Elegant Rose - Diagonal Resize 2 சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் ~ TAMIL ISLAM

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

நமது நாடு சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகளாகி விட்டது.... என்னத்தைச் சாதித்தோம்... எதை இழந்தோம் என்று சிந்தித்துப் பார்த்தால் மகிழ்ச்சி, அதிர்ச்சி, கோபம், பெருமிதம் எல்லாமே ஏற்படுகிறது... இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சில துறைகளின் வளர்ச்சியின்மை குறித்து இந்தியா டுடே பத்திரிகை விரிவான கட்டுரை எழுதியிருக்கிறது... சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு....

- 2004 கணக்கீட்டின் படி இந்தியாவில் மொத்தம் 671 மில்லியன் வாக்காளர்கள்... அதில் 322 மில்லியன் பேர் பெண்கள்....

- மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 4,663... பிரிட்டனில் மொத்தமே 643 பேர் தான்....

- இதுவரை இந்தியாவில் 283 சட்டமன்றத் தேர்தல்களும், 14 பொதுத்தேர்தல்களும் நடைபெற்றிருக்கின்றன....

- 14வது மக்களவையில் 8 சதம் பேர் பெண்கள்... பஞ்சாயத்து உறுப்பினர்களில் 34 சதம் பேர் பெண்கள்....

- இந்தியாவிலேயே பெரிய மக்களவைத் தொகுதியான லடாக்கின் பரப்பளவு 1,73,000 ச.கி.மீ... உலகின் பெரிய தொகுதியான கல்கூர்லியின் பரப்பு 22,55,000 ச.கி.மீ....

- 2004 தேர்தலில் வாக்களித்தவர்களின் சதவிகிதம் 58.07% .... 2004 அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் 64%....

- 14வது மக்களவையில் சுயேச்சை எம்.பி.க்களின் எண்ணிக்கை 2

- காங்கிரசிலும், ஜனதாதளத்திலும் இதுவரை ஆறு முறை பிளவு ஏற்பட்டிருக்கிறது.... கம்யூனிஸ்டு இயக்கம் இருமுறை மட்டுமே பிளவுப் பட்டு இருக்கிறது....

- 3.37 மில்லியன் வாக்காளர்கள் அவுட்டர் தில்லியில் இருக்கிறார்கள்... உலகிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி இதுதான்...

- இதுவரை 93 முறை அரசியல் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.... அமெரிக்காவில் 27 முறை மட்டுமே திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது....

- 14வது மக்களவையில் 25 - 40 வயதுக்குட்பட்ட எம்.பி.க்கள் 12.83 சதவிகிதம் மட்டுமே.... முதல் மக்களவையில் 25.85% பேர் இந்த வயில் இருந்தனர்...

- 14வது மக்களவையில் 136 எம்.பி.க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்...

- 14வது மக்களவையில் 147 பேர் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்....

- 553 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்குச் சமமான எரிசக்தியை 2003ல் இந்தியா பயன்படுத்தியிருக்கிறது... சீனாவின் அளவு 1,410 மில்லியன் மெட்ரிக் டன்....

- 100 மில்லியன் பேர் இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறார்கள்.... அமெரிக்காவில் 194.5 மில்லியன் பேர்....

- 2004ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு கிடைத்த அன்னிய நேரடி முதலீடு ரூ. 1,81,000 கோடி.... சீனாவுக்கு ரூ. 11,39,000 கோடி....

- 71 நாட்களும், 11 வழிமுறைகளும் இந்தியாவில் பிசினஸ் ஆரம்பிக்கத் தேவைப்படுகிறது.... அமெரிக்காவில் 5 நாட்கள் 5 வழிமுறைகளே போதும்....

- 2003ல் 583 மாவட்டங்களில் உள்ள இந்திய வீடுகளின் மொத்த வாங்கும் சக்தி ரூ. 14,862,000 கோடி... 1999ல் இது ரூ. 7,634,000 கோடியாகத் தான் இருந்தது...

- இந்தியாவின் அன்னியச் செலாவனி மற்றும் தங்கத்தின் இருப்பு மதிப்பு ரூ. 7,85,000 கோடி...

- இந்தியாவில் சுமார் 2% கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது.... சீனாவில் 20%

- 576 பில்லியன் கிலோமீட்டரை இந்திய ரயில்வெ கடக்கிறது... சீனாவில் 571 பில்லியன்...

- இந்திய நிறுவனம் ஒன்று தன் வரியைச் செலுத்த சுமார் 276 மணி நேரம் செலவிடுகிறது.... அமெரிக்காவில் 325 மணி நேரம்...

- இந்தியாவின் கினி குறியீட்டு எண் 33.... இது வருவாய் சமமின்மையைக் குறிக்கிறது... அமெரிக்காவில் இன்னும் அதிகம்... 41

- இந்திய பங்குச் சந்தையில் 2005 திரட்டப்பட்ட முதலீடு ரூ. 25,60,000 கோடி.... சீனாவில் ரூ. 36,30,000

- 670 மில்லியன் பங்கு பரிவர்த்தனைகள் தினமும் மும்பையிலும், தில்லியிலும் நடைபெறுகிறது....

- ரூ. 1,86,000 கோடி - 2004ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் சேவை ஏற்றுமதியின் மதிப்பு.... 1990ல் இது ரூ. 21,400 கோடி மதிப்புள்ளதாக இருந்தது... சுமார் 14 ஆண்டுகளில் 870 சதவிகித அபார வளர்ச்சி...

- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் மொத்த கடன் சதவீதம் 65.8%

- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வின் சதவீதம் 64%... ஜப்பானில் 55% தான்....

- 260 மில்லியன் இந்தியர்கள் இன்னமும் ரூ. 50க்கு குறைவாகத் தான் செலவிடுகிறார்கள்....

- இந்தியாவில் ஒரு கி.மீ. சாலைக்கு 3 வாகனங்கள் இருக்கின்றன....

- இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 334.... அமெரிக்காவில் 14,883.....

- 5,58,000 ச.கி.மீ நிலம் இந்தியாவின் பாசனத்திற்குட்பட்டு இருக்கிறது....

- 17,189 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருக்கிறது.... அமெரிக்காவில் 4,182 மட்டுமே....

- 93,000 துவக்கப் பள்ளிகள் இந்தியாவில் கம்ப்யூட்டர் வசதியுடன் இருக்கின்றன.... அமெரிக்காவில் 1,10,000

- 19% துவக்கப்பள்ளிகள் இந்தியாவில் ஒரே ஆசிரியரால் மட்டுமே நடத்தப்படுகிறது....

- 75% துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி இருக்கிறது....

- 25% பள்ளிகள் மட்டுமே இந்தியாவில் மின்வசதியோடு இருக்கிறது....

- 87% பள்ளிகள் கிராமங்களில் தான் இருக்கிறது....

- 2004ல் இந்தியாவில் மொத்தப் பள்ளிகள் 9,00,000

- 70% பள்ளிகள் பக்காவான கட்டிடத்தில் இயங்குகிறது....

- 5,00,000 பேர் இந்தியாவில் ஆண்டு தோறும் டாக்டர்கள் ஆகிறார்கள்... சீனாவில் 15 லட்சம் பேர்....

- 9,070 டாக்டர் பட்டங்கள் 2005ல் வழங்கப்பட்டிருக்கிறது... இது அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் 42,700 குறைவு... சீனாவோடு ஒப்பிட்டால் 6,000 அதிகம்....

- 400 மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் உள்ளன. அமெரிக்காவில் 125 கல்லூரிகள்....

- 5.7 மில்லியன் பள்ளி ஆசிரியகள் இந்தியாவில் இருக்கிறார்கள்....சீனாவில் 2.2 மில்லியன் மட்டுமே....

- 3,50,000 என்ஜினியர்கள் இந்தியாவில் ஆண்டு தோறும் உருவாகிறார்கள்.... சீனாவில் 6,00,000 பேர்....

- 8,00,000 பேர் எம்.பி.ஏ. முடிக்கிறார்கள்.... அமெரிக்காவில் 2,00,000 பேர் தான்....

- ஒரு ஆசிரியருக்கு 41 மாணவ-மாணவிகள் என்பது இந்தியாவில் இருக்கும் விகிதம்.... சீனாவில் ஒரு ஆசிரியருக்கு 21 மாணவ-மாணவிகள் மட்டுமே....

- 73% இந்திய ஆண்கள் எழுத்தறிவு மிக்கவர்கள்... சீனாவில் ஆண்களின் எழுத்தறிவு 95%... இந்தியாவில் பெண்களில் 47.8% பேருக்கு மட்டுமே எழுத்தறிவு இருக்கிறது... சீனாவில் 86.5 சதவிகிதம்....

- 13 மில்லியன் குழந்தைகள் இந்தியாவில் பள்ளி செல்வதில்லை...

- 2,00,000 அறிவியல் பட்டங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.... சீனாவில் 6,00,000....

- 10,500 மாணவர்கள் கி.மு. 700ல் உலகின் முதல் பல்கலைக்கழகமான தக்ஷீலாவில் படித்தார்கள்....

- 9.9 மில்லியன் மாணவர்கல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்...

- 16 சதவிகிதம் 6-14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிராமத்து தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்....

- 25% அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வருடந்தோறும் தங்கள் பணிகளுக்கு வராமல் இருக்கிறார்கள்....

- உலக அளவில் 2001-05க்கு இடையில் ஏவப்பட்ட 55 செயற்கைக்கோள்களில் இந்தியாவின் பங்கு 2% மட்டுமே.... சீனாவின் பங்கு 9%....

- இந்தியாவின் வெற்றிகரமான விண் ஏவல்களின் எண்ணிக்கை 13 மட்டுமே... அமெரிக்கா 424, சீனா 52

- பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியா விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 13,250 கோடி.... நாசா இந்த வருட அமெரிக்க பட்ஜெட்டில் மட்டும் 9,52,718 கோடியைப் பெற்றிருக்கிறது....

- இந்தியாவில் மொத்தம் 125 பார்ச்சூன் 500 கம்பெனிகள் தளம் அமைத்திருக்கிறது....

- 1995-2003ல் இந்தியாவில் பெறப்பட்ட பயோடெக் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,378

- 1000 பேரில் 32 பேர் இணையம் வைத்திருப்பவர் எண்ணிக்கை.... சீனாவில் இது 73 பேர்..... பிராட்பேண்டு கனெக்சன் சீனாவில் 100க்கு 16.5 பேர்.... இந்தியாவில் 0.6 பேர் மட்டுமே....

- 28.3% பேர் இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தில் பெண்கள்... இவர்களில் 36.1 சதவிகிதம் பேர் 15-64 வயதுக்குட்பட்டவர்கள்....

- இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 133 மில்லியன்.... பாகிஸ்தானி 125.4 மில்லியன் மட்டுமே...

- 51.6% இந்திய அமெரிக்கர்கள் உயர்ந்த வேலைகளில் இருக்கிறார்கள்.... வெள்ளையர்களில் 21.4% பேரே உயர்வேலையில் இருக்கிறார்கள்....

- 2004ல் இந்தியாவில் நடந்த கொலைகள் எண்ணிக்கை 33,608... அதே வருடம் அமெரிக்காவில் 16,137 கொலைகள் தான் நடந்திருக்கின்றன....

- 2003ல் ஒரு இந்தியருக்கான சுகாதாரச் செலவு ரூ. 1,215... சுவிட்சர்லாந்து இதே விஷயத்துக்காக ரூ. 4,815 செலவழிக்கிறது...

- அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 1.88 மில்லியன்.... சீனாவுக்கு அடுத்து இந்தியர்களே அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறார்கள்....

- 308 மில்லியன் பேர் நகரங்களில் வசிக்கிறார்கள்... மக்கள் தொகையில் இது 29%. அமெரிக்காவில் 80% பேர் நகரங்களில் தான் வசிக்கிறார்கள்....

- இந்தியக் குடும்பங்களிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 5.3.... அமெரிக்காவில் 2.62 பேர் மட்டுமே....

- 1991-2001ல் அதிகரித்த மக்கள் தொகை மட்டும் 181 மில்லியன்... இது பிரேசிலின் மொத்த மக்கள் தொகைக்குச் சமம்....

- 86% இந்தியர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது..... சீனாவில் 77% பேர்தான் சுத்தமான குடிநீர் பெறுகிறார்கள்....

- 43% பிரசவங்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற மருத்துவர்களால் செய்யப்படுகிறது....

- 5.7 மில்லியன் பேர் இந்தியாவில் எச்.ஐ.வி. / எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள�
�.... இது உலகில் மிக மிக அதிகம் என எச்சரிக்கிறது WHO

- 40% டாக்டர்கள் அரசு மருத்துவ மையங்களுக்கு எப்போதுமே வருவதில்லை....

- 80,466 இந்திய மாணவர்கள் 2005ல் அமெரிக்காவில் படித்தார்கள்... சீனர்கள் 62,523 பேர் மட்டுமே....

- அமெரிக்க இந்தியன் ஒருவனின் சராசரி தனிநபர் வருவாய் ரூ. 12 லட்சம்... வெள்ளை அமெரிக்கர்களுக்கு ரூ. 10.98 லட்சம்.... சீன அமெரிக்கர்களுக்கு ரூ. 9.30 லட்சம்....

- இந்தியர்களின் சராசரி ஆயுள் 64.71 ஆண்டுகள்.... சீனர்களுக்கு 72.58

- 2.5% ஜி.டி.பி ராணுவத்தை பராமரிக்க செலவிடப் படுகிறது... இது சீனாவில் 4.3%... அமெரிக்காவில் 4.06%

- 86% காச நோயாளிகலை இந்தியாவில் குணப்படுத்தி விடுகிறார்கள்.... அமெரிக்காவில் 70% தான்...

- 5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 85.... சீனாவில் இது 31 மட்டுமே....

- 94.1% எழுத்தறிவு பெற்ற ஜெயின்கள் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறார்கள்.... 59.1% எழுத்தறிவு கொண்ட முஸ்லிம் சமூகம் தான் இந்தியாவில் கடைநிலையில் இருக்கிறது....

- 5,00,000 ஜவான்கள் வடக்கு, வடகிழக்கு இந்தியாவை பாதுகாக்கிறார்கள்.... இது ஒட்டுமொத்த அமெரிக்க ராணுவத்துக்கு இணையானது...

- 12,500 ஒற்றை திரையரங்குகளும் 250 மல்டிபிளக்ஸ் அரங்குகளும் இந்தியாவில் இருக்கிறது... அமெரிக்காவில் இது முறையே 1,629 - 1,523

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates