Elegant Rose - Diagonal Resize 2 ஆகஸ்ட் 2011 ~ TAMIL ISLAM

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

அல் ஹகீகா-Alhakeekah-part 1

அல் ஹகீகா-Alhakeekah-part 1

அல் ஹகீகா
அரபியில்: அல்லாமா மௌலானா அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)
தமிழில்: மௌலானா மௌலவி அஸ்ஸஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்)
முகவுரை

بسم الله الر حمن الرّحيم. الحمدلله ربّ العالمين والصلوه واسّلام علي الم  علي المظهر الاتم سيّدنا محمّد و علي آله واصحابه واتباعه اجمعين.
அற்புத ஞானி, ஆன்மீக வள்ளல், ஆரிபீன்களின் இமாம், வாயிழீன்களின் சுல்தான், மஜ்தூபுகளின் தலைவர், மெய்ஞ்ஞான சமுத்திரம், ஹஜ்ரத் மௌலானா மௌலவி அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபிய்யில் காதிரிய்யில் ஹைதராபாதிய்யி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களின் அதியற்புத ஞான பொக்கிஷங்களான அரிய நூல்களில் சிலதை ஹக்கை மறைத்து பாத்திலை நிலைப்படுத்த எத்தனித்த அக்கிரமக்காரர்கள் மீது 'தர்க்கம்' என்னும் வாளைக் கொண்டு அடர்ந்தேறி, அவர்களை திசையறியாது, திகைத்தோட வைத்த மெய்ஞ்ஞானக் குருநாதர், எங்கள் ஷெய்கு மௌலானா மௌலவி ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபிய்யில் காதிரிய்யிஸ் ஸித்தீக்கிய்யி (காஹிரி) (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் மொழிபெயர்த்து ஞானத்தேட்டமுள்ள மக்களுக்காக வெளியிட்டார்கள்.
அந்த வரிசையில் அவரது எண்ணத்தில் உறைந்து கிடந்த, அவர்களது வாழ்நாளில் செய்து முடிக்காமல் போன 'அல் ஹகீகா' எனும் இந்த அரிய ஞானப் பொக்கிஷ நூலை நான் மொழிபெயர்த்து எம் ஷெய்குவின்' ஆசையைப் பூர்த்தி செய்து அன்னாருக்கு இதை காணிக்கையாக ஆக்குவோம் என்னும் நோக்கத்தின் பேரில் பலமுறை எத்தனித்தும் பல்வகை வேலைப்பளுக்களால் அது கைகூடாமற் போயிற்று.
இருப்பினும் ஸ்ரீலங்காவிலுள்ள 'அக்கரைப் பற்று' எனும் கிராமத்தில் இவ்வெண்ணம் நிறைவேற அல்லாஹுத்தஆலா நாடி இருந்தான் போலும். அது அந்த இடத்திலேயே நிறைவேறிற்று.
ஹிஜ்ரி 1419, றமழான் 6ம் நாள் (26-12-1998) அக்கறைப்பற்று ஸூபி மன்ஸிலில் இந்த மொழிபெயர்ப்பை, அல்லாஹுத்தஆலாவின் பக்கம் பரஞ்சாட்டியவனாகவும், சங்கைமிகு ஷெய்குமார்களின் நல்லுதவியை நாடியவனாகவும் இவ்வேலையை அங்கு ஆரம்பித்து ஹிஜ்ரி 1420, முஹர்ரம் 11ம் நாள் (28-04-1999) இல் இவ்வேலையை செவ்வனே நிறைவேற்றினேன். அல்ஹம்துலில்லாஹ்.
இதை எழுதுவதற்கு என்னோடு முழுமூச்சாக ஒத்துழைத்த சோதரர் ஏ.எம். அ    ஹ்மத் (எனக்கும், அவருக்கும் இர்பானுடைய இல்மையும் சகல பாக்கியத்தையும் நல்குவானாக) அவர்களுக்கும் இதற்கு எல்லா வகையிலும் உதவி, ஒத்தாசை நல்கிய அக்கறைப்பற்று ஹிஸ்புல்லாஹ் சபையினருக்கும் எனது நன்றியையும், துஅவையும் சேர்ப்பிக்கிறேன்.
ஷெய்குமார்களுக்கெல்லாம் பெரும் ஷெய்கான மெய்ஞ்ஞானப் பெருங்கடல் முஹிய்யத்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு(அவரைத்  தொட்டு எங்களையும் பொருத்தமாக்கி வைப்பானாக) அவர்களின் இரு கவிகளுக்கு விளக்கவுரையாக அமைந்த இந்த அரும் பொக்கிஷம், ஞான தேட்டமுடைய எல்லா முஹிப்பீன்களுக்கும் பெரிதும் உதவும் என நம்புகின்றேன்.
என்றாலும், இயன்றவரை இதை இலகு தமிழில் மொழி பெயர்த்தாலும், குறிக்கப்பட்ட சில சொற்களையும், வாக்கியங்களையும் அவ்வாறே அதற்குரிய பாணியில் மொழிபெயர்த்தது எங்கள் மெய்ஞ்ஞான சொரூபர், ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்களுக்கு கடப்பு செய்யாமல் இருப்பதற்காகவும், இலகு தமிழில் திருப்புகின்ற பொழுது ஏற்படுகின்ற வழுக்களையும், கருத்துச் சரிவுகளையும் பற்றி அச்சமுற்றதற்காகவும், நான் அவ்வாறே அவ்வாக்கியங்களை அறபியிலும், தமிழிலும் கொடுத்திருக்கின்றேன்.
இந்நூலை வாசித்து இதிலுள்ள விளக்கங்களை உள்ளாளுள்ளபடி ஓரணுப்பிரமாணமாவது கருத்துப் பிசகாது விளங்கி ஞானப்பாட்டையில் சித்தி பெறவும், பலமுறை வாசித்தும் தெளிவு ஏற்படாவிடத்து, ஞானத்தேர்ச்சியுள்ளவர்களிடமும், அதன் அந்தரங்கம் தெரிந்தவர்களிடமும் சென்று அதன் குறி கருத்தை விளங்கியறியவும், எல்லா முரீதீன்களையும், முஹிப்பீன்களையும் நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். ஏனெனில் அல்லாஹு தஆலா அவனது சங்கையான கிதாபில்…,

فاسلوا ا هل الذّكر ان كنتم لاتعلمون
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் இறை தியானச் சிந்தையுடைய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வீர்களாக என்று கூறியதற்கமைய.
நான் இவ்வாறு சொல்லக் காரணம், ஞானம் எனும் போர்வையில் ஞானத்தை பொதுமக்களின் மத்தியில் சொல்லக்கூடியவர்கள், செய்யிதுல் அன்பியாவான எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பரமார்த்திக(தஸவ்வுப்) ஞானம் பற்றி எதைக் கூறினார்களோ அதற்கு முற்றிலும் மாறான கருத்தையும் விளக்கத்தையும் கொடுத்து தானும் 'குப்று' எனும் குழியில் வீழ்ந்து, மற்றவர்களையும் அக்குழியில் விழுத்தாட்டும் நிலையை நான் இப்போது அறிந்து வருகின்றேன். இதற்காக வேண்டித்தான் இந்த விடயத்தில் மிக்க கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க எமது எல்லா முரீதீன்களையும், முஹிப்பீன்களையும் வற்புறுத்துகின்றேன்.
கண்டபடியான ஞானவிளக்கங்களையும், தன் எண்ணத்தில் தோன்றிய சுய விளக்கத்தையும், இவ்வரிய நூல் சார்பாக சொல்வதும், விளக்குவதும், மற்றவர்களிடமும் திணிப்பதும் 'குப்றும்' குற்றமுமாகும் என்பதை மீண்டும் நான் உங்களுக்கு வற்புறுத்துகின்றேன்.
இதுபோன்று ஏனைய பல நூற்களை மொழிபெயர்க்கவும், எழுதவும் அல்லாஹ் எமக்கு நல்லருள் பாலிப்பானாக.
و اخردعوناان الحمد لله ربّ العالمين
இவ்வண்ணம்,
காதிமுல் கௌமு(சமூக ஊழியன்)
செய்யிது முஹம்மத் ஜலாலுத்தீன்
(பூக்கோயாத் தங்கள்)

 
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
அல் ஹகீகா
 
சர்வ புகழும் தாத்தில் ஒருவனானவனும் சுஊனாத் எனும் உடைகளில் பலதானவனுமாகிய அல்லாஹ்வுக்கே ஆகும். சலாத்தும் சலாமும் அல்லாஹ்வின் கலிமாக்கள் அனைத்தையும் ஒருங்கே சேகரித்துக்கொண்ட ஒரு கலிமாவான எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிலும் அவர்கள் அல்லாஹ்வின் அஸ்மாக்கள் அனைத்தையும் கொண்டு நஃது சொல்லப்பட்டவரும் சிபாத்துக்கள் அனைத்தையும் கொண்டு வர்ணிக்கப்பட்டவருமாவார். – இன்னும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள்- அவர்கள் குர்ஆனின் சூசகமானதும் தெளிவானதுமான எல்லா வாக்கியங்களைக் கொண்டும் ஈமான் கொண்டவர்கள்- பேரிலும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
அம்மா பஃது
பலவீனமானவனும் நேர்வழிக்காட்டக் கூடிய அல்லாஹ்வின் பக்கம் தேவையானவனுமான அடியான் முஹம்மத் அப்துல் காதிர் (ஹைதராபாதி) – அழகான கைகளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சங்கைப்படுத்தி வைப்பானாக! அவர் சொல்லுகிறார்.
நான் மக்களின் தலைவரான நபிநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்திலிருந்து 1344 ஆம் ஆண்டு மெட்ராஸ் நகரில் தங்கியிருந்த போது அந்த நகரைச் சேர்ந்த ஒரு சாலிஹான மனிதர், பெரும் ஷெய்குமார்களுக்கெல்லாம் ஷெய்கான முஹிய்யத்தீன் இப்னு அரபி – என் தாய், தந்தை, றூஹூ, கல்பு என்பனவற்றை அவர்களுக்காக அர்ப்பணம் செய்கிறேன். அவரைத் தொட்டும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! என்னைத் தொட்டும் அவரை பொருத்தமாக்கி வைப்பானாக!
அவர்களின் இரண்டு கவிகளுக்கு விரிவுரை செய்யும்படி என்னை வேண்டிக் கொண்டார். அந்த இரண்டு கவிகளிலுமுள்ள பிசகுதல் எனும் சந்தேகத்தை உயர்த்துவதற்காகவும், மனித நெஞ்சங்களில் உண்டாகக் கூடிய எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் வஸ்வாஸை தட்டுவதற்காகவும், மேற்படி கவிகளுக்கு விரிவுரை செய்வதை என்னிடம் வேண்டிக் கொண்டார்.
நான் இந்த விசயத்தில் சரக்கு குறைவானவனாக இருக்கிற நிலைமையிலும், ஆரம்ப காலத்திலிருந்தே எழுதுவதற்கு சடைவானவனாக இருக்கிற நிலைமையிலும், கிருபையாளனான சிறப்பானவனான அல்லாஹ்வின் பக்கம் பரஞ்சாட்டியவனாக அவருக்கு நான் விடையளித்தேன். எல்லா வஸ்துவின் ஆரம்பம், அவனிலிருந்தும் மீளுதல் அவன் பக்கம் ஆகும். இன்னும் ஆசை முறிவதைத் தொட்டும், நத்துதல் கெடுவதை விட்டும், தன் நப்ஸின் பேரில் அதிர் கடந்தவன் ஒவ்வொருவருக்கும் அவன் ரஹ்மத்தைக் கொண்டு பயம் காட்டுகிறவன் நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கில் துரிதமானவனும், அதாபு செய்வதில் கடினமானவனுமாவான்.
இந்த விடையான விரிவுரைக்கு 'அல்ஹகீகா' என்று பெயர் வைத்தேன். என்னுடைய இரண்டு நூல்களான 'அல் ஹக்கு' என்ற பெயரைத் தொடர்ந்ததற்காகவும், இன்னும் இதைத் தேடுபவனுக்கு கோப்பை கோப்பையாக அள்ளிக் கொடுப்பதனாலேயும் 'அல் ஹகீகா' என்று பெயர் வைத்தேன்.
நான் மன்னிப்பையும், தயவையும் தவறைத் திருத்துவதையும் ஜெயம் பெற்ற நல்லடியார்களிடமிருந்து ஆசிக்கிறேன்.(ஆதரவு வைக்கிறேன்) இதனோடு இணைந்து விளங்கிய பின்னர்,ஒரு வித்து பழம் உடையதும், நீண்ட நிழல்கள் உடையதுமான மரமாக ஆகாது. அந்த வித்து அழிந்ததன் பிறகே ஒழிய, அது  போன்று ஒரு மனிதன் அழிந்த பிறகே அவனுடைய தகுதி அறியப்படுகிறது.
அறிந்து கொள்! பேனா, கடுதாசி எழுதும் நான் எல்லாம் இருக்க நான் ரஹ்மானுடைய சமூகத்திலிருந்து நல்லுதவியைத் தேடுகிறேன். அந்த ரஹ்மான் குர்ஆனையும், அதன் பயானையும் கற்றுத் தந்தவன். அவன் என் நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் உடையவன். எனதும் மக்களினதும் றப்புமாவான்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
انّماالكون خيال فهو حق في الحقيقة
كلّ من يفهم هذا حاز اسرار الطريقة

 
'நிச்சயமாக கௌன்களாகிறது (படைப்பினங்கள் அனைத்தும்) கற்பனையானதாகும். உள்ளமையில் அவனே, ஹக்கானவனாகும்.
'இதை விளங்கக் கூடிய ஒவ்வொருவரும் தரீக்கத்தின் இரகசியத்தை பொதிந்து கொண்டார்.'

விரிவுரை:
தாத்தைக் கொண்டு வெளியில் அறியப்படாமல் பார்க்கப்படக் கூடிய வஸ்த்துக்கள் அனைத்தும் கற்பனையாகும்.
கண்ணாடியில் பதிந்த கோலம் போல,
தாகித்தவர் தண்ணீர் என்று எண்ணுகின்ற கானல் நீரைப் போல்.
உலகம் என்பது நிச்சயமாக அது கற்பனையானதாகும். சுயமே வெளியில் அதிலிருந்து ஒரு வஸ்துவும் அறியப்படமாட்டாது. என்றாலும் அது வெளியில் அறவே அறியப்படாத காணும் கானல் நீரைப்போல.
ஹகீகத்தில் மவ்ஜூதான பொருள் ஹக்கான ஒருவனான அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறொன்றும் இல்லை.
இந்தப் பொதுப்படையின் விரிவுரையாகிறது:-
'நிச்சயமாக உண்டான பொருள் அது இல்லாததாகாது.'
'இல்லாத பொருள் அறியப்படவும் மாட்டாது'. அவ்வாறில்லையாயின் ஹகீகத்து புரள்வது நிர்பந்தமாகும்.
இத்துடனே, நிச்சயமாக உலகத்திலுள்ள அணுக்களில் நின்றுமுள்ள ஒவ்வொரு அணுவும் உண்டாகிறது, அழிகிறது என்று எல்லாக் கணமும் நான் எளிதாகக் காண்கிறோம்.
இதிலிருந்து நாம் விளங்குகிறோம் அந்த அணுக்கள் உண்மையில் அது சுயமாக உண்டானதாக ஆகவில்லை. எமது கற்பனையான பார்வையில் ஹகீகிய்யான (حقيقي) அசலிய்யானاصلي ) உஜூதில்லாமல் பார்க்கப்படக்கூடியதாக ஆகியிருந்தது. உண்மையில் அது இல்லாமலானதாகவும், பேதபுத்தியிலும்  வஹ்மிலும் (وهم) , கற்பனையிலும் (خيال )(கியாலிலும்) உண்டானதாகவும் ஆகியிருந்தது. அது வஹ்மில் அழியும், வஹ்மில் நிலைக்கும். உண்மையில் அதற்கு அழிவும் இல்லை. நிலையும் இல்லை.
ஒரு வஸ்த்து அறியப்படவில்லையானால் எப்பபடி அழியும்? அந்த வஸ்த்து உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை.
உலகத்திலுள்ள அணுக்களிலிருந்தும் ஒரு அணுவையும் அது இல்லாமலானதன் பிறகு நீ உண்டானதாக அறிந்துக் கொள்ள மாட்டாய். ஏனெனில், நிச்சயமாக நீ அறிவாய், ஹகீகத்து புரள்வது அசம்பாவிதம் ஆகும்.
எப்படி இல்லாத ஒன்று அறியப்படும். அல்லது உள்ள பொருள் எப்படி இல்லாமல் ஆகும்.
அறிந்து கொள் சோதரா! அல்லாஹ் உன்னைப் பக்குவப்படுத்துவானாக! ஆலத்துடைய மவ்ஜூதாத்துகளிலிருந்து நீர் பார்க்கக் கூடிய அனைத்தும் தனித்த இல்லாமையிலிருந்து வரவும் இல்லை. அதிலிருந்து உண்டாகவும் இல்லை. என்றாலும் அது உஜூதின் நிலைகளிலிருந்தும், சுற்றுகளிலிருந்தும் உன்னுடைய திஹ்னில்(உள்ளத்தில்) பிடித்தெடுக்கப்பட்டவைகளாகும்.
இந்த வஹ்மிய்யான உஜூது உண்டாகும் இடமாகிறது உஜூதின் நிலைகளிலிருந்து ஒரு நிலையாகும். அதற்கு அறவே வெளியில் உஜூது இல்லை. என்றாலும் அது அவனுடைய பூரணமான குத்ரத்தைக் கொண்டும் ஆச்சரியமான ஹிக்மத்தைக் கொண்டும் உன்னுடைய திஹ்னிலும், அக்லிலும் மவ்ஜூதானதாகும். அவனுடைய ஷஃன் ரெம்ப மேலானதாகும்.
உலகமானது அக்லியான மவ்ஜூதாகும். ஹக்குடைய உஜூதிலிருந்து உண்டானதுமாகும். வெளிப்புலனைக் கொண்டு அதை அறிந்து கொள்ளவும் மாட்டாய். அதை அறிந்து கொள்வதெல்லாம் அக்லியும், கியாலிய்யான புலனிலும்தான்.
வெளிப்புலனைக் கொண்டு அறியப்பட்டவைகளாகிறது நிச்சயமாக அது ஹகீகியான உஜூதுடைய சுற்றுகளாகும். அது அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. இதற்காகத்தான் ஷெய்குல் அக்பர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

العالم معقول والحق محسوس
ஆலம் அக்லினால் விளங்கப்பட்டதாகும். ஹக்கு புலனறிவால் அறியப்பட்டதாகும்.
வஹ்மினுடையதும், கியாலினுடையதுமான ஹகீகத்தை விளக்குவதற்கு சில உதாரணங்கள் சொல்லப் போகிறேன்.
உதாரணம் 1:
சோதரா நீ அறியவில்லையா? ஐஸ் என்பது தண்ணீரின் ஐனேயாகும்(தானாகும்). உன்னுடைய நம்பிக்கையான அறிவுடன் அது தண்ணீர் என்று நீ அறிந்திருக்கின்றாய். அந்த உறைந்த கோலம் அக்லுடைய முகத்தில் ஐஸ் வேறானது என்ற திரையை போட்டு விட்டது. அந்நேரம் நீ தண்ணீரைக் காண மாட்டாய். நீ ஐஸ் தண்ணீர்தான் என்று எண்ணவும் மாட்டாய். என்றாலும் அதை நீ தண்ணீர் அல்லாத இன்னொரு  பொருளாக ஆக்கிக் கொண்டாய். அதற்கு ஐஸ் என்று பெயரும் வைத்தாய். ஐஸ் என்ற கோலத்திற்கு தண்ணீரின் அதறுக்கும் குணபாடுக்கும் ஹுக்முக்கும், தீர்ப்புக்கும் வேறான, அதற்கென்று சொந்தமான அதறும், ஹுக்மும் (குணபாடும், தீர்ப்பும்) உண்டு.
ஐஸின் அதறாகிறது கடும் குளிராகும். உறைந்த கோலமாகிறது அதனுடைய தாத்தாகும். இதற்காகவே இரண்டு தாத்துக்களிடையேயும், இரண்டு அதறுக்கிடையேயும் நீ பிரித்தாய். ஆனால் இங்கே ஒரே ஒரு தாத்தை தவிர வேறில்லை. அது தண்ணீராகும்.
ஐஸ் என்னும் உறைந்த கோலமாகிறது, அதில் ஒரு வஸ்த்துவைச் சேர்க்காமலும், ஒரு வஸ்த்துவை அதிகரிக்காமலும் தண்ணீரின் நிலையிலிருந்து ஒரு நிலையும் சுற்றிலிருந்து ஒரு சுற்றுமாகும்.என்றாலும் உன்னுடைய திஹ்னு அதிலிருந்து ஐஸின் தாத்தை தண்ணீரின் தாத்தை விட்டும் வேறு பிரிந்ததாக பிடித்தெடுக்கிறது. ஐஸின் பேரில் அது உண்டான வஸ்துவென்று உனது திஹ்ன் தீர்ப்பளிக்கிறது. ஆகவே ஐஸ் உண்டான பொருளாகும் என்று நீர் சொல்கிறாய். இங்கு ஐஸ் சுயமே உண்டான பொருள் அல்ல. என்றாலும் அதற்கு பிடித்தெடுக்கப்பட்ட ஒரு உஜூது உண்டு. வஹ்மிய்யான தரிபடுதலும் கற்பனையில் தஹ்கீகும் (உண்மையாக்குதல்) உண்டு. இவை அனைத்தும் உனது திஹ்னில்தான் உண்டாகிறது.
தனித்த உஜூது இல்லாத வஸ்து அடங்கலும் அது உஜூதை இன்னொன்றிலிருந்து எடுத்துக் கொள்கிறது. தனித்த இல்லாமையிலிருந்து அது அறியப்படவில்லை. என்றாலும் அதற்கு பிடித்தெடுக்கப்பட்ட அக்லியான உஜூது உண்டு. இப்படி பிடித்தெடுக்கப்பட்ட உஜூதாகிறது சூபிகளான ஷெய்குமார்களின் பரிபாஷையில்' கற்பனையும் மாயையும் ஆகும். ஹகீகத்திலும், சுயத்திலும் அதற்கு உஜூது இல்லை. அழிவும் இல்லை. என்றாலும் பனாவும் (அழிவும்), பகாவும்(நிலையும்) அது உஜூதாகிற(உண்டாகிற) இடத்தில் உண்டாகிறது. அவ்விடம் வஹ்மும் கியாலும் ஆகும்.
பனாவும், பகாவும் உண்டாவதற்கு உஜூது தேவை என்பது அறிவாளிக்கு மறையாது. ஒரு வஸ்து அறவே வெளியில் மவ்ஜூதாகவில்லையானால் அதன்பேரில் எப்படி பனாவும் பகாவும் ஏற்படும்? (ஏற்படாது)
ஐஸின் தாத்தும், அதன் குணபாடும், அதன் அழிவும் அதன் நிலையும் அதன் இல்லாமையும், அதன் உள்ளமையும் இவை அடங்கலும் அதன்பேரில் சேர்ப்பது கொண்டு வஹ்மும் கியாலுமாகும்.
இவ்விசயங்களை தண்ணீரின் பக்கம் சேர்த்துப் பார்ப்பது கொண்டு அது அதன் சுற்றுகளும் நிலைகளுமாகும். 'சில நேரம் வெளியாகும். சில நேரம் மறையும்'. நீ நாடினால் 'வெளியாகிறது உள்ளாகிறது' என்று கூறுவாய். இங்கு ஹகீகிய்யான உஜூதும் இல்லை. ஹகீகிய்யான அதமும் இல்லை என்றாலும் அந்த இரண்டும் (உண்டாகுதலும்;, அழிதலும்;) அது இளாபிய்யாகும் .اضافي அதாவது ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பார்ப்பது கொண்டு உண்டானதாகும்.
தண்ணீரின் நிலையிலிருந்து ஒரு நிலை வெளியானால் நிச்சயமாக அது மவ்ஜூதானது போல் ஆகிவிட்டது. இது மறைந்திருந்ததின் பேரில் சேர்ப்பது கொண்டு.
அது மறைந்தால் (அதனுடைய அசலுக்கு அது திரும்பி மறைந்து விட்டால்) அது இளாபிய்யான இல்லாத விசயமாக ஆகிவிட்டது. அதாவது அது வெளியான நிலையை சேர்த்துப் பார்ப்பது கொண்டு இல்லாததாகிவிட்டது. ஹகீகத்தில் அதற்கு உஜூதும் அதமும் இல்லை. நீ காணவில்லையா? நிச்சயமாக ஐஸாகிறது சூட்டைக் கொண்டு உருகுமானால் தண்ணீராக மாறி அதன் அசலுக்குத் திரும்பி விடும். அதாவது தண்ணீராகும். தண்ணீரின் நிறையானது ஐஸாவதற்கு முன் எந்த அளவாய் இருந்ததோ அதே அளவினதாய் இருக்கும். இப்பொழுதும் அது எப்படி இருந்ததோ அப்படி இருக்கும். (முன்பிருந்த மாதிரி)
எந்த வஸ்த்து இங்கு அழிந்தது அல்லது இல்லாமலானது? எந்த வஸ்துவின் பேரில் இல்லாமையும் அழிவும் உண்டானது?
சோதரா அறிந்து கொள்!
ஐஸானது உனது வஹ்மில் உண்டாயிருந்தது போல, அதற்கு அழிவும் வஹ்மில் உண்டானது. வெளியில் அல்ல. இவ்விடத்தில் தண்ணீரின் உஜூதும் அதன் நிலையுமே அன்றி வேறொன்றும் உண்டாகவில்லை. ஆகவே நீ ஐஸை அறவே பெற்றுக் கொள்ளவும் இல்லை, அது அறவே அழியவும் இல்லை..
மேலான அல்லாஹுத்தஆலாவின் புகழைக் கொண்டு தரிபட்டு விட்டது. அதாவது நிச்சயமாக ஐஸின் உஜூதும் அதமுமாகிறது அவை இரண்டும் பிடித்தெடுக்கப்பட்ட வஹ்மியானதாக ஆகிவிட்டது. ஹகீகத்திலும் சுயத்திலும் இல்லை.
உதாரணம் 2
நீ அறிந்திருக்கிறாய். மோதிரத்தின் கோலமாகிறது தங்கத்தின் கோலம் அல்லாததாகும். வெளியில் அது தங்கத்தின் ஐனாக இருப்பதுடன், மோதிரம் என்னும் கோலம் அது வெளியாவதற்கு முன் தங்கத்தின் தாத்தில் மறைந்திருந்தது. அது வெளியானதன் பின் மோதிரம் என்னும் பெயர் உண்டானது.
மோதிரம் என்பது தங்கத்தின் நிலைகளிலிருந்து ஒரு நிலையே அல்லாதில்லை. சுற்றிலிருந்து ஒரு சுற்றல்லாதில்லை. நீ தற்போது ஐஸின் உதாரணத்தில் அறிந்தது போல 'அல் ஹாத்திமு மஃகூல் அல் தஹக் மஹ்ஸூஸ்  الخاتم معقول الذهب محسوسஆகும்.
மோதிரம் என்னும் கோலமாகிறது அது இல்லாமல் ஆகவும் செய்யும். அறியப்படவும் செய்யும். அழியும் பொருளொன்றும் ஹகீகத்தில் மவ்ஜூதானதாக ஆகாது. என்றாலும் அதை அறியப்படுவதெல்லாம் வஹ்மிலும், கியாலிலும்தான். அதின்பேரில் அதமும், உஜூதும் உண்டாகிறதும் கியாலில்தான் வெளியில் அல்ல. அது ஹகீகத்தில் இல்லாமலாக்கப்பட்டதாக ஆகவில்லை. அது தங்கத்தின் உள்ளில் மறைந்திருப்பதாக வேண்டியாகும். இப்பொழுது بالقوة பில்குவ்வா(மறைந்துள்ள சக்தி) உண்டாகும் தன்மையிலிருந்து  بالفعا பில் பிஃலு(சக்தியின் செயல்பாடு) தற்பொழுதுக்கு வெளியாகிவிட்டது. மறைவிலிருந்து வெளிக்கு வெளியாகிவிட்டது.
பின்பு அந்த மோதிரத்தின் கோலம் அழிந்துவிட்டால் நீ அது இல்லாமலாகிவிட்டது என்று எண்ணாதே. என்றாலும் அது அஸலுக்கு திரும்பிவிட்டது. இன்னும் பில்பிஃலிலிருந்து பில்குவ்வாவிற்கு திரும்பிவிட்டது.
உதாரணம் 3
சோதரா! உன்னுடைய உடைகளைப் பார். அதன் பெயர்களின் எண்ணிக்கையைப் பார். அது வஸ்து அல்லாதில்லை. அதற்கு ஒரே ஒரு பெயரே தவிர இல்லை. அது துணியாகும். தொப்பி, சட்டை, ஜுப்பா, மேலங்கி, தலைப்பாகை, போர்வை, துண்டு, சிறுவால் இவை அல்லாத்தது போல. இவைகள் அதிகமாக இருப்பதுடன் அது ஒரு துணியைத் தவிர வேறில்லை. பல சுற்றுகளும் பல நிலைகளும் உடைய துணியைத் தவிர வேறில்லை. இங்கு துணி அல்லாத ஒரு வஸ்த்துவும் இல்லை. நீ அதன் கோலங்களைப் பார்ப்பாயானால் அவைகளுக்கிடையில் வேறு பிரித்தறிவாயானால் நீ அது பலது என்பது  கொண்டு உறுதி கொள்கிறாய். நீ பன்மையைப் பார்க்கிறாய்.
அந்த கோலங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை விட்டும் உனது பார்வையைத் துண்டித்தால் அது உண்டாகும் இடத்தின் பக்கம் நீ முகம் வைக்கிறதை ஆக்கினால், அது எதிலிருந்து பிடித்தெடுக்கப்பட்டதோ, அந்த இடத்தின் உன் பார்வையை ஆக்கினால், ஒரேயொரு பொருளை நீ காணுவாய். அது துணியாகும்.இந்த நேரத்தில் நீ ஒருமையைக் காணுகிறாய். உனது ஹிக்மத்தை ஒருங்கு குவித்து அதன் கோலங்களையும் துணி என்னும் ஹகீகத்தையும் ஒரே பார்வையில் பார்ப்பாயானால் நீ இரண்டு கண்ணுடையவனாகிறாய். அதாவது ஒரு பார்வையில் ஒருமையையும், பன்மையையும் நீ காணுகிறாய்.காமிலான , முகம்மலான முஹக்கிகீன்களில் நின்றும் நீ ஆகிவிடுகிறாய். அல்லாஹுதஆலா இந்த வண்ணமான மர்தபாவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டினால், எங்களுக்கும், உனக்கும் தந்தருள்வானாக!
சோதரா! உன்னுடைய உடைகள் அது எண்ணிக்கையானதுடனும், பலதானதுடனும் ஒரே ஒரு வஸ்துவில்லாமலில்லை. அது துணியாகும். இங்கு உண்டான பொருள் ஒரு துணியைத் தவிர வேறில்லை.
தொப்பி, சட்டை, ஜுப்பா…… இவைகள் அனைத்தும் வஹ்மிலும், கியாலிலுமே ஒழிய அது அறியப்படவும் மாட்டாது. அழியவும் மாட்டாது. இதற்குப் பிறகு உனது பார்வையை கூர்மையாக்குவாயானால் மீண்டும் துணியையும் அறவே ஹகீக்கத்தில் சுயமாக உண்டானதாக அறிந்து கொள்ள மாட்டாய் உன்னுடைய வஹ்மிலும் கியாலிலுமே ஒழிய. என்றாலும் அதை வெளியில் கலப்பற்ற معدوم மஃதூமாக அறிந்து கொள்வாய்.
எடுத்துக்காட்டுமிடத்தில், நீ அறியவில்லையா, உனக்குத் தெரியாதா சோதரா! நிச்சயமாக துணிக்கு ஹகீகத்திய்யான ஒரு ஹகீகத்து இல்லை.(உண்மையான உள்ளமை அதற்கில்லை) அதற்கு சுயமான உஜூதும் இல்லை. என்றாலும் அதனுடைய உஜூது கியாலிலும், வஹ்மிலும் பிடித்தெடுக்கப்பட்டவையும்,
ஹகீகத்திலே துணி என்பது தனித்த நூலாகும். நூலில் சிலதை சிலதோடு நெய்தல் என்னும் வழியில் சேர்ப்பது கொண்டு வஹ்மிலும், கியாலிலும் உண்டான கோலமே துணி என்ற கோலமாகும்.
நெய்ததன் பிறகு எமது திஹ்னில் அதற்கென்று ஓர் குறிப்பான கோலம் உண்டாகிவிட்டது. அதற்கு நாம் துணி எனறு பெயர் வைததோம். நெய்தல் என்னும் ஒரு குறிப்பான வழியின் பேரில் சில சிலதோடு சேர்க்ப்பட்ட நூலே தவிர வெளியில் மவ்ஜூதான பொருள் இல்லை. துணி என்பது அறவே வெளியில் அறியப்பட்டதான பொருள் இல்லை. துணி என்பது அறவே வெளியில் அறியப்படாது என்றாலும் வெளியில் உண்டான பொருள் அந்த துணியின் எதிரில் (முன்னிலையில்) சிலதை சிலதோடு சேர்க்கப்பட்ட நூலே ஆகும். அந்த நூல் அல்லாத்த ஒரு வஸ்துவும் அங்கில்லை. அதனுடைய நெய்தல் பிரியுமானால் துணியின் கோலம் அழிந்து விடும். நூல் அழியவில்லை. அது இல்லாமலாகவும் இல்லை. என்றாலும் அது உண்டாக்கப்பட்ட பொருளாகும். அது நெய்வதற்கு முன்னாலும் அது துணி எனும் கோலத்தில் வெளியாவதற்கு முன்னாலும் உண்டாயிருந்தது போல.
எனவே துணியாகிறது அது உண்டாகவும் இல்லை. இல்லாமலாகவும் இல்லை வஹ்மிலேயே ஒழிய. அந்த துணிக்கு ஒரு காலத்திலும் வெளியான உஜூது அதற்கு உண்டாயிருக்கவில்லை. வெளியில் உண்டாவது என்ற வாடையைக் கூட அறவே அது நுகரவில்லை.
இதன்பேரில் நூலின் கோலத்தையும் ஒழுங்கு பிடித்துக் கொள். அந்த நூல், நூல் எனும் கோலத்தில் வெளியான பஞ்சேயல்லாதில்லை. அந்த நூல் பஞ்சுடைய ஹகீகத்திலும், தாத்திலும் மறைந்து பில் குவ்வாவில் இருந்ததன் பிறகு தற்பொழுது நூலின் கோலத்தில் வெளியாகிவிட்டது என்ற அர்த்தத்தில் பஞ்சு, நூல் எனும் கோலத்தில் வெளியான பஞ்சேயல்லாதில்லை. ஆகவே நூல் மறைவிலிருந்து வெளிக்கு வந்து விட்டது.
நூல் எனும் கோலமாகிறது பஞ்சின் நிலையிலிருந்து ஒரு நிலையும் சுற்றிலிருந்து ஒரு சுற்றுமே அல்லாதில்லை. இங்கு பஞ்சின் உஜூதின் ஐனே தவிர வேறு உஜூது இல்லை. மொத்தத்தில், நூல் பஞ்சின் ஐனானது போல, துணியும் பஞ்சின் ஐனாகும். இது போல சாரம், சட்டை, தலைப்பாகை போன்றவனவெல்லாம் துணியிலிருந்து வெளியான கோலங்களும், வெளியாகும் கோலங்களும் பஞ்சின் ஐனே ஆகும். கலப்பற்ற அதின் சுற்றுகளுமாகும். பஞ்சுடைய ஹகீகத்தின் பேரில் அதிகமான ஒரு விசயம் அங்கில்லை. அது குறிப்பாவதிலும் அது எண்ணிக்கையாவதிலும். அதன்பேரில் ஒரு வஸ்த்துவை சேர்க்கப்படவுமில்லை. ஒரு வஸ்த்துவை குறைக்கப்படவுமில்லை. அது பஞ்சே ஆகும். பஞ்சின் உள்ளமையாகிறது தாத்தில் ஒன்றானதாகும்.
அதனுடைய சுற்றுகள் கொண்டும், குறிப்பாவது  கொண்டும் அதில் மறைந்திருக்கும் கமாலாத்துகள் வெளிப்படுவது கொண்டும் அது பலதானதாகும். அதனுடைய சுற்றுகள் அதிகமாக இருப்பதுடன் அது தாத்தில் ஒன்றானதாகும். அது பலதாகவும் இல்லை. குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை.
பஞ்சின் ஹகீகத்தின் நிலை இந்த விசயத்தில் இவ்வாறிருக்குமானால், நான் உத்தேசிக்கிறேன் அது வெளியாகும் مظهر   மழ்ஹர்களில் பலதானதுடனும், அதனுடைய வெளிப்பாட்டில் எண்ணிக்கையானதுடனும், எண்ணிக்கையில் அடங்காத கோலங்களை கொண்டு வெளியாவதுடனும் மட்டிலடங்காத நிறங்களுடனும், கோலங்களுடனும் அது பேதகமாகவுமில்லை, பலதாகவுமில்லை, குறையவுமில்லை, அதிகமாகவுமில்லை, அது எல்லா வெளிப்பாட்டிலும் வெளிப்படும் இடத்திலும் அதனுடைய ஒருமை எனும் தூய்மையில் தரிபட்டதாகும்(பாக்கியானதாகும்.)
சோதரா! ஹக்கான ஒருவனின் தாத்துடைய ஹகீகத்தில் உனது எண்ணம் என்ன?
அதாவது அவனது வெளிப்பாடுகளிலும   متجليات;முதஜல்லிய்யத்தான ஷுஊனாத் எனும் கோலங்களில் வெளியாவதிலும் எண்ணிக்கையான மள்ஹர்களிலும், விதர்ப்பமான வெளியாகும் தளத்திலும் அது அதனுடைய தாத்தில் பலதாகுமா?அல்லது பேதகமாகுமா?
இந்நிலையில் பஞ்சுடைய ஹகீகத்தில் அதாவது அது படைப்புக்களிலிருந்தும் ஒரு படைப்பாக இருக்கும் நிலையில் அதனுடைய பலதான வெளிப்பாட்டில் அதனுடைய தாத்தில் பலதாகவும் இல்லை. அது பேதகமாகவும் இல்லை. ஆயின், அல்லாஹ்வின் தாத்தைப் பற்றி என்ன எண்ணுகிறாய்? فسبحانه تعالي عمايصفون
 
 
வஸ்துக்களின் அந்தரங்கத்தை விட்டும் திரையை நீக்குதல்.
كشف الغطءعن حقيقة الاشياء
 
அறிந்து கொள்! சோதரா! ஒரு வஸ்த்துவையும், அது கலப்பற்ற இல்லாமை ஆனதற்குப் பிறகு வெளியில் உண்டானதாக நீ பெற்றுக் கொள்ள மாட்டாய், ஹகீகிய்யான உஜூதுடைய சுற்றிலிருந்து ஒரு சுற்றாய் இருந்தாலே ஒழிய, நீ உண்டானதாக பெற்றுக் கொள்ள மாட்டாய். எப்'படிப்பட்ட சுற்று எனில், அது வெளியாவதற்கு முன்னால் வெளியாகும் தன்மையில் இருந்தது. அதற்குப் பிறகு அது பில்பிஃலில் உண்டாயிற்று. உதாரணம் நீ ஐஸைக் காணுவாயானால் அதற்கு சொந்தமான கோலத்தைக் கொண்டு தண்ணீரை விட்டும் வேறு பிரிந்ததாக ஐஸைக் காணுவாய்.
உன்னுடைய வஹ்மில் அந்த கோலத்தை அந்த ஐஸுக்குரிய ஹகீகத்து என்று ஆக்கிக் கொண்டாய். இன்னும் தண்ணீரினுடைய ஹகீகத்தை விட்டும் வேறு பிரிக்கப்பட்டதாகவும் ஆக்கிக் கொண்டாய். பிறகு தண்ணீரின் நிலையை விட்டும் அதன் குறிப்பான சுற்றை விட்டும், உன்னுடைய திஹ்னு அந்தக் கோலத்தை பிடித்தெடுத்ததன் பிறகு வேறு பிரித்துக் காண்கிறாய்.
இங்கு இரண்டு ஹகீகத்து இல்லை. என்றாலும் அது ஒரே ஹகீகத்தாகும். அது ஐஸ் எனும் உறைந்த கோலத்தைக் கொண்டு வெளியானது தண்ணீருடன் ஒரு வஸ்த்துவை சேர்க்காமலும் தண்ணீரின் ஹகீகத் என்ற நப்ஸின் பேரில் ஒரு வஸ்த்துவை அதிகமாக்காமலும் அந்த உறைந்த கோலத்தில் அது வெளியாயிற்று. தண்ணீரின் ஹகீகத்தாகிறது மீண்டும் ஹகீகிய்யான உஜூதுக்கு ஆதேயமான விசயமாகவேயன்றி வேறில்லை. அதற்கு உலகத்தில் பல இனமாயிருப்பதுடனும் பலதாய் இருப்பதுடனும் தன்னைக் கொண்டு நிலை நிற்கக் கூடிய ஒரு ஹகீகத்து அதற்கில்லை. என்றாலும் அனைத்தும் ஹக்கான ஒருவனான தாத்தின் பேரில் சேகரிக்கப்பட்ட ஆதேயங்களாகும். அதன் சுற்றுகளும் நிலைகளுமாகும்.
நிலைகளுக்கும் சுற்றுகளுக்குமிடையில் வேறு பிரிப்பதென்பது உண்டாகவில்லை. இல்லையானால், உஜூது தனித்த ஹக{கத்தாகவும் ஒரே தாத்தாகவும் ஆகிவிடும். ஆகவே வஸ்த்துக்கள் வகைவகையாகாது அவைகளுக்கிடையில் ஒன்று மற்றொன்றைவிட்டும் வேறு பிரியவும் மாட்டாது.
இதிலிருந்தே நாம் அறிகிறோம். வேறுபிரிவது என்பது எண்ணிக்கையாவதினதும், அதிகமாவதினதும் சுற்றாகும். இன்னும் வஸ்த்துக்கள் இனங்களாவதின் மீளுமிடமுமாகும். வேறு பிரிக்கக் கூடிய விசயத்தை அந்த வேறு பிரிக்கப்பட்ட சுற்றுகளின் ஹகீகத்தாக ஆக்குகிறோம்.

பொதுப்படையின் விரிவுரை
تفصيل الاجمال

அறிந்து கொள் சோதரா!
புள்ளி என்பது பங்கு வைக்க முடியாததையிட்டு கோட்டை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
கோடு என்பது நீளமானது என்பதையிட்டு அது அல்லாத்ததை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
தளம் என்பது நீளம், அகலம் என்பதைக் கொண்டு புள்ளி, கோடு, சடம் இவற்றை விட்டும் பிரித்தறியப்பட்டதாகும்.
சடம் என்பது நீளம், அகலம், ஆழம் என்பதைக் கொண்டு புள்ளி, கோடு, தளம் என்பவற்றை விட்டும் பிரித்தறியப்பட்'டதாகும்.
பங்கு வைக்கமுடியாதது என்பதை புள்ளியின் ஹகீகத்தால் ஆக்கினோம்.
தனித்த நீளம் என்பதை கோட்டின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
நீளம், அகலம் என்பதை தளத்தின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
நீளம், அகலம், ஆழம் என்பதை சடத்தின் ஹகீகத்தாக ஆக்கினோம்.
இதன்பிறகு சடத்துக்கு பல சுற்றுகளுமத் பல நிலைகளும் உண்டு. அது மட்டிடவேலா, கணக்கிடவோ முடியாது. ஒவ்வொரு சுற்றிலும் மற்ற கோலத்தை விட்டும், வேறு பிரிக்கக் கூடிய குறித்த கோலம் உண்டு. இது صورة النوعية சூறத்துன் நௌஇய்யாவாகும். இந்த நௌஇய்யா எனும் கோலத்துக்கு வெளியாகுதல் உண்டு. அது நௌஇன் (இனத்தின்) தனிப்பிரதியின் கோலமாகும். ஒவ்வொரு இனத்துக்குக் கீழேயும் மட்டிலடங்காத எண்ணிக்கையற்ற தனிப்பிரதிகள் உண்டு. இவை அனைத்தும் குறிப்பான கோலத்தை கொண்டு ஒன்றைவிட்டொன்று வேறு பிரிந்ததாகும். இந்த 'வேறு பிரிக்கும் தன்மை' என்பது அதன் ஹகீகத்தாகும்.
வானம், பூமி அதனிடையிலுள்ள அனைத்து கௌனுகளின் அணுக்களும் கலப்பற்ற சடத்தின் வெளிப்பாடாகும். அந்த வெளிப்பாடுகள் மட்டிட முடியாதது. அதன் சங்கிலித் தொடரான இறக்கத்தை கவனிப்பது கொண்டு முடிவற்றதாகும். உயர்வதைக் கவனிப்பது கொண்டு அது அதிகமானதுடனும் எண்ணிக்கையற்றதுடனும்அது கலப்பற்ற சடத்தின் பேரில் முடிவடையும். கலப்பற்ற சடத்தை நீ பார், அது ஒன்றாயிருப்பதுடன் எப்படி அது அதன் சுற்றுகளையும், நிலைகளையும் கொண்டு மிக அதிகமானது என்பதை நீ கவனித்துப் பார். அந்தச் சடம் பலதானதுடன் ஒன்றானதும் ஒன்றானதுடன் பலதானதும் ஆகும். அந்த சடத்துடைய சுற்றுடைய கோலங்களின் எண்ணிக்கையின் பேரில் பார்ப்பாயானால் அதை நீ பலதாக்குகிறாய். அதனுடைய சடம் எனும் ஹகீகத்தின் ஒருமையை நீ பார்ப்பாயானால், அதை நீ ஒன்றாக்குகிறாய்.
அல்லாஹுத்தஆலா உனது உட்பார்வை எனும் முகத்திலிருந்து வஹ்மு எனும் திரைரைய நீகுகப் போதுமானவனாகும்.
நீ, அந்த இனமாயிருப்பதென்பது அது கலப்பற்ற சடத்தின் பேரில் வந்த ஆதெயமேயன்றி வேறில்லை என்பதை அறிந்தாய்.
நீ அறிந்து கொள் சோதரா! ஆதேயத்திற்கு தனித் உஜூது இல்லை. கலப்பற்ற சடத்தின் உஜூதைத் தவிர.
எந்த ஒரு வஸ்த்துவும் தன்னுடைய உஜூதைக் கொண்டு நிலைத்திருக்காமல் இன்னொரு வஸ்த்துவின் உஜூதின் பேரில் நிலைத்திருக்குமானால் அதற்கு வஹ்மு, கியாலு என்று பெயர் வைப்போம்.
இப்பொழுது நீ அறிந்திருக்கிறாய் நிச்சயமாக கௌன்களாகிறது அது பலதாயிருப்பதுடனும், இனங்களாக இருப்பதுடனும் தனித்த சடத்துக்கு ஆதேயமாகும். அதற்கு தனித்த ஒரு உஜூதில்லை. என்றாலும் அதனுடைய உஜூதாகிறது தனித் சடத்தின் உஜூதின் ஐனேயாகும். எனவே நிச்சயமாக கௌன்களாகிளது கற்பனையும் பிரமையும் என்று தரிபட்டு விட்டது. என்றாலும் அது அவல்லாஹ்வின் இல்மைக் கொண்டு உறுதியாக்கப்பட்டதும் அவனது குத்ரத்தைக் கொண்டு நிலை நிற்கின்றதும் அவனுடைய ஹிக்மத்தைக் கொண்டும் நாட்டத்தைக் கொண்டும் ஒழுங்காக்கப்பட்டதுமாகும்.
இந்த இரண்டு கவிதையையும் உடையவர் (ஷெய்குல் அக்பர் -அல்லாஹ் எங்களையும் அவர்களையும் பொருந்திக் கொள்வானாக) சொன்னது போல கௌனுகள் கற்பனையாகும்.
நீங்கள் இந்த விளக்கத்தைக் கொண்டு தனித்த சடத்தின் வஹ்தத்தையே தரிப்படுத்தினீர்கள். ஹக்குடைய உஜூதுடைய வஹ்தத்தை அல்ல என்று நீ எனக்குச் சொல்லலாம்.
நீ அறிந்து கொள் சோதரா! நிச்சயமாக சடத்துக்கு الحيوة)சீவன், (العلم) அறிவு, நாட்டம(الارادة);, சக்தி ( القدرة), (السمع)கேள்வி, ( البصر) பார்வை, ( الكلام)பேச்சு, தேர்ந்தெடுக்கும் தன்மை  (الاختيار)  இவைகள் இல்லை.
பிறகு இது, இவை ஒன்றுமில்லாமல் இருப்பதுடன் அது வெளியில் குறிப்பான வழியிலும் கோர்வையிலும், அதற்கென்று சொந்தமான அஹ்காம் ஆதாறுகளுடனும் அது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அந்த குறிப்பான கோலத்தை விட்டும் அதனுடைய ஆதாறும், அஹ்காமும் அதை விட்டும் ஒருக்காலமும் நீங்குவதில்லை அல்லாஹ் நாடினாலே ஒழிய. அந்த நீங்குதல் என்பது அல்லாஹ்வின் மிகைத்த ஹிக்மத்து வழைமயை கிழிப்பதை நாடினாலே ஒழிய நடைபெறாது. இந்த வழமையை கழிப்பது المعجزة)முஃஜிஸாத்;தாக, ( الكرامة) கராமத்தாக,  الاعانة)இஆனத்தாக, இஸ்தித்ராஜாக الاستدراج)இருந்தாலம் சரி. இந்த வழமையான விசயங்களுக்கு சொந்தமான ஒரு கோர்வையும் ஒரு குறிப்பான வழியும் உண்டு. அல்லாஹ்வுடைய படைப்புக்களிலிருந்து ஒரு படைப்பும் அதாவது அவன் الحكيم)ஹகீமாக காமிலான ஹாதிக்காக( الحاذق) இருந்தாலும் சரி, இவற்றை இல்லாமலாக்கவோ, மாற்றவோ  சக்தி பெறமாட்டார்கள். உலகிலுள்ள எல்லா அணுக்களும் ஒரே சடமாகும். அதனுடைய உள்ளமை உலகத்திலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைச் சூழ்ந்து கொண்டும் இருக்கிறது என்பது உனக்கு மறையாது. இத்துடன் அந்த சடத்துக்கு எல்லா கோலங்களிலும் ஒரு சொந்தமான தீர்ப்பும் சொந்தமான ஒது கோர்வையும் உண்டு.ஆனால் அதில் ஜீவன், நாட்டம், சக்தி, தேர்ந்தெடுக்கும் தன்மை இவைகள் அறியப்படாமல் இருந்தாலும் சரி, அதனுடைய கோர்வை ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதனுடைய தேர்ந்தெடுக்கும் தன்மையைக் கொண்டு தீர்ப்பளிக்கின்றது.உண்மையில் அதற்கு தேர்ந்தெடுக்கும் தன்மை இல்லை. இதிலிருந்து விளங்கப்படுகிறது அதாவது வேறொரு மவ்ஜூதான பொருள் உண்டு என்பது அறியப்படுகிறது.
அதுவே ஜீவனுள்ள, அறிவுள்ள, நாட்டமுள்ள, சக்தியுள்ள, கேள்வியுள்ள, பார்வையுள்ள, பேச்சுள்ள, நுணக்க விளக்கமுள்ள, சுயமான இயக்கமுள்ள அவனுடைய சுயத்தைக் கொண்டு தீர்ப்பளிக்கின்ற தன்மைகளாகும்.
ஹிக்மத்தைக்கொண்டும் அவனுடைய சுயத்தைக் கொண்டும் அவன் எதை நாடுகிறானோ அதைக் கொண்டு தீர்ப்பளிப்பவனும், அவன் சக்தியைக் கொண்டும், அறிவைக் கொண்டும் அவன் நாடினதை செய்யக்கூடியவனும் உள்விளங்கி அறிந்தவனுமவான்.
நாங்கள் இந்த உண்மையான விசயத்தை உனக்கு விளக்கியதன் பிறகு கூறுகிறோம். நிச்சயமாக சடமாகிறது ஹகீகிய்யான உஜூதுக்கு ஆதெயமானதாகவே ஒழிய இல்லை. அது ஹகீகிய்யா மவ்ஜூதான பொருளுமல்ல. என்றாலும் அதற்கு வஹ்மியானதும் கியாலியானதுமான உஜூதுண்டு. எண்ணிக்கையாக்கப்பட்ட இனங்கள் போலவும் அதிகமாக்கப்பட்ட இனங்களின் கோலஙகளில் வெளியாவது போலவும்,
இந்த விஷயங்களெல்லாம் ஹகீகத்தில் அதன் அசலின் பக்கம் திரும்புகிறது. அது ஹக்கான உஜூதாகும். மீளுவதும் உண்டாவதும் அதன் பக்கமே ஆகும். இப்போது  தரிபட்டுவிட்டது. நிச்சயமாக கௌனுகளாகிறது அதனுடைய எல்லா அணுக்களுடனும், வஹ்மும், கியாலும் ஆகும் என்பது தரிபட்டு விட்டது. இன்னும் உன்னுடைய திஹ்னில் பிடித்தெடுக்கப்பட்டவைகளுமாகும்.
சுற்றுகள் என்பது ஹக்கான உஜூதின் ஐனாகும். நிச்சயமாக அந்த உஜூது வேறnhரு அதிகமான விசயத்தைக் கொண்டும் ஒரு வஸ்துவை அதனுடன் சேர்ப்பது கொண்டும் சுற்றுடையதாக ஆகவுமில்லை. என்றாலும் அந்த உஜூதுடைய ஐனு தட்டிலடங்காத பல சுற்றுகளைக் கொண்டு சுற்றுடையதாக ஆகிறது. கடைசிவரையும், உலகம் என்பது பிடித்தெடுக்கப்பட்ட விசயமாகும். வஹ்மிலும், கியாலிலுமே அல்லாது அவை தரிபடுவதில்லை. அப்போது உஜூதுடைய சுற்று உண்டாகும் இடதாகிறது அது உஜூதுடைய ஐன் ஆனதற்காக வேண்டி அது ஹக்கானதும், உண்மையானதும், நிகழ்ந்ததுமாகும். எனவே முஹக்கீகான சொன்னவருடைய சொல்லு அதாவது 'ஹக்' என்று சொன்ன சொல்லும் انماالكون خيال فهو حق في الحقيقة என்ற சொல்லும் தரிபட்டுவிட்டது.
முன்பு நான் விபாரித்ததிலிருந்து அறிந்திருக்கலாம். நிச்சயமாக எல்லா விசயமும் ஒரு வஸ்துவை விட்டும் இன்னொரு வஸ்துவை பிரித்துக் காட்டுமே அந்த விசயங்கள் அந் வஸ்துக்களின் ஹகீகத்தாகும்.
வஸ்த்துக்கள் தம்மில் பிரிக்கக் கூடிய விசயமாகிறது  வஸ்த்துக்களின் ஹகீககத்துகளாகும். ஹகீகத்தில் இந்த சொல்லப்பட்ட விசயங்களை ஹகாயிக்கு என்று n பயர் வைப்பதற்கு தகுதியாகாது. அதாவது வெளியிலும், சுயத்திலும் அது தரிபடுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்தின்படிக்கு ஹகாயிகு என்று பெயர் வைப்பதற்கு அருகதையாகாது. ஏனெனில் அது வெளியில் அறியப்படவும் இல்லை. சுயமான, வெளியான உஜூதின் வாடையைக் கூட அது நுகரவுமில்லை. கியாலியும் வஹ்மியுமான உஜூதைத் தவிர.
பிடித்தெடுக்கப்பட்ட கௌன்களாகிறது அதை தரிபடுத்துவதை மேற்காட்டியது போல இப்பவும் அது வஹ்மியும், கியாலியுமான உஜூதாகும்.

ஹகீககிய்யான ஜவ்ஹரை திட்டப்படுத்துதல்
تحقيق الجوهر الحقيقي
அறிந்து கொள் சோதரா! வஸ்த்துக்களின் ஹகாயிக்குகளிலிருந்து ஒரு ஹகீகத்தும், வஸ்த்துக்களிலிருந்து  ஒரு வஸ்த்துவும், ஹகீகத்தில் ஜவ்ஹராக இல்லை. என்றாலும் எல்லாம் கலப்பற்ற ஆதேயமாகும்.
அதில் சிலதை நாம் வேறு பிரிப்பதற்காகவும், விளக்குவதற்காகவும் ஆதாரங்களாகவும்  الجوهر சிலதை ஆதேயங்களாகவும் الاعراض ஆக்கினோம். இன்ஸானுடைய வரைவிலக்கணத்தில் நீ சொல்வது போன்று, அதாவது இன்ஸான் ஒரு சடமானதும், வளரக் கூடியதும், புலனறிவுடையதும், நாடி உசும்புகிறதும், நிமிர்ந்து நிற்பதும், நகம் அகன்றவனும் இரண்டு காலில் நடப்பவனும், பேசுபவனும் போன்றவைகள் போல. இந்த மொத்தத்துக்கு 'ஹகீகத்துல் இன்ஸான்' என்று பெயர் வைக்கப்படும். நீ சகோதரா! சிந்தித்து உணர்ந்தாய். ஆனால் உன் பார்வையை கூர்மையாக்கினால், இந்த எல்லா விசயத்தையும் இன்ஸானுடைய வரைவிலக்கணத்தில் புகந்த ஜவ்ஹர் அல்லாத்த ஆதேயமாக பெற்றுக் கொள்வாய்.
ஆகவே, சடம், வளருதல், புலனறிவு, உசும்புதல், நீளம், அகலம், நடக்குதல், பேசுதல் என்பன ஆதேயங்களாகும். இந்த ஆதேயங்கள் அனைத்தும் உனது திஹ்னில் நீ சேகரித்து அதிலிருந்து குறிப்பான ஒரு கோலத்தையும் பிடித்தெடுக்கிறாய். அதற்கு நீ 'ஹகீகத்துல் இன்ஸான்' என்று பெயரும் வைக்கிறாய்.
இனங்களாக ஆக்கப்பட்ட வஸ்த்துக்களின் ஹகாயிகுகளையும் பலதான காயினாத்துக்களின் ஹகாயிகுகளையும் இதன் பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
உலகமாகிறது ஆதெயமே அல்லாதில்லை. அதற்கு நாம் ஜவ்ஹர் என்று பெயரும் வைக்கவில்லை. ஆனால் அந்த உலகமாகிறது الجوهر الاضافي ஜவ்ஹர் இளாபி (சுயமாக நிற்கக் கூடியதல்ல) ஆகும். ஹகீகிய்யான ஜவ்ஹர் அல்ல. என்றாலும் ஹகீகிய்யான ஜவ்ஹர் என்பது ஹக்குடைய உஜூதாகும்.
அதாவது ஜவ்ஹர் என்ற பெயரை அல்லாஹ்வுடைய உஜூதின் பேரில் புழங்குவதானது விலக்கப்பட்டதாகும். அப்படியிருந்தும் உஜூதை ஹகீகிய்யான ஜவ்ஹர் என்று எப்படி ஆக்கினீர்கள் என்று நீ சொல்லலாம். அப்போது நான் சொல்கிறேன்,
எந்த ஒரு வஸ்த்துவையும் உஜூதைக் கொண்டு தனித்ததாக நீ பெற்றுக்கொள்ள மாட்டாய். ஹக்கான உஜூதைத் தவிர. அந்த உஜூது இந்தக் கருத்தைக்கொண்டு ஜவ்ஹராகும். உன்மீது அந்த உஜூதின் பேரில் ஜவ்ஹர் என்னும் الاسمஇஸ்மை புழங்குவது, இந்த அர்த்தத்தின்படிக்கு குற்றமில்லை. (நான் உஜூதைக் கொண்டு தனித்திருத்தல், தாத்தைக் கொண்டு அது உண்டான பொருள் என்பதை நாடுகிறேன்) நிச்சயமாக அதுவாகிறது ஜீவனுள்ள நிலைத்திருப்பவன் உன்ற கருத்தைக் கொண்டதாகும். கருத்து துலாம்பரமானதின் பின்னும் நாட்டம் விளங்கினதன் பின்னும் பரிபாஷையில் தர்க்கமில்லை.

இடம்பிடித்தலின் உள்ளமை

( تحقيق الحيز)
நீ சொல்வாயானால், நிச்சயமாக நீங்கள் உலகமாகிறது ஹக்குடைய உஜூதில் சேர்க்கப்பட்ட ஆதேயங்களாகும் என்றும், அப்போது உஜூதாகிறது ஆதேயங்களுக்கு இடமாகிறது என்றும் அந்த இடமாகுதல் புதிதான வஸ்த்துக்களின் குணபாடாகும் என்றும் அந்நேரம் ஹக்குடைய உஜூதாகிறது புதிதானவைகளுக்கு இடமாக ஆகிறது. இது ரொம்ப கடுமையாக விலக்கப்பட்டதாகும் என்றும் நீ சொல்வாயானால், நான் சொல்கிறேன்,
அந்த இடமாகுவது என்பது, இரண்டு வஸ்த்துக்களிடையே ஒழிய அது உண்டாகாது. உதாரணம்:ஒன்றில் ஒன்று விடுதிவிடுவது போல,
இங்கு ஒரேயொரு உஜூதைத் தவிர வேறில்லை. ஆகவே இடமாகுவதுமில்லை. ஒன்றாகுவதுமில்லை. ஒன்றில் ஒன்று விடுதி விடுவதும் இல்லை.
நிச்சயமாக உஜூதுடைய சுற்றுகளும் நிலைகளுமாகிறது உஜூதுக்கு ஐனாகுமே அதற்காகவேதான்.இந்த இடத்தில் ஆதாரமுமில்லை. ஆதேயமுமில்லை. நாங்கள் ஹுகமாக்களின் பரிபாஷையை அனுசரித்து அல்லாஹுத்தஆலாவை ஆதாரமென்றோ, ஆதெயமென்றோ சொல்ல மாட்டோம். அல்லது சமட்டி الكلي என்றோ, الجزئي வியட்டி என்றோ சொல்ல மாட்டோம்.
என்றாலும் அது அதன் தூய்மை என்ற தானத்தில் அது பொதுப்படையாக இருக்கிறது. எல்லாக் கட்டுப்பாட்டை விட்டும், பொதுப்படை என்ற கட்டுப்பாட்டை விட்டும் என்றாலும் விளக்குவதற்காக வேண்டி அறியப்பட்ட, புழங்கப்பட்ட பாஷைகளையும், சொற்களையும் நாங்கள் இரவலாக பாவித்தோம். ஏனெனில் அதன்பேரில் அறிவிக்கக் கூடிய பாஷைகள் இல்லாததினாலாகும். அதற்காக வைக்கப்பட்ட சொற்களும் இலேசாக இல்லாததினாலாகும். இன்னும் அல்லாஹுத்தஆலாவின் சுற்றுகளின் பேரிலும் வைக்கப்பட்ட சொற்களும் பாஷையும் இல்லாததினாலாகும். அவன் தூய்மையானவன் இரவல் எனும் வழியில் பாஷையிலிருந்து அறியப்பட்ட சொற்களை நாங்கள் தூய்மையாகப் பாவித்தோம். இந்த நுணக்கமான கருத்தின் பேரில் ஆரம்பமான தேட்டமுடையவனின் விளக்கம் இதில் முடுகுவதற்காக. நீ விளங்கிக் கொள்.

தொடர்பின் பயான்
بيان النسب

அறிந்து கொள் சோதரா! உலகிலுள்ள அணுக்களிலிருந்து ஒவ்வொரு அணுக்களுக்கும் அல்லாஹ்வுடன் ஒரே தொடர்புதான் உண்டாயிருக்கிறது. ஒரு வட்டத்திற்கு அதன் மையப்புள்ளிக்குள்ள தொடர்பு போல, அப்போது ஒரு அணுவும் உண்டாகவில்லை. உண்டாகவும் செய்யாது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை, அஹதிய்யா என்னும் மர்தபாவிலிருந்தே ஒழிய. இந்த அஹதிய்யாவாகிறது பொதுவான தனித்த உஜூதே அல்லாதில்லை. அந்த அஹதிய்யத்தாகிறது இலாஹியத்தான, கௌனியத்தான அஸ்மாக்கள் எனும் ஜவ்ஹர் அடங்களுக்கும், இன்னும் முடிவில்லாத வெளிப்பாடுகளுக்கும், மட்டிலடங்காத தஜல்லியாத்துக்களுக்கும், எண்ணிலடங்காத சுற்றுகளுக்கும் கன்ஸு  الكنز ஆகும்.
என்றாலும் அந்த உஜூதுக்கு தொடர்ந்ததும், தொடரப்பட்டதுமான பல வெளிப்பாடுகள் உண்டு. இந்த தஜல்லியாத்துக்களிலிருந்து தொடரப்பட்ட தஜல்லியாகிறது அதைத் தொடர்ந்த தஜல்லிக்கு ஷர்த்துகளாகும். காரியம் உண்டாவதை நிர்பந்தமாக்கக் கூடிய பரிபூரண காரணமல்ல. ஆதியிலிருந்து அல்லாஹ்வுடைய ஹிக்மத் ஆச்சரியமான கோர்வையின் பேரிலும் தனித்துவமான ஒழுங்கின்பேரிலும் அவனது குறிப்பான கோலத்தைக் கொண்டு தஜல்லியானதன் பிறகு இன்னொரு குறிப்பான கோலத்தைக் கொண்டு வெளியாகுவதைத் தேடியது.
அதை அவனது வழமையாக ஆக்கிக் கொண்டான். கதீமான அவனது கிதாபில் அவன் ولن تجد لسنة الله تبديلا (நீங்கள் அல்லாஹ்வுடைய வழக்கத்துக்கு மாற்றத்தை பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்) என்று  சொன்னது போல. தொடரப்பட்ட முந்தின கோலத்தின் வெளிப்பாட்டை அவன், அதைத் தொடர்ந்து இரண்டாவது கோலத்தில் வெளியாவதற்கு ஷர்த்தாக ஆக்கினான். தொடர்ந்து வெளிப்பாட்டிற்கு சில நேரம் எண்ணிக்கையாக்கப்பட்ட தொடரப்பட்ட தஜல்லியாத்துக்கள் உண்டாகும். இவைகள் அனைத்தும் இந்த தொடர்ந்த தஜல்லிக்கு ஷர்த்துகளாகும். நிர்பந்தமாக்கப்பட்ட பரிபூரண காரணமல்ல.
முதலாவதாக அல்லாஹு தஆலா நெருப்பு எனும் கோலத்தில் வெளியானது போல், இன்னும் பஞ்சு என்னும் கோலத்திலும் வெளியானது போல, இன்னும் நெருப்பும் பஞ்சும் சேருதல் என்னும் கோலத்தில் வெளியானது போல, இந்த மூன்று வெளிப்பாடுகளும் தொடரப்பட்ட தஜல்லியாகவும், பஞ்சு கரிதல் எனும் கோலத்தில் வெளியாவதற்கு ஷர்த்துகளுமாகும்.
இந்த மூன்று கோலங்களும் பஞ்சு கரிகிற கோலத்தை நிர்பந்தமாக்க கூடியதுவல்ல. இந்த உண்மையான விசயத்தை விட்டு அகக் கண் குரடான தத்துவ ஞானிகள் பிழைத்து விட்டது போல.  علم الكلامஇல்முல் கலாமுடையவர்கள் சொல்லுகிறார்கள், நிச்சயமாக அல்லாஹ் தஆலாவாகிறவன் மேற்குறிப்பிட்ட ஷர்த்துகள் (நெருப்பு, பஞ்சு, இரண்டும் ஒன்று சேர்தல்) உண்டானதன் பிறகு கரித்தலை அவன் படைக்கிறான் என்று சொல்கிறார்கள். ஸூபியாக்கள் இந்த ஷர்த்துகள் உண்டானதன் பின் அல்லாஹுத்தஆலா கரித்தல் எனும் கோலத்தின் பேரில் வெளியாகிறான் என்று சொல்கிறார்கள்.. இந்த இரண்டு கூட்டத்தாரும் அடக்கியாளும்படியான அறிவுடைய அல்லாஹ்வின் கையில் ;அந்தக் கரிதல்' அடக்கியாளப்பட்டது என்ற விசயத்தில் ஒற்றுமையாகிறார்கள். ஆனால் இரண்டு கூட்டத்தினரும் இந்த விசயத்தை சொல்லுகின்ற விதத்தில் விதர்ப்பமாகிறார்கள். ஒரு கூட்டம் படைத்தல் என்று கூறுகிறார்கள். மற்றக் கூட்டம் 'வெளியாகுதல்'; என்று கூறுகிறார்கள்.
உலகிலுள்ள சாதராண காரியம் எனும் சங்கிலித் தொடராகிறது தொடர்ந்ததும், தொடரப்பட்டதுமான தஜல்லியாத்துக்களை கொண்டு கட்டுண்டதாகும்.
என்றாலும் ஒரு வஸ்த்துவும் அஹதிய்யா எனும் மர்தபாவில் இருந்தே ஒழிய உண்டாகவில்லை. இந்த அஹதிய்யத்து எனும் மர்தபாவாகிறது எல்லாக் கட்டுப்பாட்டை விட்டும் இன்னும் பொதுப்படை என்ற கட்டுப்பாட்டை விட்டும் அது பொதுவான, ஹக்கான உஜூதாகும். அது ஷுஊனாத்து என்னும் ஜவ்ஹர்களுக்கு அது கன்ஸுல் மஃபீயுமாகும். الكنز المخفي   நெருப்பானது அந்த உஜூதிலிருந்து அதற்குரிய ஷர்த்துகள் உண்டான பிறகு உண்டானது, அதே போன்று பஞ்சும் அந்த உஜூதிலிருந்து உண்டானது. இரண்டுடைய ஒன்று சேர்தல் எனும் கோலமும், அதனுடைய எல்லா அடக்கங்களுடனும் அந்த உஜூதிலிருந்து உண்டானது. இன்னும் கரித்தலும் அந்த உஜூதிலிருந்தே உண்டானது.
இவைகள் அனைத்தும்( நெருப்பு, பஞ்சு, ஒன்று சேர்தல், கரித்தல்) எல்லாம் அல்லாஹ்வுடைய குத்ரத்து, இஷ்டம் என்னும் கைகளில் அடக்கியாளப்பட்டதாக ஆகியிருந்தது.இதுபொன்று ஆதியிலிருந்து அந்தம் வரை உண்டானவைகள், உண்டாகக் கூடியவைகளையும் இதன்பேரில் ஒழுங்கு பிடித்துக் கொள்.
அகக் கண் குரடான ஹுகமாக்கள் இந்த விசயத்தின் உள்ளமையை விளங்கவில்லை. அவர்கள் கராமத்து, முஃஜிஸாத்து என்பவைகள் அசம்பாவிதம் என்று சொல்கிறார்கள். இந்த ஷர்த்துக்களை அவர்கள் உட்பார்வையில்லாத அவர்களுடைய பார்வையின் முன் பரிபூரண காரண காரியங்கள் என்னும் சங்கிலித் தொடரில் ஆக்கினார்கள். அவர்கள் ஹகீகத்து புரள்வது அசம்பாவிதம் என்று தீர்ப்பும் கொடுத்தார்கள். அவர்கள் இந்த ஹகீகிய்யான விஷயத்தை சொல்வதில் கடும் தவறிழைத்து விட்டார்கள். அவர்கள் இங்கு ஹகீகிய்யான உஜூது அல்லாத்தது ஒன்றும் இங்கு இல்லை என்றும் இந்த ஹகீகிய்யான உஜூது அல்லாத்தது அடங்கலும் தனித்த ஆதேயமாகும். இந்த ஆதேயம் நீங்குவதையோ, அழிவதையோ ஏற்றுக் கொள்ளும் இடமுமாகும் என்றும் அங்கு ஜலாலும், ஜமாலுமுடைய அல்லாஹ்வின் வஜ்ஹைத் தவிர ஒன்றுக்கும் 'நிலைத்திருத்தல்' எனும் தன்மை கிடையாது என்றும் அறியவும் இல்லை. அல்லாஹுத்தஆலா குல்லு செய்யின் ஹாலிகுன் இல்லா வஜ்ஹஹுكلّ شيئ هالك الاّ وجهه (எல்லா வஸ்த்துவும் அழிந்து விடும். அவனின் வஜ்ஹைத் தவிர) என்று சொன்னது போல அவன் பேசப்படும் விசயத்தில் மிக உண்மையானவன், உயர்ந்தவன், பெரியவனுமாவான். அவன் நாடுவது அனைத்தையும் செய்யக் கூடியவனுமாவான். இன்னும் ஒவ்வொரு கோலத்துக்கும், ஹுக்மும், அதறும் உண்டு என்பதை அவர்கள் அறியவில்லை.
அறிந்துகொள் சோதரா! அல்லாஹ்வின் வழமை நடந்து கொண்டிருக்கிறதாகும். தொடரப்பட்ட பல தஜல்லியாத்துகளின் பின் ஒரு குறிப்பான கோலத்'தின் பேரில் வெளியாகுதலில் வழமை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு சொந்தமான கோலம் உண்டு. அந்த ஒவ்வொரு கோலத்துக்கும் சொந்தமான அஹ்காமும், ஆதாறும் உண்டு.
ஏதாயினும் ஒரு கோலம் தரிபடுமானால் அதனுடைய அஹ்காமுகளும் ஆதாறுகளும் அதனுடன் தரிபடும். அந்த அஹ்காமுகளும், ஆதாறுகளும் மீண்டு:ம் அல்லாஹ்வுடைய வெளிப்பாட்டில் நின்றும் உள்ளதுதான். என்றாலும் இது எந்தக் கோலத்தின் பக்கம் இந்த அஹ்காம் ஆதாறுகள் சேர்க்கப்படுமோ அந்த வெளிப்பாடு எனும் கோலத்தை தொடர்ந்த வெளிப்பாடாகும். எல்லா ஹுக்முக்கும், அதறுக்கும் மீண்டும் ஒரு குறிப்பான கோலம் உண்டு. அல்லாஹுத்தஆலாவாகிறவன் அவன் தாத்து முதலாவதாக ஒரு குறிப்பான கோலத்தைக் கொண்டு வெளியாவதை தேடினது. இதன் பின்னர் இரண்டாவதாக ஒரு சொந்தமான கோலத்தின் பேரில், உடன் தஜல்லியாவதைத் தேடினது.
இந்த வழியை அல்லாஹு தஆலா அவனது வழமையாக ஆக்கிக் கொண்டான். இன்னும் அவன்  ولن تجد لسّنة الله تبديلا என்று சொன்னான். கரித்தல் எனும் விசயத்தில் நீ உணர்ந்தது போல. அந்த கரிதலை நாம் நெருப்பின் அதறாக ஆக்கினோம். பஞ்சும் நெருப்பும் சேர்ந்ததன் பிறகு.
பஞ்சும் நெருப்பும் சேருமிடமெல்லாம், பஞ்சு கரிவது உடனே உருவாகிவிடுகிறது என்பதை எளிதாக காண்கிறோம். இந்த கரித்தல் என்பது பிந்துவதில்லை. இதே போலத்தான் எல்லா விசயமுமாகும். அதற்கு நாம் காரணங்கள் என்று நமது அக்லு ஹுக்மு செய்ததின் பேரில் பெயர் வைக்கின்றோம்.
நமது அக்லில் குறிப்பான காரியங்கள் உண்டாவதற்கு காரணமான விசயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்ததன் பிறகு,அது தரிபடும் இடத்தில், அந்தக் காரியம் உண்டாவதையும், வெளியாவதையும் தாமதமின்றி எளிதாகக் காண்கிறோம்.
அவ்வாறு தாமதமின்றி காண்பதினால் அவற்றை நாம் பரிபூரண காரணமாக ஆக்கினோம். அதனால் நம் உட்பார்வை எனும் பார்வையில் மூடி விழுந்து விட்டது. இந்த மூடி எமது கண்களை விட்டும் விலகாது. நபவிய்யான, பூரணமான, அக்லுடையவரை பின்பற்றுதல் என்னும் சுர்மாவைக் கொண்டே ஒழிய.
இந்த விசயங்கள் உடனே வருவது என்பது தரிபடுவதால் நம்முடைய குறைந்த அக்லில் இந்த தரிபடுத்தப்பட்ட காரணங்கள் எல்லாம் சேர்ந்ததன் பிறகு உடன் காரியம் உண்டாவது தரிப்பட்டு நிற்கிறதால் எமது பார்வையில் குருடு என்னும் முகமூடியைப் போட்டு விட்டது.
நாம் காரணகாரியம் என்னும் சங்கிலித் தொடரை பின்பற்றுவதன் பேரிலும் அதைக் கவனிப்பதன் பேரிலும் நிர்பந்தமாக்கப்பட்டோம். இதை பின்பற்றி நாம் ஹகீகத்து புரள்வது அசம்பாவிதம் என்று ஹுக்மும் செய்கிறோம். இந்த திசையின் பின்பக்கம் உள்ளதை நாம் மறந்து விடுகிறோம். நமக்கு பார்வை கூர்மையாவதன் பேரில் தௌபீக்கும் கிடைக்கவில்லை. நாம் நபவிய்யான, காமிலான, அக்லை பின்பற்றும் கூட்டத்தில் நாம் நுழையவும் இல்லை.
நாம் பின்பற்றுதல் எனும் சுர்மாவை கொண்டு யாருடைய பார்வை கூர்மையானதோ அவருடைய சொல்லை செவியுறுவோமானால், முகமூடி நீங்குமானால், நீ யக்கீனை அதிகப்படுத்துவாய். இந்த ஹலாக்கில் நாம் விழுந்திருக்கவும் மாட்டோம். நம் கால்கள் சறுகவும் மாட்டாது. ரொம்ப செவ்வையான வழியை விட்டும் கால் சறுகியிருக்கவும் மாட்டாது. சோதரா! வழமையைக் கிழிப்பது என்பது எந்த ஒரு விசயத்திலும் ஹகீகத்து புரளுவது அல்ல என்றாலும் அது அஹ்காம், ஆதாறு என்பதன் பேரில் அல்லாஹ்வின் தஜல்லி இல்லாமலானதாகும்.மிகைத்த அவனின் ஹிக்மத்தின் காரணத்தினால், அஹ்காம், ஆதாறுகள் எந்த கோலத்திற்கு சொந்தமோ அந்த கோலத்தில் அவன் வெளியானதன் பிறகு இந்த அஹ்காம், ஆதாறு என்ற கோலத்தில் அவன் வெளியாகவில்லையே தவிர ஹகீகத்து புரளுவது என்பது அல்ல.
அவகுடைள வழமை அஹ்காம், ஆதாறைக் கொண்டு வெளியாவதாகும். அவை எந்தக் கோலத்தில் சொந்தமோ அந்தக் கோலத்தின் பேரில் வெளியானதன் பின்.
நான் உத்தேசிக்கிறேன் அதாவது தொடரப்பட்ட தஜல்லியில் வெளியானதன் பிறகு தொடர்ந்த தஜல்லியைக் கொண்டு வெளியாவதை நான் நாடுகிறேன். இப்றாஹிம் நபி அலைஹிஸ்ஸலாம் நெருப்பில் வீசப்பட்டபோது அல்லாஹ் 'கரித்தல்', 'ஹலாக்கு' என்றும் ஆதாறுகளின் கோலத்தரில் அவன் வெளியாகவில்லை. நெருப்பென்னும் கோலத்திலும், நெருப்பின் அவர்களை போடுவது என்னும் கோலத்திலும், நெருப்புடன் அவர்கள் சேர்வது என்னும் கோலத்திலும் வெளியானாலும் 'கரித்தல்' என்னும் கோலத்தில் வெளியாகவில்லை.
இந்த தஜல்லியாத்துக்கள் தொடரப்பட்ட தஜல்லியாத்துக்களாகும். கரித்தல், ஹலாக்காகுதல் என்பன தொடர்ந்த தஜல்லியுமாகும். இவை அனைத்தும் அவனுடைய ஹிக்மத்து என்னும் கைகளில் அடக்கியாளப்பட்டதாகும்.
'ஒரு ஹிக்மத்துக்காக, தொடரப்பட்ட தஜல்லிகளைக் கொண்டு தஜல்லியானான்.' 'இன்னொரு ஹிக்மத்துக்காக தொடர்ந்த தஜல்லியைக் கொண்டு அவன் தஜல்லியாகவில்லை.'ஆகவே கரிதலும், அழிதலும் அங்கு உண்டாகவில்லை. இதன்படி 'வழமைக்கு மாறாக' என்பதில் உண்டாகும் அடங்கலையும் ஒழுங்கு பிடித்துக் கொள். வழமைக்கு மாறாக வருவது முஃஜிஸாத்தினாலும் கராமத்தினாலும் இஆனத், இஸ்தித்றாஜ்யினாலும் உண்டாகும்.
வழைமக் கழிப்பதானது அவனது சக்தியின் பூரணத்துவத்தின் பேரிலும் ஹிக்மத்தின் வலுப்பத்தின் பேரிலும் அவனது ஜபரூத்தின் கண்ணியத்தின் பேரிலும் அறிவிக்கிறது.
 
ஒவ்வொரு அணுவிலும் தெய்வீகத்தின் ஓட்டம்.
سريان الالوهية في كلّ ذرّة
 
நீ அறிந்து கொள் சோதரா! நிச்சயமாக அல்லாஹ் தஆலாவாகிறவன் ஹிக்மத் என்னும் கமாலைக் கொண்டு ஆச்சரியமான கோர்வையிலும், தனித்துவமான ஒழுங்கிலும் ஒவ்வொரு அணுக்களும் தத்தமக்குள் கட்டுண்ட ஆலத்தை சங்கிலித் தொடராக நடத்துவதை அல்லாஹுத்தஆலா தேடினான்.
எந்தக் கோலத்தில் அவன் வெளியாகினானோ அந்த ஒவ்வொரு கோலத்தைக் கொண்டும் சொந்தமாக்கப்பட்ட அஹ்காம், ஆதாறுகளை சொந்தமாக்குவது கொண்டும் நாடினான். அந்த அஹ்காம், ஆதாறு அந்த கோலத்தை விட்டும் பிந்தாது. அவனது ஹிக்மத்து வழமையைக் கிழிப்பதை சில நேரங்களில் தேடினாலே ஒழிய. அந்த அஹ்காமு, ஆதாறு அதனுடைய கோலத்தை விட்டும் பிந்தாது.ஏனெனில் அவனது  ( العظمة)பெருந்தன்மையும்,  الجبروت)பொருத்தும் தன்மையும் வெளியாவதற்காக. அவன் ஒவ்வொரு கோலத்தையும் இன்னொரு கோலத்தின் பேரில் தேவையானதாக ஆக்கினான். உலகிலுள்ள வஸ்த்துக்களில் ஒவ்வொரு வஸ்த்துக்களுமாகிறது ஒரு குறிப்பான விசயத்தின் இன்னொன்றின் பேரில் தேவையானதாகும். சிலவேளை சிலவஸ்த்துக்கள் ஒரு குறிப்பிட்ட விசயத்தில், குறித்த காலத்தில், குறிப்பான இன்னொரு விசயத்தின்பேரில் தேவையானதாக ஆகும்.  அது ஒருசில காலத்துக்குப் பிறகு ஒரு குறிப்பான இன்னொரு குறிப்பான விசயத்தின் பேரில் தேவையானதாக ஆகும். அல்லது அந்த குறிப்பான கோலத்தின்பேரில் இன்னொரு தேவையான பொருள் அதன்பேரில் தேவையாவதும் ஆகும். என்றாலும் ஒரே காலத்தில் ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்துவுடன் சேர்ப்பது கொண்டு தேவையானதாகவும், தேவைப்பட்டதாகவும் ஆகும். அரசனைப் போல.
அரசனின் அரசாங்கம் நிலைப்பதற்கு பிரஜைகளின் பக்கம் அரசன் தேவையானவனாகும். பிரஜைகள் அவரது நம்பிக்கை, பாதுகாப்பு, الحدود)ஹத்துகள், பழிக்குப்பழி, அநியாயத்தைத் தடுத்தல், அநீதக்காரனிடமிருந்து அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு நீதி கிடைத்தல் போன்றவற்றில் அரசனின் பக்கம் தேவைப்பட்டவர்களுமாகும். இதே போல தந்தை, தனயனுடைய தேவைகள், கணவன் மனைவியுடைய தேவைகள் என்பவற்றை ஒழுங்கு பிடித்துக் கொள்!
நீ சிந்தித்தால், உட்பார்வை என்னும் பார்வையிலிருந்து உன் முகமூடியை உயர்த்தினால் வஸ்த்துக்களிலிருந்து ஒவ்வொரு வஸ்த்துவையும் ஒரு விதத்தில் தேவையானதாகவும், மற்றொரு விதத்தில் தேவைப்பட்டதாகவும் காணுவாய்.
நீ அறிவாய் யாரிடம் உன் தேவை இருக்கிறதோ அவர் முன்னிலையில் நீ பணிவை ஏற்படுத்தினதற்குப் பின்னே ஒழிய உன் நாட்டம் நிறைவேறாது என்று. தாழ்மை என்பது வணக்கம்(இபாதத்து) ஆகும். இந்நிலையில் நீ العابد) 'ஆபிதாகவும்' யாரின் பக்கம் நீ தேவைப்படுகிறாயோ அவர் (المعبود) 'மஃபூத்'தாகவும் நீ المألوه) 'மஃலூக்'காகவும் அவன் الاله)இலாஹ் ஆகவும் இருக்கிறான்.ஆகவே இதிலிருந்து ஒவ்வொரு வஸ்த்துவும் ஒருவிதத்தில் மஃலூஹ் ஆகவும் இன்னொரு விதத்தில் இலாஹ்; ஆகவும் ஒரு விதத்தில் ஆபிதாகவும், இன்னொரு விதத்தில் மஃபூத் ஆகவும் ஆகிறது. இதுதான் எல்லா வஸ்த்துக்களிலும், உலூஹிய்யத் ஊடுருவிக்கிறது என்பதன் இரகசியமாகும். ஏனெனில் அல்லாஹுத்தஆலா அவன் அல்லாததை வணங்கப்படக் கூடாது என்று தீர்ப்பளித்ததற்காக அல்லாஹுதஆலா அவனது கதீமான கிதாபில் وقضي ربّك الاّتعبدوا الاّاياه என்று கூறினது போல, இதுவே கலிமா தையிபாவின் நாட்டமும் ஆகும்.
இப்போது விஷயத்துக்கு மீளுவோம்.
அதுவாகிறது-ஆதாறும், அஹ்காமுமாகிறது இவை எந்தக் கோலத்துக்கு சொந்தமாகிறதோ அந்த கோலத்தை விட்டும் அது பிரியாது. சழமையைக் கிழிக்கும் வழியிலேயே ஒழிய.
கள்ளை நீ பெற்றுக் கொண்டால் நிச்சயமாக அதின் அதறு அதை விட்டும் பிரியாது என்பதைக் காணுகிறாய். இங்கு அதறாகிறது அதன் மஸ்த்தாகும். மீண்டும் அதனுடைய ஹுக்மும் அதை விட்டும் பிந்தாது. அதாவது ஹறாம் என்பது. ஏனெனில் வஸ்த்து தரிபட்டால் அதற்கு நிர்பந்தமான குணத்துடனேயே அது தரிபடும்.
தொடர்ந்ததான التابعة ), தொடரப்பட்டதான( المتبوعة தஜல்லியாத்தை விபரிக்குமிடத்தில் நீ அறிந்திருக்கிறாய் அதாவது நிச்சயமாக அஹ்காம், ஆதாறு என்பது அது உடையதின் (கோலத்தின்) வெளிப்பாட்டைப் போல இந்த ஆதாறு, அஹ்காமுகளும் அல்லாஹ்வின் வெளிப்பாடாகும். ஆனால் அந்த ஆதாறு அஹ்காமு அது உடையதின் வெளிப்பாடு அல்ல. அதற்கும் அது உடையதற்கும் அந்த உஜூதுடன் ஒரே தொடர்புதான் உள்ளது. என்றாலும் மேலான அல்லாஹ்வுக்கு ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஒவ்வொரு கோலம் உண்டு. ஒவ்வொரு கோலத்திற்கும் ஹுக்மும் அதறும் உண்டு. அதை விட்டும் அது பிந்தாது.
தாகம் தண்ணீரைக் கொண்டே ஒழிய தீராது.
பசி சாப்பாட்டைக் கொண்டே ஒழிய அடங்காது.
உன்னுடைய நாவு இனிப்பதெல்லாம் கற்கண்டைக் கொண்டுதான். மிளகைக் கொண்டு அல்ல.இவைகள் ஒவ்வொன்றும் அவனுடைய தஜல்லியாத்திலிருந்து ஒரு தஜல்லியாகவும் அவன் சுற்றுகளிலிருந்து ஒரு சுற்றாகவும் அவன் நிலைகளிலிருந்து ஒரு நிலையாகவும் ஆகிருந்தாலும் சரி.
எவனொருவன் அஹ்காம், ஆதாறுகளில் வேறுபாட்டைக் கொண்டு ஈமான் கொள்ளவில்லையோ அவன் காபிராவான்.ஷரீஅத்துடைய நாவின் பேரில் காபிராகவும், தரீகத்துடைய நாவின் பேரில் சிந்தீக் ஆகவும் ஆகிவிடுகிறான்.
ஹுக்முகளுக்கும், ஆதாறுகளுக்கும் மாற்றம் செய்வது எப்படி ஒருத்தனுக்கு ஆகுமாகும்?. அவன் பசித்தால் நாயைப் போல பிணத்தின் பேரில் விரைகிறான். அவன் சாப்பாட்டையோ, தண்ணீரையோ, மனைவியையோ, தலைமைத்தனத்தையோ, பொருளாசையையோ,பிள்ளைகுட்டிகளையோ, பேரப்பிள்ளைகளையோ விடவில்லை. உயர்ந்த உடுப்புகளையும் விடவில்லை. இப்படிப்பட்ட ஒருவன் தன் நப்ஸின் பேரில் கமாலியத்தை வாதிடுகிறான். அவன் எண்ணுகிறான், ஹல்லாஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்களையும் விட மேலான மர்த்தபாவில் இருக்கிறான் என்றும் எண்ணுகிறான். அவனுக்கு பிரயோஜனம் உண்டாகும் இடத்தில் ஹராம், ஹலாலை பார்க்க மாட்டான். தங்கடம் உண்டாகும் என யூகிக்கும் இடத்தில் அதன்பக்கம் முடுகவும் மாட்டான். அந்நேரம் தந்திரத்தை பாவிப்பதில் நிர்பந்தமாகிறான். அங்கு ஷரீஅத்தை கேடயமாகவும் ஆக்கிக் கொள்கிறான். அவனுக்கு எங்கே பிரயோஜனம் உண்டாகுமோ அங்கே ஷரீஅத்தை முதுகுப்புறமாக தூக்கி வீசவும் செய்கிறான். அப்படியான ஒருவனுக்கு அஹ்காம், ஆதாறுகளுக்கு மாற்றம் செய்வது எப்படி ஜாயிஸ் ஆகும் فسبحان الله عمّا يصفه اظّالمون

ஆதேயமானது அழிதல், நீங்குதல் வரும் இடமாகும்.
الاعراض موارد الفناء والزّ وال

நீ அறிந்து கொள் சோதரா! நிச்சயமாக ஆதேயம் என்பது உஜூதைக் கொண்டு தனித்து நிற்காது என்று நீ முன்பறிந்திருக்கிறாய் என்றாலும் அதன் உஜூதாகிறது அதன் ஆதாரப் பொருளின் உஜூதின் ஐனாகும். இந்த ஆதேயம் உனது பிரம்மையிலும், கற்பனையிலும் உண்டான விஷயமாகும். அந்த ஆதேயம் உண்டாகும் இடத்தை விட்டும் அதன் ஆதாரத்தை விட்டும் பிரிந்ததாக உனது பிரம்மையிலும் கற்பனையிலும் உண்டான விசயமாகும். வெளியில் அதன் ஆதாரத்தைத் தவிர மவ்ஜூது இல்லை.
நீங்குதலும், அழிதலும் ஆதேயத்திற்கு உண்டாகும். அது மீண்டும் உனது பிரம்மையிலும், கற்பனையிலும்தான் உண்டாகும்.உண்மையில் அல்ல. நிச்சயமாக ஆதேயம் உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. அழிதலும், நீங்குதலும் அந்த ஆதேயத்திற்கு பிரம்மையிலேயே தவிர உண்டாகாது அதனுடைய (ஆதேயத்துடைய) உஜூது போல.
அறிந்து கொள் சோதரா! உதாரணமாக நிச்சயமாக முந்திரிகைப் பழத்தைப் பார்ப்பாயானால் உன்னுடைய திஹ்னில் அல்லது வஹ்மில், கியாலில் மூன்று வஸ்த்துக்களை பிடித்தெடுக்கிறாய்.
முந்திரிகையின் உஜூது
முந்திரிகை இனத்தின் கோலம்.
சடம் என்னும் கோலம்.
நீ திடனாக அறிந்தாய். நிச்சயமாக உ ஜூதாகிறது ஹக்குடைய தாத்தாகும். ஹக்கீகத்தில் அவன் அல்லாத ஒன்றும் உஜூதாக இல்லை. இங்கு உண்மையான விஷயமாகிறது அறவே ஹக்கான வாஜிபான உஜூதாகும். அந்த இரண்டு (2,3) கோலமுமாகிறது உண்மையான விசயத்தின் பேரில் வந்த இரு ஆதேயங்களாகும். அந்த உண்மையான விசயமாகிறது அது ஹக்குடைய வாஜிபான உஜூதாகும். அந்த இரண்டு ஆதேயங்களும் உஜூதிலிருந்தே ஒழிய வரவில்லை (உண்டாகவில்லை). ஏனெனில் ஹக்கீகிய்யான, அதமான பொருள் அறவே அறியப்பட மாட்டாது. ஆவே அந்த இரண்டு சூறத்துகளும் உஜூதில் இருந்து வந்திருக்கின்றன. அவை இரண்டும் வருவதற்கு முன்னால் ஹக்குடைய உஜூதில் மறைந்திருந்தது.
நௌயிய்யாவின் النوعية கோலம் உன் திஹ்னில் ( الجسمية) ஜிஸ்மிய்யா என்னும் கோலத்திற்கு ஆதேயமாக ஆகுமானால அந்த ஜிஸ்மிய்யாவின் கோலத்தை உன் திஹ்னில் நௌயிய்யாவான கோலமாக ஆகிக் கொண்டாய். அதற்கு நீ நௌயிய்யா என்னும் போலம் என்றும் பெயரும் வைத்தாய். ஆகவே உள்ளமையில் ஜிஸ்மிய்யா என்னும் கோலமானது நௌயிய்யாவின் கோலத்தைப் போன்று மீண்டும் உஜூதின் நிலைகளில் நின்றும் ஒரு நிலையும் சுற்றுகளில் நின்றும் ஒரு சுற்றும் ஆகும்.
இந்த இரண்டு கோலங்களுக்கும் அந்த உஜூதுடன் ஒரே தொடர்புதான் உள்ளது. (நான் ஜிஸ்மிய்யா என்னும் கோலத்தில் இருந்து நௌயிய்யா எனும் கோலம் உண்டாகவில்லை என்பதை உத்தேசிக்கிறேன்) என்றாலும் நௌயிய்யா என்னும் தொடர்ந்த கோலம் வெளியாவதற்கு ஜிஸ்மிய்யா என்னும் கோலம் தொடரப்பட்ட வெளிப்பாடாக ஆகியிருந்தது.
இங்கு தாத்தைக் கொண்டு மவ்ஜூதான பொருளும், ஹகீகிய்யான ஜவ்ஹரும் ஹக்குடைய வாஜிபான உஜூதைத் தவிர வேறில்லை.
அந்த உஜூது, அது வெளியாகக் கூடிய எல்லா மர்தபாக்களிலும் அது (التنزيه) தன்ஸீஹ் என்னும் (صرافة)சறாபத்தின் பேரின் தரிபட்டதாகும். அது பேதகமாகவும் மாட்டாது. பகரமாகவும் மாட்டாது. திரும்பவும் மாட்டாது.
ஆகவே இந்தப் பேதகமாக்குதல், பகரமாக்குதல், திரும்புதல் இவைகள் கோலத்துக்குள்ளதாகும். அது ஜிஸ்மிய்யாவான அல்லது நௌயிய்யான கோலங்களாக இருந்தாலும் சரி. அல்லது நௌயிய்யாவான ஒவ்வொரு தனிப்பிரதிகளின் கோலங்களாக இருந்தாலும் சரி.
உன் திஹ்னில் பிடித்தெடுக்கப்பட்ட மூன்று விசயங்களுமாகிறது (மும்கினான உஜூது, நௌயிய்யான கோலம், ஜிஸ்மிய்யான கோலம்) முந்திரிகையிலிருந்து விளங்கின விளக்கங்களாகும். அதற்கு ஹகீகிய்யான உஜூதின் உஜூதைத் தவிர வெளியில் உஜூது இல்லை. இன்னும் அது ஒன்றைத் தவிர வேறில்லை. என்றாலும் உன்னுடைய பிரம்மை இந்த ஒரே வஸ்த்துவை மூன்று வஸ்த்துக்களாக ஆக்கிவிட்டது.
இந்த ஒவ்வொன்றையும் விளங்குவதற்காக அதற்கென்று சொந்தமான ஒரு பெயரையும் வைத்தாய். இங்கும் இஸ்மும், முஸம்மாவும் அறவே அறியப்படாது. உன்னுடைய பிரம்மையிலே ஒழிய. இந்தக் கோலங்கள் உன்னுடைய திஹ்னிலிருந்தும், வஹ்மிலிருந்தும் நீங்கிவிடுமானால் (நான் உத்தேசிக்கிறேன் அதாவது அதன் கன்ஸான உஜூதிலிருந்து அது வெளியானதற்கு பிறகு மறைவுக்குத் திரும்பிவிடுமானால்) முந்திரிகையிலிருந்து பிடித்தெடுக்கப்பட்ட கோலங்கள் உனது வஹ்மிலிருந்தும், திஹ்னிலிருந்தும் அழிந்தும், நீங்கியும் விட்டது. நீ அது நீங்கிவிட்டது, அழிந்து விட்டது என்பதைக் கொண்டு தீர்ப்புமளிக்கிறாய். உள்ளமையில் அதற்கு அழிவும் இல்லை, நீங்குதலும் இல்லை என்றா'லும் அங்கு வெளியாகுதல், மறைதல் என்பன மட்டும்தான் உள்ளது.பேதகமாகுதலும், பகரமாகுதலும் ஆதேயமான பொருள்களின் பேரில் உண்டானதாகும். அந்த ஆதேயம் என்பது கோலமாகும்.உள்ளமையான விசயத்தின் பேரில் அல்ல.(வாஜிபான உஜூதின் பேரில் அல்ல)
உதாரணமாக,
முந்திரிகைப் பழத்தை நீ பிழிவாயானால் முந்திரிகை என்னும் கோலம் சாறு என்னும் கோலத்தின் பேரில் மாறிவிடும். ஹகீகிய்யான உஜூது மாறவில்லை. இதன்பிறகு அந்த சாற்றை, சாறு என்னும் கோலம், கள்ளெனும் கோலத்தில் திரும்புவது வரை நீ அச்சாற்றை கொதிக்க வைப்பாயானால், அப்போது நீ அதன் குணபாட்டைப் பார். அது மஸ்த்தாகம். அதன் தீர்ப்பைப் பார். அது ஹராமாகும். ஆகவே கள்ளு என்பது முந்திரிகைக்கு வேறானதாக இல்லை. இது முந்திரிகையில் ஹகீகிய்யான ஐனிய்யத்துக் கொண்டு முந்திரிகைக்கு ஐனாகும். கவனிப்பினாலானது அல்ல. என்றாலும், முந்திரிகை என்னும் கோலமாகிறது கள்ளெனும் கோலமாக மாறிவிட்டது. கள்ளெனும் கோலமாகிறது அதன் குணபாட்டையும் தீர்ப்பையும் கொண்டு அது வந்து விட்டது. இந்தக் குணபாடு (மஸ்த்து), தீர்ப்பு (ஹறாம்) என்ற இரண்டு முந்திரிகை எனும் கோலத்தில் உண்டாகியிருக்கவில்லை. முந்திரிகை என்னும் கோலத்தின் தீர்ப்பாகிறது ஹலால் என்பதாகும். இது போலதான் சாறும் எனும் கோலமும், அதற்கு சொந்தமான ஒரு தீர்ப்பும் உண்டு. அதாவது ஹலால் என்பதாகும்.
இந்த சாறு, முந்திரிகைப்பழம் என்ற இரண்டு கோலங்களும் கள்ளெனும் கோலத்தில் பகரமானபொழுது அதன் குணபாடும், தீர்ப்பும் மாறிவிட்டது. அப்போது குணபாடும் தீர்ப்பும் கோலத்திற்குள்ளதாகும். ஹகீகிய்யான விசயத்திற்கு உள்ளதல்ல. எது போலவெனில் புரளுதல், மாறுதல், பேதகமாதல் என்பன போல.
இதன்பிறகு அந்தக் கள்ளின் பேரில் உப்பை இடுவாயானால் அதனுடைய குணபாட்டையும்(மஸ்த்து) தீர்ப்பையும்(ஹறாம்) அது நீக்கிவிடும். இங்கு உப்பானது கள்ளை வினாயகிரியாக மாற்றிவிட்டது. அந்த 'மஸ்த்து' என்பது கள்ளின் ஹகீகத்தாகும். நீ இதற்கு முன் அறிந்தது போல, அதாவது ஒரு வஸ்த்துவின் ஹகீகத்தாகிறது ஒரு விசயமாகும். அதாவது அந்த விசயத்தைக் கொண்டு ஒரு வஸ்த்து மற்ற வஸ்த்துவை விட்டும் வேறு பிரித்தறியப்படுமே அதுவாகும். உதாரணம் கள்ளைப் போல. அந்தக் கள்ளு மஸ்த்தைக் கொண்டு, சாறிலிருந்து வேறு பிரிந்து விட்டது. இங்கு மஸ்த்தாகிறது கள்ளின் ஹகீகத்தாகும். அது உண்மையில் வெளியில் உண்டானது என்ற அர்த்தத்துக்குல்ல. இல்லாமையிலிருந்து அறியப்பட்டது என்ற அர்த்தத்துக்குமல்ல. என்றாலும் நம்மில் பிரித்தறிவதற்காக வேண்டி அந்த மஸ்த்தை கள்ளின் ஹகீகத்தாக ஆக்கினோம். காரண காரிய சங்கிலித் தொடரை கவனித்ததற்காகவும், உலகத்தின் கோர்வை நிலைத்திருப்பதற்காகவும் 'மஸ்த்து' என்பது வெளியில் உஜூதில்லாத ஆதேயமான விசயமாக இருந்தாலும் சரி. இதன்பேரில் உலகத்திலுள்ள அனைத்து ஹகாயிகுகளையும் ஒழுங்கு பிடித்துக் கொள்.
இந்த ஹகாயிகுகளாகிறது வெளியில் அறியப்படாத ஆதேயங்களாகும். உண்மையாகிறது, நிச்சயமாக இந்த ஹகாயிகுகள் அதற்கு ஆதாரம் என்றோ ஹகாயிகு என்றோ பெயர் வைப்பதற்கு உரிமையுடையது அல்ல. ஏனெனில் வெளியில் அவை இல்லாமலானதற்காக.
மேலே நான் உங்களுக்கு கற்றுத் தந்ததிலிருந்து நீ அறிந்திருப்பாய், பேதகம், மாறுதல் என்பன ஆதேயமான விசயத்திற்கும், கோலத்திற்கும் உள்ளதாகும். உண்மையான விசயத்தின் பேரில் அல்ல.
நிச்சயமாக உஜூதாகிறது அது கலப்பற்ற 'தன்ஸீஹி'ன் பேரில் சடக் கோலத்திலும் இனம் என்னும் கோலத்திலும் ஆகியிருந்தது போல, சாறெனும், கள்ளெனும், சிர்க்கா(வினாகிரி) என்னும் கோலங்களில் அது ஆகியிருந்தும் அது மாறுதல், பேதகம், திரும்புதல் அடையவில்லை. வெளியிலும், உனது திஹ்னிலும் அது அழியவும் இல்லை. அது நீங்கவும் இல்லை. அந்த உஜூதாகிறது சொல்லப்பட்ட கோலங்கள் அழிந்ததற்குப் பிறகு மீண்டும் உன்னுடைய திஹ்னிலும், உன்னுடைய பிரம்மையிலும் பாக்கியாக இருக்கிறது. என்றாலும் நீ உனது திஹ்னிலோ, அக்லிலோ, வஹ்மிலோ அந்த உஜூது இருக்கிறது என்பதை உணரவில்லை.
இந்த உஜூதை அழிவும், நீங்குதலும் இல்லாமலாகிறதும் தொடாது. வெளியிலும் உன்னுடைய வஹ்மிலும், திஹ்னிலும், அக்லிலும் தொடாது. இந்த விசயமானது நுணுக்கமானதாகும். இதை காமிலான ஆரிபானவர்களே ஒழிய அறிய மாட்டார்கள்.
நீ விளங்கிக் கொள். சிந்தி. அல்லாஹ்வுடைய வரிசையிலிருந்தும், கொடையிலிருந்தும் தேடுகிறவனாக ஆகியிரு. அல்லாஹுத்தஆலா உன்னை வரிசைப்படுத்தவும் சங்கைப் படுத்தவும், அவ்லியாக்கள் கூட்டத்தில் ஆக்கவும் போதுமானவன். இன்னும் அவனின் பரிசுத்தமாக்கப்பட்ட பைளுகளிலிருந்து உனக்கு ஒலிப்பித்துத் தரவும் போதுமானவன். உனக்கு அதை விளங்குவதற்கு நல்லருள் செய்யவும் போதுமானவன் وذاك فضل الله يؤ تيه من يشاء
தாத்தும் உஜூதும்
الذات والوجود
 
அறிந்து கொள் சோதரா! அல்லாஹ் உன்னைப் பக்குவப்படுத்துவானாக! நிச்சயமாக தாத்து, உஜூது என்பன ஒரே அர்த்தத்துக்குள்ள இரு இஸ்முகளாகும். அந்த அர்த்தமாகிறது தாத்தைக் கொண்டும், அஸ்மாக்கள் கொண்டுள்ள கமாலைக் கொண்ட  வாஜிபான ஹக்காகும். அந்த அஸ்மாக்களாகிறது மட்டிலடங்காத அதிகமானதும், எண்ணிக்கையில்லாத பல விதங்கள் உள்ளதுமான அஸ்மாக்களாகும். என்றாலும் தாத்தென்ற இஸ்மை ஸூபிகள் அவர்களுடைய பரிபாஷையில் வாஜிபான உஜூதுக்கும் பாவித்திருக்கிறார்கள். ஏனெனில் தாத்தென்பது சிபாத்தின் விளையும் இடம் ஆனதற்காகவும், சிபாத்துக்களை சேர்க்கப்படும் இடமானதற்காகவும் ஆகும்.
எதன்பேரில் இந்த சிபாத்துக்கள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பதை ஸூபிகள் வழமையாக்கிக் கொண்டார்கள்.
அப்போது ஹகீகத்தில், தாத்தென்பது ஹகீகிய்யான உஜூதாகும். ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்தாகும். இவை இரண்டும் ஒரே விசயத்திற்குள்ள இரு இஸ்முகளாகும். ஹகீகிய்யான உஜூதாகிறது தாத்திற்கு மேலதிகமானதாக இல்லை. கஷ்பு எனும் அறிவில்லாத தௌகு எனும் அனுபவ அறிவில்லாத சிலர் ஊகித்ததைப் போல.
அவர்கள் அவர்களின் ஊகத்தின் பேரில் வரக் கூடிய குறைகளை உணரவும் இல்லை. அவர்களின் சொல்லைக் கொண்டு அல்லாஹ்வுக்கு நிர்பந்தமாகும் குறைபாடுகளையும், உணரவுமில்லை. ஸூபிகளிடத்தில் இந்த விசயம் பரந்தறியப்பட்ட சங்கதியாகும்.
அதனுடைய ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டதும், மட்டுப்படுத்தப்பட்டதுமாகும். இவைகள் அனைத்தும் அக்ரக்கண்ணியர்களின் (உறுதிமிக்கவர்களின்) நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஷரகுல் மகாஸிதும் شرح المقاصد) அது அல்லாத்ததுமான கிதாபுகளில் சொல்லப்பட்டிருக்கிறது போல.மேலதிகமான விளக்கங்கள் தேவைப்படின் அந்த கிதாபுகளின் பக்கம் திரும்புவது உன் மீது கடமையாகும். என்றாலும் நான் ஒரே ஒரு ஆதாரத்தைக் கூறி முடிக்கிறேன். இது உனக்கு போதுமானதாகும். இன்ஷாஅல்லாஹ்.
ஹிதாயத்தின் பேரிலும், பக்குவத்தின் பேரிலும் அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்வானாக! நீ அறிந்து கொள் நிச்சயமாக உஜூதாகிறது அவர்கள் ஊகத்தின் படி தாத்தை விட அதிகமானதாக ஆகியிருக்குமானால், தாத்தாகிறது தன் தாத்துடைய மர்தபாவில் அது தனித்த இல்லாததாகவும் உஜூதின் பக்கம் தேவைப்பட்டதாகவும் ஆக வேண்டி வரும். ஆகவே தேவைப்பட்ட பொருள் இலாஹாக இருப்பதற்கு இலாயக்கற்றதாகும்.
அந்த ஒரு சிலரின் அதாவது 'தாத்து உஜூதைத் தேடுது' என்ற கூற்றாகிறது அர்த்தமற்ற கூற்றாகும். ஏனெனில் தேட்டம் என்பது உஜூதிய்யான விசயமாகும். உஜூதிய்யான விசயமாகிறது அதமிய்யான விசயத்திலிருந்து எவ்வாறு உருவாகும்? அதமிய்யான விசயமாகிறது அதனுடைய மர்தபாவில் இல்லாமலான தாத்தாகும். ஆகவே அவர்கள் தாத்தென்பது திஹ்னிய்யான விசயம் என்று சொல்வார்களேயானால் அந்த தாத்திறது இரண்டாவதான மஃகூலான வஸ்த்துக்களாக வேண்டி வரும். அப்படியானால் அதற்கு வெளியில் உஜூது இல்லை.அப்போது இலாஹ் என்பது வெளியில் உண்டாகாத المعقول மஃகூலான விசயமாகிவிடும்.
ஆச்சரியம் என்னவென்றால், நிச்சயமாக தாத்தை விட உஜூது மேலதிகம் என்று சொல்லக் கூடியவர்கள் திஹ்னியான உஜூதையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள். சந்தேகமில்லாமல் அவர்களுடைய இந்த சொல்லு மூடலான அர்த்தமற்ற சொல்லாகும். திஹ்னிய்யான உஜூதாத்துக்களைக் கொண்டு நாம் அலசுவதில்லை.
இரண்டாவது மஃகூலான விசயத்தைத் தொட்டும் அலசுவதுமில்லை.என்றாலும் தன்னாலே நிலைக்கக் கூடிய தான் அல்லாத்ததைக் கொண்டல்லாத வெளியில் உண்டாக்கப்பட்ட ஹக்கான வாஜிபுடைய தாத்தைப் பற்றிதான் நாங்கள் அலசுவோம். தான் அல்லாத்ததைக் கொண்டு நிற்கிறதுக்கு உதாரணம் கற்பனையில், பிரம்மையில், திஹ்னில் உள்ள விசயங்களைப் போல் ஆகும். அவன் (அல்லாஹ்வின் தாத்து) ஒரு வஸ்த்துவில் இறங்குவதை விட்டும் ஒரு வஸ்த்துவைக் கொண்டு ஒன்றாகுவதை விட்டும் உயர்வானதாகும்.
இதுபோன்று அல்லாஹ்வின் உஜூது தன் தாத்தைக் கொண்டு நிலையானதாக ஆகுமானால், தாத்துக்கு ஆதேயமாவதற்கு முன்னால் உஜூது தாத்திற்கு ஆதேயமானதற்குப் பிறகு தாத்தைப் பெற்றுக் கொள்கிறான். ஆகவே அந்த உஜூது தாத்தை உண்டாக்கினதாக ஆகிறது. அப்போது உஜூது தன்னைக் கொண்டு தான் நிலை நிற்காததாக ஆகுமானால், அப்போது அது தாத்துக்கு ஆதேயமாகும்.
தாத்து அதற்கு ஆதாரப் பொருளுமாக ஆக வேண்டி வரும். ஆகவே இல்லாத தாத்தின் பேரில் தான் தேவையானதாக அந்த உஜூது ஆகிவிடும். ஏனெனில் ஆதேயப் பொருள் நிலைப்பதற்கு ஆதாரப் பொருள் அவசியம் ஆனதற்காக. எனவே இங்கு அல்லாஹ்வின் உஜூது தாத்தின் ஐனாகவும் தாத்து உஜூதின் ஐனாகவும் ஆகிவிட்டது என்பது தரிபட்டு விட்டது.
தாத்தை விட உஜூது அதிகமானது என்ற கூற்றில் இன்னும் சில குறைபாடுகளும் உண்டு.
அது தன்னுடைய இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாங்கள் தர்க்கிக்கிறவர்களும், பெருமை அடிப்பவர்களும் அல்லர். என்றாலும் நாங்கள் வியட்டியான, அக்லிய்யான, ஆதாரங்களை உடையவர்களும் அல்லர். இன்னும் எங்களிடத்தில் உள்ள அறிவுகள் அனைத்தும் அனுபவ ரீதியானதும் திர நீங்கினதுமாகும். பரிபூரண நுபவ்வத்துடைய காமிலான நபிமார்களின் العقل அக்லு எனும் المشكوة மிஷ்காத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.
علي صاحبها افضل الصلوة وازكي التحيّه
 
தாத்தில் பனாவாவதற்குள்ள முறாகபாவின் விரிவுரை

بيان المراقبة لحصول الفناء في الذّات

உண்மையான தேட்டமுடையவனே! எல்லா இடத்திலும், காலத்திலும், நேரத்திலும் இரவும் பகலும் அதிகமான முறாக்கபாக்களைக் கொண்டு தெண்டிப்பது உன்மீது கடமை. ஹக்கான, வாஜிபான ஒருவனுடைய தாத்தைக் காட்சி காண்பதில், உலகிலுள்ள எல்லா வஸ்த்துவிலும், எல்லா அணுக்களிலும் நீ அதில் மூழ்கும்வரையும் கௌனுகளுடைய கோலங்களை பார்ப்பதை விட்டும் அந்த பன்மையை பார்ப்பதை விட்டும் நீ மறையும் வரையும் தெண்டிக்க வேண்டும். அப்படி நீ தெண்டித்தால் தனித்த  ஒருமையைத் தவிர பன்மையைக் காண மாட்டாய்.
இதே நிலை, உன்னுடைய உள்ளான வெளியான புலன்கள் அனைத்தையும் சேர்ப்பதில் நீ முகம் வைப்பது கொண்டும் ஒரு விசயத்தைப் பார்ப்பதின் பேரில் உனது ஊகத்தை ஒருங்கு குவித்து முகம் வைப்பது கொண்டுமே ஒழிய இந்தக் காரியம் சித்தியடையாது.
இங்கு ஒரு விசயம் என்பது ஹக்கான ஒருவனான உஜூதைத் தவிர வேறில்லை என்பதாகும். அதின் கோலங்களின் பேரிலும் அது அதிகமானது என்பதன் பேரிலும் நீ திரும்பிப் பார்க்காது அனைத்தையும் ஒரே ஐனாக காணு. அதுதான் உஜூதாகும். அவைகளை (கௌனுகளை) பார்ப்பதை விட்டும் இன்னும் உன் நப்ஸை பார்ப்பதை விட்டும் இன்னும் உஜூதின் சுற்றுகளை பார்ப்பதை விட்டும், உன் நப்சின் சுற்றுகளை பார்ப்பதை விட்டும், நீ மறையும் வரை தெண்டிக்க வேண்டும். உனக்கு உன்னைப் பற்றிய உணர்வோ நீ அல்லாத்ததைப் பற்றிய உணர்வோ பாக்கியாகாது. ஹக்கான ஒருவனான தாத்தின் உணர்வைத் தவிர நீ மறையும் வரை தெண்டிக்க வேண்டும்.
அவனைக் கொண்டு நீ உன்னை உணரும் உணர்வு நிற்குமிடத்தில் அவன் அவனை உணர்ந்தான் என்ற உணர்வு நிற்கும் வரை, இதைக் கொண்டு நான் 'தாத்தைக் கொண்டு தாத்து உணர்வது' என்பதை உத்தேசிக்கிறேன். நீ 'அன' என்று சொல்வது கொண்டு ஹக்கான வாஜிபான ஒருவனின் தாத்தைத் தவிர இன்னொரு مصداق மிஸ்தாக்கை( பொருந்துமிடத்தை) பெற்றுக் கொள்ளாதிருக்கும் வரை தெண்டிக்க வேண்டும். பாடுபட்டாலும் சரி கடுமையாக தெண்டித்தாலும் சர் வேறொன்றையும் காணமாட்டாயே! அந்த அளவுக்கு நீ தெண்டிக்க வேண்டும். இதுவே இத் தேட்டத்தில் கடைசியும் ஆகும். இன்னும் والاجتباء   الجذب அல்ஜதுபு, இஜ்திபாவு உடையவர்களின் வழியாகும். السلوك    والاهتداء அஸ்ஸுலூக்கு, இஹ்த்திதாவு உடையவர்களின் வழியல்ல.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்(செய்யிது அஹ்லல் இஜ்திபாவு) سيداهل الاجتباء )மொத்தமாக ஒரே தரத்தில் எனக்கு குர்ஆன் இறக்கப்பட்டது( انز عليّ القرأن جملة واحدة என்ற வார்த்தையைக் கொண்டு இந்த அர்த்தத்தை சுட்டிக் காட்டினார்கள்.
நிச்சயமாக ஹக்குடைய, வாஜிபுடைய தாத்தாகிறது கௌனிய்யத்தான, இலாஹியத்தான, எல்லா கமாலாத்துகளையும் சேகரித்ததாகும். இதற்காகத்தான் இவ்வாறு சுட்டிக்காட்டினார்கள். எது போலவெனில் மரம் எனும் சக்திகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்ட வித்தைப் போல.
வித்தென்பது தொகுப்பான மர்தபாவாகும். அது குர்ஆனாகும்.
மரம் என்பது விரிவான மர்தபாவாகும். அது புர்கான் ஆகும்.
இந்த வண்ணமான மர்தபாவைக் கொண்டு விளங்கி அறிந்த பிறகு தாத்தில் மறைந்திருக்கும் கமலாத்துகள் அனைத்தும் உன்னைக் கொண்டு உன்னிலே உன்னிலிருந்து படிப்படியாக பூரணமாகும்வரையும் அல்லாஹ்வின் நிஃமத்தை பூரணமாக்கும் வரையும் படிப்படியாக வெளியாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த புர்க்கானியத்தான விரிவான மர்தபாவின் பேரில என்று انز عليّ القرأن نجما نجماசுட்டிக் காட்டினார்கள்.
اليوم اكملت لكم دينكم واتممتي عليكم نعمتي ورضيت لكم الاسلا م دي       
என்பது இறங்கும் வரையில் என்மீது குர்ஆன் படிப்படியாக இறக்கப்பட்டது என்று சுட்டிக் காட்டினார்கள்.
இப்போது நான் உனக்கு உதாரணம் சொல்கிறேன். ஏனெனில் பன்மையில் ஒருமையைக் காண்வதிலும்,  ஒருமையான தாத்தைக் காட்சி காணுவதிலும் நீ முகம் வைக்கும் வழி உனக்கு விளங்குவதற்காக.
சோதரா! நிச்சயமாக நீ அலையுடைய நேரத்தில் கடலைக் காண்பாயானால், வெளியில் அநேக விசயங்களை காண்பாய். உன்னுடைய திஹ்னு என்னும் கண்ணாடியில் பல விசயங்கள் பதிந்து விடுகிறது. அவை கடலுடைய நிலை எனும் கோலத்திலிருந்து பிடித்தெடுத்த அலைகள் என்னும் விளக்கங்களாகும். இன்னும் அதிகமான அலைகள் என்னும் சுற்றுகளின் கோலங்களும் ஆகும். ஆகவே உன்னுடைய உள்ளும் புறமும் அநேக விசயங்களை சூழ்ந்து கொண்டது. இனி அலை அடங்கின நேரம் கடலைக் காண்பாயானால் நீ ஒரு விசயத்தைத் தவிர காணமாட்டாய். அது அலைகளில்லாத விரிந்த கடலின் கோலமாகும். ஆகவே உனது திஹ்னில் ஒரே ஒரு விசயம் உண்டாகும். அது அலையில்லாத கடலிலிருந்து பிடித்தெடுக்கப்பட்ட விளக்கமாகும்.
உன்மீது சோதரா கடமை, உன்னுடைய பார்வை திஹ்னு எனும் கண்ணாடியில் அலைகள் இல்லாத விரிந்த கோலம் உறுதியாகுமானால் உன்னுடைய ஊக்கங்கள் அனைத்தையும் ஒருங்கு சேர்த்து ஒரே விசயத்தைப் பார்ப்பதிலும் நீ முகம் வைப்பது உன் மீது கடமையாகும். அவ்விசயம் அலைகள் அல்லாத விரிந்த கடலின் கோலமாகும் என்று நாடுகிறேன். எல்லா நேரமும், எல்லாக் கணமும் தனித்த கடலை பார்ப்பதில் நீ மூழ்கும் வரை.
அலை என்னும் பன்மையைக் காண்பதை விட்டும் நீ மறையும் வரை உன்னுடைய பாதின் الباطن எனும் திஹ்னிலும் வெளிப்பார்வை எனும் கண்ணாடியிலும் ஒரே விசயம் உறுதியாகும் வரை நீ மூழ்குவதே உன் மீது கடமையாகும்.
இவ்வாறு முறாக்கபா செய்து வந்தால் நீ ஒரே ஒரு விசயத்தைத் தவிர காணவும் மாட்டாய். அறியவும் மாட்டாய்.
இதுபோலவே சோதரா உன் மீது கடமை கலப்பற்ற உஜூதை விரிந்த கடலைப் போன்று ஆக்குவதும், கௌனிய்யான கோலங்களை கடலின் அலைகள் போன்று ஆக்குவதும் உன்னுடைய الباطن பாத்தினான,  الظاهر ளாஹிரான புலன்களைக் கொண்டு உன்னுடைய ஹிம்மத்தை ஒருங்கு சேர்த்து தனித்த தாத்தைப் பார்ப்பதில் முகம் வைப்பதும் உன்மீது கடமையாகும். நீ கௌனிய்யத்தான கோலங்கள் பேரிலும் அதன் நிலைமைகள் பேரிலும் திரும்பிப் பார்க்கவும் வேண்டாம்.
இப்படி முஷாஹதாவில் தெண்டித்தால் அந்த வஹ்தத் என்ற கோலம் உன்னுடைய பார்வையிலும், திஹ்னிலும், அக்லிலும் அது பதிந்து விடும். தாத்து உன்னைக் கொண்டு சூழும் வரை. ஆகவே உன்னுடைய பார்வையில், கல்பில், அக்லில் ஒருவனின் பார்வையைத் தவிர உண்டாகாது.
இதுபோன்று உன்னுடைய கற்பனையிலும், பிரம்மையிலும், மனனத்திலும், சிந்தனையிலும் ஒருவனைத் தவிர உண்டாகாது. இனி உன்னுடைய நஃது, சிபாத்து, நப்சு, இவைகளை விட்டும்; மறையும் வரையில். ஆகவே உன்னுடைய ஹுவிய்யத்து هوية அவனுடைய ஹுவிய்யத்திலும் உன்னுடைய انية அன்னிய்யத்து அவனது அன்னியத்திலும் அழிந்து விடும்.
எப்பொழுதாவது அவன் தாத்தை தொட்டும் நீ 'அன' என்று இபாறத் இடுவானேயானால் அதன் تعبير தஃபீறு சஹீஹான இஸ்மாகும். மற்றப் பெயர்களை அவன் மறந்து விடுவான். எதுவரையில் எனில், 'நீ', 'அவன்' என்று சொல்லக்கூடியவைகளை விட்டும் மறைந்து விடுவான்.
அறிந்து கொள் சோதரா! கலப்பற்ற தாத்தை தொட்டும் இபாறத்து இடுவதில் ஹக்கீயான இஸ்மான 'அன' என்றதை விட்டும் வேறொன்றையும் பெற்றுக் கொள்ள மாட்டாய். அதாவது 'நீ', 'அவன்' என்பதற்கு எதிரிடையாக 'அன'யைப் பெற்றுக் கொள்வாய்.
ஏனெனில் நீ என்ற முன்னிலையான اضمير ளமீராகிறது அது இரண்டைத் தேடும். அதாவது المخاطب முகாதிப், المخاطب முகாதப் என்ற இரண்டு நிலைகளை உறுதியாக்கினதற்காக இவ்வாறு தேடும். இங்கு ஒரு தாத்தைத் தவிர வேறில்லை. ஆகவே الخطاب கிதாபும், முகாதபத்தும் எங்கு இருக்கிறது? இல்லை.
இதுபோலவே அவன் என்ற படர்க்கையான ளமீறும் இதுபோன்றுதான். அந்த உஜூது மறைந்தது அல்ல. ஒரு வஸ்த்து தன் நப்ஸுக்கு மறைவது அசம்பாவிதம் ஆனதற்காக.
'நீ' என்றோ 'அவன்' என்றோ இபாறத்து செய்வாய். ஆனால் அது கவனிப்பிலானதாகும். ஹகீகத்தானதல்ல. 'நான்' என்பது கொண்டு சொல்வதாகிறது உண்மையான சொல்லாகும். ஒரு نعت  நஃதையோ(தன்மைகள்), வஸ்பையோ وصف (பட்டங்கள்) கவனிக்காத உண்மையான சொல்லாகும்.
நீ தாத்தில் மூழ்குவதில் பூர்த்தியாகிவிட்டாய் என்பதற்கும் பரிபூரணமாக நீ அவனில் அழிந்து விட்டாய் என்பதற்கும் அடையாளமாகிறது நீ 'அன' என்னு சொல்லுமிடத்தில் ஒரு உண்மையான இடத்தையோ, مصداق மிஸ்தாக்கையோ நீ எட்டிக் கொள்ளாமையாகும். ஹக்கான வாஜிபான ஒருவனுடைய தாத்தைத் தவிர எவ்வளவு கஷ்டப்பட்டு பிரசயாசை எடுத்தாலும் சரி.
பன்மையில் ஒருமையைக் காணுவது உண்டாவதற்கு முன் பன்மையில் ஒருமையைக் காணும் இடத்தில் நீ எவ்வளவு பிரயாசைப் பட்டாலும் ஒருமையைக் காணமாட்டாயோ அதே போல் இவ்விசயத்தில் நீ எவ்வளவு பிரயாசை எடுத்தாலும், கஷ்டப்பட்டாலும் ஒரு தாத்தைத் தவிர வேறொன்றையும் விளங்கவோ, அறியவோ, காணவோ மாட்டாய்.

தௌஹீதுத் தாத்து
توحيد الذّات   الكائنات

அறிந்து கொள் சோதரா! உன்னை அல்லாஹ் பக்குவப்படுத்துவானாக! நிச்சயமாக தாத்து ஒன்று என்பதில் மூன்று கொள்கைகள் உள்ளன.
முதலாவது ளாஹிரிய்யாக்களின் கொள்கையாகும்.
அவர்கள் நம்புகிறார்கள் நிச்சயமாக, அல்லாஹ்வுடைய தாத்து மும்கினாத்துகளுடைய (படைப்பினங்களுடைய) தாத்துக்கு வேறானது ஆகும் என்றும் அல்லாஹ்வுடைய உஜூது மும்கினாத்துகளுடைய உஜூதுக்கும் வேறானதாகும்  என்றும், தாத்து உஜூதுகளைப் போல மட்டிலடங்காமல் அதிகமானதாகும் என்றும் நம்புகிறார்கள். அத்துடன் அல்லாஹ்வுடைய தாத்தும் அவனது உஜூதும்  அழிவதை விட்டும், நீங்குவதை விட்டும், குறைவதை விட்டும் பரிசுத்தமாக்கப்பட்டதாகும். அந்த காயினாத்து(படைப்பினங்கள்)களின் உஜூதுகளையும் தாத்துகளையும் உண்டாக்கினவனுமாகும். இன்னும் அல்லாஹ்வாகிறவன் ஏகமானவன், ஒருமையானவன், தேவையற்றவன், தனித்தவன், தாத்தை கொண்டு நிலை நிற்பவன், வேறொன்றின் பக்கம் தேவையுமற்றவனுமாவான். அவன் ஒரு வஸ்த்துவுக்கு ஒப்பாகவுமாட்டான். ஒரு வஸ்த்து அவனுக்கு ஒப்பாகவும் மாட்டாது. இன்னும் அவன் ஹய்யுன், அலீமுன், கதீருன், முரீதுன், ஸமீஉன், பசீறுன், கலீமுன் ஆவான். இன்னும் அவனுக்கு பரிபூரண சிபாத்துகளும் உண்டு.
அறிந்து கொள்!
மும்கினாத்துகளுடைய தாத்துகளும், உஜூதுகளும் அது உண்டாவதிலும், நிலைத்திருப்பதிலும், அல்லாஹ்வின் பக்கம் தேவைப்பட்டவைகளாகும். இந்த நம்பிக்கைக்கு அவர்கள் 'தௌஹீது' என்றும் அது உடையவர்களை 'முவஹ்ஹிது' என்றும் கூறுகிறார்கள்.

மும்கினாத்துகளுடைய தாத்தைக்கொண்டு அவர்களுடைய நாட்டம் பிடித்தெடுக்கப்பட்ட ஹகாயிகுகள் என்றாகுமானால், இன்னும் மும்கினாத்துகளின் உஜூது கொண்டு அவர்களின் நாட்டம் கற்பனையானதும், பிரம்மையானதும், ஆதெயமானதுமாக இருக்குமானால் இந்த நம்பிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை.
இன்னும் நாங்கள் அவர்களுக்கு துஆ கேட்கிறோம்.
ونرجولهم من الله تعالي المغفرة والرضوان والنّجاة عن دركات النيزان وندعولهم ان يّجعلهم الله من اهل الذّوق والعيان والكشف والعوفان حتي يدخلوا في زمرة اهل الا نوار والاسرار والايقان
இரண்டாவது ஸூபிகள் என்று சொல்கிற ஒரு சிலரின் கொள்கையாகும்.
இவர்கள், இவர்கள் தான் உண்மையில் இருப்பவர்கள் என்றும் அவர்கள் அல்லாதவர்களை காபிர்கள் என்றும் வாதிக்கிறார்கள்.
அவர்கள் நிச்சயமாக தாத்;துகள் எண்ணிக்கையானது என்றும் உஜூது ஒன்று என்றும் நம்புகிறார்கள். ஆகவே வாஜிபுடைய தாத்தும், மும்கினுடைய தாத்தும் வேறு வேறாகும். ஆனால் இரண்டிற்கும் உஜூது ஒன்றாகும். இரண்டில் ஒன்றினுடைய உஜூது மற்றதன் ஐனுமாகும். மீண்டும் அவர்கள் வெளியில் மவ்ஜூதான பொருள் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்றும் நம்புகிறார்கள்.
தாத்து அதிகம் என்பது கொண்டு அவர்களுடைய கருத்து அல்லாஹ்வின் வெளி உஜூதிலிருந்து திஹ்னில் பிடித்தெடுக்கப்பட்ட (ஊகிக்கப்பட்ட) விளக்கங்கள்தான் என்றிருக்குமானால் அவர்களை வெறுக்கவும் மாட்டோம். அவர்களோடு பிணங்கவும் மாட்டோம்.
அவர்களின் நாட்டம் தாத்து என்பது கொண்டு வெளியில் உண்டான தாத்துதான் (உஜூது ஒன்றாய் இருப்பதுடன்) என்றிருந்தால் அதில் பல விதத்தில் பேச்சுண்டு.
அதைப் பிறகு அல்லாஹ் நாடினால் விபரிக்கிறேன். அவர்களின் நின்றும் ஆச்சரியம் என்னவென்றால் தாத்தும் உஜூதும் ஒன்று என்று சொல்லக் கூடிய தஹ்கீகானவர்களை تحقيق காபிர்களாக ஆக்குகிறார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். انّا الله راجعون
இவர்கள் (இச் சிறு கூட்டத்தினர்) இரண்டு தாத்தை தரிபடுத்துவதன் பேரில் அவர்கள் நிர்ப்பந்தம் ஆனது அஹ்காம், ஆதாறுகளை மேலான அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பது இயலாது என்ற காரணத்தினால் ஆகும்.
அவர்கள் தாத்துல் மும்கினை தீமை விளையும் இடமாக ஆக்கினார்கள்.
தாத்துல் வாஜிபை நன்மை விளையும் இடமாக ஆக்கினார்கள்.
இந்த கலப்பற்ற ஷிர்க்கை அவர்கள் தவ்ஹீது என்றும் சொல்கிறார்கள். அவர்கள் இதை ஷிர்க் என்றும் அறியவுமில்லை. கிதாபுக்கும் சுன்னாவுக்கும் மாறானார்கள் قل كلّ من عندالله என்ற அல்லாஹ்வின் சொல்லை ஈமான் கொள்ளவும் இல்லை. இன்னும் குர்ஆனிலும் ஹதீதிலும் வந்த இதன்பேரில் அறிவிக்கக் கூடிய அநேக النّص நஸ்ஸுகளுக்கும் மாறானார்கள்.
நான் அவர்களுடன் பிணங்க இல்லை என்றாலும் இந்த நம்பிக்கையின் பேரில் வரக்கூடிய ஆட்சேபணைகளையும், தீமைகளையும் நான் சொல்கிறேன்.
நிச்சயமாக, தாத்துல் மும்கின் என்பது அவர்களிடத்தில் ஆக்கப்படாததும், தன் தாத்தைக் கொண்டு தானே நிற்கின்றதும் வெளியாக்குகிறவன், உண்டாக்குகிறவன், படைக்கிறவன் பேரில் தேவையில்லாததுமாயிருக்குமானால் அந்த மும்கினுடைய தாத்துகள் பூர்வீகமானதாகவும் ஆதியிலிருந்து அந்தம் வரை தன் தாத்தைக் கொண்டு தான் நிலை நிற்கின்றதாகவும் இருக்கும். இப்போது பூர்வீகமானது எண்ணிக்கையாவது தரிபடுகிறது. ஆகவே இது தௌஹீதுக்கு மாற்றமாகும்.
இனி அவர்களிடத்தில் மும்கினாத்துக்களின் தாத்துகள்; ஆக்கப்பட்டதாக ஆகியிருக்குமானால், உண்டாக்குகிறவனுடைய உண்டாக்குதல் எனும் குணபாடு நிகழுவது மவ்ஜூதான விஷயத்திலா? அல்லது மஃதூமான விஷயத்திலா?
அந்த உண்டாக்குதல் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறான உஜூதிய்யான விஷயத்தில் நிகழுமானால் இங்கு உண்டாக்கப்படாததில் வந்த பேச்சு இதிலும் வரும். இங்கேயும் பூர்வீகம் எண்ணிக்கையாவது நிர்ப்பந்தமாகும்.
இனி அந்த உண்டாக்குதல் எனும் குணம் இல்லாத விஷயத்தில் நிகழுமானால், இல்லாத விஷயம் குணபாட்டை ஏற்றுக் கொள்ளாது. ஏனெனில் இல்லாதது எந்த ஒரு குணபாட்டையும் ஏற்றுக் கொள்ளாது. அதை அறியப்படவும் செய்யாது. 'இல்லாதது' என்ற ஹகீகத்து உள்ளதாகப் புரளுவது அசம்பாவிதம் ஆனதற்காக.
இனி நீங்கள் மும்கினுடைய தாத்துக்கள் நிலையானது  ஆனால் உண்டானது அல்ல என்று சொல்வீர்களானால்,
நாங்கள் சொல்கிறோம் (الثبوت)(الوجود) (الحصول) (الكون)அல் கௌனு, அல் ஹுஸூல், அல் உஜூது, அத்தபூத் என்பது அறபுப் பாஷையில் ஒரே அர்த்தத்துக்கு வைக்கப்பட்ட பொருளாகும். அதாவது திஹ்னிய்யான அல்லது வெளியான மர்த்தபாவில் உண்டாகுதல் என்ற அர்த்தம் கொண்டதாகும். நாங்கள் வெளியில் உண்டான உஜூதைத் தவிர அலசுவதில்லை. அக்லிலோ, திஹ்னிலோ தரிபட்ட வஸ்த்துக்களை கொண்டல்ல.
உங்களுடைய நாட்டம் மும்கினாத்துகளுடைய தாத்து தரிபடுவது கொண்டு அதாவது அக்லில், திஹ்னில், வஹ்மில் அல்லது கியாலில் ஆன தரிபடுதல் (அது சுயமாகவும், வெளியிலும் இல்லாமல்) என்றிருக்குமானால், நீங்கள் எங்கிருந்து விரண்டோடினீர்களோ அங்கேயே திரும்ப வந்து விட்டீர்கள். வெளியான தாத்து ஒன்றுதான் என்று சொன்னவர்களை காபிராக்கினீர்களே அந்த சொல்லை விட்டும் நீங்கள் திரும்புவதும், தௌபா செய்வதும் உங்கள் மீது கடமையாகும். அல்லாஹ்வுடன் நீங்கள் எந்தப் பொருளையும் இணைவைக்காதீர்கள்.
மும்கினுடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் التفصيلي)தப்ஸீலியான இல்மின் மர்தபாவில் தரிபட்டது என்று சொல்வீர்களானால், நிச்சயமாக நான் சொல்கிறேன் அல்லாஹ்வுடைய இல்மு என்பது தாத்தின் ஐனாகும். மற்ற கமாலிய்யத்தான எல்லா சிபாத்துக்களையும் போல.
இல்மிய்யான கோலங்கள் என்பது அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஆகும். இல்முடைய மர்த்தபாவில் தாத்திய்யான ஷுஊனாத்துகளைக் கொண்;டு உடையணிவது கொண்டு வெளியான அஸ்மாக்களாகும். வெளியில் அது அல்லாஹ்வின் தாத்துக்கு ஐனுமாகும். நீ நாடினால் தாத்தின் சுற்றுகள், நிலைகள் என்றும் சொல்வாய்.
(العلم) (الذات) الشأن) (الصور) (الحال)இல்மு, தாத்து, ஷஃன், ஸூர், ஹால் என்பதெல்லாம் வாஜிபான ஹக்கான உஜூதுக்குள்ள நாமங்களாகும். எண்ணிக்கையான பல வகைகளினால். இந்த உஜூது எல்லா சுற்றிலும், நிலையிலும், ஷஃனிலும் அதற்கு வேறானது அல்ல. 'லாஇலாஹ இல்லல்லாஹு.'
இல்மிய்யான கோலங்கள் தாத்துக்கு வேறானதும், புதிதானதும் ஆகும் என்று சொன்னால், நான் சொல்கிறேன் அப்போது தாத்துல் வாஜிபாகிறது புதியவைகளுக்கு இடமாக ஆகிவிடும்.ஏனெனில் இல்மு என்பது தாத்தின் ஐனாகும். அந்த அறிவு புதிதுகளுக்கு இடமாகுமானால் அந்த இல்மு தாத்துக்கு ஐனாக இருப்பதுடன் புதிதானவைகள் பூர்வீகமான தாத்துக்கு இடையில் வந்தததாகும். அப்போது புதிதானவைகள் பூர்வீக தாத்துக்களுக்கிடையில் வருவது நிர்பந்தமாகும். எந்த ஒரு விசயத்திற்கு புதிது இடையில் வருகிறதோ அந்த விசயம் புதிது ஆகும். இதிலிருந்து தாத்து புதிதானது என்பது நிர்பந்தமாகும்فسبحان الله عمّا يصفه الضا لمون
நாம் உங்களுடைய சொல்லான 'மும்கினுகளுடைய தாத்துகளாகிறது அல்லர்வுடைய இல்மில் தரிபட்ட கோலங்களாகும்' என்பதை ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் அது இல்முடைய மர்தபாவை விட்டும் வெளியேறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அல்லாஹ்வுடைய இல்மில் குறைவு ஏற்படுவதும் இல்முடைய மர்தபாவில் அறியாமை ஏற்படுவதும் அசம்பாவிதமானதற்காக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
ஆகவே அந்தக் கோலங்களாகிறது ஆதியிலிருந்து அந்தம் வரையில் இல்முடைய மர்த்தபாவில் கட்டுப்படுத்தப்பட்டதாகும். அது வெளியில் வெளியாவதில்லை. ஆகவே நாங்கள் வெளியில் அறியப்படாத விசயத்தைப் பற்றி அலசுவதில்லை.
அப்போது வெளியில் ஒரு தாத்தைத் தவிர அறியப்படவில்லை. நீ நாடினால் ஒரு உஜூதைத் தவிர அறியப்படவில்லை என்று சொல்லுவாய். இதுவே எமது நாட்டமாகும். தீமையானவைகளை மும்கினுடைய தாத்தின் பக்கம் நீங்கள் சேர்ப்பதினால் அது தீமையை விட்டும் ஒழியாது. ஏனெனில் மும்கினுடைய தாத்துகள் அது வெளியில் உஜூதுடைய வாடையைக் கூட நுகரவில்லை.  அது வெளியில் சுயமாக இல்லாமல் ஆனதுமாகும்.
செயல்களாகிறது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் சரி, உஜூதிய்யான விசயமாகும். உஜூதிய்யான விஷயம் அதமிய்யான விஷயத்திலிருந்து உண்டாகாது. உஜூதிய்யான விஷயத்தை அதமிய்யான விஷயத்தில் சேர்ப்பது மடமையும் கெட்டவைகளில்; மிகவும்  கெட்டதுமாகும். அதுவாகிறது இரண்டு இலாஹை தரிபடுத்துவது ஆகும். மஜூஸிகளின் இமாமான ஸறது, சத்து சொல்வது போல். அதாவது:
ஒரு இலாஹ் – நன்மையைப் படைக்கிறான்.
ஒரு இலாஹ் – தீமையைப் படைக்கிறான.;
நன்மையைப் படைப்பவனுக்கு (يودان)யஜ்தான் என்றும், தீமையைப் படைப்பவனுக்கு இஹ்ரமன் (اهرمن)என்றும்  சொல்லப்படும்.
என்றாலும் அல்லாஹ் குல் குல்லுன் மின் இன்தல்லாஹி قل كلّ من عنداللهஎன்று சொன்னான். அதாவது நன்மையையும், தீமையையும் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துக்கொண்டான். அவனுடைய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானின் ஷர்த்தாகவும் இதை ஆக்கினார்கள். الايمان بالقدر خيره وشرّه من الله تعااي என்று ஈமான் கொள்வது ஆகும்.
நீ நன்மையை அல்லாஹ்வின் பக்கமும், தீமையை மும்கினுடைய தாத்தின் பக்கமும் சேர்ப்பது கொண்டு, அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்து விட்டாய். மேலும் நல்லதும், கெட்டதும் இரண்டும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதுதான் என்று நம்பியவர்களை காபிராகவும் ஆக்கிவிட்டாய். சோதரா! உன் நப்ஸைத் தொட்டும் நீதி செய்வாயாக! பிடிவாதத்தை விடுவாயாக! நீ குல் குல்லுன் மின் இன்தல்லாஹிقل كلّ من عندالله என்றுமوماتشاؤن الاّان يّشاء اللهஎன்றும்,  வல்லாஹு ஹலக்கக்கும் வமா தஃலமூன் والله خلقكم وما تعملونஎன்றும் கிதாபு பூராவையும் கொண்டு ஈமான் கொள்வாயாக! கிதாபில் சிலதை ஈமான் கொண்டவர்களாகவும் சிலதை ஈமான்கொள்ளாதவர்களாகவும் இருக்கின்ற கூட்டத்தில் சேர்ந்து விடாதே! நிச்சயமாக நீ இந்த கொள்கையில் மழையை விட்டு விரண்டோடி பீலிக்கி (மடையின்) கீழ் வந்து நிற்கின்றவன் போலாகிறாய்.
ஏனெனில் உஜூது ஒன்று என்றும் மவ்ஜூது ஒன்று அல்ல என்றும் சொல்லுகிறாய். வெளியில் உண்டாக்கப்பட்ட பொருள் அல்லாஹ்வை அன்றி வேறில்லை  என்றும் சொல்கிறாய். நிச்சயமாக கௌனிய்யத்தான அணுக்களிலிருந்தும் எல்லா அணுக்களினதும் உஜூதாகிறது நிச்சயமாக அது வாஜிபான  ஹக்குடைய உஜூதாகும் என்றும் சொல்கிறாய். ஒரு விதத்தில் மும்கினாத்துகளுடைய தாத்துகள் வெளியில் வரவில்லை. அது அதனுடைய இல்மியான மர்தபாவில் தரிபட்டவைகளாகும். வெளியிலான உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை என்றும் சொல்கிறாய்.
உன்னுடைய இந்தக் கொள்கையைக் கொண்டு தரிபடுகிறது நிச்சயமாக செயல்களாகிறது அது நல்லதாகட்டும், கெட்டதாகட்டும் ஹக்கான வாஜிபான உஜூதிலிருந்தே ஒழிய உண்டாகவில்லை என்பது தரிபடுகிறது.
மும்கினுடைய தாத்துகளாகிறது உஜூpய்யான விசயம் உண்டாவதை ஏற்றுக் கொள்ளாததாகும். ஆகவே நன்மையும், தீமையும் இவை இரண்டும் உங்களுடைய கொள்கையின்படிக்கு ஹக்கான வாஜிபுல் உஜூதின் பக்கம் சேர்ந்ததாகும்.
எங்கு விரண்டோடுகிறாய். இவை இரண்டையும் அல்லாஹ்வின் தாத்தின் பக்கம் சேர்ப்பதில் சம்மதிப்பதிலே ஒழிய நீ விரண்டோடுவதில்லை.
அவர்களுடைய கொள்கையின் சுருக்கமாகிறது அவர்கள் தாத்துல் மும்கினை தாத்துல் வாஜிபுக்கு இணையாக தாத்துடைய மர்தபாவில் ஆக்குகிறார்கள். இந்த இரண்டு தாத்துகளின் பேரிலேயும் உஜூதை அதிகமாக்குவது கொண்டு தேவையற்ற பேச்சை பேசுகிறார்கள். இந்த இரண்டு தாத்தும் தாத்துடைய மர்த்தபாவில்  இந்த இரண்டு தாத்துகளும் இல்லாமல் ஆக்கப்பட்டது ஆகும்.
வாஜிபுடைய தாத்து உஜூதை தேடுவதை தரிபடுத்துவது கொண்டு மற்ற தாத்தை விட்டும் பிரிக்கும் என்ற அவர்களின் வாதமாகிறது விளங்காப்பாஷையாகும். புத்திமான்கள் அதன்பக்கம் திரும்ப மாட்டார்களே அப்படிப்பட்ட விளங்காப்பாஷையாகும்.
இத்துடனே அவர்களுடைய கொள்கையின் பேரில் வேறு பல ஆட்சேபணைகளும் உண்டாகிறது.
அந்த ஆட்சேபணைகளில் நின்றும் முதலாவதாகிறது
வெளியில் மவ்ஜூதான மும்கினில் மூன்று விஷயங்கள் ஒன்று சேர்கிறது ஆகும்.
தாத்துல் மும்கின் 2. தாத்துல் வாஜிபு 3. உஜூது.
அவர்களிடத்தில் உஜூது என்பது தாத்திய்யான தேட்டத்தைக் கொண்டு தாத்துல் வாஜிபின் பேரில் இடையில் வந்த விஷயமாகும். தாத்திய்யான விஷயம் தாத்தை விட்டும் பிரியாது. மேற்கூறப்பட்ட சேர்க்கை ஒன்று சேர்வது நிர்பந்தமாகும்.
அந்த ஆட்சேபணைகளிலிருந்தும் இரண்டாவதாகிறது:
நிச்சயமாக உஜூது என்பது வாஜிபுடைய தாத்துக்கு ஆதேயமாகவும், தாத்துல் வாஜிபு அந்த உஜூதுக்கு ஆதாரமாகும். ஆதேயப் பொருள் ஆதாரப் பொருள் இன்றி நிற்பதில்லை. ஆதாரப் பொருளின் நிலையாகிறது ஆதேயப் பொருளின் நிலையாகும். ஆதேயத்தின் தரிபடுதல் ஆதாரத்தின் தரிபடுதல் ஆகும். எப்போ எங்கு தரிபட்டாலும் சரி. ஏனெனில் அந்த ஆதேயம் நிலைப்பதற்கு ஆதாரத்தின் பேரில் தேவைப்பட்டதற்காக. இவ்விசயம் தரிபட்டால் இதிலிருந்து நிர்பந்தமாகிறது வெளியில் உண்டான மும்கினுடைய தாத்தின் உஜூது  அசம்பாவிதம் என்பது நிர்பந்தமாகிறது. காரணம் இரு ஆதாரப் பொருள்களுக்கு ஒரு ஆதேயம் இருப்பது அசம்பாவிதம் என்பதற்காகவும், முதல் ஆதாரப் பொருளை விட்டும் அந்த ஆதேயம் பிரிவது அசம்பாவிதம் என்பதற்காகவும் ஆகும்.
இன்னும் நீ சொல்வாயானால் நிச்சயமாக உஜூதாகிறது வாஜிபுடைய தாத்துடன் சேர்ந்து கொண்டு மும்கினுடைய தாத்துக்கு ஆதேயமாகும் என்று சொன்னால் மீண்டும் விலக்கப்பட்டதும் அசம்பாவிதமானதும் ஆகும். ஏனெனில் ஒரு ஆதாரம் இன்னொரு ஆதாரத்திற்கு ஆதேயமாக இருப்பதும் அது அதில் விடுதிவிடுவதும் அசம்பாவிதம் ஆனதற்காகவும் ஆகும்.
அந்த ஆட்சேபணைகளிலிருந்தும் மூன்றாவதாகிறது:
மும்கினின் தாத்தாகிறது சந்தேகமில்லாமல் இல்லாமலானதாகும். ஏன்? நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உஜூதும் அதமும் அதற்கு சரிசமமானது  என்று அறிந்திருக்கின்றீர்கள். இத்துடன் நீங்கள் சொல்லுகிறீர்கள் மும்கினாகிறது தாஜீஹ்ஹைக் (الترجيح)கொண்டே ஒழிய அறியப்பட மாட்டாது என்றும் சொல்லுகிறீர்கள். அது அதமி ஆனதினால் (مرجحا)முறஜ்ஜஹன் ஆன விசயத்தை தரிபடுத்தவும் இல்லை. இதிலிருந்து தரிபடுகிறது மும்கினுடைய தாத்து சுயமே இல்லாததாகும்.
வெளியில் உண்டான மும்கின் உடைய தாத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அந்த வெளியில் உண்டான தாத்துல் மும்கினானது உஜூது வந்து சேர்ந்ததன் பிறகு உண்டானதா? அல்லது அது இல்லாமலிருப்பதுடன் உஜூதுடன் சேர்ந்ததா? அல்லது மும்கினுடைய தாத்து அதனுடைய இல்லாமை எனும் அசலின்பேரில் நிற்க உஜூது அதனுடைய கோலத்தின் பேரில் வெளியானதா?
முதலாவதுதான் என்றால்,
ஹகீக்கத்து புரளுவது நிர்ப்பந்தமாகும். அது அசம்பாவிதமும் ஆகும்.
இரண்டாவதுதான் என்றால், இரண்டு எதிரிடைகள் சேர்வது நிர்பந்தமாகும்.
மூன்றாவதுதான் என்றால்,
அவன் வாஜிபுடைய தாத்து ஒன்று என்றும், வெளியில் வெளியானது அதனுடைய உஜூதுதான் என்றும் தீர்ப்பளிக்கிறான். இதுவே எமது நாட்டமும் ஆகும்.
ஆட்சேபணைகளில் நின்றும் நாலாவதாகிறது:
வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுமானால் சுயமே இல்லாத ஒன்றிலிருந்து உள்ள ஒரு விசயம் உண்டாகுவது நிர்பந்தமாகும். இது அசம்பாவிதமாகும்.
ஒரு இல்லாத வஸ்த்து அதனைப் போன்று இல்லாத வஸ்த்துவை உண்டாக்குவதின் பேரில் சக்தி பெறுவது நிர்பந்தமாகும்.
இனி மும்கினுடைய தாத்திலிருந்தும் வாஜிபுடைய தாத்திலிருந்தும் கூட்டாக செயல்கள் உண்டாகுமானால் உஜூதானது தீமைகளை உண்டாக்குவதில் கூட்டாகிவிட்டது. ஆகவே இது உங்கள் நம்பிக்கைக்கு பிழையானது ஆகும்.
தனித்த மும்கினுடைய தாத்தின்பேரில் தீமைகளை சேர்க்கும் விசயத்தில் அதில் அசம்பாவிதங்களும், விபரீதங்களும் உள்ளதுடன் உஜூது சேர்வது உங்களுடைய நம்பிக்கைக்கு மாற்றமாகும். ஏனெனில் கூட்டு சேர்ந்;தல் என்பது இங்கு உஜூதுக்கு உண்டாக்க இயலாது.ஆகையினாலேதான் அது தாத்துல் மும்கினை பின்பற்றுகிறது. இதனால் இந்த இரண்டு உஜூதுக்குமிடையில் வேறு பிரித்தலும் இல்லை. காரணம் நீங்கள் உஜூது ஒன்று என்றும் நம்புகிறீர்கள். இவ்வாறானால் சுயமே இல்லாத தாத்துல் மும்கினை வாஜிபுல் உஜூது தொடர்வதும் அதனால் இதன் பேரில் தீர்ப்பளிக்கப்படுவதும் ஏற்படும். ஆகவே இயலாது என்ற விசயம் சக்தியுடைய இலாஹுடைய தகுதிக்கு இலாயக்கு இல்லை.
ஆகவே வாஜிபுல் உஜூதிலிருந்து தீமையான செயல்கள் உண்டாகுமேயானால் அப்போது உஜூது தீமைகள் உண்டாவதற்கு இடமாக ஆகிவிடும். உங்களின் பேரில் உங்களில் நின்றும் உங்களைக் கொண்டு நன்மைகள் விளையும் இடத்தில் தீமையைச் சேர்ப்பது என்ற ஆபத்துக்கள் உங்களில் நிகழ்ந்து விட்டது. ஆகவே இரண்டு தாத்தை தரிபடுத்துவதில் ஒரு பலனும் இல்லை. ஷிர்க்கைத் தவிர. என்றாலும் நிச்சயமாக அல்லாஹ்வின் தாத்தாகிறது இணையை விட்டும் (الضد)'ளித்தை' விட்டும் தூய்மையாக்கப்பட்டதாகும்.
ஆட்சேபணைகளில் நின்றும் ஐந்தாவதாகிறது:
வெளியில் உண்டான மும்கினுடைய உஜூதிலிருந்து உண்டான செயல்களாகிறது தனித்த மும்கினுடைய தாத்திலிருந்து உண்டாகுமானால் சுயமே இல்லாத ஒன்றிலிருந்து உள்ள விஷயம் உண்டாவது அசம்பாவிதமாகும்.
வெளியில் உண்டான ஜெய்து என்பவன் உங்களிடத்தில் அல்லாஹ்வுக்கு வேறானவன் அல்ல. ஏனெனில் நீங்கள் உஜூது ஒன்று என்று ஈமான் கொண்டுள்ளீர்கள். அப்போது வெளியில் உண்டான ஜெய்திலிருந்து உண்டாகக் கூடிய எல்லாத் தீமைகளும்;; அல்லாஹ்விலிருந்தே உண்டாகிறது. அந்த உஜூதே ஜெய்தின் கோலத்தில் வேலை செய்கிறான். ஜெய்துடைய தாத்தாகிறது அல்லாஹ்வின் இல்மின் மர்தபாவில் கட்டுப்பட்டதாகும். அது உஜூதின் வாடையைக் கூட நுகரவில்லை. ஆகவே ஜெய்து என்பவனிலிருந்து உண்டாகக் கூடிய தீமைகளை ஜெய்தின் பக்கம் சேர்ப்பதானது உங்களுடைய நம்பிக்கையின்(ஜைது என்பவன் அல்லாஹ்வாகும்) படி அறவே இல்லாத ஜெய்தின் பக்கம் சேர்ப்பது மடமையிலும் மடமையாகும். அது கற்பனையான, பிரமையான ஆறுதல் வார்த்தை ஆகும்.
உண்மையில் நீங்கள் எதிலிருந்து விரண்டு ஓடினீர்களோ அதன் பேரில் முகம் குப்புற விழுந்து விட்டீர்கள். வாஜிபுல் உஜூதான தாத்தின் பக்கம் தீமையை சேர்ப்பதை விட்டும் ஈடேற்றம் பெறவும் இல்லை.
நுணுக்கமான பார்வையும் சஹீஹான கஷ்பும் உடையவர்களின் கொள்கையாவது:
தாத் என்பது உஜூதுக்கு ஐனாகும். உஜூது என்பது தாத்துக்கு ஐனாகும். வெளியில் ஒரு தாத்தைத் தவிர வேறில்லை என்றும் சொல்லலாம். ஆகவே ஆலமாகிறது அதன் எல்லாக் கௌனுகளைக் கொண்டும் ஹக்கான உஜூதுடைய ஷுஊனாத்துகளும் சுற்றுகளும் ஆகும்.
வெளியில் மவ்ஜூதான பொருள்கள் அல்லாஹ்வின் தாத்துக்கு வேறானது இல்லை. அல்லது தாத்துகளின் ஷுஊனாத்துகளுக்கு வேறானது இல்லை. ஷுஊனாத்துக்கள் மட்டிலடங்காதது ஆகும். அதனுடைய சுற்றுகளும் எண்ணிக்கையற்றதாகும். அந்த உஜூது ஒவ்வொரு கணமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. கௌனுகளுடைய எல்லா அணுக்களும் ஆதியிலிருந்து அந்தம் வரை  ஷுஊனாத் என்னும் உடையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அவனது வெளிப்பாட்டில் மடங்கி வருதல் இல்லை. அவன் ஒரு ஷஃன்(காரியத்தின்) உடைய உடையில் இரண்டு தடவை வெளியாவதில்லை. வானம் பூமியில் உள்ளவர்கள் எல்லோரும் அவர்களுடைய தேட்டங்களை எல்லாக் கணமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவன் எல்லாக் கணமும் தேட்டங்களை கொடுத்துக் கொண்டும் நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறான்.
 
ஒவ்வொரு அணுவின் பேரிலும் சொந்தமான ஒரு கோலத்தைக் கொண்டு வெளியாகிறான். அந்த சொந்தமான கோலத்தைக் கொண்டு வேறு எந்த அணுவிலும் ஒரு காலமும் வெளியாக மாட்டான். அவன் எல்லா நேரத்திலும்  எல்லா கணப் பொழுதும் ஒவ்வொரு அணுவின் பக்கம் சேர்ப்பது கொண்டு அவனது காரியத்தில் (هو في شأن)இருக்கிறான்.
வெளிப்பாட்டில் இந்த அதிகத்துடனேயே அவன் அதிகமாகவில்லை, எண்ணிக்கையாகவில்லை, பேதகமாகவில்லை. அவன் எப்பொழுதும் முன்னுள்ள மாதிரியே இருக்கிறான். அவன் பன்மையுடன் ஒருவனானவனும்;, ஒருமையுடன் பன்மையானவனும்; தாத்தில் ஒருவனானவனும் ஆவான். நீ நாடினால் உஜூதில் ஒருவனானவனும் சுற்றுகளிலும் ஷுஊனாத்துகளிலும் பலதானவனும் ஆவான்.
இத்துடனே ஒருமை என்பது பன்மையின் ஐனாகும்.; பன்மை என்பது ஒருமையின் ஐனாகும். அவனின் நிலைகளாகிறது அவனின் தாத்தின் ஐனாகும். அவனின் தாத்தாகிறது அவனது நிலைகளின் ஐனாகும். அவன் மட்டிலடங்கா அநேக ஷுஊன்கள் உடையவன் ஆவான். அத்துடன் அவன் அவனது ஷுஊனாத்துக்களின் ஐனாகவும் சுற்றுகளின் ஐனாகவும் (தனி நிலையிலும் கூட்டான நிலையிலும்); ஆகிறான். இந்த விளக்கத்தைக் கொண்டு அவனது ஷுஊனாத்துகளில் உள்ள ஒவ்வொரு தனிப்பிரதியைக் கொண்டும் ஐனாக இருப்பதை நாடுகிறேன்.
இதுபோல்தான் அவனது ஷுஊனாத்துக்களை(காரியங்களை)க் கொண்டு மொத்தமாக ஐனாகிறான்(தானாகிறான்). தனித்த நிலையிலும் சேர்ந்த நிலையிலும் அவன் எல்லாவற்றினதும் ஐனாகும். எல்லாம் அவனது ஐனுமாகும்.
ஆகவே தாத்தாகிறது ஒரு தாத்தாகும். ஷுஊனாத்துகள் பலதாகும். கடலின் தாத்து ஒன்றானதாகவும், அதன் அலைகள் என்னும் சுற்றுகள் பலதானதும் போல, கடலின் தாத்தாகிறது தனித்தனி எல்லா அலைகளினதும் ஐனாகும். இதுபோலவே மொத்தமாக எல்லா அலைகளினதும் ஐனுமாகும். ஐனு ஒன்றானதாகவும், சுற்றுகள் அநேகமானதாகவும் இருக்கும். لا موخود الاّالله'லா மவ்ஜூத இல்லல்லாஹ்'. இதுதான் ஹகீகிய்யான தௌஹீதுத் தாத்தியாகும்.
தௌஹீதுஸ் ஸிபாத்து
توحيد الصّفات
 
அறிந்து கொள்! என் சோதரா! நிச்சயமாக விளக்கத்தால் எதன்பக்கம் ஸிபத்துகள் சேர்க்கப்படுமோ அதற்கு தாத்து என்று பெயர் வைப்பது ஸூபியாக்களின் வழமையாகும். உண்மையில் அந்த ஸிபாத்துகள் தாத்துக்கு ஐனாக இருந்தாலும் சரி.
ஸிபாத்து என்பது தாத்துக்கு ஆதேயமாகும். தாத்து என்பது அதற்கு ஆதாரப் பொருளாகும். ஒரு இடத்திலும் ஆதேயம் அதன் ஆதாரப் பொருளின் உஜூதைக் கொண்டே ஒழிய அறியப்பட மாட்டாது.
அந்த ஆதேயம் நிலைப்பதற்கு அந்த ஆதாரம் தேவையானதற்காக. هيوليஹையூலா(மூலப்பொருள்)வுக்கு ஆதேயமான சடப்பொருளின் கோலத்தைப் போல், ஜிஸ்மிய்யான கோலத்திற்கு ஆதேயமான நௌயிய்யாவின் கோலம் போல. இந்த ஹையூலாவைக் கொண்டே ஒழிய ஜிஸ்மிய்யான கோலம் வெளியில் அறியப்படாது.
இதுபோன்றுதான் نوعيةநௌயிய்யாவின் கோலங்களும جسميةஜிஸ்மிய்யாவின் கோலத்துடனே ஒழிய அது வெளியில் அறியப்படாது. ஜிஸ்மிய்யா எனும் கோலம் நௌயிய்யா என்னும் கோலத்தை விட்டும் பிரிந்திருப்பது அசம்பாவிதமாகும்.
இதுபோலவே சிபாத்துகள் தாத்தை விட்டும் பிரிந்திருப்பது அசம்பாவிதமாகும். எப்பொழுதாவது, எங்கேயாவது சிபாத்தைப் பெற்றுக் கொண்டால் தாத்தையும் பெற்றுக் கொள்வாய். ஏனெனில் அந்த சிபாத்து தாத்தை விட்டும் பிரிந்திருப்பது அசம்பாவிதம் ஆகும்.
ஹக்கான ஒருவனான வாஜிபுடைய தாத்து உன்னிடத்தில் ஒன்றாய் இருப்பது ஸ்திரப்பட்ட போது (அந்த தாத்து பல நிலைகளும் சுற்றுகளும் உடைய வேளையில்) அந்த சுற்றுகளுக்கும் நிலைகளுக்கும் ஸிபாத்து என்று பெயர் சொல்லப்படும். எந்த ஒரு சிபாத்தையாவது எந்த ஒரு இடத்திலாயினும் நீ பெற்றுக் கொண்டால் அது அவனுடைய சிபாத்தாகும். நீ நாடினால் அது அவனுடைய நிலை அல்லது ஷஃனு அல்லது சுற்று என்று சொல்லுவாய்.
நிச்சயமாக சிபாத்தாகிறது, மௌசூபைக் கொண்டே ஒழிய நிற்காது. அந்த மௌசூபாகிறது தாத்தாகும். இந்த இடத்தில் தாத்தோ, (ماهية)மாஹியத்தோ, ஹுவிய்யத்தோ(هوية), அன்னியத்தோ இல்லை. ஹக்கான ஒருவனுடைய தாத்தைத் தவிர.
இதிலிருந்து ஆலத்திலுள்ள எல்லா சுற்றுகளும் நிலைகளும் ஷஃனுகளும், நஃதுகளும் அவனின் சிபத்தாகும், அவனின் சுற்றாகும், அவனின் நிலையாகும், அவனின் ஷஃனாகும். அவனின் நஃது ஆகும் என்று ஸ்திரப்பட்டுவிட்டது. இவைகள் அனைத்தும் அவனுக்குள்ளதே ஆகும் என்றாலும் அவன் இவை அனைத்துமாகும். 'லாயிலாஹ இல்லல்லாஹு'.
எங்கேயாவது ஒரு உஜூதைப் பெற்றுக் கொண்டால் அது அவனுடைய உஜூதாகும். நீ நாடினால் அவனுடைய தாத்தாகும் என்று சொல்லுவாய்.
ஜீவனை الحياة)எங்கேயாவது பெற்றுக் கொண்டால் அந்த ஜீவன் அல்லாஹ்வின் ஜீவனாகும்.
இதுபோலவே, இல்மு, குத்ரத்து, இராதத்து, ஸம்ஊ, பஸறு, கலாமு என்பனவும் அவனுடையதாகும். மேலான அல்லாஹுத்தஆலா சொன்னதுபோல انّه هو السميع البصير'இன்னஹு ஸமீஉல் பஸீர்' என்றும்,وماتشاؤ الاّ ان يشاءالله ربّ العا لمين والحمد لله ربّالعامين' என்றும் சொன்னதுபோல்,
இந்த 7 ஸிபாத்துகளாகிறது 'உம்மஹாத்துல் சிபாத்து' (امهات الصّفات)என்னும் சிபாத்துகளாகும். ஆகவே இதிலிருந்து பிறந்துண்டாகும் சிபத்துகளாகிறது மீண்டும் அவைகளும் அவனுடைய சிபத்துகளாகும். கொடை(الكرم), அள்ளிக் கொடுத்தல(الجود);, அருள  (الرّحمة)கோபம்(الغضب) , நோவினை செய்தல்(الانتقام) , அடக்கியாளுதல்(القهار) , வழி கெடுத்தல்الاضلال) , வழிகாட்டுதல்الهداية) , தாழ்மைபடுத்துதல் (الاذلال), உயர்த்துதல் (الاعزاز)என்ற முடிவில்லா சிபத்துகளும் அவனுடைய தாகும்.
சிபத்துக்களை ஒன்றாக்குவதை தேடக்கூடியவனே, உன் மீது அல்லாஹ் அல்லாதவன் பேரில் ஒரு சிபத்தையும் சேர்க்காமல் இருப்பது கடமை. நீ அவன் எல்லா சிபத்துகள் என்னும் கண்ணாடியில் கண்ணாடி கடமையாகும்.
அவனுக்கு நீ தாழ்மைபடுவாய். உன்னுடைய நப்ஸில் ஒரு சிபத்தையும், நஃதையும் ஸ்திரப்படுத்திக் காணாதிருப்பது வரையில் நீ தாழ்மைப்படுவாய். தாத்துடைய தவ்ஹீதுடைய மர்த்தபாவில் அவனுக்கு நேராக உன் தாத்தைக் காணாமல் இருந்தது போல இதிலேயும் இருப்பது கடமையாகும். அப்போது நீ சிபத்தில் பனாவானவனாக ஆகிவிடுவாய்.

رزقنا الله وايّاك بجاه حبيبه عليه افضل التحيات وازكي التّسليمات
தௌஹீதுல் அப்ஆல்
توحيد الافعال
 
சோதரா! நீ அறிந்து கொள், நிச்சயமாக ஒரு உசும்புதல் ஆகிறது அதாவது அதைக் கொண்டு கௌனிய்யான அஸ்மாக்கள் உள்ளிருந்து வெளிப்படுமே அந்த உசும்புதலாகிறது 'செயல்' என்று சொல்லப்படும்.
அந்த செயலைக்கொண்டு புறப்படக்கூடிய காரியத்துக்கு குணபாடு என்று சொல்லப்படும்.
உதாரணம்:
நீ ஒரு சொல்லைச் சொல்லுதல்.
அல்லது
ஒரு மனிதனின் முகத்தில் அடித்தல்.
அந்த சொல்ல உன்னுடைய கல்பும், நாவும் உசும்பிhனலே ஒழிய வெளியில் வராது. அத்துடன் அந்த சொல்லுடன் வேறு உறுப்புகள் உசும்பினாலும் சரி அல்லது வேறொரு சக்தி உசும்பினாலும் சரி என்றாலும் உனக்கு இந்த கல்பும் நாவும் உசும்புதல் என்ற உதாரணத்தைக் கொண்டு இந்த விளக்கத்தை போதுமையாக்கிக் கொண்டேன்.
இது போன்று அடியின் கோலம் உன்னுடைய கல்பும், கையும் உசும்பினாலே ஒழிய அந்த அடியின் கோலம் வெளியில் வராது. இந்த உசும்புதலுக்கு செயல் என்று சொல்லப்படும். அந்த சொல்லும், அந்த அடியும்( மனிதன் முகத்தில் விழுந்த அடி) குணபாடு என்று சொல்லப்படும். இந்த விசயத்தை நீ அறிந்து கொண்டால், நீஅறிந்து கொள், நிச்சயமாக நீ அல்லாஹ்வுடைய தாத்துக்கு வேறான கௌனிய்யான எல்லா தாத்துக்களையும், அல்லாஹ்வுடைய பண்புகளுக்கு வேறான கௌனிய்யான எல்லாப் பண்புகளையும் நீ நீக்கி விடுவாயானால், இந்த உசும்புதலை நீ யார் பக்கம் சேர்க்கப் போகிறாய். எனவே உசுப்புகிறவன் அவன்தான் (அல்லாஹ்தான்). அந்த உசும்புதல் அவனிலிருந்து, அவனுக்காக, அவனைக் கொண்டுதான் உண்டாகிறது. அவன் அல்லாத்தது இங்கு இல்லை.
செயலில் நாஸ்தியை தேடுபவனே, உன் பேரில் ஒவ்வொரு நேரத்திலும், கணத்திலும்     لاحول ولاقوّة الاّ باالله  العليّ العضيم  என்பதன் பொருளை சிந்திப்பதும், கவனிப்பதும் உன்மீது கடமையாகும். எதுவரை எனில், குளிப்பாட்டுகிறவன் முன்னிலையில் மைய்யத்தைப் போல் ஆகிறவரை. ஆகவே அல்லாஹ்வின் களாவும், கத்ரும் தான் உன்னை ஆட்கிறதும், ஒடுக்குகிறதும் ஆகும்.
உன்னில், உன்னிலிருந்து, உனக்காக ஒரு உசும்புதலையும் அதாவது அது சந்தோசத்தைத் தரும் உசும்புதலாக இருந்தாலும் சரி, கவலையைத் தரும் உசும்புதலாக இருந்தாலும் சரி பெற்றுக் கொள்ள மாட்டாய்.
உன்னிடத்தில் தடுப்பதும், கொடுப்பதும், நிறைவேற்றுவதும், வெறுப்பதும், புகழுவதும், இகழுவதும் சமமானதாகும்.
கௌனீயான வஸ்த்துக்களில் நின்றும் உள்ள எல்லா அணுக்களின் எல்லா உசும்புதலையும் மன்னான் ஆன ஹக்கான ஒருவனான தாத்தின் ஜமாலைப் பார்ப்பதற்கு கண்ணாடியாக நீ ஆக்குகிறாய், ஏனெனில் ஒரு கூட்டத்தில் நீ புகுவதற்காக. அந்தக் கூட்டம் நிரந்தர நோன்புடையவர்கள் ஆகும்.
றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பாளியின் விசயத்தில் சொன்னது போல. அந்த நோன்பாளியை எவனாவது ஏசினால், அல்லது சண்டைக்குப் போனால் அந்த நோன்பாளி சொல்லட்டும், 'நான் நிச்சயமாக நோன்பாளியாக இருக்கிறேன்' என்று இரு விடுத்தம் சொல்லட்டும் என்று சொன்னது போல.
முதல்விடுத்தம் நோன்பாளி என்று சொன்னதன் கருத்தாவது ஷரீஆவின் நோன்பாகும். அந்த நோன்பாகிறது நோன்பை முறிக்கக் கூடிய விசயங்களைவிட்டும் தடுத்துக் கொள்வதாகும்.
இரண்டாம் விடுத்தம் நோன்பாளி என்று சொன்னதன் கருத்து அது தரீகத்தின் நோன்பு என்பது கொண்டாகும். அந்த நோன்பாகிறது உசும்புதலை விட்டும் நப்ஸை தடுத்துக் கொள்வதாகும். எப்போதெனில், உன்னுடைய வழக்கத்திற்கு பொருந்தாத விசயங்கள் உண்டாகுமிடத்திலும், பொருந்தும் விசயங்கள் உண்டாகும் இடத்திலும் உன் நப்ஸை உசும்புதலை விட்டும் தடுத்துக் கொள்வதாகும்.
இது நிரந்தர நோன்பாகும். ஆதியான சுப்ஹிலிருந்து கடைசி எனும் இரவு வரை அந்த நோன்பை திறப்பதும் இல்லை.
அப்படி எவனாவது அந்த நோன்பை முறித்துக் கொள்வானேயானால் நிரந்தர நோன்பாளிகள் என்னும் கூட்டத்திலிருந்து புறப்பட்டு விடுவான்.
அல்லாஹுத்தஆலா இந்த நிரந்தர நோன்பாளியின் பதவியை எமக்கும் உமக்கும் தந்தருள்வானாக.
بجاه سيد المرسلين عليه صلوة من هو اكرم الا كرمين وغيا ث المستغيثين وارحم الرّحمين

தௌஹீதுல் அஸ்மாஉ.
توحيد الا سماء
 
அறிந்து கொள்!
இஸ்ம் என்பது இரண்டு வகை.
 பெயர் வைக்கப்பட்டதை அறிவிக்கிறதற்காக வைக்கப்பட்ட பெயர்.
பெயர் வைக்கப்பட்ட பொருள்.
உண்மையில் முதலாவது சொல்லிலான பெயர், உரிய பொருளை அறிவிக்கிறதற்காக மொழியப்பட்ட பெயர்.
இரண்டாவது பொருளின் கோலம், அதாவது பொருளின் உள்ரங்கத்தில் அதன் பரிபூரணத்தைக் காட்டக் கூடிய கண்ணாடி.
உதாரணம் மோதிரத்தின் கோலம் போன்று.
தங்கத்தின் உள்ளில் உள்ள பரிபூரணத்தை காட்டும் கண்ணாடியாகும். அதன் உள்ரங்கம் தங்கமாகும்.இது போன்றே தங்கத்தின் உள்ளே மறைந்திருக்கும் ஒவ்வொன்றும் இவ்வாறுதான். அதாவது அவை தங்கத்தின் கமாலியத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொந்தமான கோலம் உண்டு. ஒவ்வொரு தனிப்பட்ட கோலத்திற்கும் அதற்குரிய பெயர் உண்டு.(தங்கத்தின் உள்ளில் மறைந்த கமாலியத்துக்களான கோலம் போல) காப்பு, காதணி போன்றவைகளும், மற்றவைகளும் போல.
மோதிரம் (خاتم) எனும் மொழிதலினாலான பெயரானது அதாவது  (خ ا ت م)ஆல் சேர்க்கப்பட்டது. இந்தப் பெயரானது மோதிரம் எனும் கோலத்தின் பேரில் அறிவிக்கிறதற்காக வைக்கப்பட்ட பெயர் ஆகும்.
இப்போது நீ அறிந்து கொண்டாய். வெளியில் வந்த மோதிரம் எனும் கோலம் ஆகிறது ஒரு வகையான இஸ்ம் ஆகும் என்று. அதாவது பெயர்  வைக்கப்பட்ட பொருளுடைய ஐனே ஆகும். பெயரிடப்பட்ட பெயராகிறது இஸ்முக்கு இஸ்ம் ஆகும். பெயர் வைக்கப்பட்ட பொருள் ஐனுல் முஸம்மாவாகும். இதுதான் மோதிரம் என்னும் கோலமுமாகும். அதாவது தங்கத்தின் உள் மறைந்திருக்கும் பூரணத்துவத்தைக் காட்டும் முஸம்மா ஆகும்.
மோதிரம் என்னும் கோலம் தங்கத்தினுள் மறைந்திருந்தது. தங்கம் எப்போது மோதிரம் எனும் கோலத்தின் பெயரில் வெளியானதோ அப்போது அது உள்ளிலிருந்து வெளியாகிவிட்டது. ஆனால் இங்கு தங்கத்துள் மோதிர வடிவில் அமைந்திருந்து பின்னர் அது அதே மாதிரி வெளியானது என்ற கருத்து இங்கு இடம்பாடாகாது. என்றாலும் தங்கம் மோதிரம் எனும் கோலத்தில் வெளியாயிற்று என்ற அர்த்தத்திற்காகும்.
உண்மையில் அம்மோதிரம் எனும் கோலம் தங்கத்தின் நிலையிலிருந்தும் ஒரு நிலையாகும். சுற்றிலிருந்தும் ஒரு சுற்றாகும். உடையில் இருந்தும் ஒரு உடையாகும்.
என்றாலும் மோதிரம் தங்கத்தின் தாத்தே ஆகும். மோதிரம் எனும் கோலத்திற்கு வேறு தாத்தோ, அன்னியத்தோ, ஹுவிய்யத்தோ தங்கத்தின் உள்ளிலோ வெளியிலோ இல்லை. ஆனால் இவை எமது கற்பனையிலும், எண்ணத்திலும், பேதபுத்தியிலும் மட்டும்தான் இவ்வாறு தென்படுகிறது.
தங்கத்தின் அறிவில் இவ்வாறான கோலம் கோலமாக்கப்படாமலிருந்தது. தங்கத்தின் அறிவில் உள்ள அந்த கோலம் வெளிவரவும் செய்யாது. அதாவது இல்முடைய மர்த்தபாவில் உள்ள மற்றைய  எண்ணத்திலான மவ்ஜூதாத்துக்களின் கோலங்களைப் போன்று வெளியில் ஒரு காலமும் இல்மின் மர்தபாவில் இருந்து வெளி வராது.
இங்கு விளங்கி விட்டது. அதாவது மோதிரத்தின் கோலத்திற்கு தனியான தாத்தும் இல்லை, அன்னிய்யத்துமில்லை, ஹுவிய்யத்துமில்லை. இது தங்கத்தின் வெளியிலும் இல்லை, உள்ளிலும் இல்லை. என்றாலும் தங்கமானது பல சுற்றுகளுடையதாகும். ஒவ்வொரு சுற்றிலும் தனிப்பட்ட கோலம் உண்டு. இந்த தனிப்பட்ட ஒவ்வொரு கோலத்திற்கும் அதற்கென தனிப்பட்ட பெயரும் உண்டு.
தங்கம் அந்த குறிப்பான சுற்றைக் கொண்டு வெளியாகும்போது அதாவது பூரணமான ஒரு கோலத்தின் பெயரில் அது உடை அணியும் போது அதற்கென்ற பெயர் கூறப்படும். என்ன பெயர் கூறினாலும் அக்கோலம் தாத்தின் ஐனே ஆகும்.
மொழிதலினாலான மோதிரம் எனும் பெயராகிறது ஒரு பெயரின் பேரில் அறிவிக்கிறது. அப்பெயரானது தங்கத்தின் உள்ளில் பூரணமான மோதிரம் எனும் கோலத்துக்குரிய பெயர் ஆகும்.
ஒரு பொருளின் உள்ளில் உள்ள பூரணத்துவமாகிறது, அப்பொருளின் தாத்தே அன்றி வேறில்லை என்பது இங்கு விளங்குகின்றது. சொல்லிலான மோதிரம் எனும் பெயராகிறது தங்கம் மோதிரம் எனும் கோலத்தில் வெளியான கோலத்திற்கு பெயர் ஆகும். இவ்வாறு நீ இவற்றை அறிந்து கொண்டால் நீ அறி, அல்லாஹ்வுக்கு அவனின் தாத்தில் மறைந்த ஷுஊனுகள் பல உண்டு. இந்த ஷுஊனுகளுக்கு அல்லாஹ்வின் தாத்தில் மறைந்திருக்கும்போது அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறு உஜூதும் இல்லை. இது போன்று அந்த ஷுஊனாத்துக்களை அவனின் உஜூதைக் கொண்டே ஒழிய வெளியில் அறியப்படவும் மாட்டாது.
அந்த ஷுஊனாத்துக்கள் அல்லாஹ்வின் உஜூதைத் தவிர வேறு தனி உஜூதுகளின் வாடையைக் கூட எந்த இடத்திலும் நுகரவும் இல்லை. அவைகளுக்கிடையில் வேறு என்ற பிரிவும் இல்லை. ஆனால் இல்மின் மர்தபாவில் மட்டுமே வேறு பிரிகிறதே தவிர தத்தமக்குள் வேறு பிரியவில்லை.
மர்த்தபத்துல் இல்மிய்யா ஆகிறது அல்லாஹ்வின் தாத்தின் நிலைகளில் ஒரு நிலை ஆகும். தாத்திய்யான ஷுஊனாத்துக்கள் அதன் கோலங்களைக் கொண்டு இல்ம் உடைய மர்த்தபாவில் தத்தமக்குள் வேறு பிரிந்திருக்கின்றது. ஆனால் அறிவு எனும் மர்தபாவில் ஒவ்வொரு கோலமும் வேறு வேறாக ஆக்கப்பட்டுள்ளது என்ற அர்த்தத்திற்காக அல்ல.
இல்மியான கோலங்கள் எல்லாம் சுத்த இல்லாமை ஆகும். அது தனித்த ஒரு பொருளுமல்ல. பெயர் வந்ததெல்லாம் இரவலாகவேதான்.
இங்கு ஐந்து விசயங்கள் உண்டு.
தாத்திய்யான ஷுஊன்கள்
இல்மிய்யான கோலங்கள்
பெயர்கள் (இலாஹியானாலும் சரி கௌனிய்யானாலும் சரி)
வெளிரங்கத்தில் உண்டான பொருள்.
எண்ணத்தில் உண்டான பொருள(الموجود الذّهني);.
இந்த ஐந்து விஷயங்களையும் உதாரணம் கொண்டு விளக்கப் போகிறேன்.
(உதாரணமாக) ஒரு துணியை சட்டை, ஜுப்பா, சிறுவால்…. போன்ற எண்ணிக்கையில் அடங்காத வழமையான உடைகளை வெட்டுவதற்காக டைலரின் முன்னால் போடுகிறாய்(என வைத்துக் கொள்). மேற்கூறப்பட்ட உடைகளின் கோலங்கள் துணியின் ஷுஊனாத்துகளாகும். அந்த உடைகள் தம்மில் வேறுபாடானதும் அல்ல. துணியை விட்டும் வேறுபட்டதும் அல்ல. இவை ஒவ்வொன்றும் மற்றது தானே ஆகும். அவை துணியுமாகும். உடைகளுக்கு தனிப்பட்ட உஜூது கிடையாது- அதாவது துணியின் தாத்தைத் தவிர. அப்போது,
தொப்பி -சிறுவால்தான்,
சிறுவால் -தலைப்பாகைதான்
தலைப்பாகை- மேலங்கிதான்
துணியில் இவைகள் மறைந்துள்ள நேரத்தில் ஒன்று மற்றது தானே ஆகும். இதுபோன்று தொப்பியின் தாத்து, சிறுவாலின் தாத்து, தலைப்பாகையின் தாத்து அனைத்தும் துணியின் தாத்தும், அதன் உஜூதுமாகும். ஆகவே இது எல்லாம் சேர்ந்து ஒரே உஜூதுதான். அவை வெட்டுவதற்கு முன்னால் எண்ணிக்கையாகவில்லை.
தையல்காரன் அந்த உடைகளை வெட்டினதற்குப் பிறகு அவனுக்கு உண்டாகின்ற அந்த சொந்தமான கோலத்தைக் கொண்டு அவைகளுக்கிடையில் வேறு பிரிந்ததாக ஆக்கினான்.
ஒரு சொந்தமான கோலத்தில் வெட்டப்பட்ட உடைகளானது வெளியில் மவ்ஜூதான விசயமாகும்.
வெளியில் வந்த இந்த கோலங்கள் துணியை விட்டும் வேறானது அல்ல. இவைகளுக்கு அந்த துணியின் தாத்தைத் தவிர வேறு தாத்தும் இல்லை, வேறு உஜூதும் இல்லை என்றாலும் துணியானது இந்த வெட்டப்பட்ட கோலத்தின் பேரில் வெளியாயிற்று.
அந்த துணி உண்மையில் அந்த வெட்டப்பட்ட உடையில் ஐனே ஆகும். ஆனால் புத்தியில் (விளக்கத்தில்) அதற்கு வேறானதாக ஆகிவிட்டது. என்றாலும் தையல்காரன் அவனது அறிவில் தனிப்பட்ட கோலத்திற்கு அமைவாகவே அன்றி அவன் அவ்வுடைகளை வெட்டவில்லை. இந்த வெளியில் வந்த கோலங்களுக்கு அவனின் இல்மில் தரிபட்ட கோலத்தை ஆதிமூலாதரமாக்கினான். இந்த இல்மில் தரிபட்ட கோலம் வெளியில் தனிப்பட்ட கோலத்துக்கு ஐன் அல்ல. இன்னும் தாத்திய்யான ஷுஊனாத்துக்களின் ஐனுக்கு ஐனுமல்ல. இன்னும் இலாஹிய்யான அல்லது கௌனிய்யான அஸ்மாக்களுக்கும் ஐனுமல்ல. இன்னும் மனதில் வரக்கூடிய கோலத்துக்கும் ஐனுமல்ல. பெரும்பாலும் அது தன்னுடைய தாத்தைக் கொண்டும் மாத்தாவைக் கொண்டும் மேற்கூறிய எல்லா வஸ்த்துக்களுக்கும் வேறானது ஆகும். ஏனெனில் இது தனித்த இல்லாமை ஆகும். இதை உண்டு என்று பேசப்பட்டதெல்லாம் விளக்குவதற்கும், விளங்குவதற்கும் மட்டுமே ஆகும். ஹகீகத்தில் இது தனித்த இல்லாமை ஆகும். என்றாலும் அதை அறிவிக்கின்ற நோக்கத்திற்காக, அதை அல்லாஹ் அறிகிறான். அதைப்பற்றி அறிவிக்கிறான். இதற்கு தரிப்பட்ட மும்கினாத்துகள் என்று பெயர் வைக்கப்பட்டது.
மற்ற நான்கு விசயங்களையும் விட தரிபடுவதாலயும், மாத்தாவாலயும் எந்த இல்மியான கோலம், விளங்குவதற்கு சக்தியில் குறைந்தது ஆகும். அதற்கு எந்தவொரு இடத்திலும் அடையாளம் இல்லை.
இந்த விசயங்களை பூரணமாக சிந்தனையால் விளங்கியதன் பின்னால் அக்லில் அடையாளமிடப்பட்ட கோலங்களாகிறது, அக்ல் உடைய மர்த்தபாவில் அது அறியப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை. அந்த அக்லில் இது தரிபட்டும் இருக்கிறது. அதாவது அக்லில் தரி;பட்டிருக்கிற (مادّة)மாத்தாவைக் கொண்டும் அதன் உஜூதைக் கொண்டும் அது தரிபட்டிருக்கின்றது.
அக்லின் உஜூதைக் கொண்டு அக்லில் உண்டாக்கப்பட்ட அறியப்பட்ட கோலங்களாகிறது, உண்மையில் இல்லாமலான இல்மியான மர்த்தபாவில் தரிபட்ட கோலங்களுக்கு வேறானதாகும்.
அக்லுடைய மர்த்தபாவில் அக்லுடைய உஜூதைக் கொண்டு உண்டாக்கப்பட்ட அக்லியான சூறத்துகளுக்கு இஸ்மு என்று பெயர் வைக்கப்பட்டது. இது கௌனிய்யான அல்லது இலாஹிய்யான நாமங்களாயிருந்தாலும் சரி. பின்னர் இதை அல்லாஹ் நாடினால் விளங்குவாய்.
ஐந்தாம் விசயமாகிறது (மவ்ஜூது திஹ்னி) எண்ணத்தில் உண்டாக்கப்பட்ட விசயம் ஆகும். இது திஹ்னு எனும் கண்ணாடியில் பதிந்த வெளிக் கோலத்தின் எதிர் உருவே அன்றி வேறில்லை. வெளியில் மவ்ஜூதுகள் உண்டான பிறகு,
அந்த வெளியில் வந்த மவ்ஜூதுகள் வெளியில் வந்த வெட்டப்பட்ட உடைகளாகும். இந்த திஹ்னியான உஜூதாகிறது வெளியில் தோன்றிய விசயத்தின் உஜூதைத் தொடர்ந்ததாகும். இது வெளியில் உண்டாக்கப்பட்டவைகளில் இருந்து பிடித்தெடுக்கப்பட்ட விசயமாகும்.
வெளியில் உண்டாக்கப்பட்ட விசயமாகிறது வெளியில் வெட்டப்பட்ட உடைகளாகம்.இந்த ஐந்து விசயங்களையும் நீ அறிவாயானால்(அதன் ஹகீகத்தையும், இடத்தையும், அது உண்டாகும் ஹகீகத்தையும், அது நிலைத்திருப்பதன் ஹகீகத்தையும்) நீ அறிவாயானால், நிச்சயமாக நீ அறி சகோதரா! நிச்சயமாக அஃயானு தாபிதாவாகிறது (اعيان الثا بتة) அல்லாஹ்வுடைய ஆதி இல்மைக் கொண்டு அறியப்பட்ட  கோலங்கள் ஆகும். அது இல்மின் சமூகத்தில் அடையாளமாக்கப்படவுமில்லை. அந்த இல்மில் அது விடுதிவிடவுமில்லை, எதுபோலவெனில் வெட்டுவதற்கு முன் அறியப்பட்ட உடைகளின் கோலங்களைப் போன்று.
இன்னும் ஆழ்ந்த சிந்தனையின் பிறகு அக்லில் தரிபடுவதற்கு முன்னாலேயும் அல்லது வெளியில் வெட்டப்பட்டு வந்து எண்ணம் பிடித்தெடுப்பதற்கு முன்னாலேயும் உண்டான கோலம் ஆகும்.
அஃயானு தாபிதா என்பது கொண்டு அல்லாஹ் அறிந்த அறிவாகிறது பரிசுத்தமாக்கப்பட்ட அவனது தாத்தைக் கொண்டு அவனது ஷுஊனாத்துக்களின் தாத்தை அறிந்த அறிவே ஆகும்.
அஃயானு தாபிதாவாகிறது உஜூதுடைய வாடையைக் கூட நுகரவே இல்லை. அதற்கு ஒரு நிலை இல்லை. அதாவது தாத்தைக் கொண்ட அல்லது அது அல்லாத்ததைக் கொண்ட நிலையோ இல்லை. வெளிரங்கத்தில் இது இல்லாமலானதாகும்.
ஹகீக்கிய்யான உஜூதை அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் செய்யாது. அது தனித்து வெளியாகவும் செய்யாது.
உதாரணமாக வெளியில் உண்டாக்கப்பட்ட கோலத்திலி;ருந்து பிடித்தெடுக்கப்ட்ட எண்ணத்தில் உண்டான கோலம் போன்று.
திஹ்னியான கோலங்களாகிறது திஹ்னி எனும் மாத்தாவைக் கொண்டு திஹ்னில் நிலைத்திருக்கிறது.
மேற்கூறப்பட்ட அஃயாது தாபிதாவாகிறது அது எந்தவொரு மாத்தாவைக் கொண்டும் நிலையற்றது. அது தனித்த அறியப்பட்ட பொருள் மட்டும்தான். கலப்பற்ற இல்லாமையும்தான் என்றாலும், அதைக் கொண்டு அல்லாஹ் அறிவிக்கிறான், அறிகிறான். இதற்காகவேண்டித்தான் ஒரு வஸ்த்துவை விளக்கும் விசயத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கிறது அறியப்பட்டு இல்லாமலாக்கப்பட்டது போன்று. இதைத் தொட்டும் அறிவிக்கிறவன் அவன் எல்லா வஸ்த்துவையும் நன்கு அறிந்தவன். நாம் அதை (அஃயானு தாபிதாவை) அல்லாஹ்வின் மஃலூமாத்துகளில் (அறியப்பட்டவைகளில்) புகுத்தினோம். அதற்கு நாம் இல்மியான கோலங்கள் என்பது கொண்டு இரவலாக பெயரும் வைத்தோம்.
இந்த அஃயானு தாபிதாவை அல்லாஹ்வுடைய இல்மில் பிடித்தெடுக்கும் இடமாகிறது, தாத்தில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துக்களில் இருந்தாலும் அஃயானு தாபிதாவைக் கொண்டு அல்லாஹ் அறிந்த அறிவாகிறது, அவன் தாத்தைக் கொண்டு அறிந்த அறிவேயாகும். இது குன் என்ற ஏவலுக்கு முன்னுள்ளதாகும்.
இது இல்மின் பெயரிலேயே ஒழுங்காகிறதே தவிர வேறொன்றையும் கொண்டல்ல. அந்த ஐனுகள்தான் அல்லாஹ்வுக்கு  அறிவு கொடுத்தது என்பது கொண்ட கருத்தல்ல. ஏனெனில் பரிசுத்தமாக்கப்பட்ட தாத்து வேறொன்றின் பக்கம் தேவையானதாக ஆக வேண்டி வருமே அவனுடைய அறிவை பூரணமாக்குவதற்கு என்பதற்காக.
அல்லாஹ்வுடைய அறிவாகிறது வஸ்த்துக்களைக் கொண்டும் அதன் தீர்ப்புகளைக் கொண்டும் ஆதியிலிருந்து அந்தம் வரை அறிந்த அறிவாகிறது பரிசுத்தமாக்கப்பட்ட தாத்துடைய ஐனேதான். இது வேறொன்றிலிருந்து எடுக்கப்பட்டதுமல்ல.
அஸ்மாக்கள் என்பது, அவனுடைய இல்மின் மர்தபாவில் ஷுஊனாத்துகள் என்னும் உடைகளைக் கொண்டு உடை அணிந்த கோலங்களாகும். உதாரணமாக படைக்கிறவன் என்ற ஷஃனைக் கொண்டு உடை அணிந்தால், அவனுக்கு தனிப்பட்ட சொந்தமான ஒரு கோலம் அவனின் அறிவில் உண்டாகும். அந்த குறித்த கோலத்திற்கு நாம் இலாஹிய்யான நாமம் என்று பெயர் வைப்போம். அந்தப் பெயர், பெயர் வைக்கப்பட்ட பொருளேதான், தாத்தேதான். அப்போது காலிக் என்ற சொல்லிலாலான இஸ்மாகிறது காப், லாம், அலிப், காப், ஆல் சேர்க்கப்பட்ட மொழிதலிலாலான இஸ்முக்கு இஸ்மாகும். இங்கு இஸ்மாகிறது இல்மில் உள்ள படைத்தல் என்னும் கோலம் ஆகும்.
இதுபோன்று எல்லா ஷுஊனாத்துக்களையும் சேர்த்துக் கொண்;ட ஷுஊன்களைக் கொண்டு அவனுடைய இல்முடைய மர்தபாவில் உடையணிந்தால் அவனுக்கு அவனது அறிவில் குறிப்பான சொந்தமான கோலம் ஒன்று உண்டாகும். அந்த குறிப்பான கோலத்திற்கு இலாஹிய்யான நாமம் என்று பெயர் வைக்கப்படும். அது மீண்டும் முஸம்மாவேதானாகும். இப்போது அல்லாஹ் என்ற வார்த்தையாகிறது அந்த தெய்வீக நாமங்களுக்கு நாமமாகும்.  எல்லா கௌனிய்யான, இலாஹிய்யான அஸ்மாக்களையும் ஒருங்கே சேர்த்த ஒரு கோலமாகும். எவ்வாறான கோலம் எனில், அவனது இல்மில் அவனது தாத்தில் மறைந்திருந்த ஷுஊனாத்து அடங்கலையும் சேர்த்துக் கொண்ட ஷஃனைக் கொண்டு உடையணிந்த பின் உண்டாகக் கூடிய கோலமாகும்.
ஹகீக்கத்தில் இந்த கோலமாகிறது தெய்வீகத் தன்மையின் கோலமாகும். அவனுடைய இல்முடைய மர்த்தபாவில்.
இதுபோன்றுதான் அவனுடைய இல்முடைய மர்த்தபாவில் தாத்தில் மறைந்திருக்கும் சூரியன் என்னும் உடையைக் கொண்டு உடையணிந்தால் அவன் சூரியனுடைய சூறத்தில் வெளியானான்.அவனது இல்மில் உள்ள சூரியன் என்னும் கோலம் கௌனிய்யான இஸ்முகளிலிருந்து ஒரு இஸ்மாக ஆகிவிட்டது. எவ்வாறான கௌனிய்யான அஸ்மாவெனில் அது பெயர் வைக்கப்பட்ட பொருளின் ஐனே ஆகும். ஏனெனில் தாத்தில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துக்கள் எல்லாம் தாத்துடைய ஐனேதான் நீ அறிந்தது போல.
இப்போது சூரியன் என்னும் மொழிதலிலான பேராகிறது முஸம்மாதானே ஆன பெயருக்கு பெயராகும். அல்லாஹ்வின் அறிவில் உண்டான சூரியன் என்னும் கோலமும் ஆகும்.  நான் மேற்சொன்னபடி நீ எல்லா கௌனிய்யான இலாஹிய்யான அஸ்மாக்களையும் ஒழுங்கு பிடித்துக் கொள்.
றாசிக் எனும் மொழிதலிலான பெயராகிறது முஸம்மாதானான இஸ்முக்கு இஸ்மாகும். முஸம்மாதானான கோலமாகிறது அறிவில் உள்ள உணவளிப்பவன் எனும் கோலமாகும்.
இதுபோன்றுதான் அலீமுன், கதீருன், முரீதுன், கபூறுன் ஆகும்.
இவைகள் அனைத்தும் இலாஹிய்யான நாமங்களுக்கு நாமங்களாகும். இங்கு இலாஹிய்யான நாமம் என்பது ஐனுல் முஸம்மாவாகும். இதுபோலத்தான் வானம், பூமி, சந்திரன்….மரம், கல்லு போன்ற எண்ணிலடங்காத பல்வகை கௌனிய்யான நாமங்களாகிறது பெயருக்கு பெயராகும். கௌனிய்யான நாமம் என்றால் ஐனுல் முஸம்மாவாகும். அந்த ஐனுல் முஸம்மாவாகிறது அவனுடைய இல்முடைய மர்த்தபாவில் அவனுக்கு உண்டான சோலமாகும். எவ்வாறான கோலம் எனில், தாத்தில் மறைந்திருந்த ஷுஊனாத்துக்களைக் கொண்டு உடையணிந்த பின் உண்டாகும் கோலமாகும்.
இதுபோலத்தான் மனிதன், மிருகம், தாவரம், நிரசப்பொருள், எண்ணிலடங்கா அவற்றின் தனிப்பிரதிகளின் நாமங்களும் ஆகும்.
இப்போது அஸ்மாக்கள் கோலத்தைப் போன்று அதிகமானதாகும் என்று தரிபாடாயிற்று. பெயர் வைக்கப்பட்ட பொருள் ஒன்றேயாகும். அந்த முஸம்மாவாகிறது உண்மையான ஒருவனின் தாத்தாகும். ஒவ்வொரு பெயரும் மற்றப் பெயரின் ஐனே ஆகும். அதிகமான பெயர்கள் அனைத்தும் ஒரே தாத்தின் பெயரில் அறிவிப்பதன் காரணமாக ஒரே நாமத்தைப் போன்றதாகும். அஸ்மாக்களின் தௌஹீது என்பதன் நாட்டமும் இதுவேதான் ஆகும்.
இங்கு ஒரு விசயம் பாக்கியாக உள்ளது. அதை வெளிப்படுத்துவதும் அவசியமாகிறது. அதுயாதெனில், வெளியில் உண்டான கோலங்களைப் பற்றி பேசுவது ஆகும்.
ஏ தேட்டமுடையவனே! கவனிப்பாயாக. நான் உனக்கு சொல்லித் தரக்கூடிய விசயங்களை உற்றுக் கவனிப்பாயாக. (அல்லாஹ் நாடினால்)
நான் விளக்கினால் நீ பிறகு விளங்குவாய். நிச்சயமாக வெளிரங்கத்தில் வெளியான பொருட்கள் அல்லாஹ்வின் அஸ்மாக்களின் வெளிப்பாடாகும். அவைகள் அஸ்மாக்களின் ஐனுமாகும். என்றாலும் அவை மறைவில் இருந்து வெளியாகிவிட்டது. அதாவது அவனது உள்ளான அறிவில் இருந்து வெளியாகிவிட்டது. நீ விரும்பினால் உஜூதின் உள்ளிலிருந்து வெளியறிவிற்கு வந்து விட்டது என்றும் சொல்லுவாய். அல்லது உஜூதுடைய உள்ளிலிருந்து உஜூதின் வெளிக்கு வந்து விட்டது என்றும் சொல்லுவாய்.
هوالاوّل والآخر والضاهر والباطن وهو بكلّ شيئ عليم
ஏ, உண்மையான இரக்கமுடையவனே, நீ தெண்டிப்பது உன் கடமை. அதிகமான முறாக்கபாவைக் கொண்டும், கஷ்டமான 'றியாழத்'களைக் கொண்டும் தெண்டிப்பது உன் கடமையாகும். உன்னுடைய எல்லா சிந்தனையையும் ஒருங்கு குவித்து உன் கற்பனையை ஒரே விசயத்தில் குவித்தாலே ஒழிய அது உண்டாகமாட்டாது. அதாவது உன் வெளி, உள் புலன்களை ஒரே விசயத்தின் பேரில் ஒருங்கு குவித்தாலே ஒழிய அது அமையாது. அதாவது அஸ்மாக்கள் எல்லாம் சேர்ந்து ஒன்று என்பது கொண்டு பூரணமான நம்பிக்கையை உண்டாக்குவதாகும். நீ முன்பறிந்தது போல. இத்தெண்டிப்பு அஸ்மாக்களில் நீ அழிவதுவரை தேவையாகும்.
இப்படி தெண்டித்து வந்தால் இஸ்முகளில் நாஸ்தி என்ற மர்த்தபா உண்டாகும். அதாவது எந்த ஒரு இஸ்மையாவது அது கௌனியானதானாலும் சரி இலாஹியானதானாலும் சரி நீ கேட்குமிடத்து உன்னுடைய திஹ்னில் ஒரே விசயத்தில் ஒரே முஸம்மாவின் பேரிலே ஒழிய போகாது. அதுவே பெரிய நான் என்பதாகும்وهو الا نانية الكبري இதுவே ஆக மேலான மர்த்தபாவாகும். பெரிய பாக்கியமும் ஆகும்.
அஸ்மாக்களில் நாஸ்த்தி எனும் பூரணுத்துவத்தில் பூரணத்துவமாகிறது ஒரு பெயரையும் நீ கேட்கமாட்டாய். 'உள்ளிலும் வெளியிலும் நான்தான் வெளியாகி இருக்கிறேன் என்று உன் நப்ஸைக் காண்பது கொண்டே ஒழிய நீ ஒரு பெயரையும் கேட்க மாட்டாய். இந்த பெயர் வைக்கப்பட்ட பெயரைக் கொண்டு வெளியானவன் நான்தான் என்று உன் நப்ஸை காண்பது கொண்டே ஒழிய நீ கேட்கமாட்டாய்.
அப்போது சந்தேகமில்லாமல் நீ அறிவாய், இந்தப் பெயரைக் கொண்டு கூப்பிடுகிறவன் உன் தாத்தையே நாடுகிறான் என்றும், நீதான் கூப்பிடப்படுகிறவன் என்றும் நீ அறிவாய்.எதுவரை எனில் உன் நப்ஸை அழைக்கிறவன், அழைப்பு அழைக்கப்படுகிறவன் என்ற கோலத்தைக் கொண்டு வெளியானவன் நான்தான் என்று உன் கஷ்பைக் கொண்டும் அனுபவ அறிவைக் கொண்டும், எகீனைக் கொண்டும் நீ உன் நப்ஸை காண்கின்றவரையில் திடமாக அறிவாய்.
அப்போது நான், நீ என்பதை விட்டும் புறப்பட்டு விட்டாய். ஆகவே இங்கு ஒரே ஐனைத் தவிர மிச்சம் ஒன்றுமில்லை. நீ அறிந்து கொள் அன்னஹு லாயிலாஹ இல்லல்லாஹ். அவன் சக்தியுள்ளவனும் சிறப்பானவனும் ஆவான்.
العزيز القوي المتين وآ خر دعوانا ان الحمد لله ربّ العالمين
 
இறக்கங்கள்
(اتّنزّلات)
 
சோதரா! நீ அறிந்து கொள். இறக்கங்களின் படித்தரங்களாகிறது நேர்வழியில் நடக்கக் கூடிய ஸாலிக்கானவர்களிடத்தில் நிச்சயமாக ஐந்தாக இருக்கும். அதிலிருந்து ஆறாவது ஆகிறது இவ்வைந்தையும் சேகரித்துக் கொண்டதாகும். ஆறாவது விசயத்தை தனித்த மர்த்தபா என்று எண்ணியதால் மொத்தமான எண்ணிக்கையை ஆறாக ஆக்கினார்கள்.
உண்மையில் இறக்கத்தை கவனிப்பது கொண்டு மர்த்தபாக்கள் ஐந்தாகும். அதில் முதலாவது:-
வஹ்தத்துடைய மர்த்தபா ஆகும். அதாவது தொகுப்பான அறிவின் மர்த்தபா ஆகும்.ஏற்புத்தன்மையும், அருகதையும் உள்ள முதலாம் மர்த்தபா ஆகும். மர்த்தபத்துல் அஹதிய்யா என்பது இன்னொரு படித்தரத்திலிருந்து இறங்கின மர்த்தபா அல்ல. எனினும் எல்லா மர்த்தபாக்களும் அதிலிருந்து தான் உண்டாகும்.
நீ நாடினால், நீ சொல்லுவாய் ஆறு மர்த்தபாக்களும் அஹதிய்யத்துடைய வெளிப்பாடுகள் ஆகும் என்று சொல்லுவாய்.
வஹ்தத் என்ற மர்த்தபாவில் தஜல்லி ஆவதைக் கொண்டு அஹதிய்யத்து ஷுஊனாத்துக்களுடைய உடையில் ஏற்புத் தன்மையுடையதாகவும் அருகதையுடையதாகவும் ஆகிவிட்டது.
உதாரணமாக,
அல்லாஹ்க்கு மேலான பல உதாரணங்கள் உண்டு.ولله المثل الاعلي
நிச்சயமாக மெழுகும் அதன் எண்ணெய்யும் அவைகள் இரண்டும் ஒரே ஐனாகும். என்றாலும் எண்ணெய் எனும் மர்த்தபாவில் எண்ணெய் ஆகிறது ஏற்றுக் கொள்ளாததும் அருகதையில்லாததும் ஆகும். ஏனெனில் அதில் மறைந்திருக்கும் மும்கினாத்து எனும் கோலங்களை உண்டாக்குவதின் பேரில் ஏற்றுக் கொள்ளாததும் அருகதையில்லாததும் ஆகும். எதுபோலவெனில் மேலான ஒருவனான ஹக்கான தாத்தில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துகள் போல.
என்றாலும் அது எண்ணெய் எனும் மர்தபாவிலிருந்து மெழுகு என்னும் மர்த்தபாவிற்கு அது உறைவது கொண்டு இறங்கினால், அப்போது அது ஏற்புத் தன்மையுடையதாகவும் அருகதையுடையதாகவும் அதில் மறைந்திருக்கும் கோலங்'களை வெளியாக்குவதற்கு அது ஆகிவிடுகிறது. இதுபோன்று ஹக்கான ஒருவனான தாத்து கலப்பற்ற , பொதுவான மர்த்தபாவிலிருந்து அதாவது அஹதிய்யத்துடைய மர்த்தபாவிலிருந்து வஹ்தத்துடைய மர்த்தபாவிற்கு இறங்கினால் அதில் மறைந்திருக்கும் ஷுஊனாத்து என்னும் உடைகளில் வெளியாவதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் அருகதையுடையதாகவும் அது ஆகிவிட்டது. அதில் மறைந்திருக்கும் கோலங்களை உண்டாக்கக் கூடியதை ஏற்றுக் கொள்ளக் கூடியதும் அருகதையுடையதுமான மெழுகைப் போன்று.
என்றாலும் ஒருவனான தாத்து வஹ்தத் என்னும் மர்த்தபாவில் தஜல்லியாவது போல ஏனைய மர்த்தபாவில் வெளியாவது கொண்டு அவன் ஒரு வஸ்த்துவை சேர்ப்பதன் பேரிலும் அதிகமாக்குவதன் பேரிலும் அவன் தேவைப்படவில்லை.
அஹதிய்யத்து எனும் தாத்துடைய மர்த்தபாவாகிறது வஹ்தத்துடைய மர்த்தபாவின் ஐனே ஆகும். நீ நாடினால் வஹ்தத்து என்பது அஹதிய்யத்துடைய ஐனே ஆகும் என்றும் அஹதிய்யத்து வஹ்தத்துடைய ஐனாகும் என்றும் கூறுவாய். எண்ணெய்யும், மெழுகும் போன்று.
வஹ்தத் என்ற மர்த்தபாவிற்கு பல இஸ்முகள் உண்டு. காரணம் அதன் வகைகள் அதிகமாக இருப்பதற்காக.
ஹகீகத்துல் முஹம்மதிய்யாவைப் போன்றும், العلم الاجماليதொகுப்பான அறிவைக் கொண்டும் இவை இரண்டும் அல்லாத்தவைகளைப் போன்றும்,
ஸூபிகள் இந்த வஹ்தத் என்னும் மர்த்தபாவில் நான்கு விசயங்களை தரிபடுத்துகிறார்கள்.
உஜூது
இல்மு
ஷுஹூது
நூறு.

இவைகள் இவ்வாறு எண்ணிக்கையானாலும் ஒரு ஐனைத் தவிர வேறில்லை. இது ஒருவனின் தாத்தே ஆகும்.
உண்டாகுதல், உண்டாக்குகிறவன், உண்டாக்கப்பட்ட பொருள் எல்லாம் ஒன்றேதான். இது போன்றே
இல்மு, ஆலிமு, மஃலூம்
ஷாஹிது, ஷுஹூது, மஷ்ஹுத்
நூரு, முஸ்தனீறு, முனீறு என்பன.

இவைகள் அனைத்தும் ஒரே இறைவனின் தாத்தாகும். தன்னுடைய தாத்தைக் கொண்டு தன் தாத்தை உண்டானதாக அறிந்து கொண்டான். தன் தாத்தைக் கொண்டு தன் தாத்திலே தன் தாத்தை அறிந்தான். தாத்தில் மறைந்திருக்கும் ஷுஊனாத்துக்களையும் அறிந்தான். அவனுடைய தாத்தைக் கொண்டு அவனுடைய தாத்தை காணப்பட்ட பொருளாகக் கண்டான். அவனுடைய தாத்தைக் கொண்;டு தாத்தை பிரகாசித்ததாகவும், பிரகாசிக்கப்பட்டதாகவும் அவன் கண்டான். இங்கு கவனிப்பதிலும் கூட வேறு என்பது இல்லை. இதில் மறைந்த பொருள் ஹகீக்கத்து ஆகும். இந்த ஹகீக்கத்து அறிந்து கொள்ளப்பட்டதும், அறிந்து கொண்டதும், அறிதலும் ஆகும்.
எனவே அவனே
ஆலிமும், மஃலூமும், இல்மும்
ஷாஹிதும், மஷ்ஹூதும், ஷுஹூதும்
நூறும், முஸ்தனீறும், முனீறும் ஆகும்.

இவைகள் அனைத்தும் ஒரே ஐனில் மறைந்திருக்கும் ஷுஊனாத்து தாத்திய்யாக ஆகிவிட்டது. இவைகளுக்கிடையில் எந்த ஒரு வேறு பிரிப்பும் கிடையாது.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "அல் ஹகீகா-Alhakeekah-part 1"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates