Elegant Rose - Diagonal Resize 2 தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு! ~ TAMIL ISLAM

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!

தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!


எழுதியவர்:- மௌலானா மௌலவி அஷ்ஷெய்குல் காமில் அல்ஹாஜ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள்.
முன்னுரை:
அஸ்ஸலாமு அலைக்கும்.
இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபடட்ட கொள்கைகளையுடையவர்களை மக்கள் மத்தியில் இனம் காட்டி அதைவிட்டு விலகி இருக்கச் செய்து  மக்கள் நேரான பாதையில் சென்று சொர்க்கத்தை அடையும் செய்யும் பணியை இறைநேசர்களும், ஷெய்குமார்களும், சாலிஹீன்களும் தொடர்ந்து அக்காலம் தொட்டே செய்து வருகின்றனர். அதில் தமிழகத்தில் புதிதாக காலூன்றிய தப்லீக் ஜமாஅத் என்ற இயக்கத்தைப் பற்றியும் அதன் தலைவர்கள், அவர்களின் வஹ்ஹாபியக் கொள்கைகள் பற்றியும் மக்கள் மத்தியில் தனி ஒரு நபராக நின்று  அவர்களின் முகத்திரையைக் கிழித்து மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியவர்கள் காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான். இதற்காக பல்வேறு நூல்களும், பிரசுரங்களும், விவாதங்களும், மார்க்க உரைகளும் நிகழ்த்தியுள்ளார்கள்.
தப்லீகு ஜமாஅத் பற்றிய நமது சுன்னத் ஜமாஅத்தினர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விதமாக பதில் கூறுவதாக கூறிக் கொண்டு தப்லீகு இயக்கத்தைச் சார்ந்த மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி என்பவர் தமிழில் வெளியிட்டார். அதில் அவர் பதில் கூறுவதாக கூறிக் கொண்டு, மீண்டும் குப்ர் என்னும் சேற்றிலே வீழ்ந்து குப்ரிலே மடிவதைப் பார்த்து அவர்களின் மடத்தனமான பதில்களுக்கு ஷெய்குநாயகம் ஸூபி ஹஜ்ரத் அவர்கள் எழுதிய பதில் கட்டுரை அந்நளை 'ஹுஜ்ஜத்' மாத இதழில் 1980 ம் ஆண்டு வெளிவந்தது. அதில் வெளிவந்த கட்டுரையை இதில் பிரசுhரித்துள்ளோம். 'ஹுஜ்ஜத்' பத்திரிகை வெளிவருவது நின்று போனதால் அதில் வந்த இந்த பதில் கட்டுரை முழுமை பெறாமல் நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் எமக்கு  ஷெய்குனா அவர்கள் எழுதிய இக் கட்டுரையின் மீதிப் பகுதி கிடைக்கவில்லை. கிடைத்ததும் மீதிப் பகுதிகள் வெளியிடப்படும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்.
தன்னறிவில்லா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டு!
அன்பர்களே!
இல்யாஸ் தப்லீகின் தலைவர்கள் ஷரீஅத் கொள்கைகளுக்கு புறம்பான அநேக புரளிகளை தங்கள் கிரந்தங்களில் வரைந்து வைத்துள்ளனர்.
இவைகளை மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் அத்தவறுகளை கண்டித்தும் அவைகளுக்கு தக்க பதில்களையும், ஸுன்னத் வல் ஜமாஅத் மாமேதைகள் எழுதி கோடிட்டு காட்டியுள்ளனர்.
எனினும் தவறுதல்களுக்கு வழிபோய் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்கி மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி என்பார் 'தகாத குற்றச் சாட்டும் தக்கபதிலும்' என்ற பெயரால் மக்களை ஏமாற்றும் வண்ணம் ஒரு நூலை தானே புரிய முடியாத வகையில் பதில் என்ற பெயரால் ஏதேதோ எழுதி வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த ரசமான ஆராய்ச்சிக் கட்டுரை 2-வது குறு;றச்சாட்டின் அவரது தன்னறிவிலா தக்கபதிலுக்கு தகுந்த விதமாக தலையில் தட்டாகும். விருப்பு-வெறுப்பு அன்றி உணர்ந்து ஆராய்வோருக்கு இது ஒரு நல்ல விருந்து.
(ஆசிரியர்)
குற்றச்சாட்டு 2:
மௌலானா இஸ்மாயில் ஷஹீது அவர்கள் மீது 'தொழுகையில் ஷெய்கு அவர் போன்ற பெரியார்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களானாலும் சரிதான். இவர்களுடைய ஞாபகம் வருவதானது ஜினா செய்கிற நினைப்பும் ஏன் தனது ஆடு, மாடு, கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டதாகும்.
(ஸிராதே முஸ்தகீம்)
பதில் 2:
நூலுக்கு நூல் வேறுபாடு
மேற்கண்ட வாக்கியம் ஹஜ்ரத் இஸ்மாயில் அவர்கள் எழுதியதாம். தப்லீக்கையும் அதன் தலைவர்களையும் தாக்கி எழுதப்பட்ட நூலொன்றிலிருந்து இவ்வாக்கியம் அப்படியே எடுத்தெழுதப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நமது மறுப்பாளர்கள் எழுதிய நூற்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் இவ்வாக்கியம் வௌ;வேறு மாதிரி எழுதப்பட்டுள்ளது. ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம். ஒன்றில் குறைவு. ஒரே நூலிலிருந்து எடுத்தெழுதப்படுவதில் வேறுபாடு ஏன் வருகிறது?
ஸிராதே முஸ்தகீம் யார் எழுதியது?
இஸ்மாயில் ஷஹீது எழுதிய ஸிராதே முஸ்தகீம் என்று கூறுகிறார்கள். ஷஹீது அவர்கள் இப்படி ஒரு நூல் எழுதவேயில்லை. ஆம். ஆச்சரியப்பட வேண்டாம்.உண்மை அதுதான். மறுப்பு எழுதப் புறப்படுவோர் அட்டைகளை மட்டும் பார்த்து ஏமாந்து விட்டால் எப்படி? சற்று ஆராய்ந்தும் பார்க்க வேண்டாமா? உண்மையில் இந்த நூல் இஸ்மாயில் ஷஹீது அவர்களது ஷெய்குனா ஹஜ்ரத் ஸெய்யித் அஹ்மது ஷஹீது அவர்களது பேச்சுத் தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் நான்கு பகுதிகள் உள்ளன. அவற்றில் முதலாவதும் மூன்றாவதும் ஷஹீது அவர்கள் தொகுத்ததுதான். ஆனால் குற்றச்சாட்டு வாக்கியம் இவ்விரண்டு பகுதியில் உள்ளதல்ல. இரண்டாம் பகுதியிலே உள்ளதாகும். இது ஸெய்யித் அஹ்மது ஷஹீது அவர்களது முரீதுகளில் ஒருவரான மௌலானா அப்துல்ஹை ஸாஹிபு (ஷாஹ் அப்துல் அஸிஸ் தெஹ்லவியின் மருமகனார்) அவர்களால் தொகுக்கப்பட்டதாகும். ஆக குற்றச்சாட்டுப் பகுதி இஸ்மாயில் ஷஹீது எழுதியதுமல்ல. தொகுத்ததுமல்ல.
இல்லாததை எழுதுவது ஏனோ?
மறுப்பாளர்களது எந்த நூலிலும், ஸிராதே முஸ்தகீமில் உள்ள உண்மையான வாக்கியம் காணப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியத்தில் 'ஜினா செய்கிற நினைப்பும்'  என்பது வாக்கியத்தின் இடையிலில்லாத ஒன்று. இங்கு குறிப்பிடப்பட்ட வாக்கியத்தில் அஸல் நூலில் இப்படி ஒன்று இல்லவே இல்லை. இருக்கிறது என்றதால் அது இதற்கு மேலுள்ள வாக்கிய முடிவில் இருக்கிறது. இந்த வாக்கியத்தின் இடையில் அல்ல. வேண்டுமானால் தேவ்ந்து ராஷஷிது கம்பெனரியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகிமில் 97 வது பக்கத்தில் இரண்டாவது வரியைப் பாருங்கள். அஸல் நூல் பார்ஸி மொழியில் உள்ளது. அதை உர்துவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகளைச் செய்து பரேலியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து இவர்களும் கூறிவிட்டார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ஆக உண்மையில் குற்றம் சாட்டப்படும் வாக்கியம் நூலில் இந்த விதமாக இல்லை. அப்படி யாரும் காட்ட முடியாது.
அவருடைய இந்த கட்டுரயின் சாராம்சம்:
1. ஸிரதே முஸ்தகீம் இஸ்மாயில் சாஹிபு கோர்வை செய்த நூலல்ல. அது ஸெய்யித் அஹ்மத் அவர்களின் வாசகத் தொகுப்புதான். அதை தொகுத்தவர்தான் இஸ்மாயில் ஷஹீது.
2. குற்றச்சாட்டு வாசகம் தொழுகையில் செய்கு, அவர் போன்ற பெரியர்கள், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களானாலும் சரிதான். இவர்களுடைய ஞாபகம் வருவதானது, ஜினா செய்கிற நினைப்பும் ஏன் தனது ஆடு, மாடு, கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதை விடவும் கெட்டதாகும். இது மறுப்பாளர் ஒருவரின் நூலொன்றிலிருந்து அப்படியே எடுத்தெழுதப்பட்டுள்ளது.
3. மறுப்பாளர்கள் எழுதிய நூற்கள் ஒவ்வொன்றிலும் வௌ;வேறு விதமாக, ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம் ஒன்றில் குறைவு.
(வேறே இன்ன நூலில் இன்ன விதம் எழுதப்பட்டுள்ளது என்று காட்டப்படவில்லை)
4. குற்றச்சாட்டு வார்த்தை ஸெய்யிது அஹ்மத் ஸாஹிபுடைய வார்த்தை. அதை தொகுத்தவர் மெலான அப்துல் ஹை அவர்கள்தான். ஆகையினால் குற்றச்சாட்டு வார்த்தை இஸ்மாயில் ஸாஹிபு எழுதியதுமல்ல. அவர்கள் தொகுத்ததுமல்ல. (குற்றச்சாட்டு வார்த்தை 'ஜினா செய்கிற நினைப்பு…. என்பது மட்டும்தான் என்றும் அதை சொன்னது செய்யிது அஹ்மது அவர்கள்தான்.  அதைத் தொகுத்தது மௌலானா அப்துல் ஹை அவர்கள்தான். ஆகையால் அதற்கு பொறுப்பாளி இஸ்மாயில் ஸாஹிபு இல்லை. என்றும் கருதுகிறார் போல்)
5. (குற்றச்சாட்டு வாக்கியமான) ஜினா செய்கிற நினைப்பு…. என்பது வாசகத்தின் இடையில் இல்லை. அது வாசகத்தின் மேலாலுள்ள வாக்கியத்தின் முடிவில் இருக்கிறது. வேண்டுமானால் ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட 'ஸிராதே முஸ்தகீமை' பாருங்கள். குற்றச்சாட்டு வாசகமான 'ஜினா செய்கிற நினைப்பும்…' என்பது வாசகத்தின் நடுவில் இல்லாத்ததனால் அது குற்றச்சாட்டு வாசகமாக ஆகாதென்றும் ஆகையினால் செய்யித் அஹ்மது, மௌலானா அப்துல் ஹை இவர்கள் இருவருங்கூட அதற்கு பொறுப்பாளிகள் அல்ல என்றும் நினைக்கிறார் போலும்.
அஸல் நூல் பார்ஸி பாiஷயிலுள்ளதை பரேலியர்கள் உர்துவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்து குற்றம் சாட்டுகுpறார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பார்த்துவிட்டு இவர்களும் கூறிவிட்டார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
(ராஷிது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீம் என்ற நூலை கண்திறந்து பார்த்தூனா இப்படி எழுதுகிறார். இல்லை தூக்க மயக்கத்தில் தேவ்பந்தே சொல்வதைக் கேட்டுதான் சொல்கிறார்கள். த.ப. ஆசிரியர் அவர்களே! கண் விழித்து பாருங்கள். அந்த ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமையே வாங்கி வைத்திருக்கிறோம்)
வாசகர்களே!
எதார்த்தத்தில் குற்றச்சாட்டு வாசகம் எதுதான் என்று நன்றாக விளங்கிக் கொள்வதற்காக, இவர்கள் எதை குற்றச்சாட்டு வாசகமென்று விளங்கிக் கொள்கிறார்களோ, அந்த வாசகத்திற்கு கொஞ்சம் மேலாலிருந்தே அதற்கு கீழாலும் கொஞ்சம் வாசகம் வரையிலும் சேர்ந்தாற்போல் ராஷpது கம்பெனியால் அச்சிடப்பட்ட உர்து ஸிராத்தெ முஸ்தகீமிலிருந்து உருது வாசகத்தை தமிழில் எழுதி ஒன்றும் அந்த உரு வாசகத்ததுக்கு தமிழில் மொழிபெயர்த்து ஒன்றும், இத்துடன் வைத்திருக்கிறோம். மேலும் அவற்றில் குற்றச்சாட்டு வாசகமொன்று சொல்லப்படட்ட வாசகத்திற்கு (2) என்றும் அதற்கு மேலாலுள்ள வாசகத்திற்கு (1) என்றும் அதற்கு கீழாலுள்ள வாசகத்திற்கு (3) என்றும் இலக்கமிடப்பட்டிருக்கிறது.
ராஷிது கம்பெனியின் உர்து ஸிராத்தே முஸ்தகீமின் 97-ம் பக்கத்திலுள்ள உர்து வாசகத்தை தமிழில் எழுதப்பட்டது.
1. பமுக்தளாயே – ளுலமாதுன்பஃழுஹா பௌக-பஃளின்-ஜினாகே-வஸ்வஸே ஸே-அப்னீ-பிபீகீ-முஜாமஅத்-கா-கியால்-பெஹ்தர்-ஹே-
2. அவுர்-ஷெய்கு-யா-உஸீ-ஜெய்ஸே-அவுர்-புஸ்ருகோன்-கீ-தரப்-காஹ் ஜனாப்-ரிஸாலத்-மஆப். ஹீ-ஹோன்-அப்னீ-ஹிம்மத்-கூ-லகா தேனா-அப்னே-பைள்-அவுர்-கத்தே-கீ-ஸூரத்-மே முஸ்தஃறிக் ஹோனே-ஸே-ஃபுறாஹே-கி-யௌன்னே- nஷய்க்-கா-கியால் தோ- தஃழீம்-அவர்-புஜ்ரு-கீ-கே-ஸாத். இன்ஸான்கே-தில்-மே-சமட்ஜாதா-ஹே-அவர்பைள்-அவர்-கத்தே-கூ-ந-தோ-இஸ்கதாட. சஷ;பீதகீ-ஹோ-தீ-ஹே-அவ்ர்-ந-தஃழீம்-பல்கே-ஹகீர்' அவுர் தலீல்-கோதா-ஹே. அவுர்-ஙைர்-கீ-ஏ-தஃழீம். அவுர்-புஜ்ருகீ-ஜோ-நமாஜ்-மே-மழ்ஹூல்-ஹோ-ஓ-ஷpர்க்-கீ-தரப்-கீஞ்சுகர்-லேஜாதீ-ஹே.
3. குறிப்பு: ஹாஸில்-கலாம்-இஸ்ஜகா-வஸ்வ ஸோன் கே-தபாவுத்-கா-பயான்-கர்னா-மக்ஸூத்ஹே-
குறிப்பு:- முஜ்தபாயீ அச்சகத்தின் பார்ஸி ஸிராதே முஸ்தகீமில் இப்படி இருக்கிறது.
ப-சற்தீன்-மர்தபா-பத்தர்.
கியாலே-ஆண்.
ராஷிது கம்பெனியின் உருது ஸிராதே முஸ்தகீமின் தமிழாக்கம்.
1. 'இருள்கள், அதில் சிலது சிலதுகு;கு மேலே உள்ளது என்பதற்கொப்ப ஜினா செய்கிற ஊசாட்டத்தை இலேசான நினைப்பை விட தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பு நல்லது. இன்னும்,
2. ஷெய்கு அல்லது அவர் போன்ற வேறு பெரியார்கள், ஜனாப் றஸூலுல்லாஹ் அவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பக்கம் தனது ஹிம்மத்தை – கவனத்தை திருப்புவதானது தனது மாடு கழுதையின் ஸூரத்தில் மூழ்கினவனாக ஆவதை விடவும் கெட்டதாகும். ஏனென்றால் nஷய்குடைய கவனமாகிறது மரியாதை – பெருந்தன்மையோடு மனிதனுடைய கல்பில் பற்றிக் கொள்ளும். மாடு, கழுதைக்கோ இம்மாதிரியான பற்றுதலும், மரியாதையும் உண்டாகாது. எனினும் குறைவானதாக தழுமையானதாகவே வரும். தொழுகையில் மற்றவர்களை இப்படி மரியதையாக உயர்வாக கவனிப்பதும் நினைப்பதுமானது ஷpர்க் அளவில் இழுத்துக் கொண்டு போய்விடும்.
3. முடிவான பேச்சாகிறது இந்த இடத்தில் வஸ்வஸாவின் – ஊசாட்டங்களின் ஏற்ற தாழ்வுகளைப் பற்றி விபரிப்பதாகும்.
குறிப்பு: முஜ்தபாயீ அச்சகத்தின் பார்ஸீ ஸிராதே முஸ்தகீமில் இப்படி இருக்கிறது.
எத்தனையோ தரத்தில் கெட்டதாகும்.
அவர்களுடைய கியால் – கவனமாகிறது.
த.ப. ஆசிரியர் அவர்களே!
தேவ்பந்த் ராஷpது கம்பெனியாரால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமைத்தான் வாங்கி வைத்திருக்கிறோம். அதைப் பார்த்தோம். அந்த நூலின் முன்னால் முகப்பில் 'இது அஸ்மாயில் ஷஹீது அவர்களால் பார்ஸி பாiஷயில் கோர்வை செய்யப்பட்ட நூலுக்கு முஹம்மது அத்ஹர் உதுமானியின் முயற்சியால் உர்துவில் மொழி பெயர்க்கப்பட்ட ஸிராதெ முஸ்தகீம். தேவ்பந் ராஷpது கம்பெனி அஷ;ரபிய்யா குதுப்கானாவில் வெளியிடப்பட்டது' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் நீங்கள் 'அதை உர்துவில் மொழிபெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்து பரேலியர்கள்….. வேண்டியுள்ளது' என்று எழுதியது சுத்தப் பொய்யாகும். பரேலியர்கள் பேரில் படுதூறு சொல்வதாகும். இன்னும் மறுப்பாளர்கள் பேரில் கெட்ட எண்ணம் வைப்பதாகும்.
ஸிராதே முஸ்தகீம் என்ற நூல் இஸ்மாயீல் அவர்களின் nஷய்கு செய்யித் அஹ்மத் அவர்களின் பேச்சுத் தொகுப்பென எழுதியதும் சுத்தப் பொய்யாகும். இது செய்யிது அஹ்மது சாஹிபை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இஸ்மாயில் ஸாஹிபு எழுதியதேதான். இந்த நூலிலேயே இஸ்மாயில் சாஹிபு எழுதி இருப்பதைப் பாருங்கள்.
ராஷpது கம்பெனியின் உருது சிராதே முஸ்தகீம் 3-ம் பக்கத்திலிருந்து 4-ம்; பக்கம் ஆரம்பம் வரை தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது இப்படி:
இஸ்மாயில் சொல்கிறார், 'இந்த நூலை எழுதிக் கொண்டிருக்கிற போது ஹளரத் செய்யித் அஹ்மது சாகிபுடன் ஒன்றாகவே இருக்கிறவர்களிலொருவரான மௌலானா அப்துல் ஹை அவர்களால் எழுதப்பட்ட சில தாள்கள் கிடைத்தது. அதில் மௌலானா அவர்கள் செய்யிது சாஹிபுடைய வாயிலிருந்து கேட்டு எழுதிய உபதேசமான சில கட்டுரைகளுமிருந்தது. அதை பெரும் பாக்கியமாகக் கருதி அப்படியே இந்த நூலின் இரண்டாவது மூன்றாவது பாடங்களில் சேர்த்து விட்டேன்.
இந்த நூலைக் கோர்வை செய்த முறையானது இந்த நூலின் அனேக கட்டுரைகளை ஜனாப் செய்யிது சாஹிபு அவர்கள் சொன்ன வாசகங்களை அப்படியே மொழி பெயர்த்து இருப்பதைப் போன்று இந்த நூலின் சகல கட்டுரைகளையுமே இதே விதமாகவே செய்ய வேண்டி இருந்தது.
ஆனால் அந்தப் பெரியார் அவர்களோ படைகோலத்தின் ஆரம்பத்திலேயே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பூரண ஒப்பாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் படைகோல (புத்தியாகிய) பலகையானது பழக்க வழக்கமான கல்வியறிவுகளை விட்டும் இன்னும் எழுதப் பேச புத்திவான்களுடைய ஒழுங்கு முறைகளையும் விட்டும் பூஜ்யமாக காலியாக இருந்தது.
இதனாலேயே கேட்கிறவர்களுக்கு விளக்கி வைக்க எளிதாக இரு:ப்பதற்காக சில இடங்களில் கொஞ்சம் (வாசகத்தை) முன் பின்னாகவும் சில இடங்களில் கொஞ்சம் பீடிகைகளையும், உவமானங்களையும் சேர்க்கவும் இன்னும் முன்னோர்களின் பரிபாiஷகளோடு சேர்த்தக் காட்ட வேண்டியதும் அவசியமாகிவிட்டது. மேலும் இந்த நூலை எழுதிய பின் அதில் ஒவ்வொரு பகுதியையும் பீர்சாஹிபவர்களிடம் படித்துக் காட்டினேன்'.
சோதரீர்! இஸ்மாயீல் சாஹிபுடைய இந்த வாசகத்தை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த நூல் செய்யிது சாகிபுடைய வாசகத் தொகுப்பாக இருந்தால் அவருடைய வாசகத்தை அப்படியேயல்லவா எழுதியிருக்க வேண்டும்? மொழி பெயர்த்து எழுதினால் அது அவர்களுடைய வாசகமாக ஆகுமா?
செய்யிது சாகிபுக்குத்தான் பழக்க வழக்கமான கல்வியறிவுமில்லை. புத்திமான்களுடைய ஒழுக்க முறைப்படி எழுதப் பேசவுங் கூட தெரியாதே!   இஸ்மாயில் சாகிபுதான் செய்யிது சாகிபை ஒரு பொம்;மையாக வைத்துக்கொண்டு அவர்கள் மதியில்லாமல், முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் அரை குறையான உருதுவில் பேசியதை பார்சி பாiஷயில் மொழி பெயர்த்து சில இடங்களில் வாசகத்தை முன் பின்னாக்கியும், சில இடங்களில் கூட்டியும், குறைத்தும், பீடிகைகள், உவமானங்களை சோத்தும் எழுதி இருக்கிறார்.
மேலும் பீர் சாகிபுடைய அரைகுறையான வார்த்தைகளுக்கு மௌலானா அப்துல் ஹை அவர்கள் மொழி பெயர்த்து வைத்திருந்ததையும் நன்றாகப் பார்த்து அதை அந்த நூலின் இரண்டாவது மூன்றாவது பாடங்களில் சேர்த்துமிருக்கிறார்.
மேலும் அந்த நூலைக் கோர்வை செய்து முடித்த பின் அதன் ஒவ்வொரு பாகத்தையும் பீர்ஜீ அவர்களிடம் சந்தோஷமாக வாசித்துக் காட்டியிருக்கிறார். எனவே ஸிராதே முஸ்தகீம் எனும் நூல் பூராவையும் நன்றாக யோசித்துப் பார்த்து எழுதியவர் இஸ்மாயில் சாஹிபேதான். அதிலுள்ள வாசகங்கள் அத்தனைக்கும் பொறுப்பாளி அவரேதான்! இதனாலேயே மவ்லவி ரஷPது அஹ்மது கொங்கோஹி அவர்களிடத்தில் ஸிராதே முஸ்தகீம், தக்வியத்துல் ஈமான் என்னும் நூற்கள் யாரால் கோர்வை செய்யப்பட்டது? என்று கேட்கப்பட்டபோது 'ஸிராதே முஸ்தகீம், தக்வியத்துல் ஈமான் இவ்விரண்டு நூற்களும் மவ்லவி இஸ்மாயீல் அவர்களால் கோர்வை செய்யப்பட்டது என்று பதில் சொன்னதாக அவரது 'பதாவா ரஷPதிய்யா' பக்கம் 237-ல் எழுதப்பட்டுள்ளது. இந்த ராஷpது கம்பெனியால் அச்சிடப்பட்ட ஸிராத்தே முஸ்தகீம் நூலின் முகப்பிலும் இஸ்மாயீல் ஷPதுவால் பார்ஸியில் கேர்வை செய்யப்பட்ட ஸிராதே முஸ்தகீம் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.
த.ப. ஆசிரியர் அவர்களே! ஸிராதே முஸ்தகீம் செய்யிது அஹ்மது சாஹிபுடைய வாசகத் தொகுப்பாகும் என்றும் இஸ்மாயீல் சாகிபு அப்படி ஒரு நூல் கோர்வை செய்யவே இல்லை என்றும் நீங்கள் சொல்வது சுத்தமான பொய்யாகும்.
சோதரீர்! நன்றாக கவனித்துப் பார்த்தீர்களா? மவுலவி இஸ்மாயில் ஸாஹிபு இவ்விடத்தில் ஊசாட்டங்களின் வகைகளையும், அதன் தரங்களையும் பற்றித் தான் விபரிக்கிறார். அவருடைய வாசகத்திலிருந்து உவமையில் ஒரு வஸ்வஸாகிறது ஜினா செய்கிற வஸ்வஸாகும். இன்னுமொரு வஸ்வஸாகிறது தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பாகும். இவை இரண்டிற்குமிடையில் வித்தியாசமாகிறது தொழுகையில் தனது மனைவியைi ஜிமாஉ செய்கிற நினைப்பு நல்லதாகும் என்றும், இதேபோல் ஒரு வஸ்வஸாகிறது தனது nஷய்கு அல்லது அவர் போன்ற பெரியார் ரஸூலுல்லாஹ்வானாலும் சரி, அவர்கள் பக்கம் தனது கவனத்தை திருப்புவதாகும்.
இன்னுமொரு வஸ்வஸாகிறது தனது மாடு கழுதையுடைய கவனத்தில் மூழ்குவதாகும். இவை இரண்டிற்குமிடையில் வித்தியாசமாகிறது nஷய்கு மற்ற பெரியார் அல்லது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பக்கம் கவனத்தை திருப்புவதானது தனது மாடு, கழுதையுடைய கவனத்தில் மூழ்குவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகும் என்றும் மேலும் தொழுகையில் தனது மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பு கெட்டதுதான் (இருள்தான்) ஆனாலும் (வேசையை ஜினா n சய்கிற நினைப்பை விடவும் அது நல்லதாகும். வேசையை ஜினா செய்கிற நினைப்பு அதைவிட கெட்டதாகும். பெரும் இருளாகும்.இன்னும் அதைவிடவும் கெட்டதாகிறது அதிக இருளாகிறது தனது மாடு கழுதையுடைய ஞாபகம் வருவதாகும். (இவையெல்லாவற்றை விடவும், இன்னும் தனது மாடு, கழுதையுடைய ஞாபகத்தில் மூழ்குவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகிறது எத்தனையோ தரத்தில் கூடின இருளாகிறது nஷய்கு அவர் போன்ற பெரியார் அல்லது றஸூலுல்லாஹ் இவர்களின் பக்கம் தனது கவனத்தை திருப்புவதாகும்; என்றும் நன்றாக விளக்கமாகிறதல்லவா? அஸ்தஃபிருல்லாஹ். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
த.ப. ஆசிரியர் அவர்களே!
கண்ணைத் திறந்து பாருங்கள். ஈமானை சாட்சியாக வைத்து பாருங்கள். எப்படி வாய் கொள்ளாதபடி ஏசுகிறார், திட்டுகிறார். இஸ்லாத்துக்கு பரம விரோதியாகிய காபிரீன்களும் கூட  இப்படி ஏசுவார்களா?
த.பி. ஆசிரியர் அவர்களே!
இவர் சொல்வதைப் போல் இவரைப் பற்றியோ, அல்லது தேவுபந்தியாத் தலைவர்களைப் பற்றியோ உதாரணமாக இஸ்மாயிலை நினைப்பது அல்லது கொங்கோஹி, அம்பேட்டி, தானவீ, நானுத்தவீ இவர்களின் ஞாபகம் வருவதானது ஜினா செய்கிற நினைப்பைக் காணவும் மனைவியை ஜிமாஉ செய்கிற நினைப்பைக் காணவும் இன்னும் மாடு கழுதையுடைய நினைப்பில் மூழ்குவதைக் காணவும், எத்தனையோ மடங்கு கெட்டது என்று யாராவது சொன்னால் உங்கள் மனம் வருத்தப்படாதிருக்குமா? வருத்தப்படாதென்றிருந்தால் நீங்களே இப்படி எழுதிஜ அச்சுப்போட்டு பிரசாரம் செய்யுங்கள். இல்லை ஒரு:போதும் அப்படி செய்ய மாட்டீர்கள். யாரும் அப்படிச் செய்தால் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். முடிந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பீர்கள். தண்டனை கொடுப்பீர்கள்.
அருமை நாயகத்தை இப்படி ஏசுவது அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள் மனம் வருத்தப்படாதா? முஃமீன்களுக்கு அவர்களின் உயிரை விடவும் மேலான கண்மணி, கல்புக் கனியான அருமை நாயகத்தைப் பற்றி இப்படி தரங்கெட்ட வார்த்தையைச் சொன்னால் அவர்களின் மனம் வேதனைப் படாதா? கண்டிப்பாக நாயகம் அவர்கட்கு விளங்கும். அவர்கள் வருத்தப்படுவார்கள். முஃமின்களும் வருத்தப்படுவார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கட்கும் முஃமின்களுக்கும் வருத்தத்தை கொடுத்தவர்களுக்கு அல்லாஹ்வின் கடுமையான தண்டனை கிடைக்கும்.
இஸ்மாயில் அவர்கள் உவமாங் காட்டி எழுதிய அத்தனை வார்த்தைகளுமே ஏச்சுத்தான். அதனால்தான் மறுப்பாளர்களில் சிலர் 'தொழுகையில் றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வருவது தனது மாடு கழுதையில் உருவத்தின் ஞாபகத்தில் மூழ்குவதைக் காண கெட்டது' என்று எழுதியிருக்கிறார் என்றும், வேறு சிலர் இன்னுமொரு வார்த்தையையும் சேர்த்து, 'தொழுகையில் றஸூலுல்லாஹ் உடைய ஞாபகம் வருவது ஜினா செய்கிற நினைப்பைக் காணவும் தனது மாடு கழுதையின் உருவத்தின் ஞாபகத்தில் மூழ்குவதைக் காணவும் கெட்டது' என்று எழுதுகிறார் என்றும் எழுதியிருக்கக் கூடும். எழுதிப்பார்த்து த.ப. ஆசிரியர் அவர்கள் 'நமது மறுப்பாளர்கள் எழுதிய நூற்களில் ஒன்றில் சில வார்த்தைகள் அதிகம். ஒன்றில் குறைவு' என்று ஆச்சரியப்படுவதும் இன்னும் 'ஜினா செய்கிற நினைப்பு' ஒன்றுதான் குற்றச்சாட்டுக்கான வார்த்தை என்று வைத்துக் கொண்டு 'அது வாசகத்தின் இடையில் இல்லாத ஒன்று இருக்கிறது என்றால் அது அதற்கு மேலுள்ள வாக்கிய முடிவில் இருக்கிறது; என்று தடுமாறிக் கொண்டிருப்பது மதியீனமாகும்.
மேலும் தொழுகையில் றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வருவது அந்த ஞாபகம் இந்த ஞாபகம் எல்லாம் வருவதை விடவும் எத்தனையோ மடங்கு கெட்டதாகவும் ஆகக் கடூரமான இருளானதாக ஆவதற்குக் காரணம் ரஸூலுல்லாஹ் அவர்களுடைய ஞாபகம் வரும்போது அவர்களைப் பற்றிய மரியாதையோடு வரும். அது ஷிர்க்களவில் இழுத்துவிட்டு விடும் என்றும் சொல்கிறார். றஸூலுல்லாஹ் அவர்கள் பேரில் தனக்குள்ள எப்படித் துணிச்சலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
றஸூலுல்லாஹ் அவர்களை கண்ணியப்படுத்துவதும் அவர்களுக்கு மரியதை செய்வதும் முஃமின்கள் பேரில் கடமையல்லவா? அது ஈமானில்லையா, அவர்களை கண்ணியக் குறைவாக நினைப்பதும் இலேசாகக் காணுவதும் குப்றல்லவா? தொழுகையிலும் அவர்களை மரியாதையாக நினைக்க வேண்டுமென்று தானே அத்தஹிய்யாத்தில் அவர்களை முன்னோக்கி எதிர் நோக்கி அவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டுமென்று அல்லாஹுத்தஆலா கடமையாக்கியிருக்கிறான். nஅதாழுகையில் அத்தஹிய்யாத்தில் அருமை நாயகத்தின் பேரில் ஸலாம் சொல்லும்போது அவர்களை ஞாபகப்படுத்த வேண்டுமென்பதைப் பற்றி எங்கள் மதிப்புக்குரிய மேதைகள் எப்படி எழுதியிருக்கிறார்கள். ஆஹா! அவர்களின் திருக்கரங்களை முத்தமி;டவல்லவா வேண்டும்.!
மாமேதை இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் இஹ்யா உலூமுத்தீன் முதலாம் பாகம் 107- ம் பக்கத்தில் எழுதுகிறார்கள், ' உன் கல்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் சங்கையான உருவத்தையும் ஆஜர்படுத்திக்கொள். ஞாபகப்படுத்திக் கொள். அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வறஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு (மறைவான சங்கதிகளை அறியும்படியான) நபியே! உங்கள் பேரில் அல்லாஹ்வின் கருணையும் பரக்கத்தும் உண்டாவதாக என்று சொல். மேலும் நீ சொல்லும் இ(ந்த ஸலாமானது)து அவர்களுக்கு எட்டும் – சேரும் என்றும் அவர்கள் இதைவிடவும் பூரணமானதை (ஸலாமைக்) கொண்டு  உனக்குப் பதில் சொல்வார்கள் என்றும் உன்மனம் மிக்க உறுதியோடு இருக்கட்டும்.'
மாமேதை ஷhஹ் அப்துல் ஹக் முஹத்திது தெஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மிஷ;காத்தின் விரிவுரையான தங்களின் 'அஷpஃஅதுல்லம்ஆத்' எனும் நூலினை முதலாம் பாகம் 312 ம் பக்கத்தில் தஷஹ்ஹுது –அத்தஹிய்யாத்துடைய பாடத்தில் எழுதுகிறார்கள், 'மிஃறாஜில் அல்லாஹுதஆலா நாயகம் ஸல்லல்லாஹு அவர்கள் பேரில் அவர்களை நோக்கி எதிர்முகமாக அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு – நபியே! உங்கள் பேரில் ஸலாமுண்டாவதாக!'  என்று சொன்ன வார்த்தையை அப்படியே எதிர் நோக்கியே சொல்ல வேண்டும் என்று  நாயகம் மக்களுக்குப் படித்துக் கொடுத்தது தனது மக்கள் அந்த (மிஃராஜுடைய) சம்பவங்களை நினைப்பதற்காகவேயாகும்!
மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமினானவர்களுக்கும் ஆபிதீன்களுக்கும் எப்போதும் எல்லா நிலைமைகளிலும் எல்லா நேரங்களிலும் அவர்களுடைய கண் முன்னால் காட்சியளித்துக் கொண்டும், கண் குளிர்ச்சியாகவுமிருக்கிறார்கள். குறிப்பாக இபாதத்தின் நிலைமைகளிலும், அதன் கடைசி நேரத்திலும் அவர்களின் காட்சி தோற்றமும், வெளிப்பாடும் மிக்க அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும்.
ஆரிபீன்களில் ஒருவர் சொல்கிறார்கள் 'இப்படி எதிர் நோக்கிச் சொல்லச் சொன்னதாகிறது ஹகீகத்துல் முஹம்மதிய்யா நாயகத்தின் அந்தரங்கம், சகல சிருஷ;டிகளின் அணுக்களிலும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவியிருக்கிறது. எனவே தொழுகிறவர்களுடைய தாத்துக்களிலும் – அந்தரங்கங்களிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மவுஜுதாகவும், ஹாளிராகவும் – பிரசன்னமாகவும் இருக்கிறார்கள். ஆகையினால் தொழுகிறவர் அல்லாஹுத்தஆலா அளவில் முடுகுதலின் ஒளிகளைக் கொண்டும் பிரகாசம் பூண்டு பாக்கியம் பெறுவதற்காக இந்த கருத்தை – அதாவது நாயகம் அவர்கள் அவனின் தாத்தில் ஹாழிராக இருப்பதை அவசியம் காண வேண்டும். இந்த காட்சியை விட்டும் மறந்துவிடக் கூடாது.
சோதரீர்! இங்கு எத்தனை விஷயங்களை சொல்லிக் காட்டுகிறார்கள். பாருங்கள்!
1. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஃமினானவர்களுக்கும் ஆபிதீன்களுக்கும் எப்பொழுதும் அவர்களுடைய எல்லா நிலைமைகளிலும் எல்லா நேரங்களிலும் அவர்கள் கண்முன்னால் இருந்து அவர்களுக்கு கண்குளிர்ச்சியாக இருக்கிறார்கள்.
2. இபாதத்துடைய நிலைமையில் நாயகத்தின் தோற்றம் அதிகமாக இருக்கிறது. அதாவது அந்த நேரத்தில் இபாதத்து செய்கிறவனின் பக்கம் அவர்களின் கவனம் அதிகமாக இருக்கிறது.
3. நாயகம் அவர்கள் சகல சிருஷ;டிகளின் அணுவிலும் ஊடுருவி இருக்கிறார்கள். தொழுகிறவர்கள் எல்லாவர்களுடைய தாத்திலும் மவுஜூதாகவும் ஹாழிராகவும் இருக்கிறார்கள்.
4. அப்படி நாயகம் ஹாழிராக இருப்பதை தொழுகிறவன் காட்சி காண வேண்டும்.
5. அந்த காட்சியை விட்டும் மறந்து விடக்கூடாது.
6. அப்படி நாயகம் அவர்கள் ஹாழிராக இருப்பதை காட்சியாகத் தொழுகிறவன் அல்லாஹுத்தஆலாவின் சமூகத்தளவில் முடுகுதலின் ஒளிகளைக் கொண்டும் அல்லாஹ்வின் மஃரிபாவின் இரகசியங்களைக் கொண்டும் தொழுகிறவன் பிரகாசம் பூண்டு பாக்கியம் பெறுவான்.
அப்துல் வஹ்ஹாபுஷ; ஷஃரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மீஸானுஷ; ஷஃறானீயின் முதலாம் பாகம் 132-135 ம் பக்கத்தில் சொல்கிறார்கள். காழீ இயாழ் அவர்கள் தங்களின் கிதாபுஷ; ஷpபா எனும் நூலில் 'இமாம் ஷhபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொழுகையில் ரஸூலுல்லாஹ் பேரில் ஸலவாத்து சொல்வதை கடமை என்று சொல்லி (மற்ற இமாம்களை விட்டும்) தனித்து விட்;டார்கள்.' என்று சொன்னதானது அவர்கள் ஷhபிஈ இமாம் அவர்களுடைய மகாமைப் பற்றி குறைத்து சொன்னதல்ல. நிச்சயமாக அ(ப்படிச் சொன்னதாகிற)து (ஷhபிஈ இமாம்) அவர்கள் மகாமில் சம்பூர்ணமாக இருக்கிறார்கள் என்பதளவிலும் இன்னும் ஹக்கைக் காட்சி காணுவதுடன் கல்கையும் காட்சி காண அவர்கள் சக்தி பெறுவார்கள். ஹக்கைக் காட்சி காணுவது கல்கை காட்சி காணுவதை விட்டும் இன்னும் அதற்கு மாற்றமும் (அதாவது கல்கைக் காணுவது ஹக்கைக் காட்சி காணுவதை விட்டும்) அவர்களைப் பராக்காக்காது. அதனால் மக்கள் பேரில் (அவர்களும் இந்த உயர் பதவியை அடையட்டும் என்று) நல்லெண்ணம் வைத்து அ(ப்படி சலவாத்து சொல்வ)தை கடமையாக்கி அவர்களை ஏவினார்கள் என்பதளவிலும்,
இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இமாம் மாலிகி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  மக்கள் பேரில் அவர்கள் அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்திருக்கும்போது அவர்கள் ஹக்கையும் காட்சி காணுவதற்கில்லாமல் தங்களில் அழிவு நிலை ஏற்படவும் கூடும். அப்போது அவர்களை ஹக்கல்லாதவர்களையும் காட்சி காணவேண்டுமென்று கட்டாயப் படுத்துவது அவர்களைச் சிரமத்திலாக்குவதாகும் என்று நினைத்து மக்களைப் பேணி அதை (ஸலவாத்து சொல்வதை) அவர்கள் பேரில் கடமையாக்கவில்லை என்பதளவிலும் சயிக்கினையாகும்.
எனவே காழி இயாழ் அவர்கள், 'ஷத்தஷ;ஷhதஈ – ஷhபிஈ இமாம் அவர்கள் தனித்து விட்டார்கள்' என்று சொன்னதைக் கொண்டு அவசர புத்தியில்படுவது போல், அவர்கள் ஷhபிஈ இமாம் அவர்களுடைய சொல்லை பலக்குறைவாக்கினதல்ல. அவர்களுடைய கருத்தாகிறது மற்ற இமாம்களைப் போல் சிறியோர்களுடைய நிலையைப் பேணுவதை விட்டும் தனித்து றஸூலுல்லாஹ் அவர்களுடைய ஹக்கின் அவசியத்தை நிலை நிறுத்தி பெரியோர்களுடைய நிலையைப் பேணினார்கள் என்பதுவேயாகும்.
மேலும் ஷஃறானி இமாம் அவர்கள் அதே நூல் அதே பக்கத்தில் சொல்கிறார்கள்,' நான் என்னுடைய நாயகம் அலியுல் கவ்வாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'ஷhரிஉ (மார்க்கத்தை உண்டாக்கிய அல்லாஹுத்தஆலா அல்லது மார்க்கத்தை கொண்டு வந்த றஸூலுல்லாஹ்) அவர்கள், தொழுகிறவர்களை அத்தஹிய்யாத்தில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் ஒதும்படி ஏவினதெல்லாம், சிறப்பும் வலுப்பமுள்ள அல்லாஹ்வின் சமூகத்தில் ஹாழிராக இருக்கிற அவர்களின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மறந்து இருப்பவர்களுக்கு ஞாபகமூட்டவேயாகும்.
ஏனென்றால் நாயகம் அவர்கள் எப்பொழுதும் அல்லாஹுத்தஆலாவின் சமூகத்தை விட்டும் பிரிய மாட்டார்கள். ஆகையினால் இவர்கள் அவர்களை நேர்முகமாகக் கண்டு சலாம் சொல்லி அழைப்பார்கள். 'ஆண்டவனே உனது ஜோதியைக் காட்சி காண எங்களுக்கு முன்னால் உனது ஹபீபு அருமை நாயகம் அவர்களின் ஒளி எந்நேரமும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தொழுகையில் அவ்வொளிப் பிரகாசம் மிக்க அதிகமாகவேதானிருக்கிறது. ஆனாலும் எங்கள் அகக் கண்களில் ஒளியில்லையே! நாயனே! உனது ஹபீபு அவர்களின் பொருட்டினால் எங்கள் அகக் கண்களை ஒளிபெறச் செய்வாயாக!
'ஆண்டவனே! எங்கள் இமாம் அவர்கள் எங்கள் பேரில் நல்லெண்ணம் வைத்தது போல் எங்களுக்கு ஒருமையின் காட்சியோடு பன்மையின் காட்சியையும் – உனது ஜோதியைக் காட்சி காண்பதோடு உனது ஹபீபு அவர்களையும் காட்சி காண நல்லருள் புரிவாயாக!
'தப்லீக் ஜமாஅத்தின் மீது தவறான குற்றச்சாட்டுகளும், தக்க பதில்களும்' என்று கூறி உண்மையை மறைத்து விடப் பார்க்கின்றார் அதன் ஆசிரியர், இதுவரை நாம் கொடுத்து வந்த விளக்கத்திலிருந்து அவரது பொய் கூற்றுகள் தெளிவாகின்றன.
தக்க பதில் நூலில் 134-ம் பக்கம் முதல் 138 வரை உண்மைகளை மறைத்திட அவர் என்ன பாடுபடுகின்றார் பாருங்கள்:-
'இந்த குற்றச்சாட்டை நாம் ஏற்றுக கொண்டாலும் இது உருப்படியான ஒரு குற்றச்சாட்டல்ல என்பது கீழ்கண்டதைப் படித்தபின் தெளிவாக விளங்கும்.
'ஸிராதே முஸ்தகீமில்' குற்றச்சாட்டுள்ள இந்த வாக்கியத்தில் 'ஸர்பே ஹிம்மத்' என்ற பார்ஸி வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நமது மறுப்பாளர்கள் 'ஞாபகம் வருவது' என்று அர்த்தம் எழுதியுள்ளதை மேலே காணுங்கள். அந்த வார்த்தையின் அஸல் கருத்துக்கும் இவர்கள் கூறும் கருத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
'ஸர்பே ஹிம்மத் என்றால் என்ன அர்த்தம்? 'ஸர்ப்' என்றால் உபயோகித்தல், செலவிடுதல் என்று அர்த்தம்.
'ஹிம்மத்' என்பது nஷய்குகள், ஸூபிகள் ஆகியோரிடம் உபயோகிக்கப்படும் ஒரு வார்த்தை. இந்த அடிப்படையிலே இந்த வார்த்தை, 'ஸிறாத்தே முஸ்தகீமில்' உபயோகிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன என்பதை இப்போது கவனிப்போம். ஸுலூக்கின் பிரபலமான நூலான 'அல் கவ்லுல் ஜமீலில்' எழுதப்படுகிறது:
'ஹிம்மத்' என்றால் ஆசையோடும், தேட்டத்தோடும் நினைவு முழுவதையும் செலுத்தி மன ஓர்மை ஏற்படுத்தி தனது முழுக்கவனமும் வேறு எதன்பாலும் செல்லாமல் இந்த ஒரு பொருளின்பாலே வைத்திருப்பது. கடின தாகம் கொண்டவன் தனது கவனம் முழுவதையும் நீரின்பால் செலுத்துவதைப் போல்.
nஷய்குகள் கூறும் ஞானவழிப் பயிற்சியில் ஒன்று இது. அதாவது ஒருவன் தனது nஷய்கு அல்லது யாராவது ஒரு பெரியார் அல்லது நேரடியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதற்குரிய முறை அல்கவ்லுல் ஜமீலில் எழுதப்படுகிறது: கண்கணை மூடிக்கொண்டோ அல்லது (முடிந்தால்) திறந்து கொண்டோ மற்றவற்றின் மீதுள்ள அன்பனைத்தையும் நீக்கி விட்டு தனது அன்பு முழுவதையும் தான் யார்பால் கவனம் செலுத்துகிறாரோ அவர்பாலே செலுத்தி அன்னாரிடமிருந்து பெருகி வரும் 'பைஜ்' எனப்படும் ஆன்மீக வளர்ச்சிப் போதனையை எதிர்பார்த்து இருக்க வேண்டும். 'பைஜ்' வந்தால் அதை மன ஓர்மையுடன் தன்னுள் ஏற்றுக் கொண்டு பிறகு அது தன்னை விட்டு நீங்கிப் போகாமல் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
'ஸர்ப் ஹிம்மத்' என்ற இரண்டு வார்த்தைகளின் அருத்தத்தையும் இப்போது இணைத்துப் பாருங்கள். இந்த அர்த்தத்திலேயே 'ஸிராதே முஸ்தகீமில்' இந்த வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைக்குப் பெரியார்கள் 'ஷ{ஃலே பர்ஜக்' என்றும் 'ஷ{ஃலே ராபிதா' என்றும் கூறுவர்.
திரை கிழிகிறது

மறுப்பாளர்கள் எழுதியுள்ள அருத்தமான 'ஞாபகம் வருவது' என்பதற்கும் 'ஸர்பே ஹிம்மத்' என்பதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? என்பதை சற்று கவனியுங்கள். வெறும் ஞாபகம் வருவது ரஸூலுல்லாஹ்வைப் பற்றி நினைப்பது என்பதைப் பற்றியா 'ஸிராதே முஸ்தகீமில்' எழுதப்பெற்றிருக்கிறது? ஸிம்துஸ் ஸிப்யான் மட்டும் ஓதிய பையன் கூட கூறுவானே. தொழுகையில் அத்தஹிய்யாத்தை ஓதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே நினைக்கப்படுகிறது என்பதை கொஞ்சம் அறபி தெரிந்தவர்களும் சொல்லுவார்களே. குர்ஆனில் நாயகத்தை நோக்கி கூறப்பட்ட ஆயத்துகளை ஓதும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய எண்ணம் ஓதுபவருக்கு கட்டாயம் வரவே செய்யும் என்பதை இதைக் கூடாத ஒன்று என்று எந்த மடையனும் கூற முடியாதே! ஸிராதே முஸ்தகீமில் இப்படிக் கூறப்பட்டிருக்க முடியுமா? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கு இந்த தமிழிலேயே ஸிராதே முஸ்தகீமின் அஸல் பார்ஸி வாசகத்தை எடுத்துக் காட்டி வாசகர்களுக்கு  மூலச் சுவையுடன் விளக்க முடியவில்லையே என வருந்துகிறோம்.
ஸிராதே முஸ்தகீமில் எழுதப்பட்டுள்ளது என்ன? ஸிராதே முஸ்தகீம் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள உண்மையான கருத்தைக் காணுங்கள்.
'தனது nஷய்கு அல்லது யாராவது ஒரு பெரியார் நாயகமேயானாலும் அவர்களின்பால் ஸர்பெ ஹிம்மத் செய்வது (அதாவது எல்லாவற்றையும் விட்டும் தனது கவனத்தை திருப்பி இந்தப் பெரியார்களின்பால் முழுக்க முழுக்க செலுத்துவது) மாடு, கழுதையைப் பற்றிய எண்ணத்தில் மூழ்குவதை விடக் கெட்டதாகும். ஏனெனில் பொரியார்களின்பால் அன்னேரத்தில் ஸர்மே ஹிம்மத் செய்யும்போது அது அவர்களைப் பற்றிய கண்ணியம் பெருமையும்கொண்ட எண்ணத்தோடு உள்ளத்தின் அடித்தளத்திலே இடம் பிடிக்கும் (அதாவது இப் பெரியார்களுடன் அன்பு கண்ணியத்தோடுள்ள தொடர்பு இருக்கும் காரணத்தால் அப்போது மனம் அதிலே பூரண அழிவு நிலை அடைந்து அதிலேயே இன்பங்காண முற்படும். அப்போது ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும். இது தொழுகையின் உயிர் நாடிக்கே மாற்றமானதென்பதும் இபாதத்தின் நோக்கத்திற்கு முரணானதென்பதும் யாவரும் அறிந்ததே.
மற்ற உலகப் பொருட்களின் எண்ணம் வருமானால் உள்ளத்துக்கு அப்பொருட்களுடன் மேற்சொன்ன அளவு தொடர்பு ஏற்படவும் முடியாது. அவற்றைப் பற்றிய பெருமையும் கண்ணியமும் இறைவனை மறக்கச் செய்து அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளவும் முடியாது. அந்த தரம் குறைந்த பொருட்கள் உள்ளத்தில் வரும்போதே அந்தத் தரக் குறைவோடுதான் வரும் போகும் அல்லது அதன் தரக் குறைவின் காரணத்தால் மனிதன் தானே அவற்றை விட்டும் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ள முற்படுவான்.
ஆண்டவனல்லாத ஒரு பொருளை தொழுகையில் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நினைத்து அந்த நினைப்பில் மூழ்கி விடுவதென்பது சில சந்தர்ப்பங்களில் ஷிர்க்குவரை கொண்டு சேர்த்து விடும்.
இதுவே ஸிராதே முஸ்தகீமில் எழுதப்பட்டுள்ள அஸல் விஷயம். ஞாபகம் வருவது என்பதைப் பற்றி இங்கு அறவே பேசப்படவில்லை. இங்கு முற்றிலும் 'ஷ{ஃலே பர்ஜக்' என்பதைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டுவோரது குற்றச்சாட்டுகு;கு எதிர் மாறானன அருத்தத்தைக் கொடுக்கிறது என்றும் கூறலாம்.
இதே ஸிராதே முஸ்தகீமில் இதுவும் எழுதப்பட்டுள்ளது. 'ஸர்பே ஹிம்மத்'தின் நேரமின்றி பெரியோர்களின் நினைவு ஏற்பட்டு அதிலிருந்து அவர்கள் பைஜ் நிலைக்குமானால் அதை தூய எண்ணமுடைய அடியார்களுக்கு ஆண்டவன் அளிக்கும் மாபெரும் நன்கொடை என்று கருத வேண்டும் என்று'
ஞாபகம் வருவதே கூடாது என்பது நூலாசிரியருடைய கொள்கையாக இருந்தால் மேற் கண்ட வாசகத்தை அவர்கள் எழுதியிருக்க முடியுமா?
இவற்றையெல்லாம் பார்க்காது கண்ணை முழுக்க மூடிக் கொண்டு குற்றஞ்சாட்டுவது ஸிராதே முஸ்தகீமை (நேர்வழியை) விட்டும் அகன்றதென்று எப்படி கருதாமலிருக்க முடியும்?
மறுப்பாளர்களது எழுத்தை உண்மை என நம்பி வந்தவர்கள் இதனைக் கண்டு உண்மை எது?  என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறோம். அல்லாஹ் எல்லோருக்கும் ஸிராதே முஸ்தகீம் கிடைக்க அருள் புரிவானா. ஆமீன். (தக்க பதில்: 134 – 137)
அவருடைய இந்தக் கட்டுரையின் சாராம்சம்:
1. இங்கு நினைப்பது, ஞாபகம் வருவதைப் பற்றி பேசவில்லை. ஸர்ப் ஹிம்மத் தைப் பற்றித்தான் பேசப்படுகிறது.
2. ஸர்ப் ஹிம்மத் என்பது 'பார்ஸி பதம்'. 'ஸர்ப்' என்றால் உபயோகித்தல், செலவிடல், 'ஹிம்மத்' என்றால் ஆசையோடும் தேட்டத்தோடும் தனது நினைவு முழுவதையும் செலுத்தி மன ஓர்மை ஏற்படுத்தி தனது முழுக் கவனமும் வேறு எதன்பாலும் செல்லாமல் இந்த ஒரே பொருளின் பேரிலேயே வைத்திருப்பது. இது ஞான வழிப் பயிற்சியில் ஒன்று என்று அல்கவ்லுல் ஜமீலில் சொல்கிறார்கள்.
3. இப்படிச் செய்தால் ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும். இது தொழுகையின் உயிர் நாடிக்கே மாற்றமானது.
தேவுபந்தியாக்கள் இங்கு இரண்டு விதமான குபாடங்கள் செய்கிறார்கள். ஒன்று நூலாசிரியரின் கருத்து, நோக்கம் பூராவையும் புரட்டுகிறார்கள். இரண்டு 'ஷுஃலெ பர்ஜகு' என்பதற்கு தப்பான அர்த்தம் காட்டி மக்களுக்கு ஸூபியாக்கள் பேரில் வெறுப்பை உண்டாக்குகிறார்கள்.
வாசகர்களே! நன்றாக கவனித்துப் பாருங்கள். ஸர்பு ஹிம்மத்' என்பது பார்ஸி பதம் அல்ல. அது 'ஸர்பு, ஹிம்மத்' என்று இரண்டு பதங்கள். இரண்டுமே அரபி பதங்கள்தான். 'ஸர்பு' என்றால் பேதகப்படுத்துதல், திருப்புதல், செலவு செய்தல், உபயோகித்தல் என்பதாகும். 'லுகது கிஷ;வர்' என்ற அகராதி நூலில் 'ஹிம்மத்து' என்பது அறபி பதம். அதற்கு பொருள் பிக்ரு. இராதத்து, கஸ்து, மஜாஸன' படாகஸ்து, தில்கா இராதா புலன்தீ. பொருள்: சிந்தனை, நாட்டம், தேட்டம். பரிபாiஷயில் பெரும் நாட்டம், மனதின் உயர்ந்த தேட்டம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. nஷய்குனா ஷhஹ் வலியுல்லாஹ் அவர்களின் 'அல் கல்லுல் ஜமீல் என்ற ஞானவழி நடை நூலில் ஸூபிய்யாக்களின் பரிபாiஷயில் 'அல்ஹிம்மது-இபாரதுன், அன் இஜ்திமா இல் காதிரி-வத அக்குதில் மழீமத்தி-பி- ஸூரத்தித்தமன்னீ. வத்தலபி-பி-ஹைது லா-யஹ்துரு-பில் கல்பி-காதிறுன், ஸிவா-ஹாதல் முராதி- பொருள்: நாடப்பட்ட பொருளில்லாத நாட்டம் மனதில் ஊசாடாமல் நாடப்பட்ட பொருளிலேயே நாட்டம் ஒன்று சேர்வதும், நினைப்புக் கெட்டியாவதுமாகும்' என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆகவே 'ஹிம்மத்' என்பதற்கு அகராதியில் நாட்டம் என்றும் ஸூபிய்யாக்களின் பரிபாiஷயில் 'பூரண நாட்டம்' என்றும் பொருளாகும்.
ஸிராதே முஸ்தகீமின் ஆசிரியர் 'ஹிம்மத்' திற்கு ஸூபிய்யாக்களின் பரிபாiஷயான பூரண நாட்டத்தைப் பற்றி பேசவில்லை. அகராதிப் பொருளான வெறும் நாட்டத்தைப் பற்றித்தான் பேசி வருகிறார். ஏன்? அவர் முதலாவதாக 'வஸ்லாஸின் ஊசாட்டத்தின் தரங்களைப் பற்றி பேசுகிறது' என்றுதான் பாடமும் போட்டிருக்கிறார்.
ராஷpத் கம்பெனி ஸிராதே முஸ்தகீமில் 95-ம் பக்கம் 5 ம் வரியில் 'தூஸரி – ஹிதாயத் – இபாதத்மே கிலல் – அந்தாஸ் – ஸீஸோன் -கே தப்ஸீலி – திக்று'. பொருள்: இரண்டாவது ஹிதாயத்து இபாதத்தில்- கியலை குழப்பத்தையுண்டாக்கும்படியான வஸ்துக்களைப் பற்றி விபரமாக கூறுவதாகும்.'
மேலும் அந்த நூல் 97-ம் பக்கத்தில் குற்றச்சாட்டு வாசகத்தின் இறுதியில் ஹாஸில் – கலாம் – இஸ் -ஜகர –வஸ்வ ஸோன் – கேதபாவுத் – கா- பயான் – கர்ணா- மக்ஸூத் ஹே'. பொருள்: முடிவான பேச்சாகிறது இந்தவிடத்தில் வஸ்வஸாவின் ஊசாட்டங்களின் ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி விபரிப்பதாகும்' என்றும் எழுதியிருக்கிறார்.
மேலும் அதே நூல் 97-ம் பக்கத்தில் குற்றச்சாட்டு வாசகத்தில் 'கியாலே- ஆண்'- 'அவர்களுடைய கியால்' என்ற வார்த்தையில் கியால்-கவனம் என்றேதான் சொல்லியிருக்கிறார். ஆகையினால் இங்கு ஹிம்மத்துக்கு பரிபாiஷ அர்த்தமான பூரண கவனத்தைப் பற்றி பேசப்படவில்லை எனினும் அகராதி அர்த்தமான வெறும் கியாலை கவனத்தைப் பற்றித்தான் பேசப்படுகிறது என்று மிகத் தெளிவாக தெரியவருகிறது.
தேவுபந்தியாக்கள் நூலாசிரியரின் கருத்தையும் நோக்கத்தையுமே முற்றாக மாற்றப் பார்க்கிறார்கள். நூலாசிரியர் இஸ்மாயீல் ஸாஹிபு ஹயாத்தாக இருந்தாதல் அவருங்கூட இவர்களின் குபாடச் செயல்களை நிச்சயமாகக் கண்டிக்கவே செய்வார்.
வாசகர்களே!
த.பா.வின் 'தனது nஷய்கு….ஷpர்கு வரை சேர்த்து விடும்' என்ற வாசகத்தையும் அதன் கீழ் கோடுபோட்டிருப்பதையும் நன்றாக கவனித்துப் பாருங்கள். இன்னும் 'அல்கவ்லுல் ஜமீலில்' 'ஹிம்மத்'திற்கு பொருள் அறபியில் எழுதப்பட்ட அறபி வார்த்தையை தமிழில் எழுதியிருக்கிறதையும் அதற்கு தமிழில் பொருள் எழுதியிருப்பதையும் பாருங்கள்.
தக்க பதிலும் கவ்லுல் ஜமீலில் எழுதப்பட்ட பொருள் என்று 'ஹிம்மத்'துக்கு பொருள் எழுதியிருப்பதையும் பாருங்கள். தேவுபந்தியாக்கள் சொல்வதைப் போல் 'ஸிராதே முஸ்தகீமில் 'ஷ{ஃலே பர்ஜகை' அதாவது ஸூபிய்யாக்களின் பரிபாiஷயான பூரண நாட்டத்தைப் பற்றியேதான் கூறப்பட்டுள்ளது என்றிருந்தால் மேலே காட்டப்பட்ட த.ப.வின் 'தனது …' என்ற வாசகத்திற்குப் பொருள் அந்த வாசகத்தின் கீழே கோடிடப்பட்ட வாசகத்தை மட்டுமேதான் எழுதியிருக்க வேண்டும். அப்படியல்லாமல் பிராகட், குறிப்புகளெல்லாம் விரிவாக எழுதி 'ஆண்டவனைப் பற்றிய நினைவு எழாமல் அவனை மறந்த நிலை ஏற்படும' என்று எழுதியதானது 'ஷ{ஃலே பர்ஜகி;னால் அல்லாஹ்வை மறக்க வேண்டிய நிலைதான் உண்டாகும் என்று மக்கள் தவறாக விளங்கிக் கொள்ளவும், அவர்களுக்கு ஸூபிய்யாக்கள் பேரில் வெறுப்பையுண்டாக்கவும் செய்த குபாடமேயாகும்.
ஸூபிய்யாக்கள் றஸூலுடைய ஸூரத்தை, nஷய்குடைய ஸூரத்தை 'அல்லாஹ்' என்ற பதத்தின் ஸூரத்தை அல்லது வேறே ஏதோ ஒருவித ஸூரத்துப் பண்ணி அந்த ஸூரத்தை அல்லாஹ்வின் மள்ஹராக- அல்லாஹ்வின் காட்சி வெளியாகும்தானமாக வைத்து முழுக் கவனத்தையும் அதிலே செலுத்தி தியானிப்பார்கள். இப்படி வைக்கிற ஸூரத்திற்கு மள்ஹர் -வெளியாகும் தலம் – பர்ஸக்- மத்தித் தடுப்பு றாபிதா – இணைப்பு என்னும் இப்படி தியானிப்பதற்கு ஷ{ஃலே பர்ஜக் – ஷ{ஃலே ராபிதா' என்றும் சொல்வார்கள்.
அந்த ஸூரத்தின் வழியாக ஹக்குத்தஆலாவின் காட்சியையும், அருளையும் வழி பார்ப்பதனால் அதற்கு முராகபா – வழி பார்;ப்பது  என்றும் சொல்வார்கள். இப்படிச் செய்கிறது இஹ்ஸானாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு வழிபட்டு நடப்பதாகும். இஹ்ஸானாகிறது நீ அல்லாஹ்வைக் கண்டது போல் வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனால், அவன் உன்னைக் கண்டு கொண்டிருக்கிறான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அதாவது அகக் கண்ணால் முஷாஹதாச் செய்து – கண்டு வணங்குவதாகும். இது அகக் கண்ணால் காண்பதாக இருப்பதனால் வெளிக்கண்ணால் கண்டதைப் போல் என்று சொன்னார்கள். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் கண்டு; கொண்டிருக்கிறான் என்பது முறாகபாவாக இருக்கும். அவன் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று முறாகபா – முழுக் கவனத்தையும் ஒன்று சேர்த்து காட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் முஷhஹதா – காட்சி கிடைக்கும். இதற்காகத்தான் ஸூபியாக்கள் 'ஷுஃலே பர்ஜக்' செய்கிறார்கள்.
செய்குனா முஜத்திது அல்பதானி ஷெய்கு அஹ்மது ஸிர்ஹிந்தி அவர்கள் தங்களின் மக்தூபாத்து முதலாம் பாகத்தில் சொல்கிறார்கள்: 'பஸ்-தர்-இப்திதா-வ-தர். தவஸ்ஸுத்-மத்லூப்-றா-பே ஆயீன்ஸே-பீர்-றதுலான்-தீத். பொருள்: ஸுலூக்கின் ஆரம்பமான, இன்னும் நடு மத்திபமான மன்ஸிலில் ஷெய்கை கண்ணாடியாக ஆக்கிக் கொள்ளாமல், மத்லூப் தேட்டம் அதாவது ஹக்குத்தஆலாவின் பேரழகு காட்சியாகாது'. ஆகையினால் ஷெய்கை ஸரத்து பண்ணுவதும், றஸூலுல்லாஹ்வை ஸூரத்து பண்ணுவதும் அல்லாஹ்வின் ஜமாலை – பேரழகை காட்சி காண வழியும் கண்ணாடியுமாகும் என்று தெரிய வருகிறது. இதற்காகத்தான் றஸூலுல்லாஹ்வையும் nஷய்கையும் ஸூரத்துப் பண்ணப்படுகிறது. இப்படி ஸூரத்துப் பண்ணும்போது எப்படி அல்லாஹ்வை மறந்த நிலை வரும்?
தேவுபந்தியாக்கள் ஸூபிய்யாக்கள் பேரில் அவதூறு சொல்கிறார்கள். அவர்கள் பேரில் மக்களுக்கு வெறுப்புணர்வையுண்டாக்கப் பார்க்கிறார்கள். தேவுபந்தியாக்களுக்கு தஸவ்வுபுடைய வாடையுங் கூட விளங்காது. றஸூலுல்லாஹ்வின் பேரில் அதாவத்து- பகைமை எனும் நஜீஸிலேயே அல்லும் பகலும் புரண்டு கிடக்கும் வஹ்ஹாபிகளாலும். தேவுபந்தியாக்களாலும் தஸவ்வுபின்-ஸூபிஸத்தின் நறுமணத்தை எங்ஙனம் நுகர முடியும்?
த.ப. ஆசிரியர் அவர்களே!
'ஸிராதே முஸ்தகிமில்' ஸர்பே ஹிம்மத்தின் நேரமின்றி….. கருத வேண்டும்; என்று தேவுபந்திகள் பல தில்லுமுல்லுகள் செய்து இட்டுகட்டி எழுதியதை நீங்களும் அப்படியே எழுதிக்  கொண்டு 'இவற்றை எல்லாம் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு…. முடியும்' என்று மறுப்பாளர்களைப் பார்த்தா கேட்கிறீர்கள்? ஸர்ப் ஹிம்மத்துக்குப் பொருள் ஜன் ஜானி கிதாபு ஓதுகின்ற பையனுக்கும் தெரியும். மவுலவி பாஜில்களாகிய உங்களுக்கு 'ஸர்பு ஹிம்மத்' என்பது அறபி பதம் என்பதுவும் கூட விளங்கவில்லை.
முஹம்மது அத்ஹர் உதுமானியின் முயற்சியால் உருதுவில் மொழிபெயர்த்து ராசிது கம்பெனியால் அச்சிடப்பட்ட ஸிராதே முஸ்தகீமை மூல நூல் பார்ஸியில் உள்ளது. அதை பரேலியர்கள் உருதுவில் மொழி பெயர்த்து பல தில்லுமுல்லுகள் செய்திருக்கிறார்கள்' என்று நீங்கள் எழுதியிருப்பதனால் ராஷpது கம்பெனி ஸிராதே முஸ்தகீம் உங்கள் கைவசம் இருந்தாலும் கூட உங்களுக்கு உருது எழுத்துங் கூட விளங்காது. ஆகையினால் உருது தெரிந்தவர்களிடம் ராஷpது கம்பெனி உருது ஸிராதே முஸ்தகீமின் 96ம் பக்கம் 8வது வரி கடைசியிலிருந்து 13வது வரி ஆரம்பம் வரையிலும் வாசித்துப் பொருள் சொல்லும்படி கேட்டுப்பாருங்கள். உங்களுக்கு 'ஸிராதே முஸ்தகீம்' நேரான வழி தெரியும்.
நூலாசிரியர் அதில் சொல்கிறார்:-
'ஆன்மாக்களும் மலக்குகளும் தொழுகையில் வெளியாகித் தோன்றுவது கெட்டதென்று நினைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அவைகளை நாடுவதும் தனது ஹிம்மத்தை – கவனத்தை அவை பக்கம் திருப்புவதும் கலப்பறுதலுள்ள ஜனங்களுடைய கலப்பறுதலுக்கு மாற்றமானதாகும். ஆனால், (நாட்டமின்றி) தன்னாலேயே ஆன்மாக்களும், மலக்குகளும் வெளியாவதானது கலப்பறுதலுள்ளவர்களுக்கு அருளப்படுகிற பெருமைக்குரிய நற் பேற்றிலுள்ளதாகும்.
(தொடரும்…..) 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates