Elegant Rose - Diagonal Resize 2 பெருமானார் கண்ட போர்க் களங்கள் ~ TAMIL ISLAM

வியாழன், 31 மே, 2012

பெருமானார் கண்ட போர்க் களங்கள்

''நபியே! (முஹம்மதே) உம்மை அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாகவே நாம் அனுப்பியுள்ளோம்.'' அல்குர்ஆன் 21:107
முன்னுரை.  புகழனைத்தும் வல்ல இறைவனுக்கே!
மனிதன் வாழும் இந்த உலகில் நீதி, நியாயம், நேர்மை, ஒழுக்கம் போன்றவை மறைக்கப்பட்டு அநீதங்களும், அக்கிரமங்களும் தலைதூக்கி, இறைச்சட்டங்கள் மதிக்கப்படாத நிலை உருவாகிறது. அந்நிலையில் இப் பிரபஞ்சமே நாசத்தின் உச்சத்தை எட்டித் தன்னை மாய்த்துக்கொள்ளும். அப்போது அதைக்காப்பாற்றுவதற்கு இறைவனைத் தவிர வேறு எவரும் சக்தி பெறமாட்டார். எனவே ஒவ்வொரு மனிதனும் இத்தகைய இழிவு ஏற்படாவண்ணம் விழிப்புடனே வாழவேண்டியது அவசியம். அதனை மீறியும் அக்கிரமங்கள் தலைதூக்குமானால் அதன் ஆணிவேரை அறுக்க வேண்டும். இப்படியொரு சிறப்பான பணியை அன்றைய அறியாமைக் கால மக்கள் மத்தியில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதன் காரணமாக அத்தீய சக்திகள் அவர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் அழிக்கமுற்பட்டன. அவர்கள் சென்ற இடங்களிளெல்லாம் பின்தொடர்ந்து தொல்லைகள் பல கொடுத்தன. அவை, எல்லை மீறியபோது அந்தப் பொறுமையின் சிகரங்கள் வேறு வழியின்றி பொங்கி எழுந்தனர். இருந்தபோதிலும் அவர்கள் அநியாயமாக எவரையும் அழித்தொழிக்கவில்லை. அவர்களு டைய வாழ்நாளின் பெரும் பகுதியில் யுத்தங்கள் நடந்திருந்தபோதிலும் அவர்களால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 1070 மட்டுமேயாகும் என்பது குறிப்பிடத் தக்கது. வரலாறு இன்றுவரை இதனைஅறிவித்துக் கொண்டிருக்கின்றது.
அன்றைய காலம் போன்றே இன்றைய காலச்சூழலிலும் பாசிச சக்திகள் மனித இனத்தை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. நாளுக்குநாள் நாசவேலைகள் அரங்கேறுகின்றன. இவற்றிற்குத் தீர்வு ஏற்படாதா என மனித இனம் ஏங்குகிறது. இறைச் சட்டத்தால் மட்டுமே இதற்குச் சரியான தீர்வை வழங்க முடியும். ஆனால் பலர் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். இறைச் சட்டங்களை மனித இனம் எப்போதும் நினைவில் நிறுத்திக் கொண்டே இருக்கவேண்டும். முஸ்லிம் களில் பெரும் பகுதியினர் இதைக்கவனத்தில் கொள்ளாதிருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது.
இறைச்சட்டங்களை மக்களுக்கு நினை¥ட்டும் பொறுப்பு முஸ்லிம்களுக்கே உள்ளது.  அவர்கள் இதை மறந்துவிடக்கூடாது. இஸ்லாமியச் சட்டங்கள் உலக அளவில் தவறாகச் சித்திரிக்கப் படுகின்றன. மேலை மற்றும் கீழைநாட்டு அறிஞர்கள் தங்கள் இலக்கியங் களில் இஸ்லாத்தை இகழ்கின்றனர். அதிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் போர்க்கால வாழ்க்கையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ தவறான விமர்சனங்களையும் செய்து வருகின்றனர். இதற்குச் சான்று பகன்றாற்போல் முஸ்லிம்களில் சிலர் 'ஜிஹாத்' என்பதற்குப் புரியாத, புதிரான பல விளக்கங்களைக் கூறிக் கொண்டிருக் கின்றனர். எனவே இவர்களின் சிந்தனைப் போக்கில் இறைவன் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மெய்யான சட்டங்களைப் புகுத்த வேண்டும் என்ற நோக்கில் தொகுத்து அளிக்கப்பட்டதே தங்களின் கரங்களில் தவழுகின்ற இந்நூல்.
இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் இறைச்சட்டங்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதே எம் அவா!
இந்நூலிற்கு மதிப்புரை நல்கிய மவ்லவி எஸ். கமாலுத்தீன் மதனி அவர்களுக்கும், நான் இதை நன்றே தொகுத்தளிப்பதற்குத் ஏதுவாகப் பல ஆங்கில குறிப்புகளை எமக்குத் தமிழில் மொழியாக்கம் செய்துதவிய அன்புச் சகோதரர் இதழியல் முதுநிலைப் பட்டதாரி இந்தியா டுடே யு. பீர்முஹம்மத்  (தக்கலை) அவர்களுக்கும், இந்நூலாக்கத்தில் பெரிதும் உதவிய அன்பு நண்பர் களந்தை பீர் முஹம்மத் அவர்களுக்கும், இரண்டாம் பதிப்பாக இதை வெளியிடும் ஃபுர்கான் பப்ளிகேஷன் ட்ரஸ்ட் நிறுவனத்திற்கும், இப்பணிகள் தொடர அருள் புரிந்து கொண்டிருக்கும் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் பல.
அன்புடன்.  எம். எம். அப்துல்காதிர் உமரி
பெருமானார் கண்ட போர்க்களங்கள்
போர் என்பது மனித வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அம்சம்! அக்கிரமங்களையும், அநீதிகளையும் அகற்றி நியாயத்தை நிலை நிறுத்தப் போரிடாத மனிதன் உயிரற்றுக்கிடக்கும் சடலத்திற்குச் சமம்! அவன் உயிர் வாழ்வதில் யாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.
W. J. Coats தன் ``Armed Forces as power''எனும் நூலில் பக்கம் 15ல், ``War is a constituent of the history of man kind'' ''போர் என்பது மனித வரலாற்றில் பின்னிப்பிணைந்த ஓர் அம்சமாகும்'' என்று குறிப்பிடுகிறார்.
மனிதனாகப் பிறந்த ஒருவன் தனிப்பட்ட வெறுப்பு, விருப்பிற்கு அப்பாற்பட்டு நீதி, நேர்மை, நியாயத்தோடு வாழ வேண்டும்;  தன்னைப் படைத்து ஆட்சி செய்யும் இறைவன் ஒருவனுக்கு மட்டும் கட்டுப்பட்ட வனாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இறைநம்பிக்கையாளன் ஒருவன் அநீதம் அக்கிரமங்களை எதிர்த்து போராட வேண்டும்.
''எவனொருவன் இறைவழிப் போராட்டத்தை மேற்கொள்ளாமல் அதைத் தன் மனதளவில் கூட நினைக்காமல் இறந்து விடுகிறானோ, அவன் நயவஞ்சகத் தன்மையின் ஒரு பகுதியைத் தன்னுள் கொண்டவனாகவே இறந்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 1
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ''ஒருவர் போரில் கிடைக்கும் (கனீமத்) பொருட்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொருவர் புகழ் விரும்பிப் போரிடுகிறார்;  மூன்றாமவர் தன் வீரத்தைக் காண்பிப்பதற்காகப் போரிடுகிறார். இதில் இறைவனுக்காகப் போரிடுபவர் யார்?' எனக் கேட்டதற்கு, 'எவர் அல்லாஹ்வின் (கலிமா) மார்க்கம் உயர்வதற்காகப் போராடுகிறாரோ அவரே இறைவழியில் போர் புரிந்தவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.2
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பதில் இறைச்சட்டம் நிலை பெறச் செய்வதற்காக மட்டுமே போர் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. இதனடிப்படையில் தேவைக்கேற்ப போர்  நடத்தப் பட வேண்டும்.
போரின் முதற்கட்டமே போராட்டம். அதில் ஈடுபடாத மனிதன் இல்லை. போராட்டக் குணம் மனிதனுள் பிறந்துள்ள பண்பாகும்.
ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் தகுதியைப் பெற்றிருக்கும் சிறுவன் முதல் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பெரியவர் வரையிலான அனைவருமே இவ்வுலக வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.  இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
சிறுவர்கள் தங்களின் பெற்றோரிடம் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டு, அவை கிடைக்காத பட்சத்தில் அழுகிறார்கள், குதிக்கிறார்கள், கொதிக்கிறார்கள். இது அவர்கள் அப்போது செய்யும் போராட்டம்.
அந்தச் சிறுவர்கள் வெளியில் சென்று வீதிகளைச் சுற்றி, பள்ளியில் படித்து வரும் காலகட்டத்தில் அப்போதைக்குத் தேவையான சில பொருட்களை வாங்கித்தர வேண்டுமென்ற கோரிக்கையைத் தம் பெற்றோரின் முன் வைக்கிறார்கள். பெற்றோர் அதை மறுத்தால் சிறுவர்களின் கோபமும், பிடிவாதமும் அவர்களைக் கலங்கச் செய்கிறது. இது அவர்களின் அப்போதையப் போராட்டமாகும்.
அவர்கள் திருமண வயதை அடைந்ததும், தங்களுக்குத் திருமணம் தேவை என்பதைத் தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை மணமுடித்து வைத்துவிட்டால் சரி; இல்லையெனில் அதற்காகவும் நடக்கிறது ஒரு கடும் போராட்டம்.
இவ்வாறாக அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்ததும் பணி புரியக் கூடிய இடங்களில் ஏதேனும் உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டால், அந்த உரிமைகளை எப்படியும் பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல போராட்டங்களை நடத்துகிறார்கள். 
தள்ளாத வயதையடைந்த காலகட்டத்தில் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ள எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகும்போது, தங்களைப் பாதுகாக்கும்படியான கோரிக்கையை தம் சந்ததியினரிடம் வைக்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டால் பலரிடமும் முறையிட்டுக் குமுறுகிறார்கள். அது அவர்கள் அந்நிலையில் நடத்தும் போராட்டமாகும். இத்தகைய போராட்ட மனநிலை மனித மனதில் இயற்கையாகவே இருந்து வருகிறது மனோதத்துவ நிபுணர்களும் இதை ஒப்புக் கொன்கிறார்கள்.
இந்த அடிப்படையிலேயே உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் சக்திக்கும், சூழலுக்கும் தக்கவாறு வாழ்க்கைப் பயணத்தில் போராடிக் கொண்டிருக்கிறான். போராட்டம் என்பது மனித வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ளதையே மேற்கண்ட உதாரணங்கள் உணர்த்துகின்றன. இப்போராட்டத்தின் உச்சக்கட்டமே போர்!
போர் என்பதை மனிதன் தன் வாழ்க்கையில் சிந்தித்தே பார்க்கக் கூடாது என்று எண்ணுவது அறிவீனமாகும். அதே போல் போர்செய்து கொண்டே இருப்பதுதான் மனித வாழ்க்கையின் எதார்த்தம் என்று எண்ணுவதும்!
உண்ணுதல், பருகுதல், இன்பம் கொள்ளுதல் போன்ற பல அம்சங்களைக் கொண்டது மனித வாழ்க்கை! அவ்வாறே போர் என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அம்சம் என்பதை மறந்து விடக்கூடாது. மனிதனுக்குத் தூக்கம் வரும்போது தூங்கியாக வேண்டும்; பசி உண்டாகும்போது புசித்தாக வேண்டும்;  தாகம் உண்டாகும்போது நீர் பருகியாக வேண்டும். தூக்கம் வந்தும் தூங்காமலோ, பசி ஏற்பட்டும் புசிக்காமலோ, தாகம் ஏற்பட்டும் பருகாமலோ எப்படி இருக்க இயலாதோ அவ்வாறே வாழ்க்கை முழுவதும் இதே செயல்களைச் சதா செய்து கொண்டே இருக்கவும் முடியாது.
இதேபோன்று மனிதன் தன் வாழ்க்கையில் எப்போதும் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணினாலோ, அது தேவை ஏற்படும்போதும் செய்யக் கூடாது என்று எண்ணினாலோ தர்ம நியாயங்களை நிலைநாட்ட முடியாது.
இவ்வுண்மையை மனிதச் சமுதாயம் நன்கு விளங்கிக் கொண்டால் போர் என்பதைச் சுத்தமாக ஒதுக்கியும் விடாது; கண்களை இறுக மூடிக்கொண்டு ஆதரிக்கவும் செய்யாது.
'ஜிஹாத்' ஒரு விளக்கம்
இன்றையச் சூழலில் 'ஜிஹாத்' என்பதற்கு சில முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத இலக்கியவாதிகள் சிலரும் தவறான விளக்கங்களை அளித்து இஸ்லாமிய நெறிமுறைக்கு மாற்றமாகச் செயல்படத் தூண்டுகின்றார்கள். இதனால் ஏற்பட்டுள்ள தீயவிளைவுகள் எண்ணில் அடங்காதவை.
காதுரி மஜித் எனும் அறிஞர் ‘‘Law of war peace in Islam''(போர்ச் சட்டங்களும், இஸ்லாத்தின் அமைதியும்) எனும் நூலின் ‘‘Jehad is the normal condition of affairs of an islamic state’’''ஓர் இஸ்லாமியத் தேசத்தின் செயல்பாட்டில் 'ஜிஹாத்' என்பது எதார்த்தமான நிலையாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அதே நூலில் பக்கம் 2ல் 'ஜிஹாத்'தைப்பற்றிக் குறிப்பிடுகையில்,‘‘Technically speaking, there is no war in islam in the modern sense of the term. It was always a Holly War a Jehad’’''தெளிவாகச் சொல்வதென்றால் போர் குறித்த நவீன கண்ணோட்டத்தைப் பார்ப்போமாயின் இஸ்லாத்தில் போர் என்பதே இல்லை எனலாம். இஸ்லாத்தில் நிகழ்ந்தவை யாவும் 'ஜிஹாத்' என்னும் புனித போர்களே. இஸ்லாமியத் தேசத்தில் புனிதப் போர் வழமையான ஒன்று''. என அவர் இதையே குறிப்பிடுகிறார்.
ஆனாலும் ஞானிகள், அறிஞர்கள் என்று போற்றப்படும் சிலர் இஸ்லாத்தைப்பற்றி எழுதும்போது மட்டும் தங்கள் இதயக் கண்களை மூடிக் கொள்வதேனோ?
இஸ்லாம் எனும் வார்த்தையின் பொருள் அறியாமல், தான் தோன்றித் தனமாக விளக்கங்களை யார் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இஸ்லாம் என்பதன் பொருளை ஒருவர் சரிவர அறிந்திருப்பாரானால் அவர் ஒருபோதும் அதைப் பற்றித் தவறாக எழுதவேமாட்டார்.
அறிஞர்களே! உங்கள் கவனத்திற்காக இஸ்லாமியத் தேசத்தின் தன்மைகளை முன்வைக்கின்றேன்.
'இஸ்லாம்' எனும் வார்த்தை சாந்தி, சமாதானம் போன்ற விரிந்த பல அர்த்தங்களைக் கொண்டது. சாந்தமான தேசத்தில் வாழ்வோர் தமக்குள் எப்படிப் போரிட்டுக் கொள்வர்? இஸ்லாமியத் தேசத்திற்குள் போர் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஏனெனில் முஸ்லிம்களில் எவரும் தேசியவாதத்தை முன்னிறுத்துவதில்லை; அவர்கள் தங்களுக்குள் சகோதரர் என்பதையே அறிந்திருக்கிறார்கள்.
''நிச்சயமாக இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (தங்களுக்குள்) சகோதரர்களே.'' (அல்குர்ஆன் 49:10) சகோதரர்கள் தங்களுக்குள் எப்படி அடித்துக் கொள்வார்கள்? 3
இஸ்லாமியத் தேசத்தில் முஸ்லிம்களை அண்டி வாழும் பிற மதத்தவர்களை, இறைநம்பிக்கையாளர்கள் எவ்விதத் தீங்கிற்கும் உள்ளாக்கியதில்லை;  இனிமேலும் அப்படிச் செய்யமாட்டார்கள். ஏனெனில் இறைவனும் இறைத்தூதரும் அதைக் கண்டிப்பான முறையில் தடை செய்துள்ளார்கள்.
''அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக ஆக்கிய எந்த உயிரையும் நியாய மின்றிக் கொலை செய்யாதீர்கள்.'' (அல்குர்ஆன் 6:51)
''ஒரு மனிதனைக் கொலை செய்த (குற்றத்)திற்காக அன்றி, அல்லது பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக அன்றி, வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கிறவன் (உலகிலுள்ள) மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான்.' (அல்குர்ஆன் 5:32)
மேற்கண்ட இறைவசனங்கள் ஒரு முஸ்லிமைத்தான் கொலை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்யவில்லை. இனம், மொழி, நிறம், மதம் இப்படி எந்த வகையில் வேறுபட்டவனாக இருந்தாலும் அவனைக் கொலை செய்யக் கூடாது என்றே எச்சரிக்கிறது. மேற்கண்ட இறைவசனத்தை விளக்கும் முகமாக இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியுள்ளதையும் கவனிப்பது அவசியம்.
''(தன் சமுதாயத்தோடு) ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும் (திம்மியான) ஒருவனை (தகுந்த காரணமின்றி) கொலை செய்துவிடுகிறவன் சுவர்க்கத்தின் வாடையைக் கூட சுவாசிக்க மாட்டான்.''  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.4
'திம்மிகள்' 5 மரண தண்டனைக்குரிய குற்றங்கள் புரிந்துவிட்டாலும், தான் தோன்றித்தனமாகத் தண்டனைகள் எவரும் கொடுத்துவிட முடியாது. இஸ்லாமிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இறைச் சட்டங்களின் அடிப்படையில் சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டு அதன் பின்னரே தண்டனை கொடுக்க முடியும். இதுவே இஸ்லாமிய நியதி. சட்டங்கள் இந்த அளவு தெளிவாக இருக்கும்போது மேலை நாட்டு எழுத்தாளர்களால் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; சாந்தத்தையே விரும்பக் கூடியவர்கள் என்பதற்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு உள்ளது. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் தருணங்களிலெல்லாம் ''அஸ்ஸலாமு அலைக்கும்'' உங்களுக்கு (இறைவனின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று கூறிக்கொள்வதாகும்! இது இறைவன் இட்ட கட்டளையாகும்.
''உங்களுக்கு (அஸ்ஸலாமு அலைக்கும் எனும்) வாழ்த்து கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப்போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்.'' (அல்குர்ஆன் 4:86)
இன்னும் இறைத்தூதர் அவர்கள் இதைப் பற்றிக் கூறுகையில்... ''நீங்கள் இறைநம்பிக்கையாளராக ஆகும் வரை சுவர்க்கம் புகமாட்டீர்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) அன்பு கொள்ளாதவரை இறைநம்பிக்கை கொள்ள முடியாது. உங்களுக்கு மத்தியில் அன்பை உண்டாக்கக் கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா? நீங்கள் (சரியாக அதை) செயல் படுத்துவதாக இருந்தால், உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரவலாகக் கூறிக் கொள்ளுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.6
காலை நலமாகட்டும் (புழழன  ஆழசniபெ), மாலை நலமாகட்டும் (புழழன நுஎநniபெ) என்று கூறக்கூடிய தேசங்களில் அமைதி நிலைத்திருப்பதாக மேலை நாட்டு அறிஞர்கள் பிதற்றுகிறார்கள். அனைத்தும் நலமாவதற்கு இறைவனின் சாந்தி ஏற்படட்டும் என்று எப்போதும் கூறிக் கொண்டிருக்கக்கூடிய இஸ்லாமியத் தேசத்தில் அமைதி இல்லை எனும் இவர்களின் கூற்று வியப்பை அளிக்கிறது.
அமைதி நாடும் அறிஞர்களே!
உலகளாவிய தலைவர்களும், தத்துவ ஞானிகளும், எழுத்துலக மேதைகளும், மேடையில் முழங்கும் பேச்சாளர்களும் நாங்கள் விரும்புவது அமைதியைத்தான் என்று கூறுவதில் குறை வைத்திட வில்லை. இவர்களின் அகராதியில் அமைதி என்பது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், போதை, லஞ்சம், ஊழல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது தான் போலும்!
''நாங்கள் உலகிற்கு அமைதியை விரும்பும்றோம்'' என முழங்கும் எவரின் தேசத்தில் மேற்குறிப்பிட்ட கொடிய குற்றங்கள் தலைவிரிக்காது இருக்கின்றன?
மனிதக்கரங்கள் இயற்றிய வலுவில்லாச் சட்டங்களை இவர்கள் பின்பற்றித் திரியும் வரை மேற்குறிப்பிட்டத் தீமைகளை அகற்றவே முடியாது. இறைவனால் அருளப்பட்ட சட்டங்களைக் கொண்டு இவற்றின் தலையில் ஆணியடித்தாலே உலகம் அமைதியுறும். இக்கொடிய குற்றங்களுக்கு எதிராக இறைச்சட்டங்களைச் செயல் படுத்தும்போது எழக்கூடிய எதிர்ப்புகளுக்கும், எதிர்கொள்ளும் இழப்புகளுக்கும் தக்க பரிகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குமாறாக, எதையும் கண்டு கொள்ளாதிருப்பதே அறிவார்ந்த செயல் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு கூறும் அவர்களின் சொத்துக்களுக்கோ, சொந்தங்களுக்கோ குற்றங்களால் இழப்புக்கள் ஏற்படும்போது இந்த தத்துவங்களை மறந்து, இரத்தம் படிந்த கையோடு மனிதச் சடலங்கள் மீது நடைபோடுகின்றனரே! அது ஏன்? இழப்புகளுக்கு ஈடு கட்டத் துடிப்பது எதார்த்தமான மனிதக் குணம் என்பதை அமைதி வாதம் பேசும் அறிஞர்கள் நன்றே அறிந்து கொள்ளட்டும்!
அமைதி நிலவும் தேசத்தை அழிக்கத் துடிப்போரை எதிர் கொள்வது அறிவார்ந்த செயலா? அல்லது இவர்கள்போன்ற சிலரை வாழவிட்டு தேசத்தையே அழிவிற்குள்ளாக்குவது அறிவார்ந்த செயலா?
''குழப்பம் செய்வது கொலையிலும் கொடியது'' (அல்குர்ஆன் 2:191)
விஷத்தன்மை கொண்ட ஜந்துக்கள் மனிதனைத் தீண்டும்போது எந்த அறிவாளியும் அவற்றை உயிர்வாழுமாறு விட்டுவிட மாட்டான்.
உண்மையில் குழப்பம் செய்தல் கொலையிலும் கொடியது என்பதால் அதை அகற்றி, பூமியில் அமைதியை நிலை பெறச்செய்யும் வரை ஓயக்கூடாது என்பதே இஸ்லாமியத் தீர்வாகும்.
குழப்பங்கள் ஒழிந்து, வாழ்க்கை நெறி  அல்லாஹ்வுக்கே உரித்தானதா(ம் சாந்தமான சூழல் உண்டா)கும்வரை நீங்கள் (இறைமறுப்பாளர்களான) அவர்களோடு போரிடுங்கள். ஆனால் அவர்கள் (குழப்பமேதும் செய்யாது) விலகிக் கொண்டால் அக்கிரமக்காரர்களைத் தவிர வேறு எவரையும் துன்புறுத்துவது அனுமதிக்கப்பட்டதல்ல. (அல்குர்ஆன் 2:193)
குழப்பங்களைத் தீர்ப்பதற்கு முதன் முயற்சி இறைச்சட்டங்களை முறையாக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைத்து, அச்சட்டத்தின் பால் அவர்களை அழைப்பதாகும். அவற்றை ஏற்றுக் கொண்டோரை அங்கீகரித்தும், மறுப்போரைக் குறைந்த பட்சம் குழப்பங்கள் செய்யாத நிலையிலாவது வாழச் செய்வதுமே இஸ்லாமியத் தேச அமைப்பாகும். இவ்வாறு இறைவன் இட்டுள்ள கட்டளையினை ஒரு தேசம் செயல் படுத்தும்போது, அதற்கு எதிராக இன்னல் ஏற்படுத்தித் துன்புறுத்த முயற்சிப்போரைத் தடுத்து ஒருவர் தன்னையும், தன் நாட்டு மக்களையும் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளும் புனித தற்காப்பு நடவடிக்கை 'ஜிஹாத்' என்றழைக்கப்படுகிறது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முறைகளும், கட்டளைகளும் இவ்வாறே உள்ளன. சிறிதளவும் மாற்றமில்லாமல் அவற்றை அப்படியே செயல்படுத்துவது, தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொள்வோர் மீது கட்டாயமாகிறது.
'முஸ்லிம்' என்றால் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் என்று பொருள். எனவே இறைச்சட்டங்களுக்குக் கட்டுப்படாதவன் ஒருபோதும் முஸ்லிமாக இருக்க முடியாது. குறிப்பாக இந்தியா போன்ற தேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பிற சகோதரர்கள் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைப்பதே ஜிஹாதின் முதற் கட்ட நடவடிக்கை யாகும்; இதை மறந்து வன்முறைக் களத்தில் இறங்குவது ஒருபோதும் 'ஜிஹாத்' என்ற அங்கீகாரம் பெறாது.
சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இஸ்லாத்தையும், இஸ்லாமியத் தேசத்தையும், அதில் வாழும் முஸ்லிம்களையும் அழிக்கும் செயலில் எதிரிகள் இறங்கும்போதே 'ஜிஹாத்' எனும் இறைவழிப்போருக்கான அனுமதியை இறைவன் வழங்குகிறான், அதை தடுத்துக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை.
போரிட்டுக் கொண்டிருக்கும் (முஸ்லிம்களான) அவர்களுக்கு அநீதம் இழைக்கப்பட்டுள்ளதால், (முன்னரே அல்லாஹ்விடமிருந்து போருக்கான) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. அவர்களுக்கு உதவி செய்வதில் அல்லாஹ் ஆற்றல் மிக்கவனாவான். (அல்குர்ஆன் 22:39 )
தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வு காணும் அனுமதியை இறைவன் வழங்கியப் பின்னரும், அதைக் கண்டு கொள்ளாது கோழைகளாகக் குன்றிக் கிடப்போரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறான் இறைவன்.
''பலஹீனமான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் ஆகியோரைப் பாதுகாப்பதற்காக இறைவழியில் நீங்கள் போரிடாதிருக்க என்ன தான் காரணம்? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! இவ்¥ரைவிட்டு எங்களை வெளியேற்றுவாயாக் எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் தந்தருள்வாயாக'' என்று பிரார்த்திக்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 4:75)
கண்களை மூடிக்கொண்டு களத்தில் குதிப்பதை 'ஜிஹாத்' (புனிதப்போர்) என்று கூறமுடியாது. இறைக்கட்டளைக்குட்பட்டு தவறான விளக்கங்கள் அளிக்காமல் இஸ்லாமியத் தேசத்தில் வாழும் மக்களைப் பாதுகாப்பதே 'ஜிஹாத்' எனும் புனிதப்போராகும்.
இஸ்லாமிய வரலாற்றில் இறைத்தூதர்(ஸல்) அவர்களோ, இறைநம்பிக்கையாளர்களோ நடத்திய போரில் எதிரிகள் ஆயுதங்களை எறிந்துவிட்டு இணங்கிவிட்டால், எவ்வித இன்னலும் கொடுத்ததாகச் சரித்திரமில்லை. பாவங்கள் செய்திருப்பினும் அவை மன்னிக்கப்பட்டன் மறக்கப்பட்டன. இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர்ச் சூழலில்லாத காலங்களில் தம் கண்களில்பட்ட எதிரிகளை இன்னல் செய்ததில்லை.
இறைநம்பிக்கையாளர்கள் உண்மையில் பொறுமையின் சிகரம். ஆனால் அக்கிரமங்கள் விஞ்சுமானால் கடுமையின் சிகரம். இதுவே முஸ்லிம்களின் பண்பாகும் இஸ்லாமியத் தீர்வாகும்.
அமைதி விரும்பிகளே(!) உங்களால் முடியுமானால் திருக்குர்ஆன் கூறும் 'ஜிஹாத்' எனும் திட்டம் தவிர்த்து உலக அமைதிக்குத் தீர்வைத் தரும் ஒரு பிரதியைக் கூறுங்கள்.
அமைதி என்ற வார்த்தையை மட்டும்தான் உங்களால் முழங்க முடிகிறது. ஆனால் நீங்கள் கூறுகிற அமைதிச் சின்னங்களை இப்பிரபஞ்சத்தில் முழுமையாகக் காண முடியவில்லை. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அன்று ஏற்படுத்திவிட்டுச் சென்ற அமைதி என்றும் அணையாதது. இது தத்துவ ரீதியாக மட்டும் சொல்லப் பட்டதன்று. முன்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் அபூபக்கர் (ரலி), அதன் பின்னர் உமர்(ரலி) என்று ஐம்பது ஆண்டு காலங்கள் அகிலத்தின் பெரும் பகுதியை அமைதியே ஆட்சி செய்துள்ளது நவீனத்துவத் துதிபாடும் உங்களின் தத்துவங்கள் வரலாற்றின் எந்தக் காலத்தில் உலகின் எந்தப் பகுதியில் செயல்வடிவம் பெற்றுள்ளன?
மனிதன் மீது மனிதன் செலுத்துகின்ற ஆதிக்கத்தை அழித்து, இறைச்சட்டத்தின் வாயிலாக மனித இன மேம்பாட்டிற்காக உழைப்பதே 'ஜிஹாத்' எனப்படும்.
தீமைகளின் ஆணிவேர் தீய அரசுகளே! எனவே அதன் ஆணிவேர் அறுக்கப்படாவிட்டால் அது வேரூன்றி, காய் காய்த்து, பழுத்து தன் விஷத் தன்மையால் அனைத்தையும் அழித்துவிடும். ஒரு தேசத்தில் நடக்கும் கடும்கொடுமையினைக் கண்ணுற்றும் மௌன மாமன்றமாக அரசு இருக்குமானால் தீய விளைவுகள் மென்மேலும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
தேசத்தில் விஷச்செடிகள் வேரூன்றுவதை எச்சரித்தும், அதன் மீது கவனமற்ற நிலையில் ஓர் அரசு இருக்குமானால். அத்தகைய அரசு அதிவிரைவில் அகற்றப்படவேண்டும். 
இஸ்லாமிய இராணுவ அமைப்பு
சீரமைக்கப்பட்ட தெளிவான தளபதிகளையும் போர்வீரர்களையும் கொண்டதே இஸ்லாமிய இராணுவ அமைப்பு. உலகின் மிகச்சிறந்த இராணுவ அமைப்பாக அது இருந்தது. நிகரற்ற எந்தத் தனிமனிதனின் ஆதிக்கமும் இல்லாத நிலையில் இறைகோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருந்தது அந்த இராணுவம். அதில் நயவஞ்சகர்களுக்கும் இறை நன்றி கெட்டவர் களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. உலகெங்கும் அமைதியை நிலைபெறச் செய்யத் துடிக்கும் வீரர்களையும் தீரர்களையும் தன்னுள் கொண்டிருந்தது. தன் உயிரையும், பொருளையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அது பெற்றிருந்தது. இறையச்சம் மிகுந்தவர்களை மட்டுமே தன்னுள்ளடக்கியதாகத் திகழ்ந்தது. நெஞ்சு பிளக்கப்பட்டு இதயம் துண்டு துண்டாக்கப்பட்ட போதிலும், பின் வாங்கிக் காயங்களைத் தம் முதுகில் சுமக்காத வீரத்தியாகிகளின் இருப்பிடமாக அந்த இராணுவம் இருந்தது. கூலிக்கு மாரடிக்காமல் இறைவனின் திருப்திக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் தியாகச் செம்மல்களின் உறைவிடமாகும் அது. போர் எனும் தீ மூண்டு கொளுந்துவிட்டு எரியும் போதும், கருணையும் மனித நேயமும் கொண்டவர்களைத் தன்னுள் அடக்கிய அது இறைவனின் இராணுவமாகும். அதன் வெற்றிக்கு வித்திட்டவன் இறைவன். அதில் பங்கெடுத்தோர் இறைவனின் புகழைக் கொண்டும் பெயரைக் கொண்டும் போரைத் தொடங்கினார்கள். எதிரிகள் பலமிக்கவர்களாக இருந்தும் அந்த இராணுவம் தோல்வி அடைந்ததில்லை; மறுமையின் வெற்றியையும் தேடியது. இம்மையில் வீரமரணமடையச் செய்துவிட்டாலும் மறுமையில் அவர்கள் வெற்றியின் உச்சியில் இருப்பார்கள். ஏனெனில் அது ஒரு பெரும் லாபகரமானதும், மாறுபட்டதுமான வணிகம். அதற்கான முழுப் பலன் மறுமையில் மட்டுமே கிடைக்கும்.
இராணுவ வீரனுக்கான கூலி
இஸ்லாமிய இராணுவத்தில் பங்கு பெறும் வீரனுக்கான கூலியை இந்த உலகில் கொடுத்துவிட முடியாது. மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்க்கையில் இறைவனால் மட்டுமே அதற்கேற்ற கூலியை வழங்க முடியும். இஸ்லாமிய இராணுவ வீரன் ஒருவன் மறுமையில் தான் உயிரின் விலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடியும். இப்படியொரு புனிதப் போர் நடக்கும் தினத்தில் உயிருக்கு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடும் ஒருவனுக்கு  இழிநிலை ஏற்படுகிறது.
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைமறுப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் (பயந்த வர்களாக) புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்! போர்த் தந்திரத் திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி, அந்நாளில் எவரேனும் புறமுதுகு காட்டினால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும் அவர்களின் புகலிடம் நரகமேயாகும். அது மோசமான இருப்பிடமாகும். (அல்குர்ஆன் 8:16)
மூஸா(அலை) அவர்கள் தம் சமூகத்தாரை இறைவழியில் போரிட அழைத்தபோது, அதை ஏற்க மறுத்தவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனையைத் திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.
''மூஸாவே! மெய்யாகவே, (தாங்கள் குறிப்பிடும்) அந்த இடத்தில் மிகவும் பலம் வாய்ந்த கூட்டத்தினர் இருக்கின்றனர். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிட்டால் (மட்டுமே) நாங்கள் பிரவேசிப்போம்'' என்று கூறினார்கள்.
(அப்போது, இறை) அச்சமுடையோர்களுடன் இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான். (எனவே அவ்விருவரும் மற்றவர்களை நோக்கி, ''பலசாலிகளான) அவர்களை எதிர்த்து அவர்களின் வாயில் வரை நுழையுங்கள்;  அதுவரை நீங்கள் நுழைந்துவிட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றிபெறுவீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்!'' என்று கூறினர்.
அதற்கு, ''மூஸாவே! அவர்கள் அ(ந்த பட்டணத்)தில் இருக்கும்வரை ஒருபோதும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். நீரும் உம் இறைவனுமே சென்று போரிடுங்கள்;  நிச்சயமாக நாங்கள் இங்கேயே அமர்ந்து கொண்டிருக்கிறோம்'' என (மூஸாவின் கூட்டத்தினர்) கூறினர்.
(இதைக் கேட்டு) ''என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறுயாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்தச் சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!'' என்று மூஸா கூறினார்.
(அதற்கு), ''அவ்வாறாயின் நாற்பது ஆண்டுகள் வரை நிச்சயமாக (இறையருளான) அது அவர்களுக்குத் தடுக்கப்பட்டு விட்டது (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; எனவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்'' என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 5:22-26)
இறைவழிப் போராட்டத்திற்காக மூஸா(அலை) அவர்கள் விடுத்த அழைப்பை அவர்கள் செவிமடுக்காததால் தீயவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டு, இறையருள் தடுக்கப்பட்டவர்களாக ஆயினர். மேலும் நாற்பதாண்டுகள் வரை நாசத்திற்குள்ளாயினர். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் கஅபு இப்னு மாலிக்(ரலி), ஹிலால் இப்னு உமையா(ரலி), மற்றும் மிராரத்து இப்னுர் ரபீஃ அல் ஆமிர்(ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் மார்க்கம் அனுமதித்த காரணங்களின்றி, தங்களின் சோம்பல் காரணமாக 'தபூக்' போரில் பங்கெடுக்கவில்லை. இவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர் களாக இருந்தும் கூட, இவர்களின் செயலை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தம் இஷ்டத்திற்கு மன்னிக்க இயலவில்லை. போரில் பங்கெடுக்காத நயவஞ்சகர்கள் அனைவரும் பொய்யான காரணங்களைக் கூறி, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் மன்னிப்பு கோரினர். ஆனால் இம்மூன்று நபித்தோழர்களும் அதே மாதிரியான காரணங்களைக் கூற விரும்பவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மூன்று தோழர்கள் மீதும் இரக்கம் கொண்டார்கள். இருப்பினும் கூட, இறைவனின் அனுமதி இல்லாமல் தாங்களாக மன்னிப்பு வழங்க முடியவில்லை. முஸ்லிம்களில் எவரும் அவர்களுடன் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தது. எனவே யாரும் அவர்களுடன் பேச வில்லை. இவ்வாறாக ஐம்பது நாட்கள் கழிந்துவிட்டன. அதற்குப் பின்னரே அவர்களை மன்னித்து விட்டதாக இறைவன் 'வஹீ' எனும் இறைச்செய்தியின் மூலம் தெரிவித்தான். ''இந்த இடைப்பட்டக் காலத்தில் நான் அழுது கொண்டே இருந்தேன்'' என கஅபு இப்னு மாலிக்(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்!7
(இறை உத்திரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (இறைவன் மன்னித்துவிட்டான்). பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கடியாம், உயிர் வாழ்வது கஷ்டமாம் விட்டது. அல்லாஹ்(வின் புகல்) அன்றி அவனை விட்டுத் தப்புமிடம் வேறு இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். எனவே, பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அல்லாஹ் அவர்களை மன்னிப்பவனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:118)
தியாகச் செம்மல்களான நபித்தோழர்களுக்கே இந்நிலை என்றால், ஏனையோருக்கு எந்நிலையோ?
அறப்போரில் பங்கெடுக்காது பொருளாசையின் காரணமாகப் போர்க்களம் நாடுவோருக்கு இறைவனின் தீர்ப்பு இவ்வாறு உள்ளது.
''(நபியே!) அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் உம்மைத் திரும்பச் செய்தான். (அப்போது அவர்கள் உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்து, மறு போருக்கு) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், 'நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்த விரோதியுடனும் நீங்கள் போரிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன்முறை (போருக்குப் புறப்படாமல் உங்கள் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதையே பொருத்தம் எனக் கொண்டீர்கள். எனவே (இப்பொழுதும்) பின்தங்குபவர்களுடனேயே இருந்து விடுங்கள்' என்று நீர் அவர்களிடம் கூறும்!''
''அவர்களில் எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழ வேண்டாம்; இன்னும் (பிரார்த்தனைக்காக) அவரின் புதை குழியில் நிற்க வேண்டாம்;  ஏனெனில் உண்மையில் அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மறுத்து, பாவிகளாகவே இறந்தார்கள்.'' (அல்குர்ஆன் 9:83,84 )
இறைவழியில் போரிட்டுத் தியாகங்கள் செய்வோருக்கு மகத்தான நற்கூலிகள் வழங்கப்படும். நிச்சயமாக அதற்கு நிகராய் எதுவுமிருக்காது.
இறைநம்பிக்கையாளர்களே! துன்புறுத்தும் (நரக) வேதனையை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடிய வணிகத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மட்டுமே) நம்புங்கள்! மேலும் இறைவழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் 'ஜிஹாத்' எனும் அறப்போரிடுங்கள். நீங்கள் (நன்கு) அறிவீராயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். (அல்குர்ஆன் 61:10)
இறைவன் கூறும் இந்த வணிகத்தை மேற்கொள்பவன் உலக வாழ்க்கைக்காகச் செய்யும் வணிகர்களின் நாணயத்தைவிட நாணயமிக்கவனாகவும், நம்பிக்கையாளனாகவும் இருக்க வேண்டும். அவனுக்குரிய இலாபத்தை குறையின்றி இறைவன் வழங்குவான்.
''என் உயிர் எவன் கரத்தில் உள்ளதோ அவன் மீது ஆணையாக இறை வழியில் நான் கொல்லப்பட வேண்டும்; பின்னர், உயிர்ப்பிக்கப்பட வேண்டும்; அதன் பின்னர் மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்பதையே நான் (பெரிதும்) விரும்புகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.8
''காலையிலோ, மாலையிலோ ஒரு முறை இறைவழியில் (போரிடச்) செல்வது, உலகம் மற்றும் அதிலுள்ளவை அனைத்தையும் விடச் சிறந்ததாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.9
''இறைவழியில் (போரிடச்) செல்பவரின் பாதத்தில் தூசு பட்ட இடத்தை(க் கூட) நரக நெருப்பு தீண்டாது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.10
''கொலை செய்யப்பட்ட இறைமறுப்பாளனும், (தக்க காரணத்திற்காக இறைநம்பிக்கையோடு) அவனைக் கொன்றவனும் (அக்குற்றத்தினால்) நரகத்தில் ஒன்று சேரமாட்டார்கள்''  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.11
''ஆயுதங்களைத் தாங்கி இறைவழியில் போரிடுபவரும், (புனிதப் போராளி களான) அவர்களின் இல்லங்களையும் - மனைவி மக்களையும் பாதுகாக் கும் பணியில் நியமனம் செய்யப்பட்டு, அதைச் சரியாக மேற்கொள்ப வரும் (உண்மையில்) இறைவழியில் 'ஜிஹாத்' செய்தவர்களாவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.12
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களிடத்தில் ஒரு மனிதர் தன் ஒட்டகத்தைக் கொண்டு வந்து, இது இறைவழியில் (போரிடுவதற்காக) இருக்கிறது. (என்று கொடுத்தார்). அதற்கு, ''மறுமை நாளில் எழுநூறு ஒட்டகங்கள் உனக்குக் கிடைக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.13
''இந்த மார்க்கம் என்றும் நிலைத்திருக்கும். (இதை அழிக்க நினைப்போருடன்) முஸ்லிம்களின் ஒரு பிரிவு இதற்காக மறுமை நாள் வரும்வரை போரிட்டுக் கொண்டே இருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.14
''இறைவழியில் போரிட்டு வெட்டப்பட்டவர்களை அல்லாஹ் (நன்கு) அறிவான். தங்களின் காயங்களிலிருந்து இரத்தம் சொட்டும் நிலையில் மறுமை நாளில் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அது இரத்தம் போன்றிருக்கும். ஆனால் அதில் கஸ்தூரிவாசம் கமழ்ந்து கொண்டிருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.15
''இறைவழியில் போரிடுவதும் அல்லாஹ்வின் மீது (முழு) நம்பிக்கை வைப்பதும் சிறந்த செயல்களில் உள்ளதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் எழுந்து, ''இறைத்தூதர் அவர்களே! நான் இறைவழியில் (போரிடும்போது) கொல்லப்பட்டால் என்னுடைய பாவங்கள் என்னை விட்டும் தூரமாகிவிடுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம் நீர் பொறுமையை மேற்கொண்டு, நன்மையை நாடி புறங்காட்டாமல் இருப்பீராயின்'' என்று கூறிவிட்டு, நீ எவ்வாறு சொன்னாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கவர் ''நான் இறைவழியில் (போரிடும்போது) கொல்லப்பட்டால் என்னுடைய பாவங்கள் என்னை விட்டும் தூரமாம் விடுமா?'' எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம் நீர் பொறுமையை மேற்கொண்டு, நன்மையை நாடி புறங்காட்டாமல் இருப்பீராயின் கடனைத் தவிர (உம்முடைய மற்ற பாவங்கள்) மன்னிக்கப்படும். நிச்சயமாக ஜிப்ரீல்(அலை) அவர்கள் இவ்வாறுதான் என்னிடம் சொன்னார்கள்'' என்று பதிலளித்தார்கள்.16
''அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவதன் மூலம் கடனைத் தவிர்த்து இதர பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17ஷ
''என் சமுதாயத்தில் ஒரு கூட்டம் எப்போதும் உண்மைக்காகப் போராடிக் கொண்டும், எதிரிகளை வெற்றியடைந்து கொண்டும் இருக்கும். (இது எதுவரையென்றால்) அவர்களின் இறுதிக் கூட்டம் தஜ்ஜாலுடன் போரிடும் வரையிலாகும்''18
சத்தியத்தை நிலைநாட்டுவதற்குப் போராடுவோர் நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்டுள்ளனர் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெரிவிக்கின்றன.
''இறையச்சத்தால் கண்¡ர் சிந்தியதும் மற்றும் (போர்க்காலத்தில்) தூங்காது இறைவழியில் காவலிருந்து  இரவைக் கழித்ததும் ஆகிய இருவிதமான கண்களையும் நரக நெருப்பு தீண்டாது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.19
அசத்தியத்தை எதிர்த்து சத்தியத்தை நிலை நாட்டுவோருக்கான கூலியைப்பற்றி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இறைவழிப் போர் மகத்துவமிக்கதாய்த் திகழ்கிறது. இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளை அள்ளித்தரும் மகத்தான இச்செயல் தற்போது வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை மேற்கொள்ளும் முன்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ் நாளில் எப்போது, எதற்கு, எங்கு, எவ்வாறு போரிட்டார்கள் என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த மாமேதையின் வாழ்க்கையில் பெரும் சோதனைகளாக எண்ணற்றவை நிகழ்ந்திருக்கின்றன. அவர்கள் எவ்வாறு அவற்றை எதிர் கொண்டார்கள் என்பதை அறிந்தாகவேண்டும். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையாகத் திகழ்கிறது. அவை துளியும் மாறாமல் செயல்வடிவம் பெற வேண்டும். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போர்க்கால வாழ்க்கையை நன்றாக அறிந்த பின்னரே இறைவழிப்போருக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் போர்க்களம் புகுந்ததைப் பற்றி விவரிக்கும் முன்பு அவர்களின் மக்கா வாழ்க்கையைப் பற்றியும், அங்கு அவர்கள் கொண்டிருந்த குணத்தைப் பற்றியும் அறிவதன் மூலமே அவர்களின் வெற்றியை உணரமுடிவும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைத் தங்களின் நாற்பதாவது வயதில்தான் போதிக்க ஆரம்பித்தார்கள். அந்த நாற்பதாண்டு கால வாழ்க்கையானது அவர்களைப் பற்றியும் அவர்களின் பண்பைப்பற்றியும் மக்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வதற்குப் போதுமானதாக இருக்கிறது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மென்மையான குணம் கொண்டவரா, அல்லது போர்க் குணங் கொண்டவரா என்பதை அந்த நாற்பதாண்டு கால வாழ்க்கைத் தெளிவாக்கிவிடும். அவர்கள் இந்தக் கால கட்டத்தில் அன்பான குணம் கொண்டவராக இருந்திருந்தால் பிந்தைய வாழ்க்கையில் அவர்கள் போர் தொடுத்தது தூதுத்துவப் பணியின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். ஐம்பது வயதைக் கடந்த  ஒரு மனிதனால் சாதாரண மாகத் தன் பண்பையோ, பழக்க வழக்கங்களையோ மாற்றிவிட முடியாது. முதல் போரான சரித்திரச் சிறப்புமிக்க 'பத்ரு'ப் போரைத் தலைமை ஏற்று நடத்தியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பத்து ஐந்து என்பதை நினைவில் கொண்டால், மூடுண்ட பல திரைகள் விலம் நம் பாதைக்கு வழிவகுக்கும்.
ஒரு மனிதன் பொதுவாகத் தன் இளமைக் காலத்திலும் நடுத்தர வயதின் ஆரம்பத்திலும்தான் குற்றச் செயல்கள் மற்றும் பாவச் செயல் களில் முழுமூச்சாய் ஈடுபடமுடியும். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இளமையையும் அதற்குப் பிந்தைய காலகட்டத்தையும் எந்த மக்கள் மத்தியில் கழித்தார்களோ, அதே மக்களிடம்தான் தனக்கு இறைவனின் தூதர் எனும் அந்தஸ்து கிடைத்துள்ளது என்பதையும் அறிவித்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்களின் அன்பாலும் பண்பாலும் இளமைக் கால சுறுசுறுப்பாலும், தான் வாழ்ந்த மக்களிடையே நல்லதொரு மரியாதையைப் பெற்றிருந்தார்கள்.
மக்கா தேசத்தின் குறை»1களில் பெரும்பாலானவர்களைப் போன்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் ஒரு வியாபாரியே ஆவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மக்கா தேசத்தின் வணிகர்களோடு தொடர்புள்ளவராகவே இருந்தார்கள். பிறருக்காக வணிக நோக்கில் பல பிரயாணங்கள் மேற்கொண்டமையால் அவர்கள் பிற கூட்டத்தாரையும் இதர பகுதிகளையும் நன்கே தெரிந்து வைத்திருந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த நாற்பது ஆண்டு காலங்களிலும் அமைதியையே விரும்பினார்கள்.
''(நபியே!) அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்'' (அல்குர்ஆன் 21:107) என்று இறைவனும் குறிப்பிடுகிறான்.
இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்தியம்பும் பணியை அல்லாஹ் தமக்கு வழங்கியுள்ளான் என இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அம்மக்களிடம் அறிவித்தபோது அவர்களுக்கு வயது நாற்பது!
எல்லாவிதத்திலும் எல்லாவற்றிலும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பக்குவப்பட்ட மனிதராகவே திகழ்ந்தார்கள். அவர்கள் ஆவேசப்பட்டதாக  வரலாற்று ஏடுகளில் சொல்லப்படவில்லை. பொறுமை, அமைதி, நிதானம், தொலைநோக்கு முதலியவற்றின் சிகரமாக அல்லாஹ் அவரை  ஆக்கினான். குறை»  இனத்தின் மற்ற குழந்தைகளைப் போன்று அன்னாரும் தம் வாழ்வில் முதல் சில வருடங்கள் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டுப் பாரம்பரியப் பயிற்சிகள் அளிக்கப்பட்டார்கள். குறை»1 வம்சக் குழந்தைகளை வலுப்படுத்தவும் தேவை ஏற்படின் போரில் பங்கெடுக்கச் செய்யவும் அப்பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பன} ஹுவைஜான் என்ற கூட்டத்தின் பிரிவான ஸஅத் இப்னு பஹரோடு ஐந்தாண்டுக் காலத்தைக் கழித்தார்கள். இருந்தபோதிலும் மக்காவில் நடந்த ஹர்புல்ஃபுஜார் எனும் போரில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாளையோ, வில், அம்பையோ பயன்படுத்தவில்லை. அவர் தன் கையைக் கூட எவருக்கும் எதிராக உயர்த்தவில்லை. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இளமை துடிக்கும் இருபது வயதாக இருந்தது. அப்படியிருந்தும் அவர்களின் பொறுமையே இளமைத் துடிப்பை மிகைத்து விட்டது.
மக்காவின் குறை»கள் வீரமிக்கவர்கள், படைபலம் உள்ளவர்கள்.
அஞ்சாநெஞ்சமும், அசையா உறுதியும், வல்லமையும் கொண்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்த குறை» மக்களால் பாராட்டப்பட்டார்கள். குறை»க் கூட்டத்திலே தோன்றியிருந்தாலும், பாலையிலே வளர்ந்து வந்தாலும் இளைஞராக இருந்த கால கட்டத்தி லேயே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மைப் பண்புள்ளவராக இருந்துள்ளார்கள். மிதமான குணம் கொண்டிருந்தாலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எளியோரின் உரிமைக்காக உழைத்தார்கள். உரிமைகள் பறிக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஆதரவான போராட்டத் தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தூதுத்துவம் வழங்கப்படாத காலத்தில் 'ஹில்ஃபுல் ஃபுளூல்' எனும் அமைப்பு நடத்திக் கொண்டிருந்த கூட்டத் தவர்களுடன் சேர்ந்து அவர்களும் செயல்பட்டார்கள். இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளின் பிற்பகுதியில் இதைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் அது போன்ற ஒரு போராட்டத்துக்கு எப்போதும் தாம் தயாராக இருப்பதாகவே தெரிவித்தார்கள்.
இளமைக் காலத்தில் ஒரு வியாபாரியாம் சிரியா, ஏமன் மற்றும் பஹ்ரைன் போன்ற தேசங்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள். பலருடன் பங்குதாரராக இருந்து வணிகம் புரிந்து வந்தார்கள். ஆனால் எந்தவொரு பங்குதாரரோடும் பகைமை கொண்டதாகச் சரித்திரம் இல்லை. அணுகுமுறை நேர்மையானதாகவும் அழகானதாகவும் இருந் தமையால் அவர்கள் 'அல்அமீன்' (நம்பிக்கைக்குரியவர்) 'அஸ்ஸாதீக்' (உண்மையாளர்) என்று உயரிய பல நாமங்களால் அழைக்கப் பட்டார்கள். நேர்மைக்கும், ஒழுக்க நெறிக்கும், சுய கட்டுப்பாட்டிற்கும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் இதை குறை»களில் எவரும் மறுக்கவில்லை.
எனவேதான், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் கொள்கை யைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர்களும் தங்களின் பொருட் களை அவர்களிடமே அமானிதமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மிகப் பெரிய எதிரியான அபூஜஹல் என்பவரும் தன் பொருட்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமே அமானிதமாகக் கொடுத்து வைத்திருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செல்வத்தின் மீது ஆசை கொண்டவர் என்றும் கூற முடியாது. அவர்கள் ஓர் எளிமையான மரியாதைக்குரிய வியாபாரியாக நாற்பது வயதுவரை வாழ்ந்திருக்கிறார்கள்.
அந்த வயதில் அவர்களின் வாழ்க்கையில் புதியதொரு திருப்பம் ஏற்பட்டது. மக்காவிலிருந்து மூன்று மைல் தொலைவிலிருந்த 'ஜபலுன்ன}ர்' எனும் மலைக்குச் சென்று தனிமையில் ஆழ்ந்த சிந்தனை யில் சில நாட்களைக் கழிப்பதை வழமையாக்கிக் கொண்டார்கள். அங்கு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறைவன், தன் தூதர் எனும் அந்தஸ்தை வழங்கினான்.2
ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்பை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கினான். அதை அவர்களின் மனைவியான அன்னை கதீஜா(ரலி) அவர்கள் முதன் முதலாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு அவர்கள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அண்ணாரின் நெருங்கிய தோழர்களும் அதே வழியைக் கையாண்டனர். காலம் செல்லச் செல்லப் பலரும் இறைவழி வந்தனர்.
பொதுவாக ஒருவரின் வார்த்தை ஜாலத்தில் மயங்கி அவருடைய வழியை ஏற்றுக் கொள்வது மனித இயல்பு. வார்த்தை சித்தர் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்குமானால் அவரின் சிஷ்யர்களோ, நண்பர்களோ அவருடைய வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை. இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைக் கொள்கையைச் சொன்னபோது முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே.
மக்காவாசிகளிடமிருந்து ஓரிறைக்கொள்கைக்குக் கடுமையான எதிர்ப்பு வந்தது. பல்வேறு கூட்டத்தாரும் இஸ்லாத்தை ஏற்றனர். இதைச் சம்த்துக் கொள்ளமுடியாத அவர்களின் சமூகத்தார் வெறுப்புற்று இறைவழி வந்த அவர்களைத் தாக்கலாயினர். தங்கள் மூதாதையரின் மூடத்தனமான வழிக்கே மீண்டும் திரும்பும்படி வற்புறுத்தினர். குறை»களின் கட்டளைகளை ஏற்க மறுத்த இறைநம்பிக்கையாளர்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அந்நேரத்தில்தான் கொடியவன் அபூஜஹல், சுமையா(ரலி) அவர்களின் பிறப்புறுப்பில் ஈட்டியால் குத்தினான். அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அவர்களின் கணவர் யாசீர்(ரலி) அவர்களைக் கொடியவர்கள் இரண்டு துண்டுகளாகப் பிளந்தனர். பல நபித் தோழர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர். பிலால்(ரலி) அவர்களைக் கொதிக்கும் மணலில் மல்லாக்காகப் போட்டு நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைத்தனர். இறைநம்பிக்கையாளர்கள் மீது வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போயுங்கூட பதிலடி கொடுக்கும்படி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறவில்லை பொறுமையுடன் இருக்கும்படியே போதித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கட்டளைப்படியே அவர்களின் தோழர்களும் துன்பங்களைச் சம்த்து இறைநம்பிக்கையில் நிலைத்திருந்தார்கள்.
வன்செயலுக்கு வன்செயலே தக்க பதிலடி என்று இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) கூறியிருந்தால் அவர்களின் தோழர்கள் வன்செயலை ஏற்று அமைதியுற்றவர்களாக இருக்கமாட்டார்கள். அந்தக் காலகட்டத் திலேயே குறை»களுடன் கடும்போர் மூண்டிருக்கும். ஆனால் நபித் தோழர்கள் கொடுமைக்காரர் எவருக்கும் பதிலடி கொடுக்கவில்லை.
குறை»களின் பார்வையில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் செய்த குற்றம் என்பது ''உங்கள் வாழ்க்கை முறை மூடத்தனமானது'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது மட்டுமே. அவர்களின்  மூடநம்பிக்கை மிகுந்த வாழ்க்கை முறையைவிட்டு மீண்டு ''இறைவன்பால் வாருங்கள்'' என்று குறை»களை அழைத்த காரணத் திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களை அவமானப்படுத்தியதோடு நில்லாமல் வேதனைப்படுத்தவும் செய்தார்கள். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபத்துல்லாஹ் எனும் இறைஇல்லத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது, குறை»களில் கொடியவர்கள் ஒட்டகத்தின் குடல்களைக் கொண்டு வந்து, அவர்கள் ஸஜ்தாவிற்குச் சென்ற தருணம் பார்த்து அவர்களின் முதுகில்போட்டு வேதனையையும் இழிவையும் ஏற்படுத்தி மகிழ்ந்தார்கள்.
குறை»களின் கொடுமைகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அவர்கள் ''படைத்தவனையே வணங்குவோம் என்று சொன்னதற்காக ஒரு மனிதனைக் கொலை செய்து விடுவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்காக அவர்களின் தாடி மயிரைப் பிய்த்து எறிந்தனர் அந்த வெறியகள். அத்தோடு நில்லாமல் அபூபக்கர்(ரலி) அவர்களின் தாடி மயிரைப் பற்றிப்பிடித்துக் கொண்டு தரதரவென்று இழுத்தனர்
குறை»களுக்கு மத்தியில் நல்ல செல்வாக்கைப் பெற்றவராகவே அபூபக்கர்(ரலி) இருந்தார். அவர் இறைநம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காகவே குறை»கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள். இதைத் தவிர வேறு எந்தக் குற்றமும் அவர்கள் மீது சுமத்த முடியாது.
சுதந்திரமான மனிதர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தற்கே இக்கதி என்றால் இறைநம்பிக்கையுள்ள ஏழைகள் மற்றும் அடிமைகளின் நிலை என்னவாயிருக்கும்? பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்காகத் தன் எஜமானனால் மிகவும் இழிவாக நடத்தப்பட்டார்கள். அதைக் கண்ணுற்ற அபூபக்கர்(ரலி) அவர்கள் வலுவான திடகாத்திரமான ஓர் அடிமையைப் பகரமாகக் கொடுத்து பிலால்(ரலி) அவர்களை மீட்டுச் சென்றார்கள்.3  இஸ்லாத்தை ஏற்றதற்காக ஏற்கனவே ஆறு அடிமைகள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். பின்னர் அதிலிருந்து மீட்கப் பட்டிருந்தார்கள். ஏழாவதாக பிலால்(ரலி) அவர்களையும் அவருடைய எஜமான் கொடுமைப் படுத்தினார். ஆயினும் அவர்களின் இறைநம்பிக்கையில் உறுதி குன்றிவிடவில்லை. இறைவன் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது பிலால்(ரலி) கொண்டிருந்த நம்பிக்கை அவர்களுக்கு இந்த அவமானத்தைச் சம்த்துக் கொள்ளும் பொறுமையைக் கொடுத்தது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர் களுக்கும் இவ்வாறெல்லாம் அக்கிரமங்கள் இழைத்த அந்த குறை»களுக்குக் கடுமையான தண்டனையாக என்ன கொடுத்தாலும் தகும். ஆனால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு அவ்வாறு கட்டளை ஏதும் இடவில்லை.
குறை»கள் தங்களின் இதயங்களுக்கும், கண்களுக்கும், காதுகளுக்கும் தாமாகவே திரையிட்டுக் கொண்டதை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். இறைவனின் போதனைகளுக்குத் தங்களின் புலன்களை அவர்கள் திருப்புவதாகத் தெரியவில்லை. அவர்கள் பாராமுகமாக இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். இறைமார்க்கமாம், இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய வேறு ஒரு தளம் வேண்டும். அப்படியோர் இடத்தை அடைவதன் மூலமே குறை»களால் இழைக்கப்படும் வேதனைகளுக்கு முடிவுகட்ட முடியும் என்பதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நன்கு புரிந்து கொண்டு அதற்கான செயல் திட்டத்தை மேற்கொண்டார்கள்.
இதன் காரணமாக, ''இறைவன் வேதனையிலிருந்து மீட்சி தருவா னேயானால் நீங்கள் ஹப்ஸாவுக்குச் செல்லுங்கள்'' என தம் தோழர்களுக்கு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பணித்தார்கள். குறை»க் கூட்டத்தின் இன்னல்களைத் தாங்க முடியாத அந்த நபித்தோழர்களும் ஹப்ஸாவுக்குச் சென்றார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தை நடைமுறைப்படுத்தவும், அல்லாஹ்வின் ஆணைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்திடவும் முதன் முறையாக இறைநம்பிக்கையாளர்கள், மக்காவை விட்டு வேறிடத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் சுகமாக வாழ்ந்த காலம்போய் தற்போது துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமையால் அங்கு இதைவிட நல்லதொரு வாழ்வு கிடைக்கும் என எண்ணியவர்களாகத் தங்கள் இல்லங்களையும், உடைமைகளையும், தொழில்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. குறைந்த பட்சமாகத் தங்கள் இறைநம்பிக்கையைப் பாதுகாத்துக் கொண்டதுடன், கொண்ட கொள்கைக்காகத் தேசத்தையும் துறந்து புறப்பட்டார்கள். முஸ்லிம்கள் அங்கு வாழ்வதை விரும்பாத குறை»கள் அவர்களை வலுக்கட்டாயமாகத் திரும்ப அழைத்து வரவேண்டுமென எண்ணி அவர்களைத் தேடி ஒரு குழுவை அனுப்பினார்கள். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் இவர்கள் கடற்கரையைச் சென்றடையும் முன்பே அவர்களின் படகு புறப்பட்டுச் சென்றுவிட்டது. பின்பு குறை»கள் 'ஹப்ஸா'வின் அரசரான நஜா»க்கு ஒரு குழுவின் மூலம் இறைநம்பிக்கையாளர்களுக்கு அரசியல் அடைக்கலம் மறுக்கப்பட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள்.
குறை»களின் அந்த கோரிக்கைக் குழு அரச சபையினருக்கும் இராணுவத்தினருக்கும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி அரசரிடம் தங்களின் கோரிக்கை நிறைவேறப் பரிந்துரை செய்யும்படிக் கேட்டுக்கொண்டது. அவ்வாறே அவையினரும், படையினரும் மன்னரிடம் விலைமதிப்பற்ற பரிசுகளை எடுத்துச் சென்று கொடுத்தனர். அவர் அதைப் பெற்றுக் கொண்டதும் தங்களது கோரிக்கையைத் தெரிவித்தனர். அதாவது, வந்து சேர்ந்த அகதிகள் தம் மூதாதையரின் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்றும், வந்திருக்கும் தங்கள் அணியினரிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள்.
இறைநம்பிக்கையாளர்கள் அண்டை தேசத்தில் அரசியல் தஞ்ச மடைந்தார்கள் என்பதைச் செவியுற்ற குறை»கள் ஒரு மார்க்கத்தின் புனிதத்தை மனிதகுலம் புரிந்து கொள்ள வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் ஆகலாம். வித்தியாசமான வாழ்க்கை நெறிகளைக் கடைபிடிப்பதால் எத்துணை பேதங்கள் உண்டாகும் என்பதை மனித இனம் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் விளங்கிக் கொள்ளவில்லை. பிறந்த மண்ணில் கொடுமையிழைக்கப் பட்டவர்களுக்கு அண்டை தேசத்தில் அடைக்கலம் கொடுப்பதன் பின்விளைவுகளைத் தெரிந்து கொள்ள மனித இனத்துக்குப் பதினான்கு நூற்றாண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. நாகரிகச் சூழல் நிறைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலுள்ள சமுதாயம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறது என்பதைக் கண்கூடாக நாம் கண்டு வருகின்றோம். அப்படியாயின் விரல்விட்டு எண்ணக் கூடிய இறைநம்பிக்கை யாளர்கள், பகையுணர்வு கொண்டிருந்த அன்றைய பெரும்பான்மை யான மக்களிடையே என்ன சித்ரவதைப்பட்டிருப்பார்கள்?
இன்று உலகில் நிறுவப்பட்ட அரசுக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் சதிசெய்வது போன்று அந்த இறைநம்பிக்iயாளர்கள் எந்தச் சதியும் செய்யவில்லை; நாச வேலைகளிலும் ஈடுபடவில்லை. வன்செயல் களுக்கு இட்டுச் செல்லும் எல்லா நடவடிக்கைகளும் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
எந்த அச்சுறுத்தலுக்கும், கொடுமைக்கும் அஞ்சாமல் இறைநம்பிக் கையாளர்கள் இருப்பதைக் கண்ட குறை»யர், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பமான பன}ஹா»ம் கூட்டத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். அப்படிச் செய்வதனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மனவுறுதி குன்றும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
பன}முத்தலிப் மற்றும் பன}ஹா»ம் குடும்பத்தாரைச் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒதுக்கிவிட்டதாக ஆவணங்களை எழுதி கஅபா எனும் இறைஇல்லத்திற்கு வெளியே தொங்கவிட்டனர்.4
அக்கூட்டத்தாருடன் பெண் கொடுப்பது, எடுப்பது ஆகிய திருமண உறவுகள் வைப்பதைத் தடுத்துக் கொண்டதுடன், உணவு மற்றும் பொருளாதார ரீதியான அனைத்து வரவு செலவுகளை நிறுத்திவிட்ட தாகவும் அறிவித்தனர். இவ்வாறு மூன்றாண்டுக் காலமாக அவர்கள் குறை»களுடன் தொடர் பற்றுப் போனதால் தம் செல்வங்களை இழந்தனர். மக்கா மாநகரம் ஒரு பாலைவனம் அங்கு அவர்களால் என்னதான் செய்யமுடியும்?  குறை»களுக்குத் தெரியாமல் அவர்களின் நண்பர்களிடமிருந்து சில பொருட்கள் உதவியாகக் கிடைத்தன. ஆனால் அதுவும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை.
இலைகளையும், தழைகளையும், காய்ந்த தோல்களையும் உண்டு உயிர் வாழ்ந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவுக்கு வெளியே ஒரு தளத்தை ஏற்படுத்த விரும்பினார்கள். எனவே தாயிஃப் நகரத்துக்குச் சென்று பன} தகீஃப் எனும் கூட்டத்தின் தலைவர்களோடு பேசினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். இஸ்லாத்தை அம்மக்கள் ஏற்றுக் கொள்பவர் களாக இல்லை. தங்களின் கூட்டத் தலைவர்களின் மேன்மையைப் பற்றிப் பேசுவதிலேயே அவர்கள் மூழ்கி இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்து, ''நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதராக இருப்பின், நான் உமக்குப் பதிலளிக்க வேண்டும். நீர் பொய்யராக இருப்பின், நான் உங்களிடம் பேச வேண்டியதில்லை'' என்றார். அதன் பின்பும் விவாதங்களை நீட்டிப்பது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு நல்லதாகப்படவில்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு சொன்னதோடு இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கல்லாலும் அடித்தார் கள். அப்போது இரத்தம் சிந்தியவர் களாக இறைத்தூதர் அவர்கள் ஒரு சோலையில் பாதுகாப்பு பெற்றார்கள்.
அந்தக் காட்டுமிராண்டிகள் சென்றபின்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவனை நோக்கி,
''அல்லாஹ்வே! உன்னிடமே என் பலவீனத்தையும், எளிமைiயும்  தளவாடங்களின்மையையும் முன் வைக்கிறேன்.
கருணையாளனே! எளியவர்களின் இறைவனே! என் இறைவன் நீயே!
நீ என்மீது கோபம் கொள்ள வில்லையெனில் நான் கவலைப்பட மாட்டேன். உன் உதவியே எனக்குப் போதுமானது.
இருளை விலக்கி ஒளிமயமாக்கும் உயர்ந்தவனிடமே நான் பாதுகாப்பு தேடுகிறேன்''  என்று கூறினார்கள்.5
இவ்வாறு செல்லும் இடமெல்லாம்  அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் கல்லடியும், சொல்லடியும் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனாலும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்கள் பலத்தைப் பிரயோம்த்தோ, கடும்சொற்களாலோ அவர்களைப் பழிவாங்க நினைத்ததில்லை.
தாயிஃப் நகரத்தில் அவர்கள் அடைந்த தோல்வி, முன்பு சந்தித்த சோதனைகள் ஆகியவை மக்காவுக்கு அப்பால் ஓரிடத்தைத் தேர்ந் தெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. மக்காவில் நடைபெறும் விழாக்களில் அரபகப் பாலை முழுவதிலும் இருந்து பல கூட்டத்தாரும் கலந்து கொள்வார்கள். அந்தச் சமயங்களில் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அந்த விழாக்களுக்குச் சென்று இஸ்லாமியப்பிரச்சாரம் செய்து வந்தார்கள். இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் பிரகடனம் செய்யும் அரசு ஒன்றை நிறுவ ஒரு நகரைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருதினார்கள். பலதரப்பட்ட மக்களோடும் அவர்களுக்குத் தொடர்பு இருந்து வந்தது. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை எல்லாமே வெற்றியடையாத போதிலும் அவற்றால் சில நன்மைகள் விளைந்தன.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பன} 'அமீர் ஸாஸா' எனும் கூட்டத்திடம் பேசினார்கள். அக்கூட்டத்தில் ஒருவரான பய்காரா பிராஸ் என்பவர் ''இறைத்தூதர் அவர்களே! நாங்கள் தங்களைப் பின்பற்றுகிறபோது அல்லாஹ் தங்களுக்கு வெற்றி கொடுத்தால் நாங்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா?'' எனக் கேட்டார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ''மனிதர்கள் மீது அதிகாரம் செலுத்தும் வல்லமை இறைவனின் கையில் உள்ளது'' என்று பதிலளித் தார்கள். உடனே பய்காரா ''அரசுகளின் தாக்குதலில் இருந்து நாங்கள் உங்களைக் காக்க வேண்டும். பிறகு உங்களுக்கு இறைவன் வெற்றி கொடுக்கும்போது பிறர் யாரேனும் அதன் நன்மையை அனுபவிப்பர். ஆகவே உங்கள் வழியில் நாங்கள் வரமாட்டோம்'' என்று கூறிவிட்டார்.
அச்சுறுத்தலுக்குத் தாம் உட்பட்டிருப்பதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்தக் கூட்டத்தாரிடம் வெளிப்படையாகவே கூறினார்கள்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்ற இறுதிமுடிவுக்கு குறை»கள் வந்தார்கள். 'அகபா'வின் இரண்டாவது உடன்படிக்கையின் படி மதீனாவில் வாழ்ந்த இறைநம்பிக் கையாளர்கள் கொடுத்த பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவனின் பாதையில் 'ஹிஜ்ரத்' எனும் புனிதப் பயணத்தை மேற்கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கு முன்னதாகப் பல தோழர்களை மதீனாவுக்கு அனுப்பியிருந் தார்கள். அதன் பின்னர் தம் ஆருயிர்த்தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களோடு மதீனா சென்றார்கள். இறைநம்பிக்கையாளர்கள் வேறிடம் செல்வதைக் குறை»கள் அனுமதிக்கவில்லை. அவர்களின் கண்களில் படாமலேயே முஸ்லிம்கள் மக்காவை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அனைவரும் அவ்வாறே செய்தனர். உமர்(ரலி) அவர்கள் மட்டும் கஅபாவுக்குச் சென்று 'தவாஃப்' செய்து (வலம் வந்து) விட்டுப் பட்டப்பகலில் குறை»களிடம், மதீனாவிற்கு தாம் பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் யாருக்கேனும் தைரியமிருப்பின் தடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்புச் செய்தபின்னர் மக்காவை விட்டும் வெளியேறினார்கள். உண்மையில் உமர் வீரமும் பலமும் கொண்டவர்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பாதுகாக்க உறுதியெடுத்தவர்களாகவே வரவேற்றனர். ஏற்கனவே ஹப்ஸா சென்ற முஸ்லிம்களைத் தங்களிடம் திரும்பவும் அனுப்ப வேண்டுமென அந்நாட்டு அரசனிடம் கோரிக்கை வைத்த குறை»கள் இப்போதும் ஏதாவது செய்வார்கள் என்பதை இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அண்ணாரின் தோழர்களும் நன்றாகவே அறிந்திருந்தனர்.
இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கென்று வேறோரிடத்தில் தளம் ஒன்றை அமைத்ததுக் கொண்டால் போர் உருவாவது நிச்சயம் என்பதை மற்றவர்களும் புரிந்திருந்தார்கள்.
'அகபா' உடன் படிக்கையின்போது ஸஅத் இப்னு ஜராரா அவர்கள், ''நாம் எதற்கு உறுதிமொழி எடுக்கிறோம் தெரியுமா? அரபுகளோடும், அஜம் நாட்டவர்களோடும் போரிடுவதற்காக''  என்றார்கள். ஏனெனில் மக்காவாசிகள் மற்றும் குறை»த் தலைவர்களின் மனநிலைகளை இவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர் களும், மதீனா  தோழர்களோடு இணைந்துவிட்டால் அவர்களின் கூட்டத்தாருடைய எண்ணிக்கை குறை»களின் அதிகாரத்தை அழித்து விடும் என்பதை குறை»த் தலைவர்கள் விளங்கிக் கொண்டார்கள்.
ஒரு மார்க்கம் அழிக்கப்படுவதற்கு, அதைப் போதிப்பவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். எனவே இஸ்லாமிய வாழ்க்கை நெறியினைக் காத்திடவும் உயிர்த் தியாகம் செய்திடவும் ஒரு கூட்டம் தயாராகவே இருந்தது.
இறைத்தூதர் மதீனாவை அடைந்ததும் மதீனா மக்கள், இணையில்லா மகிழ்வோடு அவர்களை வரவேற்றார்கள்.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தமக்கெனத் தக்க இடம் ஒன்றைத் தேடிக் கொண்டதை மக்காவாசிகள் விரும்பவில்லை. முஸ்லிம்களை எப்படியும் அழித்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டு மதீனாவின் மூத்த குடிமகனான அப்துல்லாஹ் இப்னு உபை என்பவருக்கு மக்காவாசிகள் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், ''முஹம்மதை மதீனாவிலிருந்து விரட்ட வேண்டும் அல்லது அவரைக் கொலை செய்ய வேண்டும். அவரின் தோழர்களையும் அவ்வாறே கொல்லவேண்டும். இல்லையெனில் நாங்கள் உங்களை அழித்து விட்டு உங்கள் பெண்களின் கைகளிலிருக்கும் வளையல்களைக் கழற்றுவோம்'' (உங்கள் பெண்களை விதவைகளாக ஆக்குவோம்) என வாசகம் இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு உபை சுயநலம் கொண்டவர்; பலவீனமா னவர். அவர் 'அகபா'வில் நடந்த இரண்டாம் உடன்படிக்கையில் கலந்து கொண்டிருந்தார். ஆயினும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகை அவர் மதீனாவின் மன்னராகும் வாய்ப்பை இழக்கச் செய்தது. அவரின் முடிசூட்டு விழாவுக்கு ஏற்கனவே பொற்கிரீடம் தயாராம் இருந்தது. ஆனால் ஒழுக்கமுள்ள ஒரு கூட்டத்தின் வருகை அவரின் திட்டங்களை நிலைகுலையச் செய்துவிட்டது.
இதன் காரணமாக, முஸ்லிம்களை மதீனாவை விட்டுத் துரத்தா விட்டால் போர் நடக்கும் என்ற அறிவிப்பு அப்துல்லாஹ் இப்னு உபையால் வரவேற்கப்பட்டது. எனவே அவுஸ், கஜ்ரஜ்  கூட்டத்தார் மற்றும் பன}கைன}கா எனும் åதர்களையும் ஒருங்கிணைத்து தனக்கு வந்துள்ள கடிதத்தைப்பற்றித் தெரிவித்தார். முஸ்லிம்களை விரட்டினால் தனக்கு முடிசூட்டப்படும், தான் ஒரு மன்னராகிவிடலாம் என அப்துல்லாஹ் இப்னு உபைக்கு சுயநலம் இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு உபையின் நோக்கங்களை அறிந்து கொண்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவரைச் சந்திப்பதற்காகச் சென்று, முஸ்லிம்களை மதீனாவை விட்டுத் துரத்த முடிவெடுப்பது ஆபத்தானது என்பதைத் தெரிவித்தார்கள். 
முஹாஜிர்களுக்கு எதிராக அவர் போர் தொடுத்தால் முஸ்லிம் களான அன்சாரித் தோழர்களும் முஹாஜிர்களோடு இணைந்து போரிடுவர். ஆகையால் உபையி இனத்தவரின் இரத்தம் இரண்டு புறங்களிலும் ஓடும் என்பதை இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். இதனால் அப்துல்லாஹ் இப்னு உபையின் திட்டம் முறியடிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவை விட்டும் விரட்டப்படாத செய்தியை அறிந்த மக்காவாசிகள் மதீனாவிற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்துவிட்டார்கள்.
அவர்களின் படைஎடுப்பிலிருந்து மதீனா தேசத்தையும் முஸ்லிம்களையும், மற்றகுடிமக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்காக திட்டமிடவேண்டிய கட்டாயம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அப்போது ஏற்பட்டது. அவர்கள் இதை தம் எஜமானான அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அதற்கு இறைவனிடமிருந்து பின்வருமாறு பதில் வந்தது.
''உங்கள் எதிரிகளோடு இறைவழியில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிப்பதில்லை.'' என்ற (அல்குர்ஆன் 2:190) இச்சட்த்திற்குப் பின்னரே இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
மேற்கண்டவசனத்தில்,
1. ''உங்கள் எதிரிகளுடன் மட்டுமே நீங்கள் போரிட வேண்டும். வேறுயாருடனும் போரிடக் கூடாது.''
2. ''அல்லாஹ்வை அஞ்சியவர்களாக அவனுடைய பாதையில் போரிட வேண்டும். அவனை மறந்து அநியாயம் செய்துவிடக் கூடாது.''
3. ''எக்காரணம் கொண்டும் வரம்பு மீறக்கூடாது. அப்படி வரம்பு மீறினால் அல்லாஹ் உங்களை நேசிக்கமாட்டான்'' என்ற மிக முக்கியமான மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஒரு தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் போது தற்காப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுவதைத் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நாம் வாழும் இந்தியத் தேசத்திற்கு எதிராக ஒரு நாடோ, ஒரு தனிப்பட்ட குழுவோ போர்ப்பிரகடனம் செய்யுமானால் நாம் அறிந்து கொண்டும் அமைதிகாப்போமா?  அப்படி அமைதி காத்தால் நம் நிலை என்ன வாகும்?  தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்தானே!  அவ்வாறான ஒரு நடவடிக்கையையே அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள்.
முஸ்லிம்கள் தாக்கப்பட்டு அவர்களின் தேசம் ஆக்கிரமிக்கப் படுமானால் தற்காப்பு ரீதியாகப் போரிடுவது இறைநம்பிக்கையாளர்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இக்கட்டளை குறுகிய காலத்தில் அல்லாமல் இறுதிக்கட்ட முடிவாகவே வழங்கப்பட்டுள்ளது. எதிரியைச் சந்திக்கும் முன் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது. அச்சுறுத் தலைச் சந்திக்க ஒரு படை எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எதிரியின் தாக்குதல் எந்த அளவு பலமானதாக இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கவனத்தில் கொண்டே செயல்பட்டார்கள்.
இப்போது மதீனாவுக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆனால் அதற்கென அரசு ஒன்று இல்லை. வரையறுக்கப்பட்ட எல்லைகளோ, சட்டங்களோ இல்லை. மதீனா ஒரு வாழும் இடமாக மட்டுமே இருந்தது. 'அவுஸ்' மற்றும் 'கஜ்ரஜ்' எனும் இரு கூட்டத்தார் ஒட்டகம் மேய்க்கும் புல்வெளிகளோடு அந்த மதீனா நகரின் பரப்பளவு முடிந்திருந்தது. அவுஸ் மற்றும் கஜ்ரஜ் கூட்டத்தார் தனித்தே வாழ்ந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தப் பொதுவான அமைப்போ, சட்டமோ இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆவர். எந்த வெளிநாட்டுச் சக்திகளோடும், வேறு கூட்டத்தாரோடும் போரிட்ட அனுபவம் அவர்களுக்கு இதுவரை இல்லை.
மதீனாவில் åதர்களும் இருந்தனர். அவர்கள் அவுஸ், கஜ்ரஜ் ஆகிய இரண்டு கூட்டத்தாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர். மதீனாவில் åதர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. åதர்கள் செல்வந்தர்களாகவும், கோட்டைகள் உடையோராகவும் இருந்தனர். பாதுகாப்பான அக்கோட்டைகள் மதீனா தேசத்தின் பாதுகாப்புக்கு உதவ முடியாதவை. ஏனெனில் தேசத்தை விட்டும் சற்றுத் தொலைவில் அந்தக் கோட்டைகள் இருந்தன. மதீனா தாக்கப்பட்டாலும் åதர்களிடம் உதவி கோரும் அதிகார அமைப்பு ஒன்றும் இல்லை. இதுவரையிலும் அந்தத்தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதில்லை. எனவே அவர்கள் இதைப்பற்றி இதுவரையில் கவலை கொண்டதில்லை. ஆனால் இப்போது குறை»களின் படை எடுப்பு மதீனாவை அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
மதீனாவின் நிலை இப்போது என்னவாகுமோ என பலரும் கவலையுடன் எதிர் நோக்கியிருந்தனர். பலமான எதிரியிடமிருந்து மதீனாவையும்  அதில் வாழும் மக்களையும் காப்பாற்ற ஏதேனும் செய்தாக வேண்டும். இதை நன்கு உணர்ந்து கொண்ட இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் அறிவாற்றலால் மதீனா தேசத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தம்மைத் தலைவரென்று ஒப்புக் கொண்ட மக்களுக்கு 'மதீனா ஒப்பந்தம்' என்ற பெயரில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கினார்கள்
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் மதீனாவில் வாழ்ந்த åதர்களுக்கும் இடையிலான உடன்படிக்கை என்று வரலாற்று ஆசிரியர்கள் அதனை அழைத்தனர். ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் åதர்கள் இதுவரையிலும் மதீனா தேசத்தின் குடியுரிமையைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் அரபுகளின் நிழலில் வாழ்ந்துவந்தார்கள். அந்த åதமக்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள்தான் முதல் முதலாக மதீனாவின் குடியுரிமையை வழங்கினார்கள். தேசத்தில் குடியுரிமையே இல்லாதவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடன்படிக்கையைச் செய்தார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. உண்மையில் அது இறைநம்பிக் கையாளர்கள் மற்றும் அவர்களுடனிருந்து போரிட்டவர்களுக்கு மத்தியிலுள்ள உறவுகளைப் பற்றியதாகும். இறைநம்பிக்கையாளர்களோடு ஒரே சமுதாயமாம், அவர்களைப் பின்பற்றும் கூட்டத்தார் சமத்துவத்தோடு நடத்தப்படுவதற்கு அதில் வாக்களிக்கப்பட்டது. மற்றவர்கள் முஸ்லிம்களின் ஆணைக்கு இணங்கி அவர்களோடு இணைந்து மதீனாவைக் காப்பாற்ற முயற்சித்தால் தனி அந்தஸ்து வழங்கப்படும் என வாக்களிக்கப் பட்டது. ஏனெனில் முஸ்லிம்களே மதீனாவைக் காக்க உறுதி பூண்டிருப்பவர்கள். அது மட்டுமல்லாது அவர்கள்தான் மதீனா அரசையே உருவாக்கியவர்கள்
இறைநம்பிக்கை கொள்ளாத அரபியர்களும், åதர்களும் முஸ்லிம் களின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் குடியுரிமை பெற்றவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அல்லாஹ் மட்டுமே மிகப்பெரியவன் என்ற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அக்கொள்ளாதோருக்கு, இறைநம்பிக்கையாளருக்குச் சமமான குடியுரிமை கொடுக்கப் படவில்லை. தேசத்தின் அரசை நிர்மாணித்து, பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள இறைநம்பிக்கையாளர்களுக்குச் சமமான அந்தஸ்து இறைமறுப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட மாட்டாது. இறைச்சட்டங்களை ஏற்காத இறைமறுப்பாளர்கள் தேசத்தை ஆளும் பொறுப்பேற்க முடியாது.
பாம்ஸ்தானைச் சார்ந்த முஸ்லிமல்லாத ஒரு நீதிபதி, தான் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஒத்துக்கொண்டதால் தன் தீர்ப்பில் ஒரு முஸ்லிம் அரசியல் சாசனப்படி என்று கூறினார்.1
ஓர் அரபுக் கூட்டத்தாரும் அவர்களின் நேசம் பெற்றோரும் மற்றும் åதர்களும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டனர். எனவே
யு, தேசத்தின் நிர்மாணத்துக்கும்
டீ, அங்கு ஓர் அரசாங்கம் ஏற்படுத்துவதற்கும்
ஊ, தேசத்தின் அடிப்படைச் சட்டங்களைத் தருவதற்கும்
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் மதீனாவில் ஓர் ஒப்பத்தம் உருவாக்கப்பட்டது.
எம். எம். அப்துல்காதிர் உமரி, ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் வெளியீடு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates