Elegant Rose - Diagonal Resize 2 அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...! ~ TAMIL ISLAM

வியாழன், 31 மே, 2012

அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...!

''அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்!
குழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள்.
அவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது. பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.
தந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள். இளம் வயதுபிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்தபின் தான் அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை உணர முடியும்.
இந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நான்கு வயதில் குழந்தைகள்:  ஆ! என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.
ஆறு வயதில் அதே குழந்தை: அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது! என்று நினைக்கிறது.
பத்து வயதில்: ''ஒ..அப்பா நல்லவர்தான்! ஆனால் ரொம்ப முன்கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்துகூட இவருக்கு தெரியவில்லையே! ஹூம்.''
பன்னிரெண்டு வயதில்: நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்....ஆனால் இப்போது ஏன்.......... இப்படி?
பதினாறு வயதில்: சே! அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை....
பதினெட்டு வயதில்: இதென்ன! வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு விபரமே தெரியாதவர்.
இருபது வயதில்: அப்பப்பா! இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ?
இருபத்தைந்து வயதில்: என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா? எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்துகொள்ளப் போகிறாரோ? கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.
முப்பது வயதில்: (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்): அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகளை சமாளித்தாரோ (ஆச்சிரியம்)
முப்பத்தியைந்து வயதில்: ஒ மைகாட்! வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே! நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்! இப்பபாரு... வாலுங்க இது
நாற்பது வயதில்: ஆ! எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசயமாகவே இருக்கின்றது.
நாற்பதைந்து வயதில்: எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டு வந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.
ஐம்பது வயதில்: இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.

ஐம்பதைந்து வயதில்: அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர்எவ்வளவு கட்டுப்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார்.அவரல்லவா மனிதன்.
அறுபது வயதில்: (கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த மனிதர் யாரும் இருக்கவே முடியாது.
இளைஞர்களே... இளைஞிகளே!

நாமும் வருங்காலத்தில் தந்தையோதாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து, குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்ய மாட்டார்கள் என்பதையும் மனதில்வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.
                                                                                அன்புடன்,
                                                                    மதுரை தமிழ்காரன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates