Elegant Rose - Diagonal Resize 2 தேள்கள் பற்றிய தகவல்கள் !!!! ~ TAMIL ISLAM

வியாழன், 3 மே, 2012

தேள்கள் பற்றிய தகவல்கள் !!!!



தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.


தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates