Elegant Rose - Diagonal Resize 2 அம்மா என்றால் என்றும் அன்பு ~ TAMIL ISLAM

திங்கள், 28 மே, 2012

அம்மா என்றால் என்றும் அன்பு



கடந்த
 ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டதுமே மாத்த்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையைஅன்னையர் தினமாக கொண்டாடும் பழக்கத்தை அமெரிக்கா பிரபலப் படுத்தியது.

இந்தியா போன்ற நாடுகளில் அன்னையர் தினம் அதிகம்பிரபலமடையவில்லை என்றாலும் அமெரிக்காவிலும் மற்ற பல்மேற்குலக் நாடுகளிலும் காதலர் தினக் கொண்டாட்ட்ட்த்திற்குஅடுத்த படியாக அன்னையர் தினக் கொண்டாட்டங்கள்முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அன்னையர் தினம் உலகின் வேறு பல  நாடுகளில்  வெவ்வேறுநாட்களில் கொண்டாடப்பட்டு வந்ததுகுறிப்பாக இங்கிலாந்துநாட்டிலும் மற்ற சில ஐரோபிய நாடுகளிலும் மார்ச் மாத்த்தில் ஒருஞாயுற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பலநூற்றாண்டுகளாக கொண்டாடிவருகின்றனர்.ஆனாலும்அமெரிக்காவில் 1914ம் ஆண்டு மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முதல்  அன்னையர் தினம் அறிவிக்கப் பட்ட போது  தான்உலகின் பெருமாபாலான பகுதிகளில் அது பிரபலமடைந்த்து.

அமெரிக்காவின்  கிராப்டன் (GRAFTON)  நகரில்  அன்னா ஜார்விஸ்Anna Jarvis  என்ற  பெண்மணி தனது அன்னை ஜாவிர்ஸின்நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். அதில் தனது அன்னையின் சமூகசேவைகளை நினைவு கூர்ந்து பல ந்ற்பணிகளை செய்தார்இதுபோல ஒவ்வொருவரும் தங்களது அன்னையை நினைவு கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்அவரது கோரிக்கைபலராலும் வரவேற்கப் பட்ட்துஅதன் தொடர்ச்சியாக 1912  ம்ஆண்டு  அன்னையர் தின சர்வதேச அமைப்பு ஒன்றை அவர் உருவாக்கினார்.

அன்னா ஜாவிர்ஸ் தனது கருத்தை அவர் வாழ்ந்தபென்சில்வோனியா மாநில அரசின் கவர்னருக்கு எழுதினார்1913ம்ஆண்டு பென்சில்வேனியா மாநில அரசு அவரது கருத்தை ஏற்றுமே மாத்தின் இரண்டாவது ஞாயிற்ற்குக்கிழமையை முதன்முதலாக அன்னையர் தினம் என  அறிவித்தது.

அனா ஜாவிர்ஸ் தனது முயற்சியை நிறுத்த வில்லைதொடர்ந்துஅமெரிக்க நாட்டின் ஜனாதிபதிக்கும் காங்கிரஸின்உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதினார்அந்த முயற்சியும் வெற்றிஅடைந்தது1914ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி ட்ரோவில்சன் அனா ஜார்விஸின் வேண்டுகோளை  ஏற்று  மே மாத்த்தின்   இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர்தினமாக அறிவித்து அன்றைய தினத்திற்கு விடுமுறைஅளிக்கவும் உத்தரவிட்டார்அமெரிக்காவை தொடந்து 46 நாடுகள்இதே நாளில் "அன்னையர் தினம்என அறிவித்துநடைமுறைப்படுத்தின

ஒரு பெண் மணியின் தனிப்பட்ட தொடர் முயற்சியின் விளைவாக அன்னையர் தினம் நடை முறைக்கு வந்த்து என்பது இந்நாளில் நினைவு கூறத்தகுந்த ஒரு செய்தியாகும்எந்த முயற்சியும் உரிய முறையில் தொடர்ந்து செய்யப் படுமானால் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த அன்னையர்தினம் ஒரு எடுத்துக்காட்டாகும்

உலகம் முழுக்க "அன்னையர் தினம்அனுசரிக்கப்படவேண்டும்.ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிறவாழ்த்துகிற,மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்பவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில்தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச்சந்தித்த நிருபர்களிடம் அன்னா ஜாவிர்ஸ்  வெளிப்படுத்தினார்.ஆனால் அவருடைய ஆசை வியாபாரிகளின் கைகளில் சிக்கிமதிப்பிழந்து விட்ட்துஎன்பது தான் இன்றைய நிஜம்

மக்களின் உணர்வுகளை கெட்டிக்காரத்தனமாக தங்களதுவியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகளாலஅன்னையர் தினம் அமெரிக்காவில் மிகவும் வெற்றிகரமானவணிக தினமாகியிருப்பதாக IBISWorld என்ற வணிக ஆராய்ச்சிநிறுவனம் கூறுகிறது

அன்னையர் தினத்தன்று அமெரிக்காவில் மட்டும் 2.6 பில்லியன்அதாவது 260 கோடி அமரிக்க டாலர் அளவுக்கு மலர் விற்பனைநடை பெறுகிறது.  1.53 பில்லியன் டாலர் அளவுக்கு பரிசுப்பொருட்களும்   68 மில்லியன் டாலர் அளவுக்கு  வாழ்த்துஅட்டைகளும்  விற்பணையாவதாக  அந்நிறுவனம் கூறுகிறதுஅத்தோடு அமெரிக்க தங்க  நகைத் தொழில்துறையின் ஆண்டுவருமானத்தின் 7.8% சதவீத அளவுக்கு  2008 ஆம் ஆண்டு அன்னையர்களுக்கான மோதிரங்கள் விற்பனை செய்யப்பட்டதாக அது மேலும் கூறுகிறது.

ஒரு நாள் மட்டும் அன்னையரை கொண்டாடினால போதுமா?அவ்வாறு ஒரு நாளை கொண்டாடுவது சரிதானா   என்ற கேள்விஇந்த சந்தர்ப்பத்தில் மிக முக்கியமாக எழுகிறது

அன்னையர் தினம் கொண்டாடப்படுவது அன்னையர் மதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான உண்மையான அடையாளம் இல்லைமாறாக அவர்களது பெருமையை குறுகிய சிலமணித்துளிகளில் அல்லது சில சில்லரைக்காசுகளில் அடைத்துவிடுகிற மலிவான முயற்சியாகும்.

எப்போதும் பாராட்டி மதிக்கப் படவேண்டியவர்களை ஒருகுறிப்பிட்ட நாட்களுக்குள் அடைக்கிறபோது இத்தகையவிபத்து தான் ஏர்படும்தொழிலாளர் தினம் பெற்றோர் தினம்ஆசிரியர் தினம் போல மேற்குலகம் கொண்டாடுகிறஒவ்வொரு சிறப்பு தின்ங்களிலும் இவ்வாறுதான் எப்போதும்போற்றப் பட வேண்டியவர்களது உரிமைகளும் பெருமைகளும்மறுக்கப் பட்டு மனித மதிப்பு வெகுவாக குறைந்து விட்டதுஎன்பது தான் எதார்த்தமாகும்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் பிள்ளைகள் சற்று பெரியவர்கள்ஆனதும் தனியாக வசிப்பதை விரும்புகிறார்கள்பெரும்பாலானஇளைஞர்கள் தனியாகவே வசிக்கிறார்கள்பெற்றோர்களில்யாராவது ஒருவர் இறந்து போனதும் மற்றவரை முதியோர்இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள்அம்மாவைசந்திப்பதற்க்கே அவரது தேவைகளை உடனிருந்து கவனித்துக்கொள்ளவோ அவருக்கு பணிவிடை செய்யவோ அவர்களுக்குநேரமோ மனமோ இருப்பதில்லைஇதிலுள்ள மனிதாபிமானம்தார்மீகமாக அவர்களுக்கு ஊட்டப்பட்வே இல்லை.இத்தகையோதான் அன்னையர் தினத்தில் அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.மலர்கொத்துக்களை அனுப்பிவைக்கிறார்கள்ஓரள்வி வச்திவாய்ப்பை பெற்றோர் அம்மாவை நேரடியாக சந்தித்து ஒருஇரவு உணவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சில மலர்க் கொத்துக் களை கொடுத்துஅல்லது கொஞ்சம்அன்பளிப்புக்களை வாரி வழங்கிஅல்லது ஒரு நாள் மட்டும்சேர்ந்து உணவருந்தி அந்த உறவின் மதிப்பை மேம்படுத்திவிடுவதற்க்கு அம்மா என்பவர் எப்போதோ ஒரு ரயில்பயணத்தில்அல்லது ஏதாவது ஒரு முகாமில் சில நாட்கள்சேர்ந்திருந்த தற்காலிக உறவல்லவேயாராலும் முழுமையாகஅளவிட்ட முடியாத தொப்புள் கொடி உறவல்லவா அது.

அம்மாவின் என்றால் அன்பு

அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய உறவுகளில் அதி அற்புதமான உறவு அன்னை என்ற உறவு.அந்த உற்வுக்கு,அந்தப் பிணைப்புக்கு இந்த உலகில் எதையும் ஈடு சொல்ல முடியாதுஅல்லாஹ் வழங்கிய பாக்கியங்களில் பெரும் பாக்கியம் அது.

அம்மா என்ற வார்த்தையை குறிப்பிடுகிற சொற்கள் அனைத்துக்கும் அன்பு கருணை என்று தான் பொருள்.அரபியில் அம்மாவை உம்மு என்று சொல்வார்கள்உம்மு என்றால் எல்லை இல்லாத கருணை என்று அரபு அகராதி பொருள் சொல்கிறதுஉலக மொழிகள் அனைத்திலும் தேடிப் பார்த்தீர்கள் என்றால் இப்படித்தான் அம்மாவை குறிப்பிடுகிற சொற்கள் அளவற்ற கருணைய சுமந்து நிற்கின்றன.

அல்லாஹ்வுக்கு அடுத்தபடி கருணை திருவுருவாக அம்மா திகழ்கிறார்ஆயிஷா அம்மையார் ஒரு நபி மொழியில் சொல்வர்கள்
ஒரு நாள் ஒரு தாய் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்என்னிடமிருந்த மூன்று பேரீத்தம் பழங்களை அந்த் தாயிடம் நான் கொடுத்தேன்இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு பேரீத்தங்களை அந்த தாய் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.மூன்றாவதாக அவரது கையிலிருந்த பேரீத்தம்பழத்தை தன்னுடைய வாயருகே கொண்டு சென்ற போது ஒரு குழந்தை அந்தக்கையை இழுத்து அந்தப் பேரீத்தம் பழத்தையும் கேட்ட்துஅந்த்தாய் தன் கையிலிருந்த பேரீத்தம் பழத்தை இரண்டாக பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார்இதைப் பார்ர்த்த நான் பெரிதும் ஆச்சரியமடைந்தேன்நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் வீட்டுக்கு வந்த போது அவர்களிடம் நடந்த்தை விவரித்தேன் என்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் அந்தப் பெண்மணியின் இத்தைய கருணையின் காரணமாக அவரை அல்லாஹ் சொர்ர்க்கத்திற்கு அனுப்புவான். என்று சொன்னார்கள். ..

تقول عائشة رضي الله عنها: جاءتني مسكينة تحمل ابنتين لها، فأطعمتها ثلاث تمرات،فأعطت كل واحدة منهما تمرة، ورفعت إلى فيها تمرة لتأكلها، فاستطعمتها ابنتاها،فشقَّت التمرة التي كانت تريد أن تأكلها بينهما، فأعجبني شأنها، فذكرت الذي صنعتلرسول الله فقال{ إن الله قد أوجب لها الجنة – أو أعتقها من النار } [رواه مسلم].

இஸ்லாத்தில் அம்மா- மூன்று மடங்கு அதிகம்

எனவே தான் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் அடுத்தபடியாக எப்போதும் பராமரிக்கப் பட வேண்டிய உறவுஅம்மாவுடனான உறவு என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

திருக்குரானின் பல இடங்களிலும் அல்லாஹ்வை வணங்குங்கள்அல்லது அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள் என்றுசொன்னதற்கு அடுத்தப்டியாக பெற்றோரை உபசரியுங்கள் என்றுகூறப்பட்டுள்ளதுஒரு வசனத்தில் அல்லாஹ் இப்படிக்கூறுகிறான்.

·         ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك  إلي المصير – لقمان 14
இந்த வசனத்தில் பெற்றோர் என்று பொதுவாகச் சொன்னஇறைவன் அதற்கடுத்த்தாக அம்மாவை தனியாக குறிப்பிட்டுஅவள் பட்ட சிரமங்களையும் சொல்லிக் காட்டுகிறான்.சிரமத்திற்கு மேல் அதிகம் சிரமத்தை தாங்கி அவனை அவள்பெற்றதை நினவூட்டுகிறான்இதன் மூலம் பெற்றோர்இருவரில் அம்மா அதிக கவனிப்பிற்குரியவர் என்ற க்ருத்துமுன் மொழியப்பட்டிருக்கிறது.
இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லவ்ருகிறவிரிவுரையாளர்கள் தவறாமல் ஒரு ந்பி மொழியைகுறிப்பிடுகிறார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أمك قال ثم من قال ثم أبوك
قال القرطبي: إن هذا الحديث يدل على أن محبة الأم والشفقة عليها ينبغي أن تكون ثلاثة أمثال محبة الأب،وذلك أن صعوبة الحمل، وصعوبة الوضع، وصعوبة الرضاع والتربية، تنفرد بها الأم دون الأب، فهذه ثلاث مشقات يخلو منها الأب.

அம்மா நம்மை கருவாக சுமந்திருந்த்து எனபது சாமாணியச்சுமை அல்லஎன்னுடை உஸ்தாத் ஒருவர் அடிக்கடிநினைவூட்டுவார்டேய்ஒரு செங்கல்லை உன் வயிற்றில்கட்டிக் கொண்டு நீ இரண்டு மணிநேரம் ஒரு இட்த்திலேஉட்க்கர்ந்திருந்து பார் அந்த சிரம்ம் என்ன என்பது புரியும்?எனபார்உண்மைதான்குழந்தைக்காக தானும் உணவு உண்டுகுழந்தைகாக தானும் மருந்து சாப்பிட்டு ஒரு தாயஅனுபவிக்கும் அந்தச் சிரமத்திற்கு எதைத்தான் ஈடாகச்சொல்ல முடியும்?
·         شهد ابن عمر رجلاً يمانياً يطوف بالبيت، حمل أمه وراء ظهره;فقال: حملتها أكثر مما حملتني، فهل ترى جازيتها يا ابن عمر؟ قال ابن عمر: لا، ولا بزفرة واحدة!". - البخاري في الأدب المفرد

பிரசவ வேதனையும் சாமாணியமல்லபிரசவம் என்றவார்த்தையே தப்பித்தால் வாழ்க்கை இல்லை என்றால்சவம்தான் என்ற அர்த்த்தையே குறிக்கிறது என்பதுஎல்லோருக்கும் தெரியும்அம்மா தன் உயிரை பணையாமாகவைத்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள்.

குழந்தை பிறந்த பிறகு பால குடி மறக்கிற வரை அந்தக்குழந்தையை வளர்க்கிற சிரம்ம் கருவில் சுமந்த சிரமத்திற்குநிகரானது தான்குழந்தை அழுவதற்கு முன் அதற்கானகாரணத்தை அறிந்து தயராக இருப்பள் தாய்ஒரு நாள் கூடஅவளால் நிம்மதியாக தூங்க முடியும்குழந்தை தூங்குகிறபோது தூங்கி அது சினுங்குவதற்குள் தான் விழித்துபாதுகாக்கிற அவளது பொறுமையும் சிரமும் மிகப் பெரியதே!

எந்த மனிதர் தன்னை பெற்றெடுத்து வளர்ப்பத்தில் தன் அம்மாபட்ட சிரமங்களை ஒரு கணமேனும் எண்ணிப் பார்க்கிறஎவரும் அம்மா விசய்த்தில் நெகிழ்ச்சி அடையாமல் இருக்கமுடியாது.

அதனால் இந்த வசனத்தின் தொடரிலேய அல்லாஹ் அடுத்துச்சொல்கிறான்எனக்கு நன்றி செலுத்துத்ங்கள் உங்கள்பெற்றோருக்கு நன்றி செலுத்துங்கள் 

அம்மாவுக்கு நன்றிசெலுத்தா விட்டால் அல்லாஹ்வுக்கு?

يقول حبر الأمة وترجمان القرآن عبد الله بن عباس رضي الله عنهما: ثلاث آيات مقرونات بثلاث، ولا تقبل واحدة بغير قرينتها..
1- 
وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ [التغابن:12]، فمن أطاع الله ولم يطع الرسول لم يقبل منه.
2- 
وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ [البقرة:43]، فمن صلى ولم يزكِّ لم يقبل منه.
3- 
أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ [لقمان:14]، فمن شكر لله ولم يشكر لوالديه لم يقبل منه.


இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம்சொல்கிறபோது மிக முக்கியமான ஒரு செய்தியைகுறிப்பிடுகிறார்கள்.
அம்மா என்பவர் அவர் வாழும் காலம் வரை மட்டுமல்ல அவர்இறந்த பிறகும் கூட மதிக்கப்பட வேண்டியவர் என இஸ்லாம்கூறுகிறது.

·         وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
·         واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
·         ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
ஹிஜ்ரத்தை விட ஜிஹாதை விட

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ جِئْتُ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَتَرَكْتُ أَبَوَيَّ يَبْكِيَانِ فَقَالَ ارْجِعْ عَلَيْهِمَا فَأَضْحِكْهُمَا كَمَا أَبْكَيْتَهُمَا

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أُجَاهِدُ قَالَ أَلَكَ أَبَوَانِ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ قَالَ أَبُو دَاوُد أَبُو الْعَبَّاسِ هَذَا الشَّاعِرُ اسْمُهُ السَّائِبُ بْنُ فَرُّوخَ

காலடியில் சொர்க்கம்
عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا – النسائ

·         عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلَى وَلَدِهِمَا قَالَ هُمَا جَنَّتُكَ وَنَارُكَ

அம்மா இறந்து போய்விட்டால்.. துஆ – ஸதகா-அவருடைய வயது ஒத்தவர்களை பேணுதல்
عن ابن عباس رضي الله عنهما أن سعد بن عبادة رضي الله عنه استفتى رسول الله صلى الله عليه وسلم فقال إن أمي ماتت وعليها نذر فقال اقضه عنها

السلف الصالح
·         أن أبا هريرة كان إذا أراد أن يخرج من بيته وقف على باب أمه فقالالسلام عليك يا أماه ورحمة الله وبركاته، فتقول: وعليك السلام يا ولدي ورحمة الله وبركاته، فيقول: رحمك الله كما ربيتني صغيراً، فتقول: ( رحمك الله كما بررتني كبيراً.(
·         أما ابن عون المزني فقد نادته أمه يوماً فأجابها وقد علا صوته صوتها ليسمعها، فندم على ذلك وأعتق رقبتين.
·         நாம் உபசரிக்க கிடைத்திருக்கிற ஒரு அருமை -அதிகபட்சமாக 20 வருடங்கள்
·         மனைவிக்கும் அம்மாவிற்குமிடையேயானதள்ளாட்ட்த்தில் அம்மாவை விட்டு விடக்கூடாதுஎந்த ஒரு ஆண்மகனும் தன் அம்மா விசயத்தில் தனித்த உறுதியோடும் அக்கறையோடும் செயல்பட வேண்டும்.
·         அம்மாவை உபசரிக்க்கிறைடைக்கிறவாய்ப்பு ஒருபாக்கியமே
·         عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلْ الْجَنَّةَ




அரபியில் சயீத் என்றும் தமிழில் சீதேவி என்றும் ஒருவார்த்தை சொல்லப் படுவதுண்டுஅந்த வார்த்தைஉண்மையில் யாருக்குப் பொருந்தும் என்றால் எந்த இளைஞன்அல்லது எந்த மனிதர் தன்னுடைய வெற்றியின் பலனைஅவரது பெற்றோர்கள் கண்டு அனுபவிக்கத் தருகிறாறோஅவரே உண்மையான சீதேவி.

ஒரு இளைஞன் புதிதாக கார் வாங்கும் அளவு வாழ்க்கையில்உயர்ந்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்அவனது மகிழ்ச்சிஎப்போது நிறைவடையும் தெரியுமாஅந்தக் காரில் அவனதுபெற்றோரை இருத்தி ஒரு சுற்றிச் சுற்றீஇ வருகிற போதுதான்நிறைவடையும்.  ஒரு மனிதனின் வெற்றியைப் பார்க்கஅல்லது அதை அனுபவிக்க அவனுடைய பெற்றோர்கள்இல்லை என்றால் என்னதான் அவன் இமயத்தின் உச்சிக்குசென்றாலும் அவனுடைய உள்ளத்தின் ஒரு ஒரு குறைஇருக்கத்தான் செய்யும்.

அம்மா உயிருடன் இருக்கிற போது அவருடைய நல்லதுஆவை பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் அவருடைய சாபத்திலிருந்து தப்பித்து விடவேண்டும்.

எந்த உயர்ந்த அந்தஸ்திலிருக்கிற மனிதனும் அம்மாவின்சாபத்திற்கு ஆளானால் தப்பிக்க முடியாது.
நபிகள் நாயகம்  (ஸல்அவர்கள் கூறினார்கள்:

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ رَجُلٌ فِي بَنِي إِسْرَائِيلَ يُقَالُ لَهُ جُرَيْجٌ يُصَلِّي فَجَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَأَبَى أَنْ يُجِيبَهَا فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي ثُمَّ أَتَتْهُ فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَقَالَتْ امْرَأَةٌ لَأَفْتِنَنَّ جُرَيْجًا فَتَعَرَّضَتْ لَهُ فَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ هُوَ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ وَكَسَرُوا صَوْمَعَتَهُ فَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ قَالَ لَا إِلَّا مِنْ طِينٍ

யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ்’ என்ற துறவி தன்னுடைஆசிரமத்தில் தொழுது கொண்டிருந்தார்அப்போது அவரது தாயார்அங்கு வந்து ஜுரைஜ்!  என்று அழைத்தார்.  அம்மாவுக்கு பதிலளிப்பதா அல்லது தொழுவதாஎன்று தடுமாறிய ஜுரைஜ்இறுதியில் அவருக்கு பதில் கூறாமல் இருந்து விட்டார்.இரண்டாவது நாள்  அம்மா வந்து அழைத்த போதும் ஜுரைஜ்தொழுது கொண்டிருந்தார்அம்மாவுக்கு பதிலளிப்பதா அல்லதுதொழுவதா என ஜுரைஜ் தடுமாறினார்அன்றும் அவர்அம்மாவிற்கு பதிலளிக்க வில்லைமூன்றாம் நாளும்  அம்மாவந்து அழைத்த போதும் ஜுரைஜ் தொழுது கொண்டிருந்தார்.அம்மாவுக்கு பதிலளிப்பதா அல்லது தொழுவதா என ஜுரைஜ்தடுமாறினார்அன்றும் அவர் அம்மாவிற்கு பதிலளிக்க வில்லை.இதனால் கோபமடைந்த அவரது அம்மா
,,இறைவாவிபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ்இறக்க்க் கூடாதுஎன்று ஏசிவிட்டார்.

(ஒரு நாள்ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார்.  அப்போது ஒருபெண் ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ளஅழைத்துப்பேச முனைந்தாள்.  அவர் (இணஙகமறுத்து விட்டார்.ஆகவேஅவள் நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்,, என்று கூறினாள்அதற்காக/  ஓர் இடையனிடம்சென்றுதன்னை அவனுடன் உறவு கொண்டாள்அதன்காரணமாக ஒரு (ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள்.பிறகுஇவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்,, என்று கூறினாள். (இதைக் கேட்டமக்கள் (வெகுண்டெழுந்துஜுரைஜிடம் வந்தனர்(கோபாவேசத்தில்அவரது ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர் அவரை (அவரது அறையிலிருந்துஇறக்கி அவரைஏசினர்.  ஜுரைஜ் உளூ செய்து தொழுதார்பிறகு அக்குழந்தையிடம் வந்துகுழந்தையேஉன் தந்தை யார்,, என்றுகேட்டார்.  அந்தக் குழந்தை (வாய் திறந்து)(இன்னஇடையன்,,என்று கூறியது.  இதைச் செவியுற்ற மக்கள் தங்கள்து தவறைஉணர்ந்து  உஙகள் ஆசிரமத்தைத் தஙகத்தால் நாஙகள் கட்டித்தருகின்றோம்,, என்று (ஜுரைஜிடம் அனுமதிகேட்டார்கள்.அதற்கு ஜுரைஜ் இல்லை களிமண்ணால் கட்டித் தந்தாலேபோதும்,, என்று  கூறி  விட்டார்.

அம்மாவைக் கோப்ப் படுத்தக் கூடாதுஅவருடைய் சாபத்தைபெற்று விடக் கூடாது என்பதை அற்புதமான ஒரு முற்கால கதைமூலம் நபி (ஸல்அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்நபி மொழியை மேற்கோள் காட்டி நபிலான வணக்கத்தை விடஅம்மாவின் அழைப்பிற்கு பதில் அளிப்பதை முதன்மைப் படுத்தவேண்டும் இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் கூறுகிறார்கள்நபிமொழித்தொகுப்பாளர் இமாம் முஸ்லிம் அவர்களும் இதேதலைப்பின் கீழ் இந்நபி மொழியை கொண்டு வருகிறார்.

அம்மாவிற்கு உபகாரம் செய்ய முடிகிறதோ இல்லையோ!அவருடை கோபத்தை சம்பாதித்து விடக்கூடாது என்றஎச்சரிக்கையை இந்நபி மொழி அழுத்தமாக போதிக்கிறது

அம்மா கோப்ப்பட்டு மனம் நொந்து ஏதாவது சொல்லி விட்டால்அது பலித்துவிடும்.

எந்த பெரிய மனிதரையும் அது பாதித்து விடும் என்பதை இந்நபிமொழி உணர்த்துகிறதுஜுரைஜ் போன்ற ஒரு துறவியே அந்தசாபத்திலிருந்து  தப்ப முடியவில்லையே!

ஜுரைஜ் என்ன தவறு செய்தார்அவர் இறைவனை தொழுதுகொண்டுதானே இருந்தார்என்ற கேள்வி இங்கு வரும்!

முதல் நாள் அம்மாவின் அழைப்பிற்கு பதிலளிக் முடியாமல்போனபோதே அவரை நேரில் கண்டு பதிலளிக்க முடியாத்தற்கானகாரணத்தை அவர் விளக்கி இருந்தால் அம்மா கோபப்பட்டிருக்கமாட்டார்.  இரண்டாம் நாளும் அம்மா அதே நேரத்திற்கு வந்தபோது ஜுரைஜ் உஷாராகியிருக்க வேண்டும்அப்போதாவதுஅம்மாவிற்கு பதிலளிக்க முடியாமல் போனது குறித்து அவர்விளக்கமளித்திருக்கலாம்அல்லது மூன்றாவது நாளும் அம்மாவரக்கூடும் என்று எதிர்பார்த்து அவர் வந்தால் அவருக்கு தகுந்தபதிலளிக்க வேறு ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம்அம்மாவின்அழைப்பில் தடுமாறிய அவர் காரியச் சிந்தனையோடு அம்மாவின்தேவை குறித்து யோசித்திருப்பாரானால இந்த சாபவார்த்தயிலிருந்து தப்பித்திருக்கலாம்.

அம்மாவை அலட்சியப்படுத்தி விடக்கூடாது என்றஎச்சரிக்கையோடு நடந்து கொண்டால் , அவரது ஆசையைநிறைவேற்ற முடியாவிட்டால் கூட அவரை சாமதானப்படுத்துகிறவழி தென்படும்அம்மாவை அலட்சியப் படுத்துகிற மனோபாவம்வந்து விட்டால் ஒரு சாதாரண அழைப்பிற்கு பதிலளிக்க் கூடவாய்ப்பில்லாமல் போய்விடும்

ஜுரைஜ் அம்மாவை அலட்சியப்படுத்தவில்லைஅதனால் தான்அவருடை தாயின் சாபாத்தால அவருக்கு நேர்ந்த விபரீத்த்திற்குஇறைவன் சீக்கிரமே . விடிவை கொடுத்தான்.

ஜுரைஜின் மானம் காப்பாற்றப் பட்ட்து  எந்த அளவுக் கென்றால்?அவ்ரது மண் ஆசிரமத்தை இடித்த மக்கள் அதை பொன்ஆசிரமமாக கட்டிக் கொடுக்கத் தயாரானார்கள்.

அம்மாவோ அத்தாவோ நம்முடன் வாழ்கிறார்கள் என்றால்அதை பெரும் பாக்கியமாக கருத வேண்டியது நம்முடையபுத்திசாலித்தனதிற்கு அழகு சேர்க்கும்இல்லை என்றால்பெருமானார் ஸல்அவர்கள் சொன்னது போல நாம்ஏமாளியாக மன்னைக் கவ்வ வேண்டியிருக்கும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates