சமநிலைச் சமுதாயம் ஜூன் 2011 தலையங்கம்.
தேடப்படும் குற்றவாளிகளான 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மத்திய புலனாய்வு அமைப்பின் இணைய தளத்திலும் இப்பட்டியல் வெளியிடப்பட்டது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 50 பேரில் ஒருவரான வஜ்ஹுல் கமர் கான், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது. ஆனால், அவர் மும்பை - 'தானே பகுதியில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவரது பெயர் பட்டிய லிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தானேயில் சேலை வியாபாரம் செய்து வருபவர், கமர் கான். அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ பாகிஸ் தானுடன் எவ்வித தொடர்புமில்லை என்பதும், முன்னர் ஒரு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெளிவந்த அவர், அப்பகுதி போலீஸாரின் கண்காணிப்பி லேயே உலா வருபவர் என்ற செய்தியும் வெளியானதை தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சகத்தின் மானம் மரியாதை கப்பலேறி சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டிருக் கிறது. தொடர்ந்து, அடிமேல் அடிவிழுந்த கதையாக, பட்டியலில் கூறப் பட்டுள்ள பிரோஸ் அப்துல் ராஷித் கான் உள்ளிட்ட இருவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது போதாதென்று, ஏற்கெனவே இறந்துபோன மூவரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தாம். தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் நேர்ந்த இந்தக் குளறுபடிகளைத் தொடர்ந்து, இணையதளத்தி லிருந்து பட்டியலை நீக்கம் செய்துவிட்டது, சி.பி.ஐ.
இச்செய்திகள், ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்தியாவின் அதிகாரம் மிக்க உயர் அமைப்புகளின் மீது பெரும் அதி ருப்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும், அதன் மேதாவி அமைச்சரும் இந்த தவறுகளுக்குப் பதில் சொல்ல முடியா மல் தத்தளித்துக்கொண்டிருப்பதையே காண முடிகிறது. இது பாதுகாப்பு அமைப்புகள் சிலவற்றின் தவறு என்றும், உள்துறை அமைச்சகத்திற்கு இதில் பங்கு இல்லை என்றும் அதனால் நாங்கள் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்றும் சிதம்பரம் கூறி வருகிறார். அப்படியானால், 'இப்படி வாங்கி, அப்படிக் கொடுப்பதற்கு, உள்துறை அமைச்சகம் என்ன 'தபால் அலுவலகமா என்று பாரதீய ஜனதா கேட்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
உலக அரங்கில் இந்தியாவைக் குறை கூறுவதற்கு பாகிஸ் தானுக்கு மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பை வாரி வழங்கியுள்ளார், நமது உள்துறை அமைச்சர், ப. சிதம்பரம். அவரது குட்டிக்கரணங்கள், 'மாண்புமிகு என்ற அடை மொழிக்குப் பொருத்தமானதாக இருக்கலாம்; மானமிகு என்ற அடைமொழிக்குப் பொருத்தமானதல்ல. இது, இந்தியாவின் கௌரவத்தை உலக அரங்கில் கேள்விக் குள்ளாக்கியுள்ளதுடன், மத்திய பாதுகாப்பு அமைப்பினர் இந்தியச் சிறுபான்மை முஸ்லிம்களின் விவகாரங்களில் எத்தகைய அசிரத்தையாக நடந்துகொள்கின்றனர் என்ப தையும் அம்பலப்படுத்துகிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய பாதுகாப்பு அமைப்பினர், முஸ்லிம்களைக் கைது செய்வதில், சட்டரீதி யான எந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆர்வலர்களாலும் முஸ்லிம் அமைப்புகளாலும் தொடர்ந்து முன்வைக்கப் பட்டு வருகிறது. அதற்கு ஆதாரமாக, பல்வேறு வழக்கு களில் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் இன்றி, சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள், எந்த நியாயமு மின்றி, பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படும் தகவல்கள் தொடர்ந்து வெளியாவதுடன், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்துள்ள பட்டியலில் காணப்படும் குளறுபடிகளும், தவறுகளும் பாதுகாப்பு அமைப்பினரின் முஸ்லிம் எதிர்ப்பு மனோ நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் பெயரால், கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளவர்கள் விஷயத்தில், ''அவர்கள் உண்மையான குற்றவாளிகள்தானா என்பதை ஆய்வு செய்ய, மத்திய அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்.
குற்றவாளிகள் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகளைச் சரி செய்வதில் அக்கறை காட்டும் நமது மத்திய உள்துறை அமைச்சகம், சிறைகளில் வாடிக்கொண்டிருப்போர் உண்மையான குற்றவாளிகள் தானா என்பதை விசாரிப்ப திலும் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என்பதே, சட்டத் தின் மீது அக்கறையுள்ள அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக