Elegant Rose - Diagonal Resize 2 அத்தஸவ்வுபு-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam ~ TAMIL ISLAM

வியாழன், 19 மே, 2011

அத்தஸவ்வுபு-ஸூபிஸம்-Athasawwuf-Sufisam


அத்தஸவ்வுபு(التّصوّف)
தொகுப்பாளர்:

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு S.M.H.. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ஸூபி காதிரிஅவர்கள்.

என்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுத்தஆலாவின் திருநாமத்தால் துவக்கம்.உஜூதாலும்-உளதாலும், தாத்து – தத்சொரூபத்தாலும் ஒன்றாகிய பரம்பொருளான ஏகனாகிய ஒருவனுக்கே சர்வ புகழும்.
மிக்க சம்பூரணத்துவமாக வெளிஜயான அல்லாஹுதஆலாவின் பேரொளியான, காருண்யமான, மெஞ்ஞானப் பட்டினமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், ஷெய்குமார்கள் அனைவர்கள் மீதும் கருணையும், ஈடேற்றமும் உண்டாவதாக!
اوّلُ الدّين معرفةُ الله அவ்வலுத் தீனி மஃரிபத்துல்லாஹ் – மார்க்கத்தில் முதன்மையானது அல்லாஹுத்தஆலாவை அறிவது' என்ற திருவாக்கின்படி முதல்கடமை அல்லாஹுதஆலாவை அறிவதாகும்.
இதுவே எல்லா விதி விலக்குகளுக்கும் அடிப்படையாகும். இது இன்றி எதுவும் சரியாக அமையாது.
ஆதலால் ஆரிபீன்களான மெஞ்ஞானிகள் இக்கலைக்கு அத்தஸவ்வுபு-ஸூபிஸம் என்றும், இது உடையோர்களுக்கு ஸூபிகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதற்காக முழு ஊக்கத்தை செலவளித்து மக்களுக்கு அதிலும் முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு இதன் எதார்த்தமான மெஞ்ஞான வஹ்தத்துல் வுஜூது –உளது ஒன்று என்பதை வாய் மூலமாகவும், செயல் மூலமாகவும், நூற்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அவர்கள் தம்தமக்கு தவ்கு – அனுபவ அறிவினாலும் கஷ்பு – உதிப்பு வெளிப்பாடு அறிவினாலும் ஏற்பட்டதை அடிப்படையாக வைத்து குர்ஆன் ஹதீதுகளின் வெளிச்சத்தில் நூற்கள் பல எழுதி நிலையான அழியா பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு நற்கூலியை பெரிதாக்குவானாக.
வாழையடி வாழையாக அதன் தொடர் ஷெய்குமார்கள் மூலம் வந்துக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை.
'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்பது இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வது போல், அல்லாஹ்வுக்காக இருதயத்தை தனிமைப்படுத்துவதும், அவனல்லாதவற்றை (நீக்கி) அற்பமாக கருதுவதாகும்.
இம்மெஞ்ஞான கலைக்கு 'அத்தஸவ்வுபு – ஸூபிஸம்' என்று பெயர் வைப்பதற்கு நான்கு காரணங்களை கோடிட்டு காட்டியிருக்கிறார்கள்.
1. இக்கலையுடையவர்களான ஸூபிய்யாக்களின் அஸ்ரார் – இரகசியங்கள் தெளிவானதாகவும், அவர்களது அடிச்சுவடுகள் சுத்தமாகவும் இருக்கின்றன. இதனால் 'அத்தஸவ்வுபு' என்பதின் மூலம் ஸபா-சுத்தம் என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
2. இவர்களது ஊக்கம் உயர்வாகவும், அல்லாஹுதஆலா அளவில் அவர்களது இருதயம் முன்னோக்கி இருப்பதினாலும் அல்லாஹு தஆலாவின் சன்னிதானத்தில் الصّفّ الاوّل அஸ்ஸப்புல் அவ்வல் – முதல் வரிசையில் இருக்கிறார்கள்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் அஸ்ஸப்புல் அவ்வல் -முதல் வரிசை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
3. இவர்களது குணாதிசியங்கள், நபி நாயகத்தின் திண்ணை தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பாக்களின் குணாதிசியங்களுக்கு நெருக்கமாக اهل الصّفّةஇருப்பதினாலாகும். இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் ஸுபு;பத் -திண்ணை என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
நம் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் ஸூபி மன்ஸில்களின் திறப்பு விழா வாழ்த்துப் பாடல்களில்,
نُسمّي بصوفي منزل للتّبرّك . بمنزل اصحاب النّبي اهل الصّفّة
நாம் நாயகத் தோழர்களான அஹ்லுஸ்ஸுப்பத்-வராந்தைகாரர்களுடைய ஸ்தலத்தைக் கொண்டு பரகத்தை நாடி இதற்கு 'ஸூபி மன்ஸில்' என்று பெயர் வைத்திருக்கிறோம் என்று பாடியுள்ளார்கள்.
4. இவர்கள் ஸூப்-கம்பளி ஆடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தி வந்ததினாலாகும்.
இதனால் அத்தஸவ்வுபு என்பதின் மூலம் 'ஸூப்-கம்பளி'என்பதிலிருந்து எடுக்கப்பட்டது போலாகும்.
ஸூப் – கம்பளி ஆடை அல்லாஹு தஆலாவுக்கும், அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் உகப்பானதாக இருந்ததினால் 'யாஅய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தத்திர் (கம்பளி) ஆடை போர்த்தியவரே! என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்திருக்கிறான். ஸுப்ஹானல்லாஹ்!
இக்காரணங்களை மனதில் கொண்டு இவ்வடியேன் இந்நூலுக்கு 'அத்தஸவ்வுபு-ஸூபிஸம்' என்று பெயர் வைத்துள்ளேன்.
இந்நூலில் எழுதப்பட்டது அனைத்தும், இத்துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களான மகான்களின் நூற்களிலிருந்தே சுருக்கி எழுதியுள்ளேன்.
அதிலும் குறிப்பாக சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பள்ளுல்லாஹி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்துஹ்பத்துல் முர்ஸலா, அல்ஹகீகா நூலிலிருந்தும், அல் அல்லாமா காதிரு லெப்பை இப்னு அப்தில் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'அத்தரீஆ' நூலிலிருந்தும், இம்மூன்று நூற்களுக்கும் மொத்தமாக தமிழில் சங்கைக்குரிய மகான் எங்கள் ஷெய்குநாயகம் அவர்கள் மொழிப் பெயர்த்த நூலிலிருந்தும்,சங்கைக்குரிய மகான் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் அவர்கள் எழுதிய 'அல்ஹக், அஸ்ஸுலூக் என்ற நூற்களின் மொழிப்பெயர்ப்பில் இருந்தும் (மொழிபெயர்ப்பு நம் ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் செய்துள்ளார்கள்) 'அல்ஹகீகா' என்ற நூலிலிருந்தும் (மொழிபெயர்ப்பு நம் சங்கைக்குரிய கலீபா செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்கள் செய்துள்ளார்கள்)
மகான் அஷ்ஷெய்கு அலி இப்னு அஹ்மதல் மஹாயிமி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய 'இறாஅத்துத்தகாயிகி' என்ற நூலை மொழிபெயர்த்;து 'அகமியக்கண்ணாடி' என்ற பெயரில் நம் ஷெய்கு நாயகம் அவர்கள் வெளியிட்ட நூலிலிருந்தும் அவர்கள் தொகுத்த 'இள்ஹாறுல் ஹக் – சத்தியப் பிரகடனம்' என்ற நூலிலிருந்தும் சுருக்கி தொகுத்துள்ளேன். அடியேனின் சில குறிப்புகளை தவிர்த்து வேறு எந்த சொந்தக் கருத்தையும்எழுதவில்லை.
முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலரும் நம் மகான்களான ஷெய்குமார்களின் நூற்களின் கருத்துக்கள் மனதில் விளங்க முடியாமல் இருக்கின்றனவே என்று மனச்சோர்வடைந்து அங்கலாய்ந்துக் கொண்டு இருக்கும் போதெல்லாம் மிக சுருக்கமாகவும், விளக்கமாகவும் இது சம்பந்தமான ஒரு நூல் வெளியிட வேண்டுமென்று நீண்ட காலமாக இருந்த அபிலாசை இப்போதுதான் கைகூடி உங்கள் கரங்களில் தவழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எல்லோர்களும் இதை வரவேற்று படித்து பயன் பெறுவதே எமது குறிக்கோள்! மூல நூற்களைக் கொண்டு பயனடைந்தது போல இந்நூலைக் கொண்டும் பயனடைந்து இவ்வடியேனுக்கு துஆ செய்யுங்கள்.
நம் ஷெய்குமார்களின் பொருட்டால் மேலும் பல நூற்கள் எழுத உங்களது துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
ஞான வழிப்பாட்டையில் வெற்றி நடைப்போட்டு சித்தியடைந்து, நல் மகான்களின் கூட்டத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா சேர்த்து வைப்பானாக! ஆமீன்.
சமுதாய ஊழியன்,
S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன்
அத்தஸவ்வுபு-ஸூபிஸம்
சுருதி, யுக்திப் பிரமாணத்தாலும் இறைவனை அறிந்த மெஞ்ஞானிகளான ஆரிபீன்களின் 'தவ்கு' எனும் அனுபவ அறிவினாலும் அறியப்பட்டது.
எதார்த்தத்தில் பரம்பொருளான அல்லாஹுதஆலாவும் அவனுடைய செயல்களுமேயல்லாது வேறொன்றுமில்லை. வாஜிபுல் உஜூதான – எப்போதும் உளதாக இருப்பது அவசியமான மெய்ப்பொருளான அல்லாஹுhஆலாவுக்கு உருவமும், காலதேச எல்லைகளும் வேறெவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அப்படி இருந்தும் அந்த அரூபியான வாஜிபுல் உஜூதான அல்லாஹுதஆலாவில் அரூபத் தன்மை கெடாமல் மும்கினுல் உஜூதான – உளது, இலது இவை இரண்டும் அவசியமில்லாத சிருஷ்டிகள் தோன்றுகின்றன.
அவன் தனது இல்மில் – அறிவில் இருந்ததை ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றன் வழியாகவும் வெளிப்படுத்துகிறான் – படைக்கிறான். முந்தின சிருஷ்டி இரண்டாவது சிருஷ்டிக்கு ஸபபு – காரணமாகவும், இரண்டாவது சிருஷ்டி முந்தின சிருஷ்டிக்கு முஸப்பபு – காரியமாகவும் இருந்த போதிலும் முந்தையது இரண்டாவதைப் படைக்கவில்லை.முந்தியதை எப்படி அல்லாஹுதஆலா படைத்தானோ அதைப்போல் இரண்டாவதையும் அவனேதான் படைத்தான். முந்தியது எப்படி அவனுடைய தத்துவம் எனும் கரத்தில் அகப்பட்டிருக்கிறதோ அதைப்போல் பிந்தியதும் அவனுடைய தத்துவக்கரத்திலேயே அகப்பட்டிருக்கிறது.
அவனன்றி ஓர் அணுவும் ஆடவோ அசையவோ முடியாது.
இப்படி ஒன்றன் பின்னொன்று அதன் பின் மற்றொன்றாக இப்படியே சங்கிலித் தொடரைப் போன்று வெளியாகிக் கொண்டிருக்கிற அகில உலகத்தின் சகல சிருஷ்டிகளும் அந்த மெய்ப்பொருளான ஹக்குத்தஆலாவைக் கொண்டே நிலைத்திருப்பதினால் அவை அனைத்தும் 'அஃராளு – ஆதேயம் எனவும், 'ளில்லு – நிழல்' எனவும், இன்னும் இதே கருத்தைக் கொண்டு அவைகள் 'கியால்-கற்பனை' எனவும் ஸூபிய்யாக்களான மெஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இவை அனைத்திற்கும் நிலைக்களம் ஹக்குத்தஆலாவின் உஜூதேயாகும்.
மேலும் இரண்டாவது சிருஷ்டி முந்திய சிருஷ்டிக்குப் பிற்பாடு வருவதினாலும், அதைச் சார்ந்திருப்பதினாலும் முந்தியதை இரண்டாவதற்கு 'ஹகீக்கத்து தாத்து –தற்சொரூபம்' – 'ஜௌஹர்- ஆதாரம்' என்றும், இரண்டாவதை முந்தியதின் 'அறளு – ஆதேயம்' என்றும், 'ஸிபத்து – இலட்சணம்' பிஃலு-செயல்' என்றும் சொல்லுவார்கள்.ஆகவே உலகம் பூராவும் 'அஃறாள் -ஆதேயங்களும்' ஜவாஹிறு – ஆதாரங்களுமாகும். ஹக்குத்தஆலாவைக் கொண்டு நிலைத்திருப்பதால் சகல வஸ்த்துகளும் அவனைக் கொண்டு தரிபாடாக இருக்கின்றன. இதனால் 'ஹகாயிகுல் அஷ்யாயி தாபிதுன் – வஸ்த்துக்களின் எதார்த்தம் தரிபாடானது' என்று சொல்லுவார்கள்.ஸூபஸ்த்தாயிகள் என்பவர்கள் 'ஆலம் – அகிலம்' என்பது கனவு அதற்கு நிலைக்களம் மனிதனின் கற்பனையேயாகும் என்று சொல்கிறார்கள். இது சுத்த தவறான கொள்கையாகும்.
'வஹ்தத்துல் உஜூது – உஜூது ஒன்று' என்று சொல்பவர்களிடத்தில் நகலிய்யத் -சுருதி பிரமாணத்தாலும் அகலிய்யத் -யுக்தி பிரமாணத்தாலும், கஷ்பிய்யத் -காட்சி அனுபவப் பிரமாணத்தாலும் உஜூதாக-உளதாக இருப்பது ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவின் உஜூதாகவே இருக்கும்.அவனுடைய தாத்தானது –தற்சொரூபமானது அவனுடைய உஜூதுக்கு ஐனானதாக-தானானதாகவே ஆகும். வேறானது அல்ல.
முதகல்லிமீன்களான உஸூலுடைய உலமாக்கள் அவனது தாத்தாகிறது அவனுடைய உஜூதுக்கு வேறானதும், அதை வேண்டுவதுமாகும் என்று சொல்கிறார்கள்.
சரியான சொல் முந்தினதுவேயாகும். உஜூது ஒன்று, தாத்து இரண்டு-பலது என்று சொல்வதும் பிழையானதுவாகும்.
معرفةُ الله மஃரிபத்துல்லாஹ்-அல்லாஹுதஆலாவை அறிவது.
அல்லாஹுதஆலாவை அறிவதற்கு மூன்று வழிகளாகும். تنزيه 1. தன்ஸீஹின் படி அறிவதாகும். அதாவது – அவனுடைய தாத்து, சிபத்துகளின் புறத்தினால் அவனுக்கு இலாயிக்கல்லாதவைகள் அடங்கலை விட்டும் பரிசுத்தமானவன் என்று அறிவதாகும். இவ்வழி குறைவான வழியாகும்.
2. தஷ்பீஹின் تشبيه படி அறிவதாகும். அதாவது متشابه முதஷாபிஹான – நேர் பொருள் பொருந்தாத திருக்குர்ஆன் வசனங்களை அவைகளின் நேரடியான பொருள்களிலேயே சுமத்தாட்டுவதும், இன்னும் அவனுடைய தாத்து, சிபாத்துகளின் புறத்தினால் சிருஷ்டிகளுடைய உருவங்களையும் உறுப்புகளையும் அவனுக்கு தரிப்படுத்துவதாகும்.இவ்வழி குப்ரான வழியாகும். அல்லாஹு தஆலா இவைகளை விட்டும் மிக உயர்வாகி பரிசுத்தமாகிவிட்டான
3. தன்ஸீஹுக்கும் தஷ்பீஹுக்கும் இடையில் சேகரமாக்கிய படியும், பின்பு கலப்பற்ற தன்ஸீஹின் படியும் அறிவதாகும். تنزيه محض
ليس كمثله شييٌ
அதாவது:-
லைஸக மித்லிஹி ஷைவுன்' –அவனைப் போன்று ஒரு வஸ்த்துவுமில்லை (42:11) என்று அவன் சொன்னது போல் அவனுடைய தாத்தின் புறத்தினால் எவ்விதமான எல்லையும், கட்டுப்பாடும், கோலமும் இல்லை என்று நம்புவதும்,வலஹு குல்லு ஷையின் وله كلّ شي – அவனுக்கு எல்லா வஸ்த்துவும் உண்டு (27:91) என்று அவன் சொன்னது போல் அவனுக்கு அவனுடைய சிபாத்தின் புறத்தினாலும் தஜல்லியாத்தின் تخلّيات -தோற்றங்களின் புறத்தினாலும் முன்பு மறுக்கப்பட்டவைகள் எல்லாம் உண்டு என்று நம்புவதும்,அல்லாஹு தஆலாவுக்கு வேறொரு பொருள் அறவே இல்லாததினால் வேறொன்றைக் கொண்டு ஒப்பானவனில்லை என்றும் 'தஸ்பீஹ்' உடைய கோலங்களில் வெளியானவனாக இருப்பதுடன் அவன் முன் இருந்த 'தன்ஸீஹ்'யை விட்டும் பேதகமாகவுமில்லை என்று நம்புவதும்,இன்னும் 'தன்ஸீஹானது' அவனுக்கு அவனுடைய தாத்தைப் பொருத்ததாகும். 'தஷ்பீஹானது' அவனுடைய மள்ஹரை-வெளியாகும் ஸ்தானத்தைப் பொருத்ததாகும் என்று நம்புவதும்,
ஸுபுஹான ரப்பிக ரப்பில் இஸ்ஸத்தி அம்மா யசிபூன் سبحان ربّالعزّة عماّ يصفونசிறப்புடைய உம்முடைய போஷகன், அவர்கள் வர்ணிக்கும் வர்ணிப்பை விட்டும் பரிசுத்தமானவன்' (37:180) என்று சொன்னதுபோல் அவன் தன்ஸீஹ், தஷ்பீஹ் இவை இரண்டிலேயும் கட்டுப்பட்டவனில்லை என்று நம்புவதுமாகும். இவ்வழிதான் பரிபூரண வழியாகும்.
அல்லாஹு தஆலாவின் உஜூதிற்கு கோலமில்லை, எல்லையுமில்லை, கட்டுப்பாடுமில்லை. அப்படி தன்ஸீஹாக இருப்பதுடன் கோலத்திலும், குணப்பாட்டிலும், எல்லையிலும் வெளியானது – தோன்றினது கோலமின்மை, எல்லையின்மையில் நின்றும் அது எதன் பேரில் இருந்ததோ அதை விட்டும் பேதகப்படவுமில்லை. ஆதியில் எதன் பேரில் இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது.
சங்கைக்குரிய ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'புஸூஸுல் ஹிகம்' எனும் நூலில் சொன்ன கவிகளின் கருத்தும் இதுவேதான்.
فانْ قلت بالتّنزيه كنْت مقيّدًا وان قلت با لتّشْبيه كنت محمدّدًاوان قلت بالامرين كنت مسدّدًا وكنت اماما فيامعارف سيدًافمن قال بالاشفع كان مشرّكًا ومن قال بالافراد كان موحّدًافايّاك والتّشبيه ان كنت ثنيًا واياك واتّنويه ان كنت مفردًا
'நீன் தன்ஸீஹை கொண்டு (மட்டும் தஷ்பீஹ் இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை தன்ஸீஹ் உடைய சூரத்தை-கோலத்தைக் கொண்டு) கட்டுப்பாட்டுகு;குள் ஆக்கிவிட்டாய். நீன் 'தஷ்பீஹ்' கொண்டு (மட்டும் 'தன்ஸீஹ்' இல்லாமல்) சொன்னால் நீன் (அவனை 'தஷ்பீஹ்' உடைய கோலத்தைக் கொண்டு) எல்லைக்குள் ஆக்கி விட்டாய். நீன் (தன்ஸீஹ், தஷ்பீஹ் எனும்) இரண்டு கருமங்களையும் கொண்டு சொன்னால் நேரான வழியில் ஆனவனாகவும், மஃரிபாவில் -மெஞ்ஞானங்களில் இமாமாகவும் தலைவனாகவும் ஆகுவாய்
ஆகவே எவன் (ஒன்றாகிய ஹக்கை அவனோடு கல்கை –சிருஷ்டியை தரிபடுத்துவது கொண்டு) இரண்டாக்கி சொல்வானேயானால் அவன் (உஜூதில் கல்கை ஹக்கோடு) கூட்டாக்கியவனாகுவான். எவன் ஒன்றாக்கி சொல்வானேயானால் அவன் (ஹக்கை உஜூதில் ஒன்றாக்கி ஒன்றென்று தரிபடுத்தி அவனோடு அவனல்லாததை தரிபடுத்தாததினால்)முவஹ்ஹிதாக (ஒன்றாக்கியவனாக) ஆகுவான்.
ஆகையினால் நீன் (ஹக்கையும், கல்கையும் இரண்டு என்று சொல்லி) இரண்டாக்குவாயானால்(கல்கை ஹக்கோடு தரிபடுத்தி அவனை அதைக் கொண்டு) ஒப்பாக்குவதை பயந்து கொள்! தவிர்த்து கொள்!!
(எனினும் கல்கை ஹக்குடைய தஜல்லியாத்தின் சூரத்து –வெளிப்பாட்டின் கோலம் என்றும், அது தன்னிலே மவ்ஜூது –உளதானது அல்ல என்றும் தரிபடுத்துவது அவசியமாகும்.) நீன் ஒன்று என்று சொன்னால் தன்ஸீஹ் செய்வதை தவிர்ந்து கொள்!
இன்னும் அந்த உஜூதாகிறது ஒன்றேயாகும். ஆனால் உடைகளாகிறது பலதாக இருக்கும். உஜூதில் பலது என்பது மள்ஹருடைய –வெளியாகும் ஸ்தானத்தினுடைய புறத்தினாலேயே ஆகும்.
وماالوجه الّا واحدٌ غير انّه اذاانت اعددتّ المراياتعدّدا
'முகம் ஒன்றையல்லாதில்லை. எனினும் நீ கண்ணாடிகளைப் பலதாக்குவாயானால் அது பலதாகிவிடும்.'
சகல சிருஷ்டிகளும் அந்த உஜூதான – உளதான ஹக்குதஆலாவை விட்டும் நீங்கி இருக்காது.
ஆகவே சிருஷ்டிகளை உண்டாக்குவதற்கு முன்பும், பின்பும் அந்த உஜூது ஹக்குதஆலா ஒருவனுக்கு மட்டுமேயாகும். உலகமாகிறது அதன் சகல பாகங்களுடன் அஃராளு- ஆதேயங்களாகும். ஆதாரமாகிறது அந்த உஜூதேயாகும்.
انّما الكون خيال فهو حقٌ في ال حقيقة . كلّ من يفهم هاذا حاز اسرار الطّريقة
'நிச்சயமாக கௌன் -சிருஷ்டிகள் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அவனே ஹக்கானவனாகும். இதை விளங்கிய ஒவ்வொருவரும் தரீகத்தின் இரகசியங்களை சேகரித்துக் கொண்டார்' என்று சங்கைக்குரிய மகான் முஹ்யித்தீன் இப்னு அரபி அவர்கள் பாடிய கவியின் கருத்தும் இதுவாகும்.
உலகம் கற்பனையானதாகும். எதார்த்தத்தில் அதற்கு உஜூது இல்லை. கண்ணாடியில் பதியும் கோலத்தைப் போன்றும், தாகித்தவன் கானல் நீரை பார்த்து தண்ணீர் என்று எண்ணுவது போன்றாகும். மெய்ப்பொருளான ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றுமில்லை.
மற்தபாக்கள் – படித்தரங்கள். مرتبة
ரபீவுத்தரஜாதرفيع الدّرخات;-படித்தரங்கள் உயர்த்தியானவன்' என்று திருக்குர்ஆனில் 40:15 சொன்னதுபோல் அவனது உஜூது வெளியாவதை தேடிய கமாலாத்து –பூரணத்துவமான மற்தபாக்களில் இறங்குகிற புறத்தில் அனேகமான மற்தபாக்கள் அவனது உஜூதுக்கு உண்டு.
மெஞ்ஞானிகளான ஸூபியாக்கள் பலரும் பலவிதமாக எண்ணிக் காட்டியுள்ளார்கள். சங்கைக்குரிய மகான் அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜியலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது 'அல்கஹ்பு வற்றஹீம். الكهف والرّقيم – எனும் நூலில் நாற்பது படித்தரங்களை எண்ணிக் காட்டியுள்ளார்கள். எங்களது ஷெய்கு நாயகம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் அத்துஹ்பத்துல் முற்ஸலாவின் மொழிப் பெயர்ப்பு நூலை காண்க!)
அத்துஹ்பத்துல் முர்ஸலா எனும் நூலாசிரியர் அஷ்ஷெய்கு முஹம்மது இப்னு பழ்லுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏழு மற்தபாக்களாக – படித்தரங்களாக சுருக்கி எழுதியுள்ளார்கள். அதனை மிக சுருக்கமாக கீழே தருகிறோம்.
1. அல் அஹதிய்யத்- الاحديّة தனித்தன்மையானது.அல்லாதஅய்யுனு –குறிப்பில்லாததுஅல்இத்லாகு-குறிப்பை விட்டும் பொதுப்படையானது.அத்தாதுல் பஹ்து-கலப்பற்ற தத்சொரூபம்.ஜம்வுல்ஜம்வு-சேகரத்தின் சேகரம்.ஹகீகத்துல் ஹகாயிகி-எதார்த்தங்களின் எதார்த்தம்.அல்அமா-விபரமில்லாதது.அத்தாத்துல் ஸாதஜ்-கலப்பற்ற தாத்து.அல்மஸ்கூத்து அன்ஹு-அதைத் தொட்டும் வாய் பொத்தப்பட்டது. இதற்கு மேலால் வேறொரு மர்த்த்தபா இல்லை. சகல மர்தபாக்களும் இதற்கு கீழே உள்ளதாகும்.
2. அல் வஹ்தத்-தனியாக இருப்பது.அத்தஅய்யனுல் அவ்வல்-முதலாவது குறிப்பு.அல்ஹகீகத்துல் முஹம்மதிய்யா-முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எதார்த்தம்.மகாமு அவ்அத்னா- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் சொந்தமான, அரி, பெரிய பாக்கியமான மிஃராஜில் இங்கு வரை ஏற்றம் கிடைத்ததினால் 'அதை விட இன்னும் மிக நெருக்கமான இடம்' என்று சொல்லப்பட்டது.அல்பற்ஸகுல் குப்றா-மிக பெரிய மத்திபமானது.
3. அல்வாஹிதிய்யத்-ஒன்றாக இருப்பது.அத்தஅய்யுனத்தானி-இரண்டாவது குறிப்புஅல்ஹகீகத்துல் இன்ஸானிய்யா-மானுஷீகத்தின் எதார்த்தம்.காப கௌஸைனி-இரு வில்லின் நாண்.மற்தபத்துல் அஸ்மா-பெயர்களின் படித்தரம்.இம் மூன்று படித்தரங்களும் பூர்வீகமானதாகும். துவக்கமில்லாததாகும். முந்தியது பிந்தியது என்று ஆனது புத்தியினாலாகும். காலத்தினால் அல்ல. காலமும், ஸ்தலமும் இல்லாத போது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருக்கிறான்.
4. ஆலமுல் அர்வாஹ்-ரூஹுகளின் உலகம்.ஆலமுல் ஜபரூத் -பொருந்தும் உலகம்.ஆலமுல் கியாலுல் முத்லக்-கட்டுப்பாடாகாத கற்பனை உலகம்.
5.ஆலமுல் மிதால்-மாதிரி உலகம் (சூட்சும உலகம்)ஆலமுல் கியாலில் முகய்யத்-கட்டுப்பாடான கற்பனை உலகம்.
6. ஆலமுல் அஜ்ஸாம்- சடங்கள் உலகம்.ஆலமுஷ்ஷஹாதத்-சாக்கிர உலகம்.ஆலமுல் முல்க்- ஆட்சி அதிகார உலகம்.
7. அல்இன்ஸான் -மனிதன்.இதுதான் கடைசியான தஜல்லி-தோற்றமும் உடையுமாகும். ஒவ்வொரு படித்தரங்களின் பெயர்களுக்குரிய காரணங்கள், குணங்கள் பற்றி தக்க விளக்கமாக 'அத்துஹ்பத்துல் முற்ஸலா' எனும் நூல் போன்றவைகளில் எழுதப்பட்டுள்ளது. ஆசையுள்ளவர்கள் அவைகளில் காண்க!
ஒரு மற்தபாவில்-படித்தரத்தில் இருந்து வேறொரு படித்தரத்திற்கு வருவதற்கு தஜல்லி- தோற்றம், தனஸ்ஸுல்-இறக்கம் என்று சொல்வார்கள்.
உதாரணமாக:- பாலாக இருக்கும் தன்மையிலிருந்து தயிரின் தன்மைக்கு வந்தால் அப்போது பால், தயிரின் கோலத்தில் தஜல்லியானது-தோன்றியது, வெளியானது, அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள்.மெழுகு வர்த்தியின் எண்ணெய் உறைந்து மெழுகின் தன்மையில் வந்தால் அப்போது மெழுகுவர்த்தியின் எண்ணெய் மெழுகின் கோலத்தில் தஜல்லியானது- தோன்றியது, வெளியானது அல்லது தனஸ்ஸுல்-இறங்கியது என்று சொல்வார்கள். முதல் தன்மைக்கு நிலைமைக்கு திரும்பினால் உறூஜ்-ஏறுவது என்று சொல்வார்கள்.
மேற்கூறப்பட்ட 'அஹதிய்யத்' என்ற முதல் படித்தரம் அல்லாத ஏனை படித்தரங்களில் ஏறி, கூறப்பட்ட படித்தரங்களில் இருப்பது அனைத்தும் மனிதனில் வெளியானால் அவனுக்கு 'அல் இன்ஸானுல் காமில்' –சம்பூரண மனிதன் என்று சொல்லப்படும்.
இவ்வகையான ஏற்றம் சம்பூரணமாக நமது நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில்தான் ஆனது. இதனாலேயே 'அக்மலுல் காமிலீன்-பூரணமானவர்களில் மிக சம்பூரணமானவர்'களாக ஆனார்கள்.
'பாத்திஹுல் உஜூத்'-உஜூதுக்கு (உலகிற்கு) திறவு கோலாக, ஆரம்பமானவர்களாக இருப்பது போல், 'காத்தமுன் னபிய்யீன்'-நபிமார்களுக்கெல்லாம் கடைசியாக, முத்திரங்கமானவர்களாக ஆனார்கள்.
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலா முஹம்மத் யாரப்பி ஸல்லிஅலைஹி வஸல்லிம்.
படித்தரங்களுக்கிடையில் பாகுபடுத்துவது:
بر مر تبة ازوجودحكم دارد . كر فرق مراتب نه كني زنديقي
ஹர்மற்தபா அஸ் உஜூதே ஹுக்மு தாரத் கர்பர்கே மறாத்திப் ந குனி ஸிந்தீகி.
'உஜூதுடைய ஒவ்வொரு படித்தரங்களுக்கும், ஒரு (தனிமையான) ஹுக்மு –சட்டம் இருக்கிறது. நீ, படித்தரங்களுக்கிடையில் பாகுபாடு வைக்கவில்லையானால், ஸிந்தீக்காய் -காபிராகி விடுவாய்' என்று பாரஸீக கவிஞர் சொன்னது போல் உலூஹிய்யத்தின்-தெய்வீகத்தின் படித்தரங்களின் பெயர்களை சிருஷ்டிகளின் படித்தரங்களில் நடத்தக் கூடாது.
எவனாவது அக்லையோ-அறிவையோ, அல்லது நப்ஸையோ அல்லது தபீஅத்தை- இயற்கையையோ அல்லது நட்சத்திரங்கள், அனாஸிருகள்-பூதங்கள், ஜமாதாத்து-நிரஸப் பொருள்கள், நபாதாத்து-தாவரப் பொருள்கள், ஹயவானாத்-ஜீவப் பொருள்கள் இவைகள் ஹக்குத் தஆலாவின் மள்ஹராக இருப்பதைக் கவனித்து தெய்வமென்று – அல்லாஹ்வென்று சொல்வானேயாயால் நிச்சயமாக அவன் பிழை செய்து விட்டான். ஸிந்தீக்காகி விட்டான் -காபிராகி விட்டான்.
ஜைது என்பவனின் கையைப் பார்த்து அது ஜைது என்று சொன்னால் பிழை செய்தவன் போலாகுவான்.சகலத்திலும் உஜூது ஒன்றுதான் என்று சொன்னாலும் சரி, ஒவ்வொரு வஸ்துவும் இலாஹு -தெய்வம் என்று சொல்வதற்கு அனுமதியில்லை. இவ்விடம் கால் சருகி ஷிர்க்கில் வீழ்வதற்கான அபாயகரமான இடம். கவனம்! கவனம்!!
الوجود الحقيقي – الوجود الاضافي – العينيّة – الغيريّة
அல் உஜூது ஹகீகி, அல் உஜூதுல் இளாபி-எதார்த்தமான உள்ளமை, சேர்மானமான உள்ளமை. அல் ஐனிய்யத், அல் ஙைரியத்-தானானது, வேறானது பற்றிய விளக்கம்:
ஐஸும், தண்ணீரும் இரண்டும் மற்றது தானாகவேயாகும். எது தண்ணீரோ அதுவே ஐஸாகும். எது ஐஸோ அது தண்ணீராகும்.
ஆனால் தண்ணீரின் ஓடுகின்ற உருவம் இப்போது மாறி ஐஸின் உறைகின்ற உருவம் உண்டாகிவிட்டது. மேலும் இந்த ஐஸின் உருவத்துடைய ஹுக்முகளும், குணபாடுகளும், அதாவது:- இயற்கை சுபாவமும், குணமும் கூட தண்ணீரை விட்டும் அலாதியாகிவிட்டது.
ஆனால் ஐஸின் உருவத்துடைய உஜூது-உள்ளமையாகிறது ஹகீகிய்யா-எதார்த்தமானதாக இல்லை. என்றாலும் எந்த உள்ளமை தண்ணீருக்கு இருந்ததோ அதே உள்ளமைதான் இந்த ஐஸுக்குமாகும். ஐஸின் உருவம் சுயமான உள்ளமையின் வாடையையும் கூட நுகரவில்லை. வெறும் பார்வையிலும், கவனிப்பிலும், கனவிலும், கற்பனையிலுமே அதன் தோற்றமிருக்கிறது.
பாருங்கள்! ஒரு கிலோ உடையுள்ள தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஐஸின் உருவத்தில் உறைய வையுங்கள். பின்னர் எடை போட்டுப் பார்த்தீர்களேயானால் கூடுதல், குறைதல் இல்லாது ஒரு கிலோ ஐஸே இருக்கும். பின்னர் அந்த ஐஸை உருக வைத்தால் தண்ணீரின் முந்திய உருவம் திரும்பவும் வந்து விடும். பின்னர் இந்த தண்ணீரை எடைபோட்டால் அதே எடைதானிருக்கும். அதாவது கூடுதல் குறைதல் இல்லாது ஒரு கிலோ தண்ணீரே இருக்கும்.
இதேபோல் ஒரு கிராம் தங்கத்தில் மோதிரம் செய்யுங்கள். பின்னர் எடைபோட்டுப் பாருங்கள். ஒரு கிராம் தங்கமே இருக்கும். உருக்கி விடுவீர்களேயானால் அந்த ஒரு கிராம் தங்கமே இருக்கும். மோதிரம் வரவும் இல்லை. போகவும் இல்லை.
ஐஸ் தண்ணீரின் ஒரு நிலையும், கோலமும் ஆகும். மோதிரம் தங்கத்தின் ஒரு நிலையும் கோலமும் ஆகும். ஐஸும், மோதிரமும் எதார்த்தமான உள்ளமையின் வாடையை நுகரவில்லை.
குமுளியும், அலையும், பனி கட்டியினால் உண்டாக்கப்பட்ட கூஜாவும் ஹகீகத்தின் -எதார்த்தமான புறத்தினால் இவை அனைத்தும் தண்ணீர் தானாகும். நாம ரூபங்களான குறிப்புகளின் படி தண்ணீருக்கு வேறானதாகும்.
இதைப் போல கானல் நீரும் ஹகீகத்தின் புறத்தினால் ஆகாயம்தானாகும். குறிப்பின் புறத்தினால் ஆகாயத்திற்கு வேறானதாகும்.
كلّ شيي هالك الاّ وجهه
குல்லு ஷெய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹு'-சகல வஸ்த்துக்களும் அழிந்ததாகும். (இல்லாமலானது ஆகும்.) அவனுடைய வஜ்ஹை(தாத்தை)தவிர' –அல்-குர்ஆன் (28:88) என்பதின் கருத்தும் இதுதான்.
ஐஸைப் பார்த்து தண்ணீர் என்றோ, அல்லது தண்ணீரைப் பார்த்து ஐஸ் என்றோ, தங்கத்தைப் பார்த்து மோதிரம் என்றோ, மோதிரத்தைப் பார்த்து தங்கம் என்றோ குமிழி, அலை, கூஜாவைப் பார்த்து தண்ணீர் என்றோ சொல்லக் கூடாது.
ஐஸ் தண்ணீர்தான். தண்ணீர்தான் ஐஸ். மோதிரம் தங்கம்தான். தங்கம்தான் மோதிரம். குமிழி, அலை, கூஜா தண்ணீர்தான். தண்ணீர்தான் குமிழி, அலை, கூஜா. என்றாலும் அது அது எந்தக் கோலத்தில் இருக்கிறதோ அந்தக் கோலத்தின் ஹுக்மை-சட்டத்தை நடத்தாட்ட வேண்டும். இது ஷரீஅத் சட்டமாகும்.
ஆகவே எல்லா மற்தபாக்களிலும்-படித்தரங்களில் பேதகமாகாமலும், மாறாமலும், பிளாமலும், உலையாமலும், எதார்த்தமாக உண்டானதாக இருக்கக் கூடியது கலப்பற்ற உஜூது- பரம்பொருள் மட்டுமெயாகும். இதுவே ரப்புடைய வஜ்ஹு-தாத்தாகும்.சுகங்கள், துன்பங்கள், வேதனைகள் பற்றிஉஜூதானது தாத்தாலும் ஒன்றே. சிபத்துகளாலும் ஒன்றே. அதற்கு அறவே எண்ணிக்கை இல்லை என்று சரியான ஆதாரங்களைக் கொண்டு தரிப்பட்டிருக்க, விதிவிலக்குகளைக் கொண்டு வருத்தப்படுவது ஏன்?அவ்விதி விலக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் சுகம் கிடைக்குமென்றும், விரோதம் செய்தால் வேதனை கிடைக்குமென்றும், ஈருலக சம்பந்தமான பலவகையான நோய் நொம்பலங்களைக் கொண்டு சோதிப்பது ஏன்?தன்தனக்கே சுகத்தைக் கொடுப்பதும், வேதனை படுத்துவதாக ஆகாதா? என்ற கேள்விகள் மனதில் வந்தால் அதற்கான பதில்களை அறிந்துக் கொள்ளுங்கள்:-
وما خلقت الجنّ والانس الاّ ليعبدون
வமா கலக்துல் ஜின்ன வல் இன்ஸ இல்லாலி யஃபுதூன்.
'ஜின்களையும், மனுக்களையும் என்னை வணங்குவதற்காகவேயல்லாது நான் படைக்கவில்லை' என்று அல்லாஹுதஆலா குர்ஆனில் (51:56) சொல்வது போன்று வணக்கம் புரிவதும், வருத்தங்களும், சுகங்களும் வேதனைகளும், துன்பங்களும் இவை அடங்கலும் சிருஷ்டிகளான குறிப்புகள் அளவில் மீளுவதாகும். அவனது உஜூது இவை அனைத்தை விட்டும் தூய்மையானதாகும்.
குறிப்பு:- சிருஷ்டியான குறிப்பு எனும் உணர்வு இவனில் இருக்கும்போதுதான் இவை அனைத்துமாகும். இவனது சிருஷ்டி என்ற உணர்வு அழிந்து போகி, அல்லாஹுதஆலா அளவில் போகிவிட்டால் அல்லாஹுதஆலாவின் உஜூதே அன்றி வேறு எதுவும் இல்லை.
அஷ்ஷுஹூது – இறைவனை காட்சி காண்பது
ஷுஹூது- காட்சி காண்பது இருவகை:
1. அஹ்லுல் ஜம்யி- சேகரமானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவதொரு வஸ்துவை பார்த்தார்களேயானால் இது ஹக்குதஆலா தனது அஸ்மாக்களை-பெயர்களைப் பூண்டவனாக 'அஃயானுதாபிதா' எனும் கண்ணாடியில் அதைக் கொண்டு வெளியான வெளிப்பாடாகும் என்று தங்களது ஹிருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
இவர்களிடத்தில் ஹக்குதஆலா ளாஹிராக-வெளியானவனாகவும், உலகம் பாதினாகும்-உள்ளானதாகும். சகல வஸ்த்துகளிலும் முதலாவது எட்டிக் கொள்வது அந்த உஜூதாகும்.
2. அஹ்லுல் பர்க் – பிரிவினையானவர்கள் எனும் வகுப்பினர்களிடத்தில், ஏதாவது ஒரு வஸ்துவைப் பார்த்தார்களேயானால் இந்த வஸ்த்து அஃயானு தாஃபிதாவின் நிழல்களில் நின்றுமொரு நிழலாகும். அதை ஹக்குதஆலா தனது உஜூது எனும் கண்ணாடியில் வெளியாக்கியிருக்கிறான் என்று தங்களது இருதயத்தைக் கொண்டு காணுவதாகும்.
இவர்களிடத்தில் ஹக்குதஆலா பாதினாகும்-உள்ளானவனாகவும், உலகம் ளாஹிராக-வெளியானதாகும்.
இவ்விரண்டு காட்சிகளை நீ அறிந்துக் கொண்டு இவை இரண்டையும், அல்லது இதில் ஒன்றையாவது பற்றிப் பிடித்துக் கொள்!
குறிப்பு:- அல்லாஹு தஆலாவின் இல்முல் இஜ்மாலியில்- தொகுப்டபான அறிவிலவ் தன்னையுமத் சிருஷ்டிகளையும் அறியும் பொழுது அறியப்பட்டதற்கு 'ஷஃனு' என்றும், இல்முத்தப்ஸீலில்-வகுப்பான அறிவில் அறியும் போது 'அஃயானு தாபிதா' என்றும், சிருஷ்டியான வெளியிலான உலகத்திற்கு 'அஃயானுல் காரிஜிய்யா' என்றும் சொல்வார்கள்.
காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள்
சிருஷ்டிகளாகிய மள்ஹருகளில்-வெளியாகும் ஸ்தானங்களில் காட்சி காண்பதளவில் சேர்த்து வைக்கும் வழிகள் பல. அவைகளில் மூன்று வழிகளை ஆரிபீன்களான மெய்ஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

1. قل الله ثمّ ذرهمகுலில்லாஹ் தும்ம தர்ஹும் 'அல்லாஹ் என்று சொல்லும், பின்னர் அவர்களை விட்டுவிடுங்கள்'- அல்குர்ஆன்(61:91)என்ற திருவசனத்திற்கு இணங்க, நீ ஜாமிஆன இஸ்மாகிய – அனைத்தையும் சேகரமாக்கிய பெயரான 'அல்லாஹ்' எனும் அச்சரங்களை 'பிக்ரு-சிந்தனை' எனும் பேனாவைக் கொண்டு இருதயமெனும் பலகையில் சூரிய ஒளியான சாயத்தைக் கொண்டு எழுத வேண்டும்.அதாவது:- இப்படி ஒளியாக மனதில் எழுதப்பட்டிருப்பதாக சிந்திக்க வேண்டும். இந்த கோலமும் அல்லாஹுதஆலாவின் வெளிப்பாடுகளில் ஒரு வெளிப்பாடு. இதில் அவன் ஹுலூஸ்-விடுதி விடுதல், இத்திஹாது-ஒன்றாக சேர்தல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.குறிப்பு: பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினால் ஹுலூல்-விடுதிவிடுதல், இறங்குதல் என்றும், தண்ணீரும் சீனியும் ஒன்றாய் சேர்ந்தால் இத்திஹாது-ஒன்றாக சேர்தல் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு இரண்டு பொருள்கள் வேண்டும்.இங்கு அல்லாஹுதஆலாவும், அவனுடைய தோற்றங்களுமே அல்லாது வேறொன்றும் இல்லை. ஐஸில் தண்ணீர் வெளியானது போலும், தங்க நகைகளில் தங்கம் வெளியானது போலும் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
2. اقرأ كتابك كف بنفسك اليوم عليك حسيبا
இக்ரஃ கிதாபக கபா பிநப்ஸிகல் யவ்ம அலைக்க ஹஸீபா'உன்னுடைய கிதாபை ஏட்டை ஓது. இன்று நீனே உன்பேரில் கேள்வி கேட்கிறவனாக போதும்; -அல்-குர்ஆன் (17:14) என்ற திருவசனத்திற்கிணங்க உன்னுடைய 'ஐனுத்தாபிதா –வகுப்பான அல்லாஹ்வின் அறிவில் உள்ளதையும்' 'ஐனல் காரிஜா-சிருஷ்டியான வெளிரங்கமான உஜூதையும்' திடப்படுத்திக் கொண்டு இரண்டையும் ஒன்றாக ஆக்கி உன்னுடைய ஐனகாரிஜா, அல்லாஹ்வின் வெளியாகும் தானங்களில் ஒரு வெளியாகும் தானம், அதில் ஹுலூல், இத்திஹாது இல்லாமல் வெளியாகி இருக்கிறான் என்று நிர்ணயம் கொள்வதாகும்.
3. قل ان كنتم تحبّون الله فاتبعوني يحببكم الله
குல் இன்குன்தும் துஹிப்பூனல்லாஹ பத்தபிவூனி யுஹ்பிபுகுமுல்லாஹ்-'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பீர்களேயானால் என்னை பின்பற்றுங்கள்' என்று (நபியே) சொல்லுங்கள் -அல்குர்ஆன் (3:31) என்ற திருவசனத்திற்கிணங்க, ஆலமுல் கபீர் – (முழு சிருஷ்டியான) பெரிய உலகத்தையும், ஆலமுஸ்ஸகீர் -(மனிதனான) சிறிய உலகத்தையும், நிச்சயத்துக் கொண்டு பின் பெரிய உலகத்தை எடுத்துக் கொண்டு இது அல்லாஹுத் தஆலாவின் மள்ஹறுகளில் சம்பூரணமானது என்றும், இதில் ஹக்குதஆலா ஹுலூல்-விடுதி விடுதல், இத்திஹாது –ஒன்றாக சேருதல் இன்றி வெளியாகி இருக்கிறான் என்று நீ நிர்ணயம் கொள்வதாகும்.
இம்மூன்று வழிகளையும் அறிந்துக் கொண்டால் உன்னுடைய காமிலான ஷெய்குடைய உத்தரவின்படி மூன்றில் ஒன்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் அருள் உன்னை இரண்டாவது பனாவின் ஸ்தானத்தளவில் சேர்த்து வைக்கிற வரையிலும் உன் அகக் கண்ணை கொண்டு அதை முஷாகதா-தியானித்துக் கொண்டு இருக்கவும்.குளிப்பாட்டுகிறவனின் கையில் மைய்யித்தைப் போல், உன் நப்ஸை காமிலான ஷெய்கிடத்தில் ஒப்படைத்து அவருக்கு நீன் தொண்டு செய்வதைக் கொண்டேயல்லாது உனக்கு அது எளிதாகாது.
அல்லாஹுதஆலாவின் பக்கம் நெருங்குவது பற்றிய விளக்கம்.
அல்லாஹ்தஆலாவின் பக்கம் நெருங்குவது இரு வகையிலாகும்.
1. குற்புன்னவாபில்-நபிலான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது:-
لا يزال عبدي يتقرّب اليّ بانّوافل حتّي احبّه فاذا احببته كنت سمعه الّذي يسمع به وبصره الّذي يبصره بهويده الّتي يبطش بها ورجله الّتي يمشي بها – رواه البخري
'என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களைக் கொண்டு என்னளவில் நெருங்கிக் கொண்டே இருக்கிறான். நான் அவனை உகக்கிற வரையிலும், நான் அவனை உகந்து விட்டால் அவன் கேட்கின்ற கேள்வியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் ஆகி விடுகின்றேன்.'(அல்ஹதீது குத்ஸி) அறிவிப்பு: புகாரி, மிஷ்காத் ஹதீது எண்:2260.
'குற்புன்னவாபில்' என்பது மனிதனுக்கு அல்லாஹுதஆலாவினால் இரவலாக கொடுக்கப்பட்ட, கட்டுப்பாடான, மானுஷீகத்துவ இலட்சணங்களில் கட்டுப்பாடுகள் அழிந்து அதற்கு பகரமாக கட்டுப்பாடுகள் இல்லாத அல்லாஹுதஆலாவின் இலட்சணங்கள் மனிதனில் வெளியாவதாகும்.
அப்போது அல்லாஹுதஆலாவின் உத்தரவு கொண்டு அல்லாஹுதஆலா செய்வது போன்று இவனும் செய்வான். 'மனித சிபாத்துகள் -இலட்சணங்கள் அல்லாஹுதஆலாவின் பூர்வீகமான இலட்சணங்களில் பனாவாகிறது-நாஸ்தியாகிறது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது நப்லான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.
2. குற்புல் பறாயில்-கடமையான வணக்கங்களைக் கொண்டு நெருங்குவது.
ما تقرّب الي عبدي بشيي احبّ الي ممّا افترضت عليه
என்னுடைய அடியான் என்னளவில் அவன் மீது நான் கடமையாக்கியதைவிட எனக்கு உகப்பான எப்பொருளைக் கொண்டும் நெருங்குவதில்லை.நூல்: புகாரி, மிஷ்காத் ஹதீது எண் 2260
'குற்புல் பறாயில் என்பது அடியான் சகல சிருஷ்டிகளின் உணர்வையும், தன்னை உணர்வதையும் கூட விட்டு விட்டு ஹக்குதஆலாவின் உஜூது ஒன்றைத் தவிர மற்றவை ஒன்றும் அவன் பார்வையில் ஷுஹூதில் தரிப்பாடாகாத விதமாக முழுவதுமாக ஐக்கியமாக அல்லாஹுதஆலாவில் பனாவாகிவிடுவதாகும்.
'அடியானுடைய தாத்து, அல்லாஹு தஆலாவின் தாத்தில் பனாவாகிறது-நாஸ்தியாவது' என்று சொன்னதின் கருத்து இதுவாகும். இது பர்ளான வணக்கங்களை நிறைவேற்றி வந்ததன் பயனாகும்.
அடியான் தன் நப்ஸை விட்டும் இல்லாமலாகி மானுஷீக உஜூது உரியப்பட்டு அடிமைத்தனத்தின் ஒளி நூர்ந்து போகி சிருஷ்டியான ரூஹு பனாவாகிவிடுமானால் அப்போது அடியான் அல்லாஹுதஆலாவின் தாத்திய்யான தஜல்லிக்கும், சரிபாத்தியான தஜல்லிக்கும் தகுதியாகிவிடுகிறான்.
இவன் பேரில் அல்லாஹு தஆலா தாத்தைக் கொண்டு அல்லது சிபத்துக்களைக் கொண்டு தஜல்லியாக நாடினால் இவனை விட்டும் உரியப்பட்டதற்கு பகரமாக தன்னுடைய தாத்தில் நின்றும் ஒரு 'லதீபா'-அதி நுட்பமானதை, ஒன்றாய் சேராமலாகவும் அடியானின் ஹைக்கலில்-கோலத்தில் வைக்கிறான். அதற்குத்தான் 'ரூஹுல் குத்ஸு'(படைப்பினங்களை விட்டும்) பரிசுத்தமான ஆன்மா என்று பெயர் சொல்லப்படும்.
ஆகவே ஹக்குதஆலா தனது தாத்தைக் கொண்டோ அல்லது சிபத்துக்களில் ஒரு சிபத்தைக் கொண்டோ தஜல்லியானால் எதார்த்தத்தில் அவனும், அவனுடைய சிபத்தும் அவன் தன்பேரிலேயே வெளியானான். அடியானின் பேரில் அல்ல. இந்நேரத்தில் அடியானை அல்லாஹுதஆலா என்று சொல்லிவிடக் கூடாது.
முறாக்கபா செய்யும் முறை
குற்புன்னவாபிலும், குற்புல் பறாயிலும் சொல்லப்பட்ட அல்லாஹுதஆலா அளவில் நீ, நெருங்குவதை நாடினால் முதலாவதாக நபி நாயகம் ஸல்லல்லாஹ} அலைஹி வஸல்லம் அவர்களை சொல்லாலும், செயலாலும் வெளிரங்கத்திலும், உள்ரங்கத்திலும் பின்பற்றி நடப்பதை பற்றிப் பிடித்துக் கொள். உன் வெளிரங்கம் உள்ரங்கத்திற்கும், உள்ரங்கம் வெளிரங்கத்திற்கும் மாற்றமாக ஆகுவதை பயந்து கொள்! அது உனது அமல்களை அழித்து விடும். அல்லாஹுதஆலாவை விட்டும் தூரப்படுத்திவிடும்.
இரண்டாவதாக கலிமத்துத் தய்யிபா (லாஇலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் தானாகவே இருக்கிற வஹ்தத்துல் உஜூதின்-உஜூது உன்றாக இருப்பதின் முறாக்கபாவை அதற்கு உளு இருக்க வேண்டும் என்ற விதியில்லாமல் (உளு இருந்தால் உத்தமம்தான்) இன்ன நேரத்தில்தான் செய்ய வேண்டுமென்றில்லாமல் எல்லா நேரத்திலும், மூச்சு போவது வருவது பற்றி கவனிக்காமலும், கலிமத்துத் தய்யிபாவின் அட்சரங்களை நோட்டமிடாமல் அதன் உட்கருத்தை மட்டுமே அல்லாது வேறொன்றையும் நோட்டமிடாது நீ நின்றவனாய், உட்கார்ந்தவனாய், நடக்கின்றவனாய், படுத்திருக்கிறவனாய், சகல நிலைமைகளிலும் செய்து வர வேண்டும்.
முறாக்கபா செய்யும்போது, முதலாவதாக உன்னுடைய ஹகீகத்தும், அந்தரங்கமும் ஹக்குதஆலாவுக்கு வேறாக இருப்பதான 'அன்னிய்யத்தை –நான் என்ற உணர்வை நீக்க வேண்டும். இதுதான் 'லாயிலாஹ' என்று நீக்குவதின் பொருளாகும்.
இரண்டாவதாக உன் கல்பில் ஹக்கு ஸுப்ஹானஹுவதஆலாவின் உஜூதை தரிப்படுத்துவதாகும். இதுதான் 'இல்லல்லாஹ்' என்று தரிபடுத்துவதின் பொருளாகும்.
சங்கைக்குரிய எங்களது தாதாபீர் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் தங்களது 'அஸ்ஸுலூக்-இறைவழி நடை' எனும் உர்து நூலில், எல்லா தரீக்காக்களையும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து எழுதிய முறாக்கபாவை அவர்களது கலீபா சங்கைக்குரிய எங்களது ஆன்மீக குருநாதர் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மொழி பெயர்த்துள்ள அந்த அஸ்ஸுலூக் வாசகத்தை அப்படியே தருகிறேன்.
மிகச்சுருக்கமான, சக்தி வாய்ந்த, மிக்க நம்பிக்கையான, எதார்த்தமான முறாக்கபாவாகிறது:-
ஒரே அடியாக கண்ணை மூடிக் கொண்டு ஹக்குதஆலாவின் தாத்தாகிய தன்னுடைய கல்பு இருதயமெனும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்து விட்டு உப்பு சமுத்திரத்தில் கரைந்து போவது போல் தன்னை அழித்து விட வேண்டும். தன்னோடு சகல உலகத்தையும் அழித்து விட வேண்டும்.
மனிதன் தானே உலகமாகும். எப்பொழுது மனிதன் அழிந்து விடுகிறானோ, அப்போது அவனோடு உலகம் அனைத்தும் அழிந்து விடுகிறது. உலகத்தில் எத்தனை சூறத்துகள் (கோலங்கள்) இருக்கின்றதோ அத்தனையும் மனிதனுடைய சூறத்துகளேயாகும்.
உலகம் ஒரு கண்ணாடி வீடாகும். மனிதனுடைய சூறத்துகள் அதில் காட்சியளிக்கிறது. எப்பொழுது மனிதன் கண்ணாடி வீட்டை விட்டும் வெளிப்பட்டு விடுவானோ ஒரு சூறத்தும் எந்த கண்ணாடியிலும் எஞ்சியிராது. இதே விதமாகவே மனிதனுக்கு அவசியம்.
அதாவது:- ஒவ்வொரு அணுக்களுடைய சூறத்துக்களையும் தன்னுடைய சூறத்தின் பிரதிபிம்பம் என்று உணர வேண்டும். இன்னும் உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவின் உசும்புதல், ஒடுங்குதலும், என்னுடைய உசும்புதல், ஒடுங்குதலோடு கட்டுண்டதாகும் என்று உறுதிக் கொள்ள வேண்டும்.
இன்னும் எப்பொழுது கண்ணை மூடி விடுகிறானோ அப்போது உறுதி கொள்ள வேண்டும்.
அதாவது:- நான் எந்த சூறத்தின் காரணமாக தாத்தை விடடும் பிரிந்திருந்தேனோ அந்த என்னுடைய இன்ஸானிய்யத்தான சூறத்து-மனித உருவம் அழிந்து விட்டது. இப்பொழுது நான் தாத்து தானாகிவிட்டேன். வானம், பூமி இன்னும் சகல உலகமும் என்னோடு அழிந்து விட்டது. இப்போது நான் சூறத்தும், நிறமுமில்லாது சுத்தமாகயிருக்கிறேன். நான் உருவம், நிறமில்லாத, கரையில்லாத சமுத்திரமாக இருக்கும். எதுவரையிலும் என்றால் நான் சமுத்திரiமாக இருக்கும் என்ற நினைப்புங்கூட அழிந்து விட வேண்டும். இன்னும் இந்த நானும், சமுத்திரத்தின் நானும் தாத்து தானாக ஆகிவி;ட வேண்டும்.
ஆண்டவா! உனது நேசர் தீர்க்;கதரிசிகளுக்கெல்லாம் நாயகமான எங்கள் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொருட்டினால் எங்களுக்கு இந்த வலுப்பமான வாழ்வைக் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!!
குறிப்பு:- இந்த முறாக்கபாவை அடிப்படையாக வைத்துதான் நம் ஷெய்குநாயகம் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பைஅத் எடுக்கும் போது முரீதீன்களுக்கு இதை உபதேசித்தும், ஸில்ஸிலாவில் இணைத்தும் இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
اسّير الباطنஅஸ்ஸய்றுல் பாதின்- அகமிய (இறைவழி) நடை:
அகமிய இறைவழி நடை ஆறு வகை:
1. அஸ்ஸய்று லில்லாஹிاسّير لله- அல்லாஹ்வுக்காக அறியாமையில் இருந்து அறிவளவில் நடப்பது.2.அஸ்ஸய்று இலல்லாஹிاسّير الي الله-அல்லாஹ் அளவில் அறிவிலிருந்து அமல்(வணக்கம்) அளவில் நடப்பது.3.அஸ்ஸய்று குபில்லாஹிاسّير في الله- அல்லாஹ்வில் நடப்பது- அவனில் பனாவாகுவது-மாயுவுவது.4. அஸ்ஸய்று மினல்லாஹிاسّير من الله- அல்லாஹ்வில் நின்றும் நடப்பது. மஹ்வில்-அழிவில் இருந்து ஸஹ்வு-தெளிவு அளவில் மீள்வது கொண்டு பகாவாகும்-நிலைப்பதுவாகும்.5. அஸ்ஸய்று பில்லாஹிاسّير باالله -அல்லாஹ்வைக் கொண்டு நடப்பது அல்லாஹ் உடைய சிபத்துகள், அஸ்மாக்களைக் கொண்டு பூணுவதாகிய பகாவுல் பகாவாகும்.-நிலைப்பதிலும் நிலைப்பதுவாகும்.6. அஸ்ஸய்று மஅல்லாஹிاسّير مع الله-அல்லாஹ் உடன் நடப்பது மேலுலகத்திலும், கீழுலகத்திலும் ஆட்சி, அதிகாரம் செய்வதாகும்.
வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்குர்ஆன் ஆதாரங்கள்
ولله المشرق والمغرب فاينما تولّوا فثمّ وجه الله
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்குரியது. எப்பக்கம் (புலனால் அல்லது புத்தியால்) முன்னோக்கினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் (தத்சொரூபத்தின் வெளிப்பாடு) இருக்கிறது (2:115)
ونحن اقرب اليه من حبا الوريد
நாம் அவனளவில் (அவனுடைய சக்திகளின் அந்தரங்கமாக இருக்கிறவிதத்தில்) அவனுடைய பிடரி நரம்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம். (50:16)
وهو معكم اينما كنتم
நீங்கள் எங்கிருந்தாலம் (சகலத்திலும் அவனது உஜூது ஊடுறுவி இருக்கிற விதத்தில்) அவன் உங்களுடன் இருக்கிறான். (57:4)
ونحن اقرب اليه منكم ولاكن لا تبصرون
(மரண தருவாயிலிருக்கிற) அவன் அளவில் (அவனுடைய உறுப்புகளாகவும், சக்திகளாகவும் வெளிப்பாடாக இருக்கிற விதத்தில்) உங்களை விட நாம் மிக நெருக்கமாக இருக்கிறோம். என்றாலும் நீங்கள் (அதன் அந்தரங்கத்தை) பார்த்தறிய மாட்டீர்கள். (56:85)
انّ الّذين يبا يعونك انّما يبايعون الله يد الله فوق ايديهم
(நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கை கொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில்தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது.(48:10)
هو الاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيي عليم
அவனே (சகல சிருஷ்டிகளைக் காண) முந்தியவன்,(மள்ஹறு-வெளிப்பாடு ஸ்தானங்களில் வெளிப்படுவதில்) பிந்தியவன், (சிருஷ்டிகளின் கோலங்களைக் கொண்டு) வெளியானவன், (சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளை விட்டும்) உள்ளானவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். அவன் சர்வ பொருள்களைக் கொண்டும் அறிந்தவன். (57:3)
وفي انفسكم افلا تبصرون
உங்களது நப்ஸுகளிலேயே (வஹ்தத்துல் உஜூதுடைய அத்தாட்சிகள்) இருக்கிறது. நீங்கள் பார்க்க வேண்டாமா? (51:21)
واذا سئلك عبادي عنّي فانّي قريب
(நபியே!) என்னைப் பற்றி என்னுடைய அடியார்கள் உங்களிடம் கேட்டால் நான் (ஹகீகத்தை-எதார்த்தத்தைக் கொண்டு) சமீபமாக இருக்கிறேன் (என்று சொல்வீராக!) (2:186)
وما رميت اذ رميت ولاكنّ الله رمي
(நபியே! காபிர்கள் மீது மண்ணை) நீங்கள் வீசியபோது(வெளியில் உங்களில் நின்றும் வீசும் கோலம் உண்டானாலும்) நீங்கள் வீசவில்லை. எனினும் (உள்ளாகவும், அந்தரங்கமாகவும் இருக்கிற) அல்லாஹ் வீசினான். (8:17)
وكان الله بكلّ شيي محيطا அல்லாஹு தஆலா (ஒரு அணுவும் கூட விடாது சகலத்திலும் ஊடுறுவிருக்கிற விதத்தில்) சகல பொருள்களையும் சூழ்ந்தவனாகிவிட்டான். (4:126)
الا انّه بكلّ شيي محيطஅறிந்து கொள்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளைக் கொண்டு சூழ்ந்திருக்கிறான். (41:54)
வஹ்தத்துல் உஜூதின் பேரில் அறிவிக்கின்ற அல்ஹதீது ஆதாரங்கள்.
اصدق كلمة قالها الشاعر كلمة لبيد—الا كلّ شيئ ما خلا الله باطل . (متفق عليه)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates