Elegant Rose - Diagonal Resize 2 கள்ள நோட்டுகளின் ஆதிக்கம்.அப்பாவிகள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள். ~ TAMIL ISLAM

புதன், 21 மார்ச், 2012

கள்ள நோட்டுகளின் ஆதிக்கம்.அப்பாவிகள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.






















கள்ள நோட்டுப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

அப்பாவி வாடிக்கையாளர்கள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.

தங்களுக்குத் தரப்படும் கள்ள நோட்டுகளால் நஷ்டம் அடைவதோடு, கள்ள நோட்டு வைத்திருந்த காரணத்துக்காக சில வங்கிகளின் வழக்குகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

வங்கியில் ஒருவர் செலுத்திய தொகை கள்ளநோட்டு என்று தெரிந்தால் என்ன செய்வது?

2006 ஆகஸ்ட் மாதம் ஆர்.பி.அய். வெளியிட்ட ஒரு முக்கிய சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட வங்கி அந்த நோட்டை "பறிமுதல் செய்து. பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டு" என்று முத்திரையிட வேண்டும். கள்ள நோட்டை செலுத்தியவர் கையெழுத்திட மறுத்தாலும், அவரிடம் ஒரு ரசீதை முத்திரையிட்டு வழங்க வேண்டும்.

பிறகு இதுபற்றி உள்ளூர் போலீஸ் எஃப். அய்.ஆர் பதிவு செய்து வழங்கிய பின், கள்ள நோட்டை போலீசுக்கு அனுப்ப வேண்டும். வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புப் பிரிவுக்கு எஃப்.அய். ஆரின் நகல் அனுப்பப்பட வேண்டும்.

அனைத்து வங்கிகளிலும் கருவூலக் கிளைகளிலும் புறஊதா விளக்குகள் இருக்க வேண்டும் என்றாலும், உண்மையில் நிலைமை அப்படி இல்லை.

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய கள்ளநோட்டுத் தடுப்பு நடவடிக்கைகள்

பாதுகாப்பு இழை: ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளில் எந்திரம் மூலம் அறியக்கூடிய பாதுகாப்பு இழை முன்பக்கம் வெளிப்படையாக விட்டுவிட்டும், பின்பக்கம் உள்ளே பதிக்கப்பட்டும் இருக்கும். புறஊதா கதிரில் பட்டதும் இரண்டு பக்கமும் அது மஞ்சள் ஒளியை உமிழும். வெளிச்சத்துக்கு முன்னால் காட்டினால் தொடர்ச்சியாகவும் தெரியும்.

ரூ.100, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளில் இழையின் வண்ணம் பல்வேறு கோணங்களில் பச்சையில் இருந்து நீலமாக மாறும். புறஊதா கதிரின் முன்னால் பின்பக்கம் மஞ்சளாகவும் எழுத்துகள் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும்.

மேடான அச்சு: மகாத்மா காந்தி, ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாதம், வாக்குறுதி, அசோகர் தூண் முத்திரை, ஆளுநர் கையெழுத்து, பார்வையற்றோருக்கான அடையாள முத்திரை ஆகியவை மேடாகத் தெரியும்படி அச்சிடப்பட்டிருக்கும்.

நகலெடுப்பதை தடுக்க ஆம்ரான் முறை: ரூ.50, ரூ.100 நோட்டுகள், ரூ.500 (புதிய வண்ண திட்டப்படி), ரூ.1,000 (எம்.ஜி) வரிசையில் இம்முறை உள்ளது.

சீ-த்ரு பதிவு: ரூ.10, 20, 50, 100, 500, 1,000 ஆகிய நோட்டுகளில் பாதி எண்கள் முன்புறமும் பாதி எண்கள் பின்புறமும் அச்சிடப் பட்டிருக்கும். இதை வெளிச்சத்தில் பார்க்கும்போது, இரு பக்க எண்களும் ஒரே வரிசையி லிருப்பது போலத் தெரியும்.

நீர்க்குறி, எலெக்ட்ரோடைப் நீர்க்குறி: காந்தி உருவம், பலதிசை வரிகள், 10,20,50,100,500,1,000 ஆகிய எலெக்ட்ரோடை எண்கள் மேற்கண்ட வகையில் ஒவ்வொரு நோட்டிலும் அச்சிடப்பட்டிருக்கும். வெளிச்சத்தில் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரியும்.

வேறுபட்ட அச்சு மை பயன்பாடு: 2000 ஆண்டில் வெளியிடப்பட்ட எம்.ஜி. வரிசையோடு ஒப்பிடும்போது, 500, 1,000 ஆகிய எண்கள் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். நோட்டை தட்டையாக பிடித்திருக்கும்போது எண்களின் நிறம் பச்சையாக இருக்கும். கிடைமட்டமாக பிடித்துப் பார்த்தால் நீல நிறத்துக்கு மாறிவிடும்.

இரட்டை வண்ணக் கண்ணாடி இழைகள்:
புறஊதா விளக்கின் கீழ் அசலான நோட்டில் இரண்டு நிறங்களில் (இளஞ்சிவப்பு, நீலநிறம்) கண்ணாடி இழைகள் தெரியும். அச்சிடப்பட்ட ஆண்டு: நோட்டின் பின்புறம் தயாரிக்கப்பட்ட ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates