அர்த்தமுள்ள அரபிப் பொன்மொழிகள் (1) 01. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ். 02. அறிவுத்துறை ஆயிரமானாலும் ஆண்டவன் ஒருவனே. 03. அவனவன் புத்திசாலித்தனத்தில் அவனவனை திருப்திப்பட வைத்த ஆண்டவனுக்கே புகழனைத்தும். 04. அறிவைத் தேடுபவனும் செல்வத்தைத் தேடுபவனும் திருப்திப்படமாட்டான். 05. அடிமையின் ஆசை பூர்த்தியானால் சுதந்திர மனிதனாவான். சுதந்திர மனிதனோ ஆசைகளுக்கு அடிமை. 06. அறிஞன் தான் பார்த்தைச் சொல்வான். அறிவுகெட்டவன் தான் கேட்டதைச் சொல்வான். 07. அதிக மிருதுவாய் இருந்தால் பிழிந்து விடுவார்கள். கடினமாய் இருந்தால் உடைத்து விடுவார்கள். 08. அதிகாலையில் கிடைக்கும் ஒரு கோப்பை தேநீர் நூறு ஒட்டகைகளுக்குச் சமம். 09. அரபு மான்களை அலங்கரிக்க ஆபரணங்கள் தேவையில்லை. 10. அறிவுடையோனின் ஒரு நாளைய வாழ்க்கை முட்டாளின் முழு வாழ்க்கைக்குச் சமம். 11. அன்பான வரவேற்பு அருமையான விருந்தைவிட உயர்வானது. 12. அந்நியரோடு கைகுலுக்கினால் விரல்களைச் சரிபார்த்துக்கொள். 13. அந்நியனின் உபசரிப்பு அவனுக்கு கடன்பட்டது போல. 14. அந்நியனோடு மலர்த்தோட்டத்தில் இருப்பதைவிட நண்பனோடு சிறையிலிருப்பது மேல். 15. அரண்மனையில் அடிமையாய் இருப்பதைவிட சிறு குடிசையில் சுதந்திரமாய் இருப்பது மேல். 16. அதிர்ஷ்டம் தேடுபவரிடம் போகாது. ஏற்கனவே அது உள்ளவரிடமே தேடிப்போகும். 17. அதிகப் பணமே அதிக பாவத்தின் அஸ்திவாரம். 18. அதிக ஆலோசனை விரோதத்தை வளர்க்கும். 19. அடிக்கடி பாதை மாற்றுபவன் சந்தோஷத்தை இழப்பான். 20. அடுப்பை ஊதுவதை வைத்து அவன் சமைப்பதாக நினைக்கக் கூடாது. 21. அஸர் (மாலை) பொழுதைக்கொண்டு இஷா (இரவு) பொழுது எப்படி எனலாம். 22. அலை கடலையே விழுங்குபவனுக்கு ஆற்றைக் கண்டால் பயமாம். 23. அவசரத் தேவையின்போதுதான் மனிதரின் உண்மை நிறம் புரியும்.. 24. அவனுக்கு அரண்மனையைக் கட்ட இவனுடைய குடிசையையா இடிப்பது. 25. அவனுடைய ஒரு ஜாடியை நீ உடைத்தால் உன் நூறு ஜாடிகளை உடைத்துத்தான் வஞ்சம் தீர்ப்பான். 26. அழகிய பணியாட்கள் ஆபத்தானவர்கள். 27. அளவுக்கு மிஞ்சிய வினாக்கள் பிரிவினைக்கு வித்திடும். 28. அளவுக்கு மிஞ்சியிருப்பதும் ஒன்றுமே இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். 29. அடுத்த வீட்டுக்காரனுக்காக புதைகுழி வெட்டும்போது உனது உருவ அளவை உள்ளத்தில் கொள். 30. அருமையான ஆரோக்கியமான வீடு எதுவென்றால் அகலமான முற்றம், உயரமான அறைகள், பெரிய நுழைவாயில், தூரத்திலுள்ள கழிப்பறை ஆகியவற்றைக் கொண்டதே. |