஒருமுறை கவனமாகப் படியுங்கள். அவையனைத்தும் நபிகளாருக்குப்பின் இவ்வையகத்தில் உதயமாகப் போகும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள், குழப்பங்கள், வேடதாரிகளின் வேஷங்கள், மார்க்கத்தின்பெயரால் நடக்கப்போகும் சர்;ச்சைகள், சண்டைகள், கருத்து வேறுபாடுகள், பிளவுகள் அனைத்தும் நபிமொழியின் ஒளியில் தெளிவாக்கப்பட்டுள்ளன.
ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கே மறையும் சூரியன் ஒருவேளை கிழக்கில் மறைந்தாலும் மறைந்து விடலாம். ஆனால் நாயகத்தின் மணிவாக்கு ஒருக்காலும் பொய்க்காது. இறைவன் மீதாணையிட்டுச் சொல்கிறேன். இதுவரை விபரிக்கப்பட்டுவந்த நபிமொழிகளின் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டிருந்தால் தீர்ப்பு செய்யும் தராசை உங்கள் கரத்தில் ஏந்துங்கள். நீதியென்னும் ஒளியின் வெளிச்சத்தைக் கொண்டு உலகின் நான்கு புறங்களிலும் உங்களின் விசாலமான அறிவைச் செலுத்திப் பாருங்கள். இறுதி காலத்தில் வரும் எந்தக் கூட்டத்தைப் பற்றி நபிகளார் இத்துணை அடையாளங்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்திச் சொன்னார்கள்? அண்ணல் நபிகளார் சுட்டிக் காட்டிய அடையாளங்களைக் கொண்ட அக்கூட்டம் உலகில் இன்று எங்கே இருக்கிறது?
இறைவனின் திருவருளால் ஹதீஸ்களாகிய அறிவிப்பு அனைத்திலும் பல்வேறு வகையான அடையாளங்களும் ஒன்றுவிடாமல் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வடையாளச் சின்னங்களை தாங்கியுள்ளோர் நபிமொழியின் ஒளி முன்னே சிக்குண்டிருக்கின்றனர். தீனை (மார்க்கத்தை)யும், ஈமானை(விசுவாசத்தை)யும், சுக்கல் நூறாக நொறுக்கி தமது கால்களுக்கு கீழே போட்டுப் புதைத்துக் கொண்டுள்ள அவர்களை நாம் அறிந்து கொள்வதற்காகவே அவர்கள் பற்றிய அடையாளங்கள் அனைத்தையம அதியற்புதமாகக் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. நாயகத் திருமேனியின் நல்லாசியைத் தேடும் யாராயிருப்பினும் அவர் தனது சுயநலமொன்றை மட்டும் கருத்தில் கொண்டு இக்குழப்பங்களை எல்லாம் கண்மு; காணாது போன்று செல்ல மாட்டாரென நான் திண்ணமாக நம்புகிறேன்.
நான் அறுதியிட்டு இறுதியாகச் சொல்கிறேன். மேற்கண்ட பதினைந்து ஹதீஸ்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு கோர்வையாக கோர்த்து ஒன்றுபடுத்தினால் சரித்திரச் சான்றுகளாலும், ஒன்று கண்முன்னே நடக்கும் காட்சிகளாலும் நஜ்து கூட்டமென வர்ணிக்கப்படும் 'வஹ்ஹாபிய இயக்கத்தின்' உருவமும், 'தப்லீக் ஜமாஅத்' என்று அழைக்கப்படுவோரின் உருவமும் அசாத்திய ஒற்றுமை வாய்ந்ததாயிருப்பதை நீங்கள் காணலாம்.
சிரமம் பாராது எனது எழுதுகோலுக்கும், அது வடிவமைக்கும் வார்த்தை கோலத்திலிருக்கும் உங்களின் பார்வையை அகற்றாமல் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். நான் ஹதீஸ்களது குவியல்களிலிருந்து ஒவ்வொரு அடையாளமாக எடுத்து வைத்துக் கொண்டே வருகிறேன். நீங்கள் அவற்றை வரிசையாக தொடுத்து சேகரித்துக் கொண்டே வாருங்கள். ஒரு சில அடையாளங்களை கோர்வை செய்யும்போதே தப்லீக் ஜமாஅத்தின் தோற்றம் அவ்வடையாளங்களுக்குரிய ஒன்றாக உங்கள் முன் காட்சி தரவில்லையெனில், என் எழுத்தின் மீது நீங்கள் வைத்;துள்ள உங்களது நம்பிக்கை எனும் பார்வையை அகற்றி விலகிக் கொள்ளுங்கள்.
நபிமொழி ஒளியில் சில அடையாளங்கள்:
முதலாம் ஹதீதிலிருந்து எட்டாவது ஹதீஸ்வரை குப்ரு (இறை நிராகரிப்பும், ஷைத்தானின் பித்னாவாகிய குழப்பத்தின் ஆட்சியும் மதீனாவின் கிழக்குத் திசையிலுள்ள நஜ்து தேசத்திலிருந்துதான் உதயமாகும். அங்கிருந்து நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என்று சொல்லும் ஒரு கூட்டம் உருவாகும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அது அவர்களின் தொண்டைக்குழிக்குக் கீழே இறங்காது. அக்கூட்டம் தீனி(மார்க்கத்தி)ன் பாலும், குர்ஆனின் பக்கமும் மக்களை அழைக்கும். ஆனால் அக்கூட்டத்திற்கு மார்க்கத்தைப் பற்றிய அறிவு அறவே இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இனி இப்போதுள்ள நடைமுறைகளை உற்று நோக்கினால் இத்தனை அடையாளங்களும் குறிப்பிடப்பட்ட அக்கூட்டம் என்பது 'தப்லீக் ஜமாஅத'தைத் தவிர வேறு எந்தக் கூட்டமாக இருக்க முடியும்? அதன் ஒரு முனை டெல்லியில் இருக்கிறதென்றால் அதன் மறுகோடி நஜ்து தேசத்தின் தலை நகரான 'ரியாத்'துடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய ஹதீஸ்களில் 'துல்குவைஸரா' என்னும் முனாபிக்கை (நயவஞ்சகனை) பற்றி விபரிக்கபட்டுள்ளதோ, அவன் 'பனூ தமீம்' உடைய வம்சக் கிளையைச் சார்ந்தவன். இறுதிக் காலத்தில் தோன்றும் கூட்டத்தார்கள் அவனது சந்ததியினரே. இதைப் பற்றி வரலாற்று ஆசிரியர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.
அல்லாமா ஜைனீ தஹ்லான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது நூலில் …. அதியற்புதம் வாய்ந்த ஓர் ஒற்றுமை என்னவெனில், 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் வம்சமானது 'பனூ தமீமுடைய' வம்சத்தை சார்ந்த ஒன்று என்பது வெள்ளிடைமலை. ஆகையால், அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ துல்குவைஸரா தமீமி என்பவனது குடும்பத்தில்தான் பிறந்தான் என்பது ஏற்புடைய கருத்து மட்டுமின்றி, அறிவித்த நபிமொழியே அதற்குப் போதுமான சான்றாகும்.
(ஆதாரம்: அததுரருஸ் ஸனிய்யா, பக்கம் 51)
இதன்றி இந்த ஹதீஸ் காரிஜிய்யாக்கள் என்ற ஓர் பிரிவாரைப் பற்றி சொல்லப்பட்ட ஒன்றா என்று பார்த்தால், இதைப் பற்றி 'அஷ;அத்துல் லம்ஆத்' என்னும் தமது நூலில் மௌலவி அப்துல் ஹக் முஹத்திஸ் திஹ்லவி' அவர்கள்….
அவர்க(காரிஜிய்யாக்க)ளில் பனூதமீமுடைய வம்சத்தைச் சார்ந்த ஒருவர் கூட இல்லை என்று கூறுகின்றனர்.
(ஆதாரம்: அஷ்அத்துல் லம்ஆத் பக்கம் 535)
எனவே ஹதீஸில் குறிப்புக் காட்டப்படும் கூட்டம் நஜ்திகளின் கூட்டமான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கூட்டம்தான் என்பது உண்மையிலும் மிகப்பட்டவர்த்தனமான உண்மையாகும்.
3. பனிரெண்டாம் ஹதீஸில் இனங்காட்டப்படும் அடையாளங்களில் ஒன்றான 'அவர்கள் ஜனங்'களை தீனின் பால் அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மார்க்கத்தில் ஒரு சிறிதளவு கூட தொடர்பு இருக்காது' என்னும் இவ்வடையாளத்தை தக்க ஆதாரத்தோடு தெரிந்து கொள்ள வேண்டுமாயின்…..தப்லீக் ஜமாஅத்தில் ஹல்கா, தர்ஸே குர்ஆன், மற்றும் அவர்கள் நடத்தும்' இஜ்திமா போன்றவற்றை சென்று பாருங்கள். ஜனங்களை தீனின்பாலும், குர்ஆனின் பக்கமும் தப்லீக் ஜமாஅத்தினர் அழைக்கும் சப்தம் அவர்களின்தொண்டையை வரண்டு போகச் செய்து விட்டன. அவர்களின் நாக்குகள் வரண்டு விட்டன. ஆனால் இதையே சற்று வேறு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் இவைகளனைத்தும் மார்க்கத்தில் குழப்பங்களையும், பிளவையும் தோற்றுவிப்பதேயாகும்.
4. பன்னிரெண்டு, பதிமூன்றாவது ஹதீஸ்களில் வரும் அடையாளக் குறிப்பில் அவர்கள் வாய்ப்பேச்சிலத்தான் வீரர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் அந்தரங்களம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாயிருக்கும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அவர்கள் வாய்ப்பேச்சில் எவ்வளவு நேசம் கொண்ட, மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களாய், பண்பாளர்களாய் காட்சித் தருகின்றனர். அந்தோ!…. தங்களின் மனத்துவேஷத்தால் எத்தனை அப்பாவி முஸ்லிம்களது நல்ல நல்ல அகீதாவாகிய கொள்கைகளையெல்லாம் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள். தௌஹீத் என்ற பெயரில் போர்வையை போர்த்திக் கொண்டு அண்ணல் நபி நாதரை ஏசுவதும், தூஷிப்பதுமே இக்கூட்டத்தினரின் கூட்டு முறையாகிவிட்டது.
5. பத்தாம் ஹதீஸில் இக்கூட்டத்தாரின் அடையாளங்களில் ஒன்றான…..'இவர்கள் முஸ்லிம்களை மட்டுமே கொன்றொழிப்பார்கள். விக்கிரஹத் தொழும்பர் பக்கம் ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள்' என்னும் இவ்வடையாளத்திற்கு ஆதாரம் வேண்டுமாயின், இந் நஜ்துக் கும்பலைப் பற்றி 'மௌலானா முஹம்மத் அலி ஜௌஹரின்' வார்த்தையைப் பாருங்கள்.
நஜ்தும், நஜ்து தேச விஷமிகளும் முஸ்லிம்களை மட்டுமே கொன்றொழித்து தங்களின் கரங்களை இரத்தங் கொண்டு கழுவியுள்ளனர். தற்போது அத்துவேஷதாரிகள் யமன் நாட்டு உண்மை முஸ்லிம்கள் மீது போர் தொடுக்க தயாராகிக் கொண்டுள்ளனர். ஹரம் என்றழைக்கப்படும் எல்லைகளில் நஜ்துக்காரர்கள் பிரிட்டானிய ஆங்கிலேய அரசுடன், ஆங்கிலேய அரசுக்குட்பட்ட பிரிட்டானிய எல்லைக்குள் நுழைய மாட்டோமென்று ஒப்பந்தம் செய்துள்ளனர்.
(ஆதாரம்: முகாலாத்தே முஹம்மத் அலி பக்கம் 37)
இதன்மூலம் தப்லீகு ஜமாஅத்தினர்களுக்கும், நஜ்துக் கூட்டத்தாருக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்;. நஜ்துவாசிகள் முஸ்லிம்களை காபிர்கள், முஷ;ரிக்குகளென்று கூறி அவர்களைக் கொன்றொழித்தனர். தப்லீகு; ஜமாஅத்தினர்கள் முஸ்லிம்களை முஷ;ரிக் காபிரென்று வாய்திறந்து சொல்லாமலேயே அவர்'களுக்கு கலிமா சொல்லிக் கொமுக்கின்றனர். இவ்'விரு கூட்டத்தினரின் மனக்கருத்தும் ஒரே மாதிரியாக ஒன்றுபோல் ஒத்திருப்பதைப் பாருங்கள்.
6. ஐந்து, பதினொன்று, பனிரெண்டு ஆகிய ஹதீஸ்களில் இவர்களது முக்கியமான அடையாளங்களில் ஒன்று: மொட்டையடிப்பதை முக்கிய பணியாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதுவே அவர்களின் கொள்கை குறிக்கோளாகவும் மாறியுள்ளதென்பது ஆதாரத்தை புகழ் வாய்ந்த அரபி வரலாற்று நூலான 'அல்புதுஹாத்துல் இஸ்லாமிய்யா' என்னும் நூல் கூறுவதைப் பாருங்கள்:
அவர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மொட்டை அடித்தல் என்னும் நபிகளாரது வாக்கு நஜ்து தேசத்திற்கே முற்றிலும் பொருந்தும். ஏனெனில் அவர்கள் தம்பை; பின்பற்றுவோரை மொட்டையடிக்கும்படி கூறுகின்றனர். நபிகளாரின் இவ்வடையாளக் குறிப்பு காரிஜிய்யாக்களிடமோ, வேறு எந்த கீழ்மட்டத்தரிடமும் காணப்படவில்லை. இப்பழக்கம் வஹ்ஹாபிய நஜ்திகளிடம் மட்டுமே குறிக்கோளாக காணப்படுகிறது.
(ஆதாரம்: அல்புதுஹாதுல் இஸ்லாமிய்யா, பாகம் 2, பக்கம் 268)
ஒரு அதிசயப் புள்ளி விபரம்: 'தஹ்லீக்' என்னும் அரபிச் சொல்லுக்கு சாதாரணமாக நாம் 'மொட்டையடித்தல்' என்றுதான் அர்த்தம் சொல்வோம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர்களான தேவ்பந்த்pகளின் நம்பிக்கைக்குரிய அரபி அகராதி நூலான 'மிஸ்பாஹுல் லுகாத்'தின் 48-வது பக்கத்தில் தஹ்லீக் என்பதற்கு 'சுற்'றி வருதல்', வட்டமாக அமருதல்' என்று அர்த்தம் கொ:டுக்கப்பட்டுள்ளது. சுய சிந்தனை கொண்டு சிறிது சிந்தித்துப் பார்ப்பீர்களேயானால் இவ்விரு அர்த்தங்களும் தப்லீக் ஜமாஅத்திற்கு கொஞ்சங்கூட பிசகாமல் பொருந்தி வருவதை புரிந்து கொள்வீர்கள். ஒரு அர்த்தமானது தெருதெருவாய் சுற்றி வந்து அழைப்பதைக் குறித்தால், இன்னோர் அர்த்தம் அவர்கள் வட்டமாய் அமர்ந்து தஃலீம் செய்வதையம், இஜ்திமா நடத்துவதையும் அம்பலப்படுத்துவதை அறியலாம்.
7. ஒன்பதாவது ஹதீஸில் அவர்களின் மற்றுமோர் அடையாளமாகிய, அவர்கள் போலித்தனமாகவும் மற்றவர் காண்பதற்காகவும் விழுந்து விழுந்து தொழுவார்கள் என்பதோடு மற்றவர்கள் அவர்களது தொழுகை போன்ற வணக்கங்களைக் கண்டு தங்களின் வணக்கத்தை மிக அற்பமாக நினைப்பார்கள் என்பதில் தப்லீக்வாதிகளின் தொழுகை போன்ற வணக்கத்தைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அவர்களில் இவ்வடையாளம் அத்துனை உலகப்பிரசித்தம் பெற்ற ஒன்றாகும்.
உதாரணமாக நாற்பது ஐம்பது வருடங்களாகத் தொழக் கூடிய ஒருவரைப் பாருங்கள். அவரது நெற்றியில் ஸஜ்தா செய்த அடையாளத்தையே பார்க்க முடியாது. ஆனால் தப்லீக் ஜமாஅத்தில் இணைந்து தொழத் துவங்கி ஒரு கறுப்பு வில்லையே ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். காரணம் என்ன தெரியுமா? உண்மையில் இவர்கள் ஸஜ்தா செய்யவில்லை. ஸஜ்தாவின் மூலம் தங்களது நெற்றியில் இவர்கள் சூடு போட்டுக் கொள்கின்றனர். இதன்மூலம் இஸ்லாமியர்களிடையே தம்மை மிகப்பெரும் வணக்கஸ்தர் என்பதாக காட்டிக் கொள்ள முற்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
8. ஒன்பது, பத்து, பதினைந்து ஆகிய ஹதீஸ்களில் அக்கூட்டத்தினரின் அடையாளங்களில் மற்றுமோர் அடையாளமாக, அவர்கள் தமது தொழுகை போன்ற வணக்கத்தால் தம்மைத் தவிரவுள்ள மற்ற அனைவரையும் மிக இழிவாகக் கருதுவார்கள். தம்மிலம் பெரியோர்களான தகைசார்ந்த நன்மக்களை கூட ஆணவத்தோடு பழி சுமத்தி தூற்றுவார்கள். நபிமார்களையும், நாதாக்களானவலிமார்களையும் கூட குறைகூறுதல் தப்லீக் வாதிகளின் அன்றாட அலுவல்களின் ஒன்றாக இன்று ஆகிப்போய் விட்டது. நான் சொல்லும் இவ்வடையாளத்திற்கு ஆதாரம் தேவையெனில் தப்லீக் ஜமாஅத்தின் மிகத் தீவிரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான மௌல்வி அப்துற்றஹீம் தேவ்பந்தியின் பேச்சைக் கேட்டுப் பாருங்கள்:
நான் மௌலானா முஹம்மத் யூசுப் ஸாஹிப் அவர்களிடம் ஒவ்வொரு வெள்ளிதோறும் தவறாமல் சென்று வருவது வழக்கம். அப்போது ஜமாஅத்திலுள்ள அடிப்படைக் கூடத்தெரியாத பேச்சாளர்களைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அவர்கள் மேன்மைக்குளரிய உலமாக்களையும், மத்ரஸாக்களையும் மிக அற்பமாக எண்ணி இளக்காரம் செய்கின்றனர் என்பதை நானே பலமுறை செவியேற்றிருக்கிறேன். மிக விரைவில் அவர்களை நாம் திருத்த வேண்டும். உலமாக்களெல்லாம் மிகுந்த வருத்தத்துடன் முறையிடுகின்றனர் என்று சொன்னேன்.
(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக் பக்கம் 43)
பிறிதோரிடத்தில் அவனே மனம் புண்படும்படியான செய்தியைக் கூறி பலத்த கண்டனம் செய்வதைப் பாருங்கள்.
மிகப்பெரும் ஆச்சரியமான விஷயம் யாதெனில், யார் தப்லீக் ஜமாஅத்தை எவ்வளவு நெருங்கி வந்து விடுகின்றானோ, அவன் அவ்வளவு தூரம் உலமாக்களை விட்டும் பிரிந்து விலகிச் சென்று விடுகிறான். ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? அதிலம் இரண்டு, மூன்று சில்லா சென்று வந்து விட்டால் அவனைப் பற்றிச் சொல்லத் தேவையேயில்லை. பலபடிகள் மற்றவர்களை விட தான் உயர்ந்து விட்டதாகக் கருதத் துவங்கி விடுகிறான். பிறகென்ன? ஆலிம்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதுமில்லை. மதிப்பதுமில்லை.
(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக், பக்கம் 50)
தப்லீக் ஜமாத்தினர் நபிமார்களை குறைகூறும் வழக்கத்தை, கிளர்ச்சியை நெருப்பிட்டு வளர்க்கும் அவர்களின் மிகத் தீவிரமான முயற்சியை காண வேண்டுமாயின் அவ்வியக்கத்தை உருவாக்கிய மௌலவி இல்யாஸ் ஸாஹிபவர்களின் கடிதத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள். தப்லீக் இயக்கச் சேவை புரிவோரைப் பற்றி அவர் இவ்வாறு எழுதுகிறார்,….
இறைவன் ஒரு வேலையை வாங்க நாடாவிட்டால் நபிமார்கள் போன்றோர் கூட எத்துணை முயன்றாலும் ஒரு சிறு பொருளைக் கூட அவர்களால் அசைக்கக் கூட முடியாது. இனி இறைவன் அதே வேலையை வாங்க நாடி விட்டால் நபிமார்காளல் கூட முடியாத அவ்வேலையை உங்களைக் கொண்டு வாங்கி விடுவான்.
(ஆதாரம்: மகாதீபே இல்யாஸ், பக்கம் 107)
9. பதிமூன்றாம் ஹதீஸில் இக்கூட்டத்தார்களது அடையாளங்களை நபிகளார் சொல்லும்போது, இளவயதுடைய வாலிபர்கள் அறிவிற் தேறாதவர்கள், ஒன்றும் தெரியாத பாமர மக்கள் போன்றோரைக் கொண்டதாக அக்கூட்டமிருக்கும் என்றார்கள். இவ்வடையாளத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால், இவர்கள் நடத்தும் ஒரு இஜ்திமாவுக்கு சென்று வாருங்கள். கல்வியறிவற்றவர்கள் ஒரு பகுதியாகவும், ஒன்றும் புரியாத முஸ்லிமகள் ஒரு பகுதியாகவும் காட்சியளிப்பதைப் பார்க்கலாம். தவிரவும் இந்த ஜமாஅததில் சேருவதுதான் தாம் தனது தீனுக்கு செய்யும் மிகப் பெரும் உபகாரம் என்றெண்ணி சேர்ந்தவர்களது கூட்டம் ஒருபுறமும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் முஸ்லிமக்ள் கணிசமாக வசிக்கின்ற இடங்களைச் சேர்ந்த தீவிர எண்ணங்கொண்ட இளைஞர்களின் கூட்டம் மறுபுறமும், நாம் மார்க்கத்திற்கு ஆற்ற வேண்டிய அரும்பெரும் புனிதமிக்க பணி இதுதான் என நினைத்து தப்லீக் ஜமாஅத்தில் இணைந்திருப்போரை உங்கள் கண்ணுக்கெதிரே நீங்கள் காணலாம். அப்பாவித்தனத்தாலும், மார்க்கத்தை பற்றிய கல்வியறிவின்மையாலும் துரோகத்ததிற்கு துணைபோய்விட்டனர் பலர். சிறுபிள்ளைத் தனத்தாலும், அனுபவின்மையாலும் மார்க்கமற்ற மடமைச் சேற்றில் மூழ்கிவிட்டனர் வேறு பலர்.
தப்லீக் ஜமாஅத்தில் மறைந்துள்ள நஜ்து தேச வஹ்ஹாபியக் கொள்கையை விளக்கிக் காட்ட யாரும் முன் வராததன் விளைவுதான் இது.
10 பதினான்காம் ஹதீஸில் இறுதி காலத்தில் புழுப்பூச்சிகளைப் போல் எங்கு பார்த்தாலம் (ஆலிம்கள்போல் வேடம் தரித்த) முல்லாக்கள்தான் தெரிய வருவார்கள். பள்ளிவாசல்களை படுக்கறையாக்கிக் கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அனுபவ ரீதியாகவம், நடந்து கொண்டிருக்கும் நிலைமைகளையும், கண்டால் நபிகளார் அறிவித்துள்ள அடையாளங்களனைத்தும் உச்சிவேளை சூரியனைப்போல் அவர்கள் தப்லீக் ஜமாஅத்தினர் தான் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியும். எண்ணிலடங்காதோர் இன்று பெரும் பெரும் உலமாக்களாக, ஆலிம்களாக, முல்லாக்களாகத் தெருத் தெருவாக அலைந்து கொண்டிருக்கின்றனர். தப்லீக் இயக்கத்தார் எழுதிய நூல்களில் இரண்டொன்றை படித்துவிட்டால் மாபெரும் மௌலானாவாகி விடுகிறார்கள். கண்ணியத்திற்குரிய உலமா பெருமக்களையும், இவர்கள் கண்டு கொள்வதில்லை. இம்மாnரும் தவறை அந்த ஜமாஅத்தின் உலமாக்களே செய்யத் துவங்கி விட்டனர். அவர்களின் பிரசங்கப் பீரங்கியான மௌலவி அப்துற்றஹீம் தேவ்பந்தி தொடுக்கும் புகாரைப் பாருங்கள்:
மிகத் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவலநிலை என்னவெனில் சான்றிதழ் இன்றி ஒருவன் கம்பௌண்டாகக் கூட முடியாது. ஆனால் அவர்கள் (தப்லீக்கர்கள்) எவ்வளவு கேவலமாக எண்ணிக் கொண்டார்கள் பாருங்கள். எவனெல்லாம் நினைக்கிறானோ அவனெல்லாம் சொற்பொழிவாற்றவும், பிரசங்கம் செய்யவும், எழுந்து நின்று விடுகின்றான். இ.ந்நிலைக்கு கீழ்கண்ட உவமானம் மிகப் பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறேன். அதாவது, (நீம் ஹகீம் கத்ரயே ஜான் நீம் முல்லா கத்ரயே ஈமான்) அரைகுறை வைத்தியன் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பான். அரைகுறை ஆலிம் ஈமானுக்கே உலை வைத்து விடுவான் என்பதே.
(ஆதாரம்: உஸூலே தஃவத் தப்லீக், பக்கம் 54)
இதனை இன்னும் விளக்கி கூறும் வகையில் அமைந்த அவரது உரையின் மற்றோர் வாசகத்தைப் பாருங்கள்:
அருமை பெரியோர்களே! ஒன்றும தெரியாதவர்களும், லாயக்கற்றவர்களும் குத்பா பயான் செய்ய வருவார்களேயானால் எதைக் கூற வேண்டுமோ, அதன் அடிப்படையையே சொல்ல மாட்டார்கள். தன்னிச்சையாய் புதுமாதிரியானவற்றையே கூறிக் கொண்டு போவார்கள். உலமாக்களைNயு எச்சரிக்கை செய்யுமளவிற்கு இப்போது அவர்கள் துணிந்து விட்டார்கள்.
பள்ளிவாசல்களின் நிலைமையைப் பற்றி கேட்கத் தேவையேயில்லை. இந்த நாடோடிக் கும்பலான தப்லீகுவாதிகள் உண்மையான தொழுகையைப் தவிர மற்றெல்லா வசதிக்காகவும் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். உணவு சமைக்க சமையல் அறையாகவும், உட்கார்ந்து சாப்பி;ட டைனிங்ஹாலாகவும், தூங்கி எழ படுக்கையறையாகவும், உலக விஷயங்களைப் பற்றி பேசசந்தையாகவும், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் உறைவிடமாகவம் உண்மையைச் சொல்வதானால் பள்ளிவாசல் என்பது போர்டிங் லாட்ஜிங் ஆகத் திகழ்கிறது. இவைகளைத் திவர பள்ளிவாசலின் மகத்துவத்தை கேவலப்படுத்தும் பல சம்பவங்கள் நம் இதயமே வெடித்து விடுமளவிற்கு நம் காதில் விழுகின்றன.
11. இரண்டு, பனிரெண்டாம் ஹதீஸ்களில் பல்வேறு வேடம் பூண்டு பற்பல பெயர்களையத் தாங்கி ஒரு கூட்டம் எல்லாக் காலங்களிலும் வெளிவரும் என்றும் இறுதிநாள்வரை வந்து கொண்டிருக்கும் இக்கூட்டம் முடிவில் தஜ்ஜாலுடன் சென்று சேர்ந்து கொள்ளுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு ஹதீஸ்களிலும் குறிப்பிடப்படும் இவ்வடையாளம் தப்லீக் ஜமாஅத்தின் கூட்டத்தினருக்கே மிகச் சரியாகப் பொருந்தும். ஏனெனில், தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மக்களிடையே பரப்ப முனைந்துள்ள விஷயங்கள் அனைத்தும் 'இப்னு தைமிய்யா, இப்னுல் கையூம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தீ' முஃதஸிலா, காரிஜிய்யா போன்ற பெயர்களை சுமந்து காலத்திற்கேற்றப பெயர்தாங்கி வந்த கூட்டங்கள் எந்தக் கொள்கையை, எந்த விஷயங்களை முஸ்லிம்களிடையே பரப்பியதோ, அதேக்கொள்கையைத்தான் தப்லீக் ஜமாஅத்தும் இன்று இஸ்லாமியர்களிடையே பரப்புகின்றது. இதில் தப்லீக் ஜமாஅத் என்ற பெயர்தான் புதியதேயொழிய கருத்துக்கள் அனைத்தும் ஒன்றுதான்.
இதன்மூலம் மற்ற எல்லா சந்தேகத்தின் கதவுகளும் இழுத்து மூடப்பட்டுவிடுகின்றன. காரணம், நபிகளார் எந்த ஜமாஅத்தைப் பற்றிஅ ன்றே சொன்னார்களோ, அந்த ஜமாஅத் காரிஜியாக்கள் அல்ல. அவர்கள் என்றோ அழிந்தொழிந்து போய்விட்டனர். பின்னும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலைக்கின்ற கூட்டத்தைக் குறித்து நபிகளார் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தஜ்ஜால் வரை சென்றடையும் கூட்டத்தைக் குறித்தே நபிகளார் சொன்னதால், அன்றும் தங்களின் மனிதில் குப்ராகிய இறை மறுப்பையும், நாயகத்தின் மீது துவேஷ எண்ணத்தையும் மறைத்'து வைத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்தனர். அவர்கள்தான் இன்றும் பலப்பல புதிய பெயர்களை சூட்டிக் கொண்டு இஸ்லாமியர்களிடையே உலவுகின்றனர். வாழையடி வாழையாக தஜ்ஜால் வரும்வரை இவர்களும் வந்து கொண்டேதானிருப்பர்.
12. பதினொன்று, பணிரெண்டு ஆகிய ஹதீஸ்கள் குறிப்பிடும் அடையாங்களில் இன்னொன்று, குண நலன்களிலும், நடத்தையிலம் மிக மிகக் கீழ்த்தரமானவர்களாயிருப்பார்கள் என்பதாகும். இதற்குரிய ஆதாரத்தை என்னிடம் கேட்டால், தப்லீக் ஜமாஅத்தில் மிகத் தீவிரமான பற்றுதல் கொண்டோரைத் தேடி அவரிடம் நெருங்கிப் பழகி பாருங்கள். காட்டுத்தனமும், இறைவனைப் பற்றிய அச்சமின்மையும், நல்லோரை தூஷpக்கும் இழிகுணமும், ஆணவம் கொண்டவராகவும், உலக இச்சையின் பால் அதிக வேட்கை கொண்டவராகவும் இருப்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
பின்னும் இந்த இழிநிலைக்கு மாற்றமான இயற்கைத் தன்மை வாய்ந்த இரக்க குணமும் பாசமாகப் பேசும் இளகிய மனமும், நல்லொழுக்கப் பண்பாடு முதலான நற் குணங்களை விட்டு வெகு தொலைவில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். பின்னும் நஜ்து கூட்டத்தினரான வஹ்ஹாபியர்களைக் குறித்து எத்தனை ஹதீஸ்கள் அவர்களது இழிந்த தன்மைகளை அடையாளமாக்கிக் கூறுகின்றதோ அவையனைத்தையும் தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கு பொருத்தமாகக் கொள்ளலாம்.
13. ஐந்து, பனிரெண்டு ஆகிய ஹதீஸ்களில் இனங்காட்டப்படும் மற்றுமோர் அடையாளம்: ஒருமுறை அவர்கள் நேரான பாதையை விட்டும் விலகிச் சென்ற பின்னர் மறுபடியும் அப்பாதைக்குத் திரும்புவது அவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "நபி மொழி ஒளியில் தப்லீக் ஜமாஅத்"

இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?


இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?
மௌலவி அ. முஹம்மது ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பஈ, பாழில் பாகவி அவர்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
எல்லாப்புகழும் புகழ்ச்சியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும் ஸலாமும் எம் ஈருலக ஸர்தார் எம்பிரான் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்த குடும்பத்தார்களாகிய அஹ்லுபைத்துகள் என்ற ஸாதாத்துமார்கள் மீதும் இன்னும் அவர்களின் சத்திய சஹாபா பெருமக்கள் மீதும் வாஞ்சை மிகு வலிமார்கள், நாதாக்கள், நல்லோர்கள், வல்லோர்கள் எல்லோர்களின் மீதும் உண்டாவதாக!
அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்களின் தீர்க்கதரிசனத்தால் பிற்காலத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்கள் பற்றி தனித்தனியாக முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அப்படி சொல்லப்பட்டவைகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். அவைகளை நன்றாக விளங்கி மனதில் வைத்துக் கொண்டு அதன்பின் விஷயத்திற்குள் நுழைவது நல்லதென்று நினைக்கிறேன்.
யார் பேரிச்சம் பழச்சக்கைகள்:
முற்காலத்தில் வாழ்ந்த ஸாலிஹான நல்லோர்களும் அதை அடுத்துள்ள காலத்தில் வாழ்ந்த நல்லவர்களும் மரணித்து விடுவார்கள்(இப்படியே படிப்படியாக ஸாலிஹீன்கள் (நல்லவர்கள்) சென்ற பின் (மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில்) தொலிக்கோதுமையின் சருகுகளைப் போன்ற அல்லது பேரீச்சம் பழச்சக்கைகள் போன்ற குப்பைகள் தான் எஞ்சியிருப்பர். (அவர்கள் தங்களைப் பற்றி தாங்களே எல்லாம் அறிந்த மேதைகள் என்று பீற்றிக் கொள்வார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(புகாரி ஷரீப் பாகம் 2 பக்கம் 952 ஹதீது எண் 6434 பாபு தஹாபிஸ் ஸாலிஹீன் கிதாபுர் ரிகாக், மிஷ்காத் பக்கம் 458 ஹதீது எண் 5362 பாபு தஙய்யுரின நாஸி)
ஹதீஸ்கள் வழிகெடுக்குமோ?
மேலும் கடைசி காலத்தில் அறிவுத் தெளிவும் அனுபவ முதிர்ச்சியும் அற்ற ஒரு கூட்டம் வரும். அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மெரியான ஹதீஸிலிருந்தே ஆதாரம் காட்டி பேசுவார்கள். ஆனால் அவர்களின்; ஈமான் (உதட்டளவில்தான் இருக்குமே தவிர) உள்ளத்தில் நுழைந்திருக்காது. மேலும் அவர்கள் புனித இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(புகாரி ஹதீது எண்:3611 கிதாபுல் மனாக்கிப் பாபு அலாமத்தின் நுபுவ்வத்தி, புகாரி ஹதீது எண்: 5057 பாபு இத்மி மன் ராஆ பி கிராஅத்தில் குர்ஆன் கிதாபு பழாஇலில் குர்ஆன், புகாரி ஹதீது எண்: 6930 பாபு கத்லில் கவாரிஜி கிதாபு இஸ்த்திதாபத்தில் முர்த்தத்தீன், முஸ்லிம் பாகம் 1 பக்கம் 342 ஹதீது எண்: 1066-154 பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜ் கிதாபுஸ் ஸகாத், அபூதாவூது ஹதீது எண்: 4767 பாபுன் பீ கிதாலில் கவாரிஜ் கிதாபுஸ் ஸுன்னா, இப்னு மாஜா ஹதீது எண்: 168 பாபுன் பீ திக்ரில் கவாரிஜ் அல் முகத்திமா)
முன்னோர்களை சபிக்கலாமா?
மேலும் இந்த உம்மத்தைச் சார்ந்த பிற்காலத்தில் வாழும் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்களை நிந்திக்க ஆரம்பித்தார்களானால் (கலியுகம் வந்து விட்டதாக பொருள். ஆகவே) கியாமத்து நாளை எதிர்பாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(திர்மிதி ஹதீது எண்: 2211 பாபு மா ஜாஅ பீ அலாமத்தி ஹூலுலில் மஸ்கி வல் கஸ்பி கிதாபுர் ரிகாக், மிஷ்காத் பக்கம் 470 ஹதீது எண்: 5450 பாபு அஷ்ராத்திஸ் ஸாஅத்தி கிதாபுல் ஃபிதன்)
இப்போது கூறப்பட்ட இம்மூன்று ஹதீஸ்களையும் இதே கருத்தில் வந்துள்ள இன்னும் அநேகமான ஹதீஸ்களையும் வைத்து ஆராய்ந்து பார்த்தோமானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய பிற்;காலம் (கலியுகம்) என்பது வேறு எந்த காலமும் அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்று திட்டவட்டமாக கூறலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடிட்டுக் காட்டிய பெரும்பான்மையான விஷயங்கள் தற்போது நடந்து கொண்டிருப்பதை நிதர்சனமாக (கண்கூடாக) காண முடிகிறது. உதாரணமாக புனித ரமலானில் காலம் காலமாக தொழுது வரும் தராவீஹ் தொழுகையை எடுத்துக் கொண்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 8 ரக்அத்துகள் மட்டும் தொழுதுள்ளார்கள் என்றுதான் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளது. ஆகவே தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்துகள்தான். 20 அல்ல என்று நம்மில் சிலர் வாதிடுகிறார்கள். நீங்கள் ஆதாரம் காட்டும் ஹதீது தராவீஹ் பற்றி வந்தது அல்ல. மாறாக தஹஜ்ஜுத் பற்றி வந்துள்ளதாகும் என்று கூறினால் இல்லை, இல்லை தராவீஹ் பற்றிதான் வந்துள்ளது என்று மறுத்துக் கூறுகின்றனர். சரி அது இருக்கட்டும் ஸஹாபா பெருமக்கள் 20 ரக்அத்துகள் தொழுதுள்ளதாக ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ளதே. அந்த ஹதீஸ்களை வைத்தாவது தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழலாம் அல்லவா என்று கேட்டால், ஸஹாபாக்கள் செய்ததை நாம் ஆதாரமாக எடுக்கலாமா? என்று நம்மிடமே எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் நாம் மீலாது விழா கொண்டாடினாலோ, அல்லது மவ்லிது ஷரீபு ஓதினாலோ ஸஹாபாக்கள் செய்யாததை ஏன் செய்கிறீர்கள் என்று கூறி அவைகளை மறுக்கிறார்கள். அதற்காக ஒரு சில ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் வெளிப்படையாக (மேலோட்டமாக) விளங்கிக் கொண்டு ஆதாரம் காட்டுகிறார்கள். அவர்கள் கூறுகின்ற ஆதாரங்களை நன்றாக ஊன்றிப் பார்த்தால் அவைகளின் எதார்த்தமான விளக்கமும், கருத்தும் ஒன்று இருக்க அவைகளுக்கு இவர்கள் கூறும் கருத்தும் விளக்கமும் வேறொன்றாகவே அமைந்து இருக்கிறது. அப்படி இருந்தும் அவைகளையே தூய வடிவில் இஸ்லாம் என்று கூறி பாமர முஸ்லிம்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் குறிப்பிடும் ஒவ்வொன்றிலும் உண்மை நிலைமை என்ன என்பதை அறிந்து செயல்படுவது நாம் யாவரின் மீதும் கடமையாகி இருக்கிறது. ஆகவே இச்சிறு நூலில் இறந்தவர்களுக்கு கத்தம் ஓதும் விஷயத்தில் அவர்கள் என்னென்ன குறுக்கீடுகள் தெரிவிக்கிறார்கள் என்பதை மொத்தமாக தொகுத்து தந்துவிட்டு அதன் பின் அவைகளில் ஒவ்வொன்றையும் அதற்கான விளக்கங்களையும் தனித்தனியாக குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். உண்மையை உண்மை என்று விளங்கி ஒற்றுமைப்பட முன்னுக்கு வர வேண்டும் அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு தஆலா நாம் யாவருக்கும் நல்லருள் பாலிப்பானாக. ஆமீன்.
எதிர்தரப்பு வாதிகளின் குறுக்கீடுகள்:
1. கத்தம் என்ற வார்த்தைக்கும், கத்தம் தமாம் பண்ணுதல் என்ற வார்த்தைக்கும் என்ன பொருள்? மேலும் குர்ஆனை ஓதி முடித்து துஆ ஓதும் சமயத்தில் எல்லோரையும் ஒன்று கூடச்செய்வதற்கு ஆதாரம் ஏதும் உண்டா?
2. ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது. அப்படி இருக்க இறந்தவர்களுக்கா கத்தம் ஓதி என்ன பயன்?
3. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படி இருக்க இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது எந்த வகையில் ஆகுமாகும்.
4. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது அவர்களுக்குப் போய் சேராது என்று இமாமுனா ஷாபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களே தெளிவாக கூறியிருக்கும் போது அவர்களை பின்பற்றுகிறோம் என்று கூறும் மத்ஹபுவாதிகள் தாங்கள் பின்பற்றும் இமாமின் சொல்லை மதிக்காமல் கத்தம் பாத்திஹா ஓதுவது எங்கனம் நியாயமாகும்?
5. மரணித்தவர்களுக்கு குர்ஆன் ஓதி கத்தம் தமாம்(நிறைவு) செய்யும் சமயத்தில் ஓதப்படும் அஸ்மாவுல் ஹுஸ்னாவுக்கும் திக்ரு தஸ்பீஹ் ஸலவாத்துகள் ஓதுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
6. இறந்தவர்களின் பெயரால் உணவு கொடுப்பது மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான காரியம். எனவே அந்த உணவை உண்ணுவது ஹராமாகும் அல்லவா?
7. இறந்தவர்களை அடக்கம் செய்த அன்று ஓதப்படுகின்ற முதலாம் கத்தத்திற்கும் அதை தொடர்ந்து 3ம் நாள், 5ம் நாள், 7ம் நாள், 10ம் நாள், 30ம் நாள் 40ம் நாள் ஆகிய தினங்களில் ஓதப்படுகின்ற கத்தங்களுக்கும் வருடக்கத்தம் ஓதுவதற்கும் பராஅத்து என்ற நிஸ்பு ஷஃபான் தினத்தன்று (சில பகுதிகளில்)ரொட்டி சுட்டு வைத்து கத்தம் ஓதுவதற்கும் மார்க்கத்தில் இடமே இல்லை.
8. மய்யித் வீட்டினர் தங்களுடைய குடும்பத்தில் இறந்து விட்டவரை நினைத்து கவலையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்ற காரணத்தால், அவர்களுக்காக பக்கத்து வீட்டார்கள் உணவு சமைத்து கொடுப்பது சுன்னத் என்று அனைத்து மதுஹபு கிதாபுகளிலும் வந்திருக்கும் போது மைய்யித்து வீட்டினரே மற்றவர்களை அழைத்து கத்தம் ஓதுகிறோம் என்ற பெயரில் உணவு கொடுப்பது அவர்கள் பின்பற்றும் மத்ஹபுக்கு மாற்றம் செய்கின்ற செயல் அல்லவா?
9. மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதற்கு ஆதாரம் உண்டா?
10. மைய்யித்தை அடக்கி முடிந்தவுடன் கப்ரின் மீது தண்ணீர் ஊற்றுவதால் என்ன பலன்?
கத்தம் என்றால் என்ன?
பதில்: 1. கத்தம் என்பது கத்மு என்ற அரபி வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லாகும். கத்மு என்பதன் பொருளாகிறது முடித்தல் என்பதாகும். என்றாலும், இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறை அந்த கத்மு என்ற வார்த்தையை குர்ஆன் ஓதிமுடித்தலுக்கு பயன்படுத்தி வருகின்றது. மேலும் தமாம் என்ற வார்த்தைக்கு நிறைவு, சம்பூரணம் என்று பொருளாகும். எனவேதான் குர்ஆன் ஷரீபு ஓதி முடிக்கப்பட்டு மார்க்கத்தில் சொல்லப்பட்ட பிரகாரம் அதை நிறைவு செய்வதற்கு கத்தம் தமாம் செய்தல் (அதாவது ஓதி முடிக்கப்பட்ட குர்ஆனை நிறைவு செய்தல்) என்று கூறப்படுகிறது.
கத்முல் குர்ஆன் மஜ்லிஸிற்கு ஒன்று கூடுவோமாக…..
1. பிரசித்திப் பெற்ற சஹாபாக்களில் ஒருவரும் பெருமானார் ஸல்லல்'லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பத்தாண்டு காலங்கள் பணிவிடை புரிந்தவர்களும் பல ஹதீஸ்களை ரிவாயத்து செய்தவர்களும் 103 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து 100 பிள்ளைகளை பெற்றவர்களுமான (அல் இக்மால்) ஸய்யிதினா அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனை ஓதி நிறைவு செய்து விட்டால் தனது பிள்ளைகளையும் தனது வீட்டினர்களையும் ஒன்று சேர்த்து அவர்களுக்காக துஆ செய்வார்கள் என்று அபூகத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(தாரமி பாகம் 2 பக்கம் 469 பாபுன் பீ கத்மில் குர்ஆன் கித்தாபு பழாஇலில் குர்ஆன், அத்காருன் நவவி பக்கம் 88 பஸ்லுன் பீ ஆதாபில் கத்மி…. கிதாபு திலாவதில் குர்ஆன்)
2. நாங்கள் குர்ஆன் ஓதி முடித்து விட்டோம். குர்ஆன் ஓதி முடித்து விட்டு செய்யப்படுகின்ற பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றது என்று எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. ஆகவே இந்தப் பிரார்த்தனை வைபவத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று கூறி முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு, அப்தத் இப்னு அபீ லூபாபா ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு சஹாபாக்களும் எனக்கு ஆள் அனுப்பி வைத்திருந்தார்கள் என்று ஹக்கம் இப்னு உத்தைபா ரலியல்லாஹு அன்ஹு என்ற தாபிஇ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(தாரமி பாகம் 2 பக்கம் 470 பாபுல் பீ கத்மில் குர்ஆனி கிதாபு பழாயிலில் குர்ஆன், அல் அத்கார் பக்கம் 88 பஸ்லுன் பீ ஆதாபில் கத்மி)
3. குர்ஆன் ஓதி கத்மு செய்யப்படுகின்ற இடங்களில் ரஹ்மத் இறங்குகின்றது என்று கூறிக் கொண்டு அவ்விடங்களில் ஸஹாபா பெருமக்கள் ஒன்று சேரக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று முஜாஹித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (அல் அத்கார் பக்கம் 88)
4. குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்தவர்கள் ஓதத் தெரியாதவர்கள் ஆக இரு பிரிவினரும் குர்ஆன் கத்மு நடக்கின்ற மஜ்லிஸ்களில் ஆஜராகுவது முஸ்த்தஹ்பாகும். (அல் அத்கார் பக்கம்88)
5. ஒருவர் மஸ்ஜிதுன் நபவியில் குர்ஆன் ஓத ஆரம்பித்தார். இதை கண்ணுற்ற ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர் எப்போது குர்ஆனை ஓதி முடிக்கின்றார் என்பதை தமக்குத் தெரிவிப்பதற்காக ஒரு கண்காணிப்பாளரை நியமித்தார்கள் என்று கத்தாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தாரமி பகாம் 2 பக்கம் 468 பாபுன் பீ கத்மில் குர்ஆன் கிதாபு பழாயிலில் குர்ஆன்)
6. எவர் குர்ஆன் ஓத ஆரம்பிக்கும் நேரத்தில் (அங்கு) ஆஜராகிறாரோ அவர் போர்க்களத்தில் பெற்ற வெற்றியில் கலந்து கொண்டவரைப் போன்றவராவார். எவர் குர்ஆனை நிறைவு செய்யும் நேரத்தில் கலந்து கொள்கின்றாரோ அவர் போரில் கிடைத்த ஙனீமத் என்ற வெற்றிப் பொருளை பங்கு பிரிக்கும் நேரத்தில் கலந்து கொண்டவரைப் போன்றவர் என்று அபூ கிலாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. (தாரமி பாகம் 2 பக்கம் 468 பாபுன் பீ கதமில் குர்ஆன் கிதாபு பழாயிலில் குர்ஆன்)
குறிப்பு: எவர் குர்ஆன் ஓதி (முடித்து) விட்டு துஆ இறைஞ்சுகிறாரோ அவரின் துஆவுக்காக நான்காயிரம் மலக்குமார்கள் ஆமீன் சொல்கிறார்கள் என்று ஹுமைதுல் அஃரஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற (தாரமி பாகம் 2 பக்கம் 470 பாபுன் பீ கத்மில் குர்ஆனி கிதாபு பழாயிலில் குர்ஆன், அல் அத்கார் 88) செய்தியும் மேலும் குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டதின் பின்னால் துஆ ஓதுவது வலுவான முஸ்த்தஹப்பாகும் (அல் அத்கார் பக்கம் 88) என்று வந்துள்ள செய்தியும் இங்கு சிந்திக்கத் தகுந்ததாகும். ஆகவே இதுவரை கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் கத்முல் குர்ஆன் மஜ்லிஸில் கலந்து அந்த துஆவில் பங்கு பற்றுவது ஒரு பரக்கத்தான காரியமாக இருக்கின்றது என்று அறிந்து கொள்வோமாக!
கேள்வி:- ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது இன்றி வேறில்லை. (சூறா அந்றஜ்ம் 19) என்று அல்குர்ஆன் கூறுகிறது. ஆகையால் இறந்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்கள் இறந்தவர்களுக்கு போய் சேராது. அப்படி இருக்க இறந்தவர்களுக்கா கத்தம் ஓதி என்ன பயன்?
பதில்:-'ஒரு மனிதனுக்கு அவன் முயற்சித்தது அன்றி வேறில்லை' என்று சூரத்து அந்நஜ்மில் வரும் 19வது வசனத்தை மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டு சன்மார்க்கத்தை சரியாக விளங்காத நமது சகோதரர்கள் ஒருவர் செய்த நல்லமலின் பலன் மற்றவர்களுக்கு போய்ச் சேராது என்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் அவர்களின் தலைவர்கள் கூறும் கூற்றே சரியானது என்று நம்பி அதிலேயே பிடிவாதமாக இருப்பதாகும். ஆனால் அந்த பிடிவாதத்தை விட்டு விட்டு அரபி இலக்கணத்தை நன்றாக அறிந்து அதன் துணை கொண்டு மேற்படி வசனத்தை பார்த்திருந்தாலோ அல்லது அந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்திருக்கிற ஏனைய வசனங்களின், ஹதீஸ்களின் துணை கொண்டு பார்த்திருந்தாலோ அல்லது அதன் தொடர் வசனங்களின் விளக்கங்களை கவனித்திருந்தாலோ கண்டிப்பாக இப்படிப்பட்ட விபரீதமான முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆகவே அதற்குரிய எதார்த்தமான பொருளை முதலில் கவனிப்போம்.
'வ அன் லைஸ லில் இன்ஸானி'- என்ற வசனத்தின் எதார்த்த விளக்கம்: இந்த ஆயத்தில் இடம் பெற்று இருக்கின்ற 'லில்' இன்ஸான் என்ற வார்த்தையில் உள்ள 'லாம்' என்ற எழுத்து அரபி இலக்கணப்படி சொந்தம், உரிமை என்ற பொருள்களைத் தரக்கூடியதாக இருக்கின்றது என்று அரபி மத்ரஸாக்களில் இரண்டாம் ஜும்ரா (வகுப்பு) ஓதும் மாணவர்கள் கூட நன்கு அறிவார்கள். இதன்படி பார்த்தால் மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருள், ஒரு மனிதனுக்கு உரிமையானதாக இல்லை அவன் முயற்சித்தது அன்றி என்று அமையும். இதை ஒரு உவமான ரீதியில் கூறுவதென்றால், ஒரு மனிதனுக்கு சொந்தமானதாக ஊதியம் இல்லை அவன் உழைத்தது அன்றி என்று ஆகும். எனவே இந்தக் கருத்தின்படி அவன் உழைத்து கிடைத்த ஊதியம் அவனுக்கு சொந்தமானதாகும். அவன் விரும்பினால் அவனே வைத்துக் கொள்ளலாம். அல்லது அதை மற்றவருக்கு அன்பளிப்புச் செய்ய விரும்பினால் மற்றவருக்கு அதை அன்பளிப்பாகவும் கொடுக்கலாம் என்று தான் பொருள் வரும். அதைப் போன்றே ஒருவன் செய்த நல்ல அமலின் பலனுக்கு அவனே முழு உரிமை பெற்றவனாக ஆகிறான். அவன் விரும்பினால் அவனே அதை வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை அடுத்தவருக்கு அன்பளிப்பு செய்ய விரும்பினால் அன்பளிப்பும் செய்யலாம் என்று பொருள் விரியும். ஆனால் ஒரு மனிதன் தான் செய்த நல்லமலின் பலனை மற்றவருக்கு சேர்ப்பித்தால் அது மற்றவருக்குப் போய் சேராது என்றோ அல்லது ஒருவன் செய்த நல்லமலின் மூலம் மற்றவர் பயன் அடைய முடியாது என்றோ மேற்படி வசனத்திற்கு பொருள் கொள்ள கிஞ்சிற்றும் இடமில்லை. அப்படி இருக்க இறந்தவர்களுக்காக ஓதப்படும் கத்தம் அவர்களை போய் சேராது என்பதற்கு மேற்படி வசனத்தின் (உள்ளார்ந்த விளக்கத்தை விளங்காமல் அதன்) வெளிரங்க விளக்கத்தை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அதை ஆதாரமாக காட்டுவது கொஞ்சம் கூட பொருத்தமானதாக இல்லை என்படி மேற்படி சகோதரர்கள் நன்றாக விளங்கிக் கொள்வார்களாக (கிதாபுர் ரூஹ் அல் மஸாயில் பக்கம் 4)
மேலும் நமது அந்த சகோதரர்கள் கூறுகின்றபடி மேற்கூறப்பட்ட ஆயத்தின் பொருள் ஒருவருக்கு அவர் செய்தது மாத்திரம்தான் கிடைக்கும் மற்றவர்கள் செய்த நல்லமல்களின் பலன் அவருக்குப் போய்ச் சேராது என்று இருக்குமாயின், ஒருவருக்காக மற்றவர் செய்யும் தொழுகை, ஹஜ், தானதருமங்கள், பிழை பொறுக்கத் தேடுதல் போன்ற நல்லமல்கள் அவரைச் சென்றடையும் என்று கூறுகின்ற எண்ணற்ற ஆயத்துக்களுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்து விடும். அத்துடன் இறந்த மய்யித்திற்கு ஜனாஸா தொழுகை தொழ வைதப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும். மேலும் 'பெற்றோர் செய்த நற்செயலால் பிள்ளைகளுக்கு (அவர்களின் எவ்வித உழைப்புமின்றி) (தங்கப்)புதையல் கிடைத்தது' என்று கூறுகின்ற ஸூரத்துல் கஹ்பில் உள்'ள 82வது வசனத்திற்கும், இதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்களுக்கும் இடிப்பாக அமைந்து விடும். எனவே தான் முபஸ்ஸிர்கள் என்றதிருமறை விரிவுரையாளர்கள் மேற்படி வசனத்திற்கு அதன் நேரடிப் பொருளைக் கூறாமல் 20 வகையான வலிந்துரை விளக்கவுரைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். (தப்ஸீர் அல் ஜமல் மேற்படி வசனத்தின் விரிவுரை) அது போன்றே முஹத்திஸ்கள் என்ற ஹதீஸ் கலை நிபுணர்களும் 8 வகையான விளக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177-புகாரி ஹதீஸ் எண் 218ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)
ஆகவே மேற்படி வசனத்திற்கு அவர்கள் கூறும் விளக்கங்களில் ஒரு சிலவற்றை இப்போது கவனிப்போம்.
1. பிள்ளைகள் செய்த நற்காரியத்தால் பெற்றோர்கள் சுவனம் நுழைவிக்கப்படுகின்றனர் என்ற கருத்தை தருகின்ற அத்தூர் 21 வது வசனத்தின் மூலம் மேற்கூறப்பட்ட வசனம் மன்ஸூக் ஆகும். அதாவது அதை ஓதுவது (குர்ஆனிலிருந்து) நீக்கப்படாவிட்டாலும் அதனது சட்டம் மாற்றப்பட்டதாக இருக்கின்றது என்று அல்குர்ஆன் ஷரீபுக்கு விளக்கவுரை கூறுகின்ற விரிவுரையாளர்களில் தலைமைத்துவம் பெற்றவர்களான ஸய்யிதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
( உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177, புகாரி ஹதீது எண்: 218 ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லாயஸ்தத்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ)
2. இந்த சட்டம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் சமூகத்தாருக்கு சொந்தமானதாகும். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தாருக்கு அல்ல. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தைப் பொறுத்தவரை, அவர்கள் செய்ததும் அவர்களுக்கு; கிடைக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் செய்வதும் அவர்களுக்குப் போய்ச் சேரும் என்று ஸய்யிதுனா இக்ரீமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
குறிப்பு: மேற்படி ஆயத்தின் மன்பின் தொடர் வசனங்களைக் கவனித்தால் இப்போது கூறப்பட்ட இக்ரிமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கருத்தின் எதார்த்தம் நன்கு புலப்படும்.
3. இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள மனிதன் என்ற வார்த்தை காபிரான மனிதனைக் குறிப்பிடுகின்றது. ஆகவே ஒரு மனிதனுக்கு அவன் செய்தது மட்டுமே கிடைக்கும் என்பது காபிரான மனிதனுக்காகும். முஃமினான மனிதனுக்கு அல்ல என்று ஸய்யிதுனா ரபீவு இப்னு அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
4. 'லில் இன்ஸான்'; என்ற வார்த்தையில் உள்ள 'லாம்'; என்ற எழுத்துக்கு 'அலா'(மேல்) எனடற எழுத்தின் பொருளாகும். அதன்படி பார்த்தால் மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருள் மனிதனின் மேல்(பாதகமாக) இல்லை. அவன் செய்ததே தவிர என்று ஆகும். அதாவது ஒருவன் செய்த குற்றம் (எக்காரணம் கொண்டும்) மற்றவனின் மேல் (சுமையாக) ஆகாது என்று பொருள் விரியும். இதை ஒரு உவமான ரீதியில் சொல்வதென்றால் இறைவா! நான் தொழாமல் இருந்து விட்டேன். எனவே அந்தக் குற்றத்தை என் மகனின் மீது சுமத்தி அவனுக்கு நீ தண்டனை கொடுப்பாயாக என்று ஒருவர் கேட்டால் அதை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதாகும். மேலும் 'ஒரு குற்றம் செய்த ஆத்மா இன்னொரு குற்றம் செய்த ஆத்மாவின் குற்றத்தை சுமந்து கொள்ளாது'.(ஸூரா அல் அன்ஆம்-165, அல் இஸ்ரா 15, அல் பாத்திர் 15, அல் ஸுமர் 7) என்று வருகின்ற வசனங்கள் மேற்கூறப்பட்ட கருத்தை உறுதி செய்யக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன.
5. மேற்படி வசனத்தின் மேலெழுந்த வாரியான பொருளாகிய அவன் முயற்சித்தது மாத்திரமே அவனுக்கு கிடைக்கும் என்பதாகும் என்றாலும் அந்த முயற்சி என்பதில் அவன் தானே செய்து கொண்ட நற்காரியங்களும் உள்ளடங்கும். அதுபோன்றே அந்த நற்காரியங்கள் உண்டாவதற்குரிய காரணங்களான அவன் பெற்று வளர்த்த பிள்ளைகளும் அவன் அன்பு காட்டி பழகிய நண்பர்களும் அவன் செய்த நற்சேவைகள் மூலம் அவனால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களும் அவனின் முயற்சியில் அடங்குவதால் அவனுக்காக இவர்களில் யார் ஒரு நற்காரியத்தை செய்தாலும் அது அவனுக்கு போய்ச் சேரும் என்று அஷஷெய்கு அபுல் பரஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்ற ஹதீஸ் கலை நிபுணர் குறிப்பிடுகின்றார்கள்.
(உம்தத்துல் காரீ பாகம் 3 பக்கம் 177, புகாரி ஹதீது எண் 218 ன் விளக்கவுரை பாபுன் மினல் கபாயிரி அன் லா யஸ்த்தத்திர மின் பவ்லிஹி கிதாபுல் வுழுஇ ஷரஹுஸ் ஸுதூர் பக்கம் 416 பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மைய்யித்தி அத்தத்கிரா பக்கம் 109 பாபுன் மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி)மேலும் நிச்சயமாக முஃமின்கள் ஒருவருக்கொருவர் (ஈமானிய) சகோதரர்களாக இருக்கின்றார்கள். (அல் ஹுஜ்ராத் 10) என்ற கோட்பாட்டின்படியும் ஒரு முஃமின் செய்கின்ற நற்காரியத்தின் பலன் தன் சகோதர முஃமினுக்கு போய்ச் சேரும் என்று கூற முடிகின்றது.
ஆகவே இப்பொழுது கூறப்பட்ட விளக்கங்கள் மூலம் இந்த வசனத்தின் வெளிப்படையான விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு எந்த வகையிலும் செயல்பட முடியாது என்பதை அறிந்து கொள்வோமாக!
மரணித்தவர்களுக்காக மற்றவர்கள் செய்யும் நல்லமல்களின் நற்பயன்கள் மரணித்தவர்களைப் போய்ச் சேரும் என்று கூறுகின்ற ஆயத்துகளும், ஹதீதுகளும்:
1. ஒரு மனிதன் இறந்து விட்டால் அத்துடன் அவரின் அமல்கள் நின்றுவிடும். என்றாலும் நிரந்தரமான தானம், அவர் கற்பித்த கல்வி, அவருக்காக பிரார்த்திக்கும் அவரின் ஸாலிஹான (நல்ல) பிள்ளைகள் ஆகிய மூன்றும் அவரின் மரணத்திற்கு பின்பும் பயன் தரும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1631 பாபு மா யல்ஹக்குல் இன்ஸான மினஸ் ஸவாபி பஃத வபாத்திஹி கிதாபுல் வஸிய்யத், அபூதாவூத் ஹதீஸ் எண் 2880 பாபு மா ஜாஅ பிஸ்ஸதக்கத்தி அனில் மய்யித்தி கிதாபுல் வஸாயா, திர்மிதி ஹதீஸ் எண் 1376 பாபுன் பில் வக்ஃபி கிதாபுல் அஹ்காம், நஸாயி ஹதீது எண் 3651 பாபு பழ்லிஸ் ஸதக்கத்தி அனில் மய்யித்தி கிதாபுல் வஸாயா, மிஷ்காத் பக்கம் 32 ஹதீஸ் எண் 203 கிதாபுல் இல்மி)
2. ஒரு மனிதன் தனக்கு பின்னால் விட்டு செல்கின்றவைகளில் மிகச் சிறந்தவைகள் மூன்றாகும்.
1. தனக்காக பிரார்த்திக்கின்ற ஸாலிஹான பிள்ளை2. எதனுடைய நன்மை அவனைச் சென்றடையுமோ அப்படிப்பட்ட நிரந்தரமான தானம்.3. அவருக்குப் பின்னாலும் எதைக் கொண்டு அமல் செய்யப்பட்டு வருகின்றதோ அப்படிப்பட்ட அவரின் கல்வி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(இப்னு மாஜா ஹதீது எண்: 241 பாபு தவாபி முஅல்லிமின் நாஸல் கைர அல் முகத்திமா)
3. ஒரு முஃமினான மனிதன் கற்பித்த கல்வியும் மேலும் (எழுத்து மூலம் நூல்வடிவில் உலகெங்கும்) பரப்பிய கல்வியும் அவன் விட்டுச் சென்ற ஸாலிஹான பிள்ளையும் (பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு) வாரி வழங்கிய குர்ஆன் ஷரீடீம் அவன் கட்டியப ள்ளியும், வழிப்போக்கர்களுக்கு அமைத்துக் கொடுத்த தங்கும் விடுதியும் அவன் ஓடச் செய்த ஆறும் அவன் இப்பூவுலக வாழ்வில் ஹயாத்தாக இருக்கும் போது கொடுத்து உதவிய தானங்களும் கண்டிப்பாக அவனின் மவ்த்துக்குப் பிறகும் அவனைப் போய்ச் சேரும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா ஹதீஸ் எண்: 242 பாபு தவாபி முஅல்லமின் நாஸில் கைர அல் முகத்திமா, பைஹக்கி ஹதீஸ் எண் 3448 ஷுஅபுல் ஈமான் , மிஷ்காத் ஹதீஸ் எண் 254)
4. நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒரு மனிதனுக்கு அவன் பிள்ளை செய்யும் இஸ்திஃபார் மூலம் அவரின் அந்தஸ்த்தை சுவனத்தில் உயர்த்துகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(இப்னுமாஜா ஹதீஸ் எண் 3660 பாபு பிர்ரில் வாலிதைனி கிதாபுல் அதப், மிஷ்காத் ஹதீஸ் எண் 2354 பாபுல் இஸ்திஃபார்)
5. இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபோது எனது பெற்றோர் (என் மீது அருள் கூர்;ந்து) என்னை வளர்த்தது போன்று அவ்விருவருக்கும் உனது அருளைச் சொரிவாயாக! என்று நபியே நீர் கூறும் ( ஸூரா அல் இஸ்ரா 24)
குறிப்பு: மிக முக்கியமானதும் முதன்மையானதும்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமைக்குரிய பெற்றோர்கள் இருவரும் சுவனவாதிகள் என்றும் அவர்கள் பெற்றெடுத்த அருமைச் செல்வமும் இவ்வுலக அருட்கொடையுமான அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் துஆவிற்கு அவ்விருவரும் என்றென்றும் உரித்தானவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த திருவசனமும் இன்னும் இதுபோன்ற வசனங்களும் தெட்டத் தெளிவாக இப்பாருக்குப் பறைசாற்றுகின்றன.அப்படி இருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெருமைக்குரிய பெற்றோர்கள் விஷயத்தில் நம்மில் சிலர் மிதமிஞ்சி பேசித்திரிகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் நாவுகளைப் பேணிக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
6. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதன் வந்து 'நாயகமே! எனது தாயார் (எது குறித்தும்) வஸிய்யத் செய்யாமல் திடீரென மரணம் அடைந்து விட்டார்கள். அவர்கள் பேசி இருந்தால் ஏதேனும் தானதர்மங்கள் செய்திருப்பார்கள். ஆகையால் அவர்களுக்காக நான் ஸதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை உண்டா?' என்று கேட்;டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ஆம்' என்று பதில் கூறினார்கள் என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(புகாரி ஹதீஸ் எண்: 1388 பாபு மவ்த்தில் புஜ்அத்தி கிதாபுல் ஜனாயிஸ், புகாரி ஹதீஸ் எண் 2760 -18வது பாபு கிதாபுல் வஸாயா, முஸ்லிம் ஹதீஸ் 1004 பாபு உஸூலி தவாபிஸ் ஸதக்கத்தி அனில் மைய்யித்தி இலைஹி கிதாபுஸ் ஸகாத், அபூதாவூத் ஹதீஸ் எண் 2881 பாபு மா ஜாஅ பீ மன் மாத்த அன் ஙைரி வஸிய்யத்தின்– கிதாபுல் வஸாயா நஸாயி பாகம் 6 பக்கம் 250 பாபு இதா மாத்தல் புஜ்அத்த கிதாபுல் வஸாயா)
7. ஸய்யிதுனா ஸஃது இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் வபாத்தான நேரத்தில் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியூர் சென்றிருந்தார்கள். எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'நாயகமே! நான் வெளியூர் சென்றிருந்த வேளையில் எனது தாயார் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஸதக்கா செய்தால் அது அவர்களுக்கு பயன் அளிக்குமா? என்று கேட்டார்கள். 'ஆம. பயனளிக்கும்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது 'நிச்சயமாக எனது தோட்டம் அவர்களுக்காக ஸதக்காவாக இருக்கும் என்று தாங்களை சாட்சியாக்குகிறேன்' என்று ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி ஹதீது எண்: 2756 பாபு இதா கலா அர்ளீ அவ் புஸ்தானி ஸதக்கத்துன் கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண: 2762 பாபுல் இஸ்ஹாதி பில் வக்பி வஸ்ஸதக்கத்தி கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண் 2770 புhபுன் இதா வக்கப அர்ழன் கிதாபுல் வஸாயா, புகாரி ஹதீது எண் 2761 பாபு யுஸ்தஹப்பு லிமன் துவுப்பிய புஜ்அத்தன் கிதாபுல் வஸாயா, நஸாயி பாகம் 6 பக்கம் 250 பாபு இதா மாத்த அல் புஜ்அத்த ஹல் யுஸ்த்தஹப்பு லி அஹ்லிஹி….கிதாபுல் வஸாயா)
8. ஒரு பெண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் ஹஜ் செய்யாத நிலையில் மரணமடைந்து விட்டார்கள். அவர்களைத் தொட்டும் நான் ஹஜ்ஜு செய்யலாமா? என்று கேட்டார். ஆம். செய்யலாம். அவர்களுக்காக நீர் ஹஜ்ஜு செய்வீராக!' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதி ஹதீஸ் எண்: 667 பாபு மா ஜாஅ பில் முதஸத்திகி கிதாபுஸ்ஸகாத்)
9. ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;டம் வந்து நாயகமே! எனது சகோதரி ஹஜ் செய்வதற்கு நேர்ச்சை செய்திருந்தாள். ஆனால் அவள் மரணித்து விட்டாள் என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் மீது கடன் இருந்தால் நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அவர் பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வுக்கு (செலுத்த வேண்டிய கடனை) நிறைவேற்றிவிடுவாயாக. அவன் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று கூறினார்கள்.
(புகாரி ஹதீஸ் எண்: 6699 பாபு மன் மாத்த வஅலைஹி நத்ருன் கிதாபுல் அய்மானி வந்நுதூரி)
10. நிச்சயமாக ஒரு மனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறைவேற்றப்பட வேண்டியது) இருக்கிறது. அவர்களைத் தொட்டும் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரைப் பார்த்து 'உனது தாயார் மீது கடன் இருந்தால் நீர் அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு 'ஆம்' என்று பதில் கூறினார். அப்படியானால் அல்லாஹ்வின் கடனாகிறது நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமாக இருக்கிறது என்று கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1148-155 பாபு கலாயிஸ் ஸியாமி அனில் மய்யித்தி கிதாபுஸ் ஸியாம்)
11. நிச்சயமாக ஒரு பெண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே! எனது தாயார் இறந்து விட்டார்கள். அவர்கள் மீது ஒரு மாத நோன்பு (நிறைவேற்றப்பட வேண்டியது) இருக்கிறது. அவர்களைத் தொட்டும் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார்கள். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண்ணைப் பார்த்தது உனது தாயார் மீது கடன் இருந்தால் நீர் அதை அவர்களைத் தொட்டும் நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அந்தப் பெண் பதில் கூறினார்கள் அப்படியானால் அல்லாஹ்வின் கடனாகிறது நிறைவேற்றப்படுவதற்கு மிக ஏற்றமாக இருக்கின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஸ்லிம் ஹதீஸ் எண்: 1148-154 பாபு களாஇஸ் ஸியாமி அனில் மைய்யித்தி கிதாபுஸ் ஸியாம்)
12. ஸய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை இரு ஆடுகளை குர்பானி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ஸய்யிதினா ஹனஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து ஏன் இரண்டு குர்பானி கொடுத்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் தமக்காக ஒரு குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத் செய்திருந்தார்கள். ஆகையால் இவ்விரண்டில் ஒன்று அவர்களுக்கும் எனக்கும் என்று கூறினார்கள்.
(அபூதாவூத் ஹதீது எண்: 2790 உழ்ஹிய்யத்தி அனில் மய்யித்தி கிதாபுல் ழஹாயா, திர்மிதி ஹதீது எண்: 1495 பாபு மா ஜாஅ பில் உழ்ஹிய்யத்தி அனில் மய்யித்தி கிதாபுல் அலாஹி, மிஷ்காத் ஹதீது எண்: 1462 பாபுல் உழ்ஹிய்யா)
14. யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கியவன் தத்தளிப்பது போல கப்ரில் மரணித்த மய்யித்து தனது தந்தை அல்லது தனது தாய் அல்லது சகோதரன் அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து துஆவை எதிர்பார்க்கிறது. அப்படி ஏதேனும் ஒரு துஆ அந்த மய்யித்தை சென்றடையுமானால் அதை துன்யா மற்றும் அதில் உள்ளவற்றை விட மிகப் பிரியமாக கருதுகிறது. நிச்சயமாக அல்லாஹு தஆலா பூலோகவாசிகளின் பிரார்த்தனை மூலம் கப்ருவாசிகளுக்கு மலைகளைப் போன்று ரஹ்மத்துகளை நுழைவிக்கிறான். இறந்தவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவது உயிரோடு இருப்போர் மரணித்தவர்களுக்காக வழங்குகின்ற சன்மானமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக செய்யிதினா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(பைஹகி ஹதீது எண் 7904, மிஷ்காத் ஹதீது எண் 2355 பக்கம் 206 பாபுல் இஸ்திஃபார், அத்தத்கிரா பாகம் 1 பக்கம் 103 பாபு மா ஜாஅ பீ கிராஅத்தில் குர்ஆனி இந்தல் கப்ரி ஹாலத்தத் தபனி வ பஃதஹு)
ஆகவே இதுவரை கூறப்பட்ட ஆதாரங்கள் மூலம் இறந்துவிட்ட பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்கின்ற நற்காரியங்களும், இறந்து போன பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் செய்கின்ற நற்காரியங்களும,; இறந்து விட்ட தனது உடன் பிறந்த சகோதரனுக்காக அவனுடைய உடன்பிறந்த சகோதரன் செய்யும்' நற்காரியமும,; இறந்துவிட்ட ஒரு நண்பனுக்காக அவன் நண்பன் செய்யும் நற்காரியமும், ஒரு மரணித்துவிட்ட மார்க்க அறிஞருக்காக (அவரிடம் பயின்ற மாணவர்கள் மற்றும் அவருடைய நல்லுபதேசதைக் கேட்டு அதன்படி நடந்து வந்த பொதுமக்கள் மூலம்) அவர் கற்பித்த கல்வியின் பயனும் அவர்களைப் போய் சேரும் என்பதை தெளிவாக அறிந்தோம்.
ஓர் இறந்து விட்ட முஃமினான சகோதரருக்காக மற்றொரு முஃமினான சகோதரர் (அவ்விருவருக்கிடையே எவ்வித உறவு மற்றும் நட்புமின்றி) செய்யும் நற்காரியங்கள் அவரைப் போய்ச் சேரும் என்பதற்கு ஒரு சில ஆதாரங்களைப் பார்ப்போம்.
1. இறiவா! எங்களுக்கும் எங்களுக்கு முன் மரணித்து சென்றுவிட்ட எங்களின் முஃமினான சகோதரர்களுக்கும் (பாவங்களைப் பொறுத்து அருள் புரிவாயாக!) என்று பின்னால் வந்தவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுகிறான். (சூரா அல் ஹஷ்ர் 10)
2. அர்ஷை சுமக்கின்ற மலக்குகள் முஃமின்களுக்காக பிழை பொறுக்கத் தேடுகிறார்கள். (சூரா அல் முஃமின் வசனம் 7)
3. இறைவாஞ எனக்கும் எனது பெற்றோர்களுக்கும் ஏனைய முஃமின்களுக்கும் பிழை பொறுத்து அருள்வாயாக! என்று இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். (சூரா இப்றாஹீம் வசனம் 41)
4. மேலும் மய்யித்திற்காக நீங்கள் தொழுது முடித்து விட்டீர்களானால் மய்யித்திற்கு தூய்மையான எண்ணத்துடன் துஆ செய்யுங்கள் என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(இப்னு மாஜா ஹதீது எண் 1497 பாபு மா ஜாஅ பித் துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், அபூதாவூத் ஹதீது எண் 3199 பாபுத் துஆஇ லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1674 கிதாபுல் ஜனாயிஸ்)
5. யா அல்லாஹ் எங்களில் ஹயாத்தாக உள்ளவர்களுக்கும் எங்களில் மரணித்தவர்களுக்கும் பிழை பொறுப்பாயாக! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்று அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இப்னு மாஜா ஹதீது எண் 1498 பாபு மா ஜாஅ பித் துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் ஹதீது எண் 1675 பக்கம் 146 கிதாபுல் ஜனாயிஸ்)
6. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்து முடித்துவிட்டால் அவ்விடத்தில் நிற்பவர்களாக ஆகியிருந்தார்கள். மேலும், உங்களின் சகோதரருக்காக பழை பொறுக்கத் தேடுங்கள். பிறகு அவருக்காக தஸ்பீத்தையும் கேளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர் இப்போது கேள்வி கேட்கப்படுவார் என்று கூறுவார்கள் என்று உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அபூதாவூத் ஹதீது எண் 3221 பாபு இஸ்திங்பாரி இந்தல் கபுரி லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 26 ஹதீது எண் 133 பாபு இஸ்பாத்தி அதாபில் கபுரி)
குறிப்பு: தஸ்பீத்து என்பது இறiவா! தரிபாடான சொல்லைக் (கலிமா ஷஹாதாவைக்) கொண்டு இந்த மய்யித்தைத் தரிபடுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்திப்பதாகும்.
7. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமின்களை அடக்கிய பின் அவர்களின் கபுருக்கு பக்கத்தில் நின்று பிரார்த்திக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்று ஸுயூத்தி இமாம் அவர்கள் தாங்கள் எழுதிய அஸ்பாபுன் நுஸுல் என்ற கிரந்தத்தில் (நபியே! இறந்து விட்ட முனாபிக்கானவர்களில் எவரின் மீதும் தொழ வேண்டாம். மேலும் அவர்களின் கபுரின் மீது நிற்கவும் வேண்டாம் என்ற சூரா அத் தவ்பா 84 வது வசனத்தின் விளக்கவுரையில்) குறிப்பிட்டுள்ளார்கள்.
8. நபியே! நீங்கள் அவர்களுக்காக பிரார்த்தியுங்கள். நிச்சயமாக உங்களின் பிரார்த்தனை அவர்களுக்கு ரஹ்மத்தாக (அருளாக) இருக்கின்றது. (சூரா அத்தௌபா வசனம் 103)
9. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து குர்பானி செய்தபின் யா அல்லாஹ்! இதனை எனக்காகவும் எனது குடும்பத்தினருக்காவும், எனது உம்மத்துக்காகவும் ஏற்றுக் கொள்வாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்.
(முஸ்லிம் ஹதீது எண் 1967-19 பாபு இஸ்த்திஹ்பாபில் ழஹிய்யா வ தபிஹிஹா முபாஷரத்தன் கிதாபுல் அழாஹி, அபூதாவூத் ஹதீது எண் 2792 பாபு மா யுஸ்த்தஹப்பு மினல் ழஹாயா கிதாபுல் லஹாயா, மிஷ்காத் பக்கம் 127 ஹதீது எண் 11454 பாபுன் பில் உழ்ஹிய்யத்தி)
10. கருத்த நிறம் கொண்ட பெண்மணி ஒருத்தி நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலை (கூட்டி) சுத்தம் செய்பவளாக இருந்தாள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை சில நாட்கள் காணவில்லை. அதனால் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அந்தப் பெண் இறந்து விட்டாள் என்று கூறினார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைப் பற்றி எமக்கு நீங்கள் அறிவித்து இருக்கக் கூடாதா? என்று கேட்டு விட்டு அவளின் கப்ரை எனக்கு காட்டுங்கள் என்று கூறினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவளின் கப்ரை காட்டி கொடுத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணின் மீது தொழுதார்கள். பிறகு நிச்சயமாக இந்த கபுர்கள் அந்த கபுர்வாசிகளின் மீது இருளால் நிறப்பப்பட்டவைகளாக இருக்கின்றன. நிச்சயமாக நான் அவைகளின் மீது தொழுத காரணத்தினால் அல்லாஹு தஆலா அந்த மண்ணறைகளை அந்த மண்ணறை வாசிகளுக்கு ஒளிமயமானதாக ஆக்கிக் கொடுத்து விட்டான் என்று கூறினார்கள்.
(புகாரி ஹதீது எண் 1337 பாபுஸ்ஸலாத்தி அலல் கப்ரி பஃத மா யுத்பனு கிதாபுல் ஜனாயிஸ், முஸ்லிம் ஹதீது எண் 956 பாபுஸ்ஸலாத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ், முஸ்னத் அஹ்மத் பாகம் 2 பக்கம் 388, மிஷ்காத் ஹதீது எண் 1659 பக்கம் 145 பாபுல் மஷ்யி பில் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண் 1533 பாபு மா ஜாஅ பிஸ்ஸலாத்தி அலல் கப்ரி கிதாபுல் ஜனாயிஸ்)
11. இறைவா! நாங்கள் இந்த மய்யித்திற்காக பரிந்துரை செய்கின்றோம்(எங்கள் பரிந்துரையை ஏற்று) இவரின் பாவங்களை பொருத்தருள்வாயாக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸா தொழுகையில் பிரார்த்திப்பார்கள்.
(அபூதாவூத் ஹதீது எண்: 3200 பாபுத் துஆஇ லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், அஹ்மத் பாகம் 2 பக்கம் 458, மிஷ்காத் பக்கம் 147 ஹதீது எண் 1688 பாபு மஷ்யி பில் ஜனாஸா)
12. ஒரு முஸ்லிம் மய்யித்திற்கு தொழுகை நடத்தும் நேரத்தில் முஸ்லிம்கள் மூன்று ஸப்புகளாக நின்று தொழுவார்களானால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த மய்யித்திற்கு சுவர்க்கத்தை வாஜிபாக்கி விடுவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அபூதாவூத் ஹதீது எண்: 3166 பாபுன் பிஸ் ஸுபூப்பி அலல் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ், திர்மிதி ஹதீது எண் 1028 பாபு மா ஜாஅ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸத்தி வஷ்ஷபாஅத்தி லில் மைய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண்: 1490 பாபு மா ஜாஅ பீ மன் ஸல்லா அலைஹி ஜமாஅத்துன் மினல் முஸ்லிமீன் கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 147 ஹதீது எண் 1687 பாபுல் மஷ்யி பில் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ்)
13. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸதவிற்கு தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய துஆவிலிருந்து சிலதை நான் பாடமாக்கி கொண்டேன். இறiவா! இந்த மய்யித்தின் குற்றத்தை மன்னித்து அதன் மீது கிருபை காட்டுவாயாக! மேலும் அவருக்கு நற்சுகத்தைக் கொடுப்பாகயாக! அவரின் பிழைகளை பொறுத்தருள்வாயாக! அவருக்குரிய விருந்துபசசாரத்தை சங்கையாக்கி வைப்பாயாக! அவரின் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! மேலும் அவரை நீராலும், பனிக்கட்டியாலும், ஜஸ் கட்டியாலும் கழுகுவாயாக! மேலும் வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து கழுவி சுத்தமாக்குவது போல அவரின் பாவத்தை விட்டு அவரை பரிசுத்தப்படுத்துவாயாக! அவரின் வீட்டை விட சிறந்த வீட்டை அவருக்கு பகரமாக்கி கொடுப்பாயாக! அவரின் குடும்பத்தை விட சிறந்த குடும்பத்தையும் அவரின் மனைவியை விட சிறந்த மனைவியையும் அவருக்கு பகரமாக்கி கொடுப்பாயாக! அவரை சுவனத்தில் நுழையச் செய்வாயாக! மேலும் கப்ருடைய வேதனையிலிருந்தும் நரகத்துடைய வேதனையிலிருந்தும் அவரைக் காப்பாற்றுவாயாக! என்று துஆ செய்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த இந்த துஆவின் பெருமிதத்தைக் கண்ட போது நானே அந்த மய்யித்தாக ஆகியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே! என்று நினைத்தேன் என்று அவ்பு பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
(முஸ்லிம் ஹதீது எண்: 963-85 பாபுத் துஆயி லில் மய்யித்தி கிதாபுல் ஜனாயிஸ், இப்னுமாஜா ஹதீது எண்: 1500 பாபு மாஜாஅ பித்துஆஇ பிஸ் ஸலாத்தி அலல் ஜனாஸாத்தி கிதாபுல் ஜனாயிஸ், நஸாயி பாகம் 4 பக்கம் 73 பாபுன் அத்துஆஇ பில் ஜனாஸா கிதாபுல் ஜனாயிஸ், மிஷ்காத் பக்கம் 145 ஹதீது எண்1655 பாபுல் மஷ்யி பில் ஜனாஸத்தி கிதாபுல் ஜனாயிஸ்)
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு:
14. ஒரு நாள் சில ஸஹாபாக்கள் ஒரு ஜனாஸாவிற்கு பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது (அவர்கள் அனைவரும்) அந்த ஜனாஸாவைப் பற்றி புகழ்ந்து கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாஜிபாகிவிட்டது- கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். அதன்பிறகு வேறொரு ஜனாஸாவிற்கு பக்கத்தில் நடந்து சென்றார்கள். அப்போது அந்த ஜனாஸாவைப் பற்றி எல்லோரும் இகழ்ந்து பேசிக் கொண்டார்கள். அப்போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஜபத் என்று கூறினார்கள். அப்போது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாயகமே! என்ன வாஜிபாகிவிட்டது என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதோ இவரை நீங்கள் எல்லோரும் நல்லவர் என்று புகழ்ந்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் வாஜிபாகிவிட்டது என்று கூறினேன். மற்றவரை ப்றறிக் குறையாகப் பேசிக் கொண்டீர்கள் எனவே அவருக்கு நரகம் வாஜிபாகிவிட்டது என்று கூறினேன. நீங்கள் பூமயில் (உள்ள) அல்லாஹ்வின் ஷுஹதாக்களாக-சாட்சியாளர்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். (வேறொரு அறிவிப்பில் முஃமின்கள் பூமியில் (உள்ள) அல்லாஹ்வின் ஷுஹதாக்கள் என்று கூறினார்கள்) என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி ஹதீது எண் 1367 பாபு தனாஇன் நாஸி கிதாபுல் ஜனாஇஸ், புகாரி ஹதீது எண் 2642 பாபுன் தஃதீலு கம் யஜ்ஸு கிதாபுஷ்ஷஹாதத், முஸ்லிம் ஹதீது எண் 949-60 பாபுன் பீ மன் யுத்னா அலைஹி கைருன் அவ் ஷர்ருன் மினல் மௌத்தா கிதாபுல் ஜனாஇஸ், திர்மிதி ஹதீது எண் 1059 பாபு மா ஜாஅ பித்தனாஇல் ஹஸனி அலல் மய்யித்தி, நஸாயி ஹதீது எண் 1931 பாபுஸ் ஸனாயி கிதாபுல் ஜனாயிஸ், அஹ்மத் பாகம் 03 பக்கம் 281 ஹதீது அனஸ் ரலியல்லாஹு அன்ஹு, மிஷ்காத் ஹதீது எண் 1662 பாபுல் மஷ்இ பில் ஜனாஸத்தி-கிதாபுல் ஜனாஸா)
குறிப்பு:1
ஷாபி மத்ஹபின் முக்கிய இமாம்களில் ஒருவரும் முஸ்லிம் ஷரீபுக்கு விளக்கவுரை எழுதியவர்களுமான இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தாங்களின் அல் அத்கார் என்ற நூலில் மய்யித்தைப் பற்றி மற்றவர்கள் சொல்கின்ற நல்ல சொற்கள் கூட மய்யித்திற்கு பயன் அளிக்கும் என்று தலையங்கம் அமைத்து அதற்கு கீழ் மேற்கூறப்பட்ட ஹதீஸை கொண்டு வந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஆகவே இதுவரை கூறிய திருவசனங்களும் நபிமொழிகளும் ஒருவர் தொழுத தொழுகை அவர் ஓதிய இஸ்திஃபார் தஸ்பீத், துஆ மற்றும் நற்காரியங்களின் பலன்கள் அவரைப் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகள் அனைத்தும் இறந்தவர்களுக்கு (அவர்களின் முயற்சி இன்றியே) போய்ச் சேருகிறது என்பதைத் தெளிவாக காட்டுகின்றன.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "இறந்தவர்களுக்கு கத்தம் ஓதுவது பற்றி இஸ்லாம் தரும் தீர்ப்பு என்ன?"

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam


அத்தஸவ்வுபு(التّصوّف)
தொகுப்பாளர்:

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரிஅவர்கள்.

என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.உஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.
மிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக!
اوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.
இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது.
ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.
வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.
'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும்.
இம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர் வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.
1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்,
نُسمّي بصوفي منزل للتّبرّك . بمنزل اصحاب النّبي اهل الصّفّة
நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.
4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
ஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!
இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன்.
இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.
அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்ஹகீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும்,சங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்)
மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம் அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும்எழுதவில்லை.
முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள்.
நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக! ஆமீன்.
சமுதாய ஊழியன்,
S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன்
அத்தஸவ்வுபு-ஸூபிஸம்
சுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது.
எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.
அவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை.முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.
அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது.
இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும்.
மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள்.ஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள்.ஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.
'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.அவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல.
முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள்.
சரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.
معرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது.
அல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه 1. தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன் என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.
2. தஷ்பீஹின் تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான
3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض
ليس كمثله شييٌ
அதாவது:-
லைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,வலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல் அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின் تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,
ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும்.
அல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.
சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான்.
فانْ قلت بالتّنزيه كنْت مقيّدًا وان قلت با لتّشْبيه كنت محمدّدًاوان قلت بالامرين كنت مسدّدًا وكنت اماما فيامعارف سيدًافمن قال بالاشفع كان مشرّكًا ومن قال بالافراد كان موحّدًافايّاك والتّشبيه ان كنت ثنيًا واياك واتّنويه ان كنت مفردًا
'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய்
ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான்.
ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்! தவிர்த்து கொள்!!
(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்!
இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும்.
وماالوجه الّا واحدٌ غير انّه اذاانت اعددتّ المراياتعدّدا
'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.'
சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.
ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.
انّما الكون خيال فهو حقٌ في ال حقيقة . كلّ من يفهم هاذا حاز اسرار الطّريقة
'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.
உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை.
மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة
ரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15 சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.
மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!)
அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.
1. அல் அஹதிய்யத்- الاحديّة தனித்தன்மையானது.அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாததுஅல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது.அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம்.ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம்.ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம்.அல்அமா-விபரமில்லாதது.அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து.அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.
2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது.அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு.அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம்.மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது.அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.
3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது.அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்புஅல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம்.காப கௌஸைனி-இரு வில்லின் நாண்.மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம்.இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.
4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம்.ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம்.ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.
5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்)ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.
6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம்.ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம்.ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.
7. அல்இன்ஸான் -மனிதன்.இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க!
ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.
உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள்.மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.
மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.
இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.
'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.
படித்தரங்களுக்கிடையில் பாகுபடுத்துவது:
بر مر تبة ازوجودحكم دارد . كر فرق مراتب نه كني زنديقي
ஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி.
'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது.
எவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான்.
ஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான்.சகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்! கவனம்!!
الوجود الحقيقي – الوجود الاضافي – العينيّة – الغيريّة
அல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்:
ஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும்.
ஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது.
ஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது.
பாருங்கள்! ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும்.
இதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை.
ஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை.
குமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும்.
இதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும்.
كلّ شيي هالك الاّ وجهه
குல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்தை)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான்.
ஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது.
ஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும்.
ஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும்.சுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றிஉஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்?அவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்?தன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா? என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:-
وما خلقت الجنّ والانس الاّ ليعبدون
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன்.
'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும்.
குறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை.
அஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது
ஷுஹூது- காட்சி காண்பது இருவகை:
1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
இவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும்.
2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
இவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும்.
இவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்!
குறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள்.
காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள்
சிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும்.அதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.குறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும்.இங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர் வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
2. اقرأ كتابك كف بنفسك اليوم عليك حسيبا
இக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும்.
3. قل ان كنتم تحبّون الله فاتبعوني يحببكم الله
குல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.
இம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும்.குளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது.
அல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம்.
அல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும்.
1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:-
لا يزال عبدي يتقرّب اليّ بانّوافل حتّي احبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصره بهويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها – رواه البخري
'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.'(அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260.
'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும்.
அப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.
2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது.
ما تقرّب الي عبدي بشيي احبّ الي ممّا افترضت عليه
என்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை.நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260
'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும்.
'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.
அடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான்.
இவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும்.
ஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது.
முறாக்கபா செய்யும் முறை
குற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள்! அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும்.
இரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும்.
முறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும்.
இரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும்.
சங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன்.
மிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:-
ஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும்.
மனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும்.
உலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம்.
அதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்.
இன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும்.
அதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும்.
ஆண்டவா! உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!!
குறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
اسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை:
அகமிய இறைவழி நடை ஆறு வகை:
1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது.2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது.3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது.4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும்.5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும்.6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும்.
வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள்
ولله المشرق والمغرب فاينما تولّوا فثمّ وجه الله
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115)
ونحن اقرب اليه من حبا الوريد
நாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16)
وهو معكم اينما كنتم
நீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4)
ونحن اقرب اليه منكم ولاكن لا تبصرون
(மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85)
انّ الّذين يبا يعونك انّما يبايعون الله يد الله فوق ايديهم
(நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10)
هو الاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيي عليم
அவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில் வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3)
وفي انفسكم افلا تبصرون
உங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா? (51:21)
واذا سئلك عبادي عنّي فانّي قريب
(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!) (2:186)
وما رميت اذ رميت ولاكنّ الله رمي
(நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17)
وكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126)
الا انّه بكلّ شيي محيطஅறிந்து கொள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54)
வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள்.
اصدق كلمة قالها الشاعر كلمة لبيد—الا كلّ شيئ ما خلا الله باطل . (متفق عليه)
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "அத்தஸவ்வுபு-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates