கேள்வி: எங்கள்
ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்களில் ஒருவர் காட்டுபாவா
வலியுல்லாஹ் அவர்களுக்கு பாத்திஹா ஓதி உணவு சமைப்பதற்காக ஒரு சேவலை
நேர்ச்சை செய்து வளர்த்து வந்தார். நேர்ச்சை செய்ததற்கு மாற்றமாக அந்த
சேவலை அறுத்துவிட்டார். அறுபட்ட அந்த சேவல் எழுந்து கொஞ்ச தூரம் ஓடிச்
சென்று ஓர் இடத்தில் மையத்து போல படுத்து மரணித்துவிட்டது.
பின்னர் எங்கள் முன்னோர்கள் அந்த இடத்தில் சேவலை அடக்கம் செய்துவிட்டு
கப்ரை எழுப்பி அங்கு பல ஆண்டுகளாக பாத்திஹா, கந்தூரி, ராத்திபு போன்ற
விசேசங்கள் நடத்தி வருகிறார்கள். மேற்படி சேவலுக்கு கப்ரு எழுப்பலாமா?
ஃபாத்திஹா போன்ற விசேசங்கள் நடத்தலாமா? தெளிவான விளக்கங்களுக்கு எங்கள்
ஜமாஅத்தினர் சார்பாய் வேண்டுகிறோம்.
- எம். செய்யது முஹம்மது யூசுப், தலைவர்: முஸ்லிம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி வாசல், கோவில் பாளையம், பொள்ளாச்சி தாலுகா. 20-07-2011
பதில்: நமது மார்க்கம் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா,
கியாஜ், என்ற நான்கு அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு
நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. சட்ட மாமேதைகளான இமாம்களும், இந்த நான்கைக்
கொண்டே மார்க்கத்தை சீர்பபடுத்தியுள்ளனர். தங்களுடைய கேள்விக்கு இதன்
அடிப்படையிலேயே பதில் கூறுகிறோம்.
விலங்குகளுக்கு கப்ரு கட்டலாமா? என்று பார்க்கும்போது குர்ஆன் ஆம் என்றே பதில் கூறுகிறது.
குர்ஆன் ஆதாரம் :1:இன்னும் அவர்களுடைய நாய், குகை வாசலில் தன்னுடைய இரு முன்னங்கால்களையும் விரித்துப் (படுத்துக்) கொண்டிருக்கிறது. (சூரத்துல் கஃப் 18)
சூரத்துல் கஃப் எனும் அத்தியாயத்தில் கஹ்புவாசிகள் எனும் அவுலியாக்களைப் பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது அப்புனிதர்களோடு ஒரு நாயும் இருப்பதாக திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அப்புனிதர்களோடு அந்த நாயும் இருந்ததால் அதுவும் சுவனம் செல்லக் கூடிய பாக்கியம் பெற்றதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதி ஷரீப்)
அதையே அல்லாமா ஷைகு ஸஅதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது குலிஸ்தான் என்னும் கிரந்தத்தில் மிக அழகாக பதிவு செய்துள்ளார்கள்.
குர்ஆன் ஆதாரம் 2:
பின்னர் பூமியைத் தோண்டக் கூடிய ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவருடைய சகோதரரின் பிரேதத்தை எவ்'வாறு மறைப்பது என்பதை அவருக்கு காண்பிப்பதற்காக. (சூரத்துல் மாயிதா 31)
ஆதம் நபியவர்களின் பிள்ளைகளான ஹாபிலும், காபிலும் கருத்து வேறுபாட்டால் ஹாபிலை காபில் கொலை செய்து விட்டார். மையத்தை எப்படி அடக்கம் செய்வது? என்று யோசித்த சமயத்தில் இரண்டு காகங்களை அவர் முன்னால் அல்லாஹ் அனுப்பி சண்டையிட வைத்து ஒரு காகம் இறந்தபின் மற்றொரு காகம் தன் அலகால் மண்ணைத் தோண்டி புதைக்குமாறு செய்தான். இதைப் பார்த்த காபில் தன் சகோதரரை அ வ்வாறே அடக்கம் செய்தார்.
ஆதாரம்: பெரிய கஸஸுல் அன்பியா.
என்பதாக மேற்கண்ட ஆயத்திற்கு தப்ஸீர் விரிவுரை பறைசாற்றுகிறது. இதனால் அந்த காகத்திற்கு கப்ரு கட்டப்பட்ட வரலாறு பதியப்பட்டது. இந்தியாவில் நமது தமிழகத்தில் இந்த கப்ரை ராமேஸ்வரம் ரயிலடிக்கு எதிர் புறத்தில் ஹாபில் காபில் கப்ருகளுக்கு அருகாமையில் உள்ளதை நேரடியாகச் சென்று பார்க்கலாம்.
குர்ஆன் ஆதாரம் 3:
என்னுடைய சமூகத்தினரே! இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகம்- உங்களுடைய அத்தாட்சியாக (அருளப்பட்டுள்ளது). எனவே அல்லாஹ்வுடைய பூமியில் அது (மேய்ந்து) திண்ண அதனை நீங்கள் விட்டு விடுங்கள். எவ்விதத் தீங்கைக் கொண்டும் அதனை நீங்கள் தொடாதீர்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) அப்போது விரைவான தண்டனை உங்களைப் பிடித்துக் கொள்ளும் என்றும் கூறினார். – ஸூரத்துல் ஹூத் 64)
நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்' அவர்களுக்கு முஃஜிஸாவாக மலையில் இருந்து ஒரு ஒட்டகத்தை வெளிப்படுத்திக் காட்டியதை குர்ஆன் இயம்புகிறது.
அந்த ஒட்டகத்திற்கென சிறப்பு சட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவ்ஒட்டகம் புனிதப்படுத்தப்பட்டிருந்தது. அரேபிய தேசத்தில் ஒன்றான ஓமான் நாட்டில் சலாலா என்ற ஊரில் அவ் ஒட்டகத்தின் காலடி சுவடுகள் பதிந்துள்ள பாறைகளை மக்கள் புனிதப்படுத்தி ஜியாரத்து செய்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை எங்கள் தர்கா இதழ் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
இப்படி குர்ஆன் வலிமார்களுடன், நபிமார்களுடன் சம்பந்தப்பட்ட விலங்குகளை புனிதப்படுத்துகிறது.
இனி யாராவது இது முன்சென்ற சமூக நபிமார்களின் நிலை. அச்சட்டம் நமக்குப் பொருந்தாது என்று விதண்டாகிவாதம் செய்வார்களேயானால் அதற்கும் நாம் பதில் சொல்வோம்.
முன்சென்ற நபிமார்கள் சமூகத்தில் நடந்த சுன்னத்தான செயல்கள் நமக்கும் ஆகுமானவையே என்று நமது அகீதா கொள்கை வகுத்துத் தந்த இமாம் மாதுரீதி ஹனஃபி அவர்களும், அஷ்அரி ஷாஃபியீ ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களும் எடுத்துரைக்கிறார்கள். அதையே நமது ஷரீஅத் சட்ட மேதைகளான இமாம் ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி ரலியல்லாஹு அன்ஹும் அபிப்பிராய பேதமின்றி இது போன்ற புனிதர்களோடு தொடர்புடைய இடங்களை ஜியாரத்து செய்வது கூடும் என்று கூறியதோடு ஜியாரத்தும் செய்து வந்துள்ளார்கள் என்று ஏராளமான சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன.
பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் செய்த கோவேறு கழுதையை குப்பார்கள் குறை கூறிய போது அதை எதிர்த்து சஹாபாக்கள் அக்கோவேறு கழுதையை சங்கை செய்ததும் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஹ்லெ பைத் எனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கிளைக் கொழுந்தான இமாம் மூஸல் ரிழா அவர்கள் அழைப்பின் பேரில் நேஷாபூர் நகருக்கு கோவேறு கழுதையில் சவாரி செய்தவர்களாக வருகை தந்த போது 20000 முகத்திஸீன்களான – ஹதீது கலை வல்லுனர்களும் லட்சக்கணக்கான பொதுமக்களும் அவர்களை வரவேற்று புனிதப்படுத்திய போது அன்னவர்களின் திருமுகத்தின், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட நூரே முஹம்மதிய்யா திருக்காட்சியை கண்டு லயித்து போன கூட்டத்தார் அவர்கள் ஏறி வந்த கோவேறுக் கழுதையைப் புனிதப்படுத்தி அதன் திருப்பாதத்தை முத்தமிட்ட வரலாறு அஸீஹுல் மதாலிப் ஃபீ அததி மனாகிபி அலீ இப்னு அபூ தாலிப் என்ற ஹதீ:து கிரந்தத்தில் பக்கம் 463 ல் பதியப்பட்டுள்ளது.
காதிரிய்யா தரீகாவின் கிளைப் பிரிவுகளின் முக்கிய பரிவான கான்வாதயே பிர்தௌஸிய்யாவின் மூலர்களில் ஒருவரான ஹஜ்ரதஜ் நஜ்முத்தீன் குப்ரா வலியுல்லாஹ் காலத்தில் வலியுல்லாஹ் அவர்கள் ஷரீஅத் சட்டத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராய் இருந்த காரணத்தினால் (ஹிஜ்ரி 540-618) பாதுஷா அவர்களை தமது அரசாங்க காஜியாக நியமித்தார். அதாவது இன்றைய சுப்ரீம் கோர்ட் சீப் ஜஸ்டிஸ்க்கு சமமான பதவி வழங்கினார். சில ஆண்டுகளிலேயே பதவியை உதறித் தள்ளிவிட்டு இறைவேட்கையில் ஞான குருநாதரைத் தேடி அலைந்து அபுல் முஜன்னாப் அஹ்மது நஜ்முல் ஹக்கி வத்தீன் நஜ்முத்தீன் குப்ரா என பட்டங்கள் பல பெற்று அல்லாஹ்வின் லிகா என்னும் திவ்விய தரிசனம் பெற்ற காதிரிய்யா தரீகாவின் கிளையாகப் பிரிந்த பிர்தௌஸிய்யா கான்வாதாவின் மூலரானார்கள். இவர்களின் ஷெய்கான அம்மார் யாஸிரின் மூலம் நபிகள் கோமானின் திவ்விய தரிசனம் கிட்டடியது. உலகை விட்டு ஒதுங்கிய ஸூபியத்தான தனது தைக்காவில் அல்லாஹ்வின் நாட்டத்தை நாடியவர்களாக இருந்து வந்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் தைக்காலுக்கு வந்த ஷைக் அஸதுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் இன்றைய காலகட்டத்தில்
ஒரே ஒரு கடைக்கண் கடாட்சத்தால் விதிவசங்களிலிருந்து மாற்றிவிடும்
(அல்லாஹ்வின்) நேசர்கள் இக்காலத்திலும் உள்ளார்களா? என்று பொருள்படும்படி
வினவினார்கள்.
அதைக் கேட்டு ஜத்பு என்ற நிலைக்கு வந்த ஹஜ்ரத் நஜ்முத்தீன் குப்ரா
அவர்களின் பார்வை அவ்வழியா சென்ற ஒரு நாயின் மீதுபட்ட கணத்திலேயே கடைக்கண்
போரொளி பிரகாச பார்வைபட்ட நாய் கவுரமும், கம்பீரமும் பெற்று விட்டது. அதன்
அடையாளமாக அவ்வூரில் இருந்த நாய்களெல்லாம் அதைச் சுற்றி ஓர் சபை அமர்வதைப்
போல் அமர்ந்து அந்த நாய்க்கு சங்கை செய்தன. அதற்கு மரியாதை செய்து
சென்றபின் வேறொரு நாயின் கூட்டம் வந்து அதற்கு மரியாதை செய்தது. இது போன்று
நடந்து வந்த சில நாட்களில் அந்த நாய் மரணித்தபோது ஹஜ்ரத் நஜ்முத்தீன்
குப்ரா அந்த நாயை அடக்கம் செய்து கப்ரு கட்டும்படி பணித்தார்கள்.
இன்றும் அந்த நாயின் கப்ரு மாவராவுன் நஹர்
என்ற ஊரில் உள்ளது. மக்கள் ஜியாரத்து செய்கிறார்கள். இன்'றைய ரஷ்யா
பிராந்தியத்தின் சுதந்திர நாடான நேஷாபூர் ஆஜர்பைஜான் நாட்டில் உள்ளது.
ஆதாரம்: கஸ்ரே ஆரீஃபான்.
மேலும் அஜ்மீர் ஷரீஃபின் தாராகட் மலையிலே ஷஹீதானவர்களின் குதி;ரைகளும் ஷஹீதாகி அடக்கப்பட்டுள்ளன.அக்பர் தி கிரேட் பத்தேஹ்பூர் சிக்ரி கோட்டையில் சலீம் சிஷ்தி வலியுல்லாஹ்வின் பாதர்கா வளாகத்தில் அவர்களின் புதல்வர் பாலேமியான் கப்ருக்கு அருகில் அவர் வளர்த்த கிளியின் கப்ரும் உள்ளது.
1016 வது உரூஸ்….
அவ்வளவு ஏன்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருச்சிக்கு வந்த தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தோஹ்ல் சமந்தர் ரஹ்மத்துல்லாஹி அவர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது சோழ மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதபோது அரசனுக்கு வலியுல்லாஹ்வின் துஆ பரக்கத்தால் பிறந்த குழந்தையை ஷரத்துப் படி ஹஜ்ரத் அவர்களிடம் ஒப்படைத்து அக்குழந்தையை வளர்த்து மாமா ஜிக்னி என்று பெயர் வைத்து ஹஜ்ரத் கையால் எழுதிய குர்ஆன் ஷரீபை படிக்க வைத்து மனனம் செய்ய வைத்த போது மாமா ஜிக்னி அவர்கள் ஆசையாய் வளர்த்து வந்த கிளியும் முழு குர்ஆனை ஓதி ஹாபிழ், அதை இன்றும் மக்கள் ஜியாரத்து செய்து வருவதையும் திருச்சிக்கு நேரில் சென்று பார்க்கலாம்.
ஆதாரம் உருது நூல்: தாஸ்தானே தப்லே ஆலம், தமிழில்: தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லாஹ் வரலாறு மற்றும் ஆயிரமாவது ஆண்டு மலர்.
தமிழகத்து பாதுஷாவாம் நாகூர்
ஆண்டவர்வலியுல்லாஹ் அவர்களின் குருநாதர் கவுது குவாலியர் வலியுல்லாஹ்வின்
வழித்தோன்றலான சிதம்பரத்திற்கு அருகில் கிள்ளையில் அடங்கியுள்ள சையத் ஷா
ரஹ்மத்துல்லாஹி வலியுல்லாஹ ; ஷுத்தாரி அவர்களின் தர்கா ஷரீபில்
வலியுல்லாஹ் அவர்கள் சவாரி செய்து வந்தகுதிரை மரணித்த பின், அதை தஃபன்
செய்து, ஜங்கிலி பீர் என்ற பெயரில் கப்ரு கட்டப்பட்டு நேர்ச்சை பாத்திஹா
மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்டு வல்லோன் அல்லாஹ்வின் அருளால் முராதுகள்
ஹாஸிலாகி பூர்த்தி செய்யப்படுவதை இன்று ஊரில் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தாரிடம்
மற்றும் நிர்வாகம் செய்யும் வாரிசுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
நிற்க… கோவில்பாளையம் பள்ளிவாசல் தலைவர் மற்றும் ஜமாஅத்தார்களே! நம்
சிற்றறிவிற்கு எட்டியபடி ஆதாரங்களை திரட்டித் தந்துள்ளோம். எனவே
நாய்க்கும், கிளிக்கும், குதி;ரைக்கும் அல்லாஹ்வின் நேசம் பெற்ற
வலிமார்களின் பாசம் பெற்று புனிதம் பெற்ற அந்த ஐந்தறிவு மிருகங்கள்
புனிதப்படுத்தப்படுகின்றனவென்றால் காலையில் பாங்கு சொல்லி எழுப்பும் சேவல் –
அதுவும் காட்டுபாவா சேவல் நேர்ச்சைக்கு மாற்றமாக அறுத்தும் அறுபடாமல்
கொஞ்ச தூரம் ஓடிச் சென்று ஒரு இடத்தில் மையத்துப்போல் படுத்து மரணமடைந்தது
என்றால் அது காட்டுபாவாவின் கராமத். அல்லாஹ்வின் குத்ரத். அவன் தன்
நேசர்களுக்கு வழங்கும் கராமத்-அற்புதமாகும். எனவே உங்கள் முன்னோர்கள்
அந்தப் புனித சேவலுக்கு கப்ரு எழுப்பியதும், பல ஆண்டுகளாக பாத்திஹா,
கந்தூரி, மவ்லிது, ராத்திபு போன்ற விசேசங்கள் செய்வதும் கூடும் என்பதும்
அக்காலத்தில் வாழ்ந்'து வந்த எந்த சுன்னத் வல் ஜமாஅத் ஆலிமும் அதைத்
தடுக்கவில்லை என்பதும், அது ஷரீஅத் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்
என்பதை உறுதிப்படுத்துகிறது.எனவே வஹ்ஹாபிய மதம் பிடித்த தேவ்பந்திய தப்லீ:க் ஜமாஅத்து முதல் தவ்ஹீது ஜமாஅத் வரை மேற்கண்ட ஆதாரங்களுக்கு விதண்டாவாதம் பேசுவார்களேயானால், அவர்களுடைய (வஹ்ஹாபிய) மதம் அவர்களுக்கு. நமது சுன்னத் வல் ஜமாஅத் மார்க்கம் நமக்கு என்று அமைதியாய் சொல்லிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.
மற்ற அனைத்திற்கும் அல்லாஹ்வும் அவனது ஹபீபும் ரஸூலுமாகிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நன்கறிந்தவர்கள் என்று கூறி நமது தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியும், எல்லோருக்கும் ஹிதாயத்து கிடைக்க துஆ செய்து விடை பெறுகிறோம். வஸ்ஸலாம்
வாழ்க நாகூராரின் பேரர் காட்டுபாவா பாவா ஃபக்ருத்தீன்! ஓங்குக காட்டுபாவா சேவலின் புகழ்!!(காட்டுபாவா அவர்களின் தர்கா ஷரீப் இரண்டு இடங்களில் உள்ளது என்பதை அறியவும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக